கோவிந்த்ராஜ் எதிராஜ், தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக பத்திரிகையாளர், இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வணிகத்துறை பற்றி செய்திக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்துள்ளார். அவர் ஒரு ஊடக நிர்வாகி மற்றும் தொழில்முனைவோரும் கூட. இந்தியாஸ்பெண்ட் (IndiaSpend), ஃபேக்ட் செக்கர் (FactChecker) மற்றும் பூம் (BOOM_உள்ளிட்ட பொதுநலன் சார்ந்த ஊடக முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், அவற்றின் மூலம் இந்தியாவிலும் உலகெங்கிலும் இணையத்தில் செய்திகளின் வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை சார்ந்து செய்தி வெளியிட்டு பாதுகாக்கிறார். இதற்கு முன்பாக ப்ளூம்பெர்க் டி.வி இந்தியாவின் நிறுவன-ஆசிரியர், பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளின் எடிட்டர் (நியூமீடியா) மற்றும் சி.என்.பி.சி-டிவி 18, தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் முன்னணி வணிக இதழ்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். வணிக, பொருளாதாரம் மற்றும் நிதிச்சந்தைகள், இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார். பூம், இந்தியாஸ்பெண்ட் மற்றும் ஃபேக்ட் செக்கர் ஆகியவற்றுக்கான தலைமைத்துவத்தின் அங்கீகாரமாக கோவிந்த்ராஜ் 2018 மெக்நல்டி பரிசு பெற்றவர். அவர், ஆனந்தா ஆஸ்பனின் இந்தியத்தலைமை முன்முயற்சி மற்றும் ஆஸ்பென் குளோபல் லீடர்ஷிப் நெட்வொர்க்கின் தொடக்க வகுப்பின் சக உறுப்பினராகவும், 2014 பிஎம்டபிள்யூ பொறுப்பு தலைவர்கள் விருதை வென்றுள்ளார்.