இந்தியாவை மீண்டும் வேலைக்கு திரும்பச் செய்தல்: சுகாதார திட்டம்
மும்பை: ஊழியர்களின் வருகை மற்றும் வருகைப்பதிவு நடைமுறையில் நிறுவனங்கள் தளர்வுகளை கொண்டு வர வேண்டும், மேலும் கோவிட்-19 தொடர்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் வரவிருக்கும் மாதங்களில் சுகாதாரத்துறை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (எஃப்.ஐ.சி.சி.ஐ. - FICCI) தலைவர் சங்கீதா ரெட்டி கூறியுள்ளார். தனிநபர், உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகம் ஆகியன, வரவிருக்கும் மாதங்களில் பின்பற்ற வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை, எஃப்.ஐ.சி.சி.ஐ. தொகுத்துள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மக்கள் தங்களது பாக்கெட்டுகளில் (உடனடி தேவைகளுக்காகவும், நுகர்வு தேவையை புதுப்பிக்கவும்) பணம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று ரெட்டி கூறுகிறார்.
மருத்துவமனைகளுக்கு ஒரு “முச்சோதனை” உள்ளது - அதாவது, தொடக்க நாட்களில் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வர முடியாததால் வருவாய் இழப்பு, தொடர் செயல்பாடுகளால் ஏற்படும் செலவுகள் (பிற துறைகளில் செயல்படுத்தியது போல் இங்கு ஊதியக்குறை செய்யப்பட இயலாது), மற்றும் விரிவான சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் செலவினங்கள் அதிகரிப்பு உள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குனர் ரெட்டி கூறுகிறார்.
நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தப்படும் சூழலில், இனி வேலைக்குச் செல்வது எப்படிஅல்லது அதன் பொருள் என்னவாக இருக்க வேண்டும்?
இது ஒற்றை வரியில் முடிவதல்ல என்று நினைக்கிறேன். எல்லோரும் மீண்டும் வேலைக்கு செல்ல மாட்டார்கள் - அதில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட ஊரடங்கை, கொஞ்சம் கொஞ்சமாக விலக்க வேண்டும். முதலாவதாக, எல்லோரும் கேள்விப்பட்டபடி, படிப்படியான போக்குவரத்து உத்தி: நீங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால், மீண்டும் வேலைக்கு செல்லப் போவதில்லை. வீட்டில் இருந்து திறம்பட வேலை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தே தொடர்ந்து பணி புரியுமாறு கோரப்படுவார்கள். ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் தளர்வுகள் உள்ளன. அங்கு சமூக விலக்கலோடு, பொது போக்குவரத்து திறக்கப்படுகிறது. ஆனால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும். அடுத்த 10 நாட்களில் இருந்து இரண்டு வாரங்களில், வரையறுக்கப்பட்ட விமானச் சேவை இருக்கலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன். தொழில்துறையுடன் எஃப்.ஐ.சி.சி.ஐ. விரிவாக ஆலோசித்து செயலாற்றி வருகிறது; ஒரு நபர், ஒரு ஆபரேட்டர் அல்லது உரிமையாளர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எச்.ஆர். ஆகியோரின் கண்காணிப்பில் இருந்து, 'லாக் டவுனுக்கு பிந்தய வாழ்க்கை' என்று சொல்லக்கூடியதை வெளிக்கொணர, விரிவான வழிகாட்டியாக அப்பல்லோ மருத்துவமனைகளும் செயல்பட்டுள்ளன. மக்களை குழுக்களாக பிரித்து செயல்பட வைத்தல் போன்ற உத்திகள், இதில் அடங்கும்.
உதாரணமாக, கடந்த வாரம் முசாபர்நகரில் ஒரு தொழிற்சாலை திறக்கப்பட்டபோது, ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு பிறகு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த ஆலையையும் மூட கலெக்டர் உத்தரவிட்டார். அதாவது 400 பேர் மீண்டும் வேலையின்றி திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. எனவே, பணி புரியும் இடங்களில் ஒவ்வொருவரும் 20 நபர்கள் கொண்ட குழுவாக செயல்பட வேண்டும் என்பது எங்கள் பரிந்துரை. அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து கொள்ளலாம், ஒன்றாகச் சாப்பிடலாம். இதனால் உங்கள் சாத்தியமான கட்டுப்பாட்டு மண்டலம் அல்லது கண்காணிப்பு மண்டலம் என்பது 20 பேரை மட்டுமே கொண்டிருக்கும்.
இரண்டாவதாக, மக்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும் முன்பு, அவர்கள் பணி புரிந்த மேசைகள் இடம் மாறிவிட்டதா என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதனால், மாற்று நாட்களில் [திட்டமிட்டபடி மற்ற நபர்கள் வேலைக்கு வரும்போது], நீங்கள் பணி புரிவோரின் எண்ணிக்கையை குறைப்பீர்கள். வேலை நேரத்தை நீட்டிக்கப்படும், நிச்சயமாக மதிய உணவு அறைக்கு திட்டமிடுவீர்கள். அடிப்படை சுகாதார தூய்மை வசதியை உருவாக்குங்கள், அது நிச்சயமாக ஹேண்ட்வாஷ் அல்லது வெப்பநிலை கட்டுப்பாடு என்றவகையில் இருக்கும். ஒவ்வொரு அலுவலகத்திலும் நோய்வாய்ப்பட்டவர் தங்குவதற்கான இடவசதி செய்து தரப்பட வேண்டும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் உள்ளன, - முதல் நாளில் மட்டுமல்ல, அடுத்த பல மாதங்களுக்கு இத்தகைய கடுமையாக, உன்னிப்பாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை. அது எவ்வாறு இயங்குகிறது, இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
முன்பு ஒரு சிவப்பு மண்டலம் என்பது, ஒரு மாவட்டமாக இருந்தது. இப்போது மண்டலங்கள் உண்மையில் சுருங்கி வருகின்றன. அதில் மண்டலத்தின் அளவு முழு மாவட்டத்துடனும் தொடர்புடையது அல்ல, ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை சுற்றி கெடுபிடிகள், 3 சதுர கி.மீ சுற்றளவு உள்ளது. தற்போது சிவப்பு மண்டலங்களாக உள்ள பகுதிகளில் சுமார் 40-55% பொருளாதார நடவடிக்கைகள் உள்ளன. அடுத்த இரண்டு வாரங்களில், அந்த பகுதிகள் சுத்தமாகவும் கவனமாகவும் இருந்து மீண்டு வெளிவருவது என்பது நாம் கவனிக்க வேண்டிய முழு உத்தியின் மிக முக்கியமான அம்சமாகும்.
இரண்டாவது அம்சம் விநியோகச் சங்கிலி. நாட்டில் வணிக நடவடிக்கைகளின் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கிறது. [எடுத்துக்காட்டாக], நாம் மேற்கில் பருத்தியை வளர்க்கிறோம், தெற்கில் நூலை உருவாக்குகிறோம், நாடு முழுவதும் தையல் பணி நடக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுக்காக போக்குவரத்து மிகவும் திறம்பட திறக்கப்பட்டுள்ளது; நமது சூப்பர் மார்க்கெட்டுகளில் பெரும்பாலான அனைத்து வகை பொருட்களையும் பெற முடிந்தது; விவசாய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வரத்து இருந்தது. அரசு, போக்குவரத்து, காவல்துறை மற்றும் வணிகம் மற்றும் விவசாயிகளிடம் இருந்து நிறைய செயல்திறன் மிக்க பணிகள் உள்ளன. பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு உற்பத்தியாளர் தனது தயாரிப்பைக் காண்பிக்க சில்லறை விற்பனை நிலையம் இல்லையென்றால், அவர் எவ்வாறு தனது கடையைத் திறப்பார்?
மற்றொரு அம்சத்தில், எங்கள் எஃப்.ஐ.சி.சி.ஐ. குழுவில் உள்ள சுலாஜா [ஃபிரோடியா மோத்வானி], "யார் காலையில் எழுந்து வாகனம் வாங்க முடிவு செய்ய போகிறார்கள்?" என்று கேட்கிறார். மக்களிடம் தேவையை எவ்வாறு மீண்டும் தூண்டப் போகிறோம்? இதிலிருந்து அடிப்படை கேள்வி என்னவென்றால், மக்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதை நாம் எவ்வளவு உறுதிப்படுத்த முடியும் என்பதாகும், மக்கள் தங்களது பாக்கெட்டில் பணம் வைத்திருக்கிறார்கள் (முதலில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது; பின்னர் மீண்டும் தேவையானதை வாங்கத் தூண்டுவது). இதனால் பொருளாதாரத்தின் தேவை மற்றும் வழங்கல் இயந்திரம், இவை இரண்டும் கணிசமான அதிர்வலைகளை கொண்டுள்ளன; இவை இரண்டும் ஒரே நேரத்தில் அல்லது விரைவாக மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும்.
நோயாளிகள் அல்லது மருத்துவத்துறையின் முன் வரிசையில் உள்ள சுகாதாரத்துறையினர், கிட்டத்தட்ட கோவிட்-19ல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் பொருளாதார ரீதியாக இது அவர்களுக்கு மிகக்கடினமான காலமாக இருந்தது. அதிலில் இருந்து வெளியே வருவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் - அது உங்கள் சங்கிலியாக இருந்தாலும் அல்லது தொழில்துறையில் உங்கள் சகாக்களாக இருந்தாலும் சரி?
இத்துறை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்று. நாம் இதை முச்சோதனை என்று அழைக்கிறோம்: முதலாவது, ஆரம்ப நாட்களில் நோயாளிகளால் வர முடியவில்லை. எனவே, எந்த வருவாயும் இல்லை மற்றும் சுகாதார பராமரிப்பு என்பது தினசரி நடவடிக்கையாகும். இரண்டாவது அம்சம், மற்ற துறைகள் அல்லது தொழில்கள் செய்ததைப் போலவே, எங்களால் ஊதியங்கள் அல்லது சம்பளங்களைக் குறைக்கவோ அல்லது வேலைக்கு வர வேண்டாம் என்று ஊழியர்களிடம் சொல்லவோ முடியவில்லை, ஏனென்றால் அந்த நபர்கள் - அதாவது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இத்தருணத்தில் எங்களுக்குத் தேவை. அவர்கள் யாரும் இதுவரை பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. மூன்றாவது விஷயம் என்னவென்றால், கோவிட் தொற்றுக்கு சிகிச்சையளித்த எங்களில் சிலர், கருவிகளை தயார் செய்து வாங்க வேண்டியிருந்தது, பி.பி.இ.-களை வாங்கவும் [தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்], வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தவும் வேண்டி இருந்தது, அவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை.
இப்போது, நாம் ஊரடங்கை தளர்த்தும் போது (உண்மையில், அப்பல்லோவில், நாங்கள் தளர்த்தி நிறைய செய்கிறோம்) நாம் அதையெல்லாம் செய்ய வேண்டும். சுகாதாரச்சூழலில் புதிய இயல்பான சூழல் என்பது முகக்கவசம் அனைவருமே அணிவது மட்டுமல்ல, முழு துப்புரவு நெறிமுறைகளும் 10 மடங்கு என்ற அளவில் வளர்ந்துள்ளன; எந்த நேரத்திலும் நீங்கள் ஒரு செயல்முறை அல்லது ஒரு நெறிமுறையைச் செய்யும்போது, எல்லோரும் ஒரு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்; இந்த முழு செயல்பாடும் செலவாக சேர்க்கிறது. உங்களுக்கு தெரியும், [ஒரு] ரூ.500-க்கான மருத்துவ ஆலோசனைக்கு, ஒரு மருத்துவர் ரூ.1000 மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். இது புதிய மாற்றம்; அத்துடன் எங்களால் மக்களை தவிர்க்க இயலாது. எனவே, எங்களது அனைத்து அவசரக்கால அறைகளிலும், எந்தவொரு நோயாளியும் உள்ளே வரலாம், அவர்கள் நேர்மறையாக இருப்பதை போலவே நாங்கள் அவர்களை துரிதமாக நடத்துவோம். இணையாக சோதனை செய்வோம் மற்றும் தனிநபருக்கான அடுத்த நிலை திட்டத்தை உருவாக்குவோம். இது மருத்துவமனைக்கும் நோயாளிக்கும் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.
ஊரடங்கு தளர்வு பல கட்டங்களாக இருக்கும் போது, நீங்கள் பார்க்கப் போகும் நபர்கள், சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களை தான், அவர்களால் முன்பு வரமுடியாது, ஆனால் இப்போது அவர்களுக்கு தீவிர தேவை இருக்கும். நோயாளியின் வரத்து அதிகரிப்பதை நீங்கள் காணப் போகிறீர்களா? அது கோவிட் தொற்று பாதித்தவர்களாக இல்லாமல் கூட இருக்கலாம் தானே?
அடிப்படையிலான இயற்கையாக நோய் இருக்கும் மக்கள் வர வேண்டும். ஆனால் மருத்துவமனைகளுக்குத் திரும்பும் தனிநபர்களின் வீதமும், பயத்தை போக்கும் வழிமுறைக்கு நேரடியாக விகிதாசாரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஊரடங்கு தளர்வு செய்த அடுத்த நாளே, பெரிய வரிசையை பார்ப்பீர்கள் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் உள்ள்னர். அவர்கள் மத்தியில் நிறைய தவறான அச்சங்கள் உள்ளன.
நாங்கள் சொல்லக்கூடிய ஒரே விஷயம், வீட்டில் தங்கியிருந்தாலும் கூட, தயவுசெய்து தொலைபேசி ஆலோசனையை பெறுங்கள். டெலிவரி வழிமுறையை பயன்படுத்தி, உங்கள் மருந்துகளை பூர்த்தியாவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் இரத்தம் போன்ற பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால், நாங்கள் பாதுகாப்பான, கண்காணிப்பில் உள்ளவர்களை உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்; நீண்ட காலமாக மட்டுமின்றி, இப்போது கோவிட்19 காலத்திலும் கூட அடிப்படை பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள், ஏனென்றால் கொமொர்பிடிட்டுகள் இறப்பை அதிகரிக்கின்றன என்பதை எண்ணிக்கைகளும், புள்ளி விவரங்களும் காட்டுகின்றன. எனவே, உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருங்கள், உங்கள் நோயெதிர்ப்பு மற்றும் உங்கள் முழு உடற்தகுதி அளவையும் உயர்ந்த நிலையில் வைத்திருங்கள், இதனால் நீங்கள் கோவிட்19ஐ எதிர்த்து நன்கு போராட முடியும். இந்த எல்லா காரணங்களுக்காகவும், சாத்தியமான வழிமுறையையும் பயன்படுத்தி, எல்லோரும் பொருந்தி இருக்கவும், அவர்களின் உடல்நலம் மற்றும் மருத்துவருடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தொலைபேசி ஆலோசனைகளை தொடங்கினீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிகும் என்று கருதுகிறீர்களா?
தொலைபேசி ஆலோசனைகளில் (டெலி-கன்சல்ட்) நம்பமுடியாத, அருமையான ஏற்றுக் கொள்ளும் போக்கு - மருத்துவரின் தரப்பிலும் நோயாளியின் தரப்பிலும் உள்ளது. தனது ஆலோசனை அறையில் படு பிஸியாக இருக்கும் மருத்துவருக்கு, சிறப்பு உந்துதல் இல்லாதவரை அல்லது நாங்கள் கோரும் வரை டெலி-கன்சல்டிங் செய்வது சிரமமாக இருக்காது.எனவே தான், எல்லோரும் செய்தார்கள். நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு டெலி-கன்சல்ட் தொடங்கினோம். ஆனால் இன்று, இதை பல லட்சம் பேர் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தொலைபேசி ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.
டெலி-கன்சல்ட்களில் எங்கள் என்.பி.எஸ் அளவுகள் மிக அதிகமாக உள்ளன, இதுதான் எங்கள் அனுபவத்தைக் காட்டுகிறது. நாங்கள் வாட்ஸ்அப் வாய்ப்புகளை மட்டுமே திறக்கவில்லை; உங்களது மருத்துவரிடம் பேசவும் அறிவுறுத்துகிறோம். இது பல ஆண்டுகளாக நாங்கள் எழுப்பிய ஒருதளம். இது மருத்துவத்தரவை பிடிக்கவும், சரியான திட்டமிடல், கட்டண அமைப்பு மற்றும் பின்புலத்தில் உள்ளது. நாங்கள் ஜி.பி. [பொது பயிற்சியாளர்] ஆலோசனைகளை வழங்கும் போது, எங்களிடம் “மருத்துவ முடிவு ஆதரவாக இயந்திரம்” உள்ளது, இது மருத்துவரின் தொடர்பு மிக உயர்ந்த தரம் மற்றும் திறனைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த, முன்கூட்டியே தூண்டுகிறது. கோவிட் தொற்றில் இருந்து வெளிவந்த நல்ல விஷயங்களில் ஒன்று, உண்மையில் டிஜிட்டல் என்று நான் கருதுகிறேன்.
இது, வெறும் செயலி என்பது மட்டுமல்ல. முதன்மை சுகாதாரத்துறையில் நாம் அரசை ஆதரிக்கும் பகுதிகளில், தொலைபேசி ஆலோசனைகளை பயன்படுத்துகிறோம். தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை உருவாக்க ஹோட்டல் தொடர்புகளுடன் நாம் கூட்டுசேர்ந்து, ஸ்டே ஐ என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தில், எங்கள் டெலி மருந்தை வைத்திருக்கிறோம், இதனால் ஒரு மருத்துவ நபர் எத்தனை முறை செல்ல வேண்டும் என்பதை இந்த அறை குறைக்கிறது. நாங்கள் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். எங்களது இ-ஐ.சி.யு (eICU) என்பது, மிக நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த ஒரு திட்டமாகும், நாங்கள் இப்போது மருத்துவமனைகள் மற்றும் சில அரசு மருத்துவமனைகளின் ஐ.சி.யு.க்கு ஆதரவு அளித்து வருகிறோம்.
பின்னர் டெலி-லேர்ன் என்ற தொலைபேசி கற்றலின் முழு அம்சமும் உள்ளது. எங்கள் மின்-கற்றல் தளத்தில், கோவிட் தொற்று புதுப்பித்தலில் நாங்கள் உருவாக்கிய முதல் பாடநெறி, உலகளவில் 1,70,000 பயனர்களைக் கொண்டிருந்தது. க்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவுடன் இணைந்து நாங்கள் உருவாக்கிய அடுத்த விஷயம் ஒரு வென்டிலேட்டர் பயிற்சி திட்டம். நாங்கள் உள்ளடக்கத்தையும், சர்வதேசக்குழுவுடன் இணைந்து ஒரு அருமையான சிமுலேட்டரை செய்தோம்; பின்னர் க்ரிட்டிகல் கேர் சொசைட்டி மற்றும் புதிய கற்றவரை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் இணைக்கிறோம். இன்று, நீங்கள் வென்டிலேட்டர்களை உடனே வாங்கலாம், ஆனால், ஒரே இரவில் அதை பயன்படுத்தும் நிபுணத்துவத்தை எவ்வாறு வாங்குவது? வென்டிலேட்டர் பயன்பாட்டை எவ்வாறு விரைவாகப் பெறுவது, வழிகாட்டலை எவ்வாறு செய்வது என்பது குறித்து மக்களுக்குப் பயிற்சி அளிக்க இப்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் - ஏனெனில் மருத்துவர் 60 வயதைத் தாண்டியிருந்தால், அவர் அநேகமாக வீட்டிலேயே தங்கியிருந்து, இங்கு வரவேண்டிய தேவையில்லை. அதேநேரம், அவர் வீட்டிலேயே தங்கி ஒரு இளைஞருக்கு வழிகாட்டலாம், வென்டிலேட்டரைப் பயன்படுத்தி, இதை விரைவாகப் பெறலாம்.எனவே, இந்த வகையான கூட்டாண்மைகளும் நடக்கின்றன.
முன் வரிசையில் உள்ளவர்கள் (மருத்துவர்கள், வென்டிலேட்டர் பராமரிப்பு நிபுணர்கள் அல்லது செவிலியர்கள்) இந்த நேரத்தில் வேறு எவரையும் விட உந்துதலாக இருக்க வேண்டும். மருத்துவமனைகளின் ஒரு பெரிய சங்கிலியாக நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், அதை உறுதி செய்கிறீர்கள், அங்கே ஏதேனும் சவால்களை நீங்கள் காண்கிறீர்களா?
ஆரம்ப நாட்களில் ஒருவித பயம் இருந்தது என்று நான் நினைக்கிறேன்; மக்கள் இத்தாலியில் இருந்து கொரொனா இறப்பு பற்றிய பயங்கரமான புகைப்படங்களை பார்த்தார்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் [பாதிக்கப்பட்ட] எண்ணிக்கையை கேட்டறிந்தார்கள். முதலாவதாக, இது தன்னார்வமாக வர விரும்புவோரை தயவுசெய்து கேளுங்கள் என்று நாங்கள் கூறினோம். இரண்டாவதாக, அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அவர்களுக்கு உறுதியளித்தோம். சரியான தனி அறைகளை ஏற்பாடு செய்தோம். ஒரு பெரிய பொது வார்டில் ஒருபோதும் பல நோயாளிகளை நாங்கள் வைக்கவில்லை. நாங்கள் அறைகளை உருவாக்கினோம், எதிர்மறை அழுத்தத்தை உருவாக்கினோம், சரியான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை வாங்கினோம், அவற்றை எவ்வாறு அணிய வேண்டும் என்பதற்கான பயிற்சியை தந்தோம். நாங்கள் அவர்களிடம் ஒருபோதும் அதிக வேலையை வாங்கவில்லை. நாங்கள் மாற்று ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்தோம், ஷிப்டுகளை நிறுத்தி, அவர்களை நாங்கள் தனித்தனியாக தனிமைப்படுத்தினோம், இதனால் அவர்கள் மற்ற ஊழியர்களுடன் கலக்கவில்லை. எனவே, ஒரு கோவிட் வார்டில் பணிபுரியும் செவிலியர், அவர் பணிபுரியும் காலம் அல்லது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வரை, எங்களுடைய கோவிட் வார்டு அல்லாத மருத்துவமனையில் இருக்கும் ஒரு நர்ஸை அவர் சந்திக்க மாட்டார். நான் முகக்கவசம் கையுறை என எல்லாவற்றையும் அணிந்தேன், எங்கள் அணியினரை வாழ்த்துவதற்காக கோவிட் வார்டுக்குச் சென்றோம், நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்று சொல்லவும், அவர்கள் ரிஸ்க் எடுப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். கடவுளின் கிருபையால், இதுவரை, ஊழியர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்; அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், மேலும் நிறைய பேரை நாங்கள் உண்மையில் கவனிக்க முடிந்தது.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.