எங்களை பற்றி

இந்தியாவில் சிறந்த ஆட்சி நிர்வாகம் நடைபெற, அரசின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், புள்ளி விவரங்களை பயன்படுத்தி, விரிவாக பகுப்பாய்வு செய்து வெளியிடுகிறோம். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளரும், பூம்பெர்க் டிவி முன்னாள் நிறுவன ஆசிரியருமான கோவிந்த்ராஜ் எத்திராஜால், 2011ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. இந்திய பொருளாதாரம் பற்றிய தகவல்கள், அதன் உண்மைத்தன்மை, குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்களை அலசி வெளியிட்டு வருவதன் மூலம், ”பதிவுகளை கொண்ட நிறுவனம்” என இந்தியா ஸ்பெண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய அளவில் கடினமான புள்ளி விவரங்களை பெற்று, ஆராய்ந்து வழங்கி வருகிறோம். முக்கியமான புள்ளி விவரங்களின் தேவையும், அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் நாங்கள் கருதுகிறோம். இது, முக்கிய கொள்கை முடிவு, விவாதங்கள், பகுப்பாய்வுக்கு வழி கோலி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வருங்காலத்தில் அரசு நிர்வாகத்தில் குடிமக்களின் பங்களிப்பு மேலும் தீவிரமாக இருக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற புள்ளி விவரங்கள் மேலும் முக்கியத்துவம் பெறும் என்று நம்புகிறோம். இளம் இந்திய சமுதாயத்திற்கு இதுபோன்ற புள்ளி விவரங்கள் கிடைக்க, சமூக வலைதளங்கள் வாய்ப்பாக உள்ளது.

கடந்த 2014 மார்ச் மாதம் நாங்கள், பேக்ட்செக்கர்.இன் (factchecker.in) என்ற இணையதளத்தை தொடங்கினோம். பொது வாழ்வில் உள்ளவர்களது அறிக்கையின் உண்மைத்தன்மையை மிக துல்லியமாக, ஆதாரபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு முயற்சியாகும்.

மும்பை லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள தி ஸ்பெண்டிங் & பாலிஸி ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் நடந்த்தப்படும் ’இந்தியா ஸ்பெண்ட்’ ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். இது, மும்பை அறக்கட்டளை ஆணையரகத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.