ஆதரவாளர்கள்
அறங்காவலர் புரவலர்கள்
கோவிந்திராஜ் எதிராஜ், காட்சி ஊடகம் அச்சு ஊடகவியலாளர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வணிகத்தைப் பற்றி செய்திகளை எழுதி வந்துள்ளார். அவர் ஒரு ஊடக நிர்வாகி மற்றும் தொழில்முனைவோரும் கூட. பொதுநலன் சார்ந்த ஊடக முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், அவற்றின் மூலம் இந்தியாவிலும் உலகெங்கிலும் இணையத்தில் செய்திகளின் வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை சார்ந்து செய்தி வெளியிட்டு பாதுகாக்கிறார்.
அண்மையில், போலிச் செய்திகளை தகவலை எதிர்த்துப் போராடும் மற்றும் இணையத்தைப் பாதுகாப்பானதாக்குவதற்கான பெரிய நோக்கத்துடன் சிக்கல்களை விளக்கும் ஒரு சுயாதீன ஊடக முன்முயற்சியாக, பூம் (BOOM) இணையதளத்தை நிறுவினார். உடல்நலம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஃபேக்ட் செக்கர் போன்ற பகுதிகளில் கட்டுரை எழுதுவதற்கும், கூட்டாக ஆலோசிக்கவும் தரவைப் பயன்படுத்தும் நோக்கில், விருது பெற்ற இந்தியாஸ்பெண்ட் என்ற தரவு அடிப்படையிலான பொதுநல இணையதளத்தை அவர் நிறுவினார், இது ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற நபர்களை துல்லியத்தன்மைக்காக கண்காணிக்கிறது. பூம் மற்றும் ஃபேக்ட் செக்கர் ஆகியன, இந்தியாவின் முதலாவது சரிபார்க்கப்பட்ட சர்வதேச உண்மை சரிபார்ப்பு நெட்வொர்க்கின் (IFCN) உறுப்பினர்களாக இருந்தன, இது போயன்டர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாஸ்பெண்ட், குளோபல் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் நெட்வொர்க்கில் (GIJN) உறுப்பினராக உள்ளது.
முன்னதாக, 2008 ஆம் ஆண்டில் மும்பையில் இருந்து தொடங்கப்பட்ட 24 மணி நேர வணிகச்செய்தி சேவையான ப்ளூம்பெர்க் டி.வி இந்தியாவின் (Bloomberg TV) நிறுவனர்-ஆசிரியராக இருந்தார். வணிக, பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகள், இந்திய ஒளிபரப்பு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றில் பருவகால நிகழ்ச்சிகளை, அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.
ப்ளூம்பெர்க் டிவியை தொடங்கும் முன்பு, அவர் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளின் செய்தி ஆசிரியராக (புதிய மீடியா) பணியாற்றினார், அதற்கு முன்பு, தொலைக்காட்சி சேனலான சிஎன்பிசி-டிவி 18 உடன் ஐந்து ஆண்டுகள் கோவிந்த்ராஜ் செலவிட்டார். அங்கு அவர் சேனலின் நிகழ்ச்சி வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு தீவிரமாக செயல்பட்டார். தொலைக்காட்சிக்கு முன்பு, அவர் தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் முன்னணி வணிக இதழ்களில் இருந்தவர்.
பூம், இந்தியாஸ்பெண்ட் மற்றும் ஃபேக்ட் செக்கர் ஆகியோருடனான தலைமைத்துவத்திற்கான அங்கீகாரமாக கோவிந்த்ராஜ் அவர்கள், 2018 மெக்நல்டி பரிசை (McNulty Prize) வென்றார். அனந்தா ஆஸ்பனின் இந்தியா தலைமை முயற்சி மற்றும் ஆஸ்பென் குளோபல் லீடர்ஷிப் நெட்வொர்க்கின் தொடக்க வகுப்பின் சக உறுப்பினராகவும், 2014 பிஎம்டபிள்யூ பொறுப்பு தலைவர்கள் விருதுகளை வென்றுள்ளார்.
மின்னஞ்சல்: govindraj@indiaspend.org
பிற அறங்காவலர்கள்
அயாஸ் மேமன், தகுதி அடிப்படையில் ஒரு வழக்கறிஞராகவும், ஆர்வம் கொண்ட துறையாக பத்திரிகையாளராகவும் உள்ளார். மேமன் ஒரு விளையாட்டு எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராக மிட்-டே, பாம்பே டைம்ஸ், டி.என்.ஏ, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் டெக்கான் க்ரோனிகல் போன்ற பல செய்தித்தாள்களில் பணியாற்றியுள்ளார். டைம்ஸ் நவ், நியூஸ்எக்ஸ் மற்றும் நெட்வொர்க் 18 ஆகிய செய்தி சேனல்களைத் தவிர, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸுடன் பல்வேறு நேரங்களில் டிவி வர்ணனையாளர் / ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.
மேமன், நேரடியாக 10 கிரிக்கெட் உலகக் கோப்பைகள், 250 க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் மற்றும் 400 ஒருநாள் போட்டிகள், 1988 மற்றும் 2012 ஒலிம்பிக், 1998 மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுக்கள், 1990 ஆசிய விளையாட்டுக்கள், 2006 ஃபிஃபா உலகக் கோப்பை மற்றும் 1991 மற்றும் 1993 விம்பிள்டன் சாம்பியன்ஷிப்புகள், பல சர்வதேச நிகழ்வுகள் பற்றி எழுதியுள்ளார். அவர், கிரிக்கெட் குறித்த நான்கு புத்தகங்களையும் எழுதியுள்ளார், மேலும், சுதந்திர இந்தியாவின் பொன்விழாவில், இந்தியா 50 - தி மேக்கிங் ஆஃப் எ நேஷன் என்ற புத்தகத்தில் இணை ஆசிரியராக எழுதியுள்ளார்.
ஸ்ரீகாந்த் கார்வா உலக வங்கி மேம்பாட்டு அடையாளத்துக்கான திட்டத்தில் (ID4D), ஆலோசகராக உள்ளார், இது வளரும் நாடுகளின் அரசுகளுடன் தங்கள் தேசிய அடையாள அட்டை திட்டத்தில் ஈடுபடுகிறது. தற்போது அவர் நவீனகால தொழில்நுட்ப தளங்களின் தொகுப்பான இந்தியா ஸ்டேக் (India Stack) தளத்தை ஊக்குவிப்பதிலும் கற்பிப்பதிலும் தன்னார்வத் தொண்டு செய்கிறார், இது தரவு ஜனநாயகமயமாக்கலுடன் பணமில்லா, காகிதமில்லாத மற்றும் இருப்பு இல்லாத பொருளாதாரமாக மாற, இந்தியாவுக்கு உதவுகிறது.
ஓரங்கட்டப்பட்டவர்களைப் பாதிக்கும் சவால்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட அவர், அதற்கான செயல்திறன், அளவு மற்றும் தாக்கம் குறித்து ஈடுபாடு கொண்டிருந்தார். ஆதார் திட்டத்தின் ஆரம்ப நாட்களில், அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாறினார். ஆதார் அமைப்பில் மோசடிகளை அடையாளம் காண, தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஸ்ரீகாந்த் கார்வா, இந்தியாவின் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் இளங்கலை மற்றும் அமெரிக்காவின் பென் மாநிலத்தில் இருந்து முதுகலை செயல்பாட்டு ஆராய்ச்சியைப் பெற்றுள்ளார்.
புரவலர்கள்
ரோஹினி நிலேகனி, இந்தியாவில் நீர் மற்றும் சுகாதாரப்பிரச்சினைகள் குறித்து பணியாற்றுவதற்காக, ஒரு தனியார் நிதியுதவியுடன் அவர் அமைத்த அர்க்யாமின் நிறுவனர்-தலைவராக உள்ளார். "ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் ஒரு புத்தகத்தை" வைக்க முற்படும் அறக்கட்டளையான பிரதம் புத்தகங்களின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். முன்னாள் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கொடையாளி. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வளர்ச்சி தொடர்புடைய பிரச்சினைகளில் ரோகிணி ஆழமாக ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தற்போது இந்திய கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் தணிக்கை ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இலாப நோக்கற்ற பல்வேறு வாரியங்களில் அவர் இருந்திருக்கிறார், குறிப்பாக ATREE (சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளை) மற்றும் சங்கமித்ரா கிராம நிதி சேவைகள் ஆகியவற்றில் பொறுப்பு வகித்தவர். பென்குயின் இந்தியா வெளியிட்ட இரண்டு புத்தகங்களை, ஒரு நாவல் - ஸ்டில்போர்ன் - மற்றும் சமூக மற்றும் கார்ப்பரேட் தலைவர்களிடையே அசாதாரண மைதானம் என்று அழைக்கப்படும் உரையாடல்களின் புனைகதை அல்லாத நூலை, ரோகிணி எழுதியுள்ளார்.
விக்ரம் லால், ஐச்சர் குழுமத்தின் முன்னாள் தலைவர். அவர் 1957 ஆம் ஆண்டில் டூன் பள்ளியில் இருந்து தனது சீனியர் கேம்பிரிட்ஜ் படிப்பை நிறைவு செய்தார், பின்னர் அவர் மேற்கு ஜெர்மனியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகமான டார்ம்ஸ்டாட்டில் இயந்திர பொறியியல் படித்தார். அவர் 1966 இல் தனது தந்தையால் நிறுவப்பட்ட குடும்ப நிறுவனமான ஐஷரில் இணைந்தார். ஐஷர், 1960 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் டிராக்டர் உற்பத்தியை தொடங்கியது. இறுதியில் 1986 ஆம் ஆண்டில் இலகுவான வணிக வாகனங்களையும், பின்னர் கனரக வாகனங்களையும் தயாரித்தது. மற்ற வணிகங்களுக்கிடையில், இது 1990 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள்களின் அடையாளமாக திகளும் ராயல் என்ஃபீல்ட்டை வாங்கியது. திரு லால் டிசம்பர் 2004 முதல், சீர்திருத்தம், ஆட்சி மற்றும் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரச்சினைகளைத் தொடரும் பொதுநல தன்னார்வ தொண்டு நிறுவனமான காமன் காஸ் (Common Cause) தலைவராக உள்ளார். இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் துணைத் தலைவராக 7 ஆண்டுகள் இருந்தார், மேலும் 6 ஆண்டுகள் டூன் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்தார். தற்போது, அவர் பிரதம் டெல்லி கல்வி முயற்சி மற்றும் வளக்கூட்டணி இந்தியாவின் வாரியக்குழுவில் உள்ளார்.
பைரோஜ்ஷா கோத்ரேஜ் அறக்கட்டளை, கோத்ரேஜ் குழுமத்தின் உதவிக்கரம் நீட்டும் அமைப்பாகும். குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு, குடும்ப நலன் மற்றும் இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் தொண்றாற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது 1972 இல் நிறுவப்பட்டது மற்றும் ஹோல்டிங் நிறுவனமான கோத்ரேஜ் & பாய்ஸ் உற்பத்தி நிறுவன லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறது. ஈவுத்தொகையின் வருமானம் அறக்கட்டளையின் நோக்கங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
தி இண்டிபெண்டண்ட் & பப்ளிக்- ஸ்ப்ரிடெட் மீடியா பவுண்டேஷன் (IPSMF) பொது நலன் தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் நோக்கத்திற்காக, ஸ்பெண்டிங் அண்ட் பாலிசி ரிசர்ட் பவுண்டேஷனுக்கு (SPRF) நிதி உதவியை வழங்கியுள்ளது. எஸ்.பி.ஆர்.எப். சொந்தமான இணையதளம் இந்தியாஸ்பெண்ட்.காம் (indiaspend.com) அல்லது அதன் வேறு எந்த இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட கட்டுரைகள், கருத்தாங்களுக்கு ஐ.பி.எஸ்.எம்.எஃப் அமைப்பானது எந்தவொரு சட்டரீதியான அல்லது தார்மீக பொறுப்பையும் ஏற்காது.
ஃபோர்ப்ஸ் மார்ஷல், நீராவி பொறியியல் மற்றும் கட்டுப்பாட்டு கருவி தயாரிப்பில் முன்னணி உற்பத்தி நிறுவனம். அவற்றின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு ஆற்றலைச் சேமிக்கவும், செயல்முறை தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான தொழிற்சாலையை இயக்கவும் உதவுகின்றன. அவர்கள் ஐந்து கண்டங்களிலும் உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்கள் உணவு-செயலி அல்லது ஆடைத் தொழிற்சாலை, நுகர்வோர் தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள் முதல், உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் வரை உள்ளனர். அவர்களின் ஆர் அன்ட் டி (R&D) முயற்சிகள் பல விருது வென்ற தயாரிப்புகளை விளைவித்தன. அவர்களின் மாறுபட்ட சமூக முயற்சிகளின் மையப்பகுதிகள் கல்வி, தொழில்முனைவு, சுகாதாரம் மற்றும் சமூக வலுவூட்டல்; பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள், முக்கிய பங்குதாரர்கள். கிரேட் பிளேஸ் டு வொர்க் இன்ஸ்டிடியூட் மற்றும் எகனாமிக் டைம்ஸ் நடத்திய ஆய்வுகள் மற்றும் இந்தியாவின் சிறந்த பணியிடங்களில், இது பலமுறை பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளன.