புதுடெல்லி: இந்தியாவில்,உலகின் 14 அதிக காற்றுமாசு உள்ள நகரங்கள் உள்ள நிலையில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் தேசிய திட்டம் கொண்டு வரப்பட்ட ஒரு மாதமான பிறகும் கூட, 2018-19 குளிர்காலத்தில் மாசடைந்த காற்றை சுவாசிக்கும் நிலை தொடர்கிறது.

இந்தியாவின் 74 நகரங்களில் காற்றின் தர நிலையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) மதிப்பீடு செய்ததில் பாட்டியாலாவில் மட்டுமே காற்று தேசிய பாதுகாப்பு தரத்தில் இருந்ததாக, 2019 பிப்ரவரி 4ல் வெளியிட்ட தினசரி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 17, 2019 அன்று தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரான காஸியாபாத்தில் 24 மணி நேர காற்று மாசு அளவீடு சராசரி 2.5 பி.எம். (காற்றில் நுண்துகள் அளவு) உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலையை விட 14 மடங்கு அதிகமாக இருந்தது. காஸியாபாத்தில் சராசரி 2.5 பி.எம்.இருந்தது இந்தியாவின் காற்று பாதுகாப்பு தர அளவைவிட ஆறு மடங்கு அதிகம்; இந்தியாவின் பி.எம்.அளவானது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை விட 2.4 மடங்கு அதிகம் அனுமதிக்கிறது.

உலகின் காற்று மாசுபாடு மிகுந்த நகரான டெல்லியில் வசிக்கும் 2 கோடி மக்களும், குளிர்காலமான 2018 நவம்பர் முதல் 2019 ஜனவரி முதல் வாரம் வரை காற்று மாசுபாடு பாதுகாப்பு வரம்புக்கு அதிக நிலையிலேயே இருந்தனர் என்று, 2019 ஜனவரி 19ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்த காற்று மாசுபாடு நெருக்கடியை தீர்க்க, இந்திய அரசு நாடு தழுவிய அளவில் முதலாவதாக தேசிய தூய்மையான காற்று திட்டம் என்.சி.ஏ.பி. (NCAP), 2019 ஜனவரி 10ல் தொடங்கியது.

இத்திட்டத்தில் நகருக்கு ரூ.2.9 கோடி வீதம் 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டில் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டு, மோசமான காற்றுமாசுபாடு உள்ள 102 நகரங்கள் மீது கவனம் செலுத்தப்படும். 2024 ஆம் ஆண்டுடனா அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் மொத்த ஆண்டு காற்று மாசுபாடு அளவை 20-30% ஆக குறைப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டமானது 2017ஐ அடிப்படை ஆண்டாக கணக்கிடுகிறது.

காற்று மாசுபாட்டிற்கான ஒரு தேசிய ஆதார பட்டியல், உள்நாட்டில் காற்று மாசுபாடு தடுக்க வழிகாட்டுதல்கள், நகர மற்றும் கிராமங்களில் காற்றின் தரம் கண்காணிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதார தாக்கங்களை ஆய்வு நடத்த, இத்திட்டம் உதவுகிறது.

எனினும் என்.சி.ஏ.பி. திட்டம் குறைபாடுள்ளது; நாம் விளக்குவது போல் அதில் சட்டபூர்வமான உத்தரவு இல்லை; செயல்திட்டத்திற்கான தெளிவான காலக்கெடு கிடையாது; தோல்விக்கு பொறுப்பேற்க வழிவகை இல்லை.

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 2017ஆம் ஆண்டு 12. 4 லட்சம் பேர் இறந்ததாக, 2018 டிசம்பர் 12ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

Source: Central Pollution Control Board

ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை உருவாக்க இலக்குகள் போதிய லட்சியம் கொண்டிருக்கவில்லை

இந்தியாவின் 74 நகரங்களில் 28 நகரங்கள் (38%), 2019 பிப்ரவரி 4ஆம் தேதி அதிக மாசு வெளிபட்ட நாளில் மத்திய மாசுக்கட்டுபாடு வாரியம் அளவீடு செய்தது. லக்னோ, வாரணாசி, உஜ்ஜைன், பாட்னா, டெல்லி, கொல்கத்தா மற்றும் சிங்ராளி நகரங்கள் 'மோசமான' மற்றும் 'மிகமோசமான' காற்று தர பதிவை கொண்டிருந்தன.

ஜெய்ப்பூர், கல்பர்கி, ஜலந்தர், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 35 நகரங்களில் 'மிதமான' மாசுபட்ட காற்று இருந்தது.

ஆஸ்துமா, நுரையீரல் அல்லது இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மிதமான காற்று மாசுபாடே கூட பாதிப்பை ஏற்படுத்தும். கடும் காற்றுமாசு ஆரோக்கியமான மக்களின் உடல் நலனை மோசமாக்கும்.

மாசுபட்ட காற்றால் சாத்தியமாகும் சுகாதார பாதிப்புகள்

Source: Central Pollution Control Board

பெரும்பாலான இந்த நகரங்கள் என்.சி.ஏ.பி. இன் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர அளவில் என்.சி.ஏ.பி இலக்கு அறிவிக்கப்படவில்லை. நகரங்கள் தேசிய இலக்கில் 20-30% அளவுக்கு தங்கள் மாசுபாட்டை குறைத்தாலும் கூட அவை இன்னும் பாதுகாப்பான தரமான காற்று சுவாசிக்க மாட்டார்கள்.

உதாரணமாக, உலகின் காற்று மாசு மோசமான பட்டியலில் உள்ள 14 நகரங்களை எடுத்துக் கொள்ளலாம். என்.சி.ஏ.பி.யின் தேசிய இலக்கிற்கேற்ப குறைப்புக்களை ஏற்படுத்திய பின்னரும், 2024ஆம் ஆண்டுக்குள் அவை எதுவும் தேசிய தர அளவான பி.எம். 25 ஐ எட்டாது.

Source: Annual Averages For 2017: World Health Organization, Annual Averages in 2024: Reporter’s Calculations

இலக்கு மாசுபாடு குறைப்புகளுக்கு பின்னரும்,இந்த 14 நகரங்களில் பி.எம். 2.5 அளவானது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த பாதுகாப்பான வரம்பை விட 7-12 மடங்கு அதிகமாக இருக்கும்; மற்றும் தேசிய பாதுகாப்பு வரம்பை விட 2-3 மடங்கு அதிகமாக இருக்கும்.

என்.சி.ஏ.பி. திட்டம்: அது எப்படி செயலாற்றும்

என்.சி.ஏ.பி.யின் ஒரு பரிணாமமான "சக்தி வாய்ந்த" ஐந்து ஆண்டு நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டுள்ள இத்திட்டம், 2024ஆம் ஆண்டின் இடைக்கால மதிப்பீட்டுக்கு பிறகு அரசு அறிவிப்பின்படி மேலும் நீட்டிக்கப்படலாம். 2015 ஆம் ஆண்டுடனான ஐந்து ஆண்டுகளில் சுத்தமான காற்றின் ஆண்டு தேசிய தரத்தை கொண்டிருக்காத 102 நகரங்களில் இது நடைமுறைப்படுத்தப்படலாம். எனினும், இந்த அடிப்படையில் 130க்கும் மேற்பட்ட மாசுபட்ட நகரங்கள் சேர்க்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு இத்திட்டம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனரக தொழில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற அமைச்சகங்களின் உதவியோடு செயல்படுத்தப்படும்.

காற்று மாசுபாட்டிய மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாக, பெருமளவில் மாசுபட்ட பகுதிகளில் மரக்கன்று நடுதல், சாலை தூசி மேலாண்மை, மாசுகட்டுப்பாடு வழி முறைகளில் மின் துறையின் இணக்கம், தீயிட்டு எரிப்பதை குறைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

“இதில் நல்ல விஷயம், அடிக்கடி கடும் காற்றுமாசு பாதிப்புக்குள்ளான டெல்லி தலைநகர பிராந்திய பகுதிக்கான பிரச்சனையாக மட்டும் பார்க்காமால், இந்தியா முழுமைக்குமாக கருத்தப்பட்டது தான்” என்று ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) மூத்த ஆராய்ச்சியாளரும், டெல்லி சிந்தனையாளருமான ஹேம் தோலக்கியா, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். கண்காணிப்பு அமைப்புகளின் சான்றளிப்பு, காற்றுமாசுபாடு பற்றிய முன்னறிவிப்பு முறையை நிறுவுதல் போன்றவை, என்.சி.ஏ.பி. ஆல் அறிமுகம் செய்யப்பட்ட நல்ல யோசனைகள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், பி.எம். 2.5ஐ விட சிறந்த துகள்கள் என பிற மாசுபாடுகளுக்கான தரங்களை அறிவிக்க, தேசிய சுற்றுப்புற காற்றின் தரம், மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தோலக்கியா பரிந்துரைத்தார். "மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது, மாசுபாடுகளின் தன்மை, அவற்றின் அமைப்பு மற்றும் பங்களிப்புகள் மாறும்" என்றார் அவர்.

டெல்லி மற்றும் குர்கான் நகரங்களில் 2018 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த காற்று தர சோதனைகளில் மாங்கனீசு, நிக்கல் மற்றும் ஈயம் போன்ற கனரக உலோகங்கள் ஆபத்தான அளவில் இருப்பது தெரிந்தது. இதில், மாங்கனீஸ் இந்தியாவின் தரநிலைகளில் கூட இல்லை.

காலவரம்பு அல்லது அதிகாரம் இல்லாத திட்டம்

கடந்த 2018 ஜூலையில் வரைவு அறிக்கை பொதுப்பார்வைக்கு வெளியிடப்படாத நிலையில் என்.சி.ஏ.பி. இறுதி 20-30% மாசுபாடு குறைப்புக்கான தேசிய இலக்கை வெளியிட்டது. ஆனால் அதில் முக்கியமான அம்சங்கள் இல்லை என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.

என்.சி.ஏ.பி. தொடங்கப்பட்டதால் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓரிரு ஆண்டுக்கு எந்த பெரிய அளவிலான காற்று மாசுபாடு குறைப்பு முயற்சியையும் அறிவிக்க சாத்தியமில்லை. இச்சூழலில் என்.சி.ஏ.பி. சில முக்கிய துறை மாற்றங்களை அடையாளம் காட்டி, தெளிவான காலக்கெடுவை பட்டியலிட வேண்டும் என்று, கொள்கை ஆராய்ச்சி மையத்தை (CPR) சேர்ந்தவரும், டெல்லியை சேர்ந்த சிந்தனையாளருமான சந்தோஷ் ஹரி தெரிவித்தார்.

"போக்குவரத்து, மின்சாரம், கட்டுமானம் போன்ற துறைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இலக்குகள் மற்றும் காலக்கெடு குறித்து என்.சி.ஏ.பி. தெளிவு படுத்தியிருக்க வேண்டும்" என்று டோலக்கியா கூறினார். இத்திட்டத்தை கண்காணிக்க, அதன் செயல்திறனை சரிபார்க்க ஒரு தெளிவான அணி அவசியம் என்றார் அவர்.

"பின்பற்றுவதற்கு தெளிவான இலக்குகள் இல்லாவிட்டால், காற்று மாசு குறைப்புகளை உறுதிப்படுத்தும் அமைப்புகள் எவ்வாறு இதை கட்டுப்படுத்தும்?" என்று, லாபநோக்கற்ற அமைப்பான கிரீன்பீஸ் இந்தியாவின் மூத்த பிரசாரகர் சுனில் தாஹியா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “இது முக்கிய தேவை. ஏனெனில் மத்திய திட்டமாக இது இருப்பதால் மாநிலங்களை கட்டுப்படுத்தவில்லை” என்று அவர் கூறினார்.

என்.சி.ஏ.பி. “கடுமையாக அமலாக்குதல்” பற்றி பேசுகிறது. ஆனால் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCBs) சட்டங்களை அமல்படுத்துவதில் தோல்வி அடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று; தற்போது இருக்கும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் அவர்களுக்கு போதிய அதிகாரங்க்கள் அல்லது நெகிழ்வுத்தன்மையை வழங்கவில்லை என்று ஹர்ஷா கூறினார்.

“எனவே இவ்விஷயங்களில் என்.சி.ஏ.பி. தீட்டமுடியும்; அது ஒரு பிரச்சனையாக ஆளுமையை அங்கீகரிக்கிறது, இது ஒழுங்குமுறை கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வதற்காக (காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்) சில வகை உறுதிப்பாடு "என்று அவர் கூறினார்.

டெல்லியின் மாசு கட்டுப்பாட்டு செயல்பாடுகள் ஏன் தோல்வியடைந்தது?

தற்போது நாட்டின் தலைநகரான டெல்லி மட்டுமே நாடு முழுவதற்கும் தேவையான ஒரு நீண்ட கால விரிவான செயல் திட்டம் -சி.ஏ.பி. (CAP), காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் ஒரு அவசர தேவையாக, தரநிலை பதில் செயல் திட்டம் - ஜி.ஆர்.ஏ.பி. (GRAP) கொண்டிருக்கிறது.

சி.ஏ.பி. நடவடிக்கைகளில் போக்குவரத்து நிர்வாகம், தூய்மையான எரிபொருள்களின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் மின்மயமாக்கல் ஆகியன அடங்கும். மறுபுறம் ஜி.ஆர்.ஏ.பி. செயல்பாடு என்பது நகர மாசுபாடு அபாயகரமான அளவுகளை கடக்கும் போது அதை குறைக்க அவசர நடவடிக்கை உள்பட நகருக்குள் குப்பை எரிப்பு மற்றும் லாரிகளின் நுழைவு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள், செங்கல் சூளைகள் மற்றும் கல் குவாரிகள் மூடப்படுதல் ஆகியன அடங்கும்.

ஆனால், ஜி.ஆர்.ஏ.பி. திட்டம் தோல்வி கண்டது. ஏனெனில் போக்குவரத்து துறை, சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய தலைநகர பிராந்தியம் (NCR) மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மற்றும் அண்டை மாநிலங்கள் ஆகியன இணைந்து செயல்படவில்லை. ஜி.ஆர்.ஏ.பி. கூட்டங்களில் பொறுப்புமிக்க முகமைகளின் வருகை 39% என்றளவில் தான் இருந்தது என்று 2019 ஜனவரி 19ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

டெல்லியின் சி.ஏ.பி. திட்டத்தை போலவே பிற நகரங்களின் மாசுபாடு திட்டமும் முடிவடையும் என்பதில் அதிக சிக்கல் உள்ளது. இந்த வடிவமைப்பு தவறானது. ஏனெனில் தளர்வான காலக்கெடுவுக்குள், 90க்கும் மேற்பட்ட நடவடிக்கை புள்ளிகள் பட்டியலை அது கொண்டிருந்தது.

டெல்லியில் சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தினால், என்.சி.ஏ.பி.யின் குறிப்பிட்ட திட்டங்களுக்கான திறம்பட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக டெல்லிக்கு வழங்கப்படும் மூல மதிப்பீடு ஆய்வுகள், மற்ற நகரங்களுக்கான வடிவமைப்பாக உடனடியாக கிடைக்கும். எனவே என்.சி.ஏ.பி. போக்குவரத்து துறை, தொழிற்சாலைகளுக்கு தெளிவான காலக்கெடுவுடன் குறிப்பிட்ட மாசுபாடு குறைப்பு இலக்குகளை பரிந்துரைக்கலாம் என்று தாஹியா கூறினார்.

மேலும் என்.சி.ஏ.பி. பிராந்திய மற்றும் எல்லைகடந்த நடவடிக்கை திட்டங்களை குறிப்பிடுகிறதுல்; ஆனால் என்ன செய்யப் போகிறது என்பது பற்றி தெளிவு இல்லை. என்.சி.ஏ.பி.இல் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருக்கும் வான் மேலாண்மை முகாமைத்துவ திட்டத்தைக்காண இது மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்று ஹரீஷ் கூறினார். வான் மேலாண்மை என்பது உள்ளூர் புவியியல் மற்றும் வானியல் மாசுபடுத்திகளின் பரவலைக் கட்டுப்படுத்தும்.

ஒரு வான் மேலாண்மை திட்டம் இல்லாத நிலையில் "நகரங்கள் மாசுபாட்டை சமாளிக்க திட்டமிடலாம்; ஆனால், பல ஆதாரங்கள் தங்கள் எல்லைக்கு வெளியே விழக்கூடும் என்பதால் கொடுக்கப்பட்ட செயல்களில் அவை வழங்குவதற்கு அவசியமில்லை" என்று டோலக்கியா கூறினார்.

நகரங்கள் சமர்ப்பித்த சில திட்டங்கள் கிரீன்பீஸ் அமைப்பால் மதிப்பிட்டு நகராட்சி எல்லைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்; மேலும் அவை போக்குவரத்து மேலாண்மை மற்றும் சாலை மற்றும் மேம்பாலம் ஆகியவற்றை பற்றி மட்டுமே பேசுகின்றன. காற்று மாசுபாட்டைத் தடுக்க தங்கள் நடவடிக்கை புள்ளிகளைக் கண்டறிந்து, நகரங்களை ஒழுங்குபடுத்தும் ஆதாரங்களை -- அதாவது தொழிற்துறை குழுமம், செங்கல் சூளிய, மின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை -- சமாளிக்கவும், அவற்றை கண்டறிய வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு உறுதியான எந்த நடவடிக்கையும் இல்லை

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் 10.9 லட்சம் இறப்புக்களில் 75% காற்று மாசுபாட்டின் காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டவை என, 2018 ஜனவரி 19ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

என்.சி.ஏ.பி. திட்டத்தில் முதல்முறையாக கிராமப்புறங்களின் காற்றுத்தரம் கண்காணிப்பு பற்றி அரசு பேசியதாக, டோலக்கியா கூறினார். ஆனால் குறைப்பதற்கான வழிமுறைகள் திட்டத்தில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கக் கூடியது என்று தஹியா கூறினார்.

என்.சி.ஏ.பி.க்கு நிதியுதவி ஒரு சிக்கல் பகுதி இருக்கக்கூடும்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதற்கான உத்தேச செலவினம் ரூ .638 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் சி.இ.இ.டபிள்யு ஆராய்ச்சியானது, தேசிய காற்று தரநிலை அளவை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டின் காற்று தூய்மைப்படுத்த, இந்தியாவுக்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 முதல் 1.5% தேவைப்படும் என்று கண்டறிந்துள்ளது என்றார் டோலக்கியா.

"இது சக்தி வாய்ந்த ஆவணம்," என்ற தஹியா, "திட்டம் உருவாகிறது இந்த விஷயங்கள் சரி என்று நம்புகிறேன்" என்றார்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.