புதுடெல்லி: 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல், 2019 ஜனவரி 6ஆம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் டெல்லியில் காற்று மாசுபாடு கண்காணிக்கப்பட்டுள்ளது; இது, நகரின் வருடாந்திர மாசுபாடு நெருக்கடியை சமாளிக்க அரசின் அவசரத்திட்டம் தோல்வியடைந்திருப்பதையே காட்டுவதாக, டெல்லி நகர குடியிருப்போர் நலச்சங்கத்தின் (RWA) ஒரு கூட்டு அமைப்பான ஒருங்கிணைந்த குடியிருப்பாளர்கள் கூட்டு நடவடிக்கை (URJA) ஆய்வு தெரிவிக்கிறது.

டெல்லியின் காற்றுத்தரம் 2019 ஜனவரி மாதம் 17ஆம் தேதி, சில பகுதிகளில் மூன்று மடங்கு அதிகமான அபாயகரமான அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை, 14 அரசு துறைகளில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டிருந்த 45 விண்ணப்பங்களின் சுருக்கமாகும். வரிசைப்படுத்தப்பட்ட பொறுப்பு செயல் திட்டத்தின் (GRAP) செயல்திறனை மதிப்பீடு செய்ய மத்திய, மாநில மற்றும் நகராட்சி அமைப்புகளின் பதில்கள் கோரப்பட்டன; இந்த உத்தி, 2017 ஜனவரியில் அரசால் தொடங்கப்பட்டது.

யு.ஆர்.ஜே.ஏ. சேகரித்த தரவு பகுப்பாய்வின்படி 68 நாட்களில் டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதியில் ஒருநாள் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் காற்றின் தரமானது அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் தொடர்ந்து இருந்ததையே காட்டுகிறது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர பிராந்தியத்தில் (NCR) அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம்) மூலம் வரிசைப்படுத்தப்பட்ட பொறுப்பு செயல் திட்டத்தை செயல்படுத்தப்படுவதாக அறிவித்தது. 2016 நவம்பர் மாதத்தில் டெல்லி நகரில் பாதுகாப்பான அளவைவிட 16 மடங்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டது; இதையடுத்து டெல்லி அரசு நெருக்கடி நிலையை அறிவித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் டெல்லியின் மாசுபாடு அளவு, ஆரோக்கியமான மக்களுடைய சுவாச மற்றும் இதய அமைப்புகளைக்கூட பாதிக்கும் அளவுக்கு மிக மோசமாக இருந்தது. இந்த மாசுபாட்டின் ஆரோக்கிய தாக்கங்கள் "மெல்லிய உடல் செயல்பாட்டின்" போது அனுபவிக்கப்படுவதாக, 2018 ஜூன் 15ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

நகரின் காற்றில் உள்ள நச்சு துகள்களின் அளவு அல்லது பி.எம். (PM) 2.5 அளவானது 61-120 μg / m3 மற்றும் 300+ μg / m3 இடைப்பட்ட நிலை எனும் போது ஜி.ஆர்.ஏ.பி. ஆனது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு (WHO) அனுமதித்துள்ள 2.5 பி.எம். (24 மணி நேர சராசரி) காற்றின் தரநிலையானது 25 μg/m3; இந்தியாவின் தேசிய காற்று தரநிலையானது, 1.4 மடங்கு அதிகரித்து 60 μg / m3 என்பதை அனுமதிக்கிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) காற்றுத்தரம் கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட, தேசிய காற்று தரக்குறியீடு அளவு (AQI) அடிப்படையில் மாசு அளவுகளை, ஜி.ஆர்.ஏ.பி. அமைப்பு வகைப்படுத்துகிறது. ஜி.ஆர்.ஏ.பி.இன் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மாசுபடுத்தலின் அளவாக தரப்படுத்தப்படுகின்றன. 2017 நவம்பர் 9ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையில் குறிப்பிட்டது போல், டெல்லி நகரத்தில் குப்பை எரிப்பது, லாரிகள் நுழைவுக்கு தடை, மின் நிலையங்கள், செங்கல் சூளைகள், கல் குவாரி மூடல் போன்றவை அடங்கும்.

அண்டை மாநிலங்களில் பயிர் எரிதல், கட்டுமான நடவடிக்கை, போக்குவரத்து வாகன புகை மற்றும் மின் நிலையங்களில் உமிழ்வு போன்ற பல காரணங்களால் டெல்லி நகரின் காற்றுமாசுபாடு சிக்கல் மோசமடைந்துள்ளது. குளிர்காலத்தில், சிக்கல் மேலும் கடுமையானதாகிவிடும்; ஏனெனில் மந்தகதியில் உள்ள காற்று, மாசுபாட்டை கலைக்க அனுமதிக்காது.

ஆய்வின் காலத்தில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்

நாங்கள் முன்பே தெரிவித்தது போல், 68 நாட்களில் ஒரு குறிப்பிட்ட சிறு விதிவிலக்கு தவிர, டெல்லியின் காற்றுத்தரம் ஆரோக்கியமற்றே இருந்தது என்பதை தரவுகள் காட்டுகின்றன. ஒன்பது கண்காணிப்பாளர்கள் 612 அளவீடுகளை எடுத்ததில், 104ல் பி.எம். 2.5 அளவுகள் 300 μg / m3 க்கு மேல் காணப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பி.எம். 2.5 அளவுகள் 48 மணி நேரத்திற்கும் மேலாக 300μg / m3 க்கு மேல் இருந்தால், ஜி.ஆர்.ஏ.பி.யின் கீழ் பட்டியலிடப்பட்ட அனைத்து அவசரகால நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படுகின்றன.

"ஆர்.டி.ஐ. பதில்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், விரிவான செயல்முறை மற்றும் அறிவிப்பு செய்த போதிலும் காற்றுத்தரம் அளவுகள் மோசமாக இருப்பது, GRAP இன் கீழ் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பான துறைகள் மற்றும் விழிப்புணர்வு அளவுகளை முறையாக அமல்படுத்தாமல் இருப்பதையே இது காட்டுகிறது” என்று யு.ஆர்.ஜே.ஏ. செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஆய்வு நடந்த காலத்தில் அனைத்து பகுதிகளிலும், அனுமதிக்கப்பட்ட வரம்பு சராசரியான பி.எம். அளவைவிட குறைந்தபட்சம் ஐந்து மடங்கு அதிகமாக இருந்ததாக முடிவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார், மேற்கு டெல்லியின் அசோக் விஹார் ஆகிய இடங்களில் 2.5 மடங்கு என்ற சராசரி அளவைவிட 1 மடங்கு அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் (CPCB), டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு (DPCC) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) -- நகரின் காற்றுத்தரத்தில் தாவல்களை வைத்திருப்பதற்கு பொறுப்புடைய மூன்று நிறுவனங்கள் -- தரவுகளை செயலாக்குதல் மற்றும் கண்டுபிடிப்புகளை இ.பி.சி.ஏ.விடம் தெரிவிக்க வேண்டும். பின்னர் மாசுபாட்டை எதிர்த்து நடவடிக்கைகளை ஈ.பி.சி.ஏ. மேற்கொள்கிறது; அவற்றை அந்தந்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறது. எனினும் நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு மென்மையானதாக இல்லை.

கூட்டங்களுக்கு 39% மட்டுமே வருகை

என்.சி. ஆர் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து செயல்படவில்லை என்றால் ஜி.ஆர்.ஏ.பி. திறம்பட செயல்படாது என, 2017 நவம்பர் 9ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. ஜி.ஆர்.ஏ.பி.யை செயல்படுத்துவதற்கு 12 ஏஜென்சிகள் உள்ளன.

பொறுப்பான நிறுவனங்களின் வருகை 39% என்றளவில் குறைவாக இருப்பதாக யு.ஆர்.ஜெ.ஏ. அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.

18 ஜி.ஆர்.ஏ.பி. கூட்டங்களில், பொதுப்பணித்துறை (PWD), டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) மற்றும் டிஸ்காம் ஒரேயொரு கலந்துரையாடலில் மட்டுமே கலந்து கொண்டன. இதில் சம்பந்தப்பட்ட 12 ஏஜென்சிகளில் ஏழு, பாதிக்கும் மேற்பட்ட இக்கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

வரிசைப்படுத்தப்பட்ட பொறுப்பு செயல் திட்டம் நன்கு சிந்திக்கப்பட்ட கொள்கையாகும்; இது தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுவதோடு டெல்லியின் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் காற்று மாசு அளவுகளை சமாளிக்க வேண்டும்" என்று, யு.ஆர்.ஜே.ஏ. தலைவர் அதுல் கோயல் தெரிவித்தார். “ஜி.ஆர்.ஏ.பி. தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளபடி அதன் கடமைகள், பொறுப்புகள் பற்றி பெரும்பாலான முகவர், துறைகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஏஜெண்டுகளால் பதில் அளிக்கப்படாத பல முக்கியமான கேள்விகள், அவர்கள் ஜி.ஆர்.ஏ.பி.யின் கீழ் நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரியுமா அல்லது தங்கள் கடமைகளை செய்ய தயாராக இல்லையா என்பது தெளிவாக உள்ளது. இரண்டு சூழ்நிலைகளிலும் இக்கொள்கை தோல்வியடைந்து டெல்லி குடிமக்களுக்கு மூச்சுத் திணறலுக்கு இடமளிக்கிறது" என்றார்.

(ராய்பாகி, ஒரு தரவு விஞ்ஞானி மற்றும் கார்டிப் பல்கலைக்கழக கணக்கியல் மற்றும் தரவு இதழியல் ஒரு பட்டதாரி; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.