மும்பை: வளரிளம் பருவ பாலியல் ஆரோக்கியம் குறித்த மேம்பட்ட கவனம் முதல், நிலஉரிமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அரசு விசாரிக்கப்பட வேண்டும் என்பது வரை இந்தியா ஸ்பெண்ட் மற்றும் ஃபேக்ட் செக்கர்.இன் (FactChecker.in) கவனம் செலுத்தியதில், எங்களுக்கு 2019 ஒரு சிறந்த ஊடக ஆண்டாக அமைந்தது.

ஆந்திராவின் வறட்சி குறித்த இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை, நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விவாதிக்க, அம்மாநில அரசின் உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வழிவகுத்தது. 2019 ஜூன் மாதம் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 2019 புள்ளிவிவர இதழியல் பணிக்கான விருதுகளில் சிறந்த தரவு இதழியல் குழு (சிறிய செய்தி அறை) ஏ.பி. விருதை எங்களின் பேக்ட்செக்கர்.இன் (FactChecker.in) குழு வென்றது.

பல ஆண்டுகளாக, இந்தத் தரவுகளுக்குப் பின்னால் உள்ளவர்களின் நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் எங்களது மிகவும் பயனுள்ள கட்டுரைகளின் சுருக்கமான மறுபதிப்பு இங்கே:

ஏன் அப்ஸானா பானுவின் வாழ்க்கை மாற்றம் உ.பி. மற்றும் இந்தியாவை உயர்த்தும்

உத்தரபிரதேசத்தில் பதின்ம வயது அதிக எண்ணிக்கையில் உள்ள லக்னோவுக்கு வடக்கே சுமார் 90 கி.மீ.யில் உள்ள பதின்ம வயது கர்ப்பிணிகள் அதிகம் உள்ள மாவட்டத்தில், பலவீனமான அப்சானா பானோ மற்றும் அவரது எடை குறைந்த 2.6 கிலோ குழந்தை, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட, மூன்றாவது ஏழ்மையான மாநிலத்தில் இளம் பருவத்தினர், பாலியல் சுகாதார சேவைகளின் அரசின் தோல்வியை காட்டுகிறது. இது, அத்தகைய சேவைகளுக்கு அதன் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே செலவிட்டது. குழந்தை திருமணம் மற்றும் வளரிளம் பருவ கர்ப்பத்தை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட உத்தரப்பிரதேசத்தின் 25 “உயர் முன்னுரிமை மாவட்டங்களில்” சீதாபூரும் ஒன்றாகும். ஆனால் இதை செய்வதற்கான அரசின் திட்டமோ, பெண்களை அடையவில்லை. இது இந்தியாவின் எதிர்காலத்திற்கான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

தாக்கம்: இக்கட்டுரையை வெளியிடப்பட்ட பின்னர், மாநில சுகாதார அதிகாரிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் வளரிளம் பெண் கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இளம்பருவ நட்புக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த “திருமணத்தின் சரியான வயது” உந்துதலைத் தொடங்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். குறிப்பாக அப்ஸானா பானு போன்ற திருமணமான இளம் பருவத்தினர் அடையாளம் காணப்பட்டு குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படுவார்கள்.

பழங்குடி சமூகங்களின் ஒப்புதலின்றி வன நிலங்களை கையகப்படுத்தும் அரசு, தொழிற்சாலைகள், தேசிய அளவிலான சட்டங்கள்

இந்தியாவின் 2006 ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டம், மாநில அரசுகள் எந்தவொரு தொழில்துறை திட்டத்திற்கும் பழங்குடி சமூகத்தவர்கள் வசிக்கும் வனப்பகுதியை கையகப்படுத்துவதற்கு முன்பு அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிறது. ஆனால் நாடு முழுவதும் பல பெரிய திட்டங்களுக்கு வழிவகுக்கும் வகையில், இச்சட்டம் மீறப்படுகிறது என்று இது குறித்து ஆய்வு நடத்திய வலையமைப்பான லேண்ட் காண்பிளிக்ட் வாட்ச் என்ற அமைப்பு முடிவுக்கு வந்தது.

தாக்கம்: இக்கட்டுரையை நாடாளுமன்ற உறுப்பினர் கிரோடி லால் மீனா, ஜூலையில் மாநிலங்களவையில் மேற்கோள் காட்டி, எட்டு மாநிலங்களில் பழங்குடியினர் இடம் மாற்றம் செய்வது குறித்து கேள்வி எழுப்பினார்.

தங்களது நிலம், நம்பிக்கைகளை இழந்து, தினக்கூலிகளை மாறும் ஆந்திர விவசாயிகள்

ஆந்திராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளில், 700 அடி ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டு போயுள்ளன; பெரிய மற்றும் சிறிய விவசாயிகள் கூட கிராமங்களில் இருந்து பெருமளவில் வெளியேறுவதைக் காண்கிறோம். முழு குடும்பங்களும் தங்கள் நிலத்தையும், வீட்டையும் விட்டு, மாநிலம் முழுவதும் மற்றும் மாநிலம் தாண்டியோதினக்கூலி தேடி செல்கின்றனர். மோசமான பாதிப்புக்குள்ளான இரு மாவட்டங்களான கர்னூல் மற்றும் அனந்தபூரில் இருந்து, 2018இல் கிட்டத்தட்ட 700,000 விவசாயிகள் வெளியேறினர். அவர்களில் பலர் குண்டூருக்கும் அங்குள்ள மிளகாய் பண்ணைகளுக்கு செல்கின்றனர்; அங்கு முழு குடும்பங்களும் மோசமான நிலையில் வாழ்கின்றன; தினமும் 10 மணி நேர கடுமையாக வேலை பார்த்து நாளொன்றுக்கு வெறும் ரூ.200ஐ தான் சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் பெரிய நகரங்களில் உள்ள கட்டுமான பகுதிகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். குழந்தைகள், பசி, சுரண்டலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

தாக்கம்: வறட்சியை எவ்வாறு சமாளிப்பது என்று திட்டமிட ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கு, இக்கட்டுரை வழிவகுத்தது.

சமூக தணிக்கைகளால் ஒடிசாவின் ஏழ்மை மாவட்டங்கள் எவ்வாறு பயனடைகின்றன

சமூக தணிக்கை என்பது ஏழைகளுக்கான நலத்திட்ட நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்த உதவும் என்பதை, ஒடிசாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஆறில் ஒரு ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான அரசு திட்டங்களை பயனாளிகள், அரசு அமைப்புகள் மற்றும் செயல்படுத்துபவர்களிடையே வழக்கமான கலந்துரையாடல்கள் பயனாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை வழங்குவதில் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளன.

தாக்கம்: இந்த கட்டுரையை ஒடிசா முதலமைச்சரின் அலுவலகம் ட்வீட் செய்தது.

விருதுகள்:

பெங்களூரு கன்னட பள்ளியில் படிக்கும் வங்கமொழி பேசும் மாணவர்கள்; பருவநிலை மாற்றத்தால் மாய்ந்த தீவுகளில் இருந்து அகதிகளாக வருகை

யுனெஸ்கோவின் உலகின் இயற்கை பாரம்பரியம் மிக்க 209 இடங்களில் பட்டியலில் இந்தியாவின் சுந்தரவனக்காடுகள் (அதாவது ‘அழகான காடு’ என பொருள்) “அதன் நிலப்பரப்பு, கடல் மற்றும் நீர்வாழ் வாழ்விடங்களில் விதிவிலக்கான பல்லுயிர் பெருக்கத்தை” ஏற்படுத்துவதற்காக இடம் பெற்றுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், இந்தியாவின் சுந்தர வனக்காட்கள் பகுதியில் 220 சதுர கி.மீ நிலப்பரப்பை - இது, கிட்டத்தட்ட கொல்கத்தாவின் அளவு - கடலுக்குள் இழந்துள்ளது. உயரும் கடல் மட்ட அளவானது முழு தீவுகளையும் கபளீகரம் செய்வதால், ஏற்றுக் கொள்ளக்கூடிய உத்திகள் மற்றும் அரசிடம் நீண்டகால திட்டமிடல் இல்லாததால், பெருமளவில் மக்கள் புலம் பெயருகின்றனர். இந்த புலம்பெயர்ந்தோரில் சிலர் இப்போது வீட்டிற்கு செல்ல விரும்புவதை, சுந்தர வனப்பகுதி மற்றும் அங்கிருந்து 2,000 கி.மீ தூரத்தில் உள்ள பெங்களூரின் குடிசைப்பகுதிகளில் இருந்து நாங்கள் வழங்கிய கள நிலவர கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

விருது: செப்டம்பர் 2019 இல், எங்கள் செய்தியாளர் திஷா ஷெட்டி, இந்திய பத்திரிகை நிறுவனம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் “ மனிதாபிமான பொருள் குறித்த சிறந்த கட்டுரை மற்றும் புகைப்படம்” என்ற பிரிவில் இரண்டாவது பரிசை வென்றார்.

கேரளாவில் பெண்களின் வாழ்க்கையை ஒரு மேக் ஒர்க் திட்டம் எவ்வாறு மாற்றியது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) பெண்களின் பங்களிப்பு 2008-09 மற்றும் 2016-17க்கு இடையில் ஒன்பது சதவீத புள்ளிகள் அதிகரித்து 57 சதவீதமாக இருந்தது. இந்தியா முழுவதும் சராசரியாக, இந்த காலகட்டத்தில் வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களில் 52% பெண்கள். ஆனால், அதே காலகட்டத்தில் சாதனை அளவாக கேரளாவில் 90% பெண்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஏன் என்பதை அறிய இந்தியா ஸ்பெண்ட் குழு கேரளாவுக்குச் சென்று, மாநிலத்தின் வறுமை ஒழிப்புத் திட்டமான குடும்பஸ்ரீ ஒரு செயல்பாட்டின் பங்களிப்பை கண்டறிந்தது. தொழிலாளர் திறனில் பெண்களுக்கு இடம் கிடைக்க உதவுவதன் மூலம், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டம், அவர்கள் மத்தியில் நிதி மற்றும் சமூக பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

விருது: கொள்கை பகுப்பாய்வாளர் ஸ்ரீஹரி பலியத், கேரளாவில் பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனது கட்டுரைக்காக, மும்பை பிரஸ் கிளப்பின் ரெட்இங்க் விருது -2019ஐ சிறப்பு குறிப்புடன் பெற்றார்.

ஜூன் மாதம் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 2019 புள்ளி விவர இதழியல் பணிக்கான (சிறிய செய்தி அறை) ஏ.பி. விருதை பேக்ட்செக்கர்.இன் (FactChecker.in) குழு வென்றது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.