புதுடெல்லி: கடந்த 2017-ல், சட்டீஸ்கரின் அடர் வனப்பகுதியில் உள்ள குமுயாபல் கிராமத்தில், தனது வீட்டின் அருகே பதற்றமான சூழல் நிலவுவகை, 25 வயது பத்திரிகையாளரான மங்கல் குஞ்சம் காண்கிறார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் கவலைதோய்ந்த முகத்தோடு அங்கு வந்து, தங்களை கடந்து சென்ற கார் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"இது பழங்குடி பகுதி. இங்குள்ள மக்கள் தங்களின் நீர், காடுகள் மற்றும் நிலங்களை காக்கிறார்கள்" என்று கூறிய குஞ்சம் “இப்பகுதியில் வெளி நபர்களின் காரை பார்த்ததும் அவர்கள் ஆர்வமாகவும் அதே நேரத்தில் கவலையும் அடைகின்றனர்” என்றார்.

அருகில் இருந்த குன்றை நோக்கி சென்ற காரை, குஞ்சமும் கிராமவாசிகள் சிலரும் பின்தொடர்ந்து சென்றனர். அங்கு அவர்கள் சந்தித்தவர்களோ, இரும்பு தாது வெட்டியெடுக்கும் சுரங்கம் தோண்டுவதற்காக மரங்களை அகற்றுவது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பஸ்தர் மாவட்டத்தில் உள்ள அல்னார் கிராம வனப்பகுதி, ராய்ப்பூரில் உள்ள ஆர்த்தி பவர் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் சுரங்கப்பணிகளுக்காக "திசை திருப்பப்பட்டது" என்று கிராமவாசிகள் கூறினர்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (MoEFCC) அமைச்சகத்தின் இணையதளத்தில், சத்தீஸ்கர் அரசு, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31.55 ஹெக்டேர் பரப்பளவை சுரங்கப்பணி திட்டத்திற்காக அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ், இப்பகுதிகளில், அமைச்சகத்தின் அனுமதியை பெறாமல் வனத்துறை சாராத நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட முடியாது.

தெற்கு பஸ்தர் மாவட்ட கலெக்டர் சவுரப் குமார் கையெழுத்திட்ட இத்திட்டத்தின் செப். 26, 2016 தேதியிட்ட ஒரு ஆவணம் மற்றும் சான்றிதழ் ஒன்று, அந்த நிலம் மீதான பழங்குடியின மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் மரபுரிமை உரிமைகள் "தீர்க்கப்பட்டு” உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிராமவாசிகள் (கிராம) பஞ்சாயத்து வாயிலாக சுரங்க திட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டதாக, அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் முக்கியமானதாகும். பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகளின் அனுமதியுமின்றி, அவர்களின் மரபுரிமைகளை அங்கீகரிக்காமல், வனப்பகுதியை வனம் சாராத பணிகளுக்கு திசைதிருப்ப முடியாது என்று வன உரிமைகள் சட்டம் (FRA), 2006 தெரிவிக்கிறது. ஆனால், இங்கோ உண்மை மாறுபட்டு இருப்பதை எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.

அலர்மாரின் பழங்குடியினத்தவர்கள், ஆதிவாசிகளிடம் வனப்பகுதி நிலம் கையகப்படுத்தல் திட்டத்திற்கு ஒப்புதல் பெறவில்லை; சுரங்கத் திட்டத்திற்காக அவர்களிடன் சம்மதத்தை பெறவில்லை என்று குஞ்சம் கூறினார். 2017 மே மாதம், சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இந்தியா ஸ்பெண்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் குமார் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சகத்தின் மண்டல அலுவலகம், ஏற்கனவே இத்திட்டத்தை ஒப்புக் கொண்டிருப்பதாக, ஆவணங்கள் காட்டின.

பழங்குடியின மக்களின் ஒப்புதலை பெறாமல், சட்ட விதிகளுக்கு புறப்பாக வனப்பகுதி நிலங்களை பெரிய திட்டங்களுக்கு கையகப்படுத்தும் போக்கு, அல்னார் கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நிலம் கையகம் செய்வதில் ஏற்படும் பிரச்சனைகள், மோதல்களை கண்காணித்து ஆராய்ந்து வரும், நில மோதல்கள் கண்காணிப்பு அமைப்பு - எல்.சி.டபிள்யு.இடம் பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் இருக்கும் வன நிலப்பரப்பை கையகம் செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததாக, இதுவரை38 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இத்தகைய வழக்குகள் சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோதல்களால் 1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு 1,734 சதுர கி.மீ பரப்பளவில் இதன் தாக்கம் பரவுகிறது.

இந்த 38 வழக்குகளில் 23 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் இந்த விண்ணப்பங்களை எல்.சி.டபிள்யு. மதிப்பாய்வு செய்தபோது, அதில் 13க்கான ஆவணத்தில் ஒப்புதல் வழங்கப்படாதது தெரிய வந்தது. 10 வழக்குகளில், திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடிகள் இல்லை என்றோ அல்லது வன உரிமைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது; இத்திட்டங்களை அவர்கள் எதிர்க்கவில்லை என்றோ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Source: Land Conflict Watch

கையகப்படுத்துதலில் உள்ள விதிமீறல்களில் முக்கியமானது ஒப்புதல் பெறாதது

இந்திய நிலப்பரப்பில் கால் பங்கிற்கு சற்று குறைவாகவே வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பு சட்டம்-1980ன்படி, வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறை மூலம் தொழில் மற்றும் அரசு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள வனப்பகுதிகளை பயன்படுத்தலாம்.

ஆனால் இக்காடுகள் பல லட்சம் பழங்குடியின, ஆதிவாசிகளுக்கு பல நூற்றாண்டுகளாக வாழ்விடமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இப்பகுதியை சார்ந்தே உள்ளனர். இந்த வனப்பகுதியில் அவர்களின் பாரம்பரிய உரிமைகள் கடந்த காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை; அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே இருந்தன.

கடந்த 1951 மற்றும் 1990க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்களுக்காக, 2.13 கோடி மக்களில் 40.9% பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசி இடம் பெயர்ந்ததாக, பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (MoTA) 2014 அறிக்கை தெரிவிக்கிறது. இது, வனப்பகுதிகளில் மாவோயிச கிளர்ச்சியின் அடிப்படைக்காரணியாக கருதப்படுகிறது.

இந்த "வரலாற்று அநீதி"யை திருத்த, 2006ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் (FRA) நிறைவேற்றப்பட்டது. பழங்குடி மக்களின் வனப்பகுதிக்கான பாரம்பரிய மரபுரிமையை ஊராட்சி நிர்வாகம் அல்லது கிராமச்சபை அங்கீகரித்து அனுமதி தந்திருப்பதால் அவர்களை வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்ற முடியாது என்று சட்டம் கூறுகிறது.

இந்த ஏற்பாடானது முதல்முறையாக, பழங்குடி சமூகங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை ஒப்படைத்தது. அவர்கள் விரும்பினால் இப்போது சொல் வடிவிலோ அல்லது வீட்டோ திட்டங்களுடன் இப்போது பங்குபெற முடியும். ஒடிசாவின் நியம்கிரி மலைப்பகுதியின் தாங்ரியா கொந்த் பழங்குடியின மக்கள், 2013-ல் இதை பயன்படுத்தி, சட்டரீதியான போரில் வெற்றி பெற்று, அது பிரபலமானது. அவர்கள், பன்னாட்டு பாக்ஸைட் நிறுவனமான வேதாந்தாவின் சுரங்கத்திட்டத்தை நிராகரித்தனர்.

"ஒப்புதல் என்பது, வன உரிமை சட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்," என்று ஐரோப்பிய பல்கலை நிறுவன ஆராய்ச்சி அறிஞர் அர்பிதா கொடிவேரி தெரிவித்தார். "வனம் திசைமாற்றப்படுவதை மட்டுமல்லாமல், நடைபெறும் மேம்பாட்டு பணிகளின் தன்மையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர். ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை கொடிவேரி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

இது சட்டத்தை மிகவும் பொதுவாக மீறும் விவகாரங்களில் ஒன்று; இது அதிகாரபூர்வ பதிவுகளையும், சமூகங்களின் சாட்சியங்களையும் காட்டுகிறது.

Consent Of Gram Sabha Is A Requirement

- The Forest Rights Act, 2006, gives gram sabhas the right to protect their forest and power to regulate access to community forest resources;

- A 2009 circular of the environment ministry makes it mandatory to seek consent of gram sabhas for use of forest land for non-forest purposes;

- The 2013 judgement of the Supreme Court in Vedanta's Niyamgiri mining case said gram sabhas have the authority to decide on forest-land diversion;

- The Ministry of Tribal Affairs has been issuing circulars (such as this in March 2014) to reinforce the requirement of gram sabhas’ consent.

முடிவை தீர்மானிப்பதில் இருந்து விலகும் கிராமங்கள்

கடந்த 2009ல் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், திட்ட மேம்பாட்டு பணியாளர்கள் தங்கள் பணிக்கு வன நிலப்பரப்பை மாற்றுவதற்கு, கிராமசபை உறுப்பினர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும் (குறைந்தபட்சம் 50 சதவிகித உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்) என்று தெரிவிக்கப்பட்டது. தங்கள் சான்றிதழை, வன உரிமை சட்டத்தின் கீழ் உரிமைகள் அங்கீகாரம் பெற்று, செயல்முறை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வேண்டுகோள், அல்னர் கிராம விவகாரத்தில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை நாம் கண்டுபிடித்தோம்.

குமாரிடம் பெறப்பட்டு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கடிதத்தை இவ்வாறு கருதலாம்: "சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து(கள்) ஒவ்வொன்றும் வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து முறைப்பாடுகள், செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அவர்களால் முன்மொழியப்பட்ட திட்டம் (வன நிலப்பகுதி) மற்றும் இழப்பீட்டுக்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்."

இந்த உரிமைகேட்புக்கு ஆதரவாக, செப்டம்பர் 23, 2016 அன்று கும்யாபால் ஊராட்சியின் 10 உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கலெக்டரால் இணைக்கப்பட்டது. "கும்யாபால் ஊராட்சி மற்றும் அது சார்ந்த கிராமங்கள்- அல்னர் , தோங்பால் மற்றும் பதேபல்லி - ஆகியவற்றில் எந்தவொரு விவசாயி பெயரில் வனத்திற்கான எந்த உரிமையும் இல்லை”. கிராம மக்கள் ஏன் உரிமை கோரவில்லை என்பதற்கு தீர்மானத்தில் விளக்கம் இல்லை.

வன உரிமை தொடர்பான விஷயங்களை தீர்மானிக்க பஞ்சாயத்து அல்ல, கிராம சபை தேவை. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் கடந்த காலத்தில் இந்த சட்டபூர்வமான தேவையை மீண்டும் வலியுறுத்தியது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபை அமைக்கும் போது, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட, வயது வந்த பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பர். வன உரிமைகளை தீர்மானிக்க பஞ்சாயத்துகள் கேட்டு கொள்ளப்பட்டால், சிறுகுடிமக்கள் முடிவெடுப்பதில் பங்கேற்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்களால் கையாளப்படுவதைத் தடுக்கவும் வாய்ப்புள்ளது.

“நாங்கள் தெரிந்து கொண்டது என்னவென்றால், அவர்கள் (நிறுவனம்) மற்றொரு பஞ்சாயத்தில் கூட்டம் நடத்தி அவர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர் என்பது தான்” என்று குஞ்சம் கூறினார்.

தனது பதவி காலத்தில் அல்நார் கிராமம் சரிவை சந்தித்த நிலையில், குமுயாபால் பஞ்சாயத்து செயலாளர் சுனில்பாஸ்கர், குஞ்சம் தெரிவித்த கருத்தில் உடன்படுகிறார். "2013-14ஆம் ஆண்டு, ராய்ப்பூரில் இருந்து வந்த ஒருவர், ஒரு கிராம சபா (பஞ்சாயத்து ) நடத்தவும், சில ஆவணங்களை கையொப்பமிடவும் வேண்டுமென்று என்னிடம் கூறினார்” என்றார். ”நான் கையெழுத்திட மறுத்தபோது, உங்கள் கையொப்பம் இல்லையென்றாலும் அந்த பணிகள் நடைபெறும்” என்றார்.

வனத்துறை சட்டம் தொடர்பான மீறல்கள் குறித்து ஆர்த்தி பவர் நிறுவனத்தின் இயக்குனர் ராஜிவ் முந்த்ரா பதிலளிக்கவில்லை. அதேபோல், இந்தியா ஸ்பெண்ட் பலமுறை முயற்சித்தும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மின்னஞ்சலில் குமார் அளித்த பதிலில், "வன உரிமை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டி.எல்.சி. (மண்டல அளவிலான துணைக்குழு) இருந்து (கிராமசபையால் முன்னெடுக்கப்படும் நிலஉரிமை கோரிக்கைகளை செயல்படுத்த) பெறப்பட்ட பரிந்துரைகளை உறுதிப்படுத்தினார்".

கலெக்டருக்கு எஸ்.எஸ்.எல்.சி. செய்யும் பரிந்துரைகள் கூட குறைபாடுள்ள பஞ்சாயத்து தீர்மானத்தை அடிப்படையிலானது என்பதை அரசு ஆவணங்கள் காட்டுகின்றன.

கூட்டம் இல்லை; ஆலோசனை இல்லை - வனம் சார்ந்த திட்டங்களில் நாடு முழுவதும் இதே கதை தான்

கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல், (ஒரு எதிர்ப்பான கிராம சபை சார்பில் திட்டத்தை ஆதரித்து), வனப்பகுதி அனுமதிக்கு ஒப்புதல் அளித்தல் போன்றவற்றை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பதை நாங்கள் கண்டோம்.

எல்.சி.டபிள்யு. மதிப்பாய்வு செய்த 23 வழக்குகளில், பல மாவட்ட கலெக்டர்கள் கிராம பஞ்சாயத்துகள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல் அவர்களுக்கு அனுமதியை வழங்கியிருந்தன. சில சந்தர்ப்பங்களில், இத்திட்டம் மக்களை இடமாற்றம் செய்யாது; எனவே அவர்களின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளனர். இந்த விவகாரங்களில், மேற்கூறிய திட்டங்களுக்கு எதிராக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உதாரணத்திற்கு, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் வடகிழக்கு ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி படுகையில் 1,038 ஹெக்டேர் நிலக்கரி சுரங்க திட்டத்தை மேற்கொண்டுள்ளது. அருகில் 1,900 குடும்பங்களுக்கு உள்ளன. இதற்கு 2018 ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ”கொள்கை அளவில்” முதல் கட்டமாக அனுமதி தந்தது.

அமைச்சக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்த விண்ணப்பம் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் கலெக்டர்கள் ”வனத்துறை உரிமை சட்டத்தின் முழுமையான இணக்க சான்றிதழ்” பாதிக்கப்பட்ட சில கிராமங்களின் (திட்டத்திற்கு ஆதரவான) தீர்மானங்களுடன் சமர்ப்பித்ததாக கூறுகிறது. ஆனால், தீர்மானத்தின் பிரதிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான பத்திரப்பள்ளியில் வசிக்கும் 200 குடும்பங்கள், தங்கள் கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கிராம சபை நிராகரித்துவிட்டதாக மத்திய பழங்குடியினர் நல அமைச்சக செயலருக்கு, 2015-ல் அனுப்பிய கடிதத்தை, எல்.சி.டபிள்யூ மதிப்பிட்டது. ''எங்கள் கிராமத்தில் பல தலைமுறைகளாக உள்ள சால் காடுகளில் நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே கடந்த காலங்களில் தொழிற்சாலைகளுக்கு ஏக்கர் வனப்பகுதிகளை இழந்து விட்டோம். இனி எந்த தொழிற்சாலைக்காகவும் நமது வனப்பகுதியை விட்டுத்தர தயாராக இல்லை. இத்துடன் பள்ளிசபா (கிராமசபை) நிறைவேற்றிய தீர்மானத்தை இணைத்திருக்கிறோம்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதே காட்சிகளே மற்ற வனப்பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. நாட்டின் முதல்-இவ்வகை வழக்கு என்னவாக இருக்கும்; கிராம மக்களில் எதிர்ப்புக்கு மத்தியில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியான ஹஸ்தியோ அரந்த் காடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியதோடு மட்டுமின்றி, மாநில அரசும் தன் உரிமைகளை சுரங்கத்திற்காக விட்டுக் கொடுத்தது.

ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் (RVUNL) எனப்படும் ராஜஸ்தான் மாநில மின்சாரம் வழங்கும் நிறுவனம், 2012 ஆம் ஆண்டு வனப்பகுதியில் சுரங்கம் அமைக்கும் அனுமதியை பெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக அதானி மைனிங் பி.லிட் தற்போது ஆர்.வி.யு.என்.எல். மூலம் ஒப்பந்த அடிப்படையில் சுரங்கப்பணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சகம் வனப்பகுதியை அனுமதித்தபோதும், ​​பழங்குடி மக்களின் வன உரிமைகள் அது அங்கீகரிக்கவில்லை.உண்மையில், அவர்களது உரிமைகேட்புகள், அவர்கள் விண்ணப்பித்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே, 2013ல் தீர்வு காணப்பட்டன. பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ல், மாநில அரசு தனது வன உரிமைகளை திரும்பப் பெற்றது; பழங்குடி மக்கள் இப்பகுதியில் சுரங்க வேலைகளை தடுத்து, தங்களது உரிமைகளை தவறாக பயன்படுத்தியதாக வாதம் எழுந்தது.

உரிய ஆலோசனைகள், போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் சுரங்கத்திற்கு அனுமதி தரும் தீர்மானத்தை கிராமசபை நிறைவேற்றியது என்று, ஹஸ்தியோ அரந்த் பச்சாவ் சமிதி (உள்ளூர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சமூக இயக்க இயக்கம்) 2014 ஆய்வு தெரிவிக்கிறது. ”இவ்விவகாரத்தில் கிராமசபைகள் தவறாக வழிநடத்தப்பட்டன” என்று டெல்லியை சேர்ந்த கொள்கை ஆய்வு மையம்-நமதி சுற்றுச்சூழல் நீதி திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிபாஷா பால் தெரிவித்தார். "கூட்டங்கள் நடந்த இடங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நெருங்கிவிட்டன” என்றார்.

ஹஸ்தியோ அரந்த் பகுதி பழங்குடியின மக்கள், சுரங்கத்திற்கு எதிரான வழக்கில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் தற்போது போராடிக் கொண்டிருக்கின்றனர். ஹஸ்தியோ அரந்த் வன உரிமை மீறல்கள் பற்றி இந்தியா ஸ்பெண்ட் முன்பு வெளியிட்ட கட்டுரைகளுக்கு பதிலாக, தங்கள் தரப்பில் எதுவும் தவறாக இல்லை என்று, குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்திருந்தது.

“எங்களுக்கு தெரிந்த வரை வன உரிமை சட்ட மீறல் வழக்குகள் எதுவும் இல்லை” என்று, இந்திய கனிம தொழில்கள் கூட்டமைப்பின் கரம் போல் செயல்படும் நிலையான நிலக்கரி சுரங்க முயற்சிக்கான தலைவர் ஆஷிஸ் தாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். முழு சுரங்கத் தொழிலையும் "சில சம்பவங்கள்" காரணமாக குற்றம் சாட்டக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

'பல மாநில அரசுகள் ஒப்புதல் வழங்குவதை இன்னும் அங்கீகரிக்கவில்லை'

சுற்றுச்சூழல் அமைச்சகம் 2009-ல் சட்டத்தை நிறைவேற்றிய மூன்று ஆண்டுக்கு பின் அது, சமூகத்தின் சம்மதம் தேவை என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், மற்ற அரசு துறைகளிடம் இருந்து வந்த அழுத்தங்கள் காரணமாகவும், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபின், இதை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் அல்லது அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறினர்.

எனினும், 2013இல் வேதாந்தா நிறுவன சுரங்கத் திட்டம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒப்புதலுக்கான ஒரு வலுவான மற்றும் இறுதி மதிப்பீட்டை அளித்தது. வன நிலப்பகுதியை மாற்றும் ஒரு "முடிவை" எட்டும் வல்லமை கிராம சபைக்கு சட்டம் உள்ளது என்று, உச்சநீதிமன்றம் 2009 சுற்றறிக்கையை மேற்கோள் காட்டியது.

சுற்றுச்சூழல் அமைச்சகம் இப்போது வன உரிமைச்சட்டத்தை குறைக்கும் மற்ற முறைகள் ஏற்றுக் கொண்டது என்று, பழங்குடியின மற்றும் ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் காக்கும் பிரசார அமைப்பை சேர்ந்த ஷங்கர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். "ஒப்புதல் வழங்கல் மூன்று வழிகளில் கையாளப்படுகிறது," என்று கூறும் கோபால கிருஷ்ணன், "முதலில், சட்டத்தை மதிக்கக்கூடாது. இரண்டாவது மற்றும் மிகவும் வசதியான வழி, வன உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று மாவட்ட கலெக்டர் இருந்து ஒரு சான்றிதழ் பெறுவது; மூன்றாவது, பழங்குடி மக்களுக்கு நிபந்தனையுடன் உரிமைகளை வழங்க, வன உரிமை சட்டம் போல் தோற்றமளிப்பதற்கும் மற்ற வனச்சட்டங்களைப் பயன்படுத்துவது” என்றார்.

சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா இதை ஒப்புக்கொண்டார். "பல மாநில அரசுகள் இன்னும் ஒப்புதல் வழங்குவதை அங்கீகரிக்கவில்லை; கிராம ஊராட்சிகளில் சிலவகை என்.ஓ.சி.க்கள் (தடையின்மை சான்றிதழ்) கிராம சபைகளால் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன, "என்று அவர் கூறினார்.

முற்போக்கான எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் இன்னும் சிறந்த பயன்பாட்டிற்கு வைக்கப்பட வேண்டும்

ஆனால் ஒப்புதல் என்பது இரண்டாவது படி மட்டுமே; முதல் படி, வன உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடி மக்களின் நில உரிமைகளை அங்கீகரிக்கவும், குடியமர்த்தவும் வேண்டும். இப்போது அதன் 11வது ஆண்டு நடைமுறையில், சட்டம் இதுவரை ஒரு சில ஆதிவாசிகளுக்கு மட்டுமே பயனளித்துள்ளது.

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் சமீபத்திய நிலை அறிக்கையின்படி, ஏப்ரல் 2018 வரை, 42 லட்சம் நில உரிமை மீதான கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதில் 19 லட்சம் அல்லது 45% உரிமங்களே வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட சம எண்ணிக்கையிலான கேட்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன; எஞ்சியவை நிலுவையில் உள்ளன.

மாநில அரசுகள் வன உரிமை சட்டத்தை "தற்காலிக" முறையில் செயல்படுத்துகின்றன என்று, சமூக காடுகள் உரிமை - கற்றல் மற்றும் வாதிடும் முன்முயற்சி என்ற வனப்பகுதி மக்களின் உரிமைகளுக்கு போராடும் அமைப்பின் உறுப்பினர் துஷர்தாஸ் தெரிவித்தார். "இது (சட்டம்) மூன்று முக்கிய சிக்கல்களை எதிர்கொள்கிறது," என்ற அவர், "ஒன்று, அரசின் உறுதிப்பாடு இல்லாதது; இரண்டாவது, வன அதிகாரத்துவத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு உள்ளது. அது, வன நிலப்பகுதி கட்டுப்பாட்டைக் கொடுக்க விரும்பவில்லை. மூன்றாவதாக, வேண்டுமென்றே தவறான வழிகாட்டுதல் உள்ளது; இது தீர்க்கப்படவில்லை” என்றார்.

இன்னுமொரு சட்டபூர்வமான ஏற்பாடு உள்ளது; ஆனால், அதற்குரிய தகுதிக்கான கவனத்தை அது பெறவில்லை.

"உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு மற்றும் தீர்க்கப்பட்டதும், வனப்பகுதிக்கான சமூகங்கள் வேறுபயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருந்தால், மூன்றாவது நடவடிக்கை இழப்பீடு மற்றும் மறுவாழ்வாக இருக்க வேண்டும், " என்று, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷோமொனா கண்ணா தெரிவித்தார். எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தில் (நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம், 2013) நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மையின் உரிமையாவது இங்கு வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது; நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. இது பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய ஆதிவாசிகளை உள்ளடக்கியது.

இருப்பினும், சட்டத்தின்படி, பழங்குடியின ஆதிவாசிகளின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களின் சம்மதத்தை பாதுகாக்க, நஷ்டஈடு மற்றும் மறுவாழ்வு பணிகளை வழங்குவதற்கும் விரிவான வழிவகைகளை அரசு மேற்கொண்டுள்ள நிலையில், எந்தவொரு வழக்குகளும் இதுவரை வெளிவரவில்லை. பெரும்பாலான வன உரிமை மோதல்களில், இச்செயல்முறை கடந்துவிட்டது.

ஒரு சில அதிகாரிகளை கையாள்வதன் மூலம் வன நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்று பெருநிறுவனங்கள் மற்றும் பெரு வர்த்தக அமைப்புகள் நினைக்க தொடங்கிவிட்டன. உரிமைகளை இழக்க நேரிடும் மக்களிடம் ஆலோசனை பெறத் தேவையில்லை என்று நினைக்கின்றன, " என்கிறார் கோபால கிருஷ்ணன்.

ஏன் இந்த மோதல் தொடர்கிறது?

தென் பாஸ்டர் மாவட்டமானது கிளர்ச்சி-தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒன்று, இந்தியாவில் ராணுவமயமான பகுதிகளிலும் ஒன்றாகும்.

அலர் கிராம மக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது போல் உணர்கின்றனர்; அதனால் தான் கிராமவாசிகளின் "கவனத்தை ஈர்ப்பது போல்" பெருநிறுவனங்கள் அல்லது அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்றார் குஞ்சம். நாட்டின் ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பதாக இந்தாண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாலும், குமியாபால் கிராமத்தில் இதுவரை மின்வசதி கிடையாது.

அடிப்படை வசதிகள், மின்சாரம் மற்றும் முறையான கல்வி இல்லாத நிலையிலும், காடுகள் இந்த சமூகங்களின் வாழ்க்கை முதுகெலும்பாக உள்ளன. "பழங்குடி மக்களுக்கு இயற்கைதான் மிகப்பெரிய ஆதாரம். சுரங்கம் அதை துண்டிக்கிறது " என்று குஞ்சம் கூறினார்.

அன்னார் கிராம மக்கள் தங்கள் வனப்பகுதியை காப்பாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் குஞ்சம் சொன்னது போல், "யாரோ என் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தால், பிறகு அவர்கள் என்னையும் யாரென்று முதலில் கேட்கமாட்டார்கள்?"

(மணிரா சவுத்ரி, சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் நிலமோதல்கள் கண்காணிப்பு அமைப்பின் எழுத்தாளர். மிருணாளி, ஆராய்ச்சியாளர் மற்றும் நில மோதல் அமைப்பில் உண்மை சரிபார்த்து ஆராய்ச்சிக்கு பங்களிப்பவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.