இளங்கலை மாணவியாக இருந்தபோதே பத்திரிகைத்துறையில் மதுர் தனது பயணத்தை தொடங்கி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வாராந்தோறும் கலாச்சாரம் குறித்த கட்டுரைகளை எழுதினார். சண்டிகரில், இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் எழுதி, திருத்தம் செய்து வந்துள்ளார். டெல்லியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், சிறப்பு எழுத்தாளராகவும், டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் தலையங்கப்பக்கத்தில் எழுதியும் வந்துள்ளார். 2007இல் டைம் பத்திரிகையின் இந்திய நிருபராக சேர்ந்து, மும்பை 26/11 தாக்குதல்களை எழுதினார். 2009ம் ஆண்டில் பி.என்.ஏ இன்க் (இப்போது ப்ளூம்பெர்க் லா) இந்திய நிருபராக சேர்ந்து, கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்களை எழுதினார். அவர் உலக பொருளாதார மன்றம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கும் எழுதியுள்ளார். ஆசியா காலிங் மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கான வானொலி தொகுப்புகளை தயாரித்தவர். மதுர், வார்விக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலை பட்டமும், சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் காலனித்துவத்திற்கு பிந்தைய ஆய்வுகள் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.