சென்னை: கடந்த ஜூன் 15 இரவு, பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி.) வழக்கமான தனது மாலை நேர கோவிட் -19 அறிக்கை மற்றும் ட்வீட் பதிவை வெளியிட்டது; அது, கோவிட்-19 வழக்குகள் அதிகமுள்ள நகரமாகும். மாநகரின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 2,248; அதில், புதியதாக 58 இறப்புகள் அடங்கும். ஆனால், அடுத்த நாள் காலையிலேயே இந்த எண்ணிக்கை சுமார் 40% உயர்ந்தது - ஜூன் 16 அன்று மாலை அறிக்கையில், 3,165 இறப்புகள் என்று பி.எம்.சி. அறிவித்தது; இதில் 862 பழைய, ஆனால் முன்னர் அறிவிக்கப்படாத இறப்புகளும் அடங்கும்.

நாடு முழுவதும் பாதிப்பகுதிகளில், ஏன் இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லியிலும் கூட இதேபோன்ற நிலை உள்ளது. ஜூன் 15 அன்று, டெல்லி மாநில சுகாதாரத்துறை அறிக்கை, அன்றைய தினம் 73 உட்பட மொத்தம் 1,400 இறப்புகளைப்பதிவு செய்தது. ஜூன் 16 அன்று, 93 புதிய கோவிட்-19 இறப்புகள் நிகழ்ந்தன, ஆனால் ஒட்டுமொத்தமாக மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து 1,837 ஆக அறிக்கை காட்டியது.

மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கோவிட் -19 இறப்பு குறித்த தகவல்களில் பின்னடைவு, தவறான அறிக்கை மற்றும் வேறு பிழைகள் இருந்த நிலையில், "இறப்புத்தரவில் வேறுபாடுகளை சரி செய்யும்" பணியை குறைந்தது மூன்று மாநிலங்கள் --அதாவது மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாடு-- மேற்கொண்டதன் விளைவாகவே இந்த திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது.மாநில அரசுகளை சென்றடையும் கோவிட் -19 இறப்புத்தரவுகளின் விரிவான ஆய்வு, அதன் மீது மத்திய அரசும் பொதுமக்களும் கவலை மற்றும் நம்பிக்கையின் இருபகுதிகளை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று, முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இறப்பு தொடர்பான தணிக்கைக்குழுக்களின் தெளிவற்ற செயல்பாடுகள்

தற்போதைய கோவிட் தொற்றுநோயின் போது இறப்புகளைப்பதிவு செய்வதற்கான நெறிமுறைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் இருந்து (ICMR - ஐ.சி.எம்.ஆர்) வருகிறது. எந்த சூழ்நிலையில் ஒரு மரணத்தை அது கோவிட்-19 மரணம் என்று சான்றளிக்கப்பட வேண்டும் என்பதை, அது தெளிவாகக் காட்டுகிறது (கீழே காண்க).

Rules For Recording COVID-19 Deaths

The ICMR’s “Guidance for appropriate recording of COVID-19 related deaths in India” was authored by Prashant Mathur, director of the ICMR’s National Centre for Disease Informatics and Research. Written in jargon-free and simple language complete with examples of various scenarios that doctors and hospitals might face, the document makes four important points about recording COVID-19 deaths:

  • Even if a COVID-positive person dies without symptoms of the disease, the death should be recorded as a COVID-19 death under U07.1, the World Health Organization’s (WHO) International Classification of Diseases (ICD-10) code for a confirmed COVID-19 death.
  • Even if a positive patient appears to die of respiratory failure, the underlying cause of death--as distinct from the mode of death--should be listed as COVID-19.
  • If a COVID-positive person has comorbidities, the patient has a higher risk of dying of respiratory failure. But the comorbidities should not be listed as the underlying cause of death; the cause of death remains COVID-19.
  • If a person dies without being tested for COVID-19, or had tested negative but displayed COVID-19 symptoms, the death should be classified as a “suspected or probable COVID-19” death.

இருந்த போதும், களத்தில் இவ்விஷயங்கள் மிகவும் வேறுபட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் டெல்லி போன்ற சில மாநிலங்கள், மாநில அளவில் “இறப்பு தணிக்கைக் குழுக்களை” அமைத்துள்ளன; இக்குழுக்கள், தினசரி கோவிட் இறப்பு எண்ணிக்கையை அறிவிக்கும் முன், அதில் எத்தனை “உண்மையான” கோவிட்-19 மரணங்கள் என்பதை தீர்மானிக்க, கோவிட்-19 இறப்புச்சான்றிதழ் அளிக்கின்றன. மும்பையில் பி.எம்.சி மட்டத்தில், மும்பை பெருநகர பிராந்தியத்தில் மற்றும் மாநில அரசு அளவில் இத்தகைய இறப்புத் தணிக்கைக் குழுக்கள் உள்ளன.

தரவுகளில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய இதுபோன்ற குழுக்கள் அவசியம் என்பது, அவர்களின் கண்ணோட்டம் ஆகும். "எங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கும் கட்சிகளால் நிர்வகிக்கப்படும் மாநகராட்சிகளை நாங்கள் கையாள்கிறோம்; அவை, அரசியல் காரணங்களுக்காக இறப்பு எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன," என்று, டெல்லி அரசின் இறப்பு தணிக்கைக்குழுவுடன் தொடர்புடைய பெயர் வெளியிட விரும்பாத டெல்லி அரசின் ஆலோசகர் தெரிவித்தார். ‘முக்கிய மருத்துவமனைகள் கூடுதல் பணிப்பளுவில் உள்ளன; அத்துடன், இறப்புத்தரவை விரைவாக அளிக்க, எங்களுடன் அவை இணங்குவதில்லை. எனவே, சான்றிதழ்களை கண்காணித்து, அவற்றில் எது உண்மையில் கோவிட்-19 இறப்புகள் என்பதை தீர்மானிக்க, இதுபோன்ற குழுக்கள் அவசியம்” என்றார்.

டெல்லியை போலவே பிற மாநிலங்களிலும் அரசியல் காரணங்களுக்காக இந்த குழுக்களின் தேவை உள்ளது. இறப்புகள் மற்றும் இறுதி எண்ணிக்கை பற்றி மத்திய அரசுடன் பல வாரங்களாக நீடித்து வரும் முரண்பாடுகளால், மேற்கு வங்கம் அதன் இறப்புப்பதிவு தணிக்கைக் குழுவை நீக்கியது. பிற மாநிலங்களில், குழுக்கள் தொடர்பான சர்ச்சைகள் குறைவான இருக்கலாம், ஆனால் அந்த மாநிலங்கள், தரவுகளை உடனடியாக பகிர்ந்து கொள்வதில்லை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

நான்கு மாநிலங்களை (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம்) சேர்ந்த இறப்பு தணிக்கைக்குழு உறுப்பினர்களுடன் இந்தியா ஸ்பெண்ட் குழு பேசியது; அப்போது, தங்கள் முன்புள்ள கோவிட் வழக்குகள் எண்ணிக்கை, கோவிட் -19 இறப்புகள் விவரம், சான்றிதழ் பெறப்பட்டவை குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள, அவர்கள் யாரும் முன்வரவில்லை. தமிழ்நாடு பொதுச்சுகாதார இயக்குநரகம் அமைத்த குழு, சென்னை மாநகராட்சியின் ஆவணப்பதிவுகளை ஆய்வு செய்தது. அதில், கோவிட்-19 இறப்பு என்று சான்றளிக்கப்பட்ட 236 மரணங்களின் விவரங்களை, கோவிட்இறப்புகள் என்பதை மாநில அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது; இதையடுத்து, தமிழகம் தேசிய அளவில் தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்தது. அந்த இறப்புகள், நகரின் அல்லது மாநிலத்தின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையில் தானாக சேர்க்கப்படவில்லை. எனவே, அனைத்து கோவிட்-19 இறப்புகளையும் தணிக்கை செய்ய, தமிழக அரசு ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்ததாக, சென்னை மாநகர தலைமை சுகாதார அலுவலர் எம். ஜெகதீசன், ஜூன் 23 அன்று இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இதேபோன்ற நிலைதான் மும்பையிலும் நடந்தது: சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 347 கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் இறந்துவிட்டனர், ஆனால் மும்பை மாநகராட்சியோ (பி.எம்.சி), ஐ.சி.எம்.ஆர் நெறிமுறைகளுக்கு புறம்பாக, அவர்களை கோவிட் அல்லாத மரணங்கள் என்று முத்திரையிட்டு வகைப்படுத்தியது. "இது மும்பை மாவட்ட இறப்பு தணிக்கைக்குழுவால் கண்டறியப்பட்டது. தற்செயலான மரணங்கள் தவிர கோவிட்-19 நேர்மறை நபர்களின் அனைத்து இறப்புகளும் கோவிட் 19 இறப்புகளாக கணக்கிடப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளோம். தணிக்கை செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது,” என்று மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் (கே.இ.எம்.) மருத்துவமனையின் முன்னாள் டீன் அவினாஷ் சுபே கூறினார்.

எழிலன் நாகநாதன், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆலோசகர் மருத்துவர் மற்றும் நீரிழிவு மருத்துவர் ஆவார். அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தினமும் கோவிட்-19 நோயாளிகளை பரிசோதித்து வருகிறார். "எந்த மரணத்தை கோவிட்-19 இறப்பு என்று அறிவிக்கப்படுவது தொடர்பாக மாநில அரசின் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. நகரத்தில் நாம் காணும் விஷயங்களில் இருந்து, எண்ணிக்கை குறைக்கப்படுகிறதோ என்று சந்தேகிப்பதற்கான காரணம் நமக்கு இருக்கிறது,” என்றார் அவர்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின், உலகளாவிய சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியரான பிரபாத் ஜா, ‘Million Death Study in India’ என்ற தலைப்பிலான ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளராவார் ; இது, "வாய்மொழி பிரேதப் பரிசோதனை’ உத்தரவு நடந்த, மரணம் நிகழ்ந்த 10 லட்சம் வீடுகளில் இறப்புக்கான 'உண்மையான' காரணங்களை மதிப்பிடும் ஒரு திட்டமாகும். "தொற்றுநோய் பரவலின்போது, இறப்புகளை மிகைப்படுத்தாமல் இருக்க, எண்ணிக்கையை குறைத்து தவறாக மதிப்பிட விரும்புகின்றனர்" என்று ஜா கூறினார்; கோவிட் -19 சுவாசப் பிரச்சனை மட்டுமல்ல, நாளங்கள் மற்றும் பிற இறப்புகளையும் ஏற்படுத்தியது என்ற கண்டுபிடிப்புகள் அதிகரித்துள்ளன. “இது ஒரு கோவிட் மரணத்தின் பரந்தளவிலான வரையறையுடன் பற்றிக் கொள்வதற்கான ஒரு வாதம். கோவிட்-19 அல்லது கோவிட்-19 ஆக இருக்கலாம் என்று சந்தேகத்துடன் சொன்னாலே, அது கோவிட் மரணம் என்று அறிவிக்கப்பட வேண்டும். அதாவது, [இது] ஒவ்வொரு மாநில தீர்ப்பாளர் அல்லது தணிக்கையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் தெளிவற்றதாக இருக்க வேண்டும் என்பதாகும்,” என்று ஜா கூறினார்; அவர், யூனிட்டி ஹெல்த் டொராண்டோவில் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.

காணாமல் போன இறப்புகள்

தணிக்கை குழுவினர் ஒருபோதும் ஆய்வு செய்யாத மரணங்கள் அனைத்தும் உள்ளன.

"இந்நேரத்தில், வீட்டில் நிகழும் இறப்புகள் மற்றும் உள்ளூர் பொது மருத்துவரிடம் [GP] சான்றிதழை பெறுவது உள்ளிட்டவை எங்களது குழுவின் ஆய்வில் இடம் பெறாது" என்று டெல்லி அரசின் ஆலோசகர் கூறினார். "இத்தகைய தனியார் பயிற்சி மருத்துவர்களில் பெரும்பாலோர் எவ்வாறாயினும், "சந்தேகத்திற்குரிய கோவிட்-19"ஐ, இறப்புச் சான்றிதழில் குறிப்பிட மாட்டார்கள்; ஏனெனில் பழிக்கு ஆளாகுதல், தனிமைப்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முழு செயல்முறைகளே காரணம்" என்றார். எவ்வாறாயினும்,இத்தகைய சந்தேகத்திற்குரிய சில வழக்குகளை வெளிப்படுத்தாமல் இருக்க, மயானம் அல்லது இடுகாட்டில் ‘கோவிட் -19 இறுதிச்சடங்குகள்’ நடத்தப்படும்; சில நேரங்களில் கோவிட்19 அல்லாத மரணங்களுக்கும் கூட இது நடக்கும் என்று அவர் கூறினார். அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் சந்தேகத்திற்கிடமான கோவிட்-19 நோயாளிகள் குறித்த தகவல்கள், அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக ஏன் இருந்தது என்பதை இது விளக்குகிறது.

ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை மீறி, சந்தேகத்திற்கிடமான அல்லது சாத்தியமான கோவிட்-19 இறப்புகளுக்கான ஐ.சி.டி -10 குறியீடான U07.2-ன் கீழ் எந்த இறப்புகளுக்கும் இதுவரை சான்றிதழ் வழங்கவில்லை என்று மும்பை, டெல்லி மற்றும் சென்னை அதிகாரிகள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். "டெல்லியில் அனைத்து கோவிட்-19 இறப்புகளும் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளன" என்று, மாநிலத்தின் இறப்பு தணிக்கைக் குழு உறுப்பினர் தெரிவித்தார். "நாங்கள் U07.2-ஐ ஒத்துப்போகும் சில வடிவங்களை பெற்றுள்ளோம்; ஆனால் சந்தேகத்திற்குரிய கோவிட்-19 இறப்புகள் என்று நாங்கள் இன்னும் சான்று வழங்கவில்லை" என்று சென்னை மாநகராட்சியின் ஜெகதீசன் கூறினார். அதேநேரம் மும்பையில், "தற்போது அனைத்து இறப்பு சான்றிதழ்களும், உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 சோதனை மற்றும் மருத்துவமனைகளால் வழங்கப்படுகின்றன" என்று மும்பை லோக்மண்ய திலக் முனிசிபர் பொது மருத்துவமனையின் தடயவியல் தலைவர் ராஜேஷ் தேரே கூறினார். "கோவிட்-19 நேர்மறையை பரிசோதித்தவர்களின் இறப்பு அறிக்கைகளை பார்க்கும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பணிக்கப்பட்டுள்ளோம்" என்று மகாராஷ்டிரா இறப்பு தணிக்கைக்குழுவின் தலைவர் சுபே கூறினார். சந்தேகத்திற்கிடமான அல்லது சாத்தியமான கோவிட்19 வழக்குகளை பார்க்க வேண்டும் என்றும் அந்தக்குழு கேட்கப்படவில்லை.

இதன் பொருள் என்னவென்றால், கோவிட் பரிசோதனை செய்யாத அல்லது பெறமுடியாத மக்களிடையே நிகழும் பல இறப்புகளை இந்தியா தவறவிட்டிருக்கலாம் என்பதாகும். உதாரணமாக, நியூயார்க் நகரில் மொத்த இறப்புகளில் ஐந்தில் ஒரு பங்கின் காரணம், கோவிட்-19 வழக்குகள் என சந்தேகிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கோவிட்-19 இறப்புகள் வெவ்வேறு காரணங்களுக்காக குறைவாகக் குறிப்பிடப்படுகின்றன; மேலும் இத்தகைய தணிக்கைக்குழுக்கள் சிறந்த மதிப்பீடுகளை வழங்குவதற்காக, தரவுகளை சரிசெய்கின்றன என்று ஜா கூறினார். "தணிக்கைக் குழுக்கள், உலக சுகாதார அமைப்பின் (WHO) நடைமுறைகளைப் பின்பற்றி, அதன் வழிகாட்டுதல்களின்படி அறிக்கை வழங்கினால், கோவிட் -19 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்ட நோய் கண்டறியும் பணியை செய்ய வேண்டியிருக்காது. நெதர்லாந்து (இது முதலில் ஆர்டி-பி.சி.ஆர் இறப்பை உறுதிப்படுத்தியது, பின்னர் அதில் 20-30% இறப்புகள் தவறவிடப்பட்டன என்பதை அறிந்தது), பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் தாமதமாக கனடாவின் கியூபெக் மாகாணங்களில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டது போல இது உண்மையில் ஒரு தவறு” என்று ஜா கூறினார். சில நாடுகளில், தவறவிட்ட இறப்புகள் நர்சிங் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் நிகழ்ந்துள்ளன; மற்றவற்றில் வீடுகளில் நேர்ந்த இறப்புகள் தவறவிடப்பட்டதாக, ஜா கூறினார்; அவை சரி செய்யப்பட்டு எண்ணிக்கை சேர்க்கப்பட்டதன் விளைவாக, அதிக இறப்பு மதிப்பீடுகள் வந்தன.

"இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது விஷயங்களின் கலவையாக இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன்: ஒன்று, தரவை தொகுக்க அரசு மற்றும் மருத்துவமனைகள் பின்பற்றும் அமைப்புகள் வேறுபட்டவை. இரண்டாவது கவலை, அவர்கள் பி.சி.ஆர்-உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளை மட்டுமே தெரிவிக்கிறார்கள் என்றால், அனைத்து கோவிட்-19 இறப்புகளும் பரிசோதிக்கப்படாததால், அவர்கள் நிச்சயமாக சில இறப்புகளை கண்டிருக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

சுதந்திரமான தணிக்கையை நோக்கி

கோவிட்-19 நேர்மறை நபர்கள் பெரிய மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறால் தெளிவாக இறப்பதைத் தவிர, வீட்டிலோ அல்லது மருத்துவமனைகளிலோ இறப்பவர்களை அரசு முன்கூட்டியே கண்டறிய வேண்டும் என்று, சென்னையை சேர்ந்த ஆலோசக மருத்துவர் மற்றும் நீரிழிவு மருத்துவர் நாகநாதன் தெரிவித்தார். "தொற்றுநோய் காலத்தில் ஒரு வயதான நபரின் திடீர் மரணம் அல்லது அறியப்பட்ட கொமொர்பிடிட்டிகளுடன் நோயாளி இறந்தால், அதுபற்றி விசாரிக்க வேண்டும், ஆனால் அது நடக்காது. அவர்கள் மருத்துவம் -சட்ட வழக்குகளில் மட்டுமே பிரேதப்பரிசோதனை செய்கிறார்கள்”, என்ற அவர், “அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் விபத்து அல்லது அவசரகால [வார்டுகளுக்கு] வரும்போது, அவர்களுக்கு கோவிட்-19 அறிகுறி தென்பட்டாலும், பரிசோதிக்க மாதிரிகள் எடுக்கப்படுவதில்லை… ஒரு தற்காலிக நோய் கண்டறியும் செயல்பாடு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இத்தகையோரின் இறப்புச் சான்றிதழ்கள் அனைத்தையும், அரசு இன்னொரு முறை ஆராய வேண்டும்” என்றார்.

இறந்த உடல்களை பரிசோதிப்பது தொடர்பாக தெளிவான நெறிமுறைகளை ஐ.சி.எம்.ஆர் கொண்டு வரவேண்டும் என்று டெரே கூறினார். "உதாரணமாக, அனைத்து உடல்களும் கோவிட்-19 தொற்றா என பரிசோதிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னால், என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குத் தெளிவாகத் தெரியும்," என்று அவர் கூறினார்.

"இந்தியாவின் குறைந்த சோதனை விகிதங்கள் உள்ள சூழலில், பரிசோதனை செய்யப்படாத மரணங்கள் நிச்சயம் கவலைக்குரிய ஒன்றாகும். நினைவில் கொள்ளுங்கள், 15-20% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவச்சான்றிதழ் பெறும் ஒரு சூழ்நிலையைப் பற்றி, மிகச்சிறந்த தருணத்தில் நாம் பேசுகிறோம்,” என்று இந்தியாவின் முன்னாள் சுகாதார செயலாளர் கேசவ் தேசிராஜு கூறினார். பெரு நகரங்களில் இருந்து அறிக்கைகள் வெளியாகின்ரன; ஆனால், கிராமப்புறங்களில் இறப்புச்சான்றிதழ் இன்னும் அரிதானது மற்றும் இறப்புகளை தெரிவிக்கும் நிர்வாக அமைப்பும் “குளறுபடியானது” என்று தேசிராஜு கூறினார்.

எனவே, இறப்புகள் துல்லியமாக தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்த, மாநிலங்கள் அவற்றை எவ்வாறு தணிக்கை செய்கின்றன? இதற்கு, இறப்பு தணிக்கைக்குழு என்பது நல்ல ஏற்பாடு என்று தேசிராஜு கூறினார். தொற்றுநோய் உள்ளது அல்லது இல்லை என்று இறப்புச் சான்றிதழ் வழங்கும் மருத்துவரின் தீர்மானத்தில் உள்ளது; அதற்கு மேற்பார்வை தேவை என்று அவர் கூறினார். பிரச்சனை என்னவென்றால், தற்போதைய சூழல்தான். "இக்குழுக்கள் சில மரணங்களை மறைக்கக்கூடும் என்று நாங்கள் இப்போது சந்தேகிக்கிறோம்; ஏனெனில் இதிலும் அரசியல் கலந்துவிட்டது. ஏனெனில், இறப்புகள் நிகழ்வது நிர்வாகத்திறமையின்மையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இந்த இறப்புகளை உங்களால் மறைய முடியுமானால்… அதை செய்யுங்கள் என்று அதிகாரபூர்வமற்ற ஒரு உத்தரவு இருப்பதாகவே நான் நம்புகிறேன், "என்று அவர் கூறினார்.

தணிக்கைக்குழு இன்றியமையாதது; ஆனால் அது நெருக்கடியின் கீழ் இயங்குகிறது என்பது தெரிந்த உண்மை; எனவே அடுத்த கட்டமாக இந்த குழுக்களுக்கு அதிகாரம் தரப்பட வேண்டும் என்று, தேசிய சுகாதார இயக்கத்திற்கு பணியாற்றிய அரசு அமைப்பான தேசிய சுகாதார அமைப்புகளின் வள மைய முன்னாள் இயக்குநர் டி.சுந்தரராமன் கூறினார். இவர் இப்போது மக்கள் சுகாதார இயக்க ஆலோசனை குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராகவும், ஐ.ஐ.டி. - சென்னையில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறை துணை பேராசிரியராகவும் உள்ளார்.

இந்த குழுவில் கல்வியாளர்கள் அல்லது சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் வெளிஉறுப்பினர்கள் இருக்க வேண்டும். இது தணிக்கை செய்வதால், அதற்கு சுகாதார அமைப்புகளின் சில பிரிப்பு தேவைப்படுகிறது. சுயாதீன குழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும், அவர்கள் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தவும், தரவுகளையும் ஆவணங்களையும் பதிவுசெய்யவும், அதிகரிப்பை காணவும், மாதிரிகளை கேட்கவும், பதிவுசெய்யப்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடவும் தயாராக இருக்க வேண்டும், ”என்று அவர் பரிந்துரைத்தார். "குறுகிய காலத்தில், தரவுகளை குறைத்துக் காட்டுவதன் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்வதாக மாநில அரசுகள் நினைக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், அவர்களுக்கு தான் அது நிதிச் சுமையாக இருக்கும், குறிப்பாக நோய் மாவட்டங்களுக்கு பரவும்போது, ”என்று அவர் எச்சரித்தார்.

Interview with Prashant Mathur, Director of the National Centre for Disease Informatics and Research of the ICMR

Most states have set up a Death Audit Committee which audits all the death certificates to determine the number of 'real' COVID-19 deaths. Is this an ICMR-recommended mechanism? Is there concern that this might create perverse incentives, especially since these committees' proceedings are closed to the public?

ICMR has not recommended Death Audit Committees to the states.

The constitution of Death Audit Committees is a public health strategy undertaken by the health departments in states to review the circumstances of the death, the cause of death, identify the possible reasons that led to the death and the factors that could have prevented the death. Such committees have both external members and health department officials and are usually constituted for specific health conditions. These committees primarily help in devising strategies for case detection, clinical management, health system response and their implementation. The committee also reviews the causes of death due to COVID-19 and ensures that the comorbid conditions are recorded accurately.

As COVID-19 is a new disease with new ICD-10 codes and risk of mortality is directly proportional with increasing age and comorbidities, ICMR published the Guidance document for appropriately recording the cause of death in COVID-19 related deaths.

Most states have not yet certified any U07.2 deaths (suspected or probable COVID-19 deaths). Given that suspected COVID-19 makes up a significant portion of global deaths, could the states be asked to report such deaths separately?

The World Health Organization (WHO) has provided U07.2 for probable or suspected COVID-19 in the absence of testing. The WHO has also recommended that U07.1 codes may be used for reporting COVID-19 deaths in countries that may not report laboratory confirmation of COVID-19 on the death certificate. So U07.1 may indicate both laboratory confirmed and probable or suspected COVID-19 deaths.

In due course, as the clinical definitions of COVID-19 are well established, the codes of U07.2 may be adopted by the respective health departments.

What is the best way to ensure that deaths taking place at homes and outside of hospitals without a microbiological test are included in the overall statistics?

Deaths that take place at home or outside the hospital and [where] there is lack of laboratory test confirmation have to be reported to the Civil Registration System for death registration. Standard protocols may be provided by the health departments to the local registrars to record suspected or probable COVID-19 deaths. The questions should include presence of any COVID-19 symptoms, exposure to COVID-19 positive patients, sequence of events of death that include respiratory failure, and associated comorbidity.

Such deaths could be registered in two ways:

  1. Medical certification of cause of death (Form 4A) by the attending physician or family doctor who is aware of the sequence of events and the causes that led to the death should be submitted with the death report (Form 2) to the Local Registrar of Births and Deaths of the Civil Registration System.
  2. Even when a medically certified cause of death (Form 4A) is not available, there is a provision to record the probable cause of death as reported by the family or relatives of the deceased in the death report (Form 2) during the death registration process.

Presently, the data on cause of death using the two ways mentioned above is neither complete nor accurate and hence it is not reliable to be reported as statistics. Strengthening of systems to record and report cause of death in the civil registration system could facilitate improving overall statistics.

இந்தியாவின் கோவிட்-19 இறப்பு தொடர்பான விசாரணை கட்டுரையின் இரண்டாம் பகுதி இது. முதல் பகுதியை நீங்கள் இங்கே படிக்கலாம்.

(எஸ். ருக்மிணி, சென்னையைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.