சென்னை:கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பிருந்தே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட மரணங்கள்எப்போதும் சிக்கல் நிறைந்ததாகவேஇருந்து வந்துள்ளன: இந்தியாவில் நிகழும் இறப்புகளில் 70% மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மட்டுமே மருத்துவச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது, பெரும்பாலும் மரணத்தின் அடிப்படைக்காரணம் தவறாகப்பதிவு செய்யப்படவில்லை.

சாதாரண காலங்களில் இறப்புகளை முழுமையாக பதிவுசெய்த நாடுகள் கூட, பதிவான கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக குறைத்து மதிப்பிடப்படலாம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன; வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவை இப்போது நேரடியான கோவிட்-19 இறப்புகளில் கவனம் செலுத்தாமல், ஆனால்அதிக இறப்பு விகிதத்தில்- அதாவது, 'சாதாரண' காலங்களில் எதிர்பார்க்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை மீது கவனம் செலுத்துகின்றன

The United Kingdom’s Office for National Statistics (ONS) has released weekly excess mortality data, comparing differences between overall mortality for each week this year with the average of the previous five years. By excluding the COVID-19 death toll from this year’s numbers, it found that until May 1, there were 12,900 more “non-COVID-related” deaths in 2020 than in previous years.

The Financial Times found excess mortality being reported in all but four of the 20 countries that it had compiled data for. Of the countries for which such data are available, South Africa most closely resembles India in income and epidemiological terms, (although it is much richer, with a per capita income nearly twice that of India’s). South Africa does not report excess mortality; on the contrary, it reports reduced overall mortality. Every week since the middle of March 2020, South Africa has reported fewer deaths than the historical trend would have predicted, the South African Medical Research Council (SAMRC) has found. “This is mainly due to the decline in the number of deaths from unnatural causes as well as a slight decrease in the number of natural deaths during the weeks of lockdown,” the SAMRC noted.

South Africa Has Registered Lower All-Cause Mortality This Year

Source: South African Medical Research Council

அடிப்படை தரவுகளில் உள்ள சிக்கல்களை கொண்டு பார்க்கும் போது, இந்தியாவில் அதிகப்படியான இறப்புகள் விகிதத்தை மதிப்பிட முடியுமா?

இந்தியாவின் தேசிய சுகாதார இயக்கமானது, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் என மொத்தம் 1,50,000 க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் இருந்து மாதாந்திர தரவுகளை பெறுகிறது. 2020 மார்ச் மாதத்துக்கான தரவு, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட துணை மருத்துவமனைகளில் பெரும்பாலான பிரிவுகளில் இறப்பு விகிதம் சரிந்துள்ளதை காட்டுகிறது (அடுத்தடுத்த மாதங்களுக்கான தரவு வெளியிடப்படவில்லை, இருப்பினும் அவை வழக்கமாக தினமும் புதுப்பிக்கப்படுகிறது).

பிற மொத்த காரணங்களுக்கான தேசிய இறப்பு தரவு இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை, ஆனால் சில நகரங்கள் மற்றும் மாநிலங்களின் தரவுகள், இதில் ஒட்டுமொத்தமாக குறைந்த இறப்புகளைக் காட்டுகின்றன, அல்லது குறைந்த ‘பிற காரணங்களுக்கான மொத்த இறப்பு’ என்பதைக் காட்டுகின்றன.

கடந்த மே 29ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மே மாத மத்தியில் கேரளாவில் மொத்த இறப்பு விகிதம் சரிந்துள்ளதாகதெரிவித்தார். "கேரளாவில், 2019 ஜனவரி 1 முதல் 15 மே வரை, 93,717 இறப்புகள் பதிவாகியுள்ளன," என்று அவர் கூறினார். இந்த ஆண்டு, அதே காலகட்டத்தில், 73,155 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதாவது இந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை 20,562 குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கேரளாவில் கோவிட் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

இந்தியா ஸ்பெண்டிடம்பகிரப்பட்ட பி.எம்.சி. தரவுகளின்படி, ஏப்ரல் மாத இறுதியில், மும்பையிலும் இதேநிலை காணப்பட்டது; முந்தைய மாதங்கள் மற்றும் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மொத்த பிற காரணங்களின் இறப்புகள் குறைந்துள்ளன.

எனவே, அதிக இறப்பு சிக்கல் என்பது இந்தியாவுக்கு இல்லை என்பதை உறுதியாக நம்ப முடியுமா? அது சாத்தியமில்லை என்றே தோன்றுவதாக, பொது சுகாதார நிபுணர்கள் சிலர் வாதிடுகின்றனர். "இறப்பு விகிதத்தில் உண்மையான சரிவு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன், விபத்துகள் குறைந்ததும் கூட, இறப்பு விகிதம் குறைவுக்கு காரணமாகிறது. குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்க முயன்று இயலாதவர்கள் மற்றும் விலகப்பட்டதால், வீட்டில் அதிக இறப்புகள் நேரிட்டிருப்பது பரவலாகத் தெரிகிறது,” என்று, மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.பி.எஸ்) மக்கள்தொகை ஆய்வாளர் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் துறையின் தலைவர்பி. ஆரோக்கியசாமிதெரிவித்தார்; இந்த அமைப்பு, இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது.

கோவிட் 19 தொற்று பரவலுக்கு முன்பே, இந்தியாவின் வருடாந்திர நோய்களால் ஏற்படும் இறப்பு மதிப்பீடுகளானது, கணிசமான எண்ணிக்கையில் இறப்புகளைத் தவறவிட்டது என்பது, அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்த தரவை, வாய்மொழி பிரேத பரிசோதனைகள் உட்பட பல வழிமுறைகளை பயன்படுத்தி, மதிப்பீடுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளை பெரும்பாலும் நம்பியுள்ளஅதிகாரப்பூர்வ தகவல்கள், 2017ம் ஆண்டில் மலேரியாவால் 194 இறப்புகள் நேரிட்டதாக மதிப்பிட்டது; வாய்மொழி பிரேத பரிசோதனைகள் உட்பட பல ஆதாரங்களைப் பயன்படுத்தும்குளோபல் பார்டன் ஆஃப் டிசைஸ், அதே ஆண்டில் 50,000 இறப்புகளை மதிப்பிட்டுள்ளது. காசநோய் பாதிப்புக்கான மதிப்பீடுகள் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாகும் என்று எங்களது பகுப்பாய்வு காட்டுகிறது.

எனவே, கோவிட் தொடர்பான அதிக இறப்புகள் தரவை இந்தியா எவ்வாறு உருவாக்க முடியும்?

இந்தியாவில் அதிகப்படியான இறப்பு அளவை மதிப்பிடுவது பல வளர்ந்த நாடுகளில் இருப்பதைப்போல நேரடியானதாக இல்லை; ஏற்கனவே இந்தியா தவறவிட்ட இறப்பு புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்வது, அதை தொடங்குவதற்கு ஒரு நல்ல இடமாக இருக்கும் என்று ஐ.ஐ.பி.எஸ். பொது சுகாதாரம் மற்றும் இறப்பு ஆய்வுகள் துறையின் பேராசிரியரும் தலைவருமானஉஷா ராம்கூறினார்.

இதை தொடங்குவதற்கு, இந்தியா அதன் அடிப்படை தரவுகளில் உள்ள சிக்கல்களை அளவிட வேண்டும். "பல மாநிலங்களின் அடிப்படை தரவுகள் மிகவும் மோசமாக உள்ளன, எனவே அதைக்கொண்டு தானாக உருவாக்க முடியாது" என்று ராம் கூறினார். "வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் இறப்புக்கான மருத்துவச்சான்றளிக்கப்பட்ட காரணங்கள் மற்றும் தரவுகள் நம்பகமானதாக இல்லை. சிறிய மாநிலங்களில் அளவிடப்பட்ட மாதிரி அளவுகள் கடந்த காலத்தில் மிகவும் சிறியதாக இருந்ததால், அவற்றின் எண்ணிக்கை பயன்படுத்த முடியாதவையாக இருந்தன" என்றார் அவர்.

அடுத்து, கோவிட் தொடர்பானதாக முதல் கண்ணோட்டத்தில் தோன்றாத நோய்களை பார்ப்பது முக்கியம். புற்றுநோய் மற்றும் காசநோய் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய்களின் சுகாதாரச்சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்படுவதை தேசிய சுகாதார இயக்கத்தின் தரவு சுட்டிக்காட்டுகிறது. "இந்த நோயாளிகள், நீண்டகால சிறுநீரகம், நீரிழிவு, காசநோய் மற்றும் இதய நோயாளிகள் உள்ளிட்டோர் கடும் பாதிப்பை சந்தித்திருப்பார்கள்" என்று, மகாராஷ்டிராவின் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எம்.ஜி.ஐ.எம்.எஸ்.) மருத்துவ கண்காணிப்பாளர் எஸ்.பி. கலந்த்ரி கூறினார்; இது நோயாளிகளுக்கான முக்கிய கவனிப்பு அணுகலில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்தது; அத்தகைய நோயாளிகளின் சுகாதார விளைவுகள் ஒட்டுமொத்த இறப்பை அதிகரிக்கும்.

கோவிட்டுக்கு பிந்தைய மாதிரி ஆய்வை மேற்கொண்டால், அதிகப்படியான [கோவிட்டுக்கு காரணமான இறப்புகள்] இருந்தனவா என்பதை நாம் அறிய முடியும். அப்படியிருந்தும், டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியாத நபர்களின் இறப்பு, அல்லது மருந்துகள் இல்லாததால் நேரிட்டவை, இதில் தவறவிடப்படும்,”என்று ஆரோக்கியசாமி கூறினார். "அத்துடன், விசாரணை கேள்விகளைக் கேட்க கணக்கீட்டாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்" என்று உஷா ராம் கூறினார்.

கடந்த கால மொத்த இறப்பு காரணங்கள் தொடர்பாக, இந்தியா இரண்டு தேசிய அளவிலான கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளது- இது, அதன் அடித்தளத்தை கட்டமைக்கக்கூடும் என்று, டொராண்டோவில் உள்ள உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின் நிறுவன இயக்குநரும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பேராசிரியருமான பிரபாத் ஜா கூறினார். இந்தியாவில் 2013 ஆம் ஆண்டிற்கான வாய்மொழி பிரேத பரிசோதனை தலைமையிலான இறப்புக்கான மதிப்பீடுகளை உருவாக்கிய, இந்திய பதிவாளர் ஜெனரலுடன் இணைந்துMillion Death Studyஎன்ற ஆய்வுக்கு ஜா தலைமை தாங்கினார். எவ்வாறாயினும், இந்தியா எந்தவொரு வாய்மொழி பிரேத பரிசோதனை அடிப்படையிலான தரவையும் வெளியிடவில்லை.

2017 ஆம் ஆண்டில், இந்திய பதிவாளர் ஜெனரலின் அலுவலகம்அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் இணைந்துஅதிக நம்பகமான இறப்பு மதிப்பீடுகளை உருவாக்கியது, ஆனால் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. “2015 எஸ்.ஆர்.எஸ் தரவு இப்போது பதிவாளர் ஜெனரலிடம் உள்ளது என்று நான் நம்புகிறேன். அவர்கள் அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நடப்பு ஆண்டிற்கான தரவுகளை சேகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என்று ஜா கூறினார்; இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தில் இருந்து, இறப்பு குறித்த வாய்மொழி பிரேத பரிசோதனை அடிப்படையிலானமாதிரி பதிவு அமைப்புஅறிக்கைகளை, அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு பிரதிநிதித்துவம் வாய்ந்த தேசிய கணக்கெடுப்புக்கு அதிகநேரம் எடுக்கும். அதுவரை, நகர்ப்புற மதிப்பீடுகளை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களை ஒரு மாதிரியாக பயன்படுத்தலாம் என்று, ஜா பரிந்துரைத்தார். குறைவான வளர்ச்சியடைந்த மற்றும் அதிகமான கிராமப்புற மாவட்டங்களுக்கு, மொத்த காரணங்களுக்காக இறப்பு குறித்த புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தரவு நம்ப முடியாததாக இருக்கும்போது, முக்கிய பெருநகரங்களுக்கு இது குறைவாகவே உள்ளது. "நகர்ப்புறங்களில், இறப்புகளின் பதிவு அவர்களிடம் உள்ளது. இப்போது பதிவுசெய்யப்பட்ட மரணங்கள் நமக்கு அதிக விவரங்களைத் தரவில்லை, ஆனால் அந்த வாராந்திரத்தை அறிக்கையை அவற்றுடன் --மார்ச் 2019 அல்லது 2018 இல் என்ன நடந்தது என்பதற்கு எதிராக மார்ச் மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும் என்ன நடந்தது என்று சொல்வதுடன் -- ஒப்பிட்டுப் பாருங்கள்; ஒட்டுமொத்த இறப்புகளில் அதிகரிப்பு உள்ளது என்று உங்கள் அறிவே கூற முடியும்,”என்று ஜா கூறினார்.

மும்பை போன்ற நகரில் மருத்துவமனைகளில் அதிக இறப்புகள் நிகழ்கிறது; பெரும்பாலான தகன மேடை மற்றும் இடுகாடுகள் உள்ளாட்சி குடிமை நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றன; இதில் இறப்புப்பதிவு என்பது, கிராமப்புற பீகார் வீட்டில் பெரும்பான்மையான இறப்புகள் நடைபெறுவதாகவும், அதர்கு அரிதாகவே அனுமதி தேவை என்று சொல்வதைவிட நம்பகமான ஆதாரமாகும் என்று, துணை தேசிய இறப்பு மதிப்பீடுகளில் கவனம் செலுத்தும் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கழகத்தின் உதவி பேராசிரியர்கவுசலேந்திர குமார்கூறினார்.

"மற்றொரு உத்தி என்னவென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறையில் இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்துபவரால், தாங்கள் பிரேத பரிசோதனை செய்யும் அனைத்து உடல்களையும் அடையாளம் காண முடியும்; அதிலிருந்து நீங்கள் தொடர்பின்றி இறந்தவர்களில் -சாலை விபத்து காயங்களால் இறந்தவர்கள் மற்றும் பிறர் - குறித்த விவரங்களை பெறலாம்; அவர்களுக்கு கோவிட் இருந்தாலும் அறியலாம்” என்று ஜா கூறினார்.

இந்தியாவின் கோவிட்-19 இறப்பு தொடர்பான விசாரணையின் முதல் பகுதி இது.

(எஸ். ருக்மணி, சென்னையைச் சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.