புதுடெல்லி: இந்தியா, அடுத்த நான்கு ஆண்டுகளில் தனது திறனை இருமடங்கு பெருக்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரியதான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிகழ்வை கொண்டிருக்கிறது -- ஆனால், 2022ஆம் ஆண்டுக்குள் 175 நிலக்கரி மின் நிலையங்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் மூலம் மாற்ற வேண்டும் என்ற அதன் பாதையில் இருந்து விலகிக் செல்கிறது.

வரும் பிப். 1, 2019ல், ஆளும் பாரதிய ஜனதா ((BJP) அரசுக்கு, காற்று மாசுபாடு போக்க, நிலக்கரி பயன்பாட்டை குறைத்து மீண்டும் இலக்கு பாதையை நோக்கி, கார்பன்வாயு வெளியேற்றத்தில் உலகில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவை திரும்புவதற்கு ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன், நிறுவப்பட்ட நான்கு ஆண்டுகளில் 2017 வரை சாதனை வளர்ச்சியை எட்டியபோதும், 2018ல் அதன் திறன் அதிகரிப்பு குறைந்தது. முக்கிய காரணங்கள்: உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவும் பொருட்டு, இறக்குமதி சூரியசக்தி சாதனங்களுக்கு வரி விதித்தது; சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மற்றும் தெளிவற்ற கொள்கையின் கீழ் அதிகவரி விதித்தது.

எனவே, 2019 பொதுத்தேர்தலுக்கு முன்பான கடைசி பட்ஜெட்டில், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மற்றும் ஹைட்ரோ மின்சாரம் என புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும்.

இப்பிரச்சனைகள் கண்டிப்பாக பட்ஜெட்டில் தீர்க்கப்பட வேண்டும்:

  • கடந்த 2018ல் ஏற்பட்ட மந்தநிலையால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கான சராசரி வேகத்தை எட்டுவதற்கு, அரசு ஒவ்வொரு மாதமும் 3.5 மடங்கு அதிகமான திறனை நிறுவ வேண்டும்.
  • இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி உபகரணங்கள் -- நாட்டின் தேவை 80% க்கும் மேலானது -- மீதான வரிவிதிப்பு உற்பத்தி செலவினங்களை அதிகரிக்கிறது. நிலக்கரிக்கு மாற்றாக சூரியசக்தி என்ற போட்டித்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
  • சூரிய சக்தி மின் உபகரணங்கள் மற்றும் சேவைகள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிகிதம் முதலீட்டாளர்களையும் உற்பத்தியாளர்களையும் தள்ளி நிற்கச் செய்கிறது. இத்துறையின் நிச்சயமற்ற தன்மையை அகற்றி, புதிய முதலீட்டை மீண்டும் வைத்திருப்பதற்கான கொள்கையில் தாமதம்.

ஏன் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான பட்ஜெட் முக்கியமானது

இந்தியா, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் 2015 -க்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்றால், 2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் (GW) -- ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகா வாட்-- என்ற இலக்கை எட்ட, தனது கொள்கை சிக்கல்களை களைவது முக்கியமானது. 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 175 நிலக்கரி அனல் மின்நிலையங்களை மாற்ற இது போதுமானது; இதனால் புதைபடிம எரிபொருட்களை இந்தியா சார்ந்திருப்பது குறைக்கிறது.

இந்தியாவின் 80 சதவீதத்திற்கும் மேலான மின்சாரம், புதைபடிவ எரிபொருள் வாயிலாக கிடைக்கிறது. அவை, பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்வதோடு புவி வெப்பமடைவதை துரிதப்படுத்துகின்றன. புதுப்பிக்கத்தக்க இலக்குகளை அடைவது முக்கியம்; ஏனெனில், 2030 இலக்கு காலத்திற்குள் இந்தியா 40% மின்சாரத்தை புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து பெற வேண்டும் என்ற பாதையை அது இந்தியாவுக்கு காட்டுகிறது; தற்போது இது 11% ஆக உள்ளது.

இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் முக்கிய உடல்நல பிரச்சனைகளை தீர்க்கும்: ஒவ்வொரு எட்டில் ஒரு இறப்புக்கு காற்று மாசுபாடு காரணமாகிறது; 2017ல் இந்தியாவில் 12.4 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்ததாக, 2018 டிசம்பர் 7-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரி மின் நிலையங்களை குறைப்பதற்கான 2017 டிசம்பர் என்ற இலக்கை ஏற்கனவே தவறவிட்ட நிலையில், இதற்கான கெடு மேலும் ஐந்தாண்டுகள் என, 2022 வரை நீட்டிக்கப்பட்டது; தூய்மையான ஆற்றல் திறன் அதிகரிப்பது நச்சுக்காற்றுக்கு எதிரான ஒரு முக்கியமான கருவியாகும் என, இந்திய அரசின் தேசிய தூய்மைக்காற்று திட்டம் - என்.சி.ஏ.பி. (NCAP) தெரிவிக்கிறது. 2019 ஜனவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்ட என்.சி.ஏ.பி. ஐந்து ஆண்டுகளில் 2024க்குள், 20-30% தேசிய மாசு அளவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் 2022 புதுப்பிக்கத்தக்க இலக்கில் 100 ஜி.வா. சூரியசக்தியில், காற்றாலை மூலம் 60 ஜி.வா. கிடைக்கும் என அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2018 அக்டோபரில் இந்தியா 74 ஜி.வா. புதுப்பிக்கத்தக்க திறனை நிருவியது.

கடந்த 2018 அக்டோபரில், இந்திய மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 21% அதாவது 340 ஜி.வா. பெறப்பட்டுள்ளது, இது 2014ல் 13% என்றிருந்தது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின் அதிகரித்துள்ளது.

வரும் 2022க்குள் 175 ஜி.வா. மின் உற்பத்தியை நிறுவ வேண்டும் பா.ஜ.க. அரசு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்; இதை அடைய, 2022 மார்ச் வரை ஒவ்வொரு மாதமும் 2 ஜி.வா. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவ வேண்டும் என்று, அரசு தரவுகள் பற்றிய இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இது அரசின் தற்போதைய வேகத்தைவிட 3.5 மடங்கு அதிகம்; முன்பே கூறியது போல், 2014 மார்ச் வரை ஒவ்வொரு மாதமும் 0.6 ஜி.வா. (600 மெ.வா.) திறன் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2018 அக்டோபர் வரையிலான 12 மாதங்களில், இந்தியா ஜி.வா. புதுப்பிக்கத்தக்க திறனை நிறுவியுள்ளது; இது முந்தைய ஆண்டின் 15 ஜி.வா. என்பதைவிட 15% குறைவாகும்.

இந்த மந்தகதி போக்கப்பட வேண்டும் என்று கூறும் வல்லுனர்கள், அரசு 2022 புதுப்பிக்கத்தக்க இலக்குகளை அடைய விரும்பினால், அது பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.

Source: Ministry Of New And Renewable Energy

உலகத்தோடு இந்தியா எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒட்டுமொத்த செலவினத்தையும் வளர்ச்சியையும் பொறுத்தவரை இந்தியா, தனது அண்டை நாடான சீனாவைப் பின்தொடர்கிறது.

சீன அரசு, 2020ஆம் ஆண்டுடனான நான்கு ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக 360 பில்லியன் டாலர் (ரூ.25 லட்சம் கோடி) அதாவது ஆண்டுக்கு 90 பில்லியன் (ரூ.6 லட்சம் கோடி) செலவிட திட்டமிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், இந்திய புதுப்பிக்கத்தக்க அமைச்சகம், 2018-19ல் 0.7 பில்லியன் டாலர் (ரூ.5,146 கோடி) செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொரு வழி கூறுவதானால், சீனாவின் பட்ஜெட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவ இந்தியாவை விட 128 மடங்கு அதிகம் செலவிடப்படுகிறது.

இந்தியாவின் 18% உடன் ஒப்பிடும்போது, 2017ல் சீனா 650 ஜி.வா. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டிருந்தது; இது, அதன் மொத்த ஆற்றல் உற்பத்தியில் 36% ஆகும்.

பசுமை ஆற்றலில் புதிய முதலீடுகளை செய்வதிலும் சீனாவை இந்தியா பின்தொடர்கிறது. 2017ஆம் ஆண்டில் சீனா 126.6 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) செலவிட்டது; இந்தியாவுடையது, 10.9 பில்லியன் டாலர் (ரூ 75,500 கோடி) ஆகும். அதாவது, பசுமை ஆற்றலுக்கு இந்தியா செலவிடும் ஒரு டாலருக்கு, சீனா 12 டாலரை செலவிடுகிறது என்று, ஐக்கிய நாடுகள் ப்ளூம்பர்க் புதிய எரிசக்தி நிதி மற்றும் பிராங்பர்ட் பள்ளி - யு.என்.இ.பி. காலநிலை மற்றும் நிலையான ஆற்றலுக்கான நிதி உதவி மைய பங்களிப்புடன் வெளியான ஐக்கிய நாடுகள் 2018 அறிக்கை தெரிவிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நிதி: தே.ஜ.கூ. அரசும், ஐ.மு.கூ. அரசும்

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு - தே.ஜ.கூ. (NDA), 2017-18 உடன் முடிந்த கடந்த நான்கு நிதி ஆண்டுகளில், மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம் (MNRE) நிதியை 600% மடங்கு அதிகரித்துள்ளது, அதன் திருத்தப்பட்ட பட்ஜெட் திட்ட மதிப்பீடுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி- ஐ.மு.கூ (UPA) அரசு, அதிகபட்சமாக 2011-12 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.1,200 கோடியை பெற்றுள்ளது. 2016-17 நிதியாண்டில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசிடம், அமைச்சகம் மிக அதிகமாக ரூ.4,300 கோடியை பெற்றது. இது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒதுக்கியதைவிட 3.5 மடங்கு அதிகம் என்று பகுப்பாய்வு முடிவுகளில் தெரிய வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பட்ஜெட் செலவின விகிதத்தில் 0.09% ஆகும். இது, தே.ஜ.கூ. பட்ஜெட்டில் அதிகபட்சமாக 0.21% என்றிருந்தது.

புதுப்பிக்கத்தக்க துறையில் முன்னுரிமை தரவேண்டியவை என்னவாக இருக்க வேண்டும்?

ஏற்கனவே நாம் முன்பு கூறியபடி, 2018ஆம் ஆண்டு மந்தகதிக்கு, சூரிய சக்தி மின் உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, நிச்சயமற்ற கொள்கை போன்றவை உற்பத்தியாளர்களுக்கு சுமையாக இருந்தது.

இதன் மீதான "தற்காலிக நடவடிக்கை"க்கு எதிர்ப்பு அல்லது “பாதுகாப்பான” வரி என்பது, நாட்டில் புதுப்பிக்கத்தக்க துறைகளில் முதலீடு செய்வதில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கிவிட்டதாக, டெல்லியை சேர்ந்த சிந்தனையாளரும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) ஆற்றல் துறைக்கான ஆலோசகருமான பிரியாவத் பாத்தி, இந்தியா ஸ்பெண்ட்டிடம் கூறினார்.

இத்தகைய வரிவிதிப்பு, சீனா மற்றும் மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியசக்தி சாதனங்களின் விலையை அதிகமாக்குகிறது. நாம் ஏற்கனவே சொன்னது போல், இந்நாடுகள் இந்தியாவின் தேவையில் 80%ஐ வழங்குகின்றன. இந்த வரிவிதிப்பானது, 2022ஆம் ஆண்டுக்குள் 100 ஜி.வா. (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திறனை இந்தியாவின் சூரியசக்தி துறை இலக்கையே தடம் புரளச் செய்துவிடும் என்று, 2018 ஜூலை 20ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்த வரி விதிப்பு பிரச்சனைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க துறையில் உள்நாட்டு ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குதல்; சூரிய மின்கல உற்பத்தியில் உள்நாட்டுத் திறனை வளர்ப்பதற்கு உதவுதல் பேட்டரி, அதன் திறனை அதிகரிக்க செய்தலுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றார் பாத்தி.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான கருவி முன்பு வரி முறிவுகளுக்கு உட்பட்டது, அதாவது சூரிய சக்தி உபகரணங்களுக்கான அடிப்படை சுங்கவரி. தற்போது இது ஜி.எஸ்.டி.யின் கீழ் 5% வரி விதிக்கப்படுகிறது. இது, சூரிய மின்சக்தி, மணிக்கு ஒரு கிலோ வாட் (அலகு) உற்பத்தி செலவை அதிகரிப்பதன் மூலம், புதைபடிவ எரிபொருட்களுக்கு எதிராக புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் போட்டித்தன்மையை குறைத்துள்ளது என, நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனத்தின் (IISD) மூத்த ஆற்றல்துறை நிபுணர் விபூதி கார்க், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி, முறையானது, சூரியசக்தி துறையில்பல்வேறு சேவைகளுக்கான மாறுபட்ட வரி விகிதங்களுடன் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. "நாம் முழு தீர்வையும் விற்றுவிட்டால், அது ஒரு ஜி.எஸ்.டி. வீதம் 5% என்றாகிறது" என, புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) நிறுவனம், தொழில்துறை வெளியீடான மெர்காம் இந்தியாவிடம், 2018 அக்டோபரில் தெரிவித்தது. "ஆனால் நாம் அதை கட்டுப்படுத்தி, தனித்தனியாக வாடிக்கையாளருக்கு வழங்கினால், பின்னர் அதன் கூறுகள் 18% ஜி.எஸ்.டி என்றாக இருக்கும்," என்றார்.

வரவிருக்கும் பட்ஜெட், இத்துறையில் உள்ள நிலையற்றா கொள்கைகளை அகற்றவும், "நீண்டகால குறியீடுகளை" வழங்கவும் வேண்டும் என்று, யெஸ் வங்கியின் நிர்வாக துணைத்தலைவர் தானிஷ் வர்மா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

மின்சாரம் வினியோகிக்கும் நிறுவனங்களின் (discoms) நிதியியல் சுகாதாரத்தை அரசால் மேம்படுத்த இயலவில்லை. செயல்பாட்டு மின்சாரம் வினியோக நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க துறைகளில் "வளர்ச்சி அம்சங்கள்", எனவே இந்த அரசின் நிதி ஆதரவு "அவசர" தேவை என்றார் வர்மா.

அரசு தனது இலக்கை மேலும் விரிவாக்க வேண்டும்; சூரியசக்தியை விட நம்பகமான காற்றாலை சக்திக்கு நிதி ஒதுக்க வேண்டும்; ஏனெனில் சூரியனை போல் அல்லாமல் இது சுற்றிலும் செயல்பட முடியும் என்று பாத்தி கூறினார்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.