ஆயிரக்கணக்கான வேலையிழப்பு, இந்திய மக்கள்தொகையின் லாபப்பங்கிற்கு அபாயத்தை வெளிப்படுத்துகிறது
ஜெய்ப்பூர் / மும்பை: அண்மையில் ஆட்டோமொபைல் துறையில் 3,50,000-க்கும் மேற்பட்ட வேலையிழப்பு - மற்றும் பிற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் - என்பது, இந்தியாவின் மக்கள்தொகை லாபப்பங்கை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூக இடையூறுகளின் ஒரு குறிகாட்டியாகும்; 68.8 கோடி மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய உழைக்கும் வயதுடையவர்கள் தந்த வளர்ச்சியை பாதிக்கும்.
வேலைவாய்ப்பு யின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த நிலையில், மோசமான உடல் ஆரோக்கியமும் - 1,000 குழந்தைகளில் 42 பேர் ஒரு வயது கடக்கும் முன்பே இறக்கின்றனர் - மற்றும் குறைந்த அளவிலான கல்வியும் - ஒரு சராசரி நபர் 6.3 ஆண்டுகளே பள்ளியில் பயில்கிறார்- இந்தியாவின் மக்கள்தொகை லாபப்பங்கு ஆபத்தில் உள்ளது என, ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி - யு.என்.எப்.பி.ஏ (UNFPA) மற்றும் இந்திய அரசின் தரவுகளைப் பற்றிய இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கு மாநில குறிப்பிட்ட கொள்கைகள் - நல்ல உடல்நலம் மற்றும் கல்வி முறைகள், புதிய மாநிலங்களின் தொகுப்பில் அதிகமான பெண்கள் தொழிலாளர் நுழைவது, மற்றும் பழைய மாநிலங்களில் குடியேறுபவர்களையும் முதியோர் பராமரிப்பு முறைகளையும் ஈர்ப்பதற்கான கொள்கைகள் தேவை. சாதி மற்றும் நகர்ப்புற-கிராமப்புற சமத்துவமின்மையை, குறிப்பாக இனப்பெருக்க பராமரிப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வேலைகளில் இந்தியா குறைக்க வேண்டும்.
சார்ந்திருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை விட உழைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், "கோட்பாட்டு ரீதியாக, இந்தியா 2020 முதல் 2040 தசாப்தத்தில் ஒரு பொற்காலம் இருக்கக்கூடும் (குறைந்துவரும் முடிவுகளானாலும் பின்னர் தொடரும்) … ஆனால் சரியான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இப்போதே அமல்படுத்தப்பட்டால் மட்டுமே அது நிகழும், ” என்று யு.என்.எப்.பி.ஏ பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும், மாநிலங்கள் அவர்கள் வழங்கக்கூடிய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதார வசதிகளில் பரவலாக வேறுபடுகின்றன, இது மாறுபட்ட வேலைவாய்ப்பு விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது.
இதன் விளைவாக, மாநிலங்களின் தனித்துவமான சவால்களுக்கு குறிப்பிட்ட கொள்கைகள் தேவை, அவை ஒரு பகுதியாக, அவை இருக்கும் மக்கள்தொகை மாற்றத்தின் கட்டத்தால் - உதாரணமாக, வயது-சார்பு விகிதம் - சார்புடையவர்களின் விகிதம் (15 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 64 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உழைக்கும் வயது மக்கள்தொகையால் (15-59 வயதுடையவர்கள்) தீர்மானிக்கப்படுகின்றன - கேரளாவில் வயதான மக்கள்இருப்பதைக் காட்டுகிறது; அதே நேரம் பீகாரில், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை 2051 வரை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இது 2017 ஆம் ஆண்டின் யு.என்.எப்.பி.ஏ. அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவில் மக்கள்தொகை லாபப் பங்கை காட்டுகிறது.
இக்கட்டுரை, மாநிலங்களின் மாறுபட்ட தேவைகளை ஆராய்ந்து சில தீர்வுகளை வழங்குகிறது. உதாரணமாக, வயதான கேரளாவுக்கு ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற இளம் மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான கொள்கைகள் தேவைப்படும்; அதே நேரம் பீகார் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற இளம் மாநிலங்கள் எதிர்காலத்திற்கான பணியாளர்களைத் தயாரிக்க வலுவான சுகாதார மற்றும் கல்வி முறைகள் தேவைப்படுகின்றன.
மக்கள்தொகை வாய்ப்பிற்கான சாளரம், மாநிலங்களில் வேறுபடுகிறது
வயது-சார்பு விகிதம் ஒரு பொருளாதாரம் அதன் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எத்தனை இளைஞர்களை ஆதரிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. 1975 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியாவின் மக்கள்தொகை எவ்வாறு பொருளாதார விளைவுகளை பாதித்தது என்பதை அடிப்படையாகக் கொண்ட 2019 ஆர்பிஐ ஆய்வின்படி, விரிவடைந்து வரும் உழைக்கும் வயது மக்கள் தொகையானது, உயர் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையது.
2005-06 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த வாய்ப்பின் சாளரம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும், குறைந்தபட்சம் உழைக்கும் வயது மக்கள் தொகை குறையத் தொடங்கும் வரை, வாழ்க்கைத்தரம் மேம்படுத்தவும் முடியும்.
தற்போது இந்தியாவின் சராசரி வயது சார்பு விகிதம் குறைவாக உள்ளது - அதன் மக்கள்தொகையில் 67% 15-64 வயது உழைக்கும் வயது அடைப்பில் உள்ளது என்று 2018 யுஎன்எஃப்ஏ அறிக்கை கூறுகிறது. இது மேலும் வீழ்ச்சியடையும், ஒட்டுமொத்தமாக, இந்தியா 2031 வரை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறிய சார்புடைய மக்கள்தொகை மற்றும் ஒரு பெரிய உழைக்கும் வயது மக்கள்தொகையைக் கொண்டிருக்கும், மேலும் 2041 வரை நிலையான ஆனால் உழைக்கும் மக்கள்தொகையைக் குறைக்கும்.
மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்களில் பரந்த வேறுபாடுகள் இருப்பதால், இந்தியாவின் சராசரி உழைக்கும் மக்களின் நிலையை, ஒரு பகுதியை மட்டுமே காட்டுகிறது. மாநிலங்கள் தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்டால், இந்தியாவின் மக்கள்தொகை மாற்றத்தில் மூன்று பரந்த வடிவங்கள் உள்ளன என்று யு.என்.எப்.பி.ஏ.யின் தேசிய திட்ட அலுவலர் தேவேந்தர் சிங் கூறினார், இந்திய மாநிலங்கள் முழுவதும் சார்பு விகிதம் குறித்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இது கூறப்பட்டது. மாநிலங்களின் சார்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான நோக்கத்திற்காக, வேலை செய்யும் வயது 15-59 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது, ஏனெனில் 60 இந்தியாவில் ஓய்வு பெறும் வயது.
இந்தியா முழுவதும் உள்ள மக்கள்தொகை வாய்ப்பில் இருந்து பயனடைய " அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான இத்தகைய கொள்கைகளை நீங்கள் கொண்டிருக்க முடியாது" என்று சிங் விளக்கினார்.
கருவுறுதல் வீதம் குறைவாக உள்ள மாநிலங்களில், கருவுறுதல் வீதம் மாற்று நிலைக்கு கீழே இருக்கும் சிலவற்றை உள்ளடக்கியது - அதாவது மக்கள் தொகை தன்னை மாற்றிக் கொள்ளாது- அவற்றுக்கான உழைக்கும் மக்களின் வாய்ப்பின் சாளரம் விரைவில் மூடப்படும்.
தமிழ்நாடு, புதுடெல்லி, ஆந்திரா, தெலங்கனா, குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில், 2021ஆம் ஆண்டுக்கு பிறகு, வாய்ப்பின் சாளரம் மூடப்படும் என்கிறது யு.என்.எஃப்.பி.ஏ. கேரளாவில் இது ஏற்கனவே மூடத் தொடங்கிவிட்டது.
இந்த மாநிலங்களில், வயதான மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் அளிப்பதன் வாயிலாகவும், தொழிலாளர் உபரி உள்ள மாநிலங்களில் இருந்து அதிகம் உழைப்பவர்களை ஈர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சிங் கூறினார். இதற்கு பிற மாநிலங்களில் இருந்து அதிக உழைப்பை ஈர்ப்பதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தேவைப்படலாம், மேலும் குறைந்த பணியாளர்களுடன் மாநிலங்களின் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கலாம்.
இரண்டாவது வகை மாநிலங்களில் கர்நாடகா, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், காஷ்மீர், உத்தரகண்ட், ஹரியானா போன்றவைஅடங்கும். அங்கு உழைக்கும் வயது மக்கள் தொகை தற்போது உச்சத்தில் உள்ளது, ஆனால் 2031 இல் இருந்து குறைக்கத் தொடங்கும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நல்ல சுகாதார வசதிகளுக்கான கொள்கைகளின் கலவையும், எதிர்கால வாய்ப்புகளுக்கான பணியாளர்களைத் தயாரிக்க ஒரு நல்ல கல்வி முறையும், முதியோருக்கு ஒரு நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆதரவு முறையும் இருக்க வேண்டும்.
உத்தரபிரதேசம் (உ.பி.), ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் மத்தியப் பிரதேசம் (ம.பி.) ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்றாவது வகை மாநிலங்களில், கருவுறுதல் விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது; மேலும் இந்த மாநிலங்களில் அதிக விகிதத்தில் குழந்தைகள் உள்ளனர். உ.பி.யின் வாய்ப்பிற்கான சாளரம் 2043ஆம் ஆண்டில் மூடப்படலாம்; 2035 இல் சத்தீஸ்கர், 2041 இல் மத்திய பிரதேசம் மற்றும் 2051 இல் பீகாருக்கான வாய்ப்புகள் மூடலாம்.
இம்மாநிலங்களில், குடும்பக் கட்டுப்பாடு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெண்களுக்கு நல்ல பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதில், கருத்தடை முறைகளை எளிதில் அணுகுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த சேவைகளுக்கான பெண்களின் அணுகல் என்பது, மறைமுகமாக மக்கள்தொகை வாய்ப்புடன் தொடர்புடையது. பெண்களுக்கு நல்ல சுகாதார சேவைகளுக்கான அணுகல் இல்லையெனில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை கொண்டிருந்தால், அவர்கள் தொழிலாளர் தொகுப்பில் சேரக்கூடாது; 50% மக்கள் தொகையை தொழிலாளர்களிடம் இருந்து குறைக்கிறது.
அதிக குழந்தை மக்கள் தொகையானது, எதிர்காலத்தில் பணியாளர்களாக மாறுவதற்கு நல்ல தரமான கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் நல்ல தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் தேவைப்படும்.
இந்தியாவின் குறையும் தொழிலாளர் தொகுப்பு, அதிகரிக்கும் வேலையின்மை
மற்ற நாடுகள் குறைந்த சார்புடைய காலகட்டத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கண்டன. உதாரணமாக, 1985 ஆம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகளில், சீனாவின் சார்பு விகிதம், இன்று இந்தியாவிற்கானதுடன் ஒத்துப் போகும் நிலையில், சீனா ஆண்டுக்கு சராசரியாக 9.16% வீதத்தில் வளர்ந்தது என்று உலக வங்கியின் தரவு காட்டுகிறது. இதேபோல், தென் கொரியா தனது மக்கள்தொகை பயணத்தில் இதேபோன்ற 10 ஆண்டு காலத்தில் சராசரியாக 9.2% வளர்ச்சியடைந்தது.
இன்றைய இந்தியாவைப் போலவே சீனாவும் அன்று இதேபோன்ற சார்பு விகிதத்தில் இருந்தபோது 10 ஆண்டு காலப்பகுதியில், தொழிலாளர் சக்தியில் 15+ வயதுடைய மக்களின் விகிதம் 78.6% முதல் 73.3% வரை சென்றது.
ஆனால், இந்தியாவில், உழைக்கும் வயது மக்கள்தொகையின் அளவு அதிகரித்து வருகின்ற போதிலும், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆய்வு கண்டறிந்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தொழிலாளர் பங்களிப்பு, 15+ வயதுடையவர்கள், 2017-2018 ஆம் ஆண்டில் 49.8% ஆக இருந்தது, இது 2015-16 ஆம் ஆண்டில் 50.4% ஆக இருந்தது என வேலைவாய்ப்பு குறித்த குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது; இது அரசால் மேற்கொள்ளப்பட்டது.
2011-12 மற்றும் 2014-15 க்கு இடையில், தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் - மொத்த மக்கள்தொகையில் 15+ ஆண்டுகள் தொழிலாளர்களின் விகிதம் - 2009-10 ஆம் ஆண்டில் 55.9% ஆக குறைந்தது; 2011-12 இல் 54.7% ஆக இருந்தது மற்றும் 2017-18 ஆம் ஆண்டில் 46.8% ஆக இருந்ததாக கணக்கெடுப்பு குறித்த தரவுகள் காட்டுகின்றன.
2009-10 ஆம் ஆண்டில் பெண்களின் தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் 22.8% ஆக இருந்து 2017-18 ஆம் ஆண்டில் 16.5% ஆகக் குறைக்கப்பட்டதால் இந்த குறைவின் பெரும்பகுதி ஏற்பட்டது என்று தரவு காட்டுகிறது.
அதிக பெண்கள் வேலையின்மை
2014-15 முதல் 2017-18 வரையிலான ஆறு ஆண்டு காலத்தில் 25 - 64 வயதுடையவர்கள் எண்ணிக்கை சுமார் 4.7 கோடியாக அதிகரித்துள்ளது, மேலும் 3.6 கோடி பேர் , பெரும்பாலும் பெண்கள், விவசாயத் தொழிலாளர் பணித்திறனில் இருந்து வெளியேறினர் என்று, பொருளாதார நிபுணர் ஹிமான்ஷு (இப்பெயரை தான் அவர் பயன்படுத்துகிறார்), ஆகஸ்ட் 1, 2019 லைவ்மிண்ட் தளத்தில் எழுதினார்.
தொழிலாளர் தொகுப்பில் நுழைந்தவர்களுக்கும், விவசாயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இடமளிக்க, 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் பொருளாதாரம் குறைந்தது 8.3 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். மாறாக, பொருளாதாரம் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.55 கோடியாக குறைந்துள்ளது ”என்று, இந்தியாவின் காலவரைமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் அவர் எழுதினார்.
தொழிலாளர் சக்தியின் ஒரு பகுதியாக இருப்பவர்களில், 5.18% ஆண்களும், 3.8% பெண்களும் கிராமப்புறங்களில் 2017-18 ஆம் ஆண்டில் வேலையில்லாமல் இருந்தனர். நகர்ப்புறங்களில், ஆண்களில் 7.1% மற்றும் பெண்கள் 10.8% வேலையற்றவர்கள் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011-12 முதல் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது, ஆண்களில் 1.7% மற்றும் கிராமப்புறங்களில் 1.7% பெண்கள், மற்றும் 7.3% ஆண்கள் மற்றும் 5.2% பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்று தரவு காட்டுகிறது.
"பொருளாதாரத்தில் குறைவான வேலைகள் இருக்கும்போதெல்லாம், ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், இந்திய தொழிலாளர் தொகுப்பில் பாலின விருப்பம் காட்டுகிறார்கள்" என்று யு.என்.எப்.பி.ஏ.- இன் சிங் விளக்கினார்.
வீட்டு வேலைகளின் சமமற்ற சுமை, குழந்தைகளை பகலில் கவனிக்க இயலாதது, பணியிடத்தில் பாலின முன்னுரிமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தம் போன்ற இந்தியாவின் பணியாளர் தொகுப்பில் இருந்து பெண்கள் விலகுவதற்கான சில காரணங்கள் என, இந்தியா ஸ்பெண்டின் பணியிடத்தில்@ பெண்கள் என்ற கட்டுரைத் தொடர் ஆராய்கிறது.
இந்தியர்களுக்கு வேலைக்கான தகுதி பெற சிறந்த கல்வி தேவை
இந்தியாவின் மோசமான திறனுள்ள பணியாளர்களின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அவர்களின் கல்வியின் தரம். உதாரணமாக, கிராமப்புற இந்தியாவில், அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 20.9% பேருக்கு மட்டுமே கழித்தல் கணக்கு போட முடிகிறது; 5ஆம் வகுப்பு மாணவர்களில் பாதி பேருக்கு தான், 2ஆம் வகுப்பு பாடத்தை படிக்க முடியும் என்று ஆண்டு கல்வி ஆய்வு அறிக்கை 2018 கண்டறிந்துள்ளது; இதை, லாபநோக்கற்ற கல்வி அமைப்பான பிரதம் வெளியிட்டது.
2017 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில், இந்தியாவில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை விற்பனை போன்ற உயர் முன்னுரிமைத் துறைகளில் 10.34 கோடி திறமையான தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நியமிக்கப்பட்ட மனித வளத் தேவை அறிக்கைகள் மதிப்பிடப்பட்டுள்ளன. தற்போது, 4.69% தொழிலாளர்கள் மட்டுமே முறையான திறன் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போதைய பணியாளர்களில் பெரும்பான்மையானவர்களான 95.31% பேர், போதுமான திறமை இல்லாதிருந்தால் புதிய வேலைகளை இழக்க நேரிடும்.
தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் பொருட்டு, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், அதன் ஸ்கில் இந்தியா மிஷனின் கீழ், பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா 2016-20 என அழைக்கப்படும் ஒரு முதன்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் ஒரு கோடி பேருக்கு பயிற்சி என்ற இலக்கு இருந்தபோதிலும், இந்த திட்டத்தின் கீழ் 37 லட்சம் இளைஞர்கள் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும், ஆகஸ்ட் 2019இல் வெளியான லைவ்மின்ட் கட்டுரை, அரசின் தொழிலாளர் கணக்கெடுப்பின் தரவின் பகுப்பாய்வுப்படி, திறமையானவர்களில் 33% பேருக்கு வேலை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை வாய்ப்பை பயன்படுத்த, இந்தியா சாதி, நகர்ப்புற- கிராமப்புற சமத்துவமின்மையைக் குறைக்க வேண்டும்
மக்கள்தொகை மாற்றத்தின் இந்த கட்டங்களை கடந்து, சிறந்த கல்வி மற்றும் சுகாதார குறிகாட்டிகளைக் கொண்ட பிற நாடுகளிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள முடியும்; ஆனால் இந்தியா தன்னிடம் இருந்து கற்பதன் தனித்துவமான நன்மையைக் கொண்டுள்ளது என்று யு.என்.எப்.பி.ஏ.-இன் சிங் விளக்கினார். இன்னும் அதிக சார்பு விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் அந்தக் கட்டத்தை கடந்த மாநிலங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம்; குறிப்பாக சாதிகள் மற்றும் மதம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பிரித்தல் மற்றும் மோசமான பொது சேவை விநியோக முறைகள் ஆகியவற்றுக்கு இடையிலான சமத்துவமின்மை என, இந்தியாவுக்கு அதன் சொந்த பிரச்சினைகள் இருப்பதாக, சிங் கூறினார்.
உதாரணமாக, ஏப்ரல் 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டபடி உயர் சாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் சராசரி இறப்பு வயது 60 உடன் ஒப்பிடும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அது 48 வயதாகும். இந்தியா தனது மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், இந்த சேவைகளை அணுகுவதில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வைக் குறைக்க வேண்டும் என்று இது அறிவுறுத்துகிறது.
இதேபோல், கிராமப்புறங்களில் (2.4 குழந்தைகள், சராசரியாக, ஒரு பெண்ணுக்கு) மற்றும் நகர்ப்புற இந்தியாவில் (1.8 குழந்தைகள், சராசரியாக, ஒரு பெண்ணுக்கு) கருவுறுதல் விகிதங்களுக்கு இடையில் வேறுபாடு உள்ளது என்பதை, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவு 2015-2016 காட்டுகிறது. அதிகமான பெண்கள் தொழிலாளர் தொகுப்பில் நுழைய, பெண்களுக்கு இனப்பெருக்க சேவைகளை வழங்குவதில் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை, இது காட்டுகிறது.
(கைதன், ஒரு எழுத்தாளர் /ஆசிரியர் மற்றும் அகமது, இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சி ஆய்வாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.