நவி மும்பை: கோவிட் தொற்று சமூகப்பரவலாகிவிட்டதாக கேரள அரசு உறுதி செய்தபோதும், இந்திய அரசு இது குறித்து மவுனமாக இருந்து வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 வழக்குகள் இருந்தும்கூட, "சமூகப்பரவல் இல்லை" என்று அரசு இன்றுவரை கூறி வருகிறது; அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து கோவிட் தொற்றில் உலகின் மூன்றாவது அதிகபட்ச எண்ணிக்கை இந்தியாவில் உள்ளது. “வெளிப்படை அறிக்கை” என்பதை மறுப்பது நிர்வாகத்தின் நம்பிக்கையை வளர்க்கும் திறனை பாதிக்கிறது; நெருக்கடியின்போது திறம்பட தொடர்பு கொள்வது மற்றும் சமூகங்களை அணிதிரட்டுவது மற்றும் தொற்றுநோயை கையாளும் இந்தியாவின் திறனை பாதிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்தனர்.

சமூகத்தில் ஒரு நேர்மறையான நோயாளிக்கு யாரிடம் இருந்து எப்படி பரவியது என்பதை கண்டறிய முடியாத நிலையே சமூகப்பரவல் என்று கூறப்படுகிறது. இது சமூகத்தில் தொற்று நன்கு பரவிவிட்டதையே குறிக்கிறது.இந்தியா இன்னும் கவனம் செலுத்தி வரும் தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு போன்றவை, எதிர்விளைவுகளை தரக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக சமூகம் சார்ந்த நடத்தை மாற்றங்களான பொதுவெளியில் முகக்கவசம் பயன்படுத்துதல், கைகளை கழுவுதல், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றில் தற்போது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதற்கிடையே டெல்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்கள் கடும் அறிகுறி கொண்டவர்களை மட்டுமே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்துகின்றன; லேசான மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளை வீட்டிலேயே தங்கச் சொல்லுகின்றன.

மறுப்புடன் வாழ்தல்

இந்தியாவில் கோவிட் தொற்று நிச்சயமாக சமூகப்பரவலாகவில்லை என்று ஜூன் 11 அன்று செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR - ஐசிஎம்ஆர்) இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்தார். "சோதனை, தொடர்பு கண்டறிதல், கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நமது உத்திகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்," என்று பார்கவா கூறினார்.

தொற்றுநோய் குறித்த தனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பான ஜூலை 9ம் தேதி அன்றுகூட அரசு தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. "நமது கோவிட் வழக்குகளில் 80%, 49 மாவட்டங்களில் தான் உள்ளன" என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷண் கூறினார். ஜூலை 20 அன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,118,043 கோவிட் -19 வழக்குகள் இருந்தன; இதில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி கேரளா தனது முதல் கோவிட்-19 வழக்கைக் கண்டறிந்த பிறகு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்பு கண்டறிதல் உத்தியை திறம்பட செயல்படுத்தியது. ஆனால் கேரளாவில் கோவிட் வழக்குகள் மீண்டும் அதிகரித்து உள்ளன. இதை கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக இருந்த கர்நாடகா, கோவிட்-19 வழக்குகள் முன் எப்போதும் இல்லாதவகையில் அதிகரித்து வருவதைக் கண்டு, ஜூலை 14 முதல் 22ம் தேதி வரை பெங்களூரில் புதிய தீவிர ஊரடங்கை அமல்ப்படுத்தியது.

கேரள அரசு சில பகுதிகளில் சமூகப்பரவலை உறுதிப்படுத்திய அதே நேரம், கர்நாடகா தனது சமீபத்திய அதிகரிப்புக்கு சமூகப்பரவல் காரணமல்ல என்று மறுத்துவிட்டது. கேரளாவோ, ஏற்கனவே சமூகப்பரவலுக்கான ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருப்பதாக, தொற்றுநோயியல் நிபுணரும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியின் (சி.எம்.சி.) முன்னாள் முன்னாள் முதல்வருமான ஜெயபிரகாஷ் முலியில் கூறினார். "சமூகப்பரவலை அறிவிக்கும் முதல் மாநிலமாக கேரள அரசு இருக்கும்" என்று, கேரளா அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பே இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்திருந்தார்.

அடுத்து, மேற்கு வங்கமும் கூட விரைவில் சில பகுதிகளில் சமூகப்பரவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில், ஐ.சி.எம்.ஆ. அமைப்போ அல்லது மத்திய அரசோ இதுபற்றி எந்தவொரு அதிகாரபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை அல்லது கேரள அறிவிப்புக்கு பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை.

சமூகப்பரவல் இருப்பதாக ஒப்புக் கொண்ட அல்லது சுட்டிக்காட்டிய எந்தவொரு தலைவரோ அல்லது அமைப்போ பின்னர் தங்களது நிலைப்பாட்டை மாற்றின அல்லது அறிக்கையை திரும்பப் பெற்றன. கேரளா வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில் அதன் அடிப்படையில், இந்திய மருத்துவ சங்கமும் அரசு சமூகம் பரவலை ஒப்புக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று கூறியது; பின்னர் அது தனது நிலைப்பாட்டில் இருந்து விலகிவிட்டது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சமூகப்பரவல் தொடங்கிவிட்டதாக ஜூன் 26 மாலை ஒப்புக்கொண்டார். "சமூக பரவல் இருப்பதாக நாங்கள்தான் சொல்ல வேண்டும்; நாங்கள் அதை ஏற்ற வேண்டும்," என்று அவரது டிவிட் பதிவை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. மேற்கோள் காட்டியிருந்தது. இருப்பினும், ஒரு வாரம் கழித்து, அவர் அந்த தகவலை திரும்பப் பெற்றார்.

"சில காரணங்களால் சமூகப்பரவல் என்பதை அறிவிப்பதில் கொள்கை வகுப்பாளர்களுக்கு சங்கடம் உள்ளது" என்று உலகளாவிய சுகாதாரம், உயிரிவேதியியல் மற்றும் சுகாதாரக் கொள்கையியல் மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான ஆனந்த் பன் கூறினார்.

"ஆரம்ப நாட்களில் [கட்டுப்படுத்தப்பட்ட பகுதி] நீங்கள் வைரஸிடம் இருந்து தப்புவது போல் காட்டிக் கொள்ளலாம்; தனிமைப்படுத்துதல், தனித்து இருத்தல் அதையே தொடர்ந்து செய்யலாம்...”என்றார் முலைல். “நீங்கள் திடீரென்று உணருகிறீர்கள்,‘ ஓ! அது [வைரஸ்] எல்லா இடங்களிலும் உள்ளது’ என்று. எனவே, குறைந்தபட்சம் நீங்கள் அதை சமூகப்பரவல் என்று அழைக்கிறீர்கள்” என்றார் அவர்.

சமூகப் பரவலை ஒரு அரசியல் தோல்வியாக பார்க்க முடியாது என்பதை முலைல் வலியுறுத்தினார். "நீங்கள் வைரஸை எதிர்த்துப் போராடுகிறீர்கள் ... வைரஸ் நம்மை விட புத்திசாலி" என்றார்.

சமூகப்பரவலை எவ்வாறு சமாளிப்பது

"நீங்கள் [சமூகப்பரவல் நிலை] முழுவதும் வைரஸ் என்ற நிலையில், ஒருசிலரை மட்டும் பிடித்து அவர்களை மட்டுமே தனிமைப்படுத்துவது எதிர்விளைவுகளை தரும்" என்று முலைல் கூறினார். "இது அப்படி செயல்படாது"என்றார்.

மேலும், இந்தியா இன்னும் சில பயன்பாடுகளை வைத்திருப்பதால், தொடர்பு தடங்களை கைவிட தேவையில்லை, குறிப்பாக கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பகுதிகளில் தேவையில்லை என்றார் பன். "கேட்க வேண்டிய உண்மையான கேள்வி என்னவென்றால்: தொற்றுநோயை பற்றி நாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்துதான் செய்கிறோமா?".

சமூகப்பரவலை கையாள்வதில் என்ன மாதிரி வேலை நடக்கிறது என்றால் முகக்கவசங்களை அணியவும், தவறாமல் கைகளை கழுவவும், சமூக இடைவெளிகளை பராமரிக்கவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்; இது சமூகத்தால் இயக்கப்படும் மற்றும் கண்காணிக்கப்பட வேண்டிய நடத்தை மாற்றங்கள் என்று, ஜூலை 7 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. சமூகப்பரவல் என்ற நிலை வந்தால், சமூகத்தின் தேவைகள் மற்றும் வளங்களைப் பொறுத்து உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறை சிறப்பாக செயல்படும் என்று பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் சமூகப்பரவுவலை உறுதி செய்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) கூற்று தெரிவித்தது.

சமூகப்பரவல் உறுதிசெய்ததைத் தொடர்ந்து, விஞ்ஞானபூர்வ ஆலோசனையை கேட்டு வரும் கேரளா, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட பகுதிகளை முடக்கும் முடிவையும் தேர்வு செய்தது என்று மாநில சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலாஜா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆயிரக்கணக்கான செயல்பாட்டில் உள்ள தொற்று வழக்குகளை கொண்டிருக்கும் டெல்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்கள், மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் உள்ள மக்களை தனிமைப்படுத்த அதிகளவு வளங்களை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. இதுபோன்ற செயல்பாடுகளால், பிற அவசரகால சிகிச்சைக்கு மருத்துவமனை தேவைப்படுபவர்கள் பாதிக்கப்படுவதாக, ஜூன் மாதத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள், இந்தியாவில் 35 லட்சம் கோவிட்-19 வழக்குகள் இருக்கலாம் என்று இந்திய அறிவியல் நிறுவனம் கணித்துள்ளது. வழக்குகள் விரைவாக அதிகரிக்கும் போது, தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணித்தல் என்பது வரையறைக்கு உட்பட்ட செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் கோவிட்-19 வழக்குகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற வலுவான மற்றும் தெளிவான செய்தியை அனுப்புவதன் மூலம், லேசான மற்றும் அறிகுறியற்ற வழக்குகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்; இதனால் நாடு அதன் வரையறுக்கப்பட்ட சுகாதார வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்த முடியும் என்று முலைல் கூறினார். இது சிறந்த கவனிப்பு, மேம்பட்ட நம்பிக்கை மற்றும் அவதூறை குறைக்கும்.

குறைந்தது 2021ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி தேவை என்பதை முலைல் ஆதரித்தார். மும்பையில் உள்ள தாராவி பகுதியில் இப்போது புதிய கோவிட் வழக்குகள் குறைவாகவே உள்ளன; ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தியை அங்குள்ள சமூகம் வளர்த்துக் கொண்டுள்ளது என்பதால் இதை அவர் நியாயப்படுத்தினார். இந்தியாவின் முன்புள்ள ஒரேவழி சமூகம் சார்ந்த அணுகுமுறையாகும், இது சமூக இடைவெளியை உள்ளடக்கியது; ஊரடங்கில் அல்ல என்பதை முலைல் தெளிவுபடுத்தினார்.

வெளிப்படைத்தன்மையுடன் அவதூறை எதிர்த்துப் போராடுங்கள்

வெளிப்படைத்தன்மையும் வழக்கமான தகவல்தொடர்புகளும் அரசு மற்றும் பொதுமக்களுக்கும் இடையில் நம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. "தேவையான நெறிமுறை என்னவென்றால், உங்களிடம் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், உங்களிடம் தகவல்களை பகிர வேண்டும், நீங்கள் பொதுமக்களிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்று பன் கூறினார். "இது அரசு செய்திகளுடன் மேலும் இணக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூகத்தலைவர்கள் இதில் ஈடுபடலாம்" என்றார்.

இருப்பினும், வழக்கமாக நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புகளை அரசு நிறுத்தியுள்ளது. ஜூன் 11 சந்திப்புக்கு பிறகு, அடுத்தது ஒரு மாதம் கழித்து ஜூலை 9 அன்று நடைபெற்றது. இந்த வெளிப்படைத்தன்மை இல்லாதது இந்தியாவை பாதிக்கிறது என்று பன் மேலும் கூறினார்.

ஏப்ரல் மாதம் ஐ.சி.எம்.ஆர் ஒரு செரோ-சர்வே நடத்தியது. ஆராய்ச்சியாளர்கள் 83 மாவட்டங்களில் 28,595 வீடுகளை பார்வையிட்டனர்; கோவிட்-19க்கு எதிரான நோயெதிர்ப்பு திறனை சோதிக்க 26,400 நபர்களிடம் இருந்து இரத்த மாதிரிகளை எடுத்தனர். அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் ஐ.சி.எம்.ஆர் சமூகப்பரவலை நிராகரித்தது. இருப்பினும், கணக்கெடுப்பு விவரங்கள் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சினையில் இந்திய அரசு இத்தகைய இரும்புத்திரை முறையை கொண்டிருப்பது இது முதல்முறை அல்ல. மே 2017 இல் குஜராத்தை சேர்ந்த ஜிகா என்பவருக்கு உறுதிப்படுத்தப்பட்ட மூன்று வழக்குகள் இருந்தபோது, இந்தியாவில் உள்ள சுகாதார பத்திரிகையாளர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் செய்தி அறிக்கை வாயிலாகத்தான் இது தெரிய வந்தது; இந்திய அரசு வாயிலாக இந்த தகவல் வரவில்லை.

இந்தியா எதிர்கொள்ளும் மற்றொரு பெரிய சவால் கோவிட்-19 உடன் தொடர்புடைய பழிச்சொல். "நோய்வாய்ப்பட்ட மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஞ்சுகின்றனர்; எனவே, சிகிச்சை பெற மறுக்கிறார்கள்," என்று முலைல் கூறினார். அரசின் சொந்த ஒப்புதலால் இந்த களங்கம் "எதிர்ப்பு" மற்றும் "குழப்பத்தை" ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்குப் புரியக்கூடிய சிறந்த மற்றும் எளிதானவற்றைத் தேர்ந்தெடுப்பதும், அதை விரைவாக தீர்மானிப்பதும் அரசுக்கு முக்கியம் என்று, ஐ.சி.எஃப்.ஜே வெப்மினாரின் போது இந்தியா ஸ்பெண்ட் கேள்விக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட் ஏஞ்சலா ராஸ்முசென் பதில் அளித்தார். "குழப்பத்தை ஏற்படுத்துவது, தொற்றுநோயைக் கையாளும் வழியில் மட்டுமே வரும்," என்று அவர் கூறினார்.

போதுமான தகவல்தொடர்பு இல்லாதது, சுகாதாரத்தை நாடும் செயல்பாடுகளை பாதிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். "[தற்போதைய] அமைப்பு ஆரம்பகால சுகாதாரச்சேவையை நாடுவதைத் தடுக்கிறது" என்று முலைல் கூறினார்.

How to tackle community transmission:

  • Renewed focus on washing hands, hygiene and social distancing
  • Masks recommended in public
  • Community-driven and monitored behavioural changes
  • Hospitalisation recommended only for those with severe symptoms
  • Home isolation for the asymptomatic and mild cases

Source: WHO, Health experts

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.