மும்பை: தற்போதைய ஊரடங்கு காலத்தில் முழு ஊதியத்தையும் முதலாளிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மார்ச் 29, 2020இல் உத்தரவு பிறப்பித்த போதும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் எந்த பயனடையும் அடையவில்லை. ஏனெனில் "முதலாளி" என்பவர் யார் -- ரியால்டி / உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை நியமிக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் அல்லது உண்மையாக பணியமர்த்தல் செய்யும் துணை, இணை ஒப்பந்தக்காரர்கள் -- என்பது பற்றி எந்த வரைமுறையோ, தெளிவோ இந்தத்துறையில் இல்லை என்று மும்பையை சேர்ந்த லாப நோக்கற்ற நிறுவனமான, இந்தியா மிக்ரேஷன் நவ் (India Migration Now) நடத்திய இரண்டு கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டுமானத்துறையில் நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தப்பணிகளில் தெளிவற்ற படிநிலைகள் உள்ளன: ரியால்டி / உள்கட்டமைப்பு நிறுவனம் குறிப்பிட்ட துணை ஒப்பந்த நிறுவனங்களிடம் சிறப்புப்பணிகளை ஒப்படைக்கிறது, தொழிலாளர்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை இணை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கிறது, அவர்கள் உரிமம் பெற்றவர்கள் அல்லது உரிமம் பெறாதவர்களாய இருக்கலாம் என்று, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியர் ரவி ஸ்ரீவஸ்தவா மேற்கொண்ட 2012ம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் பொறுப்பானது தொழிலாளர்களின் நலனுக்கு பொறுப்பாகும் மற்றும் தொழிலாளர்களின் ஊதியத்தை இணை ஒப்பந்தக்காரர்களிடம் வழங்குகிறது, பின்னர் பணி முடிந்ததும் தொழிலாளர்களுக்கு அது வழங்கப்படுகிறது.

பின்னர் ஊதியம் வழங்குவதற்கு யார் பொறுப்பு என்று, மகாராஷ்டிராவின் தானேயில் 25 இணை ஒப்பந்தக்காரர்களையும், 103 தொழிலாளர்களையும் ஒரு குறிப்பிட்ட பணி நிலையத்தில் கேட்டோம். கிட்டத்தட்ட 90% இணை ஒப்பந்தக்காரர்கள் துணை ஒப்பந்த நிறுவனமே பொறுப்பு என்றனர். 74% தொழிலாளர்கள் இணை ஒப்பந்தக்காரரிடம் சுட்டிக்காட்டினர். ஏனென்றால், இணை ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு இயந்திரங்களில் அதிகம் காணக்கூடிய முனையாகும் - 60% தொழிலாளர்கள் இந்த ஒப்பந்தக்காரர்கள் மூலம் வேலைகளை செய்கிறார்கள்.இந்த ஏற்பாடு என்பது தொழிலாளர்கள் எப்போதுமே துணை ஒப்பந்த நிறுவனங்களின் நிர்வாகத்தில் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்வதாகும்.

கிட்டத்தட்ட 90% இணை ஒப்பந்தக்காரர்களுக்கு, ஊரங்கின் போது துணை ஒப்பந்த நிறுவனங்கள் பணத்தை செலுத்தவில்லை என்றும், எனவே, தங்களால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாது என்றும் கூறிவிட்டதாக, இந்தியா மிக்ரேஷன் னவ் (ஐ.எம்.என்), ஊரங்கின் இரு கட்டங்களில் - முதல் கட்டம் (மார்ச் 25 முதல் ஏப்ரல் 14, 2020 வரை) மற்றும் இரண்டாம் கட்டம் (ஏப்ரல் 15 முதல் மே 3, 2020 வரை) நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

கட்டிடத் தொழிலாளர்கள் (துணை ஒப்பந்த நிறுவனம்) வேலைவாய்ப்பு மூலம் எந்தவொரு நிறுவனமும் கொடுக்கப்பட்ட முடிவை வழங்குவதற்கான ஒரு நபராக ஒரு முதலாளி இருக்க முடியும் அல்லது நிறுவனத்தில் எந்தவொரு வேலைக்கும் (இணை ஒப்பந்தக்காரர்) கட்டிடத் தொழிலாளர்களை வழங்குபவராக இருக்க வேண்டுமென்று, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1996 தெரிவிக்கிறது.

கட்டுமானத் துறையில், சட்டத்தின்படி ஒரு முதலாளியின் வரையறைக்கும் கள யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு, தொழிலாளர்கள் மீதான தங்கள் பொறுப்பை நிர்வாகங்கள் மறுக்க அனுமதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். 2020 மார்ச்சில் கட்டுமானத்துறை முற்றிலுமாக முடங்கிய போது, ஊரங்குதல் விஷயங்களை மோசமாக்கியது. இது மே 20, 2020 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை செய்தபடி, எந்தவொரு வருமானமும் சமூக பாதுகாப்பும் இல்லாத துன்பகரமான சூழல், தொழிலாளர்களது பெரிய அளவிலான தலைகீழ் இடம்பெயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முறைப்படுத்தல் அதிகரித்தல்

கோவிட்-19 நெருக்கடி கட்டுமானத்துறையை கடுமையாக பாதித்துள்ளது; விவசாயத்துறைக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய துறையான இதில், சுமார் 5 கோடி தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்று, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இன்வெஸ்ட் இந்தியா வலைத்தளம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் முறைசாரா தொழிலில் தொழிலாளர்கள் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது - எந்தவொரு எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் உள்ள மொத்த ஊழியர்களின் சதவீதம் 2004-05ல் 25.4% இல் இருந்து 2011-12ல் 20.9 சதவீதமாகக் குறைந்தது என்று, சமீபத்திய தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) தரவை பகுப்பாய்வு செய்த ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் பொருள் கட்டுமானத் துறையில் பெரும் பகுதி, முறைசாரா வடிவிலான தொழிலாளர் ஆட்சேர்ப்புகளையே நம்பியுள்ளது. இந்திய கட்டுமானத் துறையில் முறைசாரா துறை மொத்த வேலைகளில் 97.6% ஆகவும், பெண்களை பொருத்தமட்டில் 99.3% ஆகவும் உள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவர மதிப்பீட்டில் மேற்கோள் காட்டி என்.எஸ்.எஸ். இன் 66வது சுற்று (2009-2010) தரவுகள் தெரிவிக்கின்றன.

இணை ஒப்பந்தக்காரர் இந்த முறைசாரா அமைப்பில் ஒரு முக்கியமான முனை, நாங்கள் முன்பு கூறியது போல, துணை ஒப்பந்த நிறுவனத்திற்கு உழைப்பை வழங்குகிறது.

முறைசார்ந்த அமைப்பு (தொழிலாளர் பொறுப்பாளர்) மற்றும் முறைசாரா அமைப்பு (தொழிலாளர் துணை ஒப்பந்தக்காரர்) ஆகியவற்றுக்கு இடையிலான ஏற்பாடுகளை கொண்டு பார்த்தாலும், முதலாளியின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முறையான மற்றும் முறைசாரா முறைமை இருக்கும் சூழ்நிலைக்கு சட்டம் காரணமில்லை - ஒரு குறிப்பிட்ட தளத்தில் ஒரு நபர் ஒரு நிறுவனத்தின் வெளியீட்டை எளிதாக்குவதற்கு மேற்கொள்ளும்போது, மற்றொருவர் தொழிலாளர்களை வழங்குகிறார்.

இதன் விளைவாக, இணை ஒப்பந்தக்காரர் மற்றும் துணை ஒப்பந்த நிறுவனங்கள் பெரும்பாலும் முதலாளியின் வரையறை குறித்து கவலையில் நிற்கின்றன. மனித மேம்பாட்டு நிறுவனம் (ஐ.எச்.டி) 2016 இல் நடத்திய ஆய்வின்படி, 85% தொழிலாளர்கள், தங்களது ஒப்பந்தக்காரர்களையே முதலாளிகளாக கருதினர். தொழிலாளர்கள் மத்தியில் முறையான மற்றும் முறைசாரா ஆட்சேர்ப்புக்கு இடையே எல்லை நிர்ணயம் தெளிவற்ற சூழலை குறிக்கிறது.

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதற்கு துணை ஒப்பந்த நிறுவனம் பொறுப்பாகும். ஆனால் தொழிலாளர் ஒப்பந்த முறை தொழிலாளர்களிடம் இருந்து நிர்வாகத்தை விலக்கி உள்ளது மற்றும் தொழிலாளர்கள் மீதான பொறுப்பு முற்றிலும் இணை ஒப்பந்தக்காரரின் தோள்களில் உள்ளது என்று, ரவி ஸ்ரீவாஸ்தவா மற்றும் ராஜீப் சூத்ரதர் ஆகியோர் தங்கள் ஐ.எச்.டி ஆய்வில் குறிப்பிட்டனர்.

தொழிலாளி இல்லாமை

நடப்பு 2020 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மும்பையில் கட்டுமானத் தொழிலாளர்களிடம் நாங்கள் நடத்திய கள ஆய்வு, துணை ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாகம், தொழிலாளர்களுக்கான பொறுப்பு என்று குறிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 44 துணை ஒப்பந்த நிறுவனங்களில், அனைவருக்கும் "தொழிலாளர்களுக்கான பொறுப்பாளர்" ஆக இருந்தனர், அதன் முதன்மை பொறுப்பு தொழிலாளர்களின் நலனைக் கவனிப்பதே ஆகும், இதில் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது.

இணை ஒப்பந்தக்காரர்களுக்கான கட்டணம், உற்பத்தி கிடைப்பதன் அடிப்படையை கொண்டது, அதாவது, ஒரு பணி முடிந்த பிறகே தொகை செலுத்தப்படுகிறது (எடுத்துக்காட்டாக, டைல்ஸ் பதிப்பு வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு இணை ஒப்பந்தக்காரருக்கு, டைல்ஸ் பதிப்பு பணிகள் முற்றிலும் முடித்த பிறாகே, தொகை துணை ஒப்பந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறது), ஒப்பந்த நிறுவனத்தால் தாமதமாக பணம் செலுத்துவது என்பது தொழிலாளர் ஊதியங்களை தாமதமாக விநியோகிப்பதாகும். இந்தியாவில் கட்டுமான தளங்களில் தொழிலாளர் வருகை என்பது மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும், மேலும் கட்டண தாமதங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணியாகும் என்று, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் வெளியிட்ட 2016 கணக்கெடுப்பு அடிப்படையிலான ஆய்வு கண்டறிந்தது. இது இந்தியாவின் புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களின் வருவாய் மற்றும் வருவாயைக் கவனித்தது.

புலம் பெயர்ந்தோர் திரும்புதலு, அதன் தாக்கங்களும்

தொழிலாளர்களின் இடம்பெயர்வு என்ற முடிவில் இடைத்தரகர் அல்லது இணிய ஒப்பந்தக்காரர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்: வணிக வளாகங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் 94% பேரும், குடியிருப்பு வளாகங்களில் 86% பேரும் இடைத்தரகர்கள் காரணமாகவே புலம்பெயர முடிவு செய்ததாக, ஐ.எச்.டி நடத்திய 2016 ஆய்வில் கண்டறியப்பட்டது. இணை ஒப்பந்தக்காரர், இருப்பிடத்தில் இருந்து பணிக்கு செல்லும் பயணத்திற்கு தொகை வழங்குவது மட்டுமல்லாமல், தங்குமிடம் மற்றும் உணவை வழங்குவதற்கும் பொறுப்பானவர். இந்த உதவியின் பண இயல்பு ஒரு "முன்கூட்டியே தொகை" அல்லது "கடன்" என்று கருதப்படுகிறது, மேலும் தொழிலாளி பணியைத் தொடங்கியவுடன், அந்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஊரடங்கின் போது கட்டுமானத்தொழில் நிறுத்தப்பட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்க, ஒப்பந்தக்காரர்களுக்கு போதுமான நிதி இல்லை. நாங்கள் நேர்காணல் செய்த 25 இணை ஒப்பந்தக்காரர்கள், தங்கி பணி புரிவதற்காக தெரிவுசெய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிப்பதாகக் கூறினர் அல்லது தங்கள் சொந்த பணத்தில் இருந்து இதை வழங்கும் வகையில் சிக்கிக் கொண்டனர்.

ஊரடங்கின் இரண்டாம் கட்டத்தில், ஒப்பந்தக்காரர்கள், சராசரி ஒரு தொழிலாளிக்கு ரூ.1,000 என்று தங்களுக்கு செலவாவதாக கூறினார். அதிக தொழிலாளர்களைக் கொண்ட இணை ஒப்பந்தக்காரர்கள் அதிக ஒருங்கிணைந்த செலவினங்களைக் கொண்டுள்ளனர்.

கட்டுமானத்துறையில் கிராமப்புற - நகர்ப்புறத்தில் குடியேறியவர்களில் 42.6% வரை மாநிலங்களுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களில் 52% பேர் முதல் எட்டு மெட்ரோ நகரங்களுக்கு வேலைக்காக பயணம் செய்கிறார்கள் என்று, கொள்கை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவித்தது.

இணை ஒப்பந்தக்காரர்களின் சேமிப்பு குறைந்து வருவதால், நகர்ப்புற பகுதிகளுக்கு குடிபெயர ஊக்குவிப்பதற்காகவோ அல்லது அவர்களின் இடம்பெயர்வு செலவுகளை சுமக்கவோ, தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான இருப்பும் அவர்களிடம் இருக்காது, இதனால் பொருளாதார மீட்சி குறைகிறது. இது துணை ஒப்பந்த நிறுவனங்களுடனான அவர்களின் ஏற்பாட்டையும் பாதிக்கும், அவர்களுக்கு தேவையான அளவு எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வழங்கக்கூடிய பிற இணை ஒப்பந்தக்காரர்களை தொழிலாளர் நலனுக்கான செலவில் பார்க்கக்கூடும் என்று, ஐ.எம்.என் நடத்திய நேர்காணல்களில் ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.

(ராவத் மற்றும் சிங் ஆகியோர் மும்பையை சேர்ந்த இடம்பெயர்வு, தரவு, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அமைப்பான இந்தியா மிக்ரேஷன் நவ் ஆராய்ச்சியாளர்கள். அவர்களின் பணியை @nowmigration என்ற பக்கத்தில் பின்பற்றலாம். இக்கட்டுரை மணீஷ் மஸ்காரா @ maskaramanish25 இன் உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.