புதுடெல்லி: ஜலாலுதீன் காசி*, 38, இருமுனைய கோளாறுடன் வாழ்கிறார், பெரும்பாலும் வலிப்புத்தாக்கங்கள் உள்ளன. கொல்கத்தாவுக்கு அருகேயுள்ள வடக்கு டம்டம் பகுதியில் வசிப்பவர், அவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்காக, அவரால் முடிந்த நாட்களில் வாடகைக்கு மின்சார ரிக்‌ஷாவை ஓட்டி வந்தார். அவரது மனைவி ஜஹனாரா பிபி*, 30, வீட்டு சுத்தம் செய்யும் பொருட்களை அக்கம் பக்கத்தில் விற்று வந்தவர். குடும்பத்தின் மாத வருமானம் சராசரியாக ரூ.2,000-2,500 ஆகும். மார்ச் மாதத்தில் நாடு தழுவிய கோவிட்19 ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, ​​ருவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மே மாதத்திற்குள், குடும்பத்தினரின் சேமிப்புகளும் கரைந்தன, கடைக்காரர்கள் அவர்களுக்கு கடன் தர மறுத்துவிட்டனர்.

ஜலாலுதீன், தனது மருந்துகளை பெற கட்டுப்பாடுகளுக்கு நிர்பந்திக்கப்பட்டார் மற்றும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு தொடர்ந்து தலைவலி, அதிகரித்த எரிச்சல் மற்றும் சித்தப்பிரமை இருந்தது என்று ஜஹானாரா கூறினார். பார்க் சர்க்கஸில் உள்ள பொது மருத்துவமனைக்கு அவர்கள் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, ஒரு அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஏற்பாட்டின் பேரில் ஆம்புலன்சில் இலவச மருந்துகளை அவர்கள் பெற்றனர்.

அதே சுற்றுப்புறத்தில், 26 வயதான சாபி கதுனுக்கு*, ஊரடங்கின் போது மருந்துகள் இல்லாததால் அடிக்கடி வலிப்பு, மயக்கம் மற்றும் கை நடுக்கம் ஏற்பட்டது. அவருக்கு வீட்டில் உதவியாளராக இருந்த தாய் மற்றும் பஸ் நடத்துனர் தந்தை இருவரும் வேலைக்கு வெளியே இருந்ததால், கொஞ்சமே அவரால் சாப்பிட முடிந்தது.

தி லான்செட் மருத்துவ இதழின் ஆய்வுப்படி, இதுபோன்ற 20 கோடி இந்தியர்கள் மனநல குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். அவர்களது குடும்பங்களுக்கு, ஊரடங்கின் போது இலவச மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஏற்பட்ட இடையூறு, கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை, இந்தியா ஸ்பெண்ட் முன்பு கூறியது போல், அதிகப்படுத்தியது. ஆனால், அத்தகைய இந்தியர்களின் அரசு மதிப்பீடு மிகவும் குறைவு. சுமார் 39 லட்சம் மக்கள் மனநல குறைபாடுகளுடன் வாழ்வதாக, தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) நடத்திய 2018 ஆய்வில் கண்டறியப்பட்டது.

மனநல குறைபாடுகள் உள்ளவர்கள் -- அதாவது மனச்சோர்வு மற்றும் கவலை குறைபாடு உள்ளிட்ட மனநோய்கள் மற்றும் டிஸ்லெக்ஸியா அல்லது மன நலிவு நோய்க்குறி உள்ளிட்ட அறிவுசார் கோளாறுகள் -- சமூக களங்கம் மற்றும் அணுகுமுறைகள் போன்ற தடைகள் மற்றும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாததால் சமூகத்தில் முழுமையாக பங்கேற்க முடியாமல் தடுக்கப்படுகின்றன. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து மனநலக்குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஊரங்கு காலத்திலும் அதற்குப் பிறகும் அரசின் நிதி உதவி போதுமானதாக இல்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் கண்டறிந்தது.

மேலும், இயலாதவர்களுக்கான ஓய்வூதியம் போன்ற தற்போதைய ஆதரவு கோவிட்-19 தொடர்பான மூடல்களால் தாமதமாகிவிட்டது, அல்லது வெளியிடப்படவில்லை என்று, 25 மாநிலங்களில் இயலாதவர்கள் தொடர்பாக மே மாதத்தில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஊரடங்கை எதிர்கொண்டது பற்றி பதிலளித்தவர்கள் 57% பேர், நிதி நெருக்கடியை சந்தித்ததாக கூறினர்.

தி ஹெல்த் கலெக்டிவ் உடன் இணைந்து எங்கள் மனநல பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாக இந்தியாஸ்பெண்ட், 2020 ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், மனநல சமூக குறைபாடுகள், பராமரிப்பாளர்கள், ஆர்வலர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கொள்கை வல்லுநர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஆகியோரை பேட்டி கண்டது. மாற்றுத்திறனாளிகளை சமாளிக்கும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு, தொற்றுநோய்க்கு முன்பே, சுகாதாரத்துக்கான செலவினங்கள் அவற்றின் வழிமுறைகளை விட அதிகமாக இருந்தன, மனநல குறைபாடுகள் உள்ளவர்களை நீண்டகால நிறுவனமயமாக்கல் அல்லது வீடற்ற தன்மைக்கு ஆபத்துக்குள்ளாக்குகின்றன என்பதை, இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தின.

அரசு ஆதரவில் இடைவெளிகளை நிரப்புதல்

மேற்கு வங்காளத்தில் உள்ள அஞ்சலி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மார்ச் மாதத்தில் இருந்து, ஜலாலுதீன் போன்ற குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இது கொல்கத்தா மாநகராட்சியுடன் இணைந்து அதன் நகர்ப்புற மனநல திட்டமான ஜனமனாஸ் மூலம் ரூ.2,000-2,500 மானியங்களை வழங்கியது. "ஆனால் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இதை ஏன் செய்ய வேண்டும்? இது அரசின் பொறுப்பாக அல்லவா இருக்க வேண்டும்" என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய தளத்தின் (என்.பி.ஆர்.டி) ஷாம்பா செங்குப்தா கூறினார்.


ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது நிதி உதவி, உணவுப் பொருட்கள், சுகாதார நாப்கின்கள் போன்றவற்றை வழங்கி, அஞ்சலி போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இடைவெளிகளை நிரப்பின.

ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் போது நிதி உதவி, உணவுப் பொருட்கள், சுகாதார நாப்கின்கள் போன்றவற்றை வழங்கி, அஞ்சலி போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இடைவெளிகளை நிரப்பின. ஊரடங்கின் இரண்டாம் நாள் மார்ச் 26 அன்று, தேசிய சமூக உதவித் திட்டத்தின் (NSAP) கீழ் ஏற்கனவே ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு மேல் மொத்தம் ரூ.1000 உதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. "அவசரகால பணப்பரிமாற்றத்தின் மதிப்பு மாதத்திற்கு 5 டாலருக்கும் குறைவாகவே இருந்தது, இது போதுமானதாக இல்லை" என்று மாற்றுதிறனாளிகள் ஆர்வலர் சதேந்திர சிங், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரையின்படி ஒரு நாளைக்கு 1.9 டாலர் அல்லது மாதத்திற்கு 5,000 ரூபாயாக இருந்திருக்க வேண்டும். மேலும், [தகுதி என்பது] குறைபாடுகள் உள்ள உழைக்கும் வயது முதிர்ந்தவர்களில் 8% மட்டுமே [உள்ளடக்கப்பட்டிருந்தது]". கோவிட்-19 தொற்றுக்கான பதில் நடவடிக்கையில், ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (யுனெஸ்காப்- UNESCAP), "காணாமல் போன நடுத்தரத்தை" - வருமானம் காரணமாக அதன் உறுப்பினர்களை வறுமை இலக்கு திட்டங்களில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் குழு- உள்ளடக்குமாறு நாடுகளை வலியுறுத்தியது. அதே நேரத்தில், பலர் தங்கள் வேலையின் முறைசாராதன்மை காரணமாக பங்களிப்பு திட்டங்களில் (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி போன்றவை) பங்கேற்க மாட்டார்கள். "வளமான காலங்களில் அவை முடிவடையும் அதே வேளையில், அவர்கள் சாதாரண அதிர்ச்சிகளையும், வாழ்வாதாரங்களுக்கு அழுத்தங்களையும் எதிர்கொண்டால் அவர்கள் வறுமையில் விழும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்". இந்தியா ஸ்பெண்ட் நேர்காணல் செய்த பல குடும்பங்களுக்கு கோவிட்-19, பேரதிர்ச்சியாகவே இருந்தது.

மே மாதத்தில், இலாப நோக்கற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையம் (NCPEDP - என்சிபிஇடிபி) 25 மாநிலங்களில் ஆய்வு செய்த 1,067 மாற்றுத்திறனாளிகளில் 73% க்கும் மேற்பட்டவர்கள் ஊரடங்கால் தாங்கள் சவால்களை எதிர்கொள்வதாகக் கூறினர்; 57% பேர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் 13% பேர் தங்களால் உணவுப் பொருட்களை அணுக முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியங்கள் - ஏற்கனவே ஐந்து மாதங்கள் தாமதமான நிலையில் - ஊரடங்கு காலத்தில் தாமதமாக விடுவிக்கப்பட்டன. மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் ஓய்வூதியங்கள் விடுவிக்கப்படவில்லை என்று என்சிபிஇடிபி அறிக்கை தெரிவித்துள்ளது. ஊரடங்கின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தொகை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக இருந்ததாக, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய அமைப்பின் (என்.பி.ஆர்.டி) தலைவர் எஸ்.நம்புராஜன் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். டிசம்பர் மாத நிலவரப்படி, சென்னையில் சுமார் 50% மாற்றுத்திறனாளிகள் மட்டுமே ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகையை பெற்றுள்ளனர்.

உழைக்கும் வயதுள்ள மாற்றுத்திறனுடையவர்களில் 42% பேர் மாநில திட்டங்களின் கீழ் இடம் பெற்றிருந்தாலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள மத்திய அரசின் பணப்பரிமாற்றத்தில் வேறுபாடுகள் இருந்தன, பீகார் எதுவும் சேர்க்காத நிலையில், ஆந்திரா ரூ.2,000 வழங்கியது என்று, Too Little Too Few (TLTF - டி.எல்.டி.எஃப்) மே மாத அறிக்கை தெரிவித்தது. தொழிலாளர் அல்லாத மக்களில் பெரும் பகுதியினர் மற்றும் மாற்றுத்திறன் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் பணப்பரிமாற்றத்தில் இருந்து விலக்கப்பட்டனர், மேலும் ரேஷன் கார்டுகள் இல்லாத நபர்கள் பொது விநியோக முறைகள் மூலம் ரேஷன் பொருட்களை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டனர். ஊரடங்கின்போது உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் உலகளாவிய அணுகுமுறையை பின்பற்றுவதில் கேரளா மாநிலம் தனித்துவமாக இருந்தது என்று டி.எல்.டி.எஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.

என்.சி.பி.இ.டி.பி. மற்றும் டி.எல்.டி.எப். அறிக்கைகள் இரண்டும் மத்திய அரசு ரொக்கப் பரிமாற்றத்தை 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், மாநிலங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தொகை பெறுவதற்கான தகுதிகளை அவசரமாக விரிவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தன. மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தொற்றுநோய் காலத்தில் ஏழு மாதங்களுக்க்ம் உதவி செய்ய வேண்டும் என்று, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியது. இருப்பினும், பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்று என்சிபிஇடிபியின் நிர்வாக இயக்குனர் அர்மான் அலி இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"முறைசாரா வேலையில் ஈடுபட்டிருந்த [ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு], தொற்றுநோயால் வேலைஇழப்பு ஏற்பட்டது. ஏற்கனவே பாதிப்பில் இருந்தவர்களை மேலும் விளிம்பிற்குத் தள்ளியது," என்று, பன்யான் என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவரான, சென்னையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் கூறினார். இவர், மனநலப் பிரச்சினைகளுடன் வாழும் வீடற்ற மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ஊரடங்கின்போது, பல்வேறு மாநிலங்களில் உள்ள மனநல குறைபாடுள்ள நபர்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அஞ்சலி மற்றும் பன்யான் போன்ற நிறுவனங்கள், அவசரகால நிவாரண நடவடிக்கைகளுக்கு தங்கள் முயற்சிகளை திருப்பி, நேரடி பணப்பரிமாற்றங்கள், ரேஷன் கிட்கள், மொபைல் போன் ரீசார்ஜ்கள் மற்றும் பிற உடனடி தேவைகளை பயனாளிகளுக்கு வழங்கின.

"நாம் மருத்துவ மாதிரியைத் தாண்டி செல்ல வேண்டும் [மனநல நோய்க்கு மருத்துவத்துடன் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது]" என்று மெஹாக் அறக்கட்டளையின் நிறுவனர் சித்ரா வெங்கடேஸ்வரன் கூறினார். "நாள்பட்ட மனநோய்க்கான மருந்துகளை தடையின்றி அணுகுவது மிக முக்கியமானது, ஆனால் குடும்பத்தின் [உடனடி] தேவைகள் கவனிக்கப்படுகிறதா என்பதையும் நீங்கள் ஆராய வேண்டும்" என்றார். கேரளாவின் ஐந்து மாவட்டங்களில் மாநில சுகாதார அமைப்பின் ஒரு பகுதியாக சமூக அடிப்படையிலான மனநல சுகாதார சேவையை வழங்கும் மெஹாக் அறக்கட்டளை, ஊரடங்கு காலத்தில் அரசு ரேஷன் பொருட்களை விநியோகித்தது. அரசு வழங்காத சேவைகளான மொபைல் ரீசார்ஜ் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற அத்தியாவசியங்களையும் அவர்கள் வழங்கினர்.

"கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, பெரும்பாலான குடியிருப்பாளர்கள் [கேரளாவில் உள்ள பன்யான் வீட்டுவசதி முயற்சியில்] வெளியில் வேலைவாய்ப்பை இழந்தனர், நாங்கள் எங்கள் வாழ்வாதார விருப்பத்தை அளவிட வேண்டியிருந்தது" என்று மூத்த ஊழியரான பின்சி பி. சாக்கோ, ஆகஸ்ட் மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.


கேரளாவின் மலப்புரம் மாவட்டம் புல்லிக்கல் பகுதியில் உள்ள பன்யான் ஹோம் அகெய்ன் மையத்தில் வசிப்பவர், UNMAD வாழ்வாதார திட்டப்பணிக்காக உணவு தானிய பொடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். புகைப்படம் பன்யான் வழங்கியது.

ஒருநாள் முதல் அடுத்த நாள் வரை அரிதாகவே கிடைக்கும்

மாற்றுத்திறன் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கான செலவு, குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களின் பெற்றோரின் வழிமுறைகளை விட அதிகமாக உள்ளது, இது பெரும்பாலும் கடனுக்கு வழிவகுக்கிறது. அறிவுசார்ந்த மாற்றுத்திறன் குறைபாடுள்ள நபர்களில் ஐந்தில் கிட்டத்தட்ட மூன்று பேர் - அதாவது 58% பேருக்கு அதிக ஆதரவும், ஒவ்வொரு அன்றாட நடவடிக்கைகளுக்கும் உதவியும் தேவைப்படுகிறது என்று என்எஸ்ஓ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனநோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு (36%) அதிக ஆதரவு தேவை.

17 வயதான பரிச்சே கோஷ்*, வடக்கு டம்டம் அருகே பிரெட்டி பகுதியில், நரம்பியல் மற்றும் அறிவுசார் குறைபாடுகளுடன் வாழ்கிறார், அவருக்கு அதிக ஆதரவு தேவை. அவரது தந்தை சுபாஷ்*, 63, ஒரு எலக்ட்ரீஷியன், அவரது மாத வருமானம் ரூ.8,000 ஊரடங்கால் பாதிக்கப்பட்டது. பரிச்சேயின் மருந்துக்கு மாதத்திற்கு ரூ.500 செலவாகிறது. சுபாஷுக்கு தலா ரூ.2,000 மானியம் அஞ்சலியால் வழங்கப்பட்டது.

பல ஆண்டுகளாக, சுபாஷ் தனது ஆபத்தான அதிக காய்ச்சல் மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க பரிச்சேவை, பல மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார். 2009 ஆம் ஆண்டில், அவர் கடன் வாங்கி பரிச்சேவுடன் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரிக்கு (சி.எம்.சி) சென்றார், அதன் பிறகு பரிச்சே, ஆறாவது வயதிற்கு பிறகு அவர் பேசத் தொடங்கினார். அப்போதிருந்து, சுபாஷ் ஆண்டுதோறும் சி.எம்.சி.க்கு வந்து செல்வதற்காக கடன்களை பெற்று வருகிறார்.

பிரெட்டி பகுதியைப் போலவே மற்ற இடங்களில், 14 வயது அதிதி தத்தாவும் அவரது குடும்பத்தினரும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவரது தந்தை ஆஷிம், 52, தனியார் பள்ளியில் எழுத்தராக உள்ளார். ஊரடங்கிற்கு பிறகு அவரது மாத சம்பளம் ரூ.6,000 குறைக்கப்பட்டது. குடும்பத்திற்கு அஞ்சலி அமைப்பிடம் இருந்து ரூ.2,000 உதவி கிடைத்தது.

அதிதியின் மருந்துக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,200 செலவாகிறது. அவர், வலிப்புத்தாக்கங்களுக்கு ஆளாகிறார். "நாங்கள் மருந்துகளை பாதியில் நிறுத்தினால், அவர் உயிருக்கு ஆபத்த" என்று ஆஷிம் கூறினார், அவருக்கு பல ஆண்டுகளாக ரூ.3 லட்சம் கடன் உள்ளது. நிதி உதவி அல்லது உதவி கேட்டு முதலமைச்சர் அலுவலகத்திற்கு, அவர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார், ஆனால் யாரும் பொருட்படுத்தவில்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதம் ரூ.1,000 தொகை, ஊரடங்கிற்கு முன்பே மாநில அரசால் சரிவர வழங்கப்படவில்லை என, இரு குடும்பங்களும், இந்தியா ஸ்பெண்டிடம் கூறின; பெரும்பாலும், பல மாதங்களுக்கான மொத்த தொகை ஒன்றாக வந்து சேர்ந்தன.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஊரடங்கு முடிவடைந்த அரையாண்டு கழித்து, 13% மாற்றுத்திறன் குழந்தைகளுடன் கூடிய குடும்பங்கள், ஒருநாளைக்கான உணவு எண்ணிக்கையை குறைத்துள்ளன என்பதை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கோவிட்-19 இன் போது பல்வேறு குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கல்வியில் இருந்து விலக்குவது குறித்த டிசம்பர் ஆய்வில், விதி சென்டர் ஃபார் லீகல் பாலிசி அமைப்பு கண்டறிந்துள்ளது. சுமார் 77% பேர் வேலை அல்லது வருவாய் இழப்பைக் கண்டனர், 38% பேர் கடனில் சிக்கினர், 90% பேர் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு அல்லது தன்னார்வ தொண்டு நிறுவன நிவாரண உதவிகளை நம்பி இருக்கிறார்கள். சில குழந்தைகள் கால்-கை வலிப்பு போன்ற நோய்களுக்கான மருத்துவ சிகிச்சையை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தன, சீர்குலைந்த நடைமுறைகள் குழந்தைகளின், குறிப்பாக அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்தது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"நாங்கள் சேவை செய்து வரும் பெரும்பாலான மக்கள், குறைந்த வருவாய் பின்னணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரு சிறிய நிதி ஆதரவு கிடைத்தால் கூட, அது ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்கும் "என்று வடக்கு டம்டம்மில் உள்ள ஜனமனாஸ் மைய ஆபரேட்டர் மஹுவா முகர்ஜி கூறினார்.

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் சான்றிதழ்

கடந்த 2018 என்எஸ்ஓ கணக்கெடுப்பின்படி, மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் உள்ள மாற்றுத்திறனாளி இந்தியர்கள் 28.8% பேரில் பரிச்சே மற்றும் அதிதி ஆகியோர் உள்ளனர். மாற்றுத்திறன் சான்றிதழ் பெற்ற மனநோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் டெல்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி, சான்றிதழ் இல்லாததால் குறைபாடுகளை அதில் இருந்து விலக்கி வைக்கிறது என்று, மாற்றுத்திறனாளிகள் சட்டம் மற்றும் கொள்கை ஆகிய துறைகளில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அம்பா சலேல்கர் கூறினார். சான்றிதழ் செயல்முறை சிக்கலானது மற்றும் மருத்துவ நோயறிதல் மாதிரியை பெரிதும் நம்பியுள்ளது. "குறைபாடு உள்ள ஒவ்வொரு நான்கு நபர்களில் ஒருவர் மட்டுமே சான்றிதழ் பெறுகிறார் என்று ஆராய்ச்சி கூறுகிறது, பல காரணங்களுக்காக, இந்த செயல்முறையின் சிரமம் மற்றும் அணுக முடியாத தன்மை உள்ளன," என்று சலேல்கர் கூறினார். மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, மாற்றுத்திறன் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் "தற்காலிகமானவை" தான். ஏனெனில் மனநோயை குணப்படுத்த முடியும் என்பது நடைமுறையில் உள்ள புரிதல் என்பதால் என்று சலேல்கர் விளக்கம் தந்தார். எனவே, அந்த அட்டை செல்லத்தக்காத புதுப்பிக்க மக்கள் மருத்துவமனைக்கு தொடர்ந்து செல்ல வேண்டும்.

இந்தியாவின் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை பற்றிய அரசின் மதிப்பீடுகள் அதிகாரபூர்வ தரவுக்காட்சியைக் காட்டிலும், இது மிகக்குறைவாக இருக்கக்கூடும் என்பதன் மூலம் இந்த விலக்கு மேலும் அதிகரிக்கிறது. 2017 ஆம் ஆண்டில், 19.73 கோடி பேர் - மக்கள் தொகையில் 15%, அல்லது ஏழு இந்தியர்களில் ஒருவர் - மனநல கோளாறுகள் இருந்ததாக, பிப்ரவரி 2020 இல் தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது, இது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் ஓரளவு நிதியளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, தேசிய புள்ளிவிவர அலுவலகம் இந்த எண்ணிக்கையை 0.3% அல்லது 39 லட்சம் (2021ம் ஆண்டில் 40 லட்சம்) என்று வைத்ததாக, 2018 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பு தெரிவித்தது.

என்.எஸ்.ஏ.பி. திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம் (IGNDP) என்பது 18 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு 80% மாற்றுத்திறன் என்று சான்றளிக்கப்பட்ட ஓய்வூதியமாகும். "80% மேல் என்பது என்பதுதான் ஒட்டுமொத்த சிக்கல்," என்று சலேல்கர் கூறினார். மேலும், இந்த திட்டம் வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) கீழ் வாழும் மக்கள் மற்றும் வேலையற்றவர்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. மாற்றுத்திறன் என்பது ஒரு மாநிலம் சார்ந்தது மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (RPwD) சட்டம் 2016 போன்ற மத்திய சட்டங்களுக்கான காரணம், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் (சிஆர்பிடி) கீழ் இந்தியாவின் கடமைகளே. இந்த மாநாட்டிற்கு இந்தியா ஒப்புதல் அளித்த அதே 2007 ஆம் ஆண்டில் என்எஸ்ஏபி தொடங்கப்பட்டது. "[ஐ.ஜி.என்.டி.பி] ஓய்வூதியத்தின் ஒரு பகுதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது (மாதத்திற்கு ரூ.300), மீதமுள்ளவை மாநில அரசால் வழங்கப்பட வேண்டும்" என்று சலேல்கர் கூறினார்.மாநிலங்களுக்கு இடையில் "டாப்-அப்களில்" பரந்த ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

என்.எஸ்.ஏ.பி யை பகுப்பாய்வு செய்த கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) தேசிய பணிக்குழுவின் கூற்றுப்படி, 2013 ஆம் ஆண்டில் 950,000 வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்கள் ஐ.ஜி.என்.டி.பி. 40% மற்றும் அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மாநிலத்தின் பணப்பட்டுவாடா உள்ளன, அதாவது பிரெட்டியில் உள்ள குடும்பங்கள் பெறும் மாற்றுத்திறன் தொகை போன்றவை. ஆனால் இவற்றுக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற முத்திரைகள் உள்ளன, மேலும் நபர்கள் ஒரே திட்டத்தில் இருந்து மட்டுமே உதவி பெற முடியும்.

கோவிட்-19 தொற்றுக்கு முன்பே, 22% க்கும் குறைவான மாற்றுத்திறனாளிகள் அரசிடம் உதவி பெற்றனர், 1.8% தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றனர், 76.4% பேருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று என்.எஸ்.ஓ. கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவியானது வங்கிக் கணக்குகள் உள்ளவர்களுக்கும், ஆதார் போன்ற அடையாளச் சான்றுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கேரளாவின் குருவாயூரில், இருமுனை பாதிப்புக் கோளாறுடன் வாழும் 51 வயதான சுலேகாவிற்கு*, ஊரடங்கு நேரத்தில் அவரது வங்கிக் கணக்கு செயல்படாததால், ஓய்வூதியத்தை பெற முடியவில்லை. ஜூலை மாதம், தி பன்யான் உதவியுடன் இதை சரிசெய்ய முடிந்தது. அவரைப் போலவே இன்னும் பலர் இருப்பார்கள் என்று மூத்த பணியாளர் சாக்கோ இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கேரளாவில், மற்ற நாள்பட்ட குறைபாடுகளைப் போலல்லாமல், மன நலக்குறைவோடு வாழும் மக்கள் பெரும்பாலும் மாற்றுத்திறன் குறைபாடு நிதிக்கான சான்றிதழை கோருவதில்லை என்று, மெஹாக்கின் வெங்கடேஸ்வரன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஏனெனில் "பெரும்பாலும் நபர் அல்லது அவர்களின் ஆலோசகர்கள் மன நலக்குறைபாடும் ஒரு மாற்றுத்திறன் என்பதை உணராததுதான். அதிகாரிகள் மத்தியில் கூட, மன நலம் குறித்த இதேகருத்துள்ளது" என்றார்.

கிராமப்புறங்களில், மாற்றுத்திறனாளிகளில் 25.8% பேர் மாதத்திற்கு சராசரியாக ரூ.2,117ஐ சுகாதார செலவினங்களுக்காகவும், நகர்ப்புறங்களில் 39.1% பேர் மாதம் ரூ.3,112ஐ செலவிட்டதாக என்எஸ்ஓ கணக்கெடுப்பு 2018 இல் கண்டறிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, மாற்றுத்திறன் உள்ள இந்தியர்களில் 29.4% பேர் சராசரியாக மாதத்திற்கு ரூ.2,477ஐ சொந்தபணத்தில் இருந்து செலவிட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழுக்கான மதிப்பீட்டு செயல்முறை உள்ளடக்கியது மற்றும் மனிதநேயமற்றது என்றும் சலேல்கர் கூறினார். சான்றிதழ் முறை மருத்துவத்தில் இருந்து சமூக இயலாமைக்கான மாற்றத்தை பிரதிபலிக்க வேண்டும், இது மக்கள் சமூகத்தில் உள்ள தடைகளால் முடக்கப்பட்டுள்ளது, அவர்களின் குறைபாட்டால் அல்ல என்று அவர் மேலும் கூறினார். என்எஸ்ஓ கணக்கெடுப்பு 2018 இல், இந்த வரையறை இணைத்துக்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறன் உடைய ஒரு நபர், "தடைகளை கடந்து தொடர்பு கொள்வது, மற்றவர்களுடன் சமமாக சமுதாயத்தில் தனது முழுமையான மற்றும் பயனுள்ள பங்கேற்பைத் தடுக்கிறது" என்று கூறினார். கணக்கெடுப்பில் தகவல் தொடர்பு, கலாச்சார, பொருளாதார, சுற்றுச்சூழல், நிறுவன, அரசியல், சமூக, அணுகுமுறை மற்றும் கட்டமைப்பு தடைகள் உள்ளன.

கொல்கத்தாவில், இலாப நோக்கற்ற அமைப்பான ஈஸ்வர் சங்கல்பா, மனநல பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறன் உதவித்தொகை வழங்கும் செயல்முறைக்கு உதவுகிறது. "மதிப்பீட்டு வாரியம் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் மட்டுமே அமர்ந்திருக்கும். கோவிட்-19 ஊரடங்கிற்கு பிறகு, இது அக்டோபர் வரை இடைநிறுத்தப்பட்டது," என்று, உதவி இயக்குனர் குஞ்சன் சந்தக் கெம்கா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

முழு செயல்முறையும் (சான்றிதழ், ஒப்புதல், ஓய்வூதியத்திற்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் உட்பட) நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம், அதன் பிறகும் பணம் உடனடியாக வரவில்லை என்று ஈஸ்வர் சங்கல்பா ஊழியர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

வீடற்ற தன்மை மற்றும் நீண்டகால நிறுவனமயமாக்கல்

மனவளர்ச்சி குன்றிய, அதிக ஆதரவு தேவைப்படும் மாற்றுத்திறனாளியான 22 வயதான பரோமிதா மொந்தோல்* பட்டியலின சாதியைச் சேர்ந்தவர். அவர் தனது தாய் ராணி*, 48 உடன் பிரெட்டி சுற்றுப்புறத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வசிக்கிறார். "[தத்தா] குடும்பத்திற்கு குறைந்த பட்சம் தங்கள் குழந்தைகளை வேலூருக்கு அழைத்துச் செல்ல முடிந்தது. பரோமிதா விஷயத்தில், அவரது குடும்பத்தால் அதைக் கற்பனை கூட செய்ய முடியாது" என்று ஜனமனாஸ் மைய ஆபரேட்டர் தியா தாஸ் கூறினார்.

ராணி, பிரெட்டி பகுதியில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்தார், மாதத்திற்கு ரூ.2,500 சம்பாதித்தார். அவரும், பல் மருத்துவரின் உதவியாளராக பணிபுரிந்த அவரது மூத்த மகள் சுக்தாரா* இருவரும் ஊரடங்கின் போது வேலை இழந்தனர். அவர்கள் சிறிய தேநீர் கடைகளை அமைத்து, இப்போது ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ரூ.150-200 சம்பாதிக்கிறார்கள்.

மருத்துவமனைக்குச் செல்லவோ அல்லது பரோமிடா தனது எல்லா மருந்துகளையும் வாங்கவோ அவர்களிடம் போதுமான பணம் இல்லை. மற்ற சுற்றுப்புறங்களில் வேலை செய்ய முடிந்தால் தான் அதிக பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் பரோமிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் பரோமிட்டாவை தனியாக விட்டுவிட முடியாது என்று ராணி கூறினார். மாற்றுத்திறன் உள்ள பெண்கள் மற்றும் சிறுமியர், இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு அதிக ஆபத்திற்குள்ளாகின்றனர். நீதி கிடைப்பதில் அதிக தடைகளையும் எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2018 ஆய்வு கண்டறிந்துள்ளது.

மார்ச் மாதத்தில் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து பரோமிதா தனது மாற்றுத்திறனாளிகலுக்காக தொகையை பெறவில்லை. "எனது வங்கி கணக்கு எனது தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்படவில்லை. ஒருவேளை அதனால்தானோ என்னவோ," என்றார் ராணி.

"ஆதார் அட்டை பெற வீட்டை விட்டு வெளியேற முடியாத மனவளர்ச்சி குன்றிய பலரையும் நாங்கள் சந்திக்கிறோம்," என்று தாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்."இந்த வகையான தேவை மாற்றுத்திறன் ஓய்வூதியம் போன்ற ஆதரவைப் பெறுவது மிகவும் கடினம்" என்றார்.

மனவளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் பரோமிதா தங்கியிருப்பது நல்லது என்று தாம் நினைத்ததாக, இந்தியா ஸ்பெண்டிடம் ராணி தெரிவித்தார்.மனநல குறைபாடு உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையிலான அமைப்புகளில் ஏன் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பதை இது பேசுகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து 43 பொது மனநல மருத்துவமனைகளையும் ஆய்வு செய்த தேசிய மனநல அறிக்கை (என்.எம்.எச்.ஆர்) 2019, நோயாளிகளில் 33.1% பேர், தங்களது குடும்பங்களால் நீண்டகால நிறுவனமயமாக்கலுக்கு கொண்டு வரப்பட்டதைக் கண்டறிந்தது. மேலும், 55.4% பேர் காவல்துறை அல்லது மாஜிஸ்திரேட்டுகளால் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களும் வீடற்றவர்களாக இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

என்.எச்.எம்.ஆர் 2019 இன் படி, மனநல மருத்துவமனை படுக்கைகளில் சுமார் 32% நீண்டகால பயனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, 36.25% உள்நோயாளிகள் குறைந்தது ஒரு வருடமாவது அங்கு வசித்து வந்தனர். ஆண்களை விட அதிகமாக பெண்கள் 54.3% என்றுள்ளனர். ஏறக்குறைய பாதி (48.8%) நிறுவனங்கள், ஒன்று முதல் ஐந்து வரை மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 11.4% பேர் வரை இருந்தனர். நீண்டகால பயனர்களின் சராசரி வயது 45 ஆண்டுகள்.

"வறுமை மற்றும் திறம்பட தொடர்ச்சியான கவனிப்பு இல்லாதது, குறிப்பாக மருத்துவ தேவைகள் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், நோயாளிகளின் நிறுவனமயமாக்கலுக்கு வழிவகுக்கிறது" என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

பிரெட்டியில் உள்ள குடும்பங்கள் இந்த ஆபத்து காரணிகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றன, ஆயினும், நிதி மற்றும் உளவியல் ரீதியான, மனநல சமூக ஊனமுற்றோருடன் கூடிய கூடுதல் அழுத்தங்களை போதுமான அளவில் தீர்க்கும் கொள்கை தலையீடுகள் மற்றும் அரசு திட்டங்களின் பற்றாக்குறை உள்ளது என்று, கிட்டத்தட்ட நாங்கள் பேசிய அனைத்து மாற்றுத்திறன் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளும் சுட்டிக்காட்டின

கவுரவ் குமார் பன்சால் 2016 இல் தாக்கல் செய்த பொது நலன் வழக்கு (பிஐஎல்) மனநல மருத்துவமனைகளில் நீண்டகாலமாக தங்கியிருப்பவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தி ஒன்றை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2017 தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தூண்டியது. ஒரு வருடம் கழித்து, உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவுக்கு இணங்காததால், அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

2020 ஜூன் மாதம், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை (கோவிட்-19 பரிசோதனை உட்பட) வழிகாட்டுதல்களுக்காக, பன்சால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மற்றொரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஆகஸ்டில், தேவையைத் தணிக்க டம்மி தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் அடையாளமாகும், "மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெற வேண்டும், ஆனால் வீடற்றவர்களாக இருப்பதால் அடையாள அட்டை இல்லை" என்று இந்தியா ஸ்பெண்டிடம் பன்சால் கூறினார். "அரசு இதை ஏன் தீர்க்கவில்லை?" என்று பன்சால் கேட்டார்.

சமூகம் சார்ந்த ஆதரவுவே முன்னோக்கிய பாதை

கொல்கத்தாவின் 60 வார்டுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்றவர்களுக்காக ஈஸ்வர் சங்கல்பா ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நபர்களை உள்ளூர் கடைகள் மற்றும் தபாக்களில் இருந்து சமூக ஆர்வலர்களை கொண்டு ஆதரிக்க முடியும், உதாரணமாக, நிறுவனமயமாக்கப்படுவதற்கு பதிலாக. "எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஊரடங்கு அறிவித்தபோது, மாற்றுத்திறன் உள்ள வீடற்ற மக்கள், வீதிகள் வெறிச்சோடியால் பிச்சை எடுத்து உண்ணக்கூட வழியில்லாமல் போனது. எல்லோரும் எங்கு சென்றார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கூட கடினம். அவர்களில் சிலர் [திடீரென மூடப்பட்ட] சிறிய உள்ளூர் இடங்களிலும் பணிபுரிந்து வந்தனர், இது அவர்களுக்கு உணவு, தண்ணீருக்கு உதவும் "என்று சந்தக் கெம்கா கூறினார். "அவர்கள் வீடற்றவர்களாக இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் அவர்கள் ஒருபோதும் தனியாக இருந்ததில்லை" என்றார்.

இவர்களில் சிலரை, கொல்கத்தா மாநகராட்சி நிர்வாகம், தங்குமிட விடுதிகளில் தங்க வைத்தது, ஆனால் இன்னும் பலர் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அலைந்து திரிந்தனர். "அவர்கள் தங்குமிடங்களிலோ அல்லது வசிப்பிடங்களில்லோ இருக்கிறார்களா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை" என்று சந்தக் கெம்கா கூறினார். "இந்த மக்களை சென்றடைய அரசு சிறந்த ஆதரவான பதிலை உருவாக்க வேண்டும்" என்றார்.


சுதந்திரமாக வாழ விரும்பும் மனநோயால் பாதிக்கப்பட்ட வீடற்றவர்களுக்கு, சமூக ஆர்வலர்களின் உதவியுடன், இலாப நோக்கற்ற ஈஸ்வர் சங்கல்பாவின் கொல்கத்தா அடிப்படையிலான திட்டமானது, கோவிட்-19 மற்றும் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டது. புகைப்படம் ஈஸ்வர் சங்கல்பா அமைப்பு வழங்கியது.

மெஹாக் அமைப்பின் சித்ரா வெங்கடேஸ்வரன், இதை ஒத்துக்கொண்டார். "மனிதாபிமான நெருக்கடியில் மோசமாகிவிடும் இந்த இடைவெளிகளை, நாம் ஏன் கொண்டிருக்கிறோம்? உணவுப் பொருட்கள் ஏன் தொடர்ந்து வழங்கப்படவில்லை? இயலாமை கொடுப்பனவு ஏன் போதாது? உள்ளூர் ஆளும் குழுக்கள் ஒரு நெருக்கடியின் போது மோசமாகிவிடுவதைப் பற்றி சிந்தித்து கற்றுக்கொள்ள வேண்டும். மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, இது மருத்துவ நிர்வாகத்தைப் பற்றி மட்டுமல்ல, மக்களின் நிலையான சமூக நலனைப் பற்றியது, அவர்கள் வழிநடத்தக்கூடிய வாழ்க்கைத் தரம் தொடர்பானது" என்றார்.

"மனநலம் தொடர்பான பட்ஜெட், நிர்ணயிக்கப்பட்ட சிறிய தொகையில் இருந்து கூட, பெரும்பாலானவை பொது மனநல மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்குச் செல்கின்றன, அவை இன்னும் புகலிடம் பெறும் வகையில் செயல்படுகின்றன" என்று டெல்லியில் உள்ள ஸ்னேஹி அறக்கட்டளையின் இயக்குனர் அப்துல் மபூத் கூறினார்.


மனவளர்ச்சி குன்றி வாழும் வீடற்ற பெண்களுக்கான ஈஸ்வர் சங்கல்பா அமைப்பின் சர்பாரி தங்குமிடம், ஆம்பன் புயலால் சேதமடைந்தது. மேற்கு வங்கத்தில், மாற்றுத்திறன் உள்ளவர்களை கோவிட்-19 தொற்று ஏற்கனவே நிதி நெருக்கடியில் மூழ்கடித்த நிலையில், புயல் அதை மேலும் அதிகரித்தது. புகைப்படம் ஈஸ்வர் சங்கல்பா அமைப்பு வழங்கியது.


மனச்சிதைவு நோயுடன் வசிக்கும் லோகி*, 40, கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் 2012 ல் குப்பைகளில் இருந்து பொறுக்கி உண்டு, தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்த போது, ஈஸ்வர் சங்கல்பா கள ஊழியர்களால் கண்டறியப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட பல வீடற்ற பெண்களில் ஒருவராக மாறுவதற்கு பதிலாக, பொது மனநல மருத்துவமனைக்கு காவல்துறையினர், அவரை அழைத்துச் சென்று, காலவரையின்றி நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்பில் சேர்க்கப்பட்டார். மனநல குறைபாடுகள் உள்ள வீடற்ற பெண்களுக்கான சர்பாரி தங்குமிடத்தில் வசித்த லோகி, விரைவாக குணமடைந்தார். அவர் தற்போது ஈஸ்வர் சங்கல்பா ஓட்டலில் பணிபுரிகிறார், பெரும்பாலும் தனது மகன்களுக்கு பணம் அனுப்புகிறார் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் சேமிப்புகளை உருவாக்கி இருக்கிறார்.


மனநல குறைபாடுகள் உள்ள பெண்கள், நிதி ரீதியாக சுயமாக இருக்க, ஈஸ்வர் சங்கல்பா அமைப்பின் க்ரஸ்ட் மற்றும் கோர் கபேயில் வேலை செய்கிறார்கள். புகைப்படம் ஈஸ்வர் சங்கல்பா வழங்கியது.

லோகி போன்ற பெண்களுக்கு, ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வாழ்க்கையை உறுதி செய்ய, சமூகத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளுக்கு அரசு கடமைப்பட வேண்டும், இதை பல்வேறு மாற்றுத்திறன் அமைப்புகள் செயல்படுத்தி காட்டியுள்ளதாக, சந்தக் கெம்கா கூறினார்.

சிஆர்பிடிக்கான கடமைகளை உண்மையிலேயே நிறைவேற்றுவதற்கு, அரசின் நடவடிக்கைகள் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மனநல குறைபாடுகள் உள்ளவர்களை கவனிப்பதில் உள்ள இடைவெளிகளில் பெற்ற படிப்பினைகளை இணைக்க வேண்டும் என்று மாபூட் கூறினார், மாற்றுத்திறனாளிகளுக்கான பொருளாதார அம்சங்களுக்கு ஒரு செயலூக்கமான அணுகுமுறையை வலுப்படுத்த வேண்டும்.

"மனவளர்ச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு நிதி உதவி செய்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு மனநல நிறுவனத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மாற்றுத்திறன் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர், ஆனால் வேறு எந்த ஆதரவும் இல்லாத ஒரு நபரை நிறுவனமயமாக்க தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறது. வெளியேற, உங்களுக்கு பணம் தேவை. வருமான உச்சவரம்பு பணியமர்த்தப்பட்ட நபர்களையும் தகுதி நீக்கம் செய்கிறது, எனவே மாற்றுத்திறன் ஓய்வூதியங்கள், குறைபாடுகள் உள்ளவர்களின் முழு மற்றும் பயனுள்ள பங்கேற்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக பல மாநிலங்களில் சிக்கலான திட்டங்கள் உள்ளன, இது மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்யும் நபர்களை ஊக்குவிக்கிறது," என்று சலேல்கர் கூறினார்.

ஐ.ஜி.என்.டி.பி.எஸ்ஸிற்கான வயது கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சக பணிக்குழு 2013ம் ஆண்டில் பரிந்துரைத்தது, மாற்றுத்திறன் நிலை 80%இல் இருந்து 40% ஆக குறைக்கப்பட்டு 80% குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஓய்வூதிய அளவு இரட்டிப்பாக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்தது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகும் கூட, இது எதுவும் நடக்கவில்லை.

பலருக்கு, லோகியை போலவே, சுய ஆதரவு மற்றும் நிதி வருவாய் நிலையானதாக மாறுவது என்பது, இன்னமும் கனவாகவே உள்ளது. ஜஹனாரா பிபி மற்றும் ஜலாலுதீன் காசி ஆகியோர் இந்தியாஸ்பெண்டிடம் கூறுகையில், ரிக்‌ஷாவை - ரூ .60,000க்கு குறையாமல் எட்டமுடியாது என்கிறார்கள் - சொந்தமாக தங்களுக்கு நிர்வகிக்க முடிந்தால், ஒருவேளை அவர்கள் தினமும் போராடுவதில் இருந்து நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

*தனியுரிமையைப் பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.