பண்டா, பாக்பத் மற்றும் பெங்களூரு: "எங்களுக்கு கிடைக்கக்கூடிய தரமான தண்ணீரை நாங்கள் குடிக்கிறோம்," என்று உத்தரபிரதேசத்தின் (உ.பி.) பண்டா மாவட்டத்தில் வசிக்கும் தலித் தொழிலாளி முன்னி தேவி கூறுகிறார். "இருந்தும் நாங்கள் நோய்வாய்ப்படுகிறோம், ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் ஏழைகள்" என்றார்.

ஆகஸ்ட் 15, 2019 அன்று, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு, ஜல் ஜீவன் மிஷன் (JJM) என்ற குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தது, இது 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் பயன்பாட்டில் உள்ள வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு (FHTC) வழங்கும், இதன் மூலம் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

"தாய், தங்கைகள் தண்ணீர் சுமையை தலையில் சுமந்து கொண்டு 2, 3, 5 கி.மீ. நடந்து, தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை தண்ணீர் பெறுவதற்காக போராடுவதில் செலவிடுகின்றனர், "என்று பிரதமர் நரேந்திர மோடி, 2019 இல் தனது சுதந்திர தின உரையில் கூறினார். "இந்த 'ஜல்-ஜீவன்' திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும். வரும் ஆண்டுகளில் இந்த பணிக்காக 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவோம் என உறுதியளித்துள்ளோம்" என்றார்.

முன்னிதேவிக்கு, அரசின் லட்சிய திட்டம் இருந்தபோதிலும், சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிரமம் தொடர்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பின்தங்கிய பந்தேல்கண்ட் பகுதியில் வசிக்கும் 40 வயதான அவர், சுத்தமான தண்ணீரை சேகரிப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வதில் தினமும் சில மணிநேரங்களைச் செலவிடுவதாக, ஏப்ரல் 2022 இல் அவர் வசிக்கும் கபர் லஹரியா கிராமத்திற்குச் சென்றபோது கூறினார். கடந்த ஐந்து மாதங்களில், நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ​​அரசின் ஜல் ஜீவன் மிஷ (JJM) தகவல் பலகையின்படி, இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் ஆறில் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19, 2022ஆம் ஆண்டுக்குள், மற்ற ஒவ்வொரு குடும்பமும் 36 சதவீத புள்ளிகள் அதிகரித்து புதிய இணைப்பைப் பெற்றுள்ளன. ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்--கோவா, ஹரியானா, தெலுங்கானா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ மற்றும் பஞ்சாப்--100% குடிநீர் இணைப்புகளைப் பதிவு செய்துள்ளன.

199.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், 99% வீடுகளில் அடிப்படை குடிநீர் சேவை இருப்பதாகவும், மேலும் பல குடும்பங்கள் மேம்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, 14% பேர் மட்டுமே தங்கள் குடியிருப்பு, முற்றம் அல்லது நிலத்தில் குழாய் மூலம் தண்ணீர் பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள நகர்ப்புற குடும்பங்கள், 36% திட்டத்தின் கீழ் உள்ளவை, இது கிராமப்புறங்களை விட (7%) குழாய் நீர் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிபுணர்கள் கூறுகையில், ஜல்ஜீவன் திட்டம் முக்கியமானது, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் மார்ச் 2022 இல் நடந்த மாநிலத் தேர்தல்களால் வேலை பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் உள்ளூர் மட்டத்தில் திட்டத்தைப் பற்றிய முடிவுகளை எடுப்பதில் சமூகம் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ளாட்சி சூழல், தண்ணீர் இருப்பு மற்றும் அதன் தரம் போன்றவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 19, 2022 அன்று அணுகப்பட்ட ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் தரவுகளின்படி, முன்னி தேவியின் கிராமமான பவையாவில் ஐந்தில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள், அந்த 781 குடும்பங்களில் ஒன்றுகூட குழாய் இணைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. முன்னி தேவி கூறுகையில், "திட்டத்தைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்க யாரும் இங்கு வரவில்லை. இந்தத் திட்டத்தின் மூலம் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று மோடிஜி கூறியதை டிவி மூலம் நாங்கள் அறிந்தோம்" என்றார்.

கபர் லஹரியா மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆகியவை (உ.பி.யில் 48% அதிக குழாய் இணைப்புகளை கொண்ட) பாக்பத்தில் மற்றும் மாநில சராசரியைப் போலவே 17% வீட்டு குழாய் இணைப்புகளைக் கொண்ட பண்டாவில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கின்றன.

பலர் இன்னும் ஒரேயொரு நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள், அது கை பம்ப்


ஏப்ரல் 2022 இல் புகைப்படம் எடுக்கப்பட்ட மாயா தேவி, பாம்னாலியில் செங்கல் சூளைத் தொழிலாளி. அவரது வீட்டில் குழாய் இணைப்பு இல்லை, எனவே, கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கிறார்.

டெல்லியில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பாக்பத்தின் வடமேற்கு மாவட்டத்தில் உள்ள பாம்னாலியில், தலித் செங்கல் சூளைத் தொழிலாளியான மாயா தேவி, பல தசாப்தங்களாக தண்ணீரின் தரத்தில் எந்த மாற்றத்தையும் காணவில்லை. "வேறு வழியின்றி, தண்ணீரை உட்கொள்வதற்கு முன்பு நாங்கள் அதை வடிகட்ட வேண்டும்," என்று மாயா தேவி கூறினார். "அடிக்கடி, தண்ணீர் அழுக்காக இருக்கிறது மற்றும் அதில் சிறிய பூச்சிகள் மிதக்கின்றன" என்றார்.

மாயா தனது ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்காக பிளாஸ்டிக் கொள்கலன்களில் தண்ணீரை சேமித்து வைக்கிறார். கபர் லஹரியா, தனது வீட்டிற்குச் சென்றபோது தண்ணீர் மூன்று நாட்கள் பழையது, தூசி மற்றும் அசுத்தங்கள் ஆகியவற்றின் மெல்லிய படலத்துடன் இருந்தது. "நாங்கள் இதையே குடிக்க வேண்டும் என்பதால் அவ்வப்போது நோய்வாய்ப்படுகிறோம் - என் குடும்பத்தில் மூன்று பேர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். ஆனால் நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை, ஏனென்றால் நாங்கள் ஏழைகள்," என்று மாயா தேவி கூறினார்.

தேசிய நீர் வழங்கல் திட்டம் தொடங்கப்பட்ட 1954 ஆம் ஆண்டு முதல் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் ஒரு பகுதியாக நீர் வழங்கல் திட்டங்கள் உள்ளன. பல தசாப்தங்களாக, 2009-10ல் தேசிய ஊரக குடிநீர் திட்டம் (NRDWP) உட்பட, நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, இது இப்போது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2017 வரையான ரூ.89,956 கோடியில் ($11.5 பில்லியன்) 90% செலவழித்த பிறகும், தேசிய ஊரக குடிநீர் திட்டம் (NRDWP) அதன் இலக்குகளை எட்டாமல் "தோல்வியடைந்தது" என்று, நவம்பர் 2018 இல், அரசு தணிக்கையாளரின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவின் கிராமப்புறக் குடும்பங்களில் சுமார் 43% குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக கைப் பம்புகளை மட்டுமே நம்பியிருந்தனர் என்று, ஜூலை மற்றும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (NSSO), இந்தியாவில் குடிநீர், சுகாதாரம், சுகாதாரம் மற்றும் வீட்டு நிலைமை அறிக்கை தெரிவித்தது.

உத்தரப்பிரதேசத்தில் 88% கிராமப்புற குடும்பங்கள் குடிநீருக்காக கைப்பம்புகளை நம்பியிருந்தன, மேலும் 3% வீடுகளில் அல்லது தங்கள் நிலத்தில் குழாய் மூலம் குடிநீர் ஆதாரத்தை வைத்துள்ளனர் என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (NSSO) அறிக்கை கூறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 82% கிராமப்புறக் குடும்பங்கள், குடிநீரின் முக்கிய ஆதாரமாக கை பம்புகளையே பயன்படுத்துகின்றன, அவர்களுக்கு வேறு துணை நீர் ஆதாரம் எதுவும் இல்லை. இந்த விகிதம் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக, கிராமப்புற உத்தரப்பிரதேசத்தில் 94% ஆக உயர்ந்தது. இந்தியா ஸ்பெண்ட் மற்றும் கபர் லஹரியா ஆகியன, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அரசின் நமாமி கங்கே மற்றும் ஊரக நீர் வழங்கல் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை, ஜல்ஜீவன் மிஷன் திட்ட முன்னேற்றம், தரவு தொடர்பான தெளிவுபடுத்தல்கள் மற்றும் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய கருத்துகளுக்காகத் தொடர்பு கொண்டன. அவர்களிடம் இருந்து பதில் கிடைத்ததும் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

முற்போக்கான திட்டம், ஆனால் 2024 காலக்கெடுவை அடைவது கடினம்

ஜல்ஜீவன் மிஷன் என்பது ஒரு முற்போக்கான நீர் வழங்கல் திட்டமாகும், ஏனெனில் இது நீரின் தரம், பங்கேற்பு மேலாண்மை மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது பற்றி பேசுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு என்ற காலக்கெடு, நெருக்கடியை தருகிறது, மேலும் நிதி ரீதியாக பெரும்பாலான மாநிலங்கள் 50% நிதியை திரட்ட வேண்டும் என்று இந்திய இயற்கை வள பொருளாதாரம் மற்றும் மேலாண்மை (INREM) அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் கிருஷ்ணன் கூறினார். "இது சிக்கலானது, மாநில அளவில் தொற்றுநோய் மற்றும் நிர்வாக சவால்கள், மனித வளங்களை பணியமர்த்துதல், சிவில் சமூக அமைப்புகளை [ஈடுபடுதல்] மற்றும் திறன் மேம்பாடு போன்றவை அடங்கும்" என்றார்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டம், நிதி பகிர்தல் மற்றும் தண்ணீரின் தரம், மொத்த நீர் பரிமாற்றங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் குடிநீர் என்றளவில் தனிநபர்களுக்கான குழாய் இணைப்புகளை வழங்குவதற்கான முடிக்கப்பட்ட மற்றும் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை மறுசீரமைத்தல் (lpcd) உட்பட பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளது. அதன்படி தண்ணீர் தர மேலாண்மை மற்றும் கண்காணிப்பு, பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்படும்.

"இந்தியாவின் பல பகுதிகளில் இந்த பணி மிகவும் பிரபலமாக உள்ளது, ஆனால் பணியின் நிலைத்தன்மை, சமூகங்களின் ஈடுபாடு மற்றும் வழங்கப்பட்ட நீரின் தரம் பற்றிய கேள்விகள் உள்ளன" என்று, அக்கவுண்டபிள் இனிஷியேடிவ் (Accountability Initiative) முன்முயற்சியின் மூத்த ஆராய்ச்சி கூட்டாளியான நீஹா சூசன் ஜேக்கப் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் அளவு, மக்கள்தொகை மற்றும் நீர் இருப்பில் உள்ள பிராந்திய மாறுபாடுகள் அனைத்தும் திட்டத்தினை செயல்படுத்துவதில் கடும் சவால்களை முன்வைக்கின்றன, மேலும் மேற்கு உ.பி. மற்றும் புந்தல்கண்ட் பகுதிகள் வெவ்வேறு சவால்களைக் கொண்டுள்ளன என்றார் வி.கே. மாதவன், இவர் லாப நோக்கமற்ற வாட்டர் எய்ட் இந்தியாவின் தலைமை நிர்வாகி. "அவர்களின் ஒவ்வொரு சுற்றுச்சூழல் மண்டலத்திற்கும் வெவ்வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை" என்றார்.


பாவையாவில் உள்ள கைப்பம்பு, சுத்தம் செய்வதற்கும், துவைப்பதற்கும் மட்டுமே பயன்படுகிறது. சுத்திகரிக்கப்படாத மற்றும் உப்புள்ள தண்ணீர் எனப்தால் இதனை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாது.


குழாய் இணைப்புகளுக்கு தண்ணீர் கிடைக்குமா?

ஜல்ஜீவன் மிஷன் திட்டம், ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்தது 55 எல்பிசிடி--கிட்டத்தட்ட மூன்று வாளிகள் தண்ணீரை வழங்குவதாக உறுதியளிக்கிறது. அரசு வழிகாட்டுதல்களின்படி, 55 மற்றும் 40 எல்பிசிடி (lpcd) க்கு இடையில் ஒரு பகுதி செயல்பாட்டு இணைப்பாகக் கருதப்படுகிறது, மேலும் 40 எல்பிசிடி- க்கும் குறைவானது செயல்படாத இணைப்பாகும்.


வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பின் மாதவன் கூறுகையில், "வீட்டு அளவில் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு வழங்குவது ஒப்பீட்டளவில் எளிதானது. "ஆனால் நீரின் ஆதாரம் நிலையானது என்பதையும், நீர் அசுத்தங்களிலிருந்து பாதுகாப்பானது என்பதையும், செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதற்கான வலுவான வழிமுறைகள் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடாக இந்தியா உள்ளது, மேலும் நிலத்தடி நீர் உறிஞ்சும் முறைதான் குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.

சமச்சீர் நீர் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்பாடு, நீரின் தரத்தை கண்காணித்தல் மற்றும் சுத்திகரிப்பு, ஆழமற்ற மற்றும் ஆழமான நீர்நிலைகளை ரீசார்ஜ் செய்தல், நீர்ப்பிடிப்பு பகுதி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை போன்ற 'ஆதார நிலைத்தன்மையை' இணைப்பது அவசியம் என்று, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் மேலாளர் (நிரல்கள்) கார்த்திக் சேஷன் கூறினார். "இந்த நடைமுறைகள் இல்லாத நிலையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் குழாய்களை உறுதி செய்ய முடியும், ஆனால் தேவையான அளவு பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நீர் விநியோகத்தில் சமத்துவம் இல்லாமல். லட்சியத் திட்டம் ஹர் கர் ஜல் திட்டம் இல்லாமல் ஹர் கர் நலல் திட்டத்தை உறுதி செய்யும் அபாயம் உள்ளது" என்றார்.

பாவையாவிலிருந்து வடகிழக்கே 50 கிமீ தொலைவில், யமுனை நதிக்கு அருகில் உள்ள பண்டாவின் கட்டான் ஒன்றியத்தில், ஜல்ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 11 கி.மீ தொலைவில் உள்ள கிடஹாய் என்ற இடத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்திகரிக்கப்பட்ட பிறகு குறைந்தது 121 கிராமங்களுக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் மாற்றப்பட உள்ளது.


யமுனை நதியில் இருந்து பண்டாவில் உள்ள 121 கிராமங்களுக்கு தண்ணீரை சுத்திகரித்து கொண்டு செல்வதற்கான கட்டுமானப்பணி நடக்கிறது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப்படுவதற்கு முன், இங்கு சுத்திகரிக்கப்படும்.

யமுனை நதியில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று, கத்தான் நீர் திட்டத்தின் தர மேலாளர் ராஜீவ் விபூதி கூறினார். "இங்குள்ள யமுனை நதியின் நீர் குடிப்பதற்கும், தரமானதாகவும் உள்ளது, தரமற்றது மற்றும் குடிக்க முடியாத டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் போலல்லாமல் உள்ளது" என்றார்.

தற்போது, ​​இந்த தொழில்நுட்ப நுணுக்கங்கள் எதிர்பார்க்கப்படும் பயனாளிகளுக்கு, குறிப்பாக தண்ணீர் எடுப்பதற்கும், தலையில் சுமந்து வரும் பெண்களின் விகிதாச்சாரத்தில் பெரிதாகப் பொருந்தவில்லை.

கிராமத்தில் நிறுவப்பட்ட சோலார் பம்ப் வேலை செய்யும் என்று நம்பி ஒவ்வொரு மதியமும் முன்னி தேவி, சில மணிநேரங்களைச் செலவிடுகிறார், அதனால் அவர்கள் தண்ணீரை சேகரிக்க முடியும். "இது வேலை செய்வதை நிறுத்தியதும், நாங்கள் கைப்பம்பிலிருந்து உப்பு நீரை சமாளிக்க வேண்டும், மேலும் கூடுதல் தேவைகளுக்கு மக்கள் தனியார் டேங்கர்களைப் பெற வேண்டும்" என்றார்.

மாயா தேவியின் அனுபவமும் அவ்வாறே கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டில் பொருத்தப்பட்ட குழாய் வேலை செய்யாததால், 12 மணி நேர சிரமத்திற்குப் பிறகு, கிராமத்தில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "சில காரணங்களுக்காக, எங்களது வீட்டில் அதிகம் பேர் இருந்தால் அல்லது வீட்டில் ஒரு விழா இருந்தால், நாங்கள் சுத்தமான குடிநீருக்கு 500-1,000 ரூபாய் செலவழிக்கிறோம்," என்று மாயா தேவி கூறினார்.

கிராம பிரதிநிதிகள், குழாய்களை பராமரிக்காததால், கசிவு ஏற்பட்டு, நீர் இருப்பு பாதிக்கப்படுகிறது என, புகார் தெரிவிக்கின்றனர்.

"ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வரும் புதிய திட்டங்களின் கீழ் பணிகளை முடிக்க செப்டம்பர் 2022 எங்கள் இலக்கு" என்று, ஜல் நிகம் திட்ட பொறியாளர் ராஜேந்திர சிங் பண்டா கூறினார். அந்தந்த கிராமங்களில் தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கும் வகையில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, கிராம பஞ்சாயத்துகள் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அடிப்படை பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்வது, மோட்டார் இயக்குவது எப்படி என்பது குறித்து கல்வியறிவு உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜல் சக்திக்கான மாநில அமைச்சரும், பண்டாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான ராம்கேஷ் நிஷாதையும், கபர் லஹரியா அணுகிய நிலையில், அவரிடம் இருந்து பதில் கிடைத்ததும் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

தவறுகளை கடந்து ஜல்ஜீவன் மிஷன் மெதுவான செயலாக்கம்

கிட்டத்தட்ட 12,000 மக்கள்தொகை கொண்ட பாக்பத்தின் பாம்னௌலியில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் பிரதானின் (பஞ்சாயத் தலைவர்) அலுவலகத்தின் முதன்மைப் பிரதிநிதி அஜய் குமார் தோமர் கூறுகிறார். பெரும்பாலான வீடுகளுக்கு இன்னும் குழாய் நீர் கிடைப்பதில்லை, குறிப்பாக மாயாதேவி போன்ற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு.

1980ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலம், ஒரு சில வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக இடையூறுகள் ஏற்பட்டுள்ளன, சுமார் 70% வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லை என்று தோமர் கூறுகிறார். முறையாக குடிநீர் இணைப்புகள் இல்லாதது குறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இதையும் மீறி, இது 100%, வீடுகளுக்கு நேரடி குடிநீர் இணைப்பு என்று யாராவது சொன்னால், அது பொய். பணிகளை முடிக்க அரசு விரும்பினாலும், அதிகாரிகளால் அதை செய்ய முடியவில்லை.

தோமர் மேலும் கூறுகையில், முந்தைய உள்ளாட்சி ஆட்சியின் போது அமைக்கப்பட்ட குழாய்களில் பல கசிவுகள் மோசமான தரம் வாய்ந்தவை. பலமுறை புகார் அளித்தும், ஒரு சில மட்டுமே சரி செய்யப்பட்டுள்ளது. மூன்று பெரிய கசிவுகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் சரி செய்யப்பட்டு, ஒவ்வொரு பழுதுக்கும் ரூ.5000 வசூலிக்கப்பட்டது என்றார்.

ஏப்ரல் 2022 வரை பாக்பத்தில் ஜல் நிகாமின் நிர்வாகப் பொறியியலாளராக இருந்த அவினாஷ் குப்தா, உள்கட்டமைப்புகளை பராமரிக்கவும், பழைய குழாய்களை சரிசெய்யவும் பஞ்சாயத்துக்கு பொறுப்பு உள்ளது என்றார். ஜல்ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் மட்டும் துவங்கி, பணிகள் எதுவும் முடிக்கப்படவில்லை, ஆனால், சில கிராமங்களில் விரைவில் குடிநீர் வினியோகம் துவங்கும் என்றார்.

பாக்பத்தில் உள்ள 205 கிராமங்களில் 27ல், பழைய குழாய்கள், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் மீண்டும் பதிக்கப்படும் அல்லது மாற்றப்படும். மீதமுள்ள, 178 கிராமங்களில், 84ல் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 70ல் குழாய் பதித்தல் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் துவங்கியுள்ளன. "தற்போது, ​​நாங்கள் பம்ப்ஹவுஸ் மற்றும் விநியோகத்தில் வேலை செய்கிறோம், மேலும் தொட்டி வடிவமைப்புகள் வரத் தொடங்கியுள்ளன," என்று குப்தா கூறினார். "ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 40 கிராமங்களுக்கு குழாய் பதித்து தண்ணீர் வழங்குவதைத் தொடங்குவதே எங்களின் முன்னுரிமை" என்றார்.

ஆனால், களத்தில் என்னவென்றால் குடியிருப்புவாசிகளுக்கு இத்திட்டம் குறித்து தெரியவில்லை. கபர் லஹரியா விஜயம் செய்த பாக்பத்தில், நிதி வசதியுள்ள சமூகங்களில், வீடுகளுக்கு சொந்தநீர் ஆதாரம் இருந்ததால், நீர்மூழ்கி பம்புகள் தண்ணீரை பம்ப் செய்ய பணம் இருந்ததால் இந்தத் திட்டத்தைப் பற்றி அலட்சியமாக இருந்தனர்.

ஜல்ஜீவன் மிஷன் இயக்க திட்டம் பற்றி சமூகங்களுக்குத் தெரிவிக்கும் அமலாக்க ஆதரவு முகமைகள் (ஐஎஸ்ஏக்கள்) மூலம் மக்கள் பங்கேற்பதை நிர்வாகம் ஊக்குவித்து வருவதாக குப்தா கூறினார். ஆனால், ஐ.எஸ்.ஏ-களுக்கு வரம்புகள் உள்ளன மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த தினசரி அடிப்படையில் கிராமங்களுக்குச் செல்ல முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வீட்டுக் குழாய் நீர் இணைப்புகளைப் பெறாத பிற மாநிலங்களிலும், குழாய் நீர் இணைப்புகளை விரும்பத்தக்கதாக மாற்ற, ஒரு நிலையான பிரச்சாரம் தேவை என்று மாதவன் கூறினார்.

குறைந்த செலவில் மற்றும் போதுமான நிதி ஒதுக்கீடு

மத்திய அரசு, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு ரூ. 3.6 லட்சம் கோடியை அறிவித்தது, மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிதிப் பகிர்வு, திட்டத்தின் கூறுகளின் அடிப்படையில் மாறுபடும். வடகிழக்கு மாநிலங்களில் 90% நிதிச் செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்றாலும், மாநிலங்கள் 50% நிதியைத் தாங்களாகவே திரட்ட வேண்டும். 2022-23 பட்ஜெட்டில், அரசாங்கம் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கியது, இது 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை விட 33% அதிகமாகும்.

ஆனால் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் கோரிக்கையான ரூ.91,258 கோடியில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று, ஜல் சக்தி அமைச்சகத்தின் மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த நீர்வளங்களுக்கான மக்களவை நிலைக்குழுவின் பதினாறாவது அறிக்கை கூறுகிறது.

ஜல்ஜீவன் மிஷன் இயக்கத் திட்டத்தின் நிதித்தரவு அறிக்கை 2021-22 க்கு ரூ. 92,309 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதேநேரத்தில் பட்ஜெட்டில் ரூ. 45,011 கோடி மதிப்பீட்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் குறிப்பிடுகிறது, இது ஒரு முரண்பாட்டை நாங்கள் அரசிடம் கேட்டுள்ளோம், மேலும் அவர்கள் பதிலளிக்கும் போது இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

மேலும், 2021 ஆம் ஆண்டில், ரூ.92,309 கோடியில் 43% மட்டுமே மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது, மேலும் இந்தத் திட்டம் ரூ.19,000 கோடிக்கும் அதிகமான செலவழிக்கப்படாத நிதியைப் பதிவுசெய்துள்ளது--பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிக்கும் பணிக்கான பட்ஜெட்டை விட ஆறு மடங்கு அதிகம். 2021-22 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் பாதியை உத்தரப் பிரதேசம் செலவழித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன் பரிந்துரையில், நீர் வளங்கள் மீதான நிலைக்குழு, "ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விரைவாகப் பயன்படுத்துவதற்குத் துறையை வலியுறுத்துவதாகக் கூறியது, இதனால் அவர்கள் திருத்தப்பட்ட மதிப்பீடு [RE] கட்டத்தில் கூடுதல் நிதியைக் கேட்பதற்கு போதுமான நியாயம் உள்ளது".

2022 ஆம் ஆண்டு மே மாதம் சித்தார்த் சந்தோஷ் & நீஹா ஜேக்கப் கணக்கியல் முன்முயற்சியின் பகுப்பாய்வின்படி, பல்வேறு காரணங்களுக்காக செலவினங்களில் தாமதங்கள் ஏற்படுகின்றன. மாநிலங்கள் நிதிப் பயன்பாட்டுச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் தாமதம், அல்லது முந்தைய நிதியாண்டிலிருந்து மாநிலங்கள் அதிக தொடக்க நிலுவைகளை வைத்திருந்தால், அல்லது மாநிலங்களுக்கு சொந்தமாக குடிநீர் விநியோகத் திட்டங்கள் இருந்தால் இதில் அடங்கும்.

உதாரணமாக, 46,000 கோடி ரூபாய், பாகிரதி திட்டத்தின் கொண்டுள்ள தெலுங்கானாவில், குடிநீர் வழங்குவது, நிதி திரும்பப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது ஆகியவை ஒரு பெரிய நீர் வழங்கல் திட்டத்திற்கு மாநிலத்தின் சொந்த ஒதுக்கீடு காரணமாக சிக்லாகிறது. 100% பயன்பாட்டில் உள்ள வீட்டு குடிநீர் குழாய் இணைப்பை (FHTC) தெரிவிக்கும் சில மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும். 2021-22 ஆம் ஆண்டில், தெலுங்கானா "மத்தியத்தால் ஒதுக்கப்பட்ட எந்த நிதியையும் திரும்பப் பெறவில்லை" என்று அக்கவுண்டபிள் இனிஷியேடிவ் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. மிஷன் பகீரதாவுக்கான மாநிலத்தின் நிதியானது ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற நிகழ்வுகள் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நிதி வழங்கல் மற்றும் பயன்பாட்டில் தாமதங்களை அதிகரிக்கலாம் என்றும் பகுப்பாய்வு கூறியது.

லோக்சபா குழு "குறைவாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு திகைத்தது", மேலும் நிதி ஒழுக்கம் மற்றும் விவேகமின்மை போன்றவை, "இலக்கு வைக்கப்பட்ட பயனாளிகளின் வீடுகளில் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீருக்கான அணுகலை சந்தேகத்திற்கு இடமின்றி இழக்கும்" என்று கவலையைத் தெரிவித்தது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.