மும்பை: இந்தியா நிர்வாக அறிக்கை என்ற எங்கள் பகுதி, கொள்கை மற்றும் நிர்வாக பிரச்சினைகள் குறித்த விவாதத்தை விரிவுபடுத்துதல், ஆழப்படுத்துவதை நோக்கமாக கொண்ட, நாங்கள் நிர்வகித்த நிரல்கள் மற்றும் செயல்பட்ட திட்டங்கள் இடம் பெறுகின்றன. 2019 ஆம் ஆண்டில் எங்களது சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு பற்றிய பார்வை, இங்கே.

தாய்ப்பால் உரிமை: ஸ்ரீராம்பூர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து எப்படி தப்புகிறார்கள்?

சவால்: இந்தியாவில், ஆறு மாத வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 55% பேருக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டபடி பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. போதிய தாய்ப்பால் இல்லாமை விகிதங்கள் ஆண்டுதோறும் சுமார் 22 லட்சம் கோடி (302 பில்லியன் டாலர்) பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. இது உலகின் மொத்த தேசிய வருமானத்தில் 0.49%-ஐ குறிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு மேற்கோள் தெரிவித்துள்ளது. தாய்ப்பால் முதலீடு கணிசமாக குறைவாக உள்ள உலகின் ஐந்து பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் உள்ளது. இதனால் குழந்தை இறப்பு மற்றும் தாய்ப்பால் இல்லாததால் ஏற்படும் அறிவாற்றல் இழப்பு காரணமாக ஆண்டுக்கு 99,000 கோடி ரூபாய் (14 பில்லியன் டாலர்) பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆகஸ்ட் 3, 2017 செய்தி தெரிவித்திருந்தது.

நடவடிக்கை: மகாராஷ்டிராவின் ஸ்ரீராம்பூரில் உள்ள ஸ்ரீமதி மாலதி தஹானுகர் டிரஸ்ட், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்க உள்ளூர் சூப்பர்ஃபுட்களுடன் பயனுள்ள தாய்ப்பால் நுட்பங்களை இணைக்கிறது. இந்த திட்டம் இரண்டு வயதுக்குட்பட்ட 1,800 குழந்தைகளுக்கும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான 1,580 குழந்தைகளுக்கும் உதவியுள்ளது. இது 500 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், மூன்று செவிலியர்கள் மற்றும் இரண்டு கள அலுவலர்கள் உட்பட எட்டு பேர் கொண்ட குழு, எடை அளவு, வளர்ச்சி விளக்கப்படங்கள், பொம்மைகள் மற்றும் கற்பித்தல் மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டு வெவ்வேறு மையங்களுக்குச் செல்கிறது. இத்திட்டம் முக்கிய கவனம் செலுத்துவது, வாழ்க்கையின் முதல் 1,000 நாட்கள் - கருத்தரித்தல் முதல் சுமார் இரண்டு வயது வரை.

புலம்பெயர்ந்த குழந்தைகள் பள்ளியில் சேர கேரளாவின் ஒரு மாவட்டம் எவ்வாறு உதவுகிறது '

சவால்: இந்தியாவின் ஏழு நகரங்களில் -டெல்லி, சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், குவஹாத்தி, பாட்னா மற்றும் போபால்- பருவகால புலம்பெயர்ந்த குழந்தைகளில் சுமார் 80% பேருக்கு, தங்கள் பெற்றோர் வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கிடைப்பதில்லை; மேலும் 40% பேர் வேலைக்கு சென்று அத்துமீறல் மற்றும் சுரண்டலை அனுபவித்துள்ளனர் என்று யுனிசெப்பின் 2019 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை தெரிவித்தது. கேரளாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மேற்கு வங்கம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%) மற்றும் உத்தரபிரதேசம் (14.83%) ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று 2013 ஆய்வு கூறியது. பெரும்பாலும், உள்ளூர் மொழியான மலையாளத்தை புரிந்து கொள்ள இயலாததால், புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்க வேண்டியிருக்கிறது. இது அவர்களின் உயர் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான எதிர்கால வாய்ப்புகளை பாதிக்கிறது.

நடவடிக்கை: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் மலையாளத்தை கற்பிப்பதன் மூலம் புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி இடைவெளியைக் குறைக்க உதவும் வகையில் 2017இல் ரோஷ்னி என்ற திட்டத்தை ஆரம்பித்தது.மலையாளம் தெரிந்த பிற மொழி பேச்சாளர்கள் உட்பட 38 தன்னார்வலர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மலையாளத்தை கற்பிப்பதன் மூலம் தங்களின் பல தரப்பட்ட மொழி வாயிலாக கற்க உதவுகிறது. மாநில அரசின் கல்வி இணையதளமான சமக்ரா ஷிக்ஷாவின் கேரள மாவட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு, ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் பள்ளியில் இருந்து விலகிய 150-200 புலம்பெயர்ந்த குழந்தைகளை அடையாளம் கண்டது. இதனால், 2018-19ல் 20 பள்ளிகளில் பள்ளிப் படிப்பை கைவிடுவோ எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதி (48%) குறைத்து, 65 ஆனது.

இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக மாறியது எப்படி (மற்றவர்கள் எவ்வாறு பின்பற்றலாம்)

சவால்: வரும் 2050 வாக்கில், உலகம் ஆண்டுதோறும் 340 கோடி டன் கழிவுகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது உற்பத்தியாகும் (210 கோடி டன்) கழிவை விட கிட்டத்தட்ட 1.7 மடங்கு அதிகம். செப்டம்பர் 2018 உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியா தற்போதைய உற்பத்தி செய்யும் (543,200 டன்களுக்கு மேல்) திடக்கழிவுகளில் 3.5 மடங்கு கூடுதலாக இருக்கும். 2016-17 ஆம் ஆண்டில், உள்ளாட்சி அமைப்புகள் 90% திடக்கழிவுகளை சேகரித்தன; ஆனால் அவற்றில் 80% சுத்திகரிக்கப்படவில்லை. அரசின் 2018 தூய்மை கணக்கெடுப்பின்படி, 471 நகரங்களில் 10% மட்டுமே வீட்டு கழிவுகள் பிரிக்கப்படுகிறது 14% வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கப்படுகிறது.

நடவடிக்கை: அரசின் தூய்மை கணக்கெடுப்பின்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரமாக மாற முடிந்திருக்கிறது. இந்தூர் மாநகராட்சி மற்ற நகரங்கள் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது - குப்பைகள் 100% வீட்டு கழிவுகளில் இருந்தே பிரிக்கப்படுவதை உறுதி செய்தது; கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. நகரின் நோக்கம் தினசரி கழிவுகளை குறைத்து 1,500 மெட்ரிக் டன்னில் வைத்திருப்பது, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய உணவு கழிவுகளை குறைப்பது என்பதாகும். இந்தூர் மூலதன முதலீட்டில் 180 கோடி ரூபாய் சம்பாதித்ததுடன், திடக்கழிவு மேலாண்மைக்காக 2017-18 ஆம் ஆண்டில் ரூ .155 கோடியை அதன் செயல்பாடுகளுக்கு செலவிட்டது. இந்தூர் மூலதன முதலீட்டில் ரூ.180 கோடி செய்தது; மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்காக 2017-18 ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளுக்கு ரூ.155 கோடி செலவிட்டது.

தாய்-சேய் நலன் காக்க சான்று பெற்ற மகப்பேறு பணியாளர்களின் புதிய படையுடன் ஆயத்தமாகும் இந்தியா

சவால்: 2016 வரையிலான தசாப்தத்தில், சிசேரியன் பிரசவ விகிதம் 9% முதல் 18.5% வரை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 20, 2018 கட்டுரை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி, உலகளவில் 10-15% என்பதே "சிறந்த விகிதம்" என்று கருதப்படுகிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2015-2016) படி, தெலுங்கானாவில் நாட்டில் அதிக அளவில் சிசேரியன் பிறப்பு உள்ளது, தனியாரில் 74.9% மற்றும் அரசு மருத்துவமனைகளில் 40.3% ஆகும். தவிர்க்கக்கூடிய அறுவை சிகிச்சை முறைகள் தாய் மற்றும் குழந்தை மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்; அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மீட்பு மெதுவாக்கலாம் மற்றும் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஆனால் திறமையான செவிலியர் ஒரு தீர்வாக இருக்கும். உலகளவில், செவிலியர் உயிரைக் காப்பாற்றுவதற்கும், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் அறியப்படுகிறார்கள் - தாய் மற்றும் புதிதாகப் பிறந்த இறப்புகளில் 83% செவிலியர் பராமரிப்பு மூலம் தவிர்க்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தரவு காட்டுகிறது. செவிலியர் சேவைகள் குறித்த முதல் வழிகாட்டுதல்களை அறிவித்ததன் மூலம், தாய் மற்றும் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துவதற்காக புதிய செவிலியர் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கவும், தேவையற்ற சிசேரியன் பிரசவங்களைத் தடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது.

நடவடிக்கை: போதுமான மகப்பேறியல் நிபுணர்கள் இல்லாத அதிக சுமை கொண்ட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிகளுக்கு உடவும் பொருட்டு, தெலுங்கானா அரசு 2017 அக்டோபர் மாதம், இந்தியாவின் முதல் தாதியர் படிப்பை கரீம்நகர் மாவட்டத்தில் தொடங்கியது; இது குழந்தை மற்றும் தாய் ஆரோக்கியம் தொடர்பான இந்தியாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. அறுவைசிகிச்சை பிறப்பு விகிதங்கள் அதிகம் உள்ள இந்த மாநிலத்தில், கரிமநகர் மட்டுமே 80% சிசேரியன் பிறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இக்கட்டுரை வெளியாகும் நேரத்தில், இந்த முதன்மை திட்டத்தில் 2019 நடுப்பகுதியில் 30 செவிலியர் பட்டதாரிகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கு நிதி அளித்தால் தரமான சுகாதார சேவைக்கு நடமாடும் மருத்துவ அலகுகள் அணுகலை மேம்படுத்தலாம்

சவால்: சுகாதார அணுகல் மற்றும் தரம் அடிப்படையில் 195 நாடுகளின் பட்டியலில் இந்தியா 145 வது இடத்தில் உள்ளது. குடிமக்களின் பொது சுகாதார அமைப்பில் மருத்துவர்களை அணுகுவதற்கான முதல் புள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான். சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தில் மேம்பாடுகள் இருந்தபோதிலும், பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை (பிரிக்ஸ் நாடுகள்) விட இந்தியா பின்தங்கியிருக்கிறது. தேசிய சுகாதார இயக்கம் நடமாடும் மருத்துவ அலகுகளை (எம்.எம்.யு) அறிமுகம் செய்தது. தொலைதூர மற்றும் குறைந்த தூர பகுதிகளுக்கு சுகாதார வசதிகளை கொண்டு வருவதற்காக 10 லட்சம் பேருக்கு ஒரு அலகு வேண்டும்; இது ஒரு மாவட்டத்திற்கு 5 என்பதாகும்.

நடவடிக்கை: இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பாங்கான மாநிலத்தில், 12 மாவட்டங்களில் ஒன்பதில் 26 நடமாடும் மருத்துவ அலகுகளை உள்ளன. இவை அனைத்தும் இலாப நோக்கற்ற நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. எம்.எம்.யுக்கள் தங்கள் வீட்டு வாசலில் சோதனைகள் மற்றும் மருந்துகளைப் தருவது நோயாளிகளை ஈர்க்கின்றன. சிலர் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்த போதிலும், வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை விட எம்.எம்.யு.க்கள் மிகவும் நம்பகமானவை என்று அவர்கள் கூறினர். இமாச்சல பிரதேசத்தில் இந்தியாவின் சராசரியை விட அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் கள் உள்ளன (ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும் சுமார் 11,000 சேவை செய்கிறது); ஆனால் ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் சாலை வசதி போதுமானதாக இல்லாததால், சுகாதாரத்துக்கான அணுகல் பாதிக்கப்படுகிறது. நடமாடும் சுகாதார அலகுகள் இலவச ஆலோசனைகள், அத்தியாவசிய மருந்துகள், சில நோயியல் சோதனைகள் மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றை வழங்குகின்றன. சிலருக்கு மேம்பட்ட கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தாலும், மற்றவர்கள் தகுதிவாய்ந்த மருத்துவரைக் கூட நியமிக்கவில்லை என்பதையும் எங்கள் அறிக்கை கண்டறிந்துள்ளது.

2018 முதல் ஐந்து நிர்வாகக் கட்டுரைகளை நீங்கள் இங்கே காணலாம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.