எர்ணாகுளம்:மத்திய கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) அனிதா* தனது இருக்கையை அடைந்தபோது, அவர் ஏற்கனவே எட்டு மணி நேரம் களப்பணியை முடித்திருந்தார். அன்றைய நாளின் பணியை முடிப்பதற்கு முன்பாக, அவர் மேலும் இரண்டு அல்லது நான்கு மணிநேர அலுவலக பணியை கவனித்துக் கொண்டிருந்தார். "நாங்கள் ஒருநாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை வேலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்," என, 25 வருட அனுபவமுள்ள அந்த பெண் அதிகாரி கூறினார். “ஆனால் இதுபற்றி புகார் செய்யவில்லை. காவல்துறை பணி அப்படித்தான் என்று, இப்போது நான் பழகிக் கொண்டு விட்டேன்” என்றார்.

வழக்கமான 12 மணி நேரம் ஷிப்டு என்ற அடிப்படையில் பணிபுரியும் துறையாக இந்த காவல்துறை இருந்தபோதும், காவல்துறையினர் அதிகமுள்ள 18 பெரிய மாநிலங்களில் கேரளா 13வது இடத்தைத்தான் பிடித்திருப்பதாக, டாடா டிரஸ்ட்ஸ் 2019 நவம்பரில் வெளியிட்ட இந்தியா ஜஸ்டிஸ் ரிப்போர்ட்(ஐ.ஜே.ஆர்) என்ற அறிக்கை தெரிவிக்கிறது. நீதித்துறை அமைப்பின் மற்ற மூன்று தூண்களாக சிறைச்சாலை, சட்டஉதவி மற்றும் நீதித்துறையை ஐ.ஜே.ஆர் காண்கிறது. சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவிகளில் சிறந்ததாகவும், நீதித்துறையில் ஐந்தாவது இடமாகவும் கேரளா மதிப்பிடப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் காவல் துறை திறனில் அது கீழிருந்து ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது.

நீதி அமைப்பின் நான்கு தூண்களின் அடிப்படையில் 18 பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்களை - இவை, 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, இந்தியாவில் 90% க்கும் அதிகமான மக்கள் வசிப்பவை - மற்றும் ஏழு சிறிய மாநிலங்களையும் - 10 மில்லியன் மக்கள் தொகை வரை - இந்த அறிக்கை ஒப்பிட்டுள்ளது.

ஜனவரி 2017 நிலவரப்படி, கேரளாவின் காவல்துறை பணியாளர்களில் 6.3% பெண்கள் - 18 மாநிலங்களில் 10 வது இடம்; அதன் காவல்துறை அதிகாரிகளில் 2.1% (17 வது இடம்) - தெலுங்கானாவை விட (1.5%) மட்டுமே சிறந்தது - என்று அறிக்கை காட்டுகிறது. 2016 வரையிலான நான்கு ஆண்டுகளில், பெண்களின் பங்கு காவல்துறையிலும், காவல்துறை அதிகாரிகள் பிரிவிலும் சரிந்ததாக தரவு காட்டுகிறது. நவம்பர் 10, 2019 அன்று கேரளாவில் பயிற்சி முடித்த எஸ்.ஐ.க்கள் அணிவகுப்பில் (ஐ.ஜே.ஆர் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு) பங்கேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் பேசும்போது, கேரள காவல்துறையில் படித்த பெண்கள் இருப்பது, தடையின்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் போலீசை எளிதில் அணுக உதவும் என்பதை ஒப்புக்கொண்டார்.

ஐ.ஜே.ஆர் அறிக்கையின்படி, இந்திய காவல்துறையானது 85% காண்ஸ்டபிள்கள் மற்றும் 15% அதிகாரிகளை கொண்டது. மாநில காவல்துறையின் இரண்டு ஆயுதப்படை பிரிவில் சிவில் போலீசார் (மாவட்ட ஆயுத இருப்பு அல்லது டிஏஆர் அடங்கும்) மற்றும் ஆயுதப்படை போலீசார் - உள்ள நிலையில், "சட்ட அமலாக்கம், உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், மற்றும் குற்றப்பதிவு மற்றும் விசாரணை, இதர பிற பணிகளை” செய்யக்கூடிய முன்னதை மட்டுமே, ஐ.ஜே.ஆர் கருத்தில் கொண்டது.

காவல்துறையில் அதிக பெண்கள் என்ற தேசிய போக்கை கேரளா ஆதரிக்கிறது

உலகளவில் இரண்டாவது மக்கள்தொகை கொண்ட இந்தியா, உலகளவில் மிகக்குறைந்த காவலர் - பொதுமக்கள் விகிதத்தை - அதாவது, 1,00,000 பேருக்கு 151 போலீசார் - கொண்ட நாடுகளில் ஒன்றாகும் என்று ஐ.ஜே.ஆர் அறிக்கை குறிப்பிட்டது. இது, 1,00,000 மக்கள்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட 193 போலீசார் என்ற எண்ணிக்கையைவிட 42 குறைவு.

நாடு தழுவிய அளவில், ஜனவரி 2019 நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான (சிவில், டிஏஆர் மற்றும் ஆயுதம்) 2.59 மில்லியன் என்பதில், ஒட்டுமொத்தமாக 20% அல்லது 5,28,165 காவல் பணியிடங்கள் காலியாக இருந்தன என்று, 2019 ஜனவரி 29ல் வெளியான உள்துறை அமைச்சகத்தின் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (பிபிஆர்டி) ஆண்டு அறிக்கை 2019 ‘காவல் அமைப்பு பற்றிய தரவு’ அறிக்கைதெரிவிக்கிறது.

இந்தியாவில், ஆட்சேர்க்கப்படும் காவலர்களில் பெரும்பாலோர் ரிசர்வ் பட்டாலியன்களுக்கும் (இவர்கள் காவல் பணியில் இல்லாதவர்கள்) மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கும் செல்கின்றனர்; அரை மில்லியன் [கிட்டத்தட்ட 3 மில்லியனில்] காவல்துறையினர் மட்டுமே காவல் நிலையங்களில் உள்ளனர் என்று, கேரளாவின் முன்னாள் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டிஜிபி) ஜேக்கப் புன்னூஸ் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "அவர்களில் 50% பேரை காவல் நிலையங்களில் இருக்கச் செய்தால், அது காவல் படைக்கு மேலும் உதவியாக இருக்கும்" என்றார்.

இந்திய காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 2018 உடனான ஆறு ஆண்டுகளில் 90% அதிகரித்துள்ளது என்று பிபிஆர்டி தரவுகள் தெரிவிக்கின்றன. 2017 மற்றும் 2018 க்கு இடையில், இந்த எண்ணிக்கை 9.5% உயர்ந்து 185,696 ஆக உள்ளது.

கேரள காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை (ஆயுதமேந்திய போலீசார் உட்பட) ஆறு ஆண்டுகளில் 2018 உடனான ஆறு ஆண்டுகளில் 42% அதிகரித்துள்ளது. 2017 மற்றும் 2018 க்கு இடையில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 10% உயர்ந்து 4,304 ஆக உள்ளது.

கேரளாவில் சிவில் காவல்துறையில் (கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்) சில அணிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை, ஆறு பணியாளர்களை (0.2%) அதிகரித்து 2018 மற்றும் 2019 க்கு இடையில் 3,148 என்று மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த நிலையிலான பெண்கள் காவல்துறையில் நாடு முழுவதும் ஒப்பிட்டால் கேரளா, 2% பெண்களையே ஏற்படுத்தியது - இது, அண்டை மாநிலமான தமிழ்நாடு (10,545 அல்லது 7%) மற்றும் கர்நாடகா (6,522 அல்லது 4%) ஐ விட குறைவாக உள்ளது.

கேரளாவின் தற்போதைய வளர்ச்சி விகிதத்துடன் பொருந்திப்பார்த்தால் , பரிந்துரைக்கப்பட்ட33% பெண்கள் என்ற நிலையை கேரள காவல்துறை எட்டுவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆகும். நவம்பர் 9, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைதெரிவித்துள்ளபடி, ஒன்பது இந்திய மாநிலங்கள் தங்கள் காவல் படையில் பெண்களின் பங்கை 33% ஆக அதிகரிக்க 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்த எண்ணிக்கையை அடைய மத்தியப் பிரதேசம் 294 ஆண்டுகள் ஆகும்.

தேர்வு மற்றும் நியமனம் கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது; இதில் அதிகாரிகள் ஏற்படுத்தும் தாமதங்கள், காவல் துறையில் பெண்களின் பங்கை அதிகரிப்பதற்கு தடையாக உள்ளதாக, ஓய்வு பெற்ற மற்றும் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள் சிலர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். எனினும், இந்த செயல்முறையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

அரசு பணியாளர் தேர்வாணையம்: ஊழல் இல்லாத, ஆனால் தாமதத்திற்கு ஆளாகக்கூடியது

நாம் கூறியது போல், அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கேரளாவில் காவல்துறையினர் நியமிக்கப்படுகிறார்கள். "இது ஊழல் மற்றும் புகார் இல்லாதது; சிறந்த, தகுதி வாய்ந்த நபர்களுக்கு பணியை வழங்குகிறது; ஆனால் அதிகாரிகள் தரப்பில் நீண்ட தாமதங்களுக்கு இது வழிவகுக்கிறது," என்று புன்னூஸ் கூறினார்; 2012 இல் வழங்கப்பட்ட பணி உத்தரவுக்காக, 2018 இல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2019ல் தான் அவருக்கு பயிற்சியே வழங்கப்பட்டது. இத்தகைய நேரடி ஆட்சேர்ப்பு முறை, மற்ற மாநிலங்களில் உள்ளதை போல் கிடையாது என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த தாமதத்தை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள காவல்துறைக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட எஸ்.ஐ.க்களின் முதல் தொகுதி, 2019ல் பயிற்சியை முடித்தது. 121 பேர் கொண்ட குழுவில் 31 பெண்கள் அடங்குவர் - இது அந்த தொகுதி எண்ணிக்கையில் கால் பகுதியை கொண்டிருப்பதாக, ஒன்மனோரமாநவம்பர் 9, 2019 செய்திதெரிவித்தது.

"குறைந்தபட்சம் 10,000 பெண் அதிகாரிகளை படையில் வைத்திருக்க விரும்புகிறோம். மகளிர் காவல்துறை அதிகாரிகளை சேர்க்க, சிறப்பு ஆட்சேர்ப்பு கொள்கை முடிவை கேரள அரசுஎடுத்துள்ளது ”என்று டிஜிபியும் கேரள மாநில காவல்துறைத்தலைவருமான லோக்நாத் பெஹெரா இந்தியா ஸ்பெண்டிடம்தெரிவித்தார். "அதே நேரம், நாங்கள் ஆட்சேர்ப்பில் பாலின - சமநிலை (சிவில் சேவைகளைப் போல) செய்கிறோம்" என்றார்.

"இதற்கு முன்னர் நேரடி ஆட்சேர்ப்பு இல்லாததால், பெண் டி.எஸ்.பி [துணை போலீஸ் சூப்பிரண்டு] அல்லது எஸ்.ஐ. பதவிகளில் ஒரு சில பெண்கள் மட்டுமே உள்ளனர்" என்று புன்னூஸ் கூறினார். "இது, பல பெண் கான்ஸ்டபிள்களின் பதவி உயர்வை தடுத்தது" என்றார்.

கடந்த 2018 வரை, மாநிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆட்சேர்ப்பு செய்வதில் பெண்களுக்கு தனி ஒதுக்கீடு இல்லை என்று புன்னூஸ் கூறினார்.

ஏராளமான, ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளனர், மேலும் பெண் டி.எஸ்.பி, - ஐ.பி.எஸ் அல்லாத பெண் எஸ்.பி. [போலீஸ் சூப்பிரண்டு] பதவிகளை உருவாக்க அரசு விரும்புகிறது.இந்த பதவிகளை உருவாக்க அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கிறோம் என்று, பெஹெரா மேலும் கூறினார். 2017 ஆம் ஆண்டில் முதல் பெண்கள் பட்டாலியனையும் அரசு சேர்த்துக்கொண்டது.

இந்நடவடிக்கை, காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது என்பதற்கு உண்மையில் எதையும் செயல்படுத்தாது. "பெண்களுக்கு ஒரு தனி பட்டாலியன் என்பதற்கான வழி இருக்காது" என்று ஐ.ஜே.ஆரின் தலைமை ஆசிரியரும் காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சிமூத்த ஆலோசகருமான மஜா தாருவாலா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இது பெண்களை பிரதான நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்கத்தை அடையாளம் காட்டுவதை விட ஒரு காட்சியை உருவாக்குகிறது," என்று அவர் கூறினார். இருப்பினும், இப்பணியில் பெண் எஸ்.ஐ.க்கள் சேர்ப்பது "எண்ணிக்கை மிகவும் சாதகமாக தாக்கத்தை தரும்" என்று அவர் மேலும் கூறினார்.

தாருவாலாவின் உணர்வுகளையே, பணியில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும் எதிரொலித்தார். அவர் இந்தியா ஸ்பெண்டிடம் பேசுகையில், “கேரளாவில் பெண் காவல்துறைக்கு தனி பணியாளர்கள் இருந்தனர்; 2018ல் ஒருங்கிணைந்த தொகுதிக்கு முன்பு ஆட்சேர்ப்பு கான்ஸ்டபிள் மட்டத்தில் மட்டுமே இருந்தது. முழு மாநிலத்திற்கும் ஒரே ஒரு [பெண்] டி.எஸ்.பி மட்டுமே இருந்தார், ”என்று அவர் கூறினார்.

ஒரு தனி கேடர் முறையில், உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, காலியிடங்கள் இருக்கும்போது மட்டுமே குறைந்த பதவிகளில் சேர்க்கப்படும் பெண்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியும். "ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு அனைத்து அணிகளிலும் அதிக காலியிடங்கள் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் - ஒரு எஸ்.ஐ. என்பவர், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறலாம்" என்று ஐபிஎஸ் அதிகாரி கூறினார். "குறிப்பாக பெண்களுக்கு ஒரு கேடர் இருந்தால் இது மீண்டும் ஒரு பிரச்சினையாக மாறும்" என்றார்.

நல்ல தகுதி வாய்ந்த பெண்கள் காவல் அலுவலகப்பணிகளை புரிகின்றனர்

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, அனிதா, பணியில் இணைந்தபோது, பெண்கள் விசாரணை போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை. "நாங்கள் சர்க்கிள் ஆய்வாளர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டோம்," என்று அனிதா கூறினார். "இப்போது பெண்கள் விசாரணை நடவடிக்கைகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ளனர்".

காவல் பணிகளில் பெரும்பாலானவை நிர்வாக, நிர்வாகம் சார்ந்த புலனாய்வு மற்றும் நீதிமன்றம், மக்கள் தொடர்பு தொடர்பானவை, மேலும் இவை பெண்களின் தலையீட்டிற்கு மிகவும் பொருத்தமானவை என்பதை ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது என்று தாருவாலா குறிப்பிட்டார்.

அனிதாவுக்கு ஒரு தசாப்தத்திற்கு பிறகு இணைந்த தலைமை கான்ஸ்டபிள் வீணா*, இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆவணங்களில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பணிகள். "நான் சேர்ந்தபோது, ஆண்கள் அவர்கள் செய்த வேலையைத் தொடர்ந்து செய்தார்கள், ஆனால் பெண்கள் தொடர்பான குற்றங்கள், அல்லது தர்ணாஅல்லது பெண்கள் பங்கேற்கும் நிகழ்வாக இருந்தால் மட்டுமே பெண்கள் [வழக்கமாக] ஈடுபடுவார்கள்," என்று அவர் கூறினார்.

இப்பணிக்கு தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்ற நிலையிலும், இரு பணித்தொகுதிகளிலும் தகுதி பெற்ற பெரும்பாலான பெண்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருந்தனர்.

"பெரும்பாலும், காவல்துறையில் உள்ள பெண்களுக்கு அலுவலகப்பணிகளே வழங்கப்படுகின்றன; களப்பணி அல்ல; அவை அரிதாகவே இருக்கும், ”என்று பெண் ஐ.பி.எஸ். கூறினார். "அவர்களின் திறனை சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் ஆண் மற்றும் பெண் கல்வி ரீதியாக தகுதியானவர்கள். இது ஒரு வாய்ப்பின்மை மற்றும் நம்பிக்கையின்மையே காட்டுகிறது; ஏனெனில் அவர்கள் கள வேலைகளை வெளிப்படுத்தவில்லை அல்லது அனுபவம் பெறவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

பெண் போலீஸ் இப்போது ஒரு சட்டபூர்வமான இருப்பாகும்

பெண்கள் - இவர்கள் இப்போது காவல் நிலையங்களில் இருந்தாக வேண்டிய கட்டாயம்; பெண்கள் மற்றும் பாலின அடிப்படையிலான குற்றங்கள் பதிவாகும்போது அதை கையாள வேண்டும்) “குறைவான இருப்பதால் மோசமான பாதிப்பு” என்கிறது ஐ.ஜே.ஆர். "சட்டப்படி, இப்போது காவல் நிலையத்திற்கு வரும் பாலியல் வன்முறை புகார்களை விசாரிக்க இப்போது பெண் காவல்துறை அதிகாரிகள் இருந்தாக வேண்டும்," என்று தாருவாலா கூறினார். "எனவே இங்குள்ள சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற அதிக எண்ணிக்கை தேவை” என்றார்.

காவல்துறை (சிவில், டிஏஆர் மற்றும் ஆயுதமேந்திய காவலர் பணி) பெண்களுக்கு 38% இட ஒதுக்கீட்டை பீகார் செய்துள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16இல் மட்டும் தான் 33% இடஒதுக்கீடு, 10 மாநிலங்களில் 33% க்கும் குறைவான ஒதுக்கீடே உள்ளது. மேலும் ஏழு மாநிலங்களில் இடஒதுக்கீடு இல்லை (கேரளாவின் தரவு இல்லை என்ற வகைப்பாட்டில் உள்ளது), என்று பிபிஆர்டி 2019 தரவு வெளிப்படுத்துகிறது.

"நான் பெண் அதிகாரிகளுக்கான - துணை எஸ்.பி. முதல், சிஐ [சர்க்கிள் ஆய்வாளர்], எஸ்.ஐ. மற்றும் ஏ.எஸ்.ஐ. [உதவி துணை ஆய்வாளர்] - உடை வடிவமைப்பை கூட அதே பணித்தொகுப்பில் ஒரே மாதிரியாக உள்ளன. 23 வருட காலியிடங்களை பொருட்படுத்தவில்லை,” என்று தலைமை கான்ஸ்டபிள் வீணா கூறினார்.

"காலி பணியிடங்களை பார்க்கும் தற்போதைய நடைமுறையில் பெரும்பாலான தற்போதைய இடங்கள், எடுத்துக் கொள்ளும் எண்ணிக்கைகளை தீர்மானித்து, பின்னர் அந்த காலியிடங்களில் 30% அல்லது 33%க்கு பெண்கள் நியமிக்கப்படுகின்றன" என்று தாருவாலா கூறினார். "அனைத்து பெண்கள் ஆட்சேர்ப்பு எண்களில் அதிகரிக்கக்கூடும். ஆனால் அதற்கு எதிர்ப்பும் இருக்கும்.

“கான்ஸ்டபிள் மட்டத்தில் சேர ஒதுக்கீடு தேவைப்படலாம். ஆனால் அதிகபட்ச தரவரிசை, பெண்கள் உடல் வலிமை என்ற மன அழுத்தத்தில் தகுதி பெறுவதைவிட இது எளிது "என்று புன்னூஸ் கூறினார்.

பாலின உணர்திறன் தேவை

"உண்மை என்னவென்றால், பெண்களை அதே செயல்முறைகள் மற்றும் ஆண்களின் அதே சூழலில் சேர்த்துக்கொள்ளவும் தக்கவைக்கவும் முடியாது" என்று தாருவாலா கூறினார். "அரசியல், நிர்வாக மற்றும் காவல்துறையின் தலைமை, இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களுக்கு வெவ்வேறு உடல்ரீதியான தேவைகள் உள்ளன; அவர்களிடம் இருந்து ஒரு சமூகப்பொறுப்பும் எதிர்பார்க்கப்படுகிறது, ”என்று அவர் கூறினார்.

சுமார் 41% காவல் பணியாளர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) "காவல்துறையில் பெண்களுக்கு எதிரான உயர் சார்புடையவர்கள்" என்று, ஆகஸ்ட் 27, 2019 அன்று வெளியான ‘இந்தியாவில் காவல்துறையின் நிலை அறிக்கை 2019’ அடிப்படையில், ஆகஸ்ட் 29, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைவெளியிட்டது.

காவல் துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் முற்றிலும் சமமான நடத்தப்படவில்லை என்று 50% க்கும் மேற்பட்ட பணியாளர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) கருதுகின்றனர்; பெண் காவலர்கள், பதிவேடுகள் மற்றும் தரவை பராமரித்தல் உள்ளிட்ட அலுவலக பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை, ரோந்து மற்றும் சட்டம் ஒழுங்கு பணி உள்ளிட்ட கள அடிப்படையிலான வேலைகளில் ஆண் காவலர்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று, அது குறிப்பிட்டது.

கேரளாவில், 78% காவல்துறையினர் ஆண்; அங்கு பெண் காவல்துறையினர் எண்ணிக்கையைவிட 60% அதிகமாக உள்ள ஆண் காவலர்களால் முற்றிலும் சமமாக நடத்தப்படுவதாக அறிக்கை தெரிவித்தது. பதிலளித்தவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் (46% ஆண்கள் மற்றும் 45% பெண்கள்) கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், பெண்களுக்கு உணர்திறன் குறித்த பயிற்சி தரப்பட்டதாக தெரிவித்தனர்.

"காவல்துறை அமைப்பானது இப்போது இருப்பதை விட மிகவும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்," என்று தாருவாலா மேலும் கூறினார். "இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை, குறைந்த எண்ணிக்கையிலான பெண் காவலர்கள் பிரச்சினை மற்றும் விரும்பத்தகாத சூழ்நிலை நீடிக்கும்" என்றார் அவர்.

நீண்ட நேர வேலை என்பது பாதிப்பை தரும்

ஊழியர்களின் பற்றாக்குறை என்பது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமையை குறிக்கிறது. குறிப்பாக, உள்ளூர் மத விழாக்களிலோ அல்லது பெண்கள் பங்கேற்கும் எதிர்ப்பு பேரணிகளிலோ இது உண்மை.

கடந்த 2018ம் ஆண்டு சபரிமலை சீசனில், பெண்கள் முதன்முதலில் கோவிலுக்கு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டபோது, சட்டம் ஒழுங்கு தொடர்பான பணிகளை கவனித்துக்கொள்வதற்காக தனது காவலர் குழு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு அனுப்பப்பட்டது என்பதை அனிதா நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் தங்குவதற்கு உகந்த இடம் அல்லது பயன்படுத்த கழிப்பறை கிடைப்பது கடினமாக இருந்தது என்று அனிதா கூறினார். "எங்களுக்கு தங்குவதற்கு ஒரு ஆரம்பப்பள்ளியின் அறை வழங்கப்பட்டது; அதில் குளியலறையில் விளக்குகள் அல்லது போதுமான வசதி இல்லை," என்று அவர் கூறினார். "நாங்கள் சொந்தமாக ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது; நாங்கள் அந்த வீட்டை சுத்தம் செய்தோம், பின்னர் கூட அடிப்படை வசதிகள் தான் இருந்தன. அதற்கும் நாங்கள் பணம் கொடுத்தோம். அதன் பிறகு இது மாறி இருக்கலாம்” என்றார்.

சில வார மற்றும் மாதாந்திர சலுகைகளுடன் இணைந்த நீண்ட வேலை நேரம் என்பது இந்திய காவல்துறையின் வாழ்க்கை என்றாகிவிட்டது. இந்தியாவில் சுமார் 24% காவல்துறையினர் ஒரு நாளைக்கு சராசரியாக 16 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கிறார்கள், 44% பேர் 12 மணி நேரத்திற்கும் மேலாக பணி புரிவதாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 அக்டோபர் 23 கட்டுரைதெரிவித்துள்ளது.

மேலும், 73% காவலர்கள் தங்கள் பணிச்சுமை அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று தெரிவித்தனர்.

கேரளாவில் ஐந்து பெண் போலீசாரில் மூன்று பேர் (59%) பணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் ‘பலமுறை’ மீண்டும் பணியில் இருக்க வேண்டியிருக்கிறது என்று கூறியதாக, காவல் நிலை அறிக்கை 2019 குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி இதை ஒப்புக்கொண்டார். "எஸ்.எச்.ஓ. களாக இருக்கும் அதிகாரிகளை நான் அறிவேன், அவர்கள் ஒரு வாரத்தில் ஒருநாள் விடுமுறை கூட எடுக்க மாட்டார்கள்" என்றார்.

தனிநபருக்கு மிகுதியான மற்றும் அதிக அழுத்தத்தை மட்டும் தருவதல்ல, "...காவல் அமைப்புகளால் சீராக நிபுணத்துவம் பெறவோ, தங்களை மேற்பார்வையிடவோ, பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் சிறப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யவோ அல்லது பயனுள்ள குற்றத்தடுப்பு மற்றும் விசாரணையை மேற்கொள்ளவோ தயாராக இயலாமல் போய்விடும்" என்று ஐ.ஜே.ஆர் அறிக்கை தெரிவித்தது.

ஜனவரி 2019 நிலவரப்படி கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண் காவலர்கள் மக்கள் எண்ணிக்கையில், 4,302.12 பெண்கள் இருந்ததாக பிபிஆர்டி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, நாடு முழுவதும் ஒவ்வொரு 3,391.44 பெண்களுக்கும் ஒரு போலீஸ் பெண் விகிதத்தை விட இது 21% குறைவு.

முன்னோக்கி செல்லும் வழி

காலிபணியிடங்களை நிரப்பும்போது (இல்லையெனில்), பெண்கள் மற்றும் பிற விழிம்புநிலை குழுக்கள் போன்ற குறைவான பிரதிநிதித்துவ குழுக்களின் பங்கு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; இது நீதி அமைப்பின் இத்தகைய ஏற்பாடு, சமூகத்தில் தேவையான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் என்று, ஐ.ஜே.ஆர் பரிந்துரைத்தது.

பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த பெண்களை காவல் பணியில் சேர்ப்பதன் மூலம் கேரளா, இந்த திசையை நோக்கி ஒரு படி எடுத்து வைத்துள்ளதாக, கேரள டிஜிபி பெஹெரா கூறினார்.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமாக இருக்கும்போது, அதிகமான பெண்களைத் தூண்டுவதற்கு கிரெச்ச்கள், தனி கழிப்பறைகள் மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை. "திட்டமிட்ட செலவினங்களில் இத்தகைய திட்டங்களைச் சேர்ப்பது காவல்துறைக்கு உதவும்" என்று பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறினார்.

"குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் போது முற்போக்கான மற்றும் செயல் ஊக்கமான காவல்துறையின் தேவை உள்ளது" என்று புன்னூஸ் கூறினார். "இந்தியாவில் காவல் துறையில் நமக்கு பெண் புரட்சி தேவை. காவல்துறையில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களை மாநிலங்கள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், அது முற்போக்கான தொழில் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல, ”என்று அவர் மேலும் கூறினார்.

"காவல் அமைப்புகள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள அன்றாட காவலர்கள் (இது, உயர் குற்றம் அல்லது பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான சாதாரண உத்தரவாதம் தருவது) அரசியல் தலையீடு வாய்ப்புகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்" என்று தாருவாலா கூறினார்.

இதற்கிடையில், கேரளாவில் பெண்கள் செல் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் போன்ற முன்முயற்சிகள் உட்பட சிறந்த காவல்துறைக்கான தாக்கம் குறித்து, அனிதா நம்பிக்கை கொண்டுள்ளார். ஏறக்குறைய மூன்று தசாப்த கால காவல் பணியில், மக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை நிறைய மாறியுள்ளதுடன், பொதுமக்களுக்கு அவர்களை இன்னும் அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது. "நாம் மக்களுடன் அதிகம் தொடர்பு கொண்டால், பல சிக்கல்களைத் தீர்க்கலாம் மற்றும் [நமது] பணிப்பளுவை குறைக்க முடியும்," என்று அவர் கூறினார்.

*அடையாளம் காட்டப்படக்கூடாது என்பதற்காக பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட்பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.