சியோலிம், கோவா: தென்மேற்கு பீகாரின் கைமூர் மாவட்டத்தில், நிர்வாககத்தின் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தரவுத்தளத்தில், 31 வயதான ரமேஷ் ராம், ஜவுளித்தொழில்துறை ஊழியராக பட்டியலிடப்பட்டார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, குஜராத்தில் உள்ள அலங் கப்பல் உடைக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யும் பணிமறையில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களில், ராமும் ஒருவராக ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இன்று, ராம் தனது கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளார், எந்த வேலையும் இல்லாமல், தனது சிறிய நிலத்திற்கு எந்த மூலதனமும் இல்லாமல் தவிக்கும் அவருக்கு 6, 8 மற்றும் 10 வயதுடைய மூன்று இளம் மகள்களை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குடும்பத்துடன் வாழ்க்கையை காலம் தள்ள வேண்டியுள்ளது.

பிப்ரவரியில், கோவிட் -19 இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கும் முன்பே, ராம் போன்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், 2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கின் மோசமான பொருளாதாரத் தாக்கங்களில் இருந்து மீள முடியவில்லை.

இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம், வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத துறைகளை உள்ளடக்கியது. ராம் போன்ற பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணம், அதன் வேளாண்மை அல்லாத பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது; இது சில்லறை, கட்டுமானம், உற்பத்தி, விருந்தோம்பல், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் முறையான மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பால் ஆனது. வேளாண்மை அல்லாத மற்றும் பணம் அனுப்பும் வருமானமானது, உணவுப்பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 70% மக்கள் வாழும் கிராமப்புற இந்தியாவில் நுகர்வுச் செலவு ஒட்டுமொத்த பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

செப்டம்பர் 2020 இல், முதலாவது அலை உச்சத்தை எட்டிய பின்னர், இந்தியாவின் பொருளாதாரம் மீட்புக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், மீண்டு வரவில்லை. வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் ஊட்டச்சத்து அளவுகள், 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஊரடங்கிற்கு முந்தையநிலைகளுக்குக் கீழே இருந்ததாக, புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. மார்ச் 2021 முதல், வேலையின்மை அதிகரித்து வருகிறது, மே மாதத்தில் இரட்டை இலக்கங்களுக்குள் அது நுழைந்தது. வேலை இழப்பு தவிர, ஊதியங்களும் குறைந்துவிட்டதை, பல வீடுகளில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது, பல தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு முறையாக உணவளிக்க முடியவில்லை.

இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தொடர்ந்து பரவி வரும் சூழலில், அது மெதுவான வேகத்தில் இருந்தாலும் -- ஜூன் 1 அன்று நிலவரப்படி இந்தியா 127,510 புதிய கோவிட் -19 வழக்குகளையும், 2,795 இறப்புகளையும் பதிவு செய்தது-- பொருளாதார வல்லுநர்கள் கிராமப்புற இந்தியாவில் ராம் போன்ற குடும்பங்களுக்கு பொருளாதார பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர். பல மாநில அரசாங்கங்கள் உள்ளூர் மற்றும் மாநில அளவிலான ஊரடங்குகளை அறிவிப்பதால், பொருளாதார தாக்கம் கிராமப்புற குடும்பங்களின் பலவீனமான நிதி ஆரோக்கியத்தை, ஏற்கனவே பாதிக்காது, இது இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், கிராமப்புற நுகர்வு குறைந்து வருவதாக, அவர்கள் நமக்கு சொல்கிறார்கள்.

கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சுருங்கியதைக் காட்டும் தரவை அரசாங்கம் வெளியிட்டது, அது 40 ஆண்டுகளில் அதன் மோசமான செயல்திறனைக் குறிக்கிறது. இரண்டாவது கோவிட் -19 அலையின் பொருளாதாரத்தாக்கம், முதல் அலையை விட குறைவாக இருக்கும் என்றும் நிதி அமைச்சகம் கூறியது. ஆனால், பொருளாதார வல்லுநர்கள் இதில் உடன்படவில்லை, அதிகரித்து வரும் வறுமை, கிராமப்புற வேலையின்மை, கடன்பட்டிருத்தல் மற்றும் தேங்கி நிற்கும் ஊதியங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, வரவிருக்கும் பசி நெருக்கடியைத் தணிக்க, முதல் அலைகளில் ஆத்மநிர்பர் தொகுப்பின் கீழ் வழங்கப்பட்ட பண உதவி மற்றும் இலவச உணவு தானியங்கள் போன்றவற்றுடன், அரசின் அவசர நிவாரணம் பெற அழைப்பு விடுக்கின்றனர்.

கிராமப்புற குடும்பங்களுக்கு இருந்த பணமும் சேமிப்பும் கரைந்துவிட்டன

அலங்கில், ராம் ஒரு நாளைக்கு ரூ .500 சம்பாதித்ததை நினைவு கூர்ந்தார். "இந்த வருமானத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தை நடத்தினோம். இதுதான் எங்களுக்கு இருந்தது. நான் எனது அன்றாட வருவாயை பிரித்து, அதில் பெரும்பகுதியை எனது குடும்பத்தினருக்காக, வீட்டிற்கு அனுப்பினேன். அது எவ்வளவு இருந்தாலும், எங்களுக்கு உயிர் பிழைக்க அது போதும்,"என்றார் ராம்.

மார்ச் 2021 இல், இந்தியாவின் கோவிட் -19 இரண்டாவது அலை அதிகரித்த நிலையில், மற்றொரு தேசிய ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று அலங்கின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் வதந்திகள் பரவின. மார்ச் 24, 2020 அன்று நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, கடந்த ஆண்டின் இடர்பாடுகள் மீண்டும் நிகழும் என்ற அச்சம், நகர்ப்புற இந்தியாவில் தினசரி ஊதியம் பெறுபவர்கள் நான்கு மணிநேர அறிவிப்பு தந்துவிட்டு, அவர்களே அங்கிருந்து மறைந்துவிட்டனர். ராம் அலங்க் பகுதியை விட்டு, டஜன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் வீட்டிற்கு சென்றார்.

தனது சவுகாரா கிராமத்தை அடைந்தபோது தான், ​ராம் நிம்மதியடைந்ததாக தெரிவித்தார். இருப்பினும், சில நாட்களில், அவரது குடும்பத்தின் சேமிப்பு காலியாக, அவர்கள் வறுமையில் விழுந்தனர். "என்னிடம் பணம் இல்லை. எனது வங்கிக் கணக்கில் எதுவும் இல்லை" என்றார்.

சவுகாராவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்) கீழ் பணிகளை மேற்கொள்ளலாம் என்று ராம் நினைத்தார், ஆனால் அங்கு அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. "எங்கள் கிராமத்தில் [எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தின் கீழ்] செய்ய, ஒரே ஒரு வகை வேலை இருக்கிறது ... இது பூமியைத் தோண்டி எடுப்பது, ஆனால் மண் கடினமானது" என்று ராம் கூறினார். "பருவமழை வந்து பூமி மென்மையாகும்போது தான் இந்த வேலை தொடங்கும்" என்றார்.

இன்று சும்மா கிடக்கும் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தைத் தவிர ராமுக்கு வேறு எந்த சொத்துக்கள் இல்லை. "எனக்கு எந்த மூலதனமும் இல்லை, எனவே விவசாயத்தைத் தொடங்குவது பற்றி நான் எப்படி யோசிக்க முடியும்?" என்று, இந்தியாஸ்பெண்டிடம் அவர் கூறினார். அவரது குடும்பம் பொது விநியோக திட்டத்தின் (பி.டி.எஸ்) கீழ் இலவச உணவு தானியங்களைப் பெறுகிறது, இந்த திட்டமானது இந்தியாவின் ஏழை வீடுகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்களுக்கான உரிமையை தருகிறது. கையில் பணம் இல்லாததால், பி.டி.எஸ் இன் கீழ் பெறப்பட்ட உணவு தானியங்களில் ஒரு பகுதியை கொண்டு, காய்கறிகள், எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க ராம் முடிவு செய்தார்.

"ஹம் சப் மஜ்பூரன் போஹோட் பரேஷன் ஹைன் (நாங்கள் மிகவும் உதவியற்றவர்களாக உணர்கிறோம்)" என்று ராம் கூறினார்.

கிராமங்களை சென்றடையும் கோவிட்

ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான நிதியாண்டில், நல்ல பருவமழையால் கிராமப்புறங்களில் விவசாயத்துறை 3.6% வளர்ச்சி அடைந்தது. முதல் அலையின் போது கிராமங்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் குறைவாகவே இருந்தது. கிராமப்புற தேவை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவுக்கு விரைவான பொருளாதார மீட்சி கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்தனர். ஆனால் பின்னர், 2020-21 நிதியாண்டின் முடிவில், இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பரவத் தொடங்கியதால், ஏற்கனவே பலவீனமான சுகாதார உள்கட்டமைப்புக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில், கோவிட் -19 கிராமப்புற இந்தியாவில், மேலும் பரவத் தொடங்கி, இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். செப்டம்பர் 2020 இல், முதல் அலை உச்சத்தை எட்டிய பின்னர் மீட்புக்கான அறிகுறிகளைக் காட்டிய வேலையின்மையானது, இம்முறை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இரண்டாவது கோவிட் -19 அலை கிராமப்புற மாவட்டங்களில் வேகமாக பரவி வந்ததை, மே 14 அன்று, பிரதமர் கவலையோடு குறிப்பிட்டார். மே மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களுக்கான சுகாதார அமைச்சக்த்தின் தகவல்கள், 10% அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மறைச்சோதனை விகிதத்தைக் கொண்ட மாவட்டங்களில், 66% கிராமப்புறங்களாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.


வைரஸ் தொற்று, கிராமப்புறங்களுக்குள் நுழைந்தால், அது நிச்சயமாக பெரும் பொருளாதார தாக்கத்திற்கு வழிவகுக்கும் என்று புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார இணை பேராசிரியர் ஹிமான்ஷு (ஒரே ஒரு பெயரில் மட்டுமே உள்ளார்) எச்சரித்தார். "ஜிடிபி [ GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி] எண்ணிக்கைகளால் இந்த துன்பம் உடனடியாக தெரியவராது; இது சிறிது காலம் கழித்தே தெரிய வரும். [கிராமப்புற] வருவாய்களில் மிக நீண்ட தாக்கம் இருக்கும் [இது] கிராமப்புற தேவையை பாதிக்கும்," என்று அவர், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் 2020-21ம் ஆண்டில், 7.3% ஆக சுருங்கியது, இது நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில், அதன் மோசமான செயல்திறனைக் குறிக்கிறது என்று அரசு 2021 மே 31 அன்று அறிவித்தது. இரண்டாவது அலையின் பொருளாதார தாக்கம், கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என்று, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் அதே நாளில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து, நிதி அமைச்சகத்தின் இதேபோன்ற மதிப்பீட்டை தொடர்ந்து வெளி வந்தது, இரண்டாவது அலை "மவுனமான பொருளாதார தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று கூறியது. மே 6 அன்று, அமைச்சகத்தின் உள்மதிப்பீட்டின்படி, பொருளாதார தாக்கம் "தொடக்க மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீத புள்ளி இழப்புக்கு வழிவகுக்கும்" என்று, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் அடிப்படை குறித்து, இந்தியாஸ்பெண்ட் நிதி அமைச்சகத்தை தொடர்பு கொண்டு கேட்டது. ஆனால் நாங்கள் பலமுறை பின்தொடர்ந்து கேட்ட பிறகும் கூட, அவர்களிடம் இருந்து பதில் இல்லை. நிதி அமைச்சகம் பதிலளித்தால், இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

"நிதி அமைச்சகத்தின் நோயறிதல், ஆரம்பத்தில் இருந்தே இந்த நெருக்கடியைக் குறிக்கும் உத்தியோகபூர்வ மனநிறைவின் பொதுவான வடிவத்துடன் பொருந்துகிறது," என்று, ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான ஜீன் ட்ரூஸ் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "கோவிட் -19 இன் இரண்டாவது அலை, முதல் அலையின் பொருளாதாரத்தை விட குறைவான சேதத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயமாக சாத்தியம். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தின் தாக்கம் மோசமாக இருக்கக்கூடும், ஏனெனில் அவர்களின் கையிருப்பு குறைந்து வருகிறது. எப்படியிருந்தாலும், மோசமானவற்றுக்குத் தயாராவது முக்கியம் " என்றார்.

இந்த மதிப்பீடு, ஒரு கணித சூத்திரத்தில் இருந்து வெளிவந்த ஒன்றைத் தவிர வேறில்லை என்று ஹிமான்ஷு கூறினார். "மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையை நாம் அடைவோம், கடந்த ஆண்டை விட குறைந்த அடிப்படை [விளைவு] காரணமாக மீட்பு இருக்கும். ஆனால் இது நிகழும் உண்மையான மாற்றத்தை விட, புள்ளிவிவரம் அதிகம். ஆகவே, நாம் அடிப்படையில் பார்க்கப் போவது, நீண்டகால துயரத்தின் வலிமிகுந்த மீட்சி மற்றும் மீட்பு கூர்மையாகத் திசைதிருப்பப்படும் சூழ்நிலை [இதனால்] சமத்துவமின்மை எல்லா பரிமாணங்களிலும் உணரப்படும்.

அதிகரித்து வரும் வேலையின்மை, ஊதியக்குறைவு

இந்த ஆண்டு விவசாய உற்பத்தி வலுவாக இருந்தாலும், [கிராமப்புறங்களில் வைரஸ் பரவுகிறது என்ற பயம்] விவசாய விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கலாம், இது கிராமப்புற பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, மொஹாலியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் (ISB - ஐ.எஸ்.பி) மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் ஸ்ரீதர் குந்து, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். மேலும், ஏப்ரல்-ஆகஸ்ட் 2020 முதல், கிராமப்புற இந்தியாவில் வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத ஊதிய வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளதாக, கடன் மதிப்பீட்டு நிறுவனமான இந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

"இந்தியாவின் மக்கள் தொகையில் 70% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத பொருளாதாரம் இரண்டுமே பாதிக்கப்பட்டால், அது கிராமப்புறத் தேவை மற்றும் நுகர்வு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நுகர்வுக்கு செலவிடப்படும் கூடுதல் வருமானத்தின் விகிதத்தை அளவிடும் பொருளாதார மெட்ரிக் - நுகர்வுக்கான விளிம்பு முனைப்பு (MPC - எம்.பி.சி) கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது. ஆகவே [கிராமப்புறங்களில்] அதிக எம்.பி.சி இல்லை என்றால், அது நமது [பொருளாதார] வளர்ச்சியை பாதிக்கும், ஏனெனில் உயர் எம்.பி.சி பொருளாதாரத்தில் பெருக்க விளைவைக் கொண்டிருக்கிறது. மக்கள் கையில் போதுமான பணம் இல்லையென்றால், அவர்கள் எப்படி நுகரப் போகிறார்கள்? "என்றார் குந்து. "கிராமப்புற தேவை குறையும் என்பதால், [இந்தியாவின்] வளர்ச்சி வாய்ப்புகளின் அளவும் இருக்கும்" என்றார் அவர்.

இந்தியாவின் கிராமப்புற விவசாயம்சாரா பொருளாதாரம், மொத்த கிராமப்புற வருமானங்களுக்கு சுமார் 60% பங்களிப்பு செய்துள்ளதாக, 2017 ஆம் ஆண்டில் நிதிஆயோக் ஆய்வு தெரிவித்துள்ளது.


2021 மே 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கிராமப்புற வேலையின்மை ஒரு வாரத்திற்குள், சுமார் 14% ஆக இரு மடங்காக உயர்ந்து, ஒரு வாரம் கழித்து 14% என்ற விகிதத்துடன் நெருங்கி இருந்தது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. மே 30 க்குள், இது 10% க்கு அருகில் சென்றது.


ஏப்ரல் மாதத்தில் முந்தைய புதுப்பித்த தகவலில், சி.எம்.ஐ.இ சம்பள ஊழியர்களிடையே, கிராமப்புறங்களில் வேலையின்மை அதிக பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டது, இது கிராமப்புற இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை குறிக்கிறது, இது அதன் வேளாண்மை அல்லாத பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.

நிறைவான விவசாயம், கடன்பட்ட பண்ணைகளால் உபரி தொழிலாளியை ஈர்க்க முடியாது

"இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், விவசாயம் அதிகப்படியான தொழிலாளர் சக்தியை உள்வாங்க முடிகிறது. தற்போதைய அலைவில் தலைகீழ் இடம்பெயர்வில் கூட இந்த போக்கு நடக்கும். [ஆனால்] இந்தியாவில் விவசாயத் துறை அதிக மக்கள்தொகை கொண்டது, மேலும் உபரி உழைப்பை உறிஞ்ச முடியாது"என்று குண்டு இந்தியாஸ்பெண்டிற்கு தெரிவித்தார்.

தொற்றுநோய்க்கு முன்பே, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களில் சுமார் 52% பேர் கடனில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் வருடாந்திர வருமானத்திற்கு சமமான கடன்களை எடுத்துள்ளனர் என்று 2019 ஆம் ஆண்டில் அரசு அறிக்கை கண்டறிந்துள்ளது. "வருமானம் என்ற பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள விவசாய குடும்பங்கள், பெரும்பாலும் இந்த கடன் சுமையால் பாதிக்கப்படுகின்றன, ஏனெனில் அவற்றின் அதிர்ச்சி-உறிஞ்சுதல் திறன் குறைவாக உள்ளது. [விநியோகச் சங்கிலி இடையூறுகள் காரணமாக] வேளாண் உற்பத்திகள் சந்தை மையங்கள், குறைந்த அணுகலைக் கொண்டுள்ளன, இது வேளாண் வருமானத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டுள்ளது. [எனவே] குறைந்த வேளாண் வருமானங்கள் கடன் சுழற்சியை உருவாக்குகின்றன," என்று குந்து கூறினார்.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC - ஏபிஎம்சி) சந்தைகளில் வர்த்தகம் ஓரளவு குஜராத்தில் மீண்டும் தொடங்கி இருந்தாலும், ராஜ்கோட்டில் உள்ள சந்தைகளில் பெரும்பாலான விவசாய பொருட்களின் [தினசரி] விற்பனை, மே மாதத்தில் சுமார் 40-50% வரை சரிந்தது என்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஏபிஎம்சி கமிஷன் முகவர்கள் சங்கத் தலைவர் அதுல் கமானி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில், குஜராத் மாநிலத்தில் புதிய நோய்த்தொற்றுகள் அதிகரித்ததால், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவானது வர்த்தகத்தை நிறுத்தியது.

"தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. [மேலும்], ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் காரணமாக நாங்கள் இரவு 8 மணிக்குள் சந்தையை மூட வேண்டும். இதற்கு முன், இரவு வரை ஏலம் சென்றது," என்றார் கமணி. "விவசாயிகள் தங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேமித்து வைக்குமாறு எங்களிடம் மன்றாடுகிறார்கள், ஆனால் இப்போது அவ்வாறு செய்வது கடினம்". இந்த பருவத்திற்கான அனைத்து வேளாண் விளைபொருட்களும் விற்கப்படாவிட்டால், வரும் மழைக்காலங்களில் பெரும்பாலானவை வீணாகிவிடும் என்று கமணி எச்சரித்தார். "சவுராஷ்டிராவில் (11 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மேற்கு குஜராத்தில் ஒரு பகுதி), பருவமழை காலத்தில் விவசாயிகளின் விளைபொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஒரு ஏபிஎம்சி சந்தை பகுதியும் இல்லை," என்று அவர் கூறினார்.

வருவாய், 2020 ஊரடங்கு நிலையைவிட கீழே உள்ளது

சுட்டெரிக்கும் மே மாதத்தில், 43 வயதான தபஸ் மாலோ, வடக்கு கோவாவின் பர்ரா கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில், டஜன் கணக்கான தொழிலாளர்களுடன் பணிபுரிந்தார். புதிய தினசரி நோய்த்தொற்றுகள் அதிகபட்சமாக உயர்ந்ததால், மே 3 அன்று மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்தது, கோவாவில் இருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழிவகுத்தது, ஆயினும் அவர்கள் அங்கேயே இருக்க முடிவு செய்திருந்தனர். மாலோ, வட மேற்கு வங்காளத்தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு, நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொண்ட குடும்பம் உள்ளது. "என் கிராமத்தில் எந்தத் தொழிலும் இல்லை, வேறு வேலையும் இல்லை, அதனால் என்னால் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை" என்றார்.

மாலோவின் அன்றாட வருவாய் இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை எட்டவில்லை. "நான் இதற்கு முன்பு மாதத்திற்கு ரூ.20,000 சம்பாதித்தேன், அதில் ரூ.16,000 ஐ வீட்டிற்கு அனுப்ப முடிந்தது. என்னால் இப்போது ரூ .10,000 கூட வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை,"என்று, அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "எனது வருவாய் இங்கே குறைந்துவிட்டால், என் குடும்பம் அங்கே பாதிக்கப்படுகிறது" என்றார்.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் சமீபத்தில் அறிக்கையின்படி, கணக்கெடுக்கப்பட்ட 90% குடும்பங்கள், கடந்த ஆண்டு தேசிய ஊரடங்கின் போது உணவு உட்கொள்வது குறைந்துவிட்டதாக அறிவித்தன, மேலும் ஆறு மாதங்களுக்குப் பிறகும் சுமார் 20% பேர் இதேபோன்ற போக்கைப் பதிவு செய்துள்ளனர். பெரும்பான்மையான தொழிலாளர்கள் வருமானம் குறைந்து வருவதாகவும், 2020 இறுதிக்குள் சுமார் 15 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

"ஊட்டச்சத்து, கடன் மற்றும் கல்வி ஆகியவற்றில் [வீடுகளுக்கு ஏற்படும் அதிர்ச்சிகள்] [இந்தியாவின் பொருளாதார மீட்சி] மீது நீண்டகால நிழலைக் கொடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. சில ஆண்டுகளில், ஊட்டச்சத்து பற்றாக்குறைகள், கல்விப் பற்றாக்குறைகள் ஆகியவற்றை நாம் காணலாம்… பாலின இடைவெளி விரிவடையக்கூடும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வயது வந்தவர்கள் மற்றும் தொழிலாளர் சந்தைகளுக்கு வந்த இளைஞர்கள் மிக நீண்ட கால பின்னடைவை எளிதில் சந்திக்க நேரிடும்," என்று, இந்த அறிக்கையில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களின் குழுவை வழிநடத்திய அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அமித் பசோல், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஜூன் 2020 க்குப் பிறகும், இந்தியப் பொருளாதாரம் உயர்ந்தபோது, ​​வீடுகளில் கணிசமான கஷ்டங்கள் இருந்தன, ட்ரெஸ் (Drèze ) மற்றும் சுயாதீன ஆராய்ச்சியாளர் அன்மோல் சோமஞ்சி ஆகியோரின் புதிய ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது, இது இந்தியாஸ்பெண்டால் மதிப்பாய்வு செய்யப்பட்டது. "வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் ஊட்டச்சத்து அளவுகள், இந்த ஆண்டின் இறுதிக்குள், ஊரடங்குக்கு முந்தைய ஊரடங்கு நிலைக்கு கீழே இருந்தன," என்று, 2021 ஆம் ஆண்டில் அரசு நிவாரண நடவடிக்கைகள் இல்லாமல், "தீவிரமான உணவு பற்றாக்குறையின் மற்றொரு அலையின் கடுமையான ஆபத்து" பதுங்கியிருந்தது என்று தெரிவித்தது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் பெரிய பொருளாதாரத் திரட்டல்கள் வாழ்வாதார நெருக்கடியை சரியாக கண்டறியத் தவறிவிட்டன என்று ட்ரெஸ் மற்றும் சோமஞ்சி குறிப்பிட்டனர். அவர்களின் கண்டுபிடிப்புகள் கடந்தாண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பல மாநிலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சுயாதீன வீட்டு கணக்கெடுப்புகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டவை.

பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 40% இளம் நகர்ப்புற தொழிலாளர்களுக்கு, தேசிய ஊரடங்கு முடிந்து 10 மாதங்களுக்கு பிறகும் கூட வேலை இல்லை அல்லது ஊதியம் இல்லை, மற்றும் பணிபுரிந்த தொழிலாளர்கள் குறைவான வேலை நேரம் மற்றும் குறைந்த ஊதியம் பெற்றதாக தெரிவித்தனர். இது, பிப்ரவரி மற்றும் மார்ச் 2021 க்கு இடையில், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் சென்டர் ஆஃப் எகனாமிக் பெர்ஃபார்மன்ஸ் நிறுவனத்தின் இணை பேராசிரியர் சுவாதி திங்ரா மற்றும் அவரது சகா ஜோல்லா கோண்டிரோலி ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த் அகணக்கெடுப்பு இன்னும் வெளிப்படையாக வெளியிடப்படவில்லை; இந்தியாஸ்பெண்ட், ஆய்வின் நகலை மதிப்பாய்வு செய்துள்ளது.

"நாங்கள் ஆய்வு செய்த இளம் நகர்ப்புற தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில், மீட்பு நடந்து கொண்டிருப்பதாக நாங்கள் நினைத்திருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% வீழ்ச்சி [2020 முதல் காலாண்டில்] உண்மையில் 24% இல்லை என்று எங்கள் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது ... அது அவர்களுக்கு 80% போன்றது. இப்போது இரண்டாவது அலை தாக்கிக் கொண்டிருக்கும் போது, ​​சில மாதங்கள் ஒருங்கிணைந்த ஊரடங்குகளை பூட்டுதல்களைக் கொண்டிருக்கும்போது, ​​நீண்ட கால வேலையின்மையைப் பார்க்கும் மக்களில் பெரும் பகுதியினரை நாம் காண்போம், "என்று திங்க்ரா இந்தியாஸ்பெண்டிற்கு தெரிவித்தார்.

உதவி, நிவாரண நடவடிக்கைகள் இருந்தும் கூட வறுமை அதிகரிப்பு

கடந்த ஆண்டு மே 12 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, ஆத்மனிர்பர் பாரத் என்ற பெயரில், மொத்தம் ரூ .20 லட்சம் கோடி - இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10% - நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். இது, கோவிட் -19 இன் முதல் அலை காரணமாக ஏற்பட்ட பொருளாதார சேதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆத்மனிர்பர் பாரத்தின் கீழ் உண்மையான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.6% மட்டுமே என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. ஜூன் 2020 இல், பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை (PMGKAY - பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்.) நவம்பர் 2020 வரை நீட்டித்தது. பி.எம்.ஜி.கே.ஏ.ஒய். கீழ், சுமார் 800 மில்லியன் ஏழை இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியங்களைப் பெற்றனர், 200 மில்லியன் ஏழைக் குடும்பங்களின் ஜனதன் வங்கிக் கணக்குகளில் ரூ .31,000 கோடி தரப்பட்டதாகவும், கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்காக ரூ .50,000 கோடியை செலவிட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

"ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் ஒரு பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது" என்றும் , இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்திய பொருளாதார கணக்கெடுப்பு 2020-21 வெளியீட்டின் போது ​​ செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன், ​​ஆரம்பகால தீவிரமான ஊரடங்குகள், மனித உயிர்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், "சிறந்த, விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவுகிறது" என்றும் கூறினார். இந்தியாவின் முதிர்ச்சியடைந்த கொள்கைக்கான பதில், நீண்டகால ஆதாயங்களில் கவனம் செலுத்துவதன் நன்மைகளை நிரூபித்தது மட்டுமல்லாமல், "ஜனநாயக நாடுகளுக்கு குறுகிய கொள்கை தயாரிப்பைத் தவிர்ப்பதற்கான முக்கியமான படிப்பினைகளையும்" இது அளித்துள்ளது என்று அறிக்கை தெரிவித்தது.

எவ்வாறாயினும், நாடு தழுவிய ஊரடங்கில் இருந்து நாடு தளரத் தொடங்கிய ஒரு வருடம் கழித்து, ஏழ்மையான குடும்பங்களிடையே இன்னமும் நீடித்த பொருளாதார வலி உள்ளது. கடந்த ஆண்டு முதல், சுமார் 75 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் விழுந்ததாக பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது, இது உலகளாவிய வறுமையில் 60% உயர்வு; 32 மில்லியன் இந்தியர்களை இனி நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்த முடியாது என்று, சமூக மற்றும் வருமான இயக்கம் குறைவாக இருக்கும் இந்தியா போன்ற பொருளாதாரத்திற்கான போக்கு குறித்து, பியூ கண்டறிந்தது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அறிக்கை, வேலையின்மை மற்றும் குறைக்கப்பட்ட வருவாய் ஆகியன, வறுமை அதிகரிப்பதற்கு ஒரு உந்துசக்தியாகும் என்று கண்டறிந்துள்ளது.

பொருளாதார நிவாரண நடவடிக்கைகள், குறிப்பாக பொதுவினியோக முறை, தேசிய ஊரடங்கின் போதும், அதற்கு பின்னரும் ஏழைகளைத் தக்கவைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தன என்று ட்ரெஸ் அமைப்பு மற்றும் சோமஞ்சி கண்டறிந்தனர். ஆனால் மற்ற நடவடிக்கைகள் நெருக்கடியின் போது குறிப்பிடத்தக்க பலனை வழங்கத் தவறிவிட்டன. ஏறக்குறைய 40% ஏழை குடும்பங்கள், பெண்களின் ஜன்தன் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றத்தில் இருந்து விலக்கப்பட்டன, மேலும் இந்த இடமாற்றங்கள் "கணக்கு செயலற்ற தன்மை, பரிவர்த்தனை தோல்விகள் மற்றும் மோசடி பாதிப்பு" ஆகியவற்றால் பாதிக்கப்பட்டன.

மேலும், பி.டி.எஸ் மற்றும் எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ ஆற்றிய பங்கைத் தவிர்த்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணப்பரிமாற்றங்கள் ஏழை குடும்பங்கள் அனுபவிக்கும் வருமான இழப்புகளில் 10% க்கும் குறைவாகவே உள்ளன. மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, பண இழப்புகள் வருமான இழப்புகளில் 23% மட்டுமே. இது கடனளிப்பு மற்றும் வீட்டு சொத்துக்களின் விற்பனை போன்ற துயருக்கு வழிவகுத்தது என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

நிவாரணம் வழங்க பொருளாதார வல்லுநர்கள் அழைப்பு

பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், முதல் அலையைப் போலவே அரசு, உடனடியாக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்றனர். கோவிட் -19 ஊரடங்கிற்கு பின்னர் மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்த கடந்த ஆண்டைப் போலல்லாமல், இரண்டாவது அலைகளின் போது அரசு அவ்வாறு செய்ய தயங்குகிறது என்று, டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொருளாதார வல்லுனரும், இணை பேராசிரியருமான ரீதிகா கெரா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்த ஆண்டு மத்திய அரசு, மாநில அளவிலான ஊரடங்குகளில் இருந்து எழும் நிலைமையை தணிப்பதில், எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை, ஊரடங்கில் பல, ஏழைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மிகவும் கடுமையானவை. சில மாநிலங்கள் (கேரளா, தமிழ்நாடு போன்றவை) நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன, ஆனால் மற்றவை அதிகம் செய்யவில்லை, அவற்றின் நிதி நிலைமை காரணமாக அதிகம் செய்யக்கூடிய நிலையில் இல்லை" என்று கெரா கூறினார்.

வீடுகளுக்கு ரொக்க உதவியை அதிகரிக்கவும், பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச தானியங்களின் அளவை, 10 கிலோவாக இரட்டிப்பாக்கவும் கேரா அழைப்பு விடுத்தார். அதற்கு மேல், மேலும் 100 மில்லியன் இந்தியர்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார். "மத்திய அரசு இதை முடுக்கிவிட வேண்டும்" என்றார்.

"இது ஒரு தனித்துவமான நிகழ்வு என்பதற்கான அங்கீகாரம் இருக்க வேண்டும், மேலும் இந்த மோசமான பாதிப்பில் இருந்து குடிமக்களை மீட்க, எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக ஒரு வலுவான சமிக்ஞை [அரசாங்கத்திடம் இருந்து] செல்ல வேண்டும். இந்த சமிக்ஞை இன்னும் வரவில்லை. இந்த கட்டத்தில் நிதி பழமைவாதமாக இருப்பது மிகவும் எதிர்மறையானது என்று நான் நினைக்கிறேன்," என்று பசோல் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இந்தியா போன்ற ஒரு பெரிய இளம் தொழிலாளர்களை கொண்ட ஒரு நாட்டில், தொற்றுநோயினால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தின் மற்றொரு சுற்று, நீண்டகால வேலையின்மைக்கான போக்குக்கு வழிவகுக்கும் என்று, திங்க்ரா எச்சரித்தார். "இந்த வடுவின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும்" என்றார் அவர். "குறைந்தபட்ச ஊதியங்கள் அதிகரிக்கப்படாவிட்டால், அரசுகளின் வேலை ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால், பொருளாதாரமே மீண்டு இந்த மக்களை மீண்டும் பணியில் சேர்ப்பது போல் தெரியவில்லை. இந்த நேரத்தில், வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் உட்பட உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா [செலவு அடிப்படையில்] மிகவும் பலவீனமாக இருக்கிறது".

இந்தியாவின் கடன்-ஜிடிபி விகிதம் சுமார் 90% ஆக உயர்ந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) ஏப்ரல் மாதம் கூறியது, இதனால் அரசின் நிதி நிலைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றொரு சுற்று பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்கலாமா என்பது குறித்து அரசு "இறுதி முடிவு எடுக்கவில்லை" என்று சமீபத்தில் கூறினார்.

"இந்த [வேலையற்ற] மக்கள் மீண்டும் புதிய வேலைகளை எவ்வாறு காணப் போகிறார்கள்? பொருளாதாரம் உச்சத்தில் இருந்து கீழே சென்ற நிலையில் எப்படி மீளக்கூடும் - ஏற்கனவே பங்குச் சந்தைகளுடன் - [ஆனால் நாம் போதுமான அளவு செலவழிக்கவில்லை என்றால்] ஏற்கனவே நிலவும் ஆழமான வேரூன்றிய சமத்துவமின்மையை நாம் நிலைத்திருக்கிறோம்," என்று திங்க்ரா கூறினார். "இந்த தொற்றுநோயைப் பற்றிய உண்மையிலேயே வியத்தகு விஷயம், குறிப்பாக இந்தியாவில்", இது கிராமப்புறங்களை விட வருமானம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் நகர்ப்புறங்களில், புதிய மக்களை வறுமையில் தள்ளுகிறது என்றார் அவர்.

"நிதி பற்றாக்குறையைப் பற்றி சிந்திக்க இது நேரம் அல்ல" என்று திங்க்ரா கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.