கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து, 2030 ஆம் ஆண்டளவில் மீத்தேன் வெளியேற்றத்தை 30% குறைக்க இலக்கு நிர்ணயித்த, உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில், 103 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் மிகப்பெரிய மீத்தேன் உமிழ்வுகளில் சில நாடுகள்--இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா--இதில் கையெழுத்திடவில்லை.

அதிக உமிழ்வுக்கு விவசாயத்துறையில் மீத்தேன் (42%), அதைத் தொடர்ந்து எரிசக்தி துறை (38%) மற்றும் கழிவுகள் (18%) ஆகும். எரிசக்தி துறையில், மொத்த மீத்தேன் வெளியேற்றத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு சுமார் 14% பங்களிக்கின்றன.

இந்தியாவில் எரிசக்தி துறையை விட ஐந்து மடங்கு அதிக மீத்தேன் வாயுவை விவசாயம் வெளியிடுகிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.