ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா, பெல்ஜியம் மற்றும் ஜப்பான் உட்பட 11 நாடுகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலகளாவிய வன நிதி உறுதிமொழியின் ஒரு பகுதியாக, 12 பில்லியன் டாலர்களை வழங்க உள்ளன.

உலகின் 90% காடுகளைக் கொண்ட 137 நாடுகளின் தலைவர்கள், காடுகள் மற்றும் நிலப் பயன்பாடு குறித்த கிளாஸ்கோ தலைவர்களின் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். உலகின் 1.75% காடுகளைக் கொண்ட இந்தியா, இந்த உறுதிமொழியில் கையெழுத்திடவில்லை.

காடழிப்பு, விவசாயம் மற்றும் நில பயன்பாட்டு மாற்றத்துடன், கார்பன் வெளியேற்றத்திற்கு (மின்சாரம் மற்றும் வெப்ப உற்பத்திக்குப் பிறகு) இரண்டாவது முக்கிய காரணமாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டில், காடுகள் பற்றிய நியூயார்க் பிரகடனம் என்று அழைக்கப்படும் முந்தைய ஒப்பந்தம், 2020 ஆம் ஆண்டளவில் காடழிப்பை பாதியாகக் குறைத்து, 2030 க்குள் அதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் காடழிப்பு தொடர்ந்தது.

60,000 மரங்களில் கிட்டத்தட்ட 30% மரங்கள் காடுகளை அகற்றுதல், வாழ்விட இழப்பு மற்றும் மரம் மற்றும் பிற பொருட்களின் நேரடி சுரண்டல் ஆகியவற்றால் காடுகளில் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன.

அதிகாரபூர்வ புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது, ஆனால், 2001 மற்றும் 2020 க்கு இடையில், இந்தியா 1.93 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து, அதாவது, டெல்லியை விட 14 மடங்கு பெரிய பரப்பில், மரங்களை இழந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.