மும்பை: கடந்த 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, மூன்று மாநிலங்களின் -- ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் (ம.பி.), சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், பாரதிய ஜனதா (பா.ஜ.க.) 180 தொகுதிகளை இழந்துள்ளது; காங்கிரஸ் கட்சி 162 தொகுதிகளை பெற்றுள்ளது. 2018, டிச. 11ல் வெளியான தேர்தல் முடிவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் இவ்விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இம்மூன்று மாநிலங்களிலும் 2013 சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜ.க. 377 இடங்களில் வெற்றி பெற்றது; காங்கிரஸுக்கு 118 இடங்களே கிடைத்தன. 2013 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மிஜோராமில் எந்த இடமும் கிடைக்கவில்லை. 2014-ல் உருவான தெலுங்கானாவில், முதல் முறையாக இப்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்துள்ளது.

இதன் பொருள், பா.ஜ.க. 2013 இல் வெற்றி பெற்ற இடங்களில் 48% சதவீதத்தை இழந்தது, காங்கிரஸ் 137 சதவீதத்தை பெற்றது.

இந்தி பேசும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வாக்கு வித்தியாசம் என்பது மிக நெருக்கமாகவே இருந்துள்ளது. 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ராஜஸ்தான், ம.பி. மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வாக்கு விகிதங்கள் முறையே 6, 5, 3 புள்ளிகள் அதிகரித்துள்ளன.

ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிஜோரமில் உள்ள 678 இடங்களில் -- இது, இந்தியாவின் மக்கள்தொகையில் ஆறாவது அல்லது 15.2% கொண்டது -- காங்கிரஸ் கட்சி 305 இடங்களில் வெற்றி பெற்றது (304-ல் வெற்றி, ஒரு இடத்தில் முன்னணி); பா.ஜ.க. 199 இடங்களில் வெற்றி பெற்றது.

மிஜோரம் மற்றும் தெலுங்கானாவில் பிராந்திய கட்சிகள் வெற்றி பெற்றன. இம்மாநிலங்களில் முறையே மிஜோ தேசிய முன்னணி (MNF) மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) வெற்றி பெற்றன. சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்றது (2013-ல் 39); ராஜஸ்தானில் 199-ல் 99 இடங்களில் (2013-ல் 21) வெற்றி வாகை சூடியது. மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் 114 இடங்கள் (2013-ல் 58), பா.ஜ.க. 109 இடங்களில் (2013-ல்165) வெற்றி பெற்றது.

எமது பகுப்பாய்வில் சில சிறப்பம்சங்கள்:

  • மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் 0.1 சதவீதம் முந்திக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் இது, 0.5 சதவிகிதம்.
  • ராஜஸ்தான், ம.பி. சத்தீஸ்கர் மாநிலங்களில், 70%க்கும் மேற்பட்ட மக்கள் கிராமப்பகுதிகளில் வசிக்கின்றனர். இங்கு, விவசாயிகளின் துயர்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், 2018 டிச.6-ல் நாம் குறிப்பிட்டிருந்தபடி விவசாய பிரச்சனைகள் நிலவும் 61% கிராமப்புறங்களின் துயரங்கள், இத்தேர்தலில் எதிரொலிக்கவில்லை.
  • சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் முறையே 43%, 36% மற்றும் 30% இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கானவை. இதில், ராஜஸ்தானை தவிர பா.ஜ.க.விற்கு பத்தாண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது; காங்கிரஸ் சிறந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

ம.பி., ராஜஸ்தானில் குறைந்த வாக்கு விகிதங்கள்

ம.பி. மற்றும் சத்தீஸ்கரில் -- இவ்விரு மாநிலங்களிலும் 2003ஆம் ஆண்டில் இருந்து பா.ஜ.க. 15 ஆண்டுகளாக பதவியில் இருந்தது -- ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசியது. இம்மாநிலங்களில் இதற்கு முன் எந்தவொரு கட்சியும் ஒருமுறைக்கு மேல் பதவியில் இருந்தது.

ம.பி.யில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையிலான வாக்கு விகிதங்கள் முறையே 41 % மற்றும் 40.9% என்று இருந்தது. 2013-ல் இது முறையே 45% மற்றும் 36% என்றிருந்தது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையிலான வாக்கு விகிதங்கள்முறையே 38.8% மற்றும் 39.3% என்றிருந்தது. 2013 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 45% மற்றும் காங்கிரஸுக்கு 33% என்றிருந்தது.

சத்தீஸ்கரில் இம்முறை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முறையே 33% மற்றும் 43% வாக்குகளை பெற்றுள்ளன. கடந்த 2013 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 41%, காங்கிரஸுக்கு 40% வாக்குகள் கிடைத்திருந்தன.

பா.ஜ.க.வின் தோல்வியில் பங்கு வகித்த விவசாய பிரச்சனைகள்

கடந்த 2018 நவ. 30ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து 1,00,000 விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்றனர்; விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. சத்தீஸ்கரில் 80% அல்லது 20.4 மில்லியன், ராஜஸ்தானில் 66% பேர் அல்லது 69 மில்லியன் மக்கள், ம.பி.யில் 55% அல்லது 73 மில்லியன் பேர் என இம்மூன்று மாநிலங்களில், இந்திய மொத்த சராசரியில் 47% பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்தலில் விவசாயிகளின் துயரங்கள் எதிரொலித்துள்ளன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

மத்திய பிரதேசம்: 2015 ஆம் ஆண்டுடனான எட்டு ஆண்டுகளில் இம்மாநிலம் ஆண்டுக்கு 10.9% (இது இந்தியாவில் அதிகபட்சம்) என்ற வேளாண் வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தாலும், இம்மாநிலம் விவசாயிகள் போராட்டங்களை சந்தித்தது என்பதை, 2018 ஆம் ஆண்டு நவ. 30-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு இம்மாநிலத்தில் 1,321 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன; இது, 2013-ல் இருந்து அதிகபட்ச அளவாகும். தேசிய அளவில் விவசாயிகள் தற்கொலை 10% குறைந்த நிலையில், ம.பி.யில் 2016 உடனான இரண்டு ஆண்டுகளில் 21% அதிகரித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்ததில் காங்கிரஸ் 114-ல் வெற்றி பெற்றது; இதில் 79 இடங்கள் முன்பு பா.ஜ.க. வசம் இருந்தவை.

சத்தீஸ்கர்: இந்தியாவின் அரிசி கிண்ணம் என கருதப்படும் இம்மாநிலத்தில் 1,344 விவசாயிகள் - அதாவது ஆண்டுக்கு 519 அல்லது ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விவசாயிகள், 2017 அக்.30ஆம் தேதியுடன் முடிந்த 30 மாதங்களில் சத்தீஸ்கரில் தற்கொலை செய்து கொண்டதாக, 2017 டிச. 21ஆம் தேதி இந்து பிஸினஸ்லைன் செய்தி வெளியிட்டிருந்தது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் 36 தொகுதிகள் முன்பு பா.ஜ.க. வசம் இருந்தவை என்று சமீபத்திய தேர்தல் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான்: மத்தியப்பிரதேசம் போலவே, இங்கும் விவசாய பிரச்சனைகள் உள்ளன. கரீப் (பருவமழை) மற்றும் ரபி (குளிர்கால) பருவ விளைபொருட்கள் உற்பத்தி செலவு கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில் அதற்கான விலைகளை அரசு உயர்த்தியது.

முதலமைச்சர் வசுந்தரா ராஜே, 2018 பிப். மாதம், விவசாயிகளின் கடனில் ரூ. 50,000 தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அளித்திருந்தது.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 199 இடங்களில் 99-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் 74 இடங்கள் முன்பு பாரதிய ஜனதா வசம் இருந்தவை.

தெலுங்கானா: இம்மாநிலம் அமைக்கப்பட்ட நான்கரை ஆண்டுகளில், இங்குள்ள விவசாயிகளும் பெரும் துயரை சந்தித்து வருகின்றனர். 2,190 விவசாயிகள் -- அதாவது ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் என் விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது மாநில காவல்துறை அளித்த புள்ளி விவரங்களில் தெரிய வந்ததாக, 2018 டிச.6ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இம்மாநிலத்தில், 89% கிராமப்புற விவசாயிகள் கடன் சுமையில் தத்தளிக்கின்றனர். இது --52% இந்திய சராசரி-- என்பதைவிட அதிகம். தேசிய அளவில் கடன் சுமையில் ஆந்திராவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இம்மாநிலம் உள்ளது என்று, மாநில அரசு வெளியிட்ட தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மொத்தமுள்ள 119 தொகுதிகளில், டி.ஆர்.எஸ் 88 அதாவது 46.9% வாக்கு விகிதம் பெற்று வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 60 க்கு மேலானது. 2014 ஆம் ஆண்டில் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, அதிகாரத்தில் உள்ள முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், மீண்டும் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

எஸ்சி/எஸ்டி இடங்களில் மூன்றில் ஒரு பகுதியை இழந்த பா.ஜ.க.

சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மொத்தமுள்ள 180 பட்டியலின (எஸ்.சி) மற்றும் பழங்குடியின (எஸ்.டி) தொகுதிகளில் பா.ஜ.க. 120 இடங்கள் அல்லது 66% இழந்துள்ளது. 2013 தேர்தலில் இது 77% இடங்களில் வெற்றி பெற்றது.

அதேநேரம் காங்கிரஸ் 111 இடங்கள் அல்லது 62% தனித்தொகுதிகளில் வெற்றி பெற்று, 2013ஆம் ஆண்டில் 42 இடங்கள் (23%) என்பதை விட கூடுதலாக பெற்றது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மக்கள் தொகையில் 31% பேர் ஆதிவாசிகள் அல்லது பழங்குடியினர் -- இது இந்தியாவில் அதிகபட்ச செறிவுடையது. இதில், பழங்குடியினர் ஆதிக்கம் உள்ள 29 தொகுதிகளில், 2013ம் ஆண்டை விட பா.ஜ.க. இம்முறை செல்வாக்கை இழந்துள்ளது.

பட்டியலினத்தவர்கள் (மக்கள் தொகையில் 13%) மற்றும் பழங்குடியினத்தவர்கள் இணைந்து, சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 90 இடங்களில் 43% இடத்தை கொண்டுள்ளனர்.

பழங்குடியினர் ஆதிக்கமுள்ள பகுதிகளில், 2018ஆம் ஆண்டுடன் 15 ஆண்டுகள் பதவியில் இருந்த முதல்வர் ரமன்சிங்கின் கட்சி, நான்கு தனித் தொகுதிகளையே (14%) வென்றுள்ளது. 2013-ல் இப்பகுதிகளில் 11 தொகுதிகளை வென்ற இக்கட்சி, இம்முறை ஏழு இடங்களில் தோல்வியடைந்தது. 2008ஆம் ஆண்டு பா.ஜ.க. 19 தனித்தொகுதிகளை வென்றிருந்தது.

இதற்கு மாறாக, அதிகபட்ச அளவாக காங்கிரஸ் கட்சி 24 பழங்குடியின தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை பா.ஜ.க. வெற்றி பெற்றதைவிட இது அதிகமாகும். 2013-ல் பா.ஜ.க. வென்ற 18 தொகுதிகள் என்பதைவிட கூடுதலாக 6 இடங்கள் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளன.

பழங்குடியினருக்கான 29 தொகுதிகளில் 12-ல் பதவியில் இருந்தவர்கள் மீதான பழங்குடியின மக்களின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க. ஒன்பது இடங்களையும், காங்கிரஸ் மூன்று இடங்களையும் இழந்துள்ளது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர், ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சத்தீஸ்கரின் பட்டியலினத்தவருக்கான தனித் தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ.க. தவறிவிட்டது. பட்டியலினத்தவருக்கான 10 தொகுதிகளில் பா.ஜ.க. இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. 2013-ல் இது 9 இடங்களை வென்றிருந்தது. 2013-ஐ விட ஒன்று கூடுதலாக, காங்கிரஸ் ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள், 2018 நவம்பரில் இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் பயணம் செய்து எமது குழு கண்டறிந்த தகவல்களையே எதிரொலிக்கின்றன. பழங்குடியினர் பகுதிகளில் வன நில உரிமை தொடர்பான விவகாரத்தில் எழுந்த பதட்டத்தை மாநில அரசு தடுக்கத் தவறியதாக, 2018 நவ. 20-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. இது, பட்டியலின -பழங்குடியின தொகுதிகளில் பதவி வகித்தவர்களின் செயல்பாடுகளில் பிரதிபலித்தது.

சத்தீஸ்கரில், நில உரிமம் கேட்டு 8,87,665 பேர் விண்ணப்பித்த நிலையில் 2.7 மில்ல்யன் ஏக்கர் 4,16,359 பேருக்கு வழங்கப்பட்டது. இது மாநில பரப்பின் 7% அல்லது அதன் வனப்பகுதியில் 18% என, நில உரிமம் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. பாதிக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இன்னும் தங்களுக்கான உரிமைகளை கோரவில்லை என வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆதிவாசி பழங்குடியின மையமான கம்யூனிஸ்ட் வன உரிமைகள் அமைப்பு, கிராம சபைகளை (கிராமக் குழு) கூட்டும் அதிகாரத்தை கொண்டுள்ளது. இது பாரம்பரிய காடுகளை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் - 4.4% அல்லது 18,178 உரிமங்கள் வழங்கியுள்ளது.

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் 21% பேர் பழங்குடி இனத்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள் 16% பேர் உள்ளனர். இங்குள்ள 82 தனித் தொகுதிகளில் (32%), 26 இடங்களை இழந்து, பா.ஜ.க. மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. 2013ஆம் ஆண்டை விட இம்முறை, பட்டியலின மற்றும் பழங்குடி இன தொகுதிகளில் காங்கிரஸின் செயல்பாடு நன்றாக உள்ளது.

பா.ஜ.க. 47 எஸ்.டி. தொகுதிகளில், 15 தொகுதிகளை இழந்து, 16ல் மட்டுமே வெற்றி பெற்றது. 2013-ஆம் ஆண்டில் 31 இடங்களிலும், 2008-ல் 29 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது.

காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது, 2013-ல் 15 இடங்களிலும், 2008ஆம் ஆண்டில் 17 இடங்களையும் மட்டுமே கைப்பற்றி இருந்தது.

அதேபோல், 35 எஸ்.சி. தொகுதிகளில் 17-ல் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இது, 2013-ல் வென்ற 28 என்பதை விட 11 தொகுதிகள் குறைவாகும்; 2008-ல் வெற்றி பெற்ற 25 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை விட, 8 இடங்கள் குறைவு. இம்முறை 18 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸுக்கு, 2013-ஐ விட நான்கு இடங்கள், 2008-ஐ விட ஒன்பது இடங்கள் அதிகமாகும்.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில், 59 இடங்கள் --அல்லது மொத்தமுள்ள 200 இடங்களில் 30%-- பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கானவை.

ஆதிவாதிகளுக்கான 25 தனித் தொகுதிகளில் 10-ல், காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் 18 இடங்களில் வென்ற பா.ஜ.க.வுக்கு இம்முறை எட்டு இடங்களை குறைவாக பெற்றுள்ளது. 2013 தேர்தலில் இப்பிராந்தியத்தில் காங்கிரஸ் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

பட்டியலினத்தவர்களுக்கான 34 இடங்களில், கடந்த பத்தாண்டுகளில் குறைவாக, 2013-ல் 21 என்பதை விடவும் குறைவாக, இம்முறை பா.ஜ.க. 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2008ஆம் ஆண்டில் இது 14 இடங்களை கைப்பற்றி இருந்தது.

2013 தேர்தலில் பட்டியலினத்தவருக்கான அனைத்து தொகுதிகளையும் இழந்த காங்கிரஸ் கட்சி, 2018 தேர்தலில் 21 இடங்களை வென்றுள்ளது. 2008-ல் 18 என்ற எண்ணிக்கையைவிட இது, மூன்று இடங்கள் அதிகமாகும்.

புதுப்பிப்பு: தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவுக்கு பின், இறுதி எண்ணிக்கையை காட்ட, இக்கட்டுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

(சல்தன்ஹா, துணை ஆசிரியர்; பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர். மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்கள் அபிவியக்தி பானர்ஜி, அன்மோல் அல்போன்ஸா மற்றும் சேஜல் சிங் உதவியுடன்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.