கோவிட் சரிவை சரிகட்ட உதவினாலும் கூட கிராமப்புற மகளிர் கூட்டுறவு தொடர்ந்து இருக்க போராடுகிறது
ஒரு வருடத்திற்கும் மேலாக, கிராமப்புற இந்தியாவில் உள்ள சுய உதவி குழுக்களைச் சேர்ந்த, சுமார் 76 மில்லியன் பெண்கள் -சமூக சமையலறைகளை நடத்துவது முதல், முகக்கவசம் தயாரிப்பது வரை, தொற்றுநோயால் ஏற்படும் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடிகளை நிர்வகிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களது உறுப்பினர்களின் வருமான இழப்பு மற்றும் செலுத்தப்படாத கடன்களை சமாளிக்க வேண்டி இருந்தது என்பதை, நாங்கள் காண்கிறோம்.
மும்பை: இந்தியா முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள், கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட சரிவை கையாள்வதில், முக்கிய பங்கு வகித்து வருகின்றன, உறுப்பினர்களின் குறைக்கப்பட்ட வருவாயைக் கையாளும் போதும், கடந்த ஆண்டு முழுவதும் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை ஏற்படுத்தியதாக, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் முழுவதும் உள்ள பெண்கள், நேர்காணலில் எங்களிடம் தெரிவித்தனர்.
"கடந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது," என்று சுஷ்மா தேவி, 45 நினைவு கூர்ந்தார். இவர், மார்ச் 24, 2020 அன்று, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், வடக்கு ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான தரு-காரிகா கிராமத்தில், உடல்நலம் மற்றும் வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டார். "நகரங்களில் இருந்து நிறைய பேர் கிராமங்களுக்கு திரும்பினர்; வேலைகள் இல்லை; மக்களுக்கு வீட்டிலும் போதுமான உணவு இல்லை" என்றார்.
இப்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக, சுஷ்மா மற்றும் அவரது கிராமத்தில் உள்ள அனைத்து சுயஉதவிக் குழு உறுப்பினர்களும், ஏழைக் குடும்பங்களுக்கு உணவளிக்க சமூக சமையலறைகளை நடத்துவதன் மூலம், ரேஷன் பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல வீடுகளுக்கு சமையலறை தோட்டங்களை அமைத்தல் என, தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறார்கள்.
இந்த சுயஉதவிக் குழுக்கள், சுமார் 8-10 பெண்களைக் கொண்டுள்ளன, அவர்கள் தங்கள் சேமிப்பைத் திரட்டுகிறார்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற கடன் வழங்குவதற்கு, நிதித் தொகுப்பை பயன்படுத்துகிறார்கள். 2011 ல் தொடங்கப்பட்ட மத்திய அரசின், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) கீழ் அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், பெண்களுக்கு எளிதாக கடன் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டில், அவர்கள் சுகாதாரப் பணியாளர்களால் பொதுவாக செய்யப்படும் பணிகள் உட்பட அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் (என்ஜிஓ) நிதியுதவியுடன், சமூகப் பணியைச் செய்ய, இந்த பொறுப்புகளையும் தாண்டிச் சென்றுள்ளனர்.
தொற்றுநோயால் ஏற்படும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சவால்களை நிர்வகிப்பதில் கருவியாக நிரூபிக்கப்பட்ட கிராமப்புற இந்தியாவில், கிட்டத்தட்ட 76 மில்லியன் பெண்கள், சுய உதவி முயற்சிகளை எடுத்துள்ளதாக, What Works to Advance Women and Girls in the Economy (IWWAGE) அமைப்பின், அக்டோபர் 2020 அறிக்கை கூறியது . மார்ச் 2020 முதல், மற்றும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் தகவல் பலகையின் ஜூலை 21 தரவுகளின்படி கூறப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கிட்டத்தட்ட 170 மில்லியன் முகக்கவசங்கள், 500,000 பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 500,000 லிட்டர் சானிடைசரை தயாரித்துள்ளன. சமூக சமையலறைகள் மூலம், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரை மில்லியனுக்கும் அதிகமான சமைத்த உணவை, அவர்கள் வழங்கினர்.
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஏழைகளுக்காக 5 லட்சத்திற்கும் அதிகமான உணவுகளை சமைத்தனர்
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, பொருளாதாரம் மற்றும் ஏழை இந்தியர்களின் உணவு உட்கொள்ளலை பாதித்தது: Hunger Watch report எனப்படும் பசி கண்காணிப்பு அறிக்கை- 2020, அக்டோபரில் 11 மாநிலங்களில் இருந்து நேர்காணல் செய்யப்பட்ட 3,994 பேரில் கிட்டத்தட்ட பாதி (44%) பேர், தங்கள் வருமானம் பாதியாகவோ அல்லது கால்வாசியாகவோ குறைந்துவிட்டதாகவும், 45% பேர் உணவுக்காக கடன் வாங்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த நெருக்கடியை சமாளிக்க, சுய உதவி குழுக்கள், கிராமப்புற சமூகங்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை விநியோகிப்பதன் மூலமும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் உதவின என்று, கிராமப்புற சமூகங்களில் ஊரங்கின் குறுகிய கால விளைவுகள் குறித்து, பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்கள் குழு நடத்திய ஆய்வின் ஆரம்ப அறிக்கை தெரிவித்தது. சர்வதேச வளர்ச்சி மையம் (IGC - ஐஜிசி) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தால் ஆதரிக்கப்படும் இந்த ஆய்வு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள 80 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து, 400 சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் அடிப்படை நேர்காணல்கள் மற்றும் நவம்பர் 2020 வரை ஐந்து மாதங்களுக்கு ஒன்பது இரண்டு வாரங்களுக்கு நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.
ஆய்வில் கண்டறியப்பட்ட 70% கிராம பஞ்சாயத்துகளில், சுய-உதவி குழு உறுப்பினர்கள் சமூக உறுப்பினர்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளனர். ஜூலை 21, 2021 வரை, இந்த குழுக்களால் நடத்தப்படும் சமூக சமையலறைகள் 14 மாநிலங்களின் 128 மாவட்டங்களில் 5,00,000-க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கியுள்ளன. 15 மாநிலங்களில் 121 மாவட்டங்களில், 50,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காய்கறி விநியோக யூனிட்டுகளை நடத்தினர்.
மார்ச் 2020 முதல், அரசு ஆலோசனையின் பேரில், சுய உதவிக்குழுக்களும் கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் ஈடுபட்டுள்ளன மற்றும் ஏப்ரல் 2021 முதல், அவர்கள் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் பற்றிய கட்டுக்கதைகளையும் போக்கும் பணியில் ஈடுபட்டனர். தொலைபேசி அழைப்புகள், துண்டு பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், பெண்கள் சரியான முறையில் கை கழுவுதல், சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் நோய் பற்றிய கட்டுக்கதைகளை போக்குவது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குறைந்துபோன வருமானம், அதிகரித்த கடன்
அதிகரித்த செயல்பாடு இருந்தபோதிலும், தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கையாளும் போது, சுய உதவிக்குழுக்கள் வருமான இழப்பை கண்டதால், அதிகரித்து வரும் கடன்களை சமாளிக்க அவை கஷ்டப்பட்டதை, ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
"கோவிட் பொருளாதார தாக்க விளைவுகள் காரணமாக வாழ்வாதார வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக [அதன் தாக்கம்] விவசாயம் அல்லாத வாழ்வாதாரங்களில், இதில் சுய உதவிக்குழுக்களின் பெரும்பான்மையான பெண் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்," என்று, சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையத்தின் (ICRW) தொழில்நுட்ப நிபுணர் நிலஞ்சனா செங்குப்தா கூறினார். "கொள்முதல் திறன், நடமாட்ட கட்டுப்பாடுகள் போன்றவற்றின் சரிவால், பெண்களின் சிறு வணிகங்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.
கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது பிச்சியா தொகுதியில் உள்ள அண்டை ஊராட்சிகளில் இருந்து பல சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பைக் கொண்டுள்ளது. (வழக்கமாக 3,000 உறுப்பினர்களைக் கொண்ட சுமார் 300 சுய உதவிக்களை கொண்டு, ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது). "ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளுடன், செயல்பாட்டில் மந்தநிலை இருந்தது, இதனால் வருமானம் இல்லை" என்று கூட்டமைப்பின் தலைவர் சசி தேவி கூறினார். "ஆனால், கடன்கள் மற்றும் வட்டித் தொகைகள் செலுத்தப்பட வேண்டும். நாங்கள் முகக்கவசம், சானிடைசர்கள் தயாரித்து பஞ்சாயத்துகளுக்கு வழங்கினோம். நெருக்கடியை சமாளிக்க இது போதாது என்றாலும், பணம் சற்று நிவாரணமாக இருந்தது.
அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முகக்கவசம், சானிடைசர்கள் மற்றும் சுய உதவிக்குழுகளால் தயாரிக்கப்பட்ட பிற கோவிட் தொடர்பான தயாரிப்புகளை வாங்கினாலும், முதல் அலைக்குப் பிறகு இவற்றிற்கான தேவை குறைந்தது. "கிராமப்புற இந்தியா மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இரண்டாவது ஊரடங்கு மிகவும் கடுமையானது" என்று, லாப நோக்கற்ற அமைப்பான டிரான்ஸ்ஃபார்மிங் ரூரல் இந்தியா ஃபவுண்டேஷன் (TRIF) கூட்டாண்மை மேலாளர் நிகில் ரதி கூறினார். "சந்தையில் வினியோகம் அதிகளவில் இருந்ததால் முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் தயாரிப்பில், அதிக ஈடுபாடு இல்லை. பொதுத்துறையிலும் இந்த பொருட்களுக்கு அதிக தேவை இல்லை" என்றார்.
சமையல் கூடம் நடத்துவதற்கு இழப்பீடு இல்லை
இந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டாலும், சமூக சமையல் கூடம் நடத்துவதற்கு அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். ஏழைக் குடும்பங்களுக்கு உணவு அளிப்பதற்காக 'முதலமைச்சர் தீதி சமையல் கூடம்' முயற்சியின் கீழ் இயங்கும் இந்த சமூக சமையல் கூடங்களுக்கு, அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது. சுய உதவி குழுக்களுக்கு மற்ற பொருட்கள் மற்றும் சமையல் எரிபொருளுக்கு சிறிது பணம் வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று, ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ மாவட்டம் துமர்குடர் கிராமத்தில், 360 சுயஉதவிக் குழுக்களின் கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்பான, ஜாக்ருதி மகளிர் சங்கத்தின் செயலாளர் சுனிதா தேவி கூறினார். "கடந்த ஆண்டு சமூக சமையலறை கூடம் நடத்துவதற்கு எங்களுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை" என்றார்.
பெண்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஈடுசெய்யப்பட்டால், அது அவர்களுக்கு உதவி இருக்கும், ஏப்ரல் மாதத்தில் சமையல் கூடங்களை மீண்டும் தொடங்குமாறு அரசு அவர்களிடம் கேட்டபோது, உணவுப் பொருட்கள் வழங்கவில்லை என்று கூறி, அவர்கள் மறுத்தனர்.
கடன் திருப்பிச் செலுத்துவதில் தாமதம்
ஒடிசாவைச் சேர்ந்த 423 சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் IWWAGE கணக்கெடுப்பில், ஜூலை 2020 இல் நடத்தப்பட்ட IWWAGE கணக்கெடுப்பில், 10 இல் எட்டுப் பெண்கள், தங்கள் சுய உதவிக்குழுவைத் தேவையான நேரத்தில் அணுகலாம் என்று கூறினர். சுய உதவி குழு பெண்களுக்கு அவசர கடன்கள், சேமிப்பு மற்றும் தகவல்களைப் பெறுவதற்கான விருப்பமான வழி என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அக்டோபர் மற்றும் நவம்பர் 2020 க்கு இடையில் நடத்தப்பட்ட 10 மாநிலங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000 பெண்கள் மற்றும் 2,300 ஆண்கள் பற்றிய ஆய்வில், சராசரியாக 42% பெண்கள் என்ற விகிதத்திற்கு எதிராக, சுய உதவி குழு உறுப்பினர்கள அதிக கடன் விகிதத்தை (59%) எதிர்கொண்டது கண்டறியப்பட்டது. மே 2021 இல் வெளியிடப்பட்ட அறிக்கை, உலகளாவிய ஆலோசனை நிறுவனமான டால்பெர்க்கால் நடத்தப்பட்டது.
ஆனால், வாங்கிய கடன்களை திருப்பித்தர, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். சுனிதா தேவி கூறுகையில், "அனைவருக்கும் தேவைக்கேற்ப நாங்கள் சிறிது பணம் கடன் கொடுத்தோம். "ஆனால் இரண்டாவது அலையின் போது பூட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டை விட பல உறுப்பினர்கள் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. கஷ்டப்பட்டவர்களுக்காக சில கடன் தொகையை நாங்கள் தள்ளுபடி செய்தோம், மீதமுள்ள தொகையை எப்போது முடியுமோ அவ்வளவு செலுத்துமாறு அவர்களிடம் கேட்டோம்.
தாரு-கரிகா கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மா தேவி கூறுகையில், "முன்பிருந்த மக்களால் மாதந்தோறும் ரூ.500 தவணை திருப்பிச் செலுத்த முடிந்தால், [தொற்றுநோயால்] இது மாதத்திற்கு ரூ.100-200 ஆகக் குறைந்தது. "நாங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டதால், யாருக்கும் கடன் தொடர்பாக நெருக்கடி தரவில்லை. ஆனால் பணம் செலுத்துவதை தாமதப்படுத்துவது என்பது அதிக வட்டி மற்றும் அதிக வட்டி விகிதங்களையும் குறிக்கிறது" என்றார்.
தீன்தயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் (DAY-NRLM) தொற்றுநோய்க்கு முன்னர், சுய உதவிக்குழுக்களில் இருந்து அதிகமான பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட போதிலும், சராசரி பெண்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டால்பெர்க் ஆய்வு கண்டறிந்துள்ளது. அதிகமான சுய உதவிக்குழு பெண்கள், ஊதியம் பெறும் வேலையை இழந்தனர், சராசரியாக, அவர்கள் இரு தரப்பினருமே அதிக வருமானத்தை இழந்தனர் மற்றும் அனைத்து பெண்களையும் விட மெதுவான வருமான மீட்பை அனுபவித்தனர் என்று அறிக்கை கூறுகிறது.
பொருளாதாரத்தில் பாதகமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, நெருக்கடி மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய நிதியைப் பற்றி (ஒருவேளை பணப் பரிமாற்றங்கள் மூலம்) அவசர அவசரமாக சிந்திக்க வேண்டும், நீட்டிக்கப்பட்ட தடைக்காலம் அல்லது ஏற்கனவே உள்ள கடன்களுக்கான நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் அட்டவணை என்று, IWWAGE இன் தலைவர் சவுமியா கபூர் மேத்தா இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.
சுய உதவிக்குழுகளை சேர்ந்த பெண்களின் சொந்த பொருளாதார மீட்பு மற்றும் பின்னடைவை ஆதரிப்பதில் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் சமமாக கவனம் செலுத்த வேண்டும் என்று, டால்பெர்க் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
பாகுபாடு, வழிகாட்டல் இல்லாமை மற்றும் வெளிப்படைத்தன்மை
பல ஆண்டுகளாக, சுய-உதவி குழு மாதிரியானது வீட்டு வருமானத்தை மேம்படுத்துவதற்கும், பெண்களின் பேச்சு அதிகாரம் மற்றும் நிறுவனத்தை அதிகரிப்பதற்கும் பாராட்டப்பட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் திட்டத்தின் வளர்ச்சி பாகுபாடு, வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றால் மட்டுப்படுத்தப்பட்டதாக கூறுகின்றனர்.
"விஷயங்கள் நிற்கும்போது, சுய உதவி குழுக்கள் சமூக வள நபர்களால் உருவாக்கப்படுகின்றன, அவை குழுவிற்கு சிறிது காலம் வழிகாட்டியிருக்கலாம், பொதுவாக நான்கு வாரங்கள், பின்னர் முன்னேறும்," என்று சர்வதேச மதிப்பீட்டிற்கான தாக்க மதிப்பீட்டின் (3ie) மூத்த மதிப்பீட்டு நிபுணர் பிடிஷா பரூவா கூறினார். "[இருப்பினும்] புதிய உறுப்பினர்கள் சேரும்போது, அவர்கள் பெரும்பாலும் அசல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர பயிற்சியைப் பெறுவதில்லை. நிச்சயமாக, சக கற்றல் நடக்கிறது, ஆனால் நாம் தர மேம்பாட்டை துரிதப்படுத்த விரும்பினால் புத்துணர்ச்சி பயிற்சி தேவை" என்றார்.
குழு தொகுப்பு-நிலை கூட்டமைப்புகள் மற்றும் கிராம அமைப்புக்கள் மூலம் சுய உதவி குழுக்களுக்கு முக்கியமான தகவல்கள் உள்ளடங்கும் தற்போதைய அமைப்பு, சில பெண்களை அரசு திட்டங்களில் இருந்து, குறிப்பாக வாழ்வாதார வாய்ப்புகள் தொடர்பான திட்டங்களில் இருந்து விலக்க வழிவகுக்கிறது என்று, ஐ.சி.ஆர்.டபிள்யு-வின் நிலஞ்சனா செங்குப்தா கூறினார். பொதுவாக, என்ஆர்எல்எம் அதிகாரிகள் கிளஸ்டர்-நிலை கூட்டமைப்பு கூட்டங்களில் திட்டம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அதன் உறுப்பினர்கள் கிராம அமைப்பு கூட்டங்களில் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும், அதன் உறுப்பினர்கள் அந்தந்த சுய உதவிக்குழுக்களுக்கு மேலும் தகவல்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று, செங்குப்தா விளக்கினார். "மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் உருவாக்கிய ஆராய்ச்சியில், இந்த தகவல்களில் சில இந்த முறையான முறையில் ஊடுருவாமல் இருப்பதைக் கண்டறிந்தோம், மேலும் சில தலைவர்கள் அந்தத் தகவலை தங்களுக்கோ அல்லது தங்கள் சொந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
மேலும், சுய உதவிக்குழுக்களை கடன்/சிக்கனப் பாத்திரத்திற்கு மட்டுப்படுத்துவது எப்போதும் பெண்களுக்கு அதிக ஏஜென்சியைக் கொடுக்காது, ஏனெனில் அவை குடும்பங்களுக்கு நிதி ஓட்டத்திற்கான வெறும் சேனல்களாக முடிவடைகின்றன, என்றார் செங்குப்தா. "தீன்தயாள் அந்தியோதயா யோஜனா- தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்குள், பாலின லென்ஸை ஒருங்கிணைப்பது முக்கியமான வழி" என்று அவர் மேலும் கூறினார்.
முன்னணியில் இருந்து, சுய உதவி குழுக்கள் தொற்றுநோய்களின் போது வீடுகளுக்கு பின்னடைவை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தன மற்றும் முன்னோக்கிச் செல்கின்றன, நிறுவனங்களுடனான அவர்களின் தொடர்புகளை வலுப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் அதிக தேவை உள்ளது என்று, IWWAGE இன் கபூர் மேத்தா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார், "உணவு, நீர், சுகாதாரம், குழந்தை பராமரிப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
(பிரகதி ரவி, இந்தியா ஸ்பெண்டில் பயிற்சியாளரான இந்த அறிக்கைக்கு பங்களித்தார்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.