ஜோர்ஹத் (அஸ்ஸாம்), கண்ணூர் (கேரளா) மற்றும் பஹ்ரைச் (உத்தரபிரதேசம்): தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் (MGNREGS - எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) கீழ், வேலை அட்டையானது ஒருவருக்கு என்ன அர்த்தத்தை தருகிறது?

கேரளாவின் கண்ணூரில், நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரியும் அறுபது கடந்துவிட்ட ஜானகி* என்பவரைப் பொறுத்தவரை, அவருடைய நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அவருடைய குடும்பத்திற்கு நிதி பங்களிப்பு செய்வதற்கும் இது அர்த்தம். "நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தில் பணியிடம் எனக்கு ஒரு வலையமைப்பு பகுதியாகவும், எனது நண்பர்களை காண்பதற்கான ஒரு இடமாகவும் செயல்படுகிறது. நாங்கள் பணிபுரியும் போது எங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுகிறோம், விவாதிக்கிறோம், என் வீட்டுக்கு நிதி பங்களிப்பு செய்ய முடிகிறது,"என்று, பிரகாசத்துடன் அவர் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சின் உர்ரா கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான சரோஜ் ஜெய்ஸ்வாலுக்கு, வேலை அட்டை என்பது கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அதிகாரம் மற்றும் இடத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு கருவி என்று பொருள். "வேலை அட்டைகளுக்கான எனது போராட்டத்தில், எனது கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, பஞ்சாயத்து தலைவருடன் பணி தொடர்பான ஒரு உறவை ஏற்படுத்த முடிந்தது" என்று ஜெய்ஸ்வால், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்". ஹாம் பிரதான் அவுர் சச்சிவ்-ஜி சே காம் நிகால்வானா சீக் கயே ஹைன். அவுர் வோ வேலை அட்டை கே மத்யம் சே ஹுவா ஹை! "( எங்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் இருந்து எவ்வாறு வேலைகளைச் செய்வது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம், எங்கள் வேலை அட்டைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு நன்றி).

இவ்விரண்டு பெண்கள் கதைகள் வழியாக கிடைக்கும் பொதுவான விஷயம், அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களின் (சுய உதவிக்குழுக்கள் அல்லது பெண்கள் கூட்டு முயற்சி) உறுப்பினர் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், 1990களில் நாடு முழுவதும் செயல்படும் பல சுய உதவிக்குழுக்கள், தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (NRLM - என்.ஆர்.எல்.எம்) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன - இது, கிராமப்புற வருமானத்தை உயர்த்துவதற்கும், பெண்கள் கூட்டு முயற்சி வாயிலாகவும் வறுமையை ஒழிப்பதற்குமான ஒரு மத்திய அரசு திட்டம்.

ஜானகி, ஜெய்ஸ்வால் போன்ற பல லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் சுய உதவிக் குழுக்களைப் பயன்படுத்தி கிராம சமுதாயப் பணிகளை கோருவதற்கும், தங்கள் கிராம பஞ்சாயத்துகளுடன் இடம் மற்றும் அதிகாரத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், நண்பர்களைப் பிடிக்கவும் அல்லது வேலைச்சூழலில் அல்லது வலையமைப்பிற்கு கற்றுக் கொண்டனர்.

இது, இந்த கூட்டுப்பணிகளை மேம்படுத்துவதோடு கிராமப்புற வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொள்ளவும் உதவியது என்பதை கேரளா, உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் முழுவதும் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுடனான எங்கள் உரையாடலின் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டோம்.

என்.ஆர்.எல்.எம் & எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன

இந்தியாவின் 600 மாவட்டங்களில் 70 மில்லியன் கிராமப்புற ஏழைக் குடும்பங்கள், 6,000 ஒன்றியங்கள், 250,000 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 600,000 கிராமங்களை சுய நிர்வகிக்கும் சுய உதவிக்குழுக்கள் மூலம் உள்ளடக்குவதற்கும் அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்கும் 2011 ஆம் ஆண்டில் என்ஆர்எல்எம் ஒரு செயல் திட்டத்தை கொண்டு வந்தது.

கிராமப்புறங்களில், பெண்கள் தங்கள் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுய உதவிக் குழுக்களின் கீழ் ஒன்று சேர்கின்றனர், அதாவது வாராந்திர சேமிப்பில் ஈடுபடுவதன் மூலம் ஒரு நிதி தொகுப்பை உருவாக்குகின்றனர். 'சிக்கனம்' மற்றும் 'கடன்' எனப்படும் நடவடிக்கைகளுக்கு - தனிப்பட்ட திட்டங்கள், அவசரநிலைகளில் அல்லது நெருக்கடியான சூழலில் தேவைப்படும் போது பெறுகின்றனர். அவர்களின் பங்கேற்பு திட்டமிடல் செயல்முறை விவாதங்கள் மற்றும் அவர்களின் கிராமங்களின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை உருவாக்குவது ஆகியன அடங்கும்.

ஆறு மாதங்களுக்கு வழக்கமான சிக்கனம் மற்றும் கடன் நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுய உதவிக்குழுக்கள் என்.ஆர்.எல்.எம். குறைந்த வட்டி விகிதத்தில் கடன், வருமானம் ஈட்டும் வாய்ப்புகள், சமூக நிதிகள், ஆதரவு கட்டமைப்புகள், அத்துடன் அரசால் நடத்தப்படும் வறுமை ஒழிப்பு திட்டங்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் நேரடி அணுகல் ஆகியவற்றில் கடன் பெற இது அவர்களுக்கு வழி வகுக்கிறது.

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் ஒரு முக்கிய வறுமை ஒழிப்பு திட்டமாகவும், சுய உதவிக் குழு நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் மற்றும் என்.ஆர்.எல்.எம் இரண்டும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் (MoRD) மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன.

ஆயினும்கூட, மத்திய பட்ஜெட்- 2020-21 (பட்ஜெட்-2021) ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டோடு ஒப்பிடும்போது என்ஆர்எல்எம் ஒதுக்கீட்டை 48% க்கும் மேலாக அதிகரித்து, எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஒதுக்கீட்டை சுமார் 35% குறைத்தது. செப்டம்பர் 2020 இல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது போல, தொற்றுநோயால் ஏற்பட்ட துயரை தணிப்பதில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது மற்றும் சிறந்த ஒதுக்கீட்டிற்கு தகுதியானது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.

கிராமப்புற வளர்ச்சியில் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை அதிகரிக்க எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் உதவியது, மேலும் சுய உதவியாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, இந்த துறையில் எங்கள் தொடர்புகள் காட்டியது போல - எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பணிகள் தேவை ஆகும். .

சுய உதவிக்குழுக்கள் தங்களது கிராம வறுமை குறைப்பு திட்டங்களில் (VPRP- வி.பி.ஆர்.பி) அதிக எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் பணிகளைத் தேடி வருகின்றன, இதில் உரிமை, வாழ்வாதாரம், அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கோரிக்கைகள் உள்ளன. இந்தத் திட்டங்களில் கோரப்படும் வேலைகள் நடைபாதைகளை பழுதுபார்ப்பது முதல் குளங்களைத் தூர்வாருவது வரை - எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் வரம்பிற்குள் மேற்கொள்ளக்கூடிய கிராமப்புற வேலைகள் ஆகும்.

உதாரணமாக, அசாமின் டின்சுகியாவில் உள்ள திமோருகுரி கிராம பஞ்சாயத்து வழக்கைக் கவனியுங்கள். இங்கு, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் கிராமத்திற்கு நீர்ப்பாசன வடிகால் அமைக்க வேண்டும் என்று கோரினர். இந்த கோரிக்கை எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸின் கிராம அளவிலான செயல்பாட்டாளர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது.

வடிகால் தேவைப்பட்ட அதே சுய உதவிக்குழு பெண்கள், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். சுய உதவிக்குழு பெண்களுக்கும் பஞ்சாயத்துக்கும் இடையிலான இந்த ஒருங்கிணைப்பு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸை சிறப்பாக செயல்படுத்தவும், அவர்களின் கூட்டு ஒற்றுமையை வலுப்படுத்தவும், என்.ஆர்.எல்.எம் இன் சில நோக்கங்களை நிறைவேற்றவும் ஒன்றிணைந்து செயல்பட அவர்களுக்கு உதவியது.

"பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளும் பெண்களும், என்.ஆர்.எல்.எம் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக உள்ளனர், ஏனெனில் இரண்டு திட்டங்களும் ஏழை வீடுகளுக்கு [வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதை] நோக்கமாகக் கொண்டுள்ளன. எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ்ஸில் நடக்கும் அணிதிரட்டல் செயல்முறை மற்றும் கல்வி உரிமைகள் என்.ஆர்.எல்.எம் பெண்களின் உரிமைகளை உணர்ந்த வலுவான கூட்டமைப்புகளை உருவாக்க உதவுகிறது" என்று, மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழு நெட்வொர்க்குகளை ஒன்றிணைக்கும் கேரளாவைச் சேர்ந்த குடும்பஸ்ரீ தேசிய வள அமைப்பின் திட்ட மேலாளர் மனு சங்கர் எஸ் தெரிவித்தார்.

கேரளத்தின் மாதிரி

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழு நெட்வொர்க்குகள் இடையே ஒருங்கிணைப்பின் இத்தகைய தோற்றத்தை கேரளாவில் காணலாம், அங்கு மாநிலத்தின் பரந்த சுய உதவிக் குழுக்கள் - குடும்பஸ்ரீ என்று அழைக்கப்படுகின்றன - அதன் பஞ்சாயத்துகளுடன் (உள்ளூர் சுய அரசாங்கங்கள்) ஒத்துழைத்தன. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸை மாநிலத்தில் செயல்படுத்துவதில் குடும்பஸ்ரீ எவ்வாறு முக்கிய பங்கு வகித்தது என்பதை இந்தியாஸ்பெண்ட் முன்பு தெரிவித்து இருந்தது.

கேரளாவில் அண்டை குழுக்கள் என அழைக்கப்படும் சுய உதவிக்குழுக்கள், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேலை வாய்ப்புகளை அடையாளம் காண்பது, வேலைக்கு குழுக்களை அணிதிரட்டுதல், மேற்பார்வையாளர் அல்லது பொறியியலாளருடன் கலந்தாலோசித்து மதிப்பீடுகளைத் தயாரித்தல், பணிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் பணியிடத்தில் வசதிகளை வழங்குதல், தயாரித்தல் மற்றும் வருகை பதிவை சமர்ப்பித்தல் மற்றும் அவசரநிலைகளை பணியில் கையாளுதல் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றி வருவதாக, கே.பி. கண்ணன் மற்றும் என்.ஜகஜீவன் ஆகியோரின் 2013 ஆய்வு தெரிவிக்கிறது.

பின்னர், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்-யின் பணிகளை மேற்கொள்வதிலும் கையாளுவதிலும் குடும்பஸ்ரீயின் பங்கை கேரள அரசு முறைப்படுத்தியது. அனைத்து எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் "தோழர்கள்" (பணி மேலாளர்கள்) குடும்பஸ்ரீ சுய உதவிக்குழு வலையமைப்பில் இருந்து நியமிக்கப்படுவார்கள், அது முடிவு செய்யப்பட்டது, மேலும் கேரளாவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்ததாக, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் போர்ட்டல் தரவுகள் காட்டுகின்றன.

2010-2020 வரையிலான எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்ஸில் பெண்கள் பங்கேற்பு விகிதத்தின் 10 ஆண்டு சராசரி கேரளாவுக்கு 91% ஆகும், இது தேசிய சராசரியான 53% ஐ விட அதிகம் என்று போர்டல் காட்டுகிறது. பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பது கேரளாவில் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் தொழிலாளர் குழுக்களில் 90% பெண்களைக் கணக்கிட வழிவகுத்தது - நாட்டின் பிற மாநிலங்களைவிட மிக உயர்ந்தது என்பதை, குடும்பஸ்ரீ 2015 அறிக்கையை சுட்டிக்காட்டியது.


எம்.டி.என்.ஆர்.இ.ஜி.எஸ் செயல்பாட்டில் குடும்பஸ்ரீ உறுப்பினர்களுக்கு முக்கிய பங்கு கொடுப்பது அவர்களின் சமூக தெரிவுநிலையையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. இது குடும்பஸ்ரீ வலையமைப்பை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்தி உள்ளது, இதன் விளைவாக ஏழைப் பெண்கள் சமூகத் தலைமைக்கான அணுகலை அதிகரித்துள்ளது என, 2013 அறிக்கையில் மாநில உள்ளாட்சி சுய அரசுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் கூறினார்.

வேலை அட்டைக்கான போராட்டம்

எவ்வாறாயினும், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் செயல்முறையை செயல்படுத்துவதில் சுய உதவிக்குழு பெண்களை மையமாக்குவதற்கும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலுக்கான "முதன்மை அதிகாரிகள்" என்ற சுய உதவிக்குழு நெட்வொர்க்குகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமுகப்படுத்துதல் தேவைப்படுகிறது என, கேரள அரசின் முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.எம். விஜயானந்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

பரவலாக்கப்பட்ட திட்டமிடல், உள்ளூர் சுய-அரசுகள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் குடும்பஸ்ரீ நெட்வொர்க் ஆகியவற்றின் அனுபவம் காரணமாக, குடும்பஸ்ரீயை எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் செயல்படுத்தும் கூட்டாளராக கேரளாவால் மாற்ற முடியும், ஆனால் தில் மற்ற மாநிலங்களின் அனுபவங்கள் வேறுபட்டவை.

உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள உர்ரா கிராமத்தின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே கிராம பஞ்சாயத்து பெண் தலைவர் வீட்டுக்கு கட்டுப்பட்டவர். அவர் சார்பாக அனைத்து முடிவுகளையும் எடுப்பது அவரது கணவர்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வேலை அட்டை பெற சரோஜ் ஜெய்ஸ்வால் உண்மையான தலைவரான கணவரை ('பிரதான்' என்று அழைக்கப்பட்டார்) அணுகியபோது, ​​அவர் இந்த திட்டத்தின் கீழ், கையால் பணி செய்து உழைக்க பெண்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி, அவரை நிராகரித்தார்.

உர்ராவில் உள்ள சுய உதவிக்குழுக்கள் பலவற்றில் பெண்கள் பலர் இதேபோன்ற நிராகரிப்புகளை எதிர்கொண்டனர். ஜெய்ஸ்வால் உட்பட பலருக்கு, அவர் பஞ்சாயத்து தலைவரே இல்லை என்பது கூட தெரியாது, அவரது மனைவியின் இடத்தில் மட்டுமே பணியாற்றுகிறார்.

ஜெய்ச்வால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை கூட்டாக அணுக பெண்களை அணிதிரட்டினார், மேலும் பெண்களால் கையால் கடினமான வேலை செய்ய முடியும் என்பது குறித்து தங்களுக்கான இட ஒதுக்கீடு உரிமையை கோரினார். "பஞ்சாயத்து தலைவர் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒரு வேதனையான முயற்சி, நாங்கள் [பஞ்சாயத்து தலைவரின் கணவரை] மீண்டும் மீண்டும் அணுக வேண்டியிருந்தது. அவர் எங்களில் சிலரை கூட மிரட்டினார், அதனால்தான் நாங்கள் அவரிடம் ஒரு குழுவாகச் சென்றோம்," என்று ஜெய்ஸ்வாலும். அவரது நண்பர்களும் இந்தியா ஸ்பெண்டிடம் விளக்கினர். முன்னும் பின்னுமாக பேசிய அவர், இறுதியாக உள்ளே நுழைந்தார். "அப்போதுதான் எங்களது கூட்டு வலிமையை உணர்ந்தோம்," என்று ஜெய்ஸ்வால் கூறினார், "ஆண்கள் இனி நம்மைத் தடுக்க முடியாது, நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தால் போதும்" என்றார்.

அத்துடன், இந்த பெண்கள் இப்போது தங்கள் கிராம வறுமை குறைப்பு திட்டத்தை (VPRP - வி.பி.ஆர்.பி) பயன்படுத்தி பஹ்ரைச்சின் 10 பஞ்சாயத்துகளில் 938 வேலை அட்டைகளுக்கான கோரிக்கையை வைத்துள்ளனர் என்று கள அளவிலான ஆவணங்கள் காட்டுகின்றன. சுமார் 120 பெண்களுக்கு ஏற்கனவே வேலை அட்டைகள் கிடைத்துள்ளன. இந்த கிராமங்களில் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் சமூகப் பணிகளுக்கும் - அதாவது குளம் வறட்சி முதல் அங்கன்வாடி மைய பழுது வரை 177 வகையான மேம்பாட்டுப் பணிகளுக்கும் வி.பி.ஆர்.பி கோரிக்கை வைத்துள்ளது,


உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் உள்ள உர்ரா கிராமத்தில் பெண்களுக்கு வேலை அட்டைகள் விநியோகிக்கப்படுவது குறித்து உள்ளூர் நாளிதழ்களில் வெளியான செய்தி. கூட்டு நடவடிக்கையின் மூலம்தான் சுய உதவிக்குழுக்களின் பெண்கள் உறுப்பினர்கள், எதிர்ப்பை முறியடித்து வேலை அட்டைகளைப் பெற முடிந்தது.

அசாம் கதை

இதேபோன்ற கதை கிராமப்புற அசாமில் உள்ளது. ஜோர்ஹாட் மாவட்டத்தின் 10 பஞ்சாயத்துகளில் மட்டும், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தங்கள் வி.பி.ஆர்.பி மூலம் வேலை அட்டைகளுக்கான 2,743 கோரிக்கைகள் வந்துள்ளதாக, கள அளவிலான தரவுகள் தெரிவிக்கின்றன (மாநிலங்கள் முழுவதும், இந்தத் தரவைப் புதுப்பிப்பது இன்னும் செயல்பாட்டில் உள்ளது). அசாம் முழுவதும், 90% கிராம பஞ்சாயத்துகளில் உள்ள சுய உதவிக்குழு வலையமைப்புகள் கிராம மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்துள்ளன.

இந்த கோரிக்கைகளில் சில ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, ஜோர்ஹாட்டின் கிராம பஞ்சாயத்து எண் 46 இல், 400 வேலை அட்டைகளுக்கான கோரிக்கை தொடர்பான 200 ஆவணங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன, மேலும் 61 வேலை அட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.

"இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: ஒன்று இல்லாத பெண்களுக்கு புதிய வேலை அட்டை உருவாக்கப்பட வேண்டும்; குடும்பங்களின் வேலை அட்டை வைத்திருந்த பெண்களின் பெயர்கள் சேர்க்கப்பட வேண்டும், ஆனால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை," என்று, ஜோர்ஹாட்டில் உள்ள ஒருங்கிணைப்பு திட்டம் ஒன்றில் பணிபுரியும் போர்னாலி போரா கூறினார்.


கிராம திட்டமிடல் படம் இது. வலது புறம் முதல் நெடுவரிசை என்பது திட்டத்தில் இருந்து பெறப்பட்ட மொத்த வேலை அட்டைகளின் எண்ணிக்கை.

கடந்த 2020 அக்டோபரில் உருவாக்கப்பட்ட ஸ்வா நிர்பர் நரி-ஆத்மா நிர்பர் ஆக்சோம் என்ற திட்டத்தின் மூலம், சுய உதவிக்குழு வலையமைப்புகள் மற்றும் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஒருங்கிணைப்பு என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டது. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் 372,000 க்கும் மேற்பட்ட நிலையான தனிநபர் சொத்துக்கள் மற்றும் 822 சமூக சொத்துக்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும், இது முதல் கட்டத்தில் 400,000 குடும்பங்களுக்கு பயனளிக்கும். இந்த எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் பணி, சுய உதவிக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும்.

"எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் எங்களுக்கு கிராமத்தில் வேலை வழங்குகிறது, இது உதவியாக இருக்கும், ஏனென்றால் இங்கு கிராமத்திற்குள் தனியார் வேலைக்கு வாய்ப்புகள் குறைவு. இது எங்கள் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாதது," என்று, ஜொர்ஹாட்டில் உள்ள போர்ஹோல்லா கிராம பஞ்சாயத்தை சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் அமைப்பாளர் சைக்கியா கூறினார், இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.என்.ஆர்.இ.எஸ் திட்டத்தில் வேலைக்கு சேர்ந்தவர். "இதில் ஒரு அங்கமாக இருப்பதால் எனக்கும் சுய உதவிக் குழுவில் உள்ள எனது சகோதரிகளுக்கும் இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தியுள்ளது" என்றார்.

*அடையாளத்தைப் பாதுகாக்க பெயர் மாற்றப்பட்டது

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை
respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.