மும்பை மற்றும் திருவனந்தபுரம்: 2016 ஆம் ஆண்டில், மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 32 வயதான பூஜா* சொந்த அழகு நிலையம் தொடங்கவும், தனது நிபந்தனைகளுக்கேற்ப பணம் சம்பாதிக்கவும் அதுதான் நேரம் என்று முடிவு செய்தார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கடனில்டான் மூழ்கினார், அதிலிருந்து வெளியேற அவர் சிரமப்பட்டபோது, ​​ஆன்லைன் தளமான அர்பன் கம்பெனியின் ஸ்பா நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். இப்போது, ​​அவர் அந்த பாதையை விட்டு வெளியேற விரும்பவில்லை.

அழகு நிலையத்தை நடத்த, பூஜாவுக்கு அறை எடுத்து வாடகை செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டியிருந்தது; அப்படியே செய்தாலும் வாடிக்கையாளர் எவ்வளவுபேர் வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பூஜா கூறினார். "மொபைல் செயலி மூலம், எனக்கு செலவுகள் இல்லை, அத்துடன் என்னால் அதிகம் சம்பாதிக்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

அர்பன் கம்பெனி, முன்னர் அர்பன் கிளாப் என்று அழைக்கப்பட்டது, இது மொபைல் செயலி அடிப்படையிலான தளமாகும், இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே ஆரோக்கியம் மற்றும் அழகு சேவைகளுக்கான பயிற்சி பெற்ற நிபுணர்களை அனுப்பி சேவை வழங்குகிறது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்நிறுவனம் கிட்டத்தட்ட 20,000 சேவை நிபுணர்களைக் கொண்டிருப்பதாக, பொருளாதாரத்தில் மகளிர் மற்றும் வளரிளம் பெண்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் (Initiative for What Works to Advance Women and Girls in the Economy - IWWAGE) என்ற அமைப்பின் ஜூன் 2020 அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிபுணர்களில் கிட்டத்தட்ட 40% (8,000) பேர் பூஜா போன்ற பெண்கள்.

அர்பன் கம்பெனி, ஹவுஸ்ஜாய், உபெர், ஓலா, ஸ்விக்கி, டிஜிட்டர் சேவை மற்றும் செயலி சார்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குபவர்களுடன் இவர்களை இணைக்கும் பெரும் பொருளாதாரம், இந்தியாவின் வளர்ந்து வருகிறது. ஆக்ஸ்போர்டு இன்டர்நெட் இன்ஸ்டிடியூட்டின் ஆன்லைன் தொழிலாளர் குறியீட்டின்படி, உலகளாவிய ஆன்லைன் தொழிலாளர்களில் 24% உள்ள பெரும் தொழிலாளர்கள், அதிக எண்ணிக்கையில் இந்தியா உள்ளனர். மேலும், பாதை அடிப்படையிலான பெரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டில் 85 லட்சத்தில் இருந்து 2017ம் ஆண்டில் 1.17 கோடியாக, 2018ம் ஆண்டில் 1.5 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக, மதிப்பீடுகள் காட்டுகின்றன.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியானது, கிக் எகனாமி எனப்படும் பெரும் பொருளாதாரத்தை, ஒரு பொருளாதார அமைப்பாகவே வரையறுக்கிறது, இதில் நிரந்தர வேலைகளை விட பல குறுகிய கால வேலைகள் கிடைக்கின்றன. பெரும் பொருளாதாரம் ஃப்ரீலான்சிங் - ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய அனைத்து வகையான குறுகிய கால வேலைகளையும், மற்றும் ஆன்லைன் தளங்களில் சேவைகள் வழங்குதல்களையும் உள்ளடக்கியது. எவ்வாறாயினும், பெரும் பொருளாதாரத்தில் ஒவ்வொரு குழுவிலும் பிரச்சினைகள் வேறுபடுவதால், இந்த கட்டுரையில், பிந்தைய பிரசனைகள் குறித்து மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

சம்பாதிக்கும் திறன் மற்றும் நெகிழ்வான வேலை நேரம் தரும் இந்த மொபைல் செயலிகள் பெண்களை ஈர்த்துள்ள நிலையில், தொழில் ரீதியான பிரித்தல், பாலின ஊதிய இடைவெளிகள் மற்றும் சமூக பாதுகாப்பு சலுகைகள் இல்லாதது போன்ற பிரச்சினைகள், இந்த புதிய ஆன்லைன் வேலை வாய்ப்புகளிலும் பெண்களை தொடர்கின்றன. மேலும், பாதையை அடிப்படையாகக் கொண்ட பெரும் பொருளாதாரம் பெண்களின் வருவாயை அதிகரிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் உதவியது, பெரும்பாலும் நகர்ப்புற நிகழ்வாகத்தான் உள்ளது.

புதிய வாய்ப்புகள், பழைய தடைகள்

கவிதா* 12 வயதாக இருந்தபோது பணியாற்றத் தொடங்கினார். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக, மாத ஊதியம் ரூ.2,000 என, ஒருநாளைக்கு ஒன்பது மணி நேரம் வரை கவரிங் நகைகளை தயாரித்து வந்தார். பின்னர், தனது ஆர்வத்தைத் தொடரவும், அதிக சம்பாதிக்கவும், அர்பன் கம்பெனியில் சேருவதற்கு முன்பாக, மாதத்திற்கு ரூ .8,000 ஊதியத்திற்கு, அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். கோவிட் தொற்றுநோய்க்கு முன்பு, 26 வயதை எட்டிய அவர், ஒவ்வொரு மாதமும் சராசரி ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பாதித்தார்.

கவிதா மற்றும் பூஜாவைப் போலவே, IWWAGE கவனம் குழு விவாதங்களுக்காக (எட்டு பெண்கள் மற்றும் ஏழு ஆண்கள்) கூட்டப்பட்ட 15 அர்பன் கம்பெனி நிறுவன சேவை நிபுணர்களில் ஒவ்வொருவரும், இப்பாதையில் இணைந்ததில் இருந்து அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர்.

இப்பாதையில் உள்ள பெண்கள், ஒரு வழக்கமான அழகு நிலைய வேலையில் மாதத்திற்கு ரூ.8,000- ரூ.10,000 வரை என்பதற்கு எதிராக, சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1,552 வீதம் சம்பாதிக்கிறார்கள் என்பது, மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்த 88 பெண்களிடம் ஜூன் 2020 IWWAGE நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

கூடுதல் வருவாய் எனப்துடன், தங்கள் வீட்டு மற்றும் பிற வேலைகள், பராமரிப்பு பொறுப்புகளை நிர்வகிக்க அனுமதிக்கும் நெகிழ்வான வேலை நேரங்களையும் பெண்கள் விரும்புகிறார்கள். IWWAGE ஆய்வில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் நெகிழ்வான நேரங்களால் திருப்தி அடைந்தனர். பெரும்பாலான பெண்கள் (56.8%) ஒருநாளைக்கு மூன்றுக்கும் குறைவான அழைப்புகளை எடுத்தனர், ஒரு சிலரே (1.1%) ஐந்து அழைப்புகளுக்கு மேல் எடுத்துக் கொண்டனர்.

பதிலளித்தவர்கள், சராசரியாக வாரத்தில் 37 மணி நேரம் வேலை செய்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் ஊதியம் பெறாத பணி பொறுப்புகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதையும், அவர்களது நாளின் ஒரு பகுதியை மட்டுமே ஊதியம் பெறும் வேலைக்கு அர்ப்பணிக்க முடியும் என்பதையும் இது பிரதிபலிக்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சூழலில் 'நெகிழ்வுத்தன்மை' என்ற கருத்து அவ்வளவு நேரடியானதல்ல என்று ஒரு இடைநிலை ஆராய்ச்சி கூட்டு நிறுவனமான டேன்டெம் ரிசர்ச்சின் ஆராய்ச்சி சகா ஜோதன் மாவி கூறினார். "ஒரு தொழிலாளி என்ற முறையில், அதிக தேவை இருக்கும் போது மற்றும் நீங்கள் முன்பதிவு பெறும் நேரங்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் உண்மையில் நெகிழ்வான வேலை நேரங்களைத் தேர்வு செய்ய மாட்டீர்கள் என்று பாதையை நிர்ணயித்த நிறுவனத்தில் உயர் இலக்குகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார்.

சமூக-கலாச்சார வரம்புகள் மற்றும் பாலின வழக்கங்கள்

பாரம்பரிய தொழிலாளர் சந்தைகளில் நிலவும் தொழில் பிரித்தல் மற்றும் பாலின ஊதிய இடைவெளிகளின் ஆழமான சிக்கல்கள், டிஜிட்டல் சந்தையிலும் உள்ளன. பல்வேறு தளங்களில் பெரும் தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறித்த ஒருங்கிணைந்த தரவு எதுவும் இல்லை என்றாலும், இந்த தளங்களில் பெண் பங்கேற்பு பெரும்பாலும் அழகு மற்றும் ஆரோக்கிய சேவைகள், துப்புரவு அல்லது முறைப்படுத்தப்பட்ட பராமரிப்புப் பணிகளில் குவிந்துள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் நடமாட்டம் தொடர்பான பிரச்சினைகள் முதல், பாலின விதிமுறைகள் வரையிலான காரணங்கள் மற்றும் அது பெண்களுக்கு 'பொருத்தமான' வேலைகள் எனக் கருதப்படுபவை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"தொழிலாளர் சந்தையின் தன்மை பல சமூக விதிமுறைகளை பிரதிபலிக்கிறது," என்று, பெங்களூரின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியரும், ஆக்ஸ்போர்டு இணைய நிறுவனத்தின் ஃபேர்வொர்க் திட்டத்தின் முதன்மை ஆய்வாளருமான பாலாஜி பார்த்தசாரதி கூறினார். "பெண்கள் பாரம்பரியமாக ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அல்லது வண்டிகளை ஓட்டுவதற்கு செல்லவில்லை, அது இதுபோன்ற தளங்கள் வாயிலாக இருந்தாலும் சரி. எனவே, ஒரு குறிப்பிட்ட ஆதிக்க பணியாளர்களின் அமைப்பில் வியத்தகு மாற்றத்தை ஒரே இரவில் காணலாம் என்று எதிர்பார்க்க முடியாது" என்றார்.

ஆண்களைப் போலவே பெண்களால் பங்களிப்பு செய்ய இயலாமை, ஒரு தடையாக செயல்படுகிறது. பல பெண்கள் பகலில் அல்லது சில பகுதிகளில் மட்டுமே வேலை செய்ய முடியும், இது ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைந்த வருமானத்திற்கு வழிவகுக்கிறது என்று மாவி கூறினார். தளங்களின் ஊக்க கட்டமைப்புகள் மற்றும் நிலையான கால நேர விகிதங்கள், பல பெண்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகின்றன, அதனால் அவர்கள் வெளியேறுகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு ஆலோசனை அமைப்பான டீம்லீஸ் (TeamLease) நடத்திய ஒரு ஆய்வில், இந்தியாவில் டிஜிட்டல் தளங்களில் பணிபுரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வருவாயில் 8-10% இடைவெளி இருப்பதற்கான சான்றுகள் கிடைத்தன.

ஆனால், இதில் மாற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. போக்குவரத்து மற்றும் உணவு விநியோகத்துறைகளில் பாரம்பரியமற்ற பெரும் வேலைகளால் அதிகமான பெண்கள் ஈர்க்கப்படுவதாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஆய்வாளரும், பெரும் பொருளாதாரத்தில் பெண்கள் குறித்த செப்டம்பர் 2020 ஆய்வின் ஆசிரியருமான சலோனி அடல் கூறினார்.

"பெண்கள், பெரும் தொழிலாளர்களுடனான எனது நேர்காணல்கள், இந்த மாற்றம் ஸ்விக்கி மற்றும் உபெர் போன்ற நிறுவனங்களால் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கை தொடர்பானதாக இருக்கலாம்" என்று அடல் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "எனக்கு பதில் அளித்தவர்களில் ஒருவர், அவரது உணவு விநியோக தளம், பின்நேரங்களில் பெண்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதை சுட்டிக்காட்டினர். இதுபோன்ற நடவடிக்கைகள் பெண்களுக்கு ஒரு முக்கிய காரணியாகும்" என்றார்.

டிஜிட்டல் சந்தை: லாபத்தைவிட பங்கீடு அதிகம்

பெரும் வேலைகள் பெரும்பாலும் நகர்ப்புற நிகழ்வாகும், IWWAGE ஆய்வில் பதிலளித்தவர்களில் 82% பேர் நகர்ப்புறவாசிகள் மற்றும் புலம்பெயராதவர்கள். டிஜிட்டல் சேவைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் என்பது, பெரும் பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்க ஒரு தடையாக செயல்படுகிறது.

இதில், பெரும்பாலான தளங்களில் பெண்கள் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் மொபைலில் இணையத்தை அணுக வேண்டும். சவாரி செய்து வினியோகிக்கும் பணித்தளங்களில் தொழிலாளர்கள் சொந்தமாக பைக் அல்லது டாக்சி வைத்திருக்க வேண்டும். இந்திய பெண்கள் 21% மட்டுமே மொபைல்போனில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர் மற்றும் சமூக-கலாச்சார கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள் மொபைல் போன்கள் மற்றும் பிற சொத்துக்களை வைத்திருப்பதில், ஆண்களை விட 20% குறைவாக உள்ளனர்.

இந்த சிக்கலை தீர்க்க, சில தளங்கள் அவற்றின் சொந்த சாதனங்களை வழங்குகின்றன, ஆனால் இது ஒரு இடவெளியை நிறுத்தும் தற்காலிக தீர்வு மட்டுமே மற்றும் டிஜிட்டல் கல்வி, திறன் பயிற்சி மற்றும் அணுகலுக்கான தடைகளை நீக்குதலே இன்றியமையாதவை என்று மே 2020 இல் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) குறிப்பு கூறியது.

இயங்குதள அடிப்படையிலான வேலைகளில் பெண்களின் எண்ணிக்கை 2018 இல் 40,000 என்று இருந்தது, 70% அதிகரித்து 2019 ஆம் ஆண்டில், 67,900 ஆக உயர்ந்துள்ளது. 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில், துப்புரவு, சமையல் மற்றும் அழகு சேவை போன்ற வீட்டு அடிப்படையிலான சேவைப் பணிகளுக்காக 270 க்கும் மேற்பட்ட தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தளங்கள் வளர்ந்தாலும், சுய வேலைவாய்ப்பு மற்றும் சாதாரண உழைப்பில் நகர்ப்புற பெண்களின் பங்கு 2011-12 மற்றும் 2017-18ம் ஆண்டுகளுக்கு இடையில் சரிந்ததாக, 2017-18 பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில், சம விகிதத்தில் (42.8%) பெண்கள் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சம்பளம் பெறுபவர்கள் என்று மதிப்பிடப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில், சம்பளம் பெறும் பெண்களின் பங்கு 52.1% ஆகவும், சுயதொழில் செய்யும் பெண்களின் பங்கு 34.7% ஆகவும் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், சாதாரண உழைப்பில் பெண்களின் விகிதம் 14.3% முதல் 13.1% வரை குறைந்தது.

இந்தியா மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். கோவிட்19 தொற்றுநோய் அதை மேலும் மோசமாக்கியுள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் ஆண்களுக்கு 2%, ஆனால் பெண்களுக்கு 13% குறைந்துவிட்டது என்று, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) நவம்பர் 2020 தரவு காட்டுவதாக, இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

நவம்பர் 2020 இல் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பு, 2019 நவம்பரை விட 2.4% குறைவாக இருந்தது. அதே நேரம், நகர்ப்புற பெண்கள் மத்தியில் இது 22.83% குறைந்துள்ளதாக, சி.எம்.ஐ.இ. தரவை பயன்படுத்திய பொருளாதார நிபுணர் மிதாலி நிகோரின் கணக்கீடுகள் மற்றும் எங்கள் கட்டுரை கூறியுள்ளது.

தொற்றுநோய் மற்றும் நிச்சயமற்ற தன்மை

கோவிட்-19 தொற்றுநோயால் அமலான ஊரடங்கு, அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பல லட்சக்கணக்கான சம்பள ஊழியர்களுக்கு வேலையை இழக்க வழிவகுத்தது. ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட ஆரம்ப அதிர்வலைகளுக்கு பிறகு, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வேலைவாய்ப்புத்துறை மீண்டு வருவகிறது, அக்டோபரில் 6,00,000 வேலைவாய்ப்புகளும், நவம்பர் மாதத்தில் 35 லட்சமும் என, வீழ்ச்சியின் போக்குகள் தலைகீழாக மாறி வருகின்றன.

பெரும் தொழிலாளர்களில் பாதி பேர் வேலை இழந்தனர், மற்ற பாதி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு வரை இழந்தது. மார்ச் மாதத்தில் மாதத்திற்கு ரூ.25,000 க்கும் அதிகமாக சம்பாதிக்கும் பெரும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து, கிட்டத்தட்ட 87% பேர், ஆகஸ்டில் ரூ.15,000 க்கும் குறைவாக சம்பாதித்து வந்தனர் என்று, செப்டம்பர் 2020 இல் 770 பெரும் தொழிலாளர்கள்டைம் ஆய்வை நடத்திய புளோரிஷ் என்ற நிறுவனம் கண்டறிந்தது.

பராமரிப்பு பணிகள், வீட்டு வேலைகள் மற்றும் அழகு மற்றும் ஸ்பா சேவைகள் போன்ற பலவும் முற்றிலுமாக மூடப்பட்டதால் பெண்கள் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தளங்கள் தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்ததாலோ அல்லது தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியதாலோ பெண்கள் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியவில்லை என்று தெரிவித்ததாக, ஃபேர்வொர்க்கின் செப்டம்பர் 2020 அறிக்கை கண்டறிந்தது.

அதிகமான சதவீதம் (74%) பெண்கள், ஆண்களை விட (65%) ஆகஸ்டில் 10,000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டியுள்ளதாக ஃபுளோரிஷ் அறிக்கை கண்டறிந்துள்ளது. 27% ஆண்களுடன் ஒப்பிடும் போது, மூன்றில் ஒரு பங்கு (34%) பெண்கள் சார்ந்த்திருப்பது என்ற எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டனர்.

இந்தியாவில் உள்ள 13 தளங்களில், மூன்று (அமேசான், க்ரோஃபர்ஸ் மற்றும் பிளிப்கார்ட்) மட்டுமே தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பீட்டை வழங்கின, மேலும் இரண்டு (உபெர் மற்றும் ஓலா) மட்டுமே கடன் மற்றும் பிற வாடகை செலவுகளை நிதி ஒத்திவைத்தன.

அழகு, பராமரிப்பு பணிகள் மற்றும் வீட்டு வேலை சேவைகள் மூடப்பட்டிருந்தாலும், வினியோகத் துறையில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் நிதி அழிவுக்கு இடையில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்ததாக, டேன்டெம் ஆராய்ச்சி ஆய்வு கண்டறிந்தது.

ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பூஜா மற்றும் கவிதா இருவருக்கும் எந்த வேலையும் கிடைக்கவில்லை, ஏனெனில் ஸ்பா சேவைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. அவர்கள் வேலையை மறுதொடக்கம் செய்திருந்தாலும், அவர்களின் வருவாய் குறைவாகவே உள்ளது. தொற்றுநோய்களின் போது அர்பன் கம்பெனி தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கடனை வழங்கியுள்ளது என்றும், தொழிலாளர்கள் தங்கள் கணக்குகளில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை ரூ.2,000 என்பதில் இருந்து ரூ .1,000 ஆக குறைத்துள்ளதாகவும் பூஜா கூறினார்.

ஃபேர்வொர்க் அறிக்கையின்படி, சுகாதார காப்பீடு அல்லது சுகாதார சேமிப்பு திட்டங்கள் -- தொழிலாளர்கள் மாதத்திற்கு கலந்துகொள்ளும் அழைப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் -- குறித்த தெளிவான கொள்கையையும் அர்பன் கம்பெனி வழங்கியது. இந்தியாவில் எந்தவொரு தளமும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பணி நீக்கத்தை வழங்கவில்லை, இருப்பினும், ஆய்வு செய்யப்பட்ட 11 தளங்களில், ஏழு விபத்து காப்பீட்டை வழங்கியது, அர்பன் கம்பெனி மட்டுமே சுகாதாரக்காப்பீட்டை வழங்கியது.

பெண் தொழிலாளர்கள் குழந்தை பராமரிப்பு வேலை அல்லது வீட்டு வேலையில் சேர வேண்டியிருந்தது என்றும், தங்கள் குழந்தைகளை அவர்களுடன் பணியிடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்றவற்றால் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் வைரஸ் பாதிப்புக்குள்ளாக்கும் அபாயத்தை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

மதிப்பீடுகளின் அழுத்தம் மற்றும் மாற்றங்கள்

"சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் எங்கள் வேலைக்கு பொருந்தாத பணிகளைச் செய்யும்படி கேட்கிறார்கள்" என்று கவிதா கூறினார். "வீட்டில் ஒரு குழந்தை அழுகிறதென்றால், சிறிது நேரம் குழந்தையின் அழுகையை தணிக்கும்படி எங்களிடம் கேட்பார்கள். இது எங்களுக்கான வேலை இல்லை என்றாலும், 'இல்லை' என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. எங்கள் மதிப்பீடுகள் வாடிக்கையாளர்களைப் பொறுத்து இருப்பதால் நாங்கள் அதைப் பற்றி சமயோஜிதமாக கையாள வேண்டும்" என்றார்.

சில வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த சேவைகளை விட அதிகமாக கேட்கிறார்கள், என்றார் பூஜா. "அவர்கள் உடல் மசாஜ் செய்த பிறகு இலவச தலை மசாஜ் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் மறுத்தால், அவர்கள் எங்களுக்கு குறைந்த மதிப்பீடுகளைத் தரக்கூடும். சில நேரங்களில் நாம் அதை சரிசெய்ய நமக்கு ஒரு இழப்பை சந்தித்தாக வேண்டும். மதிப்பீடுகள் உயர்ந்ததாக இருப்பதை உறுதி செய்ய, நாங்கள் 100% கடினப்பணியை விட அதிகமாக செய்ய வேண்டும்" என்றார்.

தேர்வுசெய்யக்கூடிய வாடிக்கையாளர்களின் மீது நிறுவனங்கள் குறைந்த கட்டுப்பாட்டையே கொண்டிருப்பதால், ஆண்கள் பெண்களாக ஆள்மாறாட்டம் செய்வது போன்ற துஷ்பிரயோகத்திற்கு பெண் சேவை வல்லுநர்கள் ஆளாகிறார்கள் என்று ஃபேர்வொர்க்கின் பார்த்தசாரதி கூறினார். "சில நேரங்களில் தொழிலாளர்கள் முன்னர் ஒப்புக் கொள்ளாத கூடுதல் வேலைகளைச் செய்யும்படி கேட்கப்படுகிறார்கள். தொழிலாளர்கள் வாடிக்கையாளர் மதிப்பீடுகளை நம்பியிருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றார்.

IWWAGE ஆய்வில் நேர்காணல் செய்யப்பட்டவர்களில் 60% பேருக்கு, பெரும் வேலை என்பது வருமானத்தின் முதன்மை ஆதாரமாகும், மேலும் அவர்கள் குடும்பத்தின் முக்கிய வருவாய் உறுப்பினராக உள்ளனர். இந்த வருமானத்தை இழக்க அவர்களால் முடியாது, குறைந்த மதிப்பீடுகளுக்கு அஞ்சுவதால், பெண்கள் பெரும்பாலும் நீண்ட தகராறு செய்து அதை தீர்க்க தகராறு செய்யும் நடைமுறைகளுக்கு தயங்குவதாக, ஓ.ஆர்.எஃப். ஆய்வு கண்டறிந்துள்ளது.

அர்பன் கம்பெனி சேவை வல்லுநர்கள், 4.5 என்ற தர மதிப்பீட்டை பராமரிக்க வேண்டும். இது 4.5 ஐ விடக் குறைந்துவிட்டால், அந்த தொழிலாளர்களை பணி தளத்தில் இருந்து நீக்கி, பயிற்சி பெற்ற பிறகே மீண்டும் பணியை தொடர முடியும். மறுபயன்பாட்டுக்கு தொழில் வல்லுநர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. தொழில் வல்லுநர்கள், ஒரு ஹெல்ப்லைனை தொலைபேசியில் தொடர்புகொள்வதன் மூலம் பொருத்தமற்ற நடத்தை வழக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு எதிராக புகார் செய்யலாம் என்பதை ஃபேர்வொர்க் அறிக்கை குறிப்பிட்டது மற்றும் சில தொழிலாளர்கள் இதை இந்தியாஸ்பெண்டிடம் உறுதிப்படுத்தினர்.

நியாயமான பணிச்சூழலின் அடிப்படையில், கடந்த 2020 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஃபேர்வொர்க் அமைப்பின் பகுப்பாய்வில், 11 சேவை தளங்களில், அர்பன் கம்பெனி நகர்ப்புற நிறுவனம் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தது. இந்த பகுப்பாய்வானது ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் தளங்களை மதிப்பிடுகிறது - ஊதியம், நிபந்தனைகள், ஒப்பந்தங்கள், மேலாண்மை மற்றும் பிரதிநிதித்துவம். அர்பன் கம்பெனி மூன்றுடன் (ஊதியம், நிபந்தனைகள் மற்றும் மேலாண்மை) முழுமையாகவும் மற்றும் மீதமுள்ள இரண்டோடு ஓரளவு இணங்கியது.


இந்தியாவில் நான்கு பணித்தளங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் செலவுகளை விட அதிகமாக செலுத்த முடிந்தாலும், மூன்று தளங்களைக் கொண்ட தொழிலாளர்கள் (பிக் பாஸ்கெட் , ஹவுஸ்ஜாய் மற்றும் ஸ்விக்கி) செலவினங்களுக்கு முன் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற்றனர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஃபேர்வொர்க் அறிக்கை கண்டறிந்தது.

பணித்தளங்கள் எதுவும் நியாயமான ஒப்பந்தங்கள் மற்றும் நியாயமான பிரதிநிதித்துவக் கொள்கைகளுக்கு முழுமையாக இணங்கவில்லை. அர்பன் கம்பெனி நிறுவனமும், டன்ஸோவும் படிக்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் தொழிலாளர்களுக்கு அணுகக்கூடிய ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தாலும், அவை வேலைவாய்ப்பு உறவின் தன்மையை பிரதிபலிக்கவில்லை.

பிளிப்கார்ட் மற்றும் அர்பன் கம்பெனி நிறுவனங்களுக்கு மட்டுமே 'தொழிலாளர் குரல் வழிமுறைகள்' - சிறு தொழிலாளர்கள் குழுக்கள் தங்கள் குறைகளைப் பற்றி நிர்வாகத்துடன் பேசும் கூட்டங்கள் - உள்ளன மற்றும் சங்க சுதந்திரம் போன்றவற்றை கொண்டிருக்கின்றன. எந்தவொரு பணித்தளமும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கவோ அல்லது ஏற்கவே தயாராக இல்லை, கூட்டு பிரதிநிதித்துவம் மற்றும் பேச்சு நடத்த உதவும் தொழிலாளர்களின் கூட்டு நடவடைக்கைக்கு ஒப்புக்கொள்ள அல்லது ஊக்குவிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஊழியர்களாக இல்லாதது பெண்களையும் -- ஆண்களையும் - வேலை ஒப்பந்தங்கள் இல்லாததால் மற்ற பத்திரங்களில் இருந்து அந்நியப்படுத்துகிறது. பெண் பெரும் தொழிலாளர்களுக்கு பணியிடச் சட்டம்- 2013 இன் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் கீழ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மகப்பேறு சலுகைகள் மற்றும் நோய் சிகிச்சை விடுப்பு போன்ற பிற சமூக பாதுகாப்பு சலுகைகளுக்கும், அவர்களுக்கு உரிமை இல்லை.

ஓ.ஆர்.எஃப் அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட ஐந்து வேலை தளங்களில் (அர்பன் கம்பெனி, குயிகர்ஈஸி, ஹெல்பர்ஸ்4யு, ஹெல்பர் மற்றும் புக்மை பை), அர்பன் கம்பெனி நிறுவனம் மட்டுமே வாடிக்கையாளரின் வீட்டிற்கு சேவை செய்யச் செல்லும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நடைமுறையை வழங்குகிறது. இருப்பினும், தொழிலாளர்கள் சேவையை நிறுத்தவும் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ளவும் விருப்பமில்லை.

"எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வாடிக்கையாளர் வீட்டிற்கு புறப்படும் முன், அவர்களிடம் பேசுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பூஜா கூறினார். "ஒரு ஆண் வாடிக்கையாளர் சேவையை பெண்ணிற்காக முன்பதிவு செய்திருந்தால், முன்பதிவு செய்த அந்த பெண்ணுடன் பேச வேண்டும். அந்த ஆண் அதை தனக்காக முன்பதிவு செய்திருப்பதைக் கண்டால், நாங்கள் சேவையை ரத்து செய்யலாம். எங்களிடம் அதற்கான ஏற்பாடு உள்ளது" என்றார்.

பாதுகாப்பான பெரும் பொருளாதாரத்திற்கு

செப்டம்பர் 23, 2020 அன்று, சமூக பாதுகாப்பு- 2020 குறித்த விதிமுறைகளை பாராளுமன்றம் நிறைவேற்றியது, அதில் மத்திய அரசு பெரும் தொழில் புரியும் தொழிலாளர்களை பதிவு செய்து, அவர்களுக்காக ஒரு சமூக பாதுகாப்பு நிதியை அமைக்கும் என்று கூறுகிறது. பெரும் பொருளாதாரத்தை சீராக்க அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

"கிக் இயங்குதளத் தொழிலாளர்களுக்கு, அதற்கான பாதையில் உள்ளவர்கள் தங்கள் வருவாயில் இருந்து ஓரளவு ஒதுக்கி வைப்பதன் மூலம், அவர்களுக்கு ஒருவகை இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; எனவே, இது எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்போம் "என்று IWWAGE இன் தலைவர் சவுமியா கபூர் மேத்தா, இந்தியாஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"இயங்குதளங்களின் வருகைக்கு முன்பே பெரும் பொருளாதார வேலைகள் எப்போதுமே நம் நாட்டில் [எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்ஸ், வீட்டு உதவி போன்றவர்கள், வாடிக்கையாளர்களை வாய் வார்த்தை மூலம் அணுகுதல்], இருந்து வந்துள்ளன" என்று பார்த்தசாரதி கூறினார். "ஆனால் இப்போது இந்த அமைப்புகளுடன் டிஜிட்டல் முறையில் அணுகுதல் செய்யப்படுகிறது, எனவே அரசு கட்டுப்பாடு அவசியம்" என்றார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர், பல தொழில்கள் பெரும் பொருளாதார மாதிரிக்கு மாறுகின்றன, இதனால் இந்தக் கொள்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று மாவி கூறினார்.

மற்றொரு சாத்தியமான தீர்வு 'தளங்களின்தளம்' ஆக இருக்கலாம், ஜூனியர் ஆராய்ச்சியாளரும், ஓ.ஆர்.எப்ஃ. ஆய்வின் ஆசிரியரான ரியா கஸ்லிவால் கூறினார். இது சட்ட ஆதரவைக் கொண்ட ஒரு அமைப்பாக இருக்கும். எனவே, தளங்களுக்கான நிலையான வழிகாட்டுதல்களை நிறுவுவது மட்டுமல்லாமல் தளங்களை கண்காணிக்கவும் முடியும்.

*அடையாளங்களை பாதுகாக்கும் பொருட்டு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.