பல்லஹாரா, ஒடிசா: ஒடிசாவின் பல்லஹாரா ஒன்றியத்தில் இருக்கும் பசுமையான காட்டில், தனது தாயின் கைகளில் பிடிக்கப்பட்ட 16 மாத பப்லூ சாண்டோ, தனது வயதுக்கேற்ற குழந்தைத்தனமோ, தோற்றமோ இல்லாமல் மிகவும் பலவீனமாக காணப்பட்டார். அதற்கு காரணம், இக்குழந்தை மூளை மலேரியாவில் இருந்து மீண்டு வந்ததது. இதனால், ஒரு மாதம் காய்ச்சல், கடும் சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

கிராமத்தில் எந்த சமூக சுகாதார மையமும் இல்லாததால், பப்லூவின் 28 வயதான தாய் சுகந்தி சாண்டோ, கியோஞ்சரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு 90 கி.மீ பயணத்தை மேற்கொண்டார். சாண்டோ, ஒடிசாவின் 13 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் ஒன்றான பஹாடி பூயான் இனத்தை (அதாவது மலைவாழ்) சேர்ந்தவர். இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் அனைத்திலும் (தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் எனப்படுகின்றனர்) மிகவும் பின்தங்கிய நிலையில், பல்லஹாரா மலைப்பகுதியில் தனிமையில் வாழ்கிறார்.

இந்திய தலைமை தணிக்கை அதிகாரி - சிஏஜி (CAG) 2017 ஆம் ஆண்டின் அறிக்கைபடி, “சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து பற்றாக்குறை காரணமாக, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சரியான நேரத்தில் சுகாதார வசதிகளை பெற தவறுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. நிலையான வருமானம் இல்லாதது, குறைந்த ஊட்டச்சத்து, குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் இந்த சிக்கல்கள் அதிகரிக்கின்றன என்று இந்தியாஸ்பெண்ட் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பழங்குடியினர் குழுக்கள் - மற்ற மக்களை விட நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை ஒரு சமூகம் - மாவட்ட சுகாதார மையம் அல்லது சமூக மையத்தை அடைய ஐந்து முதல் 80 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும் என்று 2017 சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் ஒரு சமூக சுகாதார மையத்தை அடைய சராசரியாக 13.55 கி.மீ தூரம் செல்ல வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விளைவுகள் மேம்பட்டிருந்தாலும், மற்ற மக்களுடன் ஒப்பிடும்போது அவை இன்னும் மோசமாக செயல்படுகின்றன. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 8% பழங்குடியினர்; ஆனால் 2015 ஆம் ஆண்டில், அவர்களில் மூளை மலேரியா உட்பட மலேரியா நோய்களில் 30%, மற்றும் மலேரியா காரணமாக 50% இறப்புக்கள் ஏற்பட்டன. இது 6,000 கோடி ரூபாய் பொருளாதாரச் சுமையைக் கொண்டுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 2018 பழங்குடி சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய 75 பழங்குடி குழுக்களில், ஒடிசா தான் அதிகபட்சமாக, 13 பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரைக் கொண்டுள்ளது. இந்த குழுக்கள் - மொத்த மக்கள் தொகை 89,208 - ஒடிசாவின் 12 மாவட்டங்களில் பரவியுள்ளன என்று ஆலோசனை படிப்புகளுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதில், 5,578 மக்கள்தொகை கொண்ட பஹாடி பூயான்கள், குறைந்த அளவிலான கல்வியறிவு மற்றும் விவசாயத்திற்கு முந்தைய தொழில்நுட்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினராக தகுதி கொண்டிருக்கின்றனர் என்று பழங்குடி விவகார அமைச்சகத்தின் 2013 அறிக்கை கூறுகிறது.

தரவு இல்லாமை

ஒடிசாவில் உள்ள பஹாடி பூயான் போன்ற குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் வளர்ச்சி முடிவுகள் குறித்த தரவு எதுவும் இல்லை. இந்த குழுக்கள் பிற திட்டமிடப்பட்ட பழங்குடியினரை விட மோசமானவை, அவற்றின் உடல்நலம் கடுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் குறித்து பழங்குடி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஸாஸா (Xaxa) கமிட்டியின் 2014 அறிக்கை தெரிவிக்கிறது.

"பழங்குடியினரின் பல்வேறு சமூகங்களின் சுகாதார நிலைமை குறித்த தரவு முழுமையாக இல்லாத நிலையில் உள்ளது" என்று 2018 பழங்குடி அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - என்.எஃப்.எச்.எஸ் (NFHS) தரவு, கூட குறைத்து மதிப்பிடப்படலாம், ஏனெனில் அவை சிறிய மாதிரி அளவை அடிப்படையாகக் கொண்டவை என்று 2018 பழங்குடி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-16இல், குழந்தை இறப்பு விகிதம் ஐ.எம்.ஆர் (IMR) - 1,000 பிறப்புகளுக்கு ஒரு வருடத்திற்குள் ஏற்படும் குழந்தை இறப்புகள் - தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 44.4 ஆக இருந்தது; தாழ்த்தப்பாட்ட சாதிகளை தவிர மற்ற மக்கள்தொகையை விட (32.1) 30% அதிகமாகும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய வகுப்புகள் குறித்த, என்.எஃப்.எச்.எஸ் தரவு காட்டுகிறது.

அவர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில், 2018 அமைச்சக அறிக்கை இந்தியாவின் ஐ.எம்.ஆர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 1,000 பிறப்புகளுக்கு 44.4 முதல் 74 இறப்புகளுக்கு இடையில் இருக்கலாம் என்று கூறுகிறது.

2015-16 முதல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான ஐ.எம்.ஆர், பிற மக்கள்தொகையை விட வேகமாக குறைந்தது. 2005-06 ஆம் ஆண்டில், திட்டமிடப்பட்ட பழங்குடியினருக்கான ஐ.எம்.ஆர், 62.1 ஆக இருந்தது, மற்ற மக்கள்தொகைக்கு 38.9 ஆக இருந்தது, என்.எஃப்.எச்.எஸ் தரவு காட்டுகிறது.

குறைவான ஊழியர்கள், தொலைவில் சுகாதார நிலையங்கள்

பஹாடி பூயான் பழங்குடியினரைப் போலவே பப்லூவின் தந்தையான சரத் சாண்டோ, 32, சாகுபடியை மாற்றுவதைப் பயிற்சி செய்கிறார், நிலையான வருமானம் இல்லை. இறுதியில், சரத் சாண்டோ தனது மகனின் மருந்துகளுக்கு பணம் செலுத்துவதற்காக, ஒரு தனியார் நிதி வழங்குபவரிடம் அதிக வட்டிக்கு பணத்தை கடன் வாங்க வேண்டியிருந்தது. "ரூ .800 மதிப்புள்ள மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தார். கடன் கொடுத்தவருக்கோ நான், ரூ.1,500 திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று சாண்டோ கூறினார்.

பாதுகாப்பற்ற வாழ்வாதாரங்கள், மற்றும் அரசு சேவைகளுக்கான அணுகல் இல்லாமை ஆகியவை தாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, “பெற்றோர்கள் தங்களது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை, உணவு சேகரிப்பதற்காக காட்டுக்கு அழைத்துச் செல்லும் போது, அங்கு அவர்கள், மலேரியா, டெங்கு மற்றும் பிற கொசுக்களால் பரவும் நோய் போன்ற ஆட்கொல்லி நோய் தாக்குதலுக்கு ஆளாக்குகிறார்கள்” என, பஹாடி பூயான் பழங்குடியினர் வசிக்கும் பவுராடியா கிராமத்தலைவர் (சர்பஞ்ச்) தனுமதி தேஹுரே, 35 தெரிவித்தார்.

சுகாதார பாதுகாப்பு அணுகல் என்பது, கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது; மேலும் பெரும்பாலும் சராசரிக்கும் குறைவான தரத்தை கொண்டது. நாங்கள் சொன்னது போல், பப்லூ சிகிச்சைக்காக, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சாண்டோஸ் 90 கி.மீ. பயணிக்க வேண்டியிருந்தது.

சமூக சுகாதார மையங்களில் 82.3% நிபுணர் பதவிகளும், 32.6% தொழில்நுட்ப பதவிகளும், பழங்குடியினர் பகுதிகளில் உள்ள சமூக மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் 27.9% செவிலியர் பதவிகளும் காலியாக உள்ளதாக 2018 பழங்குடி அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

அதிக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பழங்குடியின மக்கள்

2009-10 ஆம் ஆண்டில், கிராமப்புற இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பழங்குடி மக்களின் விகிதம் 47.4% ஆக இருந்தது, இது இந்தியா முழுவதும் 33.8% ஆக இருந்தது. நகர்ப்புறங்களில், இந்த விகிதம் பழங்குடியினருக்கு 30.4% ஆகவும், முழு மக்களுக்கும் 20.9% ஆகவும் இருந்தது.

சாண்டோசுக்கு மிக அருகில் உள்ள நியாயவிலைக்கடையே, 12 கி. மீ. தொலைவில் உள்ளது. அதற்கு இரண்டு மணி நேரம் நடந்தே சென்று கடையில் கைரேகை பதிவு செய்து, பொதுவினியோகத் திட்ட பொருட்களை வாங்க வேண்டும். திரும்பி வரும் வழியில், கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக அவர்கள் 35 கிலோ ரேஷனைப் பற்றிக் கொண்டனர்.

சுகாதார அமைச்சகத்தின் 2018 அறிக்கையின்படி, பழங்குடி குழுக்களுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களை விட குறைவாகவே உள்ளது, மற்றும் பல ஆண்டுகளாக இது குறைந்துள்ளது, இது பழங்குடி மக்களிடையே உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. 2008 அரசு அறிக்கையின்படி, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் குறிப்பாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளம் காணப்படுகின்றன.

கடந்த 1975 முதல், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் கீழ், துணை ஊட்டச்சத்து திட்டத்தை அரசு கொண்டுள்ளது, இது ஒடிசாவில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு - சாதுவா, முட்டை மற்றும் பருப்பு வகைகள் - வழங்குவதோடு அங்கன்வாடி மையங்களில், மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை குழந்தைகளுக்கு சூடான சமைத்த உணவை தருவதாக, ஆகஸ்ட் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. இது குழந்தையின் முதல் 1,000 நாட்களுக்கு பெரிதும் உதவுகிறது - இது, குழந்தையின் வளர்ச்சியும் அறிவாற்றல் வளர்ச்சியும் அதிகபட்சமாக இருக்கும்போது குழந்தை பருவத்திலேயே வாய்ப்பினை தரும் ஒரு சாளரம்.

பப்லூ சாண்டோவின் தாய் கிராம அங்கன்வாடி மையத்தில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சத்துவா, முட்டை மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்கிறார். ஆனால் அவரது மூத்த மகன், இப்போது வயது 5, சூடான, சமைத்த உணவை பெற இயலவில்லை. ஏனெனில் அங்கன்வாடிக்கு தினமும் செல்ல வெகு தொலைவில் உள்ளது.

இந்தியா ஸ்பெண்ட் குழு பார்வையிட்ட நாளில் அங்கன்வாடி மையம் மூடப்பட்டு இருந்தது. அது அரிதாகவே திறந்திருக்கும் என்று கிராமவாசிகள் எங்களிடம் தெரிவித்தனர்.

"புதிய மம்தா பயனாளிகளுக்கான - கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நேரடி பண பரிமாற்றத் திட்டம் - பதிவுக்காக 50 கி.மீ தூரத்தில் உள்ள பல்லஹாரா தொகுதியில் உள்ள குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்திற்கு நான் செல்ல வேண்டியிருந்ததால், இன்று என்னால் அங்கன்வாடியை திறக்க முடியவில்லை" என்று, அங்கன்வாடி பணியாளரான 45 வயது முந்தரம் பிரதான் கூறி, அன்று மட்டுமே மையம் மூடப்பட்டு இருந்தது என்றார்.

16 மாதங்களில், அவர்கள் கிராம சுகாதார ஊட்டச்சத்து தினத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளனர், அங்கு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது, வழக்கமான அளவு வைட்டமின் ஏ கொடுக்கப்படுகிறது. இது கிராமத்தில் உள்ள அங்கன்வாடி (குழந்தை பராமரிப்பு) மையத்தில் ஒவ்வொரு மாதமும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. "கிராம சுகாதார ஊட்டச்சத்து நாட்கள் ஒழுங்கமைக்கப்படுவது எங்களுக்குத் தெரியாது அல்லது எங்களுக்கு தெரியப்படுத்தப்படாது" என்று சுகந்தி சாண்டோ கூறினார்.

சாண்டோசின் கிராமத்தில் இருந்து மிக அருகில் உள்ள அங்கன்வாடி மையம், 3 கி.மீ தூரத்தில் உள்ளது; ஒடிசாவில் குறிப்பாக, 226 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழு கிராமங்களில் மையங்கள் அமைக்கப்படவில்லை என, 2017 சிஏஜி அறிக்கையின் தரவு காட்டுகிறது. பதினாறு கிராமங்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து 3 முதல் 8 கி.மீ தூரத்தில் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 19 குழந்தைகள் இறந்தனர், ஒடிசா அரசு, பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு திட்டத்தை நடத்தி, பஹாடி பூயான் வளர்ச்சிக்காக அமைத்தது. இத்திட்டத்தின் கீழ், 216 குழந்தைகள் கடும் எடை குறைபாடு கொண்டவர்களாகவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாகவும் அடையாளம் காணப்பட்டனர். ஆனால் இவர்களில் 60 பேர் எந்த மருத்துவமனைக்கும் பரிந்துரைக்கப்படவில்லை, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் என்று, சிஏஜி அறிக்கை கண்டறிந்தது. "ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க மைக்ரோ திட்டங்களால் எந்தவொரு தீர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை" என்று அறிக்கை கூறியது.

Source: NFHS 1, NFHS 2, NFHS 3, NFHS 4 and 2018 Tribal Health Report by the Ministry of Tribal Affairs
Note: 1. Health indicators for scheduled tribes in 2015-16 are an estimation and have been calculated from districts where more than 50% of the population belongs to Scheduled Tribes.
2. ‘General Population’ excludes scheduled castes, scheduled tribes and other backward castes.

இலக்கு அல்லாத திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி

பழங்குடியினரின் நலனுக்காக ஒரு பிரத்யேக நிதி உள்ளது, மக்கள்தொகையில் அவர்களின் விகிதாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அவை வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட முடியாது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் கீழ், பழங்குடியினரின் துணைத் திட்டச் செலவு 2014-15ல் ரூ.32,387 கோடியில் இருந்து 2015-16ல் ரூ. 20,000 கோடியாக குறைந்தும், 2016-17ல் ரூ.24,005 கோடியாகவும் இருந்தது என, ஏப்ரல் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. இந்த ஒதுக்கீடு 2017-18 ஆம் ஆண்டில் ரூ.31,920 கோடியாக அதிகரித்தது; ஆனால் இலக்கு அல்லாத (பொதுவான / நிர்வாக) செலவினங்களுக்கு (உள்கட்டமைப்பு பராமரிப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, நல்லாட்சி நிதி, இந்திய விளையாட்டு ஆணைய ஒதுக்கீடு போன்றவற்றுக்கான மானியங்கள்) போன்றவற்றுக்கு இது ஒதுக்கப்பட்டது; அவை பழங்குடி மக்களை நோக்கிச் செல்லவில்லை என, தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் தலித் ஆதிவாசி பட்ஜெட் பகுப்பாய்வு - தலித் ஆர்திக் ஆதிகர் அந்தோலன் காட்டியது.

2019-20 ஆம் ஆண்டில் பழங்குடி மக்களுக்காக மொத்தம் ரூ .52,885 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் பழங்குடி மக்களை குறிவைக்கும் திட்டங்களுக்கு பாதிக்கும் குறைவானது (40.9%) என்பது, தலித் ஆதிவாசி பட்ஜெட் பகுப்பாய்வு கண்டறியப்பட்டது.

Of Total Budget, Rs 31,257 Crore For Schemes Which Don’t Directly Benefit Scheduled Tribes
Central Government Budget for Scheduled Tribes Allocation in Rs (crore), 2019-2020
Due budget for central schemes and centrally sponsored schemes targeted to STs 76,592
Allocation to schemes targeted towards STs 21,628
Allocation to Non Targeted Schemes 31,257
Gap in allocation between prescribed allocation to targeted schemes and actual allocation 23,707

Source: Dalit Adivasi Budget Analysis, 2019-2020, National Campaign on Dalit Human Rights-Dalit Arthik Adhikar Andolon

"பழங்குடியினர் பகுதிகளில் விநியோக நிறுவனங்கள் பலவீனமடைவது மோசமான செயல்திறன், குறைந்த நிதி ஒதுக்கீடுகள் ஆகியவற்றின் சுய-நிரந்தர சுழற்சியை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக, மத்திய நிதியுதவித் திட்டங்களின் கீழ் குறைந்த செலவினங்களும், பொருட்கள் மற்றும் சேவைகளின் மோசமான விநியோகமும் ஏற்படுகின்றன. இது குறைந்த ஒதுக்கீடுகளுக்கு வழிவகுக்கிறது” என, 2014 ஸாஸா (Xaxa) கமிட்டி அறிக்கை தெரிவிக்கிறது.

உதாரணமாக, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினரின் சிறப்பு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, 2014 ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் ஒடிசாவின் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் துறைக்கு ரூ.56.17 லட்சம் விடுவிக்கப்பட்டது. ஆனால் மனிதவள பற்றாக்குறையால், அமைச்சகம் இந்த பணத்தை பயன்படுத்தவில்லை. மேலும் இந்த நிதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கு 2015 ஏப்ரலில் திருப்பி அனுப்பப்பட்டதாக, 2017 சிஏஜி அறிக்கை கண்டறிந்தது.

பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கான சுகாதார முகாம்களை நடத்துவதற்காக, 2014 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுகப்பட்ட ரூ.4.28 கோடியில், வெறும் ரூ. 6.25 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக, அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

(அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.