மும்பை: குஜராத், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஐந்தில் நான்கு பேரின் கருச்சிதைவுக்கு மருந்து அல்லது மருந்து கலவை தூண்டுதலாக இருப்பதாக, புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கருவுற்ற ஒன்பது வாரங்களுக்கு முன், மருத்துவ முறை கருக்கலைப்பு (MMA) என்பதை கையாளுவது 95% -98% என்ற வெற்றி விகிதத்தை கொண்டிருந்தாலும், இந்தியாவில் போதிய மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் கருக்கலைப்பு நடப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாத்திரைகளுக்கு பிந்தைய முழுமைபெறாத கருக்கலைப்புகளால் சிக்கல்களை சந்தித்து, கருக்கலைப்புக்கு பிறகு சிகிச்சை தேவைப்படும் பெண்களின் விகிதம் அசாமில் 65%, உத்தரப்பிரதேசத்தில் 59%, பீகாரில் 51% என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2002 ஆம் ஆண்டில் மருத்துவ முறை கருக்கலைப்பு (MMA) சட்டத்தை திருத்தி, இது முறையாக சட்டப்பூர்வமாக்கப்பட்டது; அதன்படி ஏழு வாரங்கள் வரை பாதுகாப்பான கருக்கலைப்புகளை அணுகுதல் என்பது பாதுகாப்பான, மிக பயனுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கடந்த 2018 நவம்பர் 13ல் 'ஆறு இந்திய மாநிலங்களில் கருக்கலைப்பு மற்றும் திட்டமிடப்படாத கர்ப்ப நிகழ்வுகள்' என்ற அறிக்கை வெளியானது. இந்திய மக்கள் தொகையில் 45% பெருக்கத்திற்கு காரணமாக உள்ள அசாம், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியவற்றின் தரவுகளை கொண்டு வெளியிடப்பட்டது. மும்பையை சேர்ந்த மக்கள்தொகை அறிவியலுக்கான இந்திய நிறுவனம், டெல்லியில் உள்ள மக்கள் கவுன்சில் மற்றும் உலகளாவிய ரீதியில் இனப்பெருக்கம் மற்றும் உரிமைகளை மேம்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனமான நியூயார்க் சார்ந்த குட்மேச்சர் நிறுவனம் ஆகியன இந்த ஆய்வை கூட்டாக மேற்கொண்டன.

கருக்கலைப்பு சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என்னவெனில் கரு கலைப்பு முடிவிற்கு குறைந்தது இரண்டு வருகைகள் தேவைப்படும்; ஆனால் அவ்வாறு 15 நாட்களுக்கான நடைமுறைகளை பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஆறு ஆய்வுக் கட்டுரைகளில், 2015 ல் நடந்த 76 லட்சம் கருக்கலைப்புகளில், 77% அல்லது 58 லட்சம் வசதி இல்லாத எம்.எம்.ஏ. வழியாக நடைபெற்றது; இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 26 லட்சமாகும்.

சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவ முறை கருக்கலைப்புக்கான கையேடு வழிகாட்டுதல்கள், மெபேப்ரிஸ்டோன் (Mifepristone) மற்றும் மெசோப்ரொஸ்டோல் (Misoprostol) ஆகிய கருக்கலைப்புக்கான இரண்டு மாத்திரைகளை, பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் அல்லது அரசு மருத்துவமனையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் யு.பி.ஏ.ஐ. (UPAI) ஆய்வில் பெரும்பாலான பெண்கள் முறைசாராத, அங்கீகாரம் பெறாத மருந்து விற்பனையாளர்களிடம் பெற்றுள்ளனர். இந்த மருந்து பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி அவர்கள் ஆலோசனையோ, போதுமான தகவலோ பெறவில்லை.

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் நடக்கிறது; கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையற்ற கருக்கலைப்பு 30% முதல் 50% வரை அதிகரித்துள்ளது, இது வெற்றியை தராத வீட்டு மருத்துவ கருக்கலைப்பு முயற்சிகள் அதிகரிப்பு காட்டுவதாக, 2016 நவம்பர் 5ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவிக்கிறது.

புதிய ஆய்வில், கருக்கலைப்பு முக்கியத்துவம் ஒரு பிராந்தியத்தின் கருத்தடை நடத்தை, எதிர்பாராத கர்ப்பம் மற்றும் வழங்கப்பட்ட கருக்கலைப்பு சேவை வகைகளை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாக குறிக்கிறது.

'இந்தியாவில் குறைவாக மதிப்பிடப்படும் கருக்கலைப்புக்கள்'

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கருக்கலைப்பு இந்தியாவில் சட்டபூர்வமானதாக இருந்தாலும், தாய் இறப்பு ஒரு பிரச்சினையாகவே உள்ளது: இந்தியாவில் 56% கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றவை; இந்தியாவில் 8.5% தாய்வழி இறப்பு பாதுகாப்பற்ற கருக்கலைப்பே காரணமாக உள்ளது; இதனால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 10 பெண்கள் இறக்கின்றனர் என, 2017 நவம்பர் 22ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

கடந்த 2017 டிசம்பரில் தி லான்சட் குளோபல் ஹெல்த் இதழ், இந்தியாவில் கருக்கலைப்பு மற்றும் திட்டமிடப்படாத கர்ப்ப நிகழ்வு 2015 என்ற ஆய்வின் தொடர்ச்சி கட்டுரையை வெளியிட்டது.

முந்தைய அறிக்கையில், 2015ல் 1.56 கோடி கருக்கலைப்புகள் நாட்டில் நடந்தன; இதில் 73% அல்லது 1.15 கோடி பேர் எம்.எம்.ஏ. மூலம் சுகாதார வசதிகள் பெற்றனர்; 22% அல்லது 34 லட்சம் பேர் சுகாதார வசதி பெற்றவர்கள் மற்றும் 5% பாதுகாப்பற்ற வெளி சுகாதார வழிமுறைகளை பயன்படுத்தியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் என்.எப்.எச்.எஸ்.-4 கணக்கெடுப்பு, கருக்கலைப்புக்கள் பெரும்பாலும் 52% தனியாராலும், பொது மருத்துவமனைகளில் 20% மற்றும் 26% பெண்கள் சுயமாக மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

"எளிதான கருக்கலைப்புகளின் எண்ணிக்கையில் இந்திய அரசால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், கருக்கலைப்புகளை பெரிதும் குறைத்து மதிப்பிடுகின்றன. எளிதான கருக்கலைப்பு சேவைகளின் பாதுகாப்பு முழுமையடையாத நிலையில், கருக்கலைப்புகள் பலவும் வெளியே நிகழ்கின்றன, "என்று அறிக்கை கூறுகிறது. கருக்கலைப்பு மற்றும் மருந்து கருக்கலைப்பு மருந்துகளின் விற்பனை குறித்த தகவல்களை வழங்கும் பொது மற்றும் தனியார் வசதிகளின் ஒரு பெரிய அளவிலான மாதிரியை ஆய்வு செய்வதன் மூலம், மறைமுக ஆதாரங்களில் இருந்து இந்த ஆய்வு தரவுகளைப் பயன்படுத்தியது. இந்த ஆய்வு, மறைமுக ஆதாரங்களிலில் தரவை பயன்படுத்தி, கருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்பு மருந்துகளின் விற்பனையை வழங்கும் பொது மற்றும் தனியாரின் பெரிய அளவிலான மாதிரியை ஆய்வு செய்தது.

பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பொது சுகாதார வசதிகள்

ஆறு மாநிலங்களில் வசிக்கும் அனைத்து வசதிகளுடனான கருக்கலைப்புகளில், 13% தனியாரில் நடத்தப்பட்டன; அரசு பொது கருக்கலைப்புகளில் 5% மட்டுமே நடந்தன. அசாமில் மட்டுமே பொது மருத்துவமனைகளில் கருக்கலைப்பு 15% நடந்துள்ளது; பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியன முறையே 2%, 3% மற்றும் 4% ஆகியவற்றுடன் பின்தங்கியுள்ளன.

"கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் அசாம் அரசு பொது சுகாதார வசதிகளில் விரிவான கருக்கலைப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டது" என்று, பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை தடுக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஐபாஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி வினோஜ் மானிங் தெரிவித்தார்.

"அத்துடன், சுகாதார பட்ஜெட்டில் போதுமான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது; அதை பொது மற்றும் சமூக சுகாதார மையங்களில் (PHCs, CHC) கருக்கலைப்பு செய்ய புதிய எம்.பி.பி.எஸ். பயின்றவர்களுக்கு பயிற்சி மற்றும் சான்றிதழை வழங்குவதற்காக இந்த நிதி பயன்படுத்துவதை உறுதி செய்தது" என்றார் அவர்.

மருத்துவ கருக்கலைப்பு (MTP) 1971 சட்டம் இயற்றப்பட்டு 50 ஆண்டுகளான போதும் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது இன்னும் உண்மையாகவில்லை என்பதை காட்டுகிறது. இது பல காரணங்களுக்காக கீழே வைக்கப்படுகிறது. "பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு இல்லாததற்கு அவர்களது வீடுகள் / சமூகங்களுக்கு மிக அருகில் - சேவை அளிப்பவர்கள் இல்லாத பற்றாக்குறை மிகவும் முக்கியமானது, இது முக்கிய காரணங்களில் ஒன்றாகும்". அத்துடன், "பல பெண்கள் இந்தியாவில் சட்டரீதியாக கருக்கலைப்பு செய்யப்படுவதைப் பற்றியோ, எங்கு, எப்போது, பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளை அணுக முடியும் என்று தெரியாமல் உள்ளனர்".

ஆரம்ப சுகாதார நிலையங்கள் கருக்கலைப்பு சேவைகளை மேற்கொள்ள வேண்டும்

கிராமப்புறப் பகுதிகளில், மக்கள் தொடர்பு கொள்ளும் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை கொண்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், பொதுவாக கருக்கலைப்பு செய்வதற்கு தடை உள்ளது. "ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுவாக, வரம்புக்குட்பட்ட சேவையை வழங்கும் திறனை மட்டுமே கொண்டுள்ளன; ஆறு மாநிலங்களில் நடந்த ஆய்வுகளில் ஒரு சிறிய விகிதத்தை (3-14%) மட்டுமே இவை கொண்டுள்ளன," என்று அறிக்கை தெரிவித்தது. எனவே கருக்கலைப்புகளை செய்யும் சுமையானது அரசு பொது மருத்துவமனைகள் அல்லது சமுதாய சுகாதார மையங்கள் போன்ற பெரிய பொது வசதிகளின் தலையில் விழுகிறது.

"எம்.டி.பி பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ளனர்; அதே நேரம் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புற வாழ்கின்றனர்" என்று, ஐபாஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் சுஷந்த பானர்ஜி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பான கருக்கலைப்புக்கு நாம் இன்னும் சில அம்சங்கள் தேவை உள்ளது. கருக்கலைப்பு செய்வதற்கு ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பயிற்றுவிக்கப்பட்டாலும் கூட, இந்த சேவை குறித்து பொதுமக்களுக்கு தெரியாது " என்றார் அவர்.

ஒவ்வொரு சமுதாய சுகாதார நிலையத்திலும் ஒரு பெண் மகப்பேறு நிபுணர் இருக்க வேண்டும் என்ற நிலையில், அதன் தேவையில், பெண் மகப்பேறு மருத்துவர்களுக்கு 76.3% பற்றாக்குறை உள்ளது என, 2017 நவம்பர் 22ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஏன் முறைசாராத, அபாயகரமான கருக்கலைப்பு சேவைகளை பெண்கள் நாடுகின்றனர்

ஆய்வின்படி, பொது அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் சுகாதார மருத்துவனைகளில், கருத்தரித்த 20 வாரங்களுக்கு பிறகு பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய மறுக்கப்படுகிறது. பீகாரில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 29%, அசாமில் 63% கருக்கலைப்பு செய்துள்ளன. குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள், இரண்டாம் முறையாக மூன்று மாத கருக்கலைப்பு செய்வதில்லை; இது முறையற்ற கருக்கலைப்பை, அவர்கள் நாடிச் செல்ல தூண்டுகிறது.

ஆறு ஆய்வுக் கழகங்களில் 54-87% வசதிகள் கர்ப்பகாலத்தை நிறுத்த வேண்டுமென்ற குறைந்தபட்சம் ஒரு பெண்ணைத் திருப்பி விட்டன.

ஆறு மாநிலங்களில் நடந்த ஆய்வில், 54-87% அரசு பொது சுகாதார மருத்துவமனைகள், கருக்கலைப்புக்கு வந்தவர்களில் குறைந்தபட்சம் ஒரு பெண்ணையாவது திருப்பி விட்டுள்ளதாக, அந்த அறிக்கை கூறுகிறது. ஊழியர்களின் பற்றாக்குறை, பொருட்கள் இல்லாதிருப்பது அல்லது சட்டப்படி கணவர் அல்லது குடும்பத்தினரின் ஒப்புதலின்றி கருக்கலைப்பு செய்யக் கோருவது போன்ற காரணங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

முறைசாரா விற்பனையாளர்களிடம் இருந்து கருக்கலைப்புக்காக பெண்கள் எம்.எம்.ஏ. மாத்திரைகள் வாங்காமல் இருப்பதை உறுதி செய்ய, பொது சுகாதார மையங்கள், மருத்துவமனைகளில் அனைத்து மட்டங்களிலும் மேம்பட்ட கருக்கலைப்பு சேவைகள் இருக்க வேண்டும் என்று, பானர்ஜி பரிந்துரைக்கிறார். "மருத்துவனைகளில் மருத்துவர்களில் இருந்து செவிலியர் மற்றும் மகப்பேறு ஊழியர்களை போதிய அளவில் பணி அமர்த்துவது ஒரு அவசர தேவையாக உள்ளது," என்ற அவர் “இந்த அணுகலுக்கு மருத்துவர்களை மட்டுமே நம்பியிருப்பது, ஆபத்தான முறைசாரா கருக்கலைப்புக்கு செல்ல பெண்களை தூண்டுகிறது" என்றார்.

(நிஹாலனி, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சி பத்திரிகையாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.