வேகமாக வளரும் நகரங்கள் குறித்த பொருளாதார வல்லுநரின் தரவரிசை ஏன் சிக்கலானது
பெங்களூரு: தி எகனாமிஸ்ட் இதழ், 2020 ஜனவரி 7ல் வெளியிட்ட உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்களின் தரவரிசையில், மூன்று இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகிய இம்மூன்று நகரங்களுமே கேரளாவில் இருப்பதால், சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு இது குறித்து விவாதிக்கப்பட்டது; மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களாக இவை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கப்படவில்லை. மலப்புரம், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்பதால், விவாதத்தின் ஒரு பகுதியாக வகுப்புவாத கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன.
அண்மையில் வட இந்தியாவில் இருந்து கேரளாவிற்கு தொழிலாளர் அதிகளவு இடம்பெயர்ந்ததன் விளவும் இந்த வளர்ச்சிக்கான பிற காரணங்கள். மக்கள்தொகையின் ஒற்றை அளவுருவின் அடிப்படையில் நகரங்களின் வளர்ச்சியை உலகளவில் ஒப்பிடுவது மிகவும் எளிதானது மற்றும் தவறாக வழிநடத்தும் என்று, பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹ்யூமன் செட்டில்மென்ட்ஸில் உள்ள நகர்ப்புற தகவல் ஆய்வகம், முறையியல் பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளுடன் ஒப்பிட்டதில் கண்டறியப்பட்டது.
ஐ.நா. மக்கள் தொகைப்பிரிவின் தரவை பயன்படுத்தி தி எகனாமிஸ்ட் தரவரிசை தயாரிக்கப்பட்டது; இது ‘நகர்ப்புற ஒருங்கிணைப்பு’ என்பதன் வரையறை மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களின் வகைப்பாடு, நாடுகள் இடையே கணிசமாக வேறுபடுகிறது என்கிறது. இது நகர்ப்புற வளர்ச்சியின் உலகளாவிய ஒப்பீட்டைக் கட்டுப்படுத்துகிறது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2022 இன் அடிப்படையில் 2015 முதல் 2020 வரையிலான இந்திய நகரங்களின் வளர்ச்சியைக் கணக்கிட, ஐ.நா. தரவு கிட்டத்தட்ட நேரியல் போக்கை கொண்டுள்ளது.
கேரள நகரங்களை பொறுத்தவரை, இது துல்லியமாக இருக்காது. ஏனென்றால் கிராமப்புறங்களில் பெரும் பகுதி ஏற்கனவே நகர்ப்புறமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 2011மக்கள் தொகை கணக்கெடுப்பில் கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நகர்ப்புறத்தினராக அடையாளம் காணப்பட்டனர். எனவே இது அடுத்தடுத்த வளர்ச்சியை குறைக்கும். மேலும், இந்த தரவரிசை ஒரு மெட்ரிக் - மக்கள் தொகை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது - இது நகர்ப்புற வளர்ச்சியின் நோக்கத்தை உள்ளடக்காது.
மக்கள்தொகை போக்குகள், அடர்த்தி மற்றும் வேளாண்மை அல்லாத தொழிலாளர்கள் நகர்ப்புறங்களின் விரிவாக்கத்தைப் புரிந்துகொள்ள பயனுள்ள குறிகாட்டிகளாக இருக்கும்போது, நகர்ப்புறங்களில் - நீர் வழங்கல், கழிவு மேலாண்மை, கழிவுநீர் வலையமைப்புகள் போன்ற- சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு அடிப்படை உள்கட்டமைப்பு காரணிகள் இருப்பது அவசியம். இந்த தரவரிசையானது, அத்தகைய பண்புகளை கொண்டிருக்கவில்லை. மக்கள்தொகை அடர்த்தி மாநிலத்தின் புவியியல் தன்மையில் அதிகம் வேறுபடாத சூழல் உள்ள கேரளாவில், இந்த காரணிகள்தான் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை வேறுபடுத்த முடியும்.
விளக்கப்படம் எதைக் காட்டுகிறது?
கீழேயுள்ள இந்த விளக்கப்படம், 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற ஒருங்கிணைப்புகளைக் காட்டுகிறது; இது 2015-20 ஆம் ஆண்டில் அவற்றின் மக்கள்தொகை வளர்ச்சியின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ‘நகர்ப்புற ஒருங்கிணைப்பு’ யுஏ (UA) என்பது ஒன்றொக்கொன்று மிக நெருக்கமாக அமைந்துள்ள தொடர்ச்சியான நகர பகுதிகளின் குழுவை குறிக்கிறது; இது, நடைமுறை நோக்கங்களுக்காக ஒரே நகரமாக கருதப்படலாம். பெரும்பாலும், ஒரு நகர்ப்புற ஒருங்கிணைப்பு (யுஏ) பல நிர்வாக அலகுகளை உள்ளடக்கியது.
Three of the world's ten fastest-growing urban areas are in India, with another three in China https://t.co/smYZFAnYIN pic.twitter.com/0oixZx21Rc
— The Economist (@TheEconomist) January 7, 2020
நாம் சொன்னது போல், ஐ.நா. மக்கள் தொகைப்பிரிவின் தரவை பயன்படுத்தி இந்த விளக்கப்படம் தயாரிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து மக்கள்தொகை தரவு சேகரிக்கப்பட்டது; தரவு கிடைக்காத ஆண்டுகளில் கணிக்கப்பட்டதாக, ஐ.நா. பணித்தாளில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான நகர்ப்புற ஒருங்கிணைப்பு அளவிலான எண்ணிக்கை, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டன.
உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற ஒருங்கிணைப்புகளின் மக்கள்தொகை வளர்ச்சியை விளக்கும் ஐ.நா. மக்கள் தொகை பிரிவின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விளக்கப்படங்கள், கீழே உள்ளன.
Source: UN Population Division
இந்த விளக்கப்படங்கள், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற ஒருங்கிணைப்புகளை (UA) காட்டுகின்றன. முதலில் அனைத்து நகர்ப்புற ஒருங்கிணைப்புகளை (இடது) பட்டியலிட்டு, பின்னர் 2015 இல் குறைந்தது 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டவற்றை மட்டுமே காட்டப்பட்டுள்ளது. பெரிய- நகர்ப்புற ஒருங்க்கிணைப்பு விளக்கப்படம் (வலது), தி எகனாமிஸ்ட் வெளியிட்ட தரவரிசைக்கு மிகவும் ஒத்திருக்கிறது; தசம இலக்கங்களில் தான் சிறிய வேறுபாடுகள் உள்ளன.
மலப்புரத்துடன் (அனைத்து நகர்ப்புற ஒருங்கிணைப்புகளை கருத்தில் கொண்டால், இது 13வது இடத்தில் உள்ளது) ஒப்பிடும்போது வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் உள்ளன; ஆனால் அவை தி எகனாமிஸ்ட் தரவரிசையில் கணக்கில் கொள்ளப்படவில்லை; காரணம், அவை 10 லட்சம் மக்கள்தொகை என்ற வரம்பை நிறைவு செய்யவில்லை.
இந்திய நகர்ப்புற ஒருங்கிணைப்புகளின் தரவரிசைகளை நாம் ஆராய்வோம்.
Source: UN Population Division
ஓசூர், இந்தியாவில் மிக விரைவான வளர்ச்சியை அனுபவித்த நகர்ப்புற ஒருங்கிணைப்பு பகுதி என, மேலே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது. இருப்பினும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டதால், ஓசூர் மற்றும் பிற சிறிய நகரங்கள் விலக்கப்பட்டன.
பல நகரங்களில், 2015-20 ஆம் ஆண்டிற்கான ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டமானது தோராயமாக 2000-10 வரையிலான 10 ஆண்டு வளர்ச்சியின் பாதிக்கு சமமாக உள்ளது என, ஐ.நா.வின் கணிப்பு தெரிவிக்கிறது. நகரமயமாக்கலின் அதே வேகம் குறுகிய காலத்தில் தொடரும் என்று கருதுவதை இது குறிக்கிறது.
கேரளாவில் நகர்ப்புற ஒருங்கிணைப்பு வளர்ச்சி
சில கருத்துகளை முன் வைப்பதற்கு முன்பாக, சில இந்திய நகர்ப்புற ஒருங்கிணைப்புளின் சிறப்பியல்புகளை, குறிப்பாக கேரளாவில் தி எகனாமிஸ்ட் பகுப்பாய்வில் கிடைத்தவற்றையும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவையும் நாங்கள் பகுப்பாய்வு செய்தோம்,
இந்த விளக்கப்படங்கள், பரப்பளவு (சதுர கி.மீ) மற்றும் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகியவற்றின் வளர்ச்சிப்பகுதி விவரங்களை பெற்று அவற்றை இந்தியாவில் உள்ள சில பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்புக்களுடன் ஒப்பிடுகிறது. கேரள நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் திடீரென பெரிய பரப்பளவை கொண்டிருந்தன; அவை, அளவில் பெங்களூரு மற்றும் சென்னை போன்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடத்தக்கவை. இருப்பினும், மக்கள்தொகை வளர்ச்சியை ஒப்பிடும் விளக்கப்படம் (வலதுபுறம்) காட்டுவது போல், பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது கேரள நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் குறைந்த மக்கள்தொகையை கொண்டுள்ளன. ஏனெனில், ஒவ்வொரு வரியிலும் கடைசி புள்ளியால் குறிப்பிடப்படும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதிகமான நகரங்கள் மற்றும் வளர்ச்சியை நகர்ப்புறமாக அங்கீகரித்தது; அருகிலுள்ள நகர்ப்புற ஒருங்கிணைப்புகளில் உள்ள பலவற்றையும் உள்ளடக்கியது.
மக்கள்தொகையில் இயற்கையான வளர்ச்சியும் மக்கள்தொகை அடர்த்தியின் அதிகரிப்பு நகர்ப்புறமாக வகைப்படுத்தப்படுவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தாலும், கேரளாவின் மிக முக்கியமான காரணி, தற்போதுள்ள நகர்ப்புற மையங்களிலும் அதைச் சுற்றிலும் விவசாய வேலைவாய்ப்புகளில் விரைவான சரிவை கண்டது. பின்வரும் புள்ளிவிவரங்கள் காட்டுவது போல், இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதி 1990 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் நிகழ்ந்தது, உண்மையில் பல கிராமங்களை நகரங்களாக மறுவகைப்படுத்துவதில் ஒரு பணியை செய்தது.
மாவட்ட மக்கள் தொகையுடன் ஒப்பீடு
நகர்ப்புற ஒருங்கிணைப்புகளின் எல்லைகள் காலப்போக்கில் பெரிய மாற்றங்களுக்கு ஆளாகி இருப்பதால், மாவட்ட மக்கள்தொகையின் மாற்றத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், வெவ்வேறு பிராந்தியங்களின் மக்கள் தொகை வளர்ச்சியைப் பற்றிய சிறந்த தோற்றத்தை பெறலாம். மலப்புரம், கோழிக்கோடு மற்றும் கொல்லம் நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து நகர்ப்புறங்களையும் உள்ளடக்கியது. பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்புகளில் ஏதேனும் குறிப்பிடத்தக்க நகர்ப்புற வளர்ச்சி தொடர்புடைய மாவட்டத்தின் மக்கள்தொகையில் பிரதிபலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கீழேயுள்ள வரைபடம் மூன்று நகர்ப்புற ஒருங்கிணைப்புகளில் மக்கள்தொகை வளர்ச்சியையும் அதனுடன் தொடர்புடைய மாவட்டங்களையும் காட்டுகிறது. மலப்புரம் மாவட்டம் அதன் மக்கள்தொகையில் சீரான அதிகரிப்பைக் காணும் அதே வேளையில், கோழிக்கோடு மாவட்டத்தில் மிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது; மாறாக, கொல்லத்தில் வளர்ச்சி குறையத் தொடங்கியது.
(சூரஜ், ஐ.ஐ.எச்.எஸ்.இன் நகர்ப்புற தகவல் ஆய்வக ஆலோசகர் ஆவார்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.