கருக்கலைப்பு மாத்திரைகளை வைத்திருக்க இந்திய மருந்தகங்கள் ஏன் தயங்குகின்றன
மும்பை: ராஜஸ்தானில் உள்ள சில்லறை மருந்தகங்களில் கருக்கலைப்புக்கான மருந்துகள் கிடைப்பதில்லை என்று, ஆகஸ்ட் 2019 இல் வெளியான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், 1.2% மருந்தகங்களில் மட்டுமே இந்த மாத்திரைகளை இருப்பு வைத்திருப்பது, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் முழுவதும் செப்டம்பர் 2018 முதல் ஜனவரி 2019 வரை நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதில், உத்தரபிரதேசத்தில் நன்றாக கிடைப்பது - நேர்காணல் செய்யப்பட்ட 66% மருந்தாளுநர்கள் தாங்கள் மருந்துகளை வைத்திருப்பதாகக் கூறினர் - தெரியவந்தது; பீகாரில் இது, 37.8% ஆக இருந்தது.
கருக்கலைப்புக்கான மருத்துவ முறைகள் -எம்.எம்.ஏ (MMA) என பொதுவாக குறிப்பிடப்படும் இந்த பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், இந்தியாவில் கருக்கலைப்புகளில் ஐந்தில் நான்கு என்ற பங்கை கொண்டிருக்கிறது; ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பெண்கள் மேற்கொள்வதாக, 2016 ஆம் ஆண்டில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது. இது கருக்கலைப்புக்கான மருத்துவ முறைகளில் (எம்.எம்.ஏ) இருக்கும் ரகசிய சந்தையை குறிப்பதாக, பெண்களின் இனப்பெருக்க சுகாதார துறையில் பணிபுரியும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கருக்கலைப்பு மருந்துகளை ஏன் இருப்பில் வைக்கவில்லை என்று அவர்களிடம் கேட்டபோது, 69.4% மருந்தாளுநர்கள் “சட்டரீதியான தடைகளை” மேற்கோள் காட்டியதாக, பாதுகாப்பான கருக்கலைப்பு பராமரிப்புக்கான அணுகலை வலியுறுத்தும் பெண்களின் உரிமைகளுக்கான வலைபின்னல் அமைப்பான ப்ரதிக்யா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90.4% பேரும், ராஜஸ்தானில் 75.6% பேரும் இதே காரணத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.
இந்த "சட்டத் தடைகள்" ஒரு ஆண் குழந்தையின் பிறப்பை உறுதி செய்யும் பாலின தேர்வு கருக்கலைப்பு பற்றிய கவலைகளைக் குறிக்கின்றன; கருவில் குழந்தையின் பாலினத்தை அறிந்து, கருக்கலைப்புகளை பற்றிய கவலைகளைக் குறிக்கின்றன; இது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் பொதுவாக உள்ள, குடும்பத்தவர்களின் மகன் தேவை என்ற விருப்பத்துடன் தொடர்புடையது. ஆனால், நாங்கள் பின்னர் விளக்குவது போல, கருக்கலைப்பு மருந்துகளின் தவறான பயன்பாடு குறித்த இந்த அச்சங்கள் தவறாக இடம்பெயர்ந்துள்ளன - இது பாலியல் தேர்வுக்கு பயன்படுத்தப்படாது, ஏனெனில் இது கருவின் பாலினத்தை தீர்மானிக்க முடியாது; கர்ப்பத்தின் ஆரம்பத்தில் மட்டுமே இது பயனுள்ளதாக இருக்கும்.
"இந்தியாவில் பெண்களை பொறுத்தவரை, கருக்கலைப்புக்கு அணுகுவது என்பது, களங்கம் மிகுந்தது என்ற கருத்துள்ளது. அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த விழிப்புணர்வு இல்லாதது, சமூகத்திற்கு அருகில் பாதுகாப்பான சேவைகள் கிடைக்காதது மற்றும் வழங்குநர்களால் வசூலிக்கப்படும் அதிக செலவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது" என்று ஐபாஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி வினோஜ் மானிங் கூறினார். இது, பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் கருத்தடைக்கு பணிபுரிந்து வரும் லாப நோக்கற்ற அமைப்பாகும்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்னர், இந்தியாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டது. ஆனால் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் - பயிற்சி பெறாத வழங்குநர்களால் சுகாதாரமற்ற நிலையில் செய்யப்படுகிறது- இது தாய் இறப்புக்கு மூன்றாவது பெரிய காரணமாகும். இந்தியாவில் கருக்கலைப்புகளில் 56% பாதுகாப்பற்றது என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் 2017 கட்டுரை தெரிவித்துள்ளது.
ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டால் கருக்கலைப்பு மருந்துகளின் வெற்றி விகிதம் 95% -98% ஆகும்; ஆனால் மருத்துவ மேற்பார்வை இல்லாததால் இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஏற்பட்டுள்ளன.
நான்கு மாநிலங்களில் 1,008 சில்லறை மருந்து விற்பனையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது; ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 250 பேரை நேர்காணல் செய்தது. இதில் உள்ள நகரங்கள் பாகல்பூர், தர்பங்கா, கயா, முசாபர்பூர் மற்றும் பீகாரில் பாட்னா; அவு ரங்காபாத், மும்பை, நாக்பூர், புனே, மற்றும் மகாராஷ்டிராவில் சோலாப்பூர்; ராஜஸ்தான் மற்றும் ஆக்ரா, காஜியாபாத், கான்பூர், லக்னோ மற்றும் உத்தரபிரதேசத்தில் வாரணாசியில் அஜ்மீர், பிகானேர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் கோட்டா.
ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மருந்துச் சந்தையில் கருக்கலைப்பு மருந்து பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை கிடைத்தால், அவை தேர்வு செய்யப்பட்டன என்று, இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியும், பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான பிரதியா பிரச்சாரகரும், ஆய்வின் எழுத்தாளருமான வி.எஸ்.சந்திரசேகர் தெரிவித்தார். அதிக மக்கள் தொகை கொண்டவை மற்றும் மோசமான சமூக-பொருளாதார மற்றும் சுகாதார குறிகாட்டிகளைக் கொண்டுள்ள காரணத்திற்காக பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகியன தேர்ந்தெடுக்கப்பட்டன.
மருந்துவர் சீட்டு இல்லாமல் பெரும்பாலான விற்பனை: ஆய்வு
மருத்துவ கருக்கலைப்பு மாத்திரைகள் தற்போது அட்டவணை எச் மருந்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன; எனவே அவை மருந்துவர் சீட்டு இல்லாமல் தரக்கூடாத மருந்துகளுடன் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கருக்கலைப்பு மருந்துகளை, மருந்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
"இந்த விஷயத்தில், வாடிக்கையாளர்களுக்கு அளவு மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சரியான தகவல்களை வழங்க வேண்டிய கடமை மருத்துவர் மற்றும் மருந்தாளுனர்களிடம் உள்ளது" என்று சந்திரசேகர் கூறினார். "பல மருந்தாளுனர்கள் மருந்துகளை பாக்கெட்டில் இருந்து எழுத்து விற்கிறார்கள்; இதனால், பெண்கள் அல்லது ஆண்கள் அதில் உள்ளவற்றை படித்தறிவது கடினம்" என்றார் அவர்.
இந்த வகையான கருக்கலைப்பு, உலக சுகாதார அமைப்பால் "குறைந்த பாதுகாப்பானது" என்ற கருக்கலைப்புக்கான புதிய வகைப்பாட்டைத் தூண்டியுள்ளது. இது "குறைந்தபட்ச பாதுகாப்பான" கருக்கலைப்பை விட சிறந்தது. ஏனென்றால் இது வெளிநாட்டு பொருட்களின் அறிமுகம் மற்றும் மூலிகை கலவையைப் பயன்படுத்துவதை விட பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துகிறது. ஆனால் பயிற்சி பெற்ற வழங்குநர் இல்லாததால் அது இன்னும் பாதுகாப்பாக இல்லை.
‘அதிக கட்டுப்பாடுகளால் ரகசியமாக விற்பனை’
கருக்கலைப்பு மருந்து வழங்குவதில், மருந்தாளுநர்களை அதிகாரிகள் ஏன் எச்சரிக்கிறார்கள்? இந்தியாவில் பாலியல்-தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு நடைமுறையில் இருக்கிறது என்ற பதிலே உள்ளது.
கடந்த 2001 முதல் 2011 வரை, இந்தியாவின் குழந்தை பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 927 என்றிருந்தது, 919 ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தானில், இது 1,000 க்கு 888 ஆகக் குறைந்திருப்பது, 2021 ஆம் ஆண்டில் 940 என்ற பாலின விகித இலக்கு நிர்ணயிக்க மாநிலத்தைத் தூண்டிதாக, தி டைம்ஸ் ஆப் இந்தியா 2018 செய்தி தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலினம் சார்ந்த தேர்வை சமாளிக்க, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிவதை தடுக்கும் சட்டம் -1994 பிசிபிஎன்டிடி (PCPNDT) கொண்டு வரப்பட்டது; மேலும் சில்லறை மருந்தாளுநர்கள் மற்றும் கருக்கலைப்பு மருந்து இருப்பில் வைத்து வழங்குவர்களிடம் சோதனை மற்றும் கெடுபிடிகள் காட்டப்பட்டன.
கருக்கலைப்பு வழங்குவதற்கும், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் குறைந்து வரும் பாலின விகிதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இடையிலான இந்த மோதலானது “கருக்கலைப்பு பராமரிப்புக்கான பெண்களின் அணுகலுக்கு தடைகளையும், தடுப்புகளையும் உருவாக்கியுள்ளது” என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை விற்கும்படி 31.8% மருந்தாளுநர்கள் கூறப்பட்டாலும், 45% (மற்றும் ராஜஸ்தானில் 73.3%) கருக்கலைப்பு மருந்துகளை விற்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது என்று கூறப்பட்டது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பாலான (56%) சில்லறை மருந்தாளுநர்கள் மற்ற அட்டவணை எச் மருந்துகளுடன் ஒப்பிடும்போது கருக்கலைப்பு மருந்துகளை மிகைப்படுத்தப்பட்டதாகக் கருதினர். மகாராஷ்டிராவில், இந்த பதில் கிட்டத்தட்ட அனைத்து மருந்தாளர்களிடமிருந்தும் (91.7%) வந்தது.
"இதன் விளைவாக, மருத்துவ கருக்கலைப்பு மருந்துகள் பெரும்பாலும் ராஜஸ்தானில் உள்ள மருந்தாளுனர்களால் ஐந்து அல்லது ஆறு மடங்கு விலையில் ரகசியமாக விற்கப்படுகின்றன" என்று ஜெய்ப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜன் சவுத்ரி கூறினார்.
ஆனால் மருத்துவ கருக்கலைப்பு மருந்துகளை இருக்கு வைக்கும் மருந்தாளுநர்களின் ஒழுங்குமுறை அழுத்தம் தவறாக உள்ளது என்று சந்திரசேகர் கூறினார். பாலினத் தேர்வை எளிதாக்க எம்.எம்.ஏ ஐப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் கருவின் பாலினத்தை கர்ப்பத்தின் 13 -14 வாரத்திற்குப் பிறகுதான் தீர்மானிக்க முடியும், அதே நேரத்தில் எம்.எம்.ஏ ஒன்பது வாரங்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
பாலினத் தேர்வு, இந்தியாவில் கருக்கலைப்புகளில் 9% ஆகும், இது 2015 இல் கண்டறியப்பட்டது.
தவறான தகவல் தரப்பட்ட மருந்தாளுநர்கள்
மருத்துவ கருக்கலைப்பு மருந்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகள், கருக்கலைப்புக்கான அணுகலைத் தடுப்பது மட்டுமின்றி, மாத்திரைகள் பற்றிய குறைந்த அறிவையும், மருந்தாளுநர்கள் மத்தியில் கருக்கலைப்புகளின் சட்டபூர்வமான தன்மையையும் ஏற்படுத்துகிறது. "பிரக்யா பிரச்சாரம் இது குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளது" என்று சந்திரசேகர் கூறினார்.
கருக்கலைப்பு மருந்து குறித்த பயிற்சி பெற்றதாகக் கூறப்பட்ட சில்லறை மருந்தாளுனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது - எடுத்துக்காட்டாக பீகாரில் 15% மற்றும் உத்தரபிரதேசத்தில் 9% ஆகும். 64.5% பேர், கையேடுகள் அல்லது அச்சிட்ட சிறு புத்தகங்களில் இருந்து மருந்துகள் பற்றிய தகவல்களைப் பெற்றதாகக் கூறினர். 35% மருந்தாளுநர்களால், மருத்துவ கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பெயரைக்கூட நினைவில் வைத்திருக்க முடியவில்லை. சில்லறை மருந்தாளுனர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருக்கலைப்பு மருந்து பெண்களுக்குப் பயன்படாது என்று நினைத்தனர்.
மருந்தாளுநர்கள் மத்தியில் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருந்தன - 1971 ஆம் ஆண்டில் தி மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் ப்ரிகனென்சி சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக்கப்பட்ட போதிலும், 43% பேர் இந்தியாவில் இது சட்டவிரோதமானது என்று கருதினர். ராஜஸ்தானில், கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்று 60.7% பேர் கருதினர்.
கருக்கலைப்பு மருந்த்து இருப்பில் வைத்திருந்த நான்கு பேரில் மூன்று பேருக்கு கருக்கலைப்பு 20 வார கர்ப்பம் வரை சட்டபூர்வமானது என்பதை அறிந்திருக்கவில்லை. அவர்களில் அதிகமானோர் (40%) கருக்கலைப்பு செய்வது 12 வார கர்ப்ப காலம் வரை மட்டுமே சட்டபூர்வமானது என்று கருதியிருந்தனர். இந்த விவரம் குறித்த விழிப்புணர்வு, உத்தரபிரதேசத்தில் 9.5% ஆக குறைந்தது, இருப்பினும் கருக்கலைப்பு மருந்தை (66%) சேமித்து வைக்கும் மருந்தாளுநர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
கருக்கலைப்பு மருந்துகள் ஒன்பது வாரங்களுக்குள் தான் உட்கொள்ள வேண்டும் என்பதை மருந்தாளுநர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் (30%) குறைவாகவே அறிந்திருந்தனர். பல சில்லறை மருந்தாளுனர்கள் இந்த காலத்தை ஏழு வாரங்கள் என்று தவறாக புரிந்து கொண்டனர்.
பயனர்கள் இடையே விழிப்புணர்வு இல்லை
வழங்குநர்கள் பயிற்சியற்றவர்கள் என்பதால், மருந்துச்சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மருந்து வாங்கும் சில பெண்கள், அதன் பயன்பாடு மற்றும் பக்க விளைவுகள் குறித்து தேவையான ஆலோசனைகளை பெறுவதில்லை. இதுதான் “பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை” என்று இந்திய குடும்பக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளரும், பிரதிக்னா பிரச்சாரத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினருமான கல்பனா ஆப்தே கூறினார்.
பதிலளித்தவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் (45.7%) வாடிக்கையாளர்களுக்கு தரவேண்டிய கருக்கலைப்பு மருந்தின் சரியான அளவை பரிந்துரைக்க முடிந்தது; 29.8% பேருக்கு இது எவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி எதுவும் தெரியாது, 43.4% எப்போது பரிந்துரைக்க வேண்டுமென்று தெரியவில்லை. 80.8% பேர், மருந்துடன் தொடர்புடைய பக்க விளைவுகள் பற்றிய தகவலை, பயனாளர்களுக்கு தரவில்லை என்றும்; 29.5% வாடிக்கையாளர்கள் பக்கவிளைவுகளைப் பற்றி புகார் செய்ய வந்த நிலையிலும் இது நிகழ்ந்ததாக தெரிவித்தனர்.புகார் அளிக்க வந்தவர்களுக்கு, 10இல் ஒன்பது மருந்தாளுனர்கள் பேர், மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைத்தனர்.
"தற்போது, ராஜஸ்தான் மருந்தாளுனர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லை, அவர்கள் மாத்திரைகள் கொடுக்கும்போது அதுதொடர்பான எந்த வழிகாட்டுதல், அறிவுறுத்தல்கள் இல்லாமல் தருகின்றனர்" என்று சமூக ஆர்வலர் சவுத்ரி கூறினார். "இதில் முன்னோக்கிச் செல்வதானால், மருந்தாளுனர்களுக்கு கருக்கலைப்பு மருந்து விற்பனைக்கான பொறுப்பாளர்களாக மாற வேண்டும், மேலும் அதன் பயன்பாடு குறித்து போதுமான எச்சரிக்கைகளை தரச் செய்ய வேண்டும்" என்றார் அவர்.
மருந்து வாங்கிய பிறகு, 63.8% மருந்தாளுநர்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் கடைசி மாதவிடாய் காலம் - கர்ப்ப காலத்தைக் கணக்கிடுவதற்குத் தேவையானது -பற்றி கேட்கவில்லை; 43% கர்ப்ப காலத்தைப் பற்றி கேட்கவில்லை, 54.2% பேர் மருத்துவரின் பரிந்துரை கேட்கவில்லை. மாத்திரைகள் வாங்க வந்த வாடிக்கையாளர்களில் சராசரியாக 60% ஆண்கள்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, மருத்துவ கருக்கலைப்புக்கான பரிந்துரைக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே ஆப்தே மற்றும் சந்திரசேகர் இருவரின் பரிந்துரைகளாகும்.
"தற்போது, இந்தியா முழுவதும் 60,000 / 70,000 மருத்துவர்கள் மட்டுமே கருக்கலைப்புக்கான மருந்தை பரிந்துரைக்க முடியும்" என்று சந்திரசேகர் கூறினார். "அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்குநர்களின் தொகுப்பை விரிவுபடுத்துவது இந்தியாவில் இந்த மருந்தை 800,000-1 மில்லியனுக்கு பரிந்துரைக்க முடியும்” என்றார்.
(ஹேபர்ஷோன், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).