புதுடெல்லி: மிக உயர்ந்த - கிடைக்கும் நீரில் 80% பயன்படுத்தி - நீர் நெருக்கடி அழுத்தத்தை எதிர்கொள்ளும் 17 நாடுகளில், இந்தியா அதிகபட்ச வருடாந்திர மழையை பெறுகிறது என, சர்வதேச சிந்தனைக்குழுவான உலக ஆதார வள நிறுவனம் -டபிள்யு.ஆர்.ஐ. (WRI) புதிய ஆய்வை மேற்கோள்காட்டி இந்தியா ஸ்பெண்ட் தெரிவிக்கிறது.

இப்பட்டியலில் உள்ள மற்ற அனைத்து நாடுகளுமே ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் வறண்ட மற்றும் பகுதியளவு வறண்ட பிரதேசங்களை சேர்ந்தவை; ஆனால், இந்தியாவோ வருடாந்திர மழையின் பாதியளவையும், இயற்கை நீர் ஆதாரங்களையும் கொண்டிருக்கின்றது.

இந்தியாவிற்குள் கூட, மிக மோசமான நீர் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஒன்பது மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், பெரிய மற்றும் சிறிய ஆறுகள் மற்றும் ஏரிகள் உள்ள இந்தோ-கங்கை சமவெளியில் தான் உள்ளன.

டபிள்யு.ஆர்.ஐ. பட்டியலின்படி, சண்டிகர் முதலிடத்திலும் அதற்கடுத்து ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பரவலான மழை மற்றும் ஏராளமான நீர் ஆதாரங்கள் இருந்தபோதிலும் இந்தியா ஏன் நீர் நெருக்கடி அழுத்தத்திற்கு ஆளாகிறது? "நீரின் அதிகப்படியான சுரண்டல் மற்றும் தவறான நிர்வாகமே இந்த நீர் நெருக்கடிக்கு காரணம்," என, நீர்வள அமைச்சகம் மற்றும் கங்கா புனரமைப்பு துறையின் முன்னாள் செயலாளரும், டபிள்யு.ஆர்.ஐ. மூத்த நிர்வாகியுமான சஷி சேகர் கூறினார்.

நாட்டின் அனைத்து வகையான நீர்வளங்களிலும் 80% வரை பயன்படுத்தும் திறமையற்ற விவசாயம், இந்தியாவின் நீர் நெருக்கடிகளுக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று என, சேகர் கூறினார். நிலத்தடி நீரை செறிவூட்டுதலை விட உறிஞ்சி எடுத்தல்- இது நாட்டின் 40% நீர் தேவைகளை வழங்குகிறது - கணிசமாக அதிகம்.

கடுமையான நீர் நெருக்கடியை கையாளும் 17 நாடுகளின் மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் (175 கோடி) உள்ளனர். இதில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது; ஆனால் 136 கோடியில் அதன் மக்கள் தொகை மற்ற 16 நாடுகளின் மொத்த எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்; இது நீர் நெருக்கடியுடன் தொடர்புடையது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 60 கோடி இந்தியர்கள் அதி-தீவிர நீர் நெருக்கடி சுமையை கையாள வேண்டியுள்ளது. இதில் ஆண்டுதோறும் கிடைக்கும் மேற்பரப்பு நீரில் 40% க்கும் மேற்பட்டவை ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றன, அரசின் சிந்தனைக்குழு அமைப்பான நிதி ஆயோக் 2018ன் ஆய்வு 2018 தெரிவிப்பதாக, ஜூன் 25, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

பாதுகாப்பான சுகாதாரமான நீர் கிடைக்காததால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,00,000 பேர் இறக்கின்றனர். 2050 ஆம் ஆண்டளவில் நீர் தேவை அதிகரித்து, நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6% இழப்பை சந்திக்கும் என்று நிதி ஆயோக் ஆய்வு தெரிவித்துள்ளது.

நாடுகள் நீர் அழுத்தத்தை நிவர்த்தி செய்வது முக்கியம், ஏனெனில் இது மோதல் மற்றும் இடம்பெயர்வுகளை அதிகரிக்கச் செய்யலாம், நீர் சார்ந்த தொழில்களுக்கு (சுரங்க, வெப்ப மின் உற்பத்தி மற்றும் உற்பத்தி) ஆபத்தை விளைவிக்கும் மற்றும் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் என்று டபிள்யு.ஆர்.ஐ. ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றமும் ஒழுங்கற்ற மழைக்கு வழிவகுத்து, இந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது என்பதை நாங்கள் மேலும் விளக்குகிறோம்.

பட்டியலில் முன்னணி வகிக்கும் கத்தார்

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு (2.572 பில்லியன்) கொண்ட 44 நாடுகள், “அதிகம் ” முதல் “மிக தீவிரமான” நீர் நெருக்கடி அழுத்தமுடன் உள்ளதாக, டபிள்யு.ஆர்.ஐ. ஆய்வு தெரிவித்துள்ளது. மிக மோசமான நீர் அழுத்தத்தை கையாளும் நாடுகளின் பட்டியலில் கத்தார், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகியன முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாம் முன்பே கூறியது போல், இந்தியா 13வது இடத்திலும், அண்டை நாடான பாகிஸ்தான் 14வது இடத்திலும் உள்ளதாக, 1960 முதல் 2014 வரையிலான தரவுகளை பயன்படுத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், ஒழுங்கின்மை நிகழ்வுகளை கணக்கில் எடுக்கப்படவில்லை.

Countries Facing Extremely High Water Stress
Rank Country Water Stress Level Annual Rainfall (MM)
1 Qatar Extremely High (>80%) 74
2 Israel Extremely High (>80%) 435
3 Lebanon Extremely High (>80%) 661
4 Iran Extremely High (>80%) 228
5 Jordan Extremely High (>80%) 111
6 Libya Extremely High (>80%) 56
7 Kuwait Extremely High (>80%) 121
8 Saudi Arabia Extremely High (>80%) 59
9 Eritrea Extremely High (>80%) 384
10 UAE Extremely High (>80%) 78
11 San Marino Extremely High (>80%) 451
12 Bahrain Extremely High (>80%) 83
13 India Extremely High (>80%) 1083
14 Pakistan Extremely High (>80%) 494
15 Turkmenistan Extremely High (>80%) 161

Source: Water Stress Rankings: World Resource Institute, Annual Rainfall: World Bank
Note: Annual Rainfall figures have been added by the correspondent to analyze the aridity of the countries. San Marino’s rainfall figures have been taken from this source.

Source: World Resource Institute

இந்தியாவில், ஒன்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) "மிக உயர்ந்த" நீர் நெருக்கடி அழுத்த பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியன உள்ளடக்கிய பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.

நெருக்கடி நிறைந்த மாநிலங்களின் தவறான நீர் நிர்வாகம்

குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தை தவிர, நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மற்ற இந்திய மாநிலங்கள், தண்ணீர் நிர்வாகத்தை தவறாக நிர்வகித்துள்ளன என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Composite Water Management Index, NITI Aayog

நிதி ஆயோக் அமைப்பானது ஒன்பது பரந்த துறைகள் மற்றும் நிலத்தடி நீர், நீர்ப்பாசனம், பண்ணை நடைமுறைகள் மற்றும் குடிநீர் உட்பட28 குறிகாட்டிகள் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து 24 மாநிலங்களை மதிப்பெண் தந்தது. இதில் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகியவை 60% க்கும் குறைவாக மதிப்பெண் பெற்றன.

நிதி ஆயோக் அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி மற்றும் சண்டிகர் ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் இல்லை.

நீர்ப்பாசனம் ஒரு முக்கியமான காரணி

நாம் முன்னர் கூறியது போல, இந்தோ-கங்கை சமவெளியில் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விவசாயத்திற்கான நீரை வரலாற்று ரீதியாக சுரண்டுவதே காரணம்.

தண்ணீர் நெருக்கடி அழுத்தத்தை பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் மிகவும் பாதிக்கப்பட்டு இந்தோ-கங்கை மாநிலங்கள் ஆகும். இதற்கு முக்கிய காரணம், 40 ஆண்டு பழமையான பயிர் முறையானநெல், கரும்பு மற்றும் கோதுமை ஆதிக்கம் செலுத்துவதாகும் என்று சேகர் தெரிவிக்கிறார்.

அதிகநீர் தேவைப்படும் இந்த பயிர்களை கொள்முதல் செய்வதை அரசு உறுதி செய்வதால், கடந்த தசாப்தங்களில் அவற்றின் சாகுபடி பரப்பளவு வளர்ந்தது. அதே நேரம், நீர்ப்பாசனத்தின் முதன்மை ஆதாரமான நிலத்தடி நீரின் அளவைக் குறைக்கும் வீதமும் அவ்வாறே இருந்தது.

இந்த மாநிலங்கள் அனைத்தும் வண்டல் மண்ணை கொண்டுள்ளன (இது, தண்ணீரை அதிகம் உறிஞ்சும்), போதுமான மழையைப் பெறுகின்றன மற்றும் ஏராளமான ஆறுகள் இப்பகுதியை கடக்கின்றன - நீர் நெருக்கடியில் இருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய காரணிகளை சேகர் சுட்டிக்காட்டினார். ஆனால் இந்த பிராந்தியங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டல் மேற்கொள்ள பல தசாப்தங்கள் ஆகும் என்று ஒரு நிலையே எட்டப்பட்டுள்ளது; அதுவும் தண்ணீர் உறிஞ்சப்படாமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

குறைபாடுள்ள அரசின் ஆராய்ச்சி: நிபுணர்

சேகருக்கு டபிள்யு.ஆர்.ஐ. ஆய்வு பற்றிய ஒதுக்கீடு உள்ளது, ஏனெனில் இது வரலாற்று அரசு தரவுகளை மற்ற குறிகளுடன் பயன்படுத்துகிறது. இந்தியாவில், மத்திய நிலத்தடி நீர் வாரியம் - சி.ஜி.டபிள்யூ.பி (CGWB) ஒரு கேள்வியை மட்டுமே மனதில் கொண்டு தரவுகளை சேகரிக்கிறது: தண்ணீரை பிரித்தெடுப்பது அதன் வேகத்தை விட அதிகமாக இருக்கிறதா? மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்ளும் நீர் நெருக்கடி சுமையை சி.ஜி.டபிள்யூ.பி தரவு பிரதிபலிக்காததால், இது தவறான தோற்றத்தை அளிக்கிறது என்று சேகர் கூறினார்.

"உண்மையில், கடந்த ஐந்து முதல் 10 ஆண்டுகளாக அரசின் தகவல்கள் புதுப்பிக்கப்படவில்லை; ஏனென்றால் எந்தவொரு புதிய பிராந்தியத்தையும் நீர் நெருக்கடி உள்ளதாக புதுப்பிக்க வேண்டாம் என்று சி.ஜி.டபிள்யூ.பி.விற்கு அதிக அழுத்தம் தரப்பட்டது," என்று சேகர் கூறினார்.

அரசு தரவுகள் மிகப்பெரிய பகுதிகளுக்கான சராசரிகளையும் எடுத்துக்கொள்கின்றன; இது ஒரு சிறுபடத்தை அளிக்காது. "இந்த நாட்டில் 3 கோடி பம்ப் செட்டுகள் உள்ளன; அந்த பம்புகள் எவ்வளவு தண்ணீரை சுரண்டுகின்றன என்பது நமக்கு தெரியாது. எனவே, நாம் எவ்வளவு நிலத்தடி நீரை உறிஞ்சுகிறோம் என்பதும் தெரியாது, ”என்றார் சேகர்.

காலநிலை மாற்றம் நீண்ட வறண்ட சூழல் ஏற்படுத்துவதன் மூலமும், இந்தியாவில் மழையின் தீவிரத்தை பாதிப்பதன் மூலமும் நிலைமையை மோசமாக்குகிறது. 2010 வரையிலான 110 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக மழை பெய்யும் நிகழ்வுகளின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கு 6% அதிகரித்து உள்ளது. ஆகஸ்ட் 24, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தபடி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பே இதற்குக் காரணம். அதிக மழை பெய்யும் நிகழ்வுகளின் போது, நீர்நிலையை செறிவூட்டுவதற்கான தரையில் ஊடுருவி செய்வதால், அது விரைவாக வெளியேறாது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மையான செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.