2019 தேர்தலில் அதிக பெண்கள் போட்டியிட வேண்டியது இந்தியாவுக்கு ஏன் அவசியம்
மும்பை: நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை கொண்ட 193 நாடுகளை அடக்கிய 2019ஆம் ஆண்டு பட்டியலில், இந்தியா 149ஆவது இடத்தில் தான் உள்ளது; 2018ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை விட, 2018இல் இருந்து இந்தியா பின்தங்கி உள்ளது.
இந்தியா, ஏப்ரல் 2019ல் அதன் 17ஆவது பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ள நிலையில், நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவகாரம் கிளம்பியுள்ளது: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி,தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சி, மக்களவைத்தேர்தலில் 33% பெண் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தனது வேட்பாளர்களில் 41% பெண்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது.
மக்களவையில் (நாடாளுமன்ற கீழவை) 524 இடங்களில் 66 பேர் அதாவது 12.6% பெண்கள் எம்.பி.க்கள்; இதில், 2019 ஜனவரி 1ஆம் தேதியின்படி உலக சராசரி 24.3% ஆகும்.
2014 ஆம் ஆண்டுடன் முடிந்த கடந்த 60 ஆண்டுகளில், இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 48.5% இருந்த போதும், முதல் (1952) மற்றும் 16ஆவது மக்களவை (2014) வரை பெண் உறுப்பினர்களுக்கான பிரதிநிதித்துவம், எட்டு முதல் 12.6% புள்ளிகள் என்றளவிலேயே இருந்தது. 1952 இல் 80 லட்சம் இந்திய பெண்களுக்கு ஒரு பெண் எம்.பி. என அதிகரித்து இருந்தது. 2014 ஆம் ஆண்டில் இது 9 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு - ஆஸ்திரியாவின் மக்கள் தொகைக்கு சமம் -ஒன்று எம்.பி. என்று இருந்தது.
ருவாண்டா - தற்போது உலகில் முதலிடத்தில் உள்ளது - கீழமையில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 49 பெண் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்; அதாவது 1,11,000 பெண்களுக்கு ஒரு எம்.பி. என்றளவில் உள்ளது என, பன்முக அமைப்பான நாடாளுமன்ற இடைக்குழு- ஐ.பி.யு. (IPU), 2019 ஜனவரி 1இல் வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு என்பது, கிட்டத்தட்ட ஒரு சதவிகிதத்தில் இருந்து, 2018 ஆம் ஆண்டில் 24.3% ஆக அதிகரித்துள்ளது என, 2018 மார்ச் 5 இல் வெளியான ஐ.பி.யு. குறிப்பு தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு உலகளவில் அதிகரித்து வருகிறது; அது 2008இல் 18.3% எனவும்; 1995இல் 11.3% ஆகவும் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
பட்டியலில், 2018இல் தேர்த நடந்த 50 நாடுகள்
"நாடாளுமன்றத்தில் அதிகமான பெண்கள் இடம் பெறுவது, நல்ல வலுவான மற்றும் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஜனநாயகம் வேலை செய்கிறது என்று பொருள்" என்று, ஐ.பி.யு. தலைவர் மற்றும் மெக்சிகோ எம்.பி.யுமான காப்ரியலா குவாஸ் பரோன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். "2018இல் நாம் கண்ட 1% அதிகரிப்பு என்பது பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஒரு சிறிய முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. அதேநேரம், உலகளாவிய பாலின சமத்துவத்தை அடைய, நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதனால் தான் நாடாளுமன்றத்தில் பெண்கள் நுழைவதற்கான வாய்ப்பைத் தடுக்கக்கூடிய எந்தவொரு சட்ட தடையும் அகற்ற, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் தேர்தல் முறைகளை ஏற்றுக்கொள்வதில் நாம் அதிகமான அரசியல் விருப்பத்திற்கு அழைப்பு விடுகிறோம்" என்றார் அவர்.
2019 ஜனவரி 1ஆம் தேதியின்படி, ருவாண்டா, நமீபியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்த நாடுகளின் பட்டியலில், முதல் 10 இடங்களில் உள்ளன - ஆசிய நாடுகள் இதில் ஒன்றுமில்லை.
நாடாளுமன்றத்தை விட மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது
மக்களவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், மாநில சட்டசபைகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 2017 உடன் முடிந்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக பீகார், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றங்களில் பெண் பிரதிநிதித்துவம் (14%) இருந்தது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மிசோரம், நாகலாந்து மற்றும் புதுச்சேரி சட்டசபைகளில் பெண் பிரதிநிதிகளே இல்லை.
மாநில சட்டசபைகள் மற்றும் மாநில சட்ட மேலவைகளில் (சட்டமன்ற மேல்சபை) பெண்களின் பிரதித்துவதத்திற்கான தேசிய சராசரி, முறையே 9% மற்றும் 5% ஆகும்.
இந்திய சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான குறைந்த பிரதிநிதித்துவம் இருப்பது, இந்திய அரசியலின் ஆணாதிக்க கட்டமைப்பைக் காட்டுகிறது என, Economic and Political வார இதழ், 2011 ஜனவரி பகுப்பாய்வில் குறிப்பிட்டிருந்தது. நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது மற்றும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பு தராததற்கு, பெண்கள் மத்தியில் தேர்தல் அரசியல் குறித்த விழிப்புணர்வு இல்லாததும், குடும்ப ஆதரவு கிடைக்காததும் காரணம் - இந்த பாலின வளைவுக்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Source: Ministry of Statistics and Programme Implementation, 2017; Economic and Political Weekly, 2011
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி இருந்தாலும், மக்களவை மற்றும் சட்டமன்றங்களில், மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு ஒதுக்கும் மசோதாவில் (நூற்று எட்டாவது திருத்தம் அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா) எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒடிசாவின் பிஜு ஜனதாதளம் அரசு, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழக்கும் திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் முன்வைத்ததாக, 2018ந வம்பர் 20இல், இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
"எந்தவொரு வீடோ, எந்தவொரு சமுதாயமோ, எந்த அரசோ அல்லது எந்தவொரு நாடும் அதன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் மேம்படுவதில்லை 2018 நவம்பர் 20இல் பட்நாயக் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பிரதிநிதிகளின் விகிதம், தேசிய சராசரியான 9% விட இரண்டு சதவீதம் குறைவாக உள்ளது. எனினும் சட்டசபையில் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொகுதிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும் பெண்கள் பிரதிநிதிகள்
பெண்கள் தேர்ந்தெடுக்கும் தொகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் கணிசமான அதிகரித்து, வளர்ச்சி அடைந்திருப்பதற்கு சான்றுகள் உள்ளன என, ஐக்கிய நாடுகள் யுனிவெர்சிட்டி வேர்ல்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப் எகனாமிக்ஸ் ரிசர்ச் 2018 ஆய்வு தெரிவிக்கிறது.
இது 4,265 மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கான தரவுகளை - 2012 வரை இருபது ஆண்டுகள்-ஆய்வு செய்தது; அதில் "பெண்களால் வெற்றிபெற்ற மாநில சட்டமன்ற தொகுதிகளில் பங்கு 4.5 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது"; மற்றும் பொருளாதார நடவடிக்கையின் ஒரு பலனாக இத்தொகுதிகள் ஒளி வீசுகின்றன.
இந்தியாவில் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் பொருளாதார செயல்திறன்களை உயர்த்தினர்; இது, ஆண் சட்டமன்ற உறுப்பினர்களைவிட, ஆண்டு ஒன்றுக்கு 1.8 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது என ஆய்வு கூறுகிறது. "இந்தியாவில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி, ஆண் சட்டமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் ஆண்டு ஒன்றுக்கு 15% சதவிகிதம் அதிகமாகும்" என்று ஆய்வு குறிப்பிட்டது.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக வளரவில்லை என்றாலும், உள்ளாட்சி அமைப்புகளில் 1993ஆம் ஆண்டில்இருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட்டது; அரசியலமைப்பின் 73வது மற்றும் 74வது திருத்தம் மூலம், இது சாத்தியமானது. அந்த நகர்வானது பஞ்சாயத்துகளில் (கிராமக் குழுக்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் தற்போதைய தேசிய சராசரியாக 44% ஆகும்.
ராஜஸ்தான், உத்தரகண்ட், பஞ்சாயத்துகளில் மிக அதிகமான பெண் பிரதிநிதித்துவம்
நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50% அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பஞ்சாயத்துகளில் உள்ளனர் என, 2018 ஏப். 5இல் மக்களவையில் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் 56% பிரதிநிதித்துவம் உள்ளது.
Source: Lok Sabha (unstarred Q No. 6343)
"மேற்கு வங்கத்தில், மற்றவற்றைவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமப்புற சபைகளில், சராசரியாக ஒன்பது சதவீதம்கு டிநீர் வசதிகள் மற்றும் 18 சதவிகிதம் மேம்பட்ட சாலை நிலைமைகள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டது" என, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் (2000-2002 க்கு இடையே நடத்தப்பட்ட) கிராமங்களில் கொள்கை வகுப்பதில் பெண்களின் இட ஒதுக்கீடு தாக்கம் பற்றி அக்டோபர் 2018 ஆய்வு குறிப்பிட்டதாக, அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை அதிரடி ஆய்வகம் (J-PAL) என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தார்.
ஆண்களை விட தண்ணீர் வழங்கல் மற்றும் சாலை இணைப்பு போன்ற பிரச்சினைகள் பற்றி பெண்களுக்கு அதிகம் கவலை கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் பெண்கள் அளித்த புகார்களில் 31% குடிநீர் மற்றும் 31% சாலை முன்னேற்றம் பற்றி உள்ளது; இதில் ஆண்கள் விகிதம் முறையே 17% மற்றும் 25% என்று உள்ளது. ராஜஸ்தானில் பெண்களின் புகார்களில் 54% குடிநீர் மற்றும் 19% நலத்திட்டங்களை பற்றியது; இதில் ஆண்கள் விகிதம் 43% மற்றும் 3% என்று உள்ளது.
மேற்கு வங்கத்தில் போலின்றி, ராஜஸ்தானில் பெண்கள் சாலைகள் பற்றி குறைவாக புகார் செய்தனர். பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமப்புற சபைகளில் 2.62 அதிக குடிநீர் வசதிகள் உள்ளன; சராசரியாக, சாலை நிலைகளில் குறைவான முன்னேற்றங்களை செய்து, "8% சரிவுகளுக்கு வழிவகுத்தது" என, பெண்கள் இட ஒதுக்கீடு மீதான தாக்கத்தை ஆய்வு செய்தது.
மற்ற மாநிலங்களில், மகளிர் இட ஒதுக்கீடானது மேம்பட்ட குழந்தை ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கும் வழிவகுத்தது; பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கையை அதிகரித்தது; பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, காவல்துறையினர் அதிக பதில்களை தந்திருந்தது என்று, ஜே.பால் அறிக்கை தெரிவித்தது.
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள32 பெண்கள் தலைமையிலான பஞ்சாயத்துகளை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்து ஐந்து பகுதிகட்டுரைகள் வெளியிட்டது; அதில், 30% பெண்கள், மகளிருக்கு ஒதுக்கப்படாவிட்டாலும், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்தனர். மேலும், 15% பெண்கள், வாய்ப்பு கொடுக்கப்பட்டால் முக்கிய அரசியல் கட்சி வாயிலாக தேசிய அரசியலில் நுழைய விரும்புவதாக தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் ஆணாதிக்க விரோத மற்றும் சாதி வேறுபாடு பற்றி, பெண்கள் புகார் செய்தனர்.
புதிய வேட்பாளர்களுக்கான தேடலில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள்,பஞ்சாயத்தில்வெற்றிகரமாக செயல்பட்ட பெண்கள் தலைவர்களை புறக்கணித்திருப்பதும், அவர்கள் அரிதாகவே அரசியலில் அடுத்தகட்ட நிலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது, எங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.