புதுடெல்லி: இந்தியா அதிகளவில் நிலக்கரியை வெட்டியெடுத்தது. அதிக மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கியது மற்றும் விநியோக நிறுவனங்கள் மூலம், 2019 உடனான நான்கு ஆண்டுகளில் லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு தந்தது. ஆனால், அந்த நிறுவனங்கள், அரசின் உறுதிமொழிக்கு வேட்டு வைக்கும் வகையில் சாதனை அளவாக கடனை கொண்டுள்ளன.

“24x7 நேரமும் மின்சாரம்” என்பது தான் அரசின் முன்னுரிமை என இந்தியாவின் புதிய மின்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், 2019 மே 30 அன்று தெரிவித்தார். அவருக்கு முன்பு அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் அறிவிப்பின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா "மின் உபரி" உள்ளது மற்றும் அரசு தகவலின் படி 99.99% கிராமப்புற வீடுகளில் - 10இல் 7 இந்திய வீடுகளில் - இப்போது மின் தொகுப்பு உள்ளது.

கிட்டத்தட்ட உலகளாவிய மின்மயமாக்கல், "உபரி" மின்சாரம் மற்றும் இந்திய வீட்டுகளுக்கு சுழற்சியாக மின்சாரம் வழங்க இயலாமை ஆகியவற்றின் முரண்பாடுளாக கடன்சுமை உள்ளது; இது, நாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனங்களுக்கு - டிஸ்காம் (DISCOM) சுமைகளை ஏற்படுத்துகிறது; மின் கட்டங்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்கி பராமரிக்கும் திறனைக் குறைக்கிறது.

மின் கட்டணங்களை அதிகரிக்க மாநில அரசுகளால் இயலாமை அல்லது மறுப்பு போன்றவை, பிறகு நாம் விளக்கவுள்ளது போல் அதிக கடன் மற்றும் மின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது மற்றும் கிடைக்கக்கூடிய மின்சாரத்தை வாங்க டிஸ்காம்கள் தயக்கம் காட்டியுள்ளது; அதாவது தொடர்ச்சியான இருட்டடிப்பு மற்றும் ஒழுங்கற்ற மின்சாரம் என்பதாகும்.

இக்கடன் 2020 ஆம் ஆண்டுக்குள் ரூ .2.6 லட்சம் கோடியை (37 பில்லியன் டாலர்) எட்டும் என, சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கிரிசில் மேற்கொண்ட மே 2019 ஆய்வு தெரிவிக்கிறது. அது நிகழும்போது, கடன் 2015 ஆம் ஆண்டை போலவே, டிஸ்காம்களுக்கான, அரசின் பிணை எடுப்பு திட்டமனா உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா உதய் (UDAY) திட்டம் தொடங்கப்பட்டது போலவே இருக்கும்.

"மிகப் பெரிய தேவை [டிஸ்காம் திறமையின்மை தவிர] நீர்ப்பாசனத்துக்காகவும், கிராமப்புற வீடுகளுக்காகவும் விநியோகிக்கப்படும் பெரிய அளவிலான இலவச மின்சாரத்தை நிவர்த்தி செய்வதாகும்" என்று, பெங்களூரை தளமாகக் கொண்ட எரிசக்தி தீர்வுகள் நிறுவனமான ரீ-கனெக்ட் இயக்குனர் விபவ் நுவால், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இந்த மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டாலும், கட்டணம் செலுத்தப்பட்டாலும், டிஸ்காம் இழப்புகள் குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்திய மின்துறை அமைச்சகத்தின் உதய் திட்ட இயக்குனர் விஷால் கபூரிடம் இது தொடர்பாக மின் அஞ்சல் மற்றும் இரு வாரங்களுக்கு மேல் தொலைபேசி வாயிலாகவும் கருத்து கேட்டோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. சந்திக்க நேரம் ஒதுக்கவும் அவரது அலுவலகம் மறுத்துவிட்டது. அவரது பதில், கருத்து கிடைத்தால், இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

ரூ .2.6 லட்சம் கோடியின் தற்செயலான டிஸ்காம் கடன் 2017-18 ஒருங்கிணைந்த செலவினங்களை விட அதிகமாக இருக்கும்: நெடுஞ்சாலைகள்; தேசிய இரயில்வே; மெட்ரோ ரயில் அமைப்பு; தேசிய உணவு மானியங்கள்; தேசிய சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான பண பரிமாற்றம் (நேரடி நன்மை பரிமாற்றங்கள்); சமையல்-எரிவாயு மானியங்கள்; பாதுகாப்பு சேவைகளுக்கான மூலதன செலவு; விண்வெளி தொழில்நுட்பம், பயன்பாடுகள் மற்றும் செயற்கைக்கோள்கள்.

மின்சாரம் விநியோகம் செய்யும் இந்தியாவின் "பாரம்பரிய மாதிரி"யை, இலாப நோக்கற்ற அமைப்பான பிரயாஸின் 2018 ஆம் ஆண்டு மே மாத அறிக்கை எச்சரித்தது. இது, "வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது" அதாவது இந்தியாவின் மின்சக்தி அதிகப்படியான அச்சுறுத்தலாக உள்ளது என்று, அரசை அது எச்சரித்தது.

"முக்கியமாக இது, டிஸ்காம்களின் தலைவிதியை மற்றும் தீர்மானிப்பது மற்றுமின்றி - மின்மயமாக்கல் துரிதப்படுத்தப்படுவதோடு, புதிதாக மின்மயமாக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களை தொகுப்பில் சேர்கிறது. சிறிய, கிராமப்புற மற்றும் விவசாய நுகர்வோர் அனைவரின் தலைவிதியும் ஆபத்தில் உள்ளது" என்று பிரயாஸ் அறிக்கை கூறுகிறது.

டிஸ்காம் கடனை உதய் திட்டத்திற்கு முந்தைய நிலைகளுக்குத் திருப்புவது, அதன் தோல்வியைக் குறிக்கிறது, ஆனால் கடன் வாங்கிய பணம் இந்தியாவை மேலும் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும், அதன் மின்சார வலையமைப்பை விரிவுபடுத்தவும் அனுமதிக்கப்பட்டது என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். அதனால்தான் இப்போது பல மாநிலங்களில் “உபரி” உள்ளது.

உதய், 2019 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மாநிலங்களிடம் இருந்து மின் கட்டணங்களை ஆண்டுக்கு 6% அதிகரித்தல் போன்ற அதன் பிற நோக்கங்களை வைத்திருந்தால், பிறகு அதன் விரிவாக்க செலவுகளில் ஈடு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த காலகட்டத்தில் சராசரி அதிகரிப்பு பாதியாக இருந்தது, மேலும் அக்டோபர் 2018 க்குள் விநியோக இழப்புகள் 15% க்கு பதிலாக 25% ஆக இருந்தன; ஏனெனில் அவை 2019 மார்ச் மாதத்திற்குள் இருந்திருக்க வேண்டும்.

ஏழு அரசுக்கு சொந்தமான டிஸ்காம்களின் கலவையான, உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் யு.அபர்ணாவிடம் இருந்து மின்னஞ்சல் வழியாகவும், இரண்டு வாரங்கள் தொலைபேசி அழைப்புகளை தொடர்ந்து கருத்துகளை கேட்டோம். எந்த பதிலும் இல்லை. உத்தரப்பிரதேச டிஸ்காம் அலுவலர்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். பதிலை பெற்றால், நாங்கள் இந்த கட்டுரையை புதுப்பிப்போம்.

இந்தியாவிடம் உபரி மின்சாரம் உள்ளதா?

மார்ச் 2019 இறுதிக்குள், இந்தியாவில் 4.6% மின்சாரம் உபரி மற்றும் “உச்ச மின்சாரம்” - அதிகபட்ச மின்சார கோரிக்கை - 2.5% உபரி இருக்கும் என்று, இந்தியாவின் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஜூலை 2018 இல் கணித்தது.

சில மாநிலங்களில் உபரிகள் இருந்ததாக, கோயலின் 2017 கூற்றுகள் இருந்த போதும், இது 2016 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்றாக இருக்கும் என்று நம்பிய நிலையிலும், இந்தியா அதிகாரப்பூர்வமாக அதிகார உபரி நாடு அல்ல.

இந்தியாவின் "பற்றாக்குறை" - மின்சாரம் தேவைக்கும் வழங்கலுக்கும் உள்ள வேறுபாடு - பூஜ்ஜியமல்ல. மார்ச் 2019 ல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் மின் பற்றாக்குறை 0.6% ஆக இருந்தது; "உச்ச மின் பற்றாக்குறை" ஒரு வருடத்திற்கு அதிகபட்ச மின்சாரம் தேவை குறைவு - 0.8% ஆகும்.

"கடன் தொகையை மாநிலங்களில் மின் பற்றாக்குறை முதன்மையாக உள்ளது; டிஸ்காம் மேலும் மின்சாரத்தை பெறுகின்றது” என்று, டெல்லியை சேர்ந்த எரிசக்தி சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (CEEW) மின் துறை நிபுணர் பிரதீக் அகர்வால் தெரிவித்தார்.

இந்தியா தற்போது 356 ஜிகாவாட் (GW) நிறுவப்பட்ட திறன், அதன் உச்சபட்ச தேவை 177 ஜிகாவாட் என்பதாக உள்ளது.

சிக்கலின் மையம்: டிஸ்காம்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியாது.

24x7 மின்சாரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற இந்தியாவுக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்பதைக் கணக்கிடுவதும் கடினம் என்று அகர்வால் கூறினார்; "ஏனென்றால் பெரும்பாலான கிராமப்புற மற்றும் விவசாய இணைப்புகள் அளவிடப்படவில்லை; 24x7 மின்சாரம் வழங்க இணைக்கப்பட்ட அனைத்து வீடுகளின் மின் தேவை என்ன என்பதும் இந்தியாவுக்கு உண்மையில் தெரியாது " என்றார் அவர்.

உதய் இருந்தாலும் இருள் தான்

கடந்த 2014ல் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி தொடங்கிய போது, இந்தியாவின் வீடுகளில் 70% மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு இருந்தது. அவரது அரசு இத்திட்டத்தை துரிதப்படுத்தியதுடன், டிசம்பர் 2018 உடன் முடிந்த 16 மாதங்களில், மேலும் 26 மில்லியன் வீடுகளுக்கு மின் இணைப்பு தந்தது.

ஆனால் ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான மின்சாரத்தைப் பெறுகின்றன - நாங்கள் சொன்னது போல் டிஸ்காம் திறமையின்மை காரணமாக - இந்தியாவின் தனிநபர் மின்சார நுகர்வு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஐ உள்ளடக்கிய செல்வந்த நாடுகளின் தனிநபர் நுகர்வுடன் ஒப்பிடும் போது, சராசரியாக 14% என, நவம்பர் 3, 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

2015இல், இந்தியாவின் டிஸ்கா ம் கூட்டு செலவினம், அவர்களின் செயல்பாட்டு செலவுகளுடன் 80% க்கும் குறைவாகவே இருந்ததாக நாங்கள் குறிப்பிட்டு இருந்தோம். மார்ச் 2015இல் டிஸ்காம் சுமார் ரூ .4.3 லட்சம் கோடி இழப்புகளை சந்தித்தது.

எனவே, டிஸ்காம் வங்கிகளிடமிருந்து (14-15% வட்டி விகிதங்களுடன்) கடன் வாங்கியது, அவர்களின் செலவுகளை ஈடுகட்ட, அவர்களின் இழப்பு சுழற்சி இந்தியாவின் பிற லாபங்களை ரத்து செய்கிறது: கூடுதல் நிலக்கரி, அதிக மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அதிக மின் பகிர்மான வழித்தடங்கள் என, ஏப்ரல் 13, 2017இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

உதய் திட்டத்தின் கீழ், மின் துறை அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் டிஸ்காம்ஸ் ஆகியன பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளன. அதன்படி, மாநில அரசுகள் டிஸ்காமின் 75% கடன்களை - செப்டம்பர் 2015 நிலவரப்படி - 10-15 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் பத்திரங்கள் மூலம் ஏற்றுக் கொள்ளும்.

டிஸ்காம்களுக்கு வழங்கப்பட்ட இலக்குகள்: மின்சாரம் மற்றும் வட்டி செலவுகளைக் குறைத்தல், பரிமாற்ற இழப்புகள் மற்றும் மின் திருட்டுகளை கண்காணித்தல் மற்றும் குறைத்தல் மற்றும் தவறான மீட்டர்களை சரிசெய்தல். அதிக கட்டணம் வசூலிப்பதன் மூலம், டிஸ்காம்கள் 2018-19 க்குள் விநியோக செலவுக்கும் சராசரி வருவாய்க்கும் உள்ள வேறுபாடுகளை போக்க வேண்டும்.

15 மாநிலங்களில், தேசிய மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக (AT & C) இழப்புகளில் 85%, கடன் கையகப்படுத்தப்பட்ட போதிலும், உதய் திட்டம் தோல்வியுற்றது என்று கிரிசில் அறிக்கை கூறியதை நாங்கள் முன்பு சுட்டிக்காட்டினோம்.

தேசிய ஏடி அண்ட் சி இழப்புகள் அக்டோபர் 2018 இல் 25.41% ஆக இருந்தன, அல்லது மார்ச் 2019 க்குள் இருந்ததை விட 10 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்களை 5-6% உயர்த்துவதற்கு பதிலாக, 15 மாநிலங்கள் பில்களை 3% அதிகரித்துள்ளன என்று கிரிசில் ஆய்வு தெரிவித்துள்ளது.

வெற்றிகரமான இயக்கம் தோல்வி அடைந்தது எப்படி

டிஸ்காம்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கு உதய் ஏன் உதவ முடியாது?

இதற்கான விடையாக வல்லுனர்கள் கூறுவது, இந்தியாவின் மின்மயமாக்கல் இயக்கத்தின் வெற்றியில் உள்ளது.

கடந்த 2016இல் உதய் தொடங்கிய ஒரு வருடம் கழித்து, அனைத்து கிராமங்களையும் வீடுகளையும் மின் தொகுப்புடன் இணைக்கவும், அவர்களுக்கு மின்சாரத்தை வழங்கவும் இந்திய அரசு மற்றொரு முதன்மைத் திட்டத்தைத் தொடங்கியது.

இது, காலவரையறை [மின்மயமாக்கல் இயக்கிகளின்] நோக்கங்கள் மற்றும் உதய் திட்டம் ஆகியவற்றின் சில அம்சங்களை ஒன்றிணைத்து வேறுபடுத்திக் கொண்டிருந்தது; இதன் விளைவாக டிஸ்காம் போன்ற செயல்படுத்தல் நிறுவனங்களுக்கு ஒரு கட்டுப்பாடற்ற நிலை ஏற்பட்டது" என்று சி.இ.இ.டபிள்யு. அகர்வால் கூறினார்.

ஜனவரி 2019 உடன் முடிந்த முதல் 16 மாதங்களில் 99.93% மின்மயமாக்கலை அடைய, 26.30 மில்லியன் கிராமப்புற குடும்பங்களை அரசு மின்மயமாக்கியது, இது, டிஸ்காம்களுக்கான சிக்கல்களை உருவாக்கிய “மிகப்பெரிய நடவடிக்கை”: அதிக செலவுகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வருவாய் குறைக்கப்பட்டது, பெரும்பாலும் கிராமப்புறம், குறைந்த அல்லது கட்டணம் செலுத்துவதில்லை என்று அகர்வால் கூறினார்.

இருட்டடிப்புகள் முதன்மையாக தொடர்கின்றன, ஏனெனில் டிஸ்காம்கள் அதிக சக்தியை வாங்க தயங்குகின்றன. ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை அல்லது நுகர்வோர் பணம் செலுத்த மாட்டார்கள் என அஞ்சுகின்றர் என்று அகர்வால் கூறினார்.

உங்கள் பில்கள் செலவுகளை பிரதிபலிக்காது

டிஸ்காம்களை, உதய் பிணை எடுக்க முடியாததற்கு மற்றொரு காரணம், அரிதாக கட்டண உயர்வு.

"நுகர்வோர் கட்டணங்கள் இன்னும் பிரதிபலிப்பு செலவு அல்ல," என்று, நிலையான வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் Global Subsidies Initiative அமைப்பின் ஒரு மூத்த ஆற்றல் நிபுணர் விபூதி கார்க் தெரிவித்தார்.

இந்தியாவின் மின்சார ஒழுங்குமுறை நிறுவனம்,டிஸ்காம்கள் "ஒழுங்குமுறை சொத்துக்களை" (மின் நுகர்வு செலவு) நுகர்வோரிடம் இருந்து "பிந்தைய கட்டத்தில்" அதிக பில்கள் மூலம் மீட்டெடுக்க அனுமதிக்கிறது.

அவ்வப்போது கட்டண உயர்வு காரணமாக, இந்தியாவின் நுகர்வோர் டிஸ்காம் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்காததால், மார்ச் 31, 2019ன் படி டிஸ்காம்கள் ரூ .76,963 கோடி கடன்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா ஆளும் மூன்று மாநிலங்களான உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள டிஸ்காம்களின் நிலுவையானது, மொத்த தொகையில் 87சதவீதத்திற்கு பொறுப்பு என்று, சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் ( India Ratings and Research) நடத்திய மே 20, 2019 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்தப்படாத பில்களை மீட்டெடுக்கும் டிஸ்காம்களின் இயலாமை, அரசுக்கு நீண்டகால கவலையாகும். இது, இழப்புகளை குறைக்கும் நோக்கில் கட்டணம் உயர்த்தாததற்கு மாநில கட்டுப்பாட்டாளர்களை குற்றம் சாட்டுகிறது என, மே 27, 2019 அன்று இந்திய எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்தது.

டிஸ்காம்களின் குழப்பம், பெரும்பாலும் ஜனரஞ்சக நடவடிக்கைகளால் ஏற்படுகிறது. பல மாநிலங்களில், அடுத்தடுத்து அமையும் அரசுகள், தங்களது அரசியல் லாபத்திற்காக மின்சார கட்டணத்திய குறைவாக வைத்திருக்கின்றன; இது டிஸ்காம்களை மோசமான நிலையில் வைத்திருப்பதாக, ஏப்ரல் 2, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

சிறந்த மின் மீட்டர்களும் உதவும் என்று கார்க் கூறினார்.

“டிஸ்காம் நிதி ரீதியாக நிலையான இருப்புநிலைகளை நோக்கி முன்னேற வேண்டுமானால், பல்வேறு மின்சார வகைகளில் [பெரும்பாலும் வீடு மற்றும் விவசாய பயன்பாடு] மோசமான மின்சார கணக்கீடுகள் போக்கி, டிஸ்காம்களின் வரையறுக்கப்பட்ட நிதி வருவாய் விளைவாக, குறைந்த பில்லிங் மற்றும் சேகரிப்பு செயல்திறன் சரி செய்யப்பட வேண்டும்,” என்று, அகர்வால் கூறினார்.

அரசு என்ன செய்ய முடியும்?

அரசாங்கம் "24x7 மின்சாரம்" என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பினால் அனைத்து வீடுகளிலும் செயல்படாத, பழைய மின் மீட்டர்களை மாற்றி, புதிய மீட்டர்களை பொருத்த வேண்டும் என்று கூறும் நிபுணர்கள், செலுத்தப்படாத பில்கள் செலுத்தப்படுவதை உறுதிசெய்து, மின்சாரத் திருட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் - இதை செய்து காட்டியபோது உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டது ஜூன் 9, 2019 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

அகர்வால் கூறியது போல் மின் நிலையங்கள் அதிக லாபம் ஈட்டுவதை உறுதி செய்வதற்கான சிக்கல்களை அரசு தீர்க்க வேண்டும்; அல்லது “சிக்கித் தவிக்கும் சொத்துக்கள்” மற்றும் “குறைந்த பயன்பாடு” ஆகியவற்றை குறைக்க வேண்டும்.

2010 முதல், 573 ஜிகாவாட் மதிப்புள்ள -இது நடப்பு தேசிய திறனைவிட 1.5 மடங்கு அதிகம் - மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை இந்தியா ரத்து செய்துள்ளது என, குளோபல் கோல் பிளாண்ட் டிராக்கரின் 2018 அறிக்கை தெரிவிக்கிறது; இது, எண்ட் கோல் ஆலோசனை குழுவின் நிலக்கரி பற்றிய தகவல்களின் உலகளாவிய களஞ்சியம்.

"நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்" இல்லாதது இந்த "நிதி அழுத்தத்திற்கு" ஒரு முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது அறிக்கை தெரிவித்துள்ளது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.