புதுடெல்லி: முதல்முறையாக - இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு ஏழாவது மிகப் பெரிய காரணியாகவும், 2017இல் 1.24 மில்லியன் மடிய காரணமாகவும் இருந்த- காற்று மாசுபாடு குறித்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் 2019 பொதுத்தேர்தலில், கட்சிகளில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. உலகின் மிக மோசமாக மாசுபட்ட 20 நகரங்களில் 14 இங்குள்ளன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அளித்துள்ள உறுதியின்படி,தேசிய தூய்மை காற்று திட்டம் (என்.சி.ஏ.பி) ஒரு "இயக்கமாக " மாற்றப்படும்; காற்று மாசுபாடு அளவு 35% - இது தற்போது 2024க்குள் 30% என்ற இலக்கு - குறைக்கப்படும் என்று சம்மதம் தெரிவிக்கின்றது. காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப்படி, என்.சி.ஏ.பி.யை வலுப்படுத்துவது, "தேசிய சுகாதார அவசரநிலை" அறிவிப்பது என்பது மட்டும் போதாது என்று, நிபுணர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய வடிவத்தில் உள்ள என்.சி.ஏ.பி. தவறானது. அது சட்டபூர்வமான உத்தரவுஇல்லை; தெளிவான காலக்கெடுவைக் கொண்டிருக்கவில்லை; மற்றும் தோல்விக்கு பொறுப்பேற்க வழிவகை செய்யப்படவில்லை என்று, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடு மற்றும் ஆற்றல் திறன் மூலம் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M) உறுதி அளித்தது; ஆனால் காற்று மாசுபாட்டை குறிப்பிடவில்லை.

"சுத்தமான காற்றுக்கு தேவை என்பது ஒரு ஜனநாயகக் கோரிக்கையை உருவாக்கும் ஒரு படி ஆகும்" என்று, டெல்லியை சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைப்பின் ஆற்றல் குழு (CEEW) மூத்த ஆராய்ச்சியாளர் ஹெம் டோலாக்கியா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "எனினும், அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் பூர்த்தி செய்யப்படவில்லை" என்றார் அவர்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், காற்று மாசுபாடு மீதான மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் சிக்கலை தீர்க்கக்கூடிய சில நோக்கங்கள் ஆகியவற்றை குறிக்கிறது என்று, டெல்லியை சேர்ந்த எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (TERI) புவி அறிவியல் மற்றும் காலநிலை மாற்றம் பிரிவு இயக்குனர் சுமித் ஷர்மா தெரிவித்தார்.

"பொது தேர்தல்கள் தவிர, மாநில மற்றும் நகர அளவிலான தேர்தல்களில், குறிப்பாக இப்பிரச்சனை உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்” என்றார் ஷர்மா.

இந்தியாவில் காற்று மாசுபாடு தீர்ப்பதில் தோல்வியானது மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு எச்சரிக்கையாகும்.

14 இந்திய நகரங்களை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் - கான்பூர், வாரணாசி, தில்லி, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், பாட்னா மற்றும் லக்னோ உட்பட - இவை அனைத்தும் உலகின் மிகமோசமான மாசுள்ள 20 நகரங்கள் என்று உலக சுகாதார அமைப்பால் வரிசைப்படுத்தி குறிப்பிடப்பட்டிருந்தும், அந்த எம்.பி.க்கள் “செயல்பாடற்றோ” அல்லது “அமைதியாகவோ” இருக்கின்றனர் என்று, "இந்தியாவில் காற்று தரம் குறித்து அரசியல் தலைவர்கள் நிலை மற்றும் நடவடிக்கை" என்ற தலைப்பில் டெல்லியை சேர்ந்த கிளைமெட் டிரண்ட் வெளியிட்ட 2019 ஏப்ரல் அறிக்கை தெரிவிக்கிறது.

Air Pollution: The Promises

BJP Promises:

 • Turning NCAP into a “mission”.
 • Reducing air pollution by 35% in the next five years. Currently, NCAP targets to reduce pollution by 20-30% by 2024, with 2017 being the base year.
 • Reducing 100% crop burning by 2022.

Congress Promises:

 • Declaring air pollution as a national health emergency and urgently tackle the menace
 • Strengthening the existing NCAP.
 • Establishing environmental standards and regulations in the country. Monitoring and enforcing them.
 • Setting up the sectoral emission standards
 • All major sources of emission will be targeted, mitigated and reduced to acceptable levels
 • Setting up an independent and overarching Environment Protection Authority (EPA), replacing all the other existing bodies exercising jurisdiction and power.

Source: Manifestos of the Bharatiya Janata Party and the Indian National Congress

அறிக்கைகளும் நச்சுக்காற்றும்

பா.ஜ.க. அளித்த வாக்குறுதியின்படி என்.சி.ஏ.பி. என்பது ஒரு “இயக்கமாக” மாற்றப்படும் என்கிறது; அதாவது மத்தியில் சிறந்த மற்றும் நிறுவன பொறுப்புகளை மயப்படுத்தும் என்று பொருள்; ஆனால் இது போதாது; ஏனெனில் என்.சி.ஏ.பி. பல வரம்புகளை கொண்டுள்ளது: இது பயனற்ற கட்டுப்பாட்டுத் திறனைக் குறிக்கவில்லை, நகர்ப்புறம் தோறும் என்ற அணுகுமுறையால் கிராமப்புறப் பகுதிகள் மற்றும் தொழில்துறை பகுதிகளை புறக்கணிக்கப்படுகிறது என்று, டெல்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPR) சந்தோஷ் ஹரீஷ் கூறுகிறார்.

"தற்போதைய என்.சி.ஏ.பி.யின் இந்த வரம்புகள் காரணமாக, ஒரு பணியில் எத்தகைய வித்தியாசமாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது, எனவே, பா.ஜ.க. அறிக்கையில் இன்னும் அதிகபட்சமாக இருந்திருக்கலாம் என்று நான் உணர்ந்தேன் " என்றார் ஹரிஷ். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் "சமிக்கையின் நோக்கம் மற்றும் அவசரநிலை உணர்ந்து நன்கு பணி புரிந்திருக்கிறார்கள்", என்று அவர் கூறினார்.

காற்று மாசுபாட்டை ஒரு தேசிய பொது சுகாதார அவசர நிலையாக அங்கீகரிப்பதன் மூலம், இது சிக்கலின் உண்மையான அளவிற்கான முதன்மையான அங்கீகாரமாகும்; என்.சி.ஏ.பி.இல் இருந்து கூட இது இடம் பெறவில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், உள்ளுர் நிறுவனங்களுக்கு பதிலாக.ஒரு தன்னாட்சி கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (EPA) அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

"தற்போதைய முகமைகளை விட ஒரு புதிய ஆணையம் இன்னும் பயனுள்ளதாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை," என்ற ஹரீஷ், "ஆனால் நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்காக கணிசமான கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள் அவர்களது வார்த்தைகளில், 'தன்னாட்சி, சக்திவாய்ந்த மற்றும் வெளிப்படையான" என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன” என்றார்.

வரும் 2030ஆம் ஆண்டு க்குள் இந்தியா அதன் தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரத்தை (NAAQS) அடைய வேண்டுமெனில், இரு உத்திகள், இன்னும் லட்சியமாக இருக்கும் என்று, சி.இ.இ.ஓ.அமைப்பின் டோலக்கியா தெரிவித்தார்.

பெரும்பாலான மாநிலங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் குறைப்பு மூலம் மட்டுமே காற்று தரத்தில் கணிசமான முன்னேற்றங்கள் அடைய முடியும் என்று, அப்ளைடு சிஸ்டம்ஸ் அனாலிசிஸ் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் அமைப்பு ஒத்துழைப்புடன் சி.இ.இ.ஓ. அமைப்பு வெளியிட்ட மார்ச் 2019 ஆய்வை மேற்கோளை காட்டி, டோலக்கியா தெரிவித்தார். "எனவே," பிராந்தியமாக ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் நமக்கு தேவைப்படும்" என்றார்.

வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் காற்று-தர மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும்; அவை முக்கியமாக காற்று மாசுபடுத்தலில் இலக்காக இல்லாவிட்டாலும் கூட, என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் காற்று தர மேலாளர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத துறைகளது அதிகார எல்லைக்குள் இருக்கும் மற்றும் காற்று தரத்தை முன்னுரிமை வழங்கும் கொள்கை கட்டமைப்புகள் இருக்காது. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, ஆற்றல் அல்லது விவசாய கொள்கை அல்லது நகர்ப்புற நிர்வாகம் ஆகியவற்றை இது உள்ளடக்கி இருக்கும் என்று டோலக்கியா கூறினார்.

மேம்பட்ட தொழில்நுட்பமாசு கட்டுப்பாட்டுடன் இணைந்தால், இந்திய மக்களில் 85% பேருக்கு, அத்தகைய வளர்ச்சி நடவடிக்கைகள் என்.ஏ.ஏ.க்யூ.எஸ். உடன் இணக்கமான காற்று தரத்தை வழங்க முடியும் என்று டோலக்கியா தெரிவித்தார். இத்தகைய சில வாக்குறுதிகளை சந்திக்க, புதிய அரசு ஒரு "குறைந்த கார்பன் பாதை", அதிக அரசியல் விருப்பம், சிறந்த அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு அத்துடன் கூடுதல் முதலீடு என்பதற்கு "உண்மையிலேயே உறுதி" கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தூயகாற்று ஒரு பிரபலமான கோரிக்கை அல்ல

காற்று மாசுபாடு என்பது இந்தியாவில் ஒரு பொது முன்னுரிமை என்று தெரியவில்லை.

மூன்று ஆண்டு கால செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளை பகுப்பாய்வு செய்ததில், முக்கிய காரணங்கள் மற்றும் காற்று மாசுபாட்டிற்கான தீர்வுகள் பற்றிய பொதுமக்களின் புரிதலை அது காட்டுவதாக, ஹேசி பெர்செப்ஷன் என்ற தலைப்பில் தி விடல் ஸ்ட்ரேடிஜீஸ் என்ற உலகளாவிய சுகாதார ஆலோசனை மையத்தின் 2019 மார்ச் ஆய்வு தெரிவிக்கிறது.

தி விடல் ஸ்ட்ரேடிஜீஸ் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் 11 நாடுகளில் உள்ள 5,00,000 செய்தி மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு, 2018ஆம் ஆண்டுடன் முடிந்த மூன்று ஆண்டுகளில் காற்று மாசுபாடு காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி பொதுமக்கள் புரிதலை அளவிட்டது. அதன் முக்கிய கண்டுபிடிப்புகள்:

 • மோசமான காற்றால் ஏற்படும் நீண்டகால உடல்நல விளைவுகள் குறித்த பொதுமக்களின் புரிதல் குறைவாக உள்ளது. செய்தி மற்றும் சமூக ஊடக பதிவுகள் பெரும்பாலும் காற்றுமாசால் இருமல் அல்லது அரிப்பு கண்கள் குறுகிய கால நோய் பற்றி கூறுகின்றன; புற்றுநோய் போன்ற நாள்பட்ட ஆரோக்கிய அச்சுறுத்தல்களை அறியவில்லை.
 • காற்று மாசுபாட்டின் மிக முக்கியமான இயக்கிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து விளக்க, மையம் இல்லை. மாசுபாடுகளின் முக்கியமான ஆதாரங்களான வீட்டு எரிபொரு, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கழிவு எரியும் பொருட்கள் ஆகியவற்றின் மீது, வாகன உமிழ்வுகளை காட்டிலும் பொதுமக்களின் கவலை குறைவாகவே உள்ளது.
 • இது தொடர்பான பொது விவாதங்கள் குறுகிய கால தீர்வுகளின் மீதுதான் கவனம் செலுத்துகின்றன. முக கவசம் அல்லது முகமூடி அணிவது போன்ற குறுகிய கால தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது; குப்பைகள் எரிப்புக்கு தடை போன்ற நீண்டகால தீர்வுகளுக்கு அல்ல.
 • காற்றின் தரத்திலான பருவகால மாறுபாடுகளை நோக்கி இந்த உரையாடல் செல்கின்றன. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை காற்று மாசுபாடு பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது, குளிர்காலத்தின் போது காற்று தரம் மோசமடைந்திருக்கும் போதும் மற்றும் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரியும் நடைமுறைகளை கொண்டிருக்கின்றனர். பொதுமக்களிடையே சிறந்த காற்று மாசுபாடு கட்டுப்பாட்டை ஆதரிக்க, இது ஒரு சவாலாக அமைகிறது, இதற்கு நீடித்த மற்றும் போதிய நடவடிக்கைகள் தேவை.

பெரிய வெகுஜனங்களின் கருத்து என்ன? அரசியல் விவாதங்கள் பொதுவாக சமூகத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கின்றன, மற்றும் நல்ல காற்று தரம் என்பது ஏதாவது இல்லை; மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் " என்ற டி.இ.ஆர்.ஐ. அமைப்பின் ஷர்மா இது முக்கியமாக காற்று மாசுபாட்டின் நிலை மற்றும் தாக்கங்கள், பிற உடனடி முக்கிய பிரச்சினைகள் குறித்து மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக உள்ளது.

வரும் மாதங்களில் இந்தியாவின் காற்று மாசுபாடு நெருக்கடி பற்றிய கட்டுரைகளை இந்தியா ஸ்பெண்ட் வெளியிட உள்ளது. இது எவ்வாறு பொது சுகாதாரத்தை பாதிக்கிறது, ஏன் அது அதிக அரசியல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் மற்றும் - உலகளாவிய உதாரணங்களைப் பயன்படுத்தி - நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய பொதுக் கொள்கைகளை விளக்க உள்ளது.

What the new government must do to curb air pollution:

After speaking to a range of experts, IndiaSpend has put together a list of actions that the new government should undertake to deal with rising air pollution:

 • The Ujjwala programme to provide cooking gas to poor household is an important initiative and needs to be expanded. This will require more subsidies to make liquefied petroleum gas (LPG) more affordable, but it will also need behavioral interventions and awareness campaigns. This is important because household use of solid fuels for cooking and other purposes is the single largest contributor to average national ambient PM 2.5 exposure (toxic inhalable particles): Santosh Harish, fellow, Center for Policy Research (CPR), a think tank
 • Implementation and tracking of activities listed in the NCAP and adequate budgets and timelines: Sumit Sharma, director, Earth Science, and Climate Change Division, The Energy and Resources Institute (TERI), a think tank
 • Stricter vigilance and enforcement to control air pollution, with a focus on the industrial sector, including medium, small and micro industries: Hem Dholakia, senior research associate, Council on Energy, Environment and Water (CEEW), a think tank
 • Urgently ensure that India’s coal power plants install equipment that can help them meet national safety standards for sulphur and nitrogen oxides (SOx and NOx). Power plants are the largest contributors to SOx, important precursors for secondary particulate matter: Santosh Harish, fellow, Center for Policy Research (CPR), a think tank
 • Ensure that pollution control boards are better staffed, fill vacancies, boost budgets and other facilities. We need pollution-control boards to substantially increase accountability by making public information on monitoring, inspections and subsequent actions: Santosh Harish, fellow, Center for Policy Research (CPR), a think tank
 • Development and implementation of scientifically derived air-quality management plans at city and regional scales: Sumit Sharma, director, Earth Science and Climate Change Division, The Energy and Resources Institute (TERI), a think tank
 • Creating year-round awareness and protecting people’s health through early warning systems: Hem Dholakia, senior research associate, Council on Energy, Environment and Water (CEEW), a think tank

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.