மும்பை மற்றும் வதோதரா: "நான் நாகாவில் அல்லது நாள் முழுவதும் வேலை செய்யும் ஒரு இடத்தில் இருக்கிறேன். நான் அவளை அங்கே வைத்து பார்த்து கொள்ள முடியாது; எனவே, என்னுடன் அழைத்து வந்து வீட்டிற்காக கொஞ்சம் சம்பாதிக்கிறாள்" என்று, தனது 14 வயது மகள் ஜினியை உடன் அழைத்து வந்துள்ள மீன பென் ரத்வா கூறுகிறார்; இருவரும் வதோதராவின் ஹரிநகர் நாகா வில் அந்த நாளுக்கான கூலிவேலையை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர்.

மீனா பென் மற்றும் அவரது கணவர் ராஜேஷ் ரத்வா ஆகியோர் லட்சக்கணக்கான நாகா தொழிலாளர்களில் - அதாவது கூலி வேலைக்காக நாகாவில் அல்லது சந்திப்பு பகுதியில் காத்திருக்கும் சாதாரண தொழிலாளர்களில்- ஒருவராவர்; இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்ததாக 2ஆவது பெரிய பணி வழங்குவது கட்டுமானத்துறை ஆகும். இது அவர்களின் வாழ்வாதாரமாக 13 வருடங்களாக உள்ளது.

கடந்த 1983 முதல் 2011-12 வரை சுமார் 50 மில்லியன் இந்தியர்கள் கட்டுமானத் துறையில் பணிபுரிந்தனர்; விவசாயத்தில் மிகுதியாக இருந்த கிராமப்புற தொழிலாளர்களை இத்துறை எடுத்து கொண்டது. ஹரிநகர் நாகாவில் உள்ள தொழிலாளர்கள், நிச்சயமற்ற நிலை இருந்தாலும் கட்டுமானத்துறையில் பணி புரிய விரும்புவதாக, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். ஏனென்றால் வேலை சீராகவும் கூடுதலாகவும் கிடைக்கிறது; வேளாண் துறையுடன் ஒப்பிடும் போது ஊதியத்தில் சற்று மேம்பட்டுள்ளது.

ரத்வாஸின் 16 வயது மகன், நிச்சயமற்ற இந்த வேலையில் இருந்து தப்பித்து, வதோதராவில் ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுகிறார். ஆனால், மகள் ஜீனி கடந்தாண்டு பள்ளியில் இருந்து விலகி, தற்போது பெற்றோருடன் நாகாவில் காத்திருகிறார். மொத்த குடும்பத்திற்கும் மாதம் 12- 15 நாட்களே வேலை கிடைக்கும் நிலையில், அது வாழ்வாதாரத்திற்கு கொஞ்சமே போதுமானதாக உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள் கட்டுமான தொழிலாளர்ளின் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்குகின்றன. இதில் கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் சேவை நிபந்தனைகள்) மற்றும் (BOCW) 1996 ஆம் ஆண்டு BOCW நலச்சட்டம் மிக முக்கியமானது.

தொழிலாளர்களுக்கான நல நிதிக்கு வழங்குவதற்காக, ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான திட்ட கட்டுமானங்களுக்கு 1 முதல் 2% வரி விதிப்பு, 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை நியமிப்பதற்கான எந்த நடைமுறைக்கு பொருந்தும்.மாநில நலவாரியங்கள் செஸ் வரி சேகரித்து, தங்க்ளது பதிவு செய்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்கள் கொடுக்கின்றன. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட, ஒரு ஆண்டில் 90 நாட்கள் கட்டிட அல்லது கட்டுமான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், இந்த வாரியல் சேர தகுதி பெற்றவர்கள். ஓய்வூதியம், விபத்து, வீட்டுக் கடன், கல்வி, குழு காப்பீட்டு ப்ரீமியா, மருத்துவ செலவுகள், மகப்பேற்று நன்மைகள் மற்றும் பல உதவிகள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சட்டம் இயற்றப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த போதும் கூட, அதன் செயலாக்கம் என்பது இன்னமும் மோசமாகவே உள்ளது. 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை பெரும்பாலான மாநிலங்கள் நல வாரியங்களை கூட அமைக்கவில்லை; எனவே செஸ் வரி மூலம் சேகரிக்கப்பட்ட தொகை வழங்கப்படவில்லை. 2016-17 இல் கட்டுமான பணியாளர்களின் எண்ணிக்கை (12 மில்லியன்) அதிகம் கொண்ட உத்தரபிரதேசமும் அதில் ஒன்று என, கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டத்திற்கான தேசிய பிரச்சாரம் குழு (NCC-CL) தரவுகள் தெரிவிக்கின்றன.

மகாரஷ்டிராவின் மும்பை மற்றும் குஜராத்தின் வதோதராவில் உள்ள நாகா மையங்களை இந்தியா ஸ்பெண்ட் குழு பார்வையிட்டது. இரண்டுமே 'வளர்ந்த', தொழில்மயமான மாநிலங்கள்; ஆனால், செஸ் வரிவிதிப்பு மற்றும் அதை தொழிலாளர்களுக்கு வழங்குவதில் மோசமாக உள்ளதாக, இந்தியா எக்ஸ்டன்ஷன் அறிக்கை 2017 அறிக்கையை வெளியிட்ட புதுடெல்லியில் உள்ள ஈக்விட்டி ஆய்வுகள் மையம் தெரிவிக்கிறது.

இது, குஜராத் மாநிலத்தில் வதோதராவில் உள்ள தொழிலாளர் கூடுமிடம். நாள்தோறும் நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் அன்றாட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இங்கு காத்திருக்கிறார்கள்.

கால் பங்கு நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது

கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து செஸ் வரியாக பெறப்பட்ட ரூ. 38,685.23 கோடி (5.6 பில்லியன் டாலர்கள்) நிதியில், ரூ. 9,967.61 கோடி (1.4 பில்லியன் டாலர்) அல்லது 25.8% மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என, 2018 ஜூலையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, தொழிலாளர் நிலைக்குழு குறித்த 38ஆவது அறிக்கை தெரிவிக்கிறது. அனைத்து திட்டங்கள் வாயிலாக பெறப்பட்ட செஸ் வரியை கொண்டு ஒரு தொழிலாளருக்கு ஒரு ஆண்டுக்கு வழங்கப்பட்ட தொகை வெறும் ரூ.499 மட்டும் தான்.

நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 அல்லது பாதிக்கும் மேலானவை, 25 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிதியை செலவிட்டன. சேகரித்த நிதியை விட தொழிலாளர்களுக்கு அதிகம் செலவு செய்தது கேரளா மட்டுமே; கோவா 90% செலவிட்டுள்ளது. மேகாலயா (2%), சண்டிகார் (4.7%) மற்றும் மகாராஷ்டிரா (6.8%) ஆகியன நிதியை மிகக் குறைவாக பயன்படுத்திய மாநிலங்கள் ஆகும்.

Source: Standing Committee on Labour 38th Report, 2018

ஆண்டுக்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.2,000க்கும் மேலாக சேகரித்தவை நான்கு மாநிலங்கள் மட்டுமே; ரூ. 1,000 க்கும் குறைவான 20 மாநிலங்கள் சேகரித்ததாக, கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உரிமை பாதுகாப்பதற்காக தேசியக்குழுவான எ.சி.சி.-சி.எல். அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய மாதிரி ஆய்வு ஆணையம் (NSSO) மற்றும் அத்துடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் இந்த தரவுகள் பெறப்பட்டன.

Source: National Campaign Committee for Central Legislation on Construction Labour, 2017

டாமன் & டையூ (ரூ. 20,525), சிக்கிம் (ரூ. 3,853) மற்றும் சண்டிகர் (ரூ. 3,157) என தொழிலாளர்களுக்கென மிக அதிக செஸ் வரியை வசூலித்தன. மணிப்பூர் (ரூ. 114), ஜார்கண்ட் (ரூ. 135 ரூபாய்), தமிழ்நாடு (136 ரூபாய்) குறைவாக வசூல் செய்தன.

"இந்த நிதிகளின் விநியோகம் திட்ட வாரியாக உள்ளது; ஒவ்வொரு நபருக்கும் என்று கணக்கிடப்படவில்லை. அதனால் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவர் தகுதியுள்ள திட்டங்களின் எண்ணிக்கை பொறுத்து செஸ் வரியில் இருந்து பணம் கிடைக்கும்" என்று, வருடத்திற்கு ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் நிதிகளின் அளவு மிகக் குறைவானது ஏன் என்று கேட்டபோது, மகாராஷ்டிரா தொழிலாளர் துறை இந்த பதிலை அளித்தது.

பதிவுசெய்வதில் சிரமம்

"சட்ட விதிகள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, ஆனால் நாம் பதிவு செய்தால் கிடைக்கும் சில நன்மைகள் உள்ளன என்று தெரியும்" என்று நவி மும்பையின் நெருல் பகுதியை சேர்ந்த நாகா தொழிலாளி கொன்டபா ஹிங்கோல் கூறினார்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற ஒப்பீட்டளவில் வளர்ந்துள்ள மாநிலங்களின் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட இந்த சட்டங்கள் பற்றி அறியாமல் இருந்தது, இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டு கேட்டதில் தெரிய வந்தது. "நான், திட்ட அடிப்படையில் தொழிலாளி மட்டுமே; அட்டை வைத்திருக்கும் முன்பிஷை நாங்கள் பெற்றுள்ளோம். அட்டை அவர்கள் வேலைக்கு வரும் நாட்கள் குறிக்க மட்டுமே பொருள் மற்றும் அவர்கள் மாத இறுதியில் அல்லது திட்டம் முடிவடைகிறது போது வழங்கப்படும். அவர்கள் வேலைக்கு வரும் நாட்கள் குறிக்க மட்டுமே இந்த அட்டை என்பது பொருள் மற்றும் அவர்கள் மாத இறுதியில் அல்லது திட்டம் முடிவடையும் போது வழங்கப்படும். இந்த பதிவு முறை பற்றி நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை” என்று குஜராத்தின் வதோதராவை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத கட்டட தொழிலாளி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

வடிவமைப்பு குறைபாடுகள் சட்டங்களை மீறுதல், அரசியல் மற்றும் நிர்வாகத் தன்மை இல்லாதது போன்றவை பல காரணிகள் பதிவைக் கடினமாக்குகின்றன என, இந்தியா எக்ஸ்டன்ஷன் அறிக்கை 2017 தெரிவிக்கிறது.

தொழிலாளர்கள் பதிவு செய்வதில் மோசமான மாநிலங்களில் ஒன்றாக (610,000) மஹாராஷ்டிரா இருப்பதை அறிக்கை காட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் செஸ் (ரூ. 5,483 கோடியில் 7%) வினியோகம் மோசமாக இருந்தது.

"1996இல் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், [மகாராஷ்டிரா அரசு] ஒரு குழுவை அமைத்தது. 2013-14 ஆம் ஆண்டுக்குப் பிறகே இது, தொழிலாளர்களை பதிவு செய்ய ஆரம்பித்தது. அதேபோல், பதிவின் செயல்முறை அவ்வளவு வேகமாக இருக்கவில்லை" என்று, நவி மும்பையில் உள்ள 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் லாப நோக்கற்ற நிறுவனத்துடன் ஒற்றுமை மற்றும் தன்னார்வ நடவடிக்கைக்கான இளைஞர் (YUVA) என்ற அமைப்பின் ஒரு தொழிலாளர் உதவிமைய அசோசியேட் தீபக் காம்பிள் தெரிவித்தார். இது, மும்பை மற்றும் நவி மும்பையில் கட்டுமானத் தொழிலாளர்களைப் பதிவு பணியை செய்கிறது.

மகாராஷ்டிராவில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஒரு பெரிய சவால், 90 நாட்கள் வேலை முடிந்ததற்கான சான்றிதழை கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து பெறுவது தான். பதிவு செய்வதற்கு படிவத்தை சமர்ப்பிக்க அவர் / அவள் ₹ 85 செலுத்த வேண்டும்.

"முன்பு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக பதிவு செய்ய வேண்டியிருந்தது. பின்னர், 90 நாட்கள் சான்றிதழை வழங்குவதற்காக பொறுப்புள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகராட்சிகள் உட்பட்டிருந்தன. இது நாகாவுக்கு போகும் அதிகாரம், வழக்கமான நாகா தொழிலாளர்கள் அடையாளம் மற்றும் சான்றிதழ்களை வழங்கியது” என்று, யுவா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு வஞ்சாரே கூறினார்.

கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு அனுமதி பெற செய் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று காம்பெல் கூறினார்.

"பெரிய கட்டுமான நிறுவனங்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் தங்களது தொழிலாளர்கள் பதிவு செய்யப்படுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், நாகா தொழிலாளர்கள் 90 நாள் வேலை சான்றிதழை பெறாததால் எளிதாக பதிவு செய்ய முடியாது, "என்று அவர் கூறினார். அண்மையில் அரசின் அறிவிப்பானது, சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு கிராம சேவகர்கள் அல்லது வார்டு அலுவலர்கள் போன்றவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் விரைவான பதிவுகளை மேற்கொள்ளும் நோக்கத்தை கொண்டிருந்தது.

"நான் ஒருமுறை என் முதலாளியிடம் வேலை செய்தபோது எனக்கு 90 நாள் பணி சான்றிதழ் கிடைத்தது, இல்லையெனில் அது பெறுவது கடினமாக இருந்திருக்கும்" என, நவி மும்பையின் நேருல் பகுதியை சேர்ந்த நாகா பணியாளர் சஞ்சய் ரதோட், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஆனால் 90 நாள் சான்றிதழை கொடுத்த பிறகும் கூட என் பதிவு முடிக்கப்படவில்லை, என் ஆவணங்களை சமர்ப்பித்ததில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. இதனால் நல உதவி பெறுவது சிக்கலாக இருந்தது" என்றார் அவர்.

நாக தொழிலாளி ஹிங்கோல் கூறும்போது, நகராட்சி நிறுவனங்களின் உதவியுடன் தன்னை பதிவு செய்ததாகவும், அதனால், அவருக்கு 90 நாள் சான்றிதழ் கிடைத்தது என்றார்.

மகாராஷ்டிரா BOCW சட்டத்தின் கீழ் 90% பதிவுசெய்யப்பட்டகட்டுமான தொழிலாளர்கள் கொண்டிருப்பதாகக் கூறுகிறது; இந்த எண்ணிக்கையில் ஆர்வலர்கள் முரண்படுகின்றனர். "இது முற்றிலும் தவறானது. நான் இவற்றை [பதிவுகள்] மோசடி என்று பந்தயம் கட்டுவேன். அவற்றில் கட்டுமானம் இல்லாத தொழிலாளர்களும் உள்ளனர். மகாராஷ்டிராவில் பதிவு மிகவும் மோசமாக உள்ளது "என்கிறார் என்.சி.சி.-சி.எல். பட்நாகர்.

"செய்த பதிவுகளில் பல தவறானவை அல்லது சரியாக பதியப்படவில்லை. வேலைவாய்ப்பு காலம் முடிவடைந்ததும், அவற்றின் பதிவு அட்டைகளும் எங்களிடம் இருந்து வருகின்றன" என்று கம்ப்ளே கூறினார்.

பாதுகாப்பு, உடல்நலம், கல்வி மற்றும் நிதி என மகாராஷ்டிராவில் 16 திட்டங்களின் கீழ் செஸ் வரி நிதி பயனாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் "[அரசு அதிகாரிகள்] சாரி சொல்லிவிட்டு மேலிட அதிகாரிகள் இன்று இல்லை என்று சொல்கிறார்கள், 'நீங்கள் காத்திருக்க வேண்டும்'; 'பதிவுகள் செயல்பாட்டில் உள்ளன' அல்லது 'நாம் இன்னும் வாரியத்தில் இருந்து பணம் பெறவில்லை' " என்று, காம்பிள் கூறினார்.

நிதி வழங்கப்படுவது, பணம் செலவிடப்படுகிறது என்பதை காண்பிக்கத்தான் என்று ஆர்வலர்கள் சொல்கிறார்கள். "இது உண்மையான தொழிற்சங்கங்களால் எதிர்க்கப்பட வேண்டும்," என்று கூறும் என்.இச்.சி.-சி.எல். பட்நாகர், "உண்மையில் உடனடியாக நிவாரணம் கிடைக்க வேண்டுமென்றில், விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும்; அல்லது ஓய்வூதியதாரர் எனில் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்; வீட்டுக்கடன், சுகாதார பராமரிப்பு, மருத்துவ நிதி, குழந்தை கல்வி என்று இருக்க வேண்டும்” என்றார்.

"தொழிலாளர்களை பதிவு செய்ய எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஜி.ஆர். பற்றி அதிகாரிகள் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். விதிமுறைகளை விளக்கினாலும் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அதிகாரிகளில் ஒருவர் என்னிடம் சொன்னார் தனக்கு ஜி.ஆர். பற்றி கவலை இல்லை, " என, காம்பில் கூறினார். தேர்தல் காரணமாக 2018 ம் ஆண்டு பதிவு முகாம்கள் நடத்தப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். "நிறைய ஊடகங்களும் பிரமுகர்களும் இருந்தார்கள். அவர்கள் ஒருநாள் முழுவதும் அதே இடத்தில் இருந்து பதிவுகளை வழங்கினார்கள். இருப்பினும், 2014 இல் இருந்து 2017 வரை முகாம்கள் நடத்தப்படவில்லை. முந்தைய அரசு அதிகாரத்தில் இருந்தபோதும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை" என்றார்.

பதிவு செய்த தொழிலாளர்களுக்கும் சிரமம்

"என் பதிவு முடிந்தாலும், எனக்கு இன்னும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை," என்கிறார் ஹிங்கோல். "இப்போது [மாநகராட்சி] அலுவலகத்தில் புதியவர்கள் உள்ளனர். அவர்கள் அதே அலுவலகத்தை எங்களுக்கு வழங்கிய 90 நாள் வேலை சான்றிதழ் பற்றி கேள்வி கேட்கின்றனர்" என்றார் அவர்.

மகாராஷ்டிரா தொழிலாளர் துறை இப்போது பதிவுகள் அதிகரிக்க மற்றும் செயல்முறை வேகமாக மாவட்ட அளவில் 'பணியாளர் வசதியளிக்கும் மையங்களுக்கு' நிறுவ திட்டமிட்டுள்ளது. இது 600,000 தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சேர ஒரு இலக்குடன் மாவட்ட அளவிலான மையங்கள் அமைக்க நிறுவனத்தையும் நியமிக்க விரும்புகிறது. திட்ட அதிக அதிகாரம் கொண்ட குழுவின் ஒப்புதலுக்கு இத்துறை காத்திருக்கிறது.

இதற்காக ஒரு முகமை ஏற்படுத்த தேவையில்லை என்ற பட்நாகர், "நீங்கள் ஒரு முகமையை இயக்கினால், உங்கள் ஆர்வம் என்ன? பல தொழிலாளர்களிடம் பதிவு செய்ய முடிந்தவரை வருவாய் பெற முயற்சிப்பார்கள். பதிவு செய்ய ரூ 10 அல்லது ரூ 20 என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் ஒரு இலக்கை அடைய அனைவரையும் பதிவு செய்வீர்கள், இது ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர் அல்லது கடைக்காரர் எனில், அந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும்.கட்டுமானத் தொழிலாளர்களை மட்டுமே பதிவு செய்ய நீங்கள் ஏன் கவலைப்படுவீர்கள்? " என்றார்.

தொழிலாளர் நிலைக்குழுவின் 38ஆவது அறிக்கை பரிந்துரைப்பது என்னவெனில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற ஒரு இரட்டை முறை பதிவு அனைத்து மாநிலங்களிலும் கட்டுமானப் பணியாளர்களுக்காக ஏற்படுத்த வேண்டும்; அந்த அடையாள அட்டைகளில் போலி உருவாகாமல் இருக்க ஆதார் அட்டையுடன் அதை இணைக்க வேண்டும்.

இதை தொடர்ந்து, கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது; அதில், தொழிலாளர் நல அமைச்சகத்தின் ஸ்ரம் சுவிதா இணையதளத்தில் இ-சலான் மூலம் பதிவுக்கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பணியாளருக்கும் பதிவிற்காக ஒரு தொழிலாளர் அடையாள எண் (LIN) ஒதுக்கப்படும். ஏப்ரல் 3, 2019 வரை, 2,685,058 தொழிலாளர் அடையாள எண் உருவாக்கப்பட்டன.

எனினும், செயல்முறை அனைவருக்கும் மென்மையான இல்லை."தளம் முடங்குகிறது மற்றும் தொழிலாளரின் புகைப்படத்தை அதில் பதிவேற்ற முடியாது," என்ற காம்பில், "நாங்கள் எந்த பதிவிற்கும் இந்த இணையதளத்தை பயன்படுத்தவில்லை" என்றார்.

ஒரு புதிய சமூக பாதுகாப்பு தொகுப்பு

அதேபோல், தொழிலாளர் சட்டங்களை ஒழுங்குபடுத்த, புதிய தொழிலாளர் 'குறியீடுகள்' கொண்ட 2018 ஆம் ஆண்டில் சமூக பாதுகாப்பு மற்றும் நல மசோதா மீதான வரைவு தொழிலாளர் சட்டம், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்கள் நலனுடன் தொடர்புடைய சட்டங்களை எளிதாக்குவது மற்றும் முரண்பாடுகளை களைய கொண்டு வரப்பட்டது. இது BOCW செஸ் தொடர வேண்டும் என்று கூறியது. சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின் பொதுவான அமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத துறை ஊழியர்களுக்காக நலத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றது.

"ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 20 சதவிகித ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் நன்மைகளை அணுகுவதற்கு பங்களிக்க முடியும் என்பது போன்ற உணர முடியாத பல ஊகங்கள் மசோதாவில் உள்ளன," என்றார் பட்நாகர். "ஆண்டின் பெரிய பகுதியில் வேலை செய்யாத தொழிலாளர் நிலைமையை இது கருதவில்லை. ஒவ்வொரு பணியாளர்களிடமிருந்தும் இந்த 20 சதவிகிதத்தை சேகரிப்பதற்கு கட்டமைப்பு இல்லை என்பதால் அது செயல்படுத்தப்பட முடியாது” என்றார் அவர். பி.ஓ.சி.டபிள்யு. சட்டங்கள் தொடர வேண்டும் என்று அவர் கூறினார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய சட்டங்கள் அல்லது திட்டங்கள் தேவைப்பட்டால், அல்லது நடைமுறையில் இருக்கும் திறன்களை அமல்படுத்த வேண்டுமா என்பது பற்றி, இந்தியா ஸ்பென்ட் பேசிவ வரை, ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

புதிய திட்டங்களில் ஒன்றுதான் ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்குபிப்ரவரி 2019இல் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மன்-தன் ஓய்வூதிய திட்டம் (PM-SYM); இது தன்னார்வ, பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்; மற்றும் கட்டுமான மற்றும் கட்டுமான பணியாளர்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட மாதிரி நலத் திட்டம்; இது வாழ்வாதாரம், சுகாதார, கல்வி, வீட்டுவசதி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்குகிறது.

"எங்களுக்கு அரசு நடைமுறைகள் மற்றும் பதிவு பற்றி அதிகம் தெரியாது. எங்களுக்கு தொந்தரவு வேண்டாம். ஒவ்வொரு வருடமும், யாரோ எங்களிட்ம வருவார்கள்; எங்களிடம் ஆதார் கார்டு கேட்கிறார். நாங்கள் தினமும் அதை சுமக்க மாட்டோம்! நாங்கள் நாள் முழுவதும் இங்கு நிற்கிறோம். பணத்தை ஈட்டிய பிறகு இங்கிருந்து வீட்டிற்கு செல்வோம். எங்களுக்கு அரசு என்ன செய்கிறது என்று எங்களுக்கு தெரியாது" என்று மீனா பென் கூறினார்.

பெண்கள் கட்டுமான தொழிலாளர்கள் ஆண்கள் விட குறைந்த கூலி பெறுகின்றனர்; அத்துடன் குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து வருகின்றனர். அங்கு குழந்தைகளின் பராமரிப்புக்கு எந்த வசதியும் இல்லை.

(பானர்ஜி, வதோதராவில் உள்ள எம்.எஸ்.யு.வில் முதுகலை அரசியல் அறிவியல் மாணவர்; ரய்பாகி, ஒரு தரவு ஆய்வாளர் மற்றும் கார்டிப் பல்கலைக்கழக கணக்கியல் மற்றும் தரவு இதழியல் பட்டதாரி; இருவரும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்கள்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.