பணக்கார 10 இந்தியர்களின் சொத்து 4 மாநிலங்களின் பொருளாதாரம் & 6 அமைச்சகங்களுக்கு ஈடானது
மும்பை: பணக்கார 10 இந்தியர்களின் சொத்து மதிப்பானது, நான்கு மாநிலங்கள் மற்றும் ஆறு அரசு அமைச்சகங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) இணையானது அரசு தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
தற்போது, ஒன்பது செல்வந்த இந்தியர்கள் சொத்து மதிப்பானது, நாட்டின் கடைசி 50 சதவீதத்திற்கு ஈடானது. அதேநேரம் முதல் 1%, நாட்டின் சொத்து மதிப்பில் 52% கொண்டிருக்க, கடைசி 60% பேர் 5% மட்டுமே கொண்டிருப்பதாக, உலக சமத்துவமின்மை குறித்த 2019 ஜனவரி ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய சொத்துக்குவிப்பு என்பது உலகளாவிய போக்கு என்றாலும், மற்ற நாடுகளில் சொத்துகள் பொதுவாக 1% மக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது, இந்தியாவில் ஒன்பது தனிநபர்களின் கைகளில் அல்லது 120 கோடி இந்திய மக்களில் 0.000000075% ஆகும்.
"மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரேசிலும் போல் அல்லாமல் இவை வரலாற்று ரீதியாக உயர்ந்த சமத்துவமின்மையைக் கொண்டுள்ளன. ஆனால் மொத்த வருவாயில் முதல் 10% பங்கில் சரிவு காணப்பட்டது, இந்தியாவின் வருவாயின் பங்களிப்பு 10% உயர்ந்து, மக்கள் தொகையில் 1% அதிகரித்துள்ளது" என ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் 1% வருமானம் 1982-1983 ஆம் ஆண்டில் சுமார் 6% ஆக உயர்ந்தது; ஒரு தசாப்தத்திற்குப் பின் 10%, 2000இல் 15% மற்றும் 2014இல் 23% அதிகரித்ததாக, உலக சமத்துவமின்மை அறிக்கை 2018 கூறுகிறது.
இந்தியா தற்போது, 1% உயர்ந்த தேசிய வருவாய் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில், துருக்கி, ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக, உலக சமத்துவமின்மை தரவு 2017 கூறுகிறது.
இந்தியாவில் கோடிஸ்வரர்கள் எண்ணிக்கை 2018ல் 35% உயர்ந்துள்ளது; அல்லது ஒருநாளைக்கு 2,200 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது; அதேநேரம் மோசமான 10%ஐ உருவாக்கும் 13.6 கோடி இந்தியர்கள், 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கடன்களிலேயே இருக்கின்றனர் என்கிறது ஆக்ஸ்பாம் அறிக்கை.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, ரூ. 3.3 லட்சம் கோடி; இது 2017-18ஆம் ஆண்டின் ஒடிசா மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% என்று, போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியல் மற்றும் பட்ஜெட் குறித்த மத்திய புள்ளியியல் அலுவலக தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.
Comparison Of Net Worth With States’ Gross Domestic Product, 2017-18 | |||
---|---|---|---|
Billionaire | Net Worth (in Rs crore) | State | GSDP (in Rs crore) |
Mukesh Ambani | 331525 | Odisha | 346294 |
Pallonji Mistry | 110041 | Himachal Pradesh | 109564 |
Shiv Nadar | 102331 | Jharkhand | 203358 |
Dilip Shanghvi | 88313 | Meghalaya | 24202 |
Source: Forbes, Ministry of Statistics
Comparison Of Personal Net Worth with Budgets Of Government Ministries, 2017-18 | |||
---|---|---|---|
Billionaire | Net Worth (in Rs crore) | Ministry | Budget Estimate (in Rs crore) |
Azim Premji | 1,47,189 | Ministry of Consumer Affairs, Food and Public Distribution | 1,54,231 |
Lakshmi Mittal | 1,28,264 | Ministry of Road Transport and Highways | 64,900 |
Hinduja Brothers | 1,26,162 | Ministry of Home Affairs | 97,187 |
Godrej family | 98126 | Ministry of Health and Family Welfare | 48,852 |
Kumar Mangalam Birla | 87612 | Ministry of Women and Child Development | 22,094 |
Gautam Adani | 83407 | Ministry of Drinking Water and Sanitation | 20,010 |
Source: Forbes, Finance Ministry
153 ஆண்டுகளை எட்டியுள்ள ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோன்ஜி மிஸ்ட்ரியின் சொத்துகளின் மதிப்பு, 1.1 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இமாச்சலப்பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான, 477 கோடி ரூபாயைவிட அதிகம்.
போர்ப்ஸ் 2018ஆம் ஆண்டுக்கான நாட்டின் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில், ஹெச்.சி.எல். நிறுவனர் சிவ்நாடார் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பான 1.02 லட்சம் கோடி ரூபாய் என்பது, ஜார்கண்ட் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியளவாகும்.
அதேபோல், சன் பார்மாசாட்டிகளின் நிறுவனர் திலீப் சங்விக்கு, 2017-18ல் சொத்து மதிப்பு ரூ. 88,313 கோடியாகும். இது மேகாலயாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். 29 லட்சம் மக்கள்தொகை கொண்ட மேகாலயாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் ரூ 24,202 கோடியாக இருந்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
"சுகாதார சேவை மற்றும் கல்வி போன்ற பொதுச்சேவைகளுக்கு அரசு நிதியை செலவிடப்படுவதால், சமத்துவமின்மை இன்னும் மோசமாகிறது" என ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது.
“பெரு நிறுவனங்களும், செல்வந்தர்களும் வரிவிதிப்பின் கீழ் வந்தாலுல், வரி விலக்கின் கீழ் அவர்கள் தப்புவதை தடுக்க தவறுகிறது” என்று அது மேலும் கூறுகிறது.
மேலும், விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி, 1.4 லட்சம் கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்தார். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகட்தின் 2017-18ஆம் ஆண்டின் ஒதுக்கீடான ரூ.1.5 லட்சம் கோடியில் இது, 95% ஆகும்.
உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளரான ஆர்சலார் மிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லட்சுமி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி; இது, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட இரு மடங்கு ஆகும்.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு 2017-18ல் ஒதுக்கப்பட்ட நிதி, 97,187 கோடி ரூபாய்; இது, இந்துஜா சகோதரர்களின் ரூ 1.2 லட்சம் கோடியை விட குறைவு தான்.
அதேபோல், கோத்ரேஜ் குழுமத்தை நிர்வகிக்கும் கோத்ரேஜ் குடும்பம், 98,126 கோடி ரூபாய் நிகர மதிப்பைக் கொண்டுள்ளது; இது சுகாதார அமைச்சகத்திற்கு வரவு செலவு தொகையை விட இரு மடங்கு ஆகும்.
மேலும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா 87,612 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார். இது பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானிகு 83,407 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இத்தொகையானது, 2017-18ஆம் ஆண்டில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
(ஜாஸ்மின் நிஹலானி, இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் மாணவர். இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.