புதுடெல்லி: காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியாக மரக்கன்று நடவு போன்ற திட்டங்கள் உள்ள நிலையில், அதை மோசமாக வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துவதால், இயற்கையாக காடுகளை தருவதை விடவும், பல்லுயிர் பெருக்கம் அழிப்பு என்பதவிடவும், அதிகளவு கார்பனை வெளியிட்டு அவை பொது நிதியை வீணடிப்பதாக, நேச்சர் சஸ்டெய்னபிளிட்டி (Nature Sustainability) அமைப்பின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது.

காடுகள் வளரும்போது, அவை வளிமண்டலத்தில் இருந்து கார்பனை (பசுமை இல்ல வாயுவை வெளியேற்றுகின்றன; இது, காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன) உறிஞ்சி, ஒரு ‘கார்பன் மடு’வாக செயல்படுகின்றன.

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒரு டிரில்லியன் (1,00,000 கோடி)மரக்கன்றுகளை நடவு செய்யும் உலகளாவிய முயற்சிகளில் உலக பொருளாதார மன்றம் போன்றவை ஈடுபட்டுள்ளன; மற்றும் 2030ம் ஆண்டுக்குள் உலகின் 350 மில்லியன் ஹெக்டேர் காடு அழிக்கப்பட்ட மற்றும் சீரழிந்த நிலத்தை மீட்டெடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பான் (BONN) சவால் என்ற பெயரில் பணி மேற்கோண்டுள்ளது; இவை அனைத்தும் மரங்கள் வளர்ப்பை ஊக்குவிப்பதாக, ஆய்வு தெரிவித்துள்ளது.

இயற்கை காடுகளை மீட்டெடுப்பதற்கு பதிலாக, இத்தகைய பிரச்சாரங்கள் ஒரே வகை மரக்கன்றுகளை (ஒரே வகை பயிரிடல்) அல்லது குறைந்த எண்ணிக்கையிலான பல்லுயிரினங்கள் வளர்ப்பையே ஊக்குவிக்கின்றன. இத்தகைய மரக்கன்று வளர்ப்பு பொதுவாக கார்பன் வரிசைப்படுத்துதல் மற்றும் பல்லுயிர் ஊக்குவிப்புக்கு குறைந்த திறனையே கொண்டுள்ளதாக, ஜூன் 22, 2020ஆய்வில் கண்டறியப்பட்டது.

"உதாரணத்திற்கு, பான் (BONN) சவாலுக்கான பணிகளில் ஏறத்தாழ 80%, ஒரே ரக மரக்கன்றுகளை நடவு செய்வதோ அல்லது இயற்கை காடுகளை மீட்டெடுப்பதை விட பழம் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் மரங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கலவையையே உள்ளடக்குகிறது" என்று அது கண்டறிந்தது.

நடப்பட்ட மரங்கள் இயற்கை காடுகள், புல்வெளிகள் அல்லது சவன்னாக்களை (தனித்துவமான, உள்ளூர் பல்லுயிரியி சூழலை ஆதரிப்பதற்காக உருவாகியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள். மரக்கன்றுகளை நடுவதற்காக நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிதி சலுகைகளின் சாத்தியமான விளைவுகளை தீவிரமாக பகுப்பாய்வு செய்வதற்கான முதல்வகை இது என்று ஆய்வு தெரிவிக்கிறது.) மாற்றியமைத்தால் சாத்தியமான நன்மைகள் மேலும் குறையும்; பல நாடுகளில் அதிகளவில் மரக்கன்று நடும் முயற்சிகளுக்கு இக்கொள்கை பயன்படுத்தப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானவை; ஏனெனில் தொழில்துறை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வனச்செயல்பாடு அல்லாத பிற நோக்கங்களுக்காக இயற்கையான காடுகளை அழித்து, அதற்கு ஈடாக எளிய கருவியாக ஒரே ரக மரக்கன்றுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு தேசிய வேலைத்திட்டம் இங்கு ஊக்குவிக்கப்படுகிறது.

காடு வளர்ப்பிற்கான மானியங்களே சிக்கலாக மாறுகின்றன

பகுப்பாய்விற்காக, காடு வளர்ப்புக்கு மானியங்களை வழங்கும் சிலி நாட்டின் சட்டத்தை (காடு வளர்ப்பு செலவில் 75% வழங்குவதோடு, நிர்வாக ஆதரவும் கிடைக்கிறது) விஞ்ஞானிகள் கண்டனர். உலகின் மிக நீண்டகால காடு வளர்ப்பு மானியக் கொள்கைகளில் ஒன்றான இது, 1974 மற்றும் 2012ம் ஆண்டுக்கு இடையில் 38 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தது; இது, மீண்டும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. சிலியில் உள்ள அரசு மானியங்கள், காடுகள் இயற்கையாகவே மீளுருவாக்கம் செய்யக்கூடிய புதர்கள் அல்லது குறு விவசாய நிலங்களில் தோட்டங்களை நிறுவுவதை ஊக்குவிப்பதன் மூலம் பூர்வீக வனப்பகுதியைக் குறைத்ததை இந்த ஆய்வின் முந்தைய சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு இந்தியாவுக்கு ஏன் பொருத்தமானது?

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்காக இந்தியா தற்போதுள்ள 24% என்ற புவியியல் வனப்பரப்பை, வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் 33% அக அதிகரிக்க உறுதி கொண்டுள்ளது. மரக்கன்றுகளை வளர்ப்பதற்காக குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகள், கடந்த தசாப்தத்தில் மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க முயற்சித்தன.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ், இந்திய அரசு இயற்கை காடுகளுக்கு பதிலாக அவற்றை தங்களது திட்டங்களுக்காக திருப்பிவிடப்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து பணம் பெறுகிறது. பின்னர் இத்தொகை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் (CAMPA- காம்பா) கீழ், இழப்பீடாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். காம்பாவின் கீழ் பெரிதும் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள், இயற்கையான வனத்தை ஒரே ரக மரங்களாக மாற்றி அமைக்கின்றன; இது மேலும் சிக்கலை தரும் என்று, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 2019 கட்டுரை தெரிவித்தது.

இருப்பினும், இந்திய அரசு அத்தகைய தோட்டங்களை காடுகள் என்றே கணக்கிட்டு வருகிறது.

.மைசூருவில் உள்ள இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தி நேச்சர் கன்சர்வேன்சி ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 2020 ஆய்வு, இயற்கை வன இனங்கள் மற்றும் ஒற்றை ரக இனங்கள் (ஒற்றை ரகம் வளர்ப்பு) தோட்டங்களின் திறனை நீண்ட காலத்திற்குள் கார்பனை இழுத்தல் மற்றும் சேமித்தல் குறித்து மதிப்பிடப்பட்டது.

மோனோ-ஆதிக்கம் செலுத்தும் தோட்டங்கள் ஈரம் நிறைந்த பருவங்களில் கார்பன் உறிஞ்சுதல் மற்றும் சேமிக்கும் திறன் அடிப்படையில் இயற்கை இனங்கள் நிறைந்த பல்லுயிர் காடுகளுடன் பொருந்தக்கூடும்; எனவே பல ஆண்டுகளாக, குறிப்பாக வறட்சியின் போது கார்பனை உறிஞ்சும் திறனில் அவை மிகவும் நம்பகமானவை என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், ஒரே மரக்கன்று நடும் கலாச்சாரம் அல்லது மோசமான தாவர இனங்களை நடுவது என்பது, இயற்கை காடுகளால் வழங்கப்படும் காலநிலை-ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகளுக்கு ஒருபோதும் மாற்ற இருக்க முடியாது என்பதை காட்டுவதாக, இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்தவரும், ஜனவரி ஆய்வின் இணை ஆசிரியருமான ஆனந்த் ஒசுரி, ஜனவரி 21, 2020இல், இயற்கை பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற போர்டல் கன்சர்வேஷன் இந்தியா (Conservation India) இணையத்தில் எழுதினார்.

எனவே, இந்தியாவின் ஒட்டுமொத்த வனப்பகுதி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும், இயற்கை காடுகளின் மதிப்பில் தோட்டங்களை விரிவாக்குவது ஒட்டுமொத்தமாக பார்த்தால் காலநிலை மாற்றத்தை குறைந்தளவே தடுக்கும் என்று ஒசுரி எழுதினார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018 வரை, ஐந்து அல்லது அதற்கும் குறைவான உயிரினங்களின் மரக்கன்றுகள், மறுகாடுவளர்ப்புக்காக பயிரிடப்பட்ட 2,35,000 ஹெக்டேரில் 53% என்று, இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இ-கிரீன் வாட்ச் என்ற இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட அரசின் காம்பா தோட்டத்தரவை பயன்படுத்தி நடந்த ஜனவரி ஆய்வு கூறியது.

பாரம்பரிய காடுகளை மரத்தோட்டங்களாக மாற்றுவதற்கான தடைகள், வலுவான மானியக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதோடு, சீரழிந்த காடுகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தினால், உலகளாவிய பிரச்சாரங்கள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, நேச்சர் சஸ்டெய்னபிளிட்டி ஆய்வு தெரிவிக்கிறது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.