இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 10%ஐ இழக்க உள்ளது; கோவிட்-19இன் பின்விளைவுகள் தான் இதற்கு காரணம். இந்தியாவில் எட்டு மாநிலங்கள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமாக பங்களிப்பு செய்கின்றன. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 42% கொண்டுள்ள இந்த எட்டு மாநிலங்களின் பல பகுதிகள், இப்போது சிவப்பு மண்டலங்களாகக் கருதப்படுவனவற்றில் உள்ளது.

இனி, அவை எவ்வாறு செயல்படப் போகின்றன, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வாய்ப்பு என்ன? மதிப்பீட்டு நிறுவனமான க்ரிசில் (CRISIL) தலைமை பொருளாதார நிபுணர் டி.கே. ஜோஷியுடன் நாம் கலந்துரையாடல் நடத்தினோம்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

இது சுதந்திரத்திற்கு பிறகு சந்திக்கும் நான்காவது மந்தநிலை மற்றும் தாராளமயமாக்கலுக்கு பின்னர் ஏற்பட்ட முதல் மந்தநிலை. இதுபற்றி உங்கள் அறிக்கை கூறுவது என்ன?

கடந்த காலங்களில் ஏற்பட்ட மந்தநிலைகளின் தன்மையை பார்த்தால், அவை பிரதானமாக வேளாண்துறையால் நிகழ்ந்தன. ஏனென்றால், விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கவில்லை; இன்றுவரை, விவசாயத்திற்கு கிட்டத்தட்ட பாதி நீர்ப்பாசன வசதி கிடைக்கவில்லை. நீர்ப்பாசனம் கூட பலவீனமாக இருந்த அந்த நேரத்தில் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% விவசாயத்தில் இருந்து வந்தது, மோசமான பருவமழை இருந்தது, பின்னர் அது நம்மை மந்தநிலைக்கு தள்ளியது. சுமார் 1980ம் ஆண்டு வரை இப்படித்தான் இருந்தது.

தற்போதைய மந்தநிலை வேறுபட்டது என்று நினைக்கிறேன், ஏனெனில் விவசாயம் இம்முறை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை இயல்பாக உள்ளது. எனவே, வேளாண்மை அல்லாத துறைகளால் ஏற்படும் முதலாவது மந்தநிலை இதுவாகும் - இது தொழில் மற்றும் சேவைத்துறைகளுக்கு மிகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அது ஒன்றே இதை வேறுபடுத்துகிறது. இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருளாதாரத்தின் கட்டமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது என்பதையும் கூறுகிறது. விவசாயத்தின் பங்கு குறைந்துள்ளது. இனி மந்தநிலையை உருவாக்க அது காரணமல்ல. வேளாண்மை அல்லாத துறைகள்தான் முக்கியம், இப்போதே அவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

[ஆசிரியரின் குறிப்பு: ஜூன் 4, 2020, க்ரிசல் அறிக்கை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், "கோவிட்-19 தொற்றுநோயானது தொழில் மற்றும் சேவைகளின் தடைகளை குறைத்து, ஒரு வருடத்தில் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரே பிரகாசமான இடமாக இருக்கக்கூடும்" என்று கூறியுள்ளது].

ஒரு மாதத்திற்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% சரிவு இருக்கும் என்று நீங்கள் கணித்திருந்தீர்கள். இப்போது அது 10% என்று ஆகியுள்ளது. இந்த எண்ணிக்கை ஏன் வியத்தகு முறையில் மாறியுள்ளது?

அந்த நேரத்தில், நாம் ஊரடங்கின் இரண்டாம் கட்டத்தில் இருந்தோம், அப்போது நமது அனுமானம், அது [தொற்றுநோய்] மே [2020] இல் உச்சம் பெறும் என்றிருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை மற்றும் ஊரடங்கு மிகவும் தீவிரமாக இருந்தது. அதாவது ஊரங்கு தொடர்ந்தால், அது ஒரு நேரியல் அல்லாத விளைவைக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

எனவே, அந்த கண்ணோட்டத்தில், ஊரடங்கு - பொருளாதாரத்தின் சில பகுதிகளை விடுவித்தாலும் கூட - பொருளாதார நடவடிக்கைகளைப் பொருத்தவரை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், நாம் எதிர்பார்த்ததை விட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இரண்டாவது காரணம் என்னவென்றால், அரசு அறிவித்த பொருளாதார தொகுப்பு, நமது அனுமானங்களை விட குறைவாக உள்ளது.

இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றாக இணைந்ததால் - எங்கள் மதிப்பீட்டில் ஒரு பெரும் பாரத்தை கொண்டிருக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கை - மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தீவிரமான திருத்தத்திற்கு வழிவகுத்தது. இந்த செயல்முறையை பற்றியும் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம், விஷயங்கள் எப்போது நிகழ்கின்றன, புதிய தகவல்களை காரணியாக்கி, மறு மதிப்பீடு செய்கிறோம். இது பொருளாதாரத்திற்கு மிகவும் கடினமான கட்டம் மற்றும் விஷயங்கள் எவ்வாறு செயல்படும் என்பதை மதிப்பிடுவது, முன் கணிப்பாளர்களுக்கு மிகவும் கடினமானது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை, தொடர்ச்சியான மறு மதிப்பீடுகள் நடப்பதை நீங்கள் காண்பீர்கள்.

எனவே, நீங்கள் மறுபரிசீலனை செய்யும்போது, உங்களது முன்னணி குறிகாட்டிகளாக நீங்கள் அதிகம் கவனிக்கும் இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் யாவை?

வைரசின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம். ஏனென்றால் அது எல்லா பிரச்சினைகளுக்கும் தாய். பொருளாதார மீட்டெடுப்பின் வடிவம், பின்னர் ஏற்படும் மீட்பின் அளவு அனைத்தும் வைரஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். வல்லுநர்கள் எதைச் சொன்னாலும், எங்களுக்கு எந்த தகவல் கிடைத்தாலும், ஊரடங்கு போன்றவற்றின் வலிமையைப் பார்க்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அல்லது ஐ.சி.எம்.ஆர் [இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்] போன்றவற்றில் இருந்து, நாம் அதை எடுத்துக்கொள்கிறோம், அதைப் பார்த்தால் மோசமானதை நோக்கி திரும்பி, கண்ணோட்டத்திற்கு காரணியாகிறது. ஏனெனில் கட்டுப்பாடுகளை பொருத்தவரை அது உடனடியாக பாதுகாப்பை குறைக்காததற்கு வழிவகுக்கும். எனவே, அதுதான் பிரதான காரணி.

இரண்டாவது, நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு ஆதரவு தேவை. எனவே, தேவையான ஆதரவு கிடைக்கிறதா இல்லையா? அதன் அடிப்படையில், இந்த கட்டத்தில் திட்டமிட எந்த அறிவியல் முறையும் நம்மிடம் இல்லை. முன்பு வேலை செய்த மாதிரிகள், இப்போது செயல்பாட்டுக்கு வராது. ஏனெனில் இதற்கு இடையூறு உள்ளது. எனவே, நாம் சேகரிக்கும் எந்த தகவல்களின் அடிப்படையிலும், மதிப்பீட்டிற்கான தீர்ப்பும் நிறைய மாறுபாடு உள்ளது.

இப்போது சிவப்பு மண்டலங்களைப் பற்றி பேசலாம். சிவப்பு மண்டலங்களாக உள்ளவை, இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளால் வலுவான மையங்களாக இருப்பவையாக தெரிகிறது. எனவே, இக்கட்டான நிலையில் இருந்து இப்போது எப்படி வெளியேறப் போகிறோம்? இதற்கு பொருளாதாரக் கொள்கையின் பதில் என்னவாக இருக்கும். அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த மையங்கள் பலவும் முடங்கி இருக்கக்கூடும் என்று கருத இடமுண்டு அல்லவா.

நீங்கள் அதை சரியாக சுட்டிக்காட்டி இருப்பதாகவே நினைக்கிறேன். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாநிலங்கள் - மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழகம் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை அல்லாத பிறவற்றிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வேளாண் அல்லாத துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் என்பதால், ஊரடங்கு கட்டுப்பாட்டின் தாக்கம் அங்கு மிக அதிகமாக இருக்கும். ஏனெனில் நான் முன்பு கூறியது போல் விவசாயம் அவ்வளவு பாதிக்கப்படவில்லை. வேளாண்மை அல்லாதது [பாதிக்கப்பட்டுள்ளது]. எனவே, வேளாண்மை அல்லாதவற்றின் பங்கை நீங்கள் எவ்வளவு அதிகமாக நம்புகிறீர்களோ, அவ்வளவுக்கு ஒரு உற்பத்தி வெளியீடு கண்ணோட்டத்தில் இருந்து பாதிப்பு வரக்கூடும்.

இது சிவப்பு மண்டலங்கள் மட்டுமல்ல. உற்பத்தி கண்ணோட்டத்தில் உங்கள் பொருளாதாரத்தை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாகப் பிரித்திருந்தாலும், இதன் பொருள் என்னவென்றால், அனைத்து மண்டலங்களிலும் விநியோகச் சங்கிலிகள் துண்டானதால், மாநிலத்தின் அல்லது நாட்டின் பிற பகுதிகளைத் தவிர - உற்பத்தி நடவடிக்கைகளை நீங்கள் முழுமையாகத் தொடங்க முடியாது - இது உங்களுக்கு உள்ளீடுகள் [திறக்க] தேவையான பொருட்களை வழங்குகிறது. பசுமை மண்டலங்களில் கூட உற்பத்தி சீராக இருக்காது, ஏனெனில் விநியோகச் சங்கிலிகளுடன், அவை இணைப்புகள் உள்ளன. எனவே தெளிவாக, இது சிவப்பு மண்டலங்களைப் பற்றி மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உற்பத்தி எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் பற்றியதும் ஆகும். எனவே முன்னோக்கிச் செல்லும்போது, இந்த மாநிலங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இழப்பு அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நாம் முன்னோக்கிச் செல்லும் போது, சிவப்பு மண்டல குழப்பம் தீர்க்கப்படாவிட்டால், பொருளாதாரக் கொள்கையும் வணிகங்களும் மறு இடமாற்றம் செய்யப்பட வேண்டுமா?

வணிகங்கள் அவ்வளவு விரைவாக இடமாற்றம் செய்யப்படும் என்று நான் நினைக்கவில்லை. மக்கள் இதை ஒரு குறுகிய கால மோசமான ஒன்றாக கருதுகின்றனர், எனவே நீங்கள் அதைத் தாங்கத்தான் வேண்டும்.

நீங்கள் இடமாற்றம் செய்தாலும், பொருளாதார செயல்பாடு அதன் முழுவதற்குமாக [திறனுக்கும்] திரும்பாது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் செயற்பாட்டளவில் பல சிக்கல்கள் இருப்பதால் அவை தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும். மக்கள் செய்த வழிமுறைப்படி அவர்கள் அதை உட்கொள்ள மாட்டார்கள், நிறைய சேவைத்துறை நடவடிக்கைகள் செயல்படாது. இந்த தயாரிப்புகளுக்கான தேவை கூட, நீங்கள் இடமாற்றம் செய்தாலும், அவ்வகையில் அது உயரப் போவதில்லை. எனவே, குறைந்தளவு பயன்பாட்டுடன் நீங்கள் செயல்பட முடிந்தாலும், அது பொருளாதாரத்தில் தேவைக்கு ஒத்ததாக இருக்கும்.

குறைந்தபட்சம் இந்த வருடத்தில், உங்கள் உற்பத்தியை அந்த அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்றளவில் [ஏதேனும்] தேவை அதிகரிப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. உதாரணமாக வாகனத்துறையை பாருங்கள்; அங்கு 80% குறைந்துவிட்டன. எனவே, திடீரென்று திறன் பயன்பாட்டை அதிகரிப்பதில் அவர்களுக்கு அர்த்தமில்லை. நான் சொல்வது என்னவென்றால், இந்த நெருக்கடியில் உங்கள் திறனை அடைய விநியோக கட்டுப்பாடுகள் உங்களை அனுமதிக்காது. நான் அதை வாசிப்பேன், இடமாற்றம் செய்வதைப் பார்க்க மாட்டேன்.

தொழில்துறையின் சில பகுதிகள் - நுகர் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் - நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நாம் எந்த வகையான தேவையிருக்கும் என்ற போக்குகளுக்கான ஆரம்ப குறிப்புகள் தெரிகிறதா?

ஆரம்பத்தில் சில காலத்திற்கு அத்தியாவசியமற்றவற்றை வாங்காததால், சிலவை தேவைகளை மட்டுமே நீங்கள் காண்பீர்கள், இப்போது அந்த பொருட்களில் சிலவற்றின் தேவை அதிகரிக்கும். ஆனால் அது நீடிக்கப் போவதில்லை, ஏனென்றால் அது இறுதியில் நிலைத்தன்மை வருமானத்தைப் பொறுத்தது. இந்த சூழ்நிலையில், மக்களின் வருமானம் அதிகமாக வீழ்ச்சியடையாவிட்டாலும், அவர்கள் இன்னும் அதிகமாக சேமிக்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் உட்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஒரு நெருக்கடியின் போது அது சாதாரண ஒன்று தான். உங்கள் பணத்தை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். ஆகவே, எந்த நேரத்திலும் தேவை அதிகரிப்பு என்பதை நான் காணவில்லை, இருப்பினும் தேவைக்கேற்ப சில பிக்-அப் இருக்கும், ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.