புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2019 அன்று, உலகின் இதுவரை முதலாவதாக சந்தை அடிப்படையிலான மாசு வெளிப்பாடு தடுப்பு அமைப்பு என்ற ஒரு முக்கிய திட்டம், குஜராத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பு, தொழில்துறை யூனிட்டுகளுக்கு பொருளாதார ஊக்கங்களை தருகிறது; அவை துகள் மாசுபாடுகளின் வெளியேற்றத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்த உதவும். அரசு, துகள் மாசு உமிழ்வு நிலைகளில் ஒரு மூடியை அமைக்கும்; பின் அந்த மூடிக்கு கீழே தங்கும் உமிழ்வுகளை வாங்க மற்றும் விற்க அனுமதிக்கிறது. அனுமதியானது, தங்கள் இலக்குகளை பூர்த்தி செய்ய மாசுபாடு குறைப்புக்களை அடைந்த நிறுவனங்களால் பெற்ற சான்றிதழ்கள் ஆகும், அவை அவற்றிற்கு சந்திக்கத் தவறிய நிறுவனங்களுக்கு விற்க முடியும். இது மாசு கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் தற்போதைய கட்டுப்பாட்டு மற்றும் அணுகுமுறைகளை விட சிறப்பாக செயல்பட முடியும்; உயர்தர தகவல் இல்லாத காரணத்தால் அதிக இணக்கமின்மையால் இது விளைந்தது.

இந்திய நகரங்களில், உலகின் மிக மோசமான நச்சுக் காற்று உள்ளது மற்றும் 10இல் எட்டு இந்தியர்கள் நச்சுக் காற்றை சுவாசிக்கிறார்கள் - இதனால் 2017ஆம் ஆண்டில் 12 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் - காசநோய், வயிற்றுப்போக்கு, நிமோனியா மற்றும் மலேரியா ஆகியவற்றால் எற்படும் இறப்பு எண்ணிக்கையை விட இது அதிகம். நாட்டின் சராசரி காற்றில் நுண்துகள் கரையும் அளவு அல்லது பி.எம். (PM) 2.5 - இது ஒரு மனித முடிவை விட 30 மடங்கு மெல்லியது; மற்றும் இதய நோய், ஸ்ட்ரோக், நீரிழிவு, முதலியன ஏற்படுத்தும் இரத்த ஓட்டத்தில் நுழைய முடியும். இது உலக சுகாதார அமைப்பின் தரத்தைவிட எட்டு மடங்கும், உலகின் நான்காவதும் ஆகும்.

குஜராத்தின் சூரத்தில் உள்ள துகள்மாசு கட்டுப்பாட்டு அமைப்புடன் மற்றும் வணிகத் திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது; இந்த நகரம் ஜவுளி மற்றும் சாய ஆலைகள் ஒரு கணிசமான அளவு துகள்கள் மாசுபடுதல்களை வெளியிடும் ஒரு அடர்த்தியான மக்கள்தொகையை கொண்டுள்ளது. 2011 முதல், குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜி.பீ.சி.பி (GPCB), சிகாகோ பல்கலைக்கழக எரிசக்தி கொள்கை நிறுவனம்- எபிக் இந்தியா (EPIC- India), அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் (J-PAL South Asia) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (EPoD-India) கொள்கை வடிவமைப்புக்கான சான்றுகள் (ஈ.பி.ஓ.டி) ஆகியன, சூரத் நகர மாசு வெளிப்பாடு தடுப்பு வணிக திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதில் இணைந்து செயல்படுகின்றன.

இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்சனையை, மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகத்திட்டத்தால் தீர்த்து வைக்க முடியுமா? ஆம் என்கிறார் எபிக் இயக்குனரான மைக்கேல் கிரீன்ஸ்டோன், இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.கிரீன்ஸ்டோன், சிகாகோ பல்கலைக்கழகத்தின் மில்டன் ப்ரீட்மன் பேராசிரியர்; இவர், முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கான பொருளாதார ஆலோசகர்களுக்கான முக்கிய குழுவில் வல்லுனராக பணியாற்றியவர். குஜராத்தில் செயல்படுத்தப்படும் திட்டம் நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் நுண் மாசுபாட்டைக் குறைப்பதற்காக "மிக சக்திவாய்ந்த கருவி" ஆக இருப்பதாக அவர் கருதுகிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

குஜராத்தில் மாசு வெளிப்பாடு தடுப்பு -மற்றும்-வணிக திட்டம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் எப்படி கட்டமைக்கப்படுகிறது?

உமிழ்வுகள் குறித்த நம்பகமான தகவல்களின் மோசமான தன்மை காரணமாக, குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் - ஜிபிசிபி (GPCB) உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை சார்ந்திருக்க வேண்டி, சில துல்லியமான மாசுபாடு குறைப்பு உபகரணங்களை நிறுவ தொழிற்சாலைகளை நேரடியாக வரிசைப்படுத்துகிறது. நீங்கள் ஒரு தொழிற்துறை எனில், நீங்கள் வெளியேற்றும் உமிழ்வுகளை வேறு வழியில் குறைக்க முடியும் என்று கருதுகிறீர்கள் என்றாலும், அது தற்போதைய அமைப்பில் போதுமான நெகிழ்வுத்தன்மையுடன் இல்லை. மாசு வெளிப்பாடு தடுப்பு மற்றும் வணிகம் என்னவென்றால், இது பழைய உத்தரவுகளை நீக்குவதோடு, [மாசு ஒழுங்குமுறைகளோடு] இணங்குவதற்கான மலிவான வழி என்ன என்பதை தொழிற்சாலைகளில் கண்டுபிடிக்க உதவுகிறது.

அவர்களில் சிலருக்கு, இணக்கம் மிக செலவுமிக்கதாக இருக்கும்; மேலும் அவற்றின் நுண்துகள் மாசுபாட்டை குறைந்த செலவில் எப்படி குறைப்பது என்பதைக் கண்டறிந்து, பிற தொழில்களில் இருந்து அவர்கள் அனுமதிகளை வாங்குவர். உதாரணமாக நாம் ஒன்றை சொல்லலாம்; தொழிற்துறை ஏ-வுக்கு சில பொறியாளர்கள் உள்ளனர்; அவர்களுக்கு உண்மையில் ஒரு மலிவான வழியில், வெளிவரும் உமிழ்வு துகள்களிய குறைப்பது எப்படி என்று தெரியும்; தொழிற்துறை பி-க்கு, அவற்றின் துகள்களை குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் அவர்களின் உற்பத்தி பாணி அப்படி வேலை செய்கிறது. எனவே, தொழிற்துறை ஏ என்ன செய்ய வேண்டும்: அவர்கள் உண்மையில் தேவைப்படுவதை விட உமிழ்வுகளை இன்னும் குறைக்க வேண்டும்; மேலும் அவர்கள் இந்த அதிகமான குறைப்புக்களை எடுத்து தொழிற்துறை பி-க்கு விற்பார்கள். தொழிற்துறை பி-க்கு, தொழிற்துறை ஏ-வில் இருந்து அதிகப்படியான குறைப்புகளை வாங்குதல், அவற்றுக்கான உமிழ்வைக் குறைப்பதை விட குறைவாக இருக்கும்; ஏனெனில் அவர்களின் உற்பத்தி செயல்முறை மிகவும் நெகிழ்வானதாக இல்லை. எனவே, இந்த அமைப்பு உண்மையில் சூழலின் பெயரில் சந்தை சக்திகளை கட்டவிழ்த்து விடுகிறது.

இத்தகைய திட்டங்கள் முன்பு இந்தியா அல்லது பிற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்னவா?

மாசுபாட்டை கையாள, இந்தியா ஒரு உமிழ்வு வர்த்தக திட்டத்தையோ அல்லது எவ்விதமான சந்தை அடிப்படையிலான அணுகுமுறையோ கொண்டு இருக்கவில்லை. உண்மையில் உலகில் வேறெங்கும்கூட எங்கிருந்தும் நுண்துகள்களை வெளியேற்றுவது தொடர்பான மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் இல்லை. இதுவரை, மாசுபாடு சந்தைகள் வரலாற்று ரீதியாக வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; இது கந்தக டையாக்ஸைடு (SOx) மற்றும் கார்பன் உமிழ்வுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகும்.

இருப்பினும், இந்தியாவில் இரண்டு மாசு வெளிப்பாடு தடுப்பு வணிக சந்தைகள் உள்ளன. முதலாவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ்கள் திட்டம்; இரண்டாவது, எரிசக்தி திறனுடைய பணியகம் - பி (BEE) செயல்திறன், அடைய, வர்த்தகம் - பேட் (PAT) திட்டம். இவை இரண்டும் சில சவால்களை சந்தித்திருக்கின்றன; எனினும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கின்றன.

சூரத்தின் மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகத்திட்டம், எந்த வகையிலாவது பேட் (PAT) திட்டத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறதா?

இல்லை. பேட் திட்டமானது, அதிக எரிசக்தியை பயன்படுத்தும் இந்தியா முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது. இதில் உள்ள வித்தியாசம், பேட் மிக குறைவான பகுதிகளை கையாள்கிறது. இரண்டாவது, பேட் திட்டம், ஆற்றல் செயல்திறன் சான்றிதழ் வணிகத்திய ஊக்குவிக்கிறது. ஆற்றல் திறன் என்பது மாசுபாடு அல்ல (குறைந்த எரிபொருளை எரிக்க முடியும் ஆனால் மாசுபாட்டை நிறைய வெளிப்படுத்துவது. ஏனெனில் புகையிலிருந்து மாசுபாட்டை பிரித்தெடுக்க எந்த முயற்சியும் இல்லை). மாசுபாட்டைக் குறைக்கக்கூடிய வழிகளில் ஒன்று குறைவான எரிபொருளை எரிக்க வேண்டும் என்பதே அது. இதனால் உமிழ்வு வணிக திட்டத்தின் ஒரு பக்க விளைவை மேம்படுத்தலாம், அப்படி இருப்பின் இது சிறிய ஆலைகளுக்கு நீட்டிக்க ஒரு பயனுள்ள வழியாகும்; ஆனால் பேட் அவ்வாறு இல்லை.

இத்தகைய யோசனையை குஜராத்தில் செயல்படுத்த என்ன காரணம்?

குஜராத் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் (ஜி.பீ.சி.பீ.) நாங்கள் நீண்டகாலமாக பணியாற்றி வரும் செயல்முறையின் விளைவாக சூரத் நகரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் முதலாவது மற்றும் மிக சிக்கலான நடவடிக்கை செயல்முறையாக, தொடர்ச்சியான உமிழ்வு கண்காணிப்புக்கான நெறிமுறைகளை உருவாக்குவதில் இருந்தது. இது அடுக்குகள் வெளியே வரவில்லை. எனவே அவற்றை மேம்படுத்த உதவினோம். பின்னர் இந்த நெறிமுறைகள் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) கொள்கையின் ஒரு பகுதியாக மாறியது. இரண்டாவது படிநிலை தொடர்ச்சியான உமிழ் கண்காணிப்பு அமைப்பு - சிஈஎம்எஸ் (CEMS) - தொழிற்சாலைகளின் மாசுபாடுகளை அளவிட்டு நேரடியாக அனுப்பும் ஒரு நுண் வலையமைப்பு - நம்பகமான தகவலை வழங்கும். இது, நாம் வெற்றிகரமாக செய்யக்கூடியது; சுற்றுச்சூழல் அமைச்சகம். மிகவும் மாசுபடுத்தும் 17 துறைகளுக்கு [கூழ் மற்றும் காகிதம், காய்ச்சி வடித்தல், சர்க்கரை, தோல் பதனிடுதல், மின் உற்பத்தி நிலையங்கள், இரும்பு மற்றும் எஃகு போன்ற துறைகளுக்கு], கட்டாயம் சிஈஎம்எஸ் நிறுவ உத்தரவிட்டது. ஆனால் அந்த சி.இ.எம்.எஸ். ஐ நம்பகமான தரவை உருவாக்குவதற்கு மற்றொரு படி இருக்கிறது. ஜி.பி.சி.பி. ஒரு மிக முக்கியமான முயற்சியை முன்னெடுத்து வருகிறது - இதில் ஒரு பகுதியாக நாங்கள் சிறிய உதவி வழங்குகிறோம் - நம்பத்தகுந்த வகையில் செயல்பட, சூரத் நகரில் சி.இ.எம்.எஸ். நிறுவப்பட்டது.

எனவே, இந்த திட்டம் இந்தியாவில் சுற்றுச்சூழல் அமலாக்கத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கை ஆகும். முன்பு ஜி.பீ.சி.பீ, உண்மையில் ஆலைகளில் இருந்து ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை, 15 அல்லது 20 நிமிடங்களுக்கு நுண்துகள் மாசுபாடு அளவீடுகளை பெற்றது; இப்போது அவர்கள் நிமிடத்திற்கு நிமிடம் அளவிடூகளை பெறுகின்றனர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, சூரத்தில் மாசு வெளிப்பாடு தடுப்பு வணிக திட்டத்தை அமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இது மாசுபடுத்தும் அமலாக்கத்தில் ஒரு வியத்தகு நடவடிக்கை ஆகும். இது தொடர்பான இரண்டு முக்கியமான விஷயங்கள்: அ) இது ஒரு முக்கிய திட்டம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பு, அது நுண் மாசுபாட்டை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; ஆ) தற்போதைய அமைப்புடன் ஒப்பிடுகையில், அது தொழில்சாலைகளுக்கு விலை மலிவானதாக இருக்கும். தற்போது, ஒழுங்குபடுத்துபவர்கள் உமிழ்வுகளைப் பற்றி அத்தகைய மோசமான தகவல்கள் கிடைக்கின்றன; இதனால் மிகவும் சிக்கலான அவற்றை ஒழுங்குபடுத்த அவர்கள் அதிகம் செலவிடுகிறார்கள். ஆனால் புதிய மாதிரியானது, விஷயங்களை மிகவும் கணிக்கக்கூடியது மற்றும் தொழிற்துறைகளை ஒரு தெளிவான சமிக்ஞையை அளிக்கிறது. எனவே, மாசுவெளிப்பாடு தடுப்பு வணிகம், மாசுபாட்டை குறைத்து ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்தாமல், தொழில்துறைக்கான செலவையும் குறைக்கிறது.

தொழில்துறையானது பணம் செலுத்தி மாசுபடுத்தல் என்ற முடிவுக்கு வந்தால், மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் அத்தகைய இணக்கமின்மையை எவ்வாறு தவிர்க்கும்?

மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகத்தின் இதயமாக இருப்பது என்னவென்றால், துகள்களின் மொத்த அளவு வரையறுக்க வேண்டும் என்பதுதான். இது, அமைப்பின் பகுதியாக உள்ள அனைத்து துறைகளிலும் அனுமதிக்கப்படுகிறது. ஆம், சில தொழிற்சாலைகள் பணம் செலுத்தி கொண்டு மாசு ஏற்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவை வேறு சில தொழில்களுக்கு இதை குறைப்பதற்காகத்தான். இங்கே இந்த அமைப்பில், மூடி என்ன செய்ய வேண்டும் என்பதர்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்; அதாவது அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ள மாசுபாட்டின் மொத்த அளவானது, இப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட துகள்களின் உமிழ்வுகளின் வரையறுக்கப்பட்ட அளவைத் தடுக்கவில்லை. தொழிற்துறை-ஏ மேலும் மாசுபடுத்தும் போது சிலர் அதைப் பிடிக்கிறார்கள். ஆனால், மாசுபாடு தொழிற்துறை ஏ அல்லது தொழிற்துறை பி இல் இருந்து வந்தால், அந்த விஷயம் மாசுபட்ட காற்று சுவாசிக்கின்ற மக்கள் கவலைப்படுவதில்லை. எனவே, தொழில்களின் வணிகத்தை பெறாமல் ஒட்டுமொத்த மூடியை அமைப்பதன் மூலம் அரசு கட்டுப்படுத்த முடியும். சூரத் நகரில் இப்பணித்திட்டம் நிலையான தொழில்களுக்கானதாக இருக்கும், அரசு ஒருமூடியை அமைக்க வேண்டும் மற்றும் இந்த தொழிற்சாலைகளுக்கு ஒட்டுமொத்த உமிழ்வு குறைப்புகளை தெரிவிக்க வேண்டும். மற்றவை மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் உறுதி செய்யும்.

இந்த திட்டத்தால் நாட்டின் பிற பகுதிகளில் காற்று மாசுபாடு பிரச்சனையை கூட தீர்க்க முடியுமா?

சூரத் திட்டம் தனது திறமையை முழுமையாக நிரூபித்தால், பிற மாசுபாடு உள்ள பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டம் பரவலாம். சூரத் திட்டம் முக்கியமானது. ஏனெனில் இது இந்தியாவில் வேலை செய்து காட்ட முடியும் என்ற கருத்தை நிரூபிக்கும் ஒரு செயலாக்கம் ஆகும். நீங்கள் அதை செய்தபின், மாற்றியமைக்கக்கூடிய மாசுபாட்டை குறைப்பதற்காக ஒரு புதிய சக்திவாய்ந்த கருவியாய இதை, மாசுபாடு உள்ள பகுதிகளில் நீங்கள் வைத்திருக்கலாம். கருவிகளின் ஆற்றல் என்பது தொழில்துறை செலவுகளை குறைக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைகிறது.

நடப்பு ஒழுங்குமுறை சட்டங்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனவா அல்லது அது கட்டமைப்பு சீர்திருத்தம் வேண்டுமா?

இப்போது, ​​சட்டங்களை மீறுபவரோ கையாள்வதில் சட்டம் மிகவும் நெகிழ்வாக இல்லை. தற்போதுள்ள அமைப்பானது மாசுபடுபவர் மீது அபராதம் அல்லது தண்டனையை அல்லது அவற்றை மூடிவிட வேண்டும் என்ற நடவடிக்கைக்கு ஒழுங்குபடுத்துவோரை அனுமதிக்கிறது. கொஞ்சமாவது செய்து அவற்றை மூடுவதற்கு ஒழுங்குபடுத்துவோருக்கு நிறைய இடம் இருக்கிறது. எனவே, நாட்டில் உள்ள ஒழுங்குமுறை அமைப்பின் மையம் இந்த யோசனையை ஊக்கப்படுத்த வேண்டும்; அதனால், நிதி சார்ந்த புகார்கள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் அல்லது ஆலை மூடப்படாமல் இருக்கலாம்.தற்போதைய சட்டங்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி வாசிக்கப்படலாம், நான் நினைக்கிறேன், ஆனால் அவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. மேலும், இது குறிப்பிட்ட எந்தவொரு மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதில் ஆர்வம் காட்டினால், இத்திட்டத்திற்கான சவாலாக இருக்காது, ஆனால் பரந்தளவில் ஏற்றுக் கொள்வது நிச்சயமாக ஒரு பெரிய சவாலாக உள்ளது.

மற்றொரு விஷயம் என்னவென்றால், நடப்பு முறைமையில் நிறைய விதிமுறைகளை அரசு ஆய்வாளரால் மனரீதியாக சோதனையிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.ஆனால் சி.இ.எம்.எஸ். முற்றிலும் புதியதொரு பந்தால் விளையாடப்படும் விளையாட்டு ஆகும், ஒருவேளை இந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விதிகள் சீராக இல்லை என்று நான் நினைக்கிறேன்,

நீங்கள் சொன்னது போல், சுற்றுச்சூழல் அமைச்சகம் 17 துறைகளில் கட்டாயமாக சி.இ.எம்.எஸ். நிறுவ உத்தரவிட்டது. நாட்டில் மாசு கட்டுப்படுத்துவதில் உள்ள இந்த புதிய அம்சத்தை சீர்செய்யும் பணியில் அமைச்சகம் இன்னும் உள்ளது. குஜராத் திட்டத்தில் இருந்து பயனுள்ளதாக எந்த குறிப்பும் இருக்கிறதா?

குஜராத்தில், கழிவு உமிழ்வுகளில் சில மாசுபடுத்திகளைக் கண்டறிவதற்கு சாதனங்களை அளவீடு செய்வது எப்படி என்பது ஒரு முக்கிய படியாக இருந்தது. அளவுத்திருத்தம் மிகவும் தந்திரமான பகுதியாகும் - இந்த தொடர்ச்சியான கண்காணிப்பாளர்களை குறைந்த அளவிலான மாசுபாட்டைக் காண்பிப்பதற்கு நீங்கள் அளவிட முடியும் அல்லது உமிழ்வுகளின் சரியான அளவு காண்பிப்பதற்கு அவற்றை அளவிடக்கூடும். எனவே, மாசுபாட்டை குறைக்க பணம் செலவழிக்க விரும்பாத தொழில்துறைகள், அதை ஒரு குறிப்பிட்ட வழியில் அளவீடு செய்ய வேண்டும். எனவே, தொழிலில் நிதி பங்குகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பினரின் தொடர்ச்சியான தணிக்கை மற்றும் அளவுத்திருத்தம் அவசியம். இது கடுமையான மற்றும் நிச்சயமாக சில சோதனை இருந்தது, ஆனால் குஜராத்தில் இந்த வகையான பிரச்சனையை நாங்கள் முறித்தோம். சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு நாடு முழுவதும் அதன் கற்றல்களை நிறுவ நிச்சயம் ஒரு வாய்ப்பு உள்ளது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.