‘மும்பையில் தசாப்தங்களுக்குள் விஷயங்களை மோசமாக்கப்போகும் கடல் மட்ட உயர்வு’
நியூயார்க் / பெங்களூரு: இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் அமிதாவ் கோஷ், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளிமண்டல விஞ்ஞானி ஆடம் சோபலின் புத்தகத்தை 2015இல் ஆய்வு செய்து, அவருக்கு கடிதம் எழுதினார். 52 வயதான சோபல் தீவிர வானிலை மற்றும் காலநிலை பற்றி படிக்கிறார். மும்பையை புயல் தாக்குமா என்று சோபலிடம் கோஷ் கேட்டார்.
கோஷ் தனது ‘பெரும் தடுமாற்றம்: காலநிலை மாற்றமும் நினைத்துப்பார்க்க முடியாதவைகளும்’ (The Great Derangement: Climate Change and the Unthinkable) என்ற நூலில், உலகெங்கம் முழுவதும் உள்ள கடலோர நகரங்களை பார்த்து, புயல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவை ஏன் போதாதவாறு கட்டப்பட்டுள்ளன என்ற கேள்வியை எழுப்பினார். அவரது முக்கிய வாதங்களில் ஒன்று, வானிலை பற்றிய உள்ளூர் அறிவை குடியேற்றங்கள் புறக்கணித்தது என்பது தான்.
கோஷ், சோபலிடம் ஒரு விஞ்ஞான ரீதியான் அபதிலை வழங்குமாறு கேட்டார்: உள்ளபடியே மும்பை கட்டமைக்கப்பட்டதா? ஏனெனில் அரபிக்கடல் புயல்களின் முரண்பாடுகள் கிட்டத்தட்ட இல்லை? இதுபற்றி ஒரு ஆய்வு நடத்த சோபல் முடிவு செய்தார். ஆமாம். மும்பை புயலா தாக்கப்படலாம்; ஆனால் எந்தவொரு ஆண்டிலும் அந்த தாக்குதல் குறைந்தளவே இருக்குமென அவரது ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்தது. எவ்வாறாயினும், காலநிலை மாற்றம் காரணமாக புயல் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்களை அவர்கள் கவனிக்கவில்லை.
புவி வெப்பமடைவதால், அரபிக்கடல் உட்பட கடல் வெப்பநிலையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது; இதனால் கடல் மட்டம் அதிகரிப்பு, இந்தியா மீதான மழைப்பொழிவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் மூலம், இந்தியாவின் மேற்கு கடற்கரையோரத்தில் புயல் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக, காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியலை மதிப்பிடும் ஐ.நா.வால் ஏற்படுத்தப்பட்ட- காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசுக்குழுவின் (ஐபிசிசி-IPCC) செப்டம்பர் 2019 அறிக்கை தெரிவித்தது.
இந்தியாவின் மேற்கு கடற்கரை, வங்காள விரிகுடா உள்ள கிழக்கு கடற்கரையை காட்டிலும் குறந்தளவே புயல் செயல்பாடுகளை காண்கிறது. வங்காள விரிகுடாவில் உருவாகும் மொத்த புயல்களில் 58%-க்கும் மேற்பட்டவை இந்தியாவின் கிழக்கு கடற்கரை அல்லது அதற்கு அப்பால் தாக்கியுள்ளன; ஆனால், அரபிக்கடலில் உருவாகும் புயல்களில் 25% மட்டுமே மேற்கு கடற்கரையை தொடுகின்றன என்கிறது அரசு தரவுகள். அரபிக்கடலில் ஏற்படும் புயல்களில் பெரும்பாலானவை வடக்கில் நகர்ந்து குஜராத்தை நோக்கி சென்றுவிடுகின்றன; இது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.
இந்தியாவின் 7,500 கி.மீ நீளமுள்ள மொத்த கடற்கரையில், கிட்டத்தட்ட 5,700 கி.மீ வெப்பமண்டல சூறாவளிகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று அரசு தரவுகள் கூறுகின்றன. சுமார் 32 கோடி இந்தியர்கள் (அல்லது நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர்) புயல் தொடர்பான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு, உலகத் தலைவர்கள் ஐ.நாவில் காலநிலை நடவடிக்கை குறித்து விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியா ஸ்பெண்ட் குழு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரது அலுவலகத்தில் சோபலுடன் உரையாடிக் கொண்டிருந்தது. நமக்கு அளித்த நேர்காணலில், தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த சமீபத்திய அறிவியலை பற்றி சோபல் பேசினார்; அறிவியல் சான்றுகளுக்கு உலகெங்கிலும் உள்ள கடலோரப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை எவ்வாறு மறுமொழி செய்கின்றன என்று விளக்கினார்: கடலோரப்பகுதிக்கு அருகே வசிப்பது நல்ல யோசனையல்ல; கடல் மட்டங்களும் தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார்.
நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:
தி கிரேட் டிரேஞ்ச்மெண்டில் அமிதாவ் கோஷ் கதைகள், வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றின் லென்ஸ் மூலம் காலநிலை மாற்றத்தைப் பார்க்கிறார், மேலும் காலனித்துவ நகரங்கள் நிறைய கட்டப்பட்டபோது வானிலை மற்றும் காலநிலை பற்றிய உள்ளூர் அறிவு எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதை விவரிக்கிறது. அறிவியல் கண்ணோட்டத்தின் மூலம் நியூயார்க், மும்பை போன்ற நகரங்களை பார்த்தால், அந்த வாதத்தில் நீங்கள் தகுதியைக் காண்கிறீர்களா?
தி கிரேட் டிரேஞ்ச்மெண்ட் நூலில் அமிதாவ் கூறும் அந்த புள்ளி, மிகவும் ஆழமான ஒன்று. வரலாற்றுச் சூழலை பாராட்டுவதன் அடிப்படையில் இது எனக்கு ஒரு புதிய புரிதலைக் கொடுத்தது.
என்னை போன்ற காலநிலை விஞ்ஞானிகள், கடல் மட்ட உயர்வு பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம். அது குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். ஏனென்றால் காலநிலை மாற்றம் மக்களை பாதிக்கும் மிகப்பெரிய, மிக மோசமான மற்றும் வெளிப்படையான ஒன்றாக இருக்கும். குறைந்த கடற்கரையோர பரப்புகளில் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர்; இறுதியில், அவை [நகரங்கள்] நிரந்தரமாக தண்ணீருக்குள் இருக்கும். ஆனால் அது நடப்பதற்கு வெகு காலம் முன்பே, அவை தீவிர வானிலை நிகழ்வுகளால் தொடர்ந்து மூழ்கடிக்கப் போகின்றன - கடந்த காலங்களில் புயல்கள் இவ்வளவு வெள்ளத்தை ஏற்படுத்தியிருக்காது. ஏனெனில் கடல் மட்டம் குறைவாக இருந்தது. அதனால் புயல் எழுச்சியோ, அதிக தாக்கமோ அல்லது பேரலைகள் கூட இல்லை.
கடலோர நகரங்கள் எவ்வாறு ஆபத்தில் உள்ளன என்பதைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஏனெனில், அங்கு ஏராளமானவர்கள் வசிக்கிறார்கள் - மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் கடலோர நகரங்களில் நிறைய உள்ளன.
மக்கள் அல்லது பணத்தை பற்றி நாம் கவலைப்படுகிறோமா என்பது எந்த நகரங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்பதில் வேறுபடுகின்றன. நியூயார்க், ஷாங்காய், மும்பை, கொல்கத்தா: இவை இடங்கள். நான் முன்பு பாராட்டாத ஆனால் அமிதாவ் சுட்டிக்காட்டிய விஷயம் என்னவெனில், அனைத்தும் வரலாற்றில் ஒரே நேரத்தில் கட்டப்பட்ட குடியேற்ற நகரங்கள்.
அதற்கு முன், நீங்கள் பழைய நகரங்களைப் பார்த்தால், அவை பாரிஸ் மற்றும் லண்டனைப் போலவே உள்நாட்டிலும் உள்ளன. அல்லது உதாரணமாக பெய்ஜிங். எனவே, கடலோர நகரங்களில் இருப்பது உத்திரீதியாக மதிப்புமிக்கது என்று [பிரிட்டிஷ்] பேரரசு உணர்ந்தது. இந்த இடங்களில் நீண்ட காலமாக வாழ்ந்த மக்கள் கடல் மீது ஒருவித மரியாதை வைத்திருந்தார்கள்; கடல் ஆபத்தானது என்பதைப் புரிந்துகொண்டார்கள் என்பது வாதம்.
மும்பை, ஆங்கிலேயர்களுக்கு முன்பு, வெறும் தீவுகளாக இருந்தன. அதில் ஒரு ஜோடி மலைகள் இருந்தன; ஆனால் பெரும்பாலான பகுதி மிகவும் தட்டையாக இருந்தன. இவை அனைத்தும் தானே சிற்றோடை பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்றன; அங்கு புதிய விமான நிலையத்தை ஏற்படுத்துகின்றனர்; அவை அனைத்தும் மிகக் குறைந்த சதுப்பு நிலமாகும். ஏனென்றால், அதுதான் எஞ்சியுள்ளது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதேபோல், குடிசைப்பகுதிகள் எங்கே என்று பார்க்க வேண்டும்; உதாரணமாக தாராவி. இது அடிப்படையில் பழைய நதி படுக்கை ஆகும். நீங்கள் தாராவிக்குச் சென்று பழைய சுங்கத்துறை கட்டிடத்தை காணலாம். யாராவது அதை உங்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும்; இல்லாவிட்டால் அது உங்களுக்குத் தெரியாது. இது 19 ஆம் நூற்றாண்டின் சுங்கத்துறை இல்லம். சுங்க இல்லம் என்றால், ஆற்றில் படகில் செல்லும் போது வரி செலுத்த வேண்டிய இடம். இப்போது, அங்கு ஆறே கிடையாது.
கரையோர கட்டுமானத் தொழில் உண்மையில் மதிப்புமிக்கது, எனவே கடற்கரையோர பகுதிகளில் செல்வந்தர்கள் - மரைன் டிரைவைப் போலவே -இருக்கிறார்கள். ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும். இது ஆபத்தான மற்றும் விளிம்பு நிலமாகும்; இது முற்றிலும் நிலையானது மற்றும் கட்டமைக்க பாதுகாப்பானது அல்ல.
நீங்கள் அதை உருவாக்க முடியும்; ஆனால் நீங்கள் சிறிது நேரம் நன்றாக இருக்கலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.
இந்த நகரங்கள் எந்த வகையான எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றன; எவ்வளவு காலம் எதிர்காலம்த்தில் இருக்கும்?
இதற்கு துல்லியமாக பதிலளிப்பது கடினம். ஏனென்றால் கடல் மட்ட உயர்வு விகிதம் நிச்சயமற்றது. நாம் 2100 [ஆண்டு] ஐ ஒரு நல்ல காரணத்திற்காக ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துகிறோம்; ஆனால் பொதுவான பயன்பாட்டில் உள்ள சில வரையறைகளை எடுக்கிறோம். தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 2100- க்கான உலகளாவிய கடல் மட்ட உயர்வு மதிப்பீடுகள், குறைந்தது 1-2 அடி மற்றும் அதிகபட்சம் 6 [அடி] இடையே உள்ளன. ஒரு மீட்டர் [3.2 அடி] இப்போது சாலைக்கு நடுவில் உள்ள மதிப்பீடாகும். முந்தைய ஐபிசிசி அறிக்கையில் [அக்டோபர், 2014 இல் வெளியிடப்பட்டது], இது அதிகபட்ச இறுதி மதிப்பீடாக இருந்தது. மாறிவிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், கடல் மட்டங்கள் உயர்ந்து வருவது மட்டுமின்றி, அது எவ்வளவு விரைவாக உயரும் என்பதற்கான நமது மதிப்பீடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விஞ்ஞானம் மாறுகிறது மற்றும் அது மாறும்போது இன்னும் மோசமாகிவிடுகிறது - ஓரளவுக்கு மக்கள் பழமைவாதிகள் மற்றும் புதிய உண்மைகள் பழமைவாதத்தின் எதிர் வழியில் செல்ல முனைகின்றன.
கடல் மட்ட உயர்வு விகிதம் குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது; மேலும் இது கால அளவைப் பொறுத்தது. இது கடைசியாக நடக்க வேண்டிய ஒன்றாகும். கார்பனை வெளியேற்றிய பிறகு, வெப்பநிலை உயர சிறிது நேரம் ஆகும், ஏனெனில் கடல்கள் எல்லா வெப்பத்தையும் ஈர்க்கின்றன.
கடல் மட்ட உயர்வு இன்னும் அதிக காலம் எடுக்கும். புவியியல் வரலாற்றில் கடந்த முறை வளிமண்டலத்தில் இவ்வளவு கார்பன் இருந்ததால் தான், கடல் மட்டமும் 10 அல்லது 20 [அடி] அதிகரித்து இருக்கலாம். எனவே, அதுதான் நாம் செல்லும் இடமாக இருக்கலாம்; ஆனால் அங்கு செல்ல நீண்ட காலம் பிடிக்கும். மதிப்புகளை அடைவதற்கு 100 ஆண்டுகள் அல்லது 1,000 ஆண்டுகள் என்பது மிகுந்த நகரங்களை முழுவதுமாக தண்ணீருக்குள் தள்ளும், எங்களுக்கு இன்னும் தெரியாது. நீங்கள் எந்த நகரத்தை பற்றி பேசுகிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது. மும்பை பெரிய சிக்கலில் உள்ளது; ஆனால் நியூயார்க் அவ்வளவாக இல்லை. மியாமி நகரம் என்ன என்ன செய்யப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை; ஏனெனில் அங்கு கடலோரத்தில் சுவர்களை கூட கட்டுவது கடினம்.
மியாமியில் கட்டுமானத் தொழில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது; அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வருங்கால சந்ததியினருக்கான முதலீடாக அதை நாம் வைத்திருக்க திட்டமிடவில்லை எnனில், மியாமியில் வாங்குவது இன்னும் கூட ஒரு பகுத்தறிவார்ந்த முடிவாக இருக்கலாம். மும்பை போன்ற சில நகரங்களில் பல தசாப்தங்களுக்குள், நிலைமை நிச்சயம் மோசமாகிவிடும்.
வழக்கமாக தண்ணீரில் மூழ்கிவிடும் என்பதால் இந்நகரங்கள் உண்மையில் வசிக்க முடியாதவையாக மாறுவதற்கு முன்பு, ஒரு கட்டத்தில், சந்தை மதிப்புகள் ஓடிவிடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த இடம் உண்மையில் வசிக்க முடியாதது என்று இருக்க வேண்டியதில்லை. இது வசிக்க முடியாததாக மாறப் போகிறது; ரியல் எஸ்டேட் திறன் செயலிழக்கிறது என்பதை உணர போதுமான மக்கள் இருக்க வேண்டும். அதன் பின் நாம் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியைக் காண்போம்.
அமெரிக்காவில் கடலோரப்பகுதி கட்டுமானத் தொழில், பல பிராந்தியங்களில், அநேகமாக அழிந்துவிட்டது என்று நினைக்கிறேன். சந்தைத்திறன் அதைச் செய்யப் போகின்றன. இப்போதோ அல்லது நாளையோ அல்லது 50 வருடங்களில் நடக்குமா; அது வீடுகளின் விலைச்சரிவு போல இருக்கும் என்றோ என்னால் கூற இயலாது.
மும்பையின் புயல், நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் பற்றி உங்கள் குழு கண்காணித்தது. அந்த ஆய்வு பற்றி விரிவாகக் கூற முடியுமா?
மும்பையில் ஒரு பெரிய புயலுடன் நிலச்சரிவு என்பது சாத்தியமாகும்; இருப்பினும் நகரின் நவீன வரலாற்றில் இது நடக்காததால் எந்தவொரு வருடத்திலும் அது சாத்தியமில்லை. சுமார் 1870-களில் இருந்து - அதாவது இந்தியா வானிலை ஆய்வுத் துறை தரவு அதன் நவீன வடிவ காலத்தில் இருந்து - ஒரு பேரழிவு புயல் நிகழ்ந்ததில்லை.
மும்பைக்கு தவறான கோணத்தில் நிலச்சரிவை உருவாக்கும் ஒரு பெரிய புயல் தாக்கினால், கடும் புயலாகவும், மோசமானதாகவும் இருக்கலாம். எங்கள் ஆய்வில் இருந்து முதலிடம் பெறுவது, அது நடக்கக்கூடும் என்பதாகும். இது யாருடைய நினைவிலும், வாழ்நாளிலும் அல்லது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றிலும் நடக்கவில்லை; ஆனால் அது நடக்கக்கூடும்.
பிற பயணங்களும் உள்ளன; ஏனென்றால் காலநிலை மாற்றத்தை எங்கள் ஆய்வு கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் அதைச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்ய எங்களிடம் ஒரு அமைப்பு இல்லாததால், அந்த நேரத்தில் எங்களால் இயன்றதை செய்தோம் - இது மிகவும் பழமைவாத மதிப்பீடு.
காலநிலை மாற்றம், புயல்களிய எவ்வாறு பாதிக்கிறது என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் சற்று வித்தியாசமானதாக உள்ளது. பெரும்பாலும், இது வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக்கடலை நோக்கி கொஞ்சம் அதிகமாக மாறும். எனவே, ஆபத்து எங்கள் மதிப்பீட்டை விட சற்று மோசமானது. எங்கள் சொந்த படைப்பின் அடிப்படையில் என்று சொல்ல முடியாது; ஆனால் எங்களின் கற்றல் அதைக் குறிக்கிறது.
தானே சிற்றோடையில் உள்ள தாழ்வான பகுதிகள் அனைத்தும் ஆபத்தில் இருக்கும். புதிய வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கும் நிறைய ஆபத்து இருக்கிறது.
Source: Earth Observatory, NASA
The North Indian basin where Arabian sea is one of the least active regions for cyclones in the northern hemisphere and sees on an average 4.8 storms every year.
நமது கொள்கை வகுப்பாளர்களுக்கு இது என்ன வகையான அர்த்தம் தருகிறது?
முதலாவது சொல்வது எளிது, ஆனால் செய்ய முடியாது. கடும் புயல் ஏற்பட்டால் நகரத்தில் அவசரநிலை மேலாண்மை திட்டம் இருக்க வேண்டும். இப்போதைக்கு, அவர்களிடம் ஒன்று இல்லை. மும்பையின் அவசரகால மேலாண்மைத் திட்டங்களையும், 2005 வெள்ளத்திற்குப் [இது நகரத்தில் அதிகபட்ச மழையால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்] பிறகு எழுதப்பட்ட மகாராஷ்டிரா ஒன் என்பதையும் படித்தேன்; அவர்கள் சில புதிய முயற்சிகளைத் தொடங்கினர். ஒரு பெரிய புயலின் அபாயத்தை, அது இதுவரை நடக்காததால், அவர்கள் தீவிரமாக கணக்கில் கொள்ளவில்லை.
ஒரு பெரிய புயல் ஏற்பட்டால் மீனவர்களை வெளியேற்றுவோம் என்று கூறும் அவர்களுக்கு சூறாவளியின் தாக்கம் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கிறது. ஆனால் அது ஒரு சூறாவளிக்கான வாய்ப்பை கணக்கிடவில்லை. தாழ்வான பகுதிகளில் பல லட்சம் மக்கள் ஆபத்தில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது; மும்பையில் அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது?
இது போக்குவரத்து அமைப்பிற்கான கேள்வி. உங்களிடம் இரண்டு சாலைகள், சில மேம்பாலங்கள் உள்ளன. அந்த சாலைகளில் எல்லோரும் நெரிசலில் செல்ல முயற்சிக்க வேண்டும். நீங்கள் தெற்கில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்றால், அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. அதில் நீங்கள் இனி யாரையும் ஏற்ற முடியாது. உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை இருக்கலாம். வானிலை மையத்தால் முடிந்தவரை நன்றாக இருக்கும் என்று கணிக்க முடியும்.
எனவே, உங்களுக்கு 3-5 நாட்கள் இருக்கலாம்; உங்களுக்கு ஏதேனும் ஆபத்து இருப்பதையும், 1-2 நாட்கள் முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்கலாம், நீங்கள் உண்மையிலேயே சிக்கலில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நிறைய நேரம் இல்லை; கொஞ்சம் நேரமே உள்ளது. உங்களுக்கு முன் கூட்டியே தெரிந்து, இருந்தால் இதைவிட சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் நகரின் நிலை என்னவென்றால், இது உண்மையிலேயே இது நடந்தால் அதை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு சவாலான சூழலாகவே உள்ளது. ஆனால் நீங்கள் முன்கூட்டியே நினைத்திருந்தால் நீங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்திருப்பீர்கள்.
பயங்கர வெள்ளத்தை ஏற்படுத்தும் தீவிர மழை நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது, புயல்கள் கணிக்கக்கூடியவை என்பதால் வானிலை முன்னறிவிப்பு சிறப்பாக இருக்கும்.
தாழ்வான பகுதிகளை உருவாக்குவது மிகப்பெரிய ஆபத்தில் முடிகிறது. அதுபற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நகரை மேம்படுத்த வேண்டும் என்ற பெரும் அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும். சிந்திக்க ஏராளமான மக்கள் மற்றும் வேலைகள் உள்ளன; பணம் இருக்கிறது. எனவே நீங்கள் அதிக போக்குவரத்து, சிறந்த விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் மிகவும் ஆபத்தான இடங்களில் கட்டுகிறீர்கள்.
செலவு-பயன் கணக்கீட்டை எவ்வாறு செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. மாற்று வழிகள் என்னவென்று எனக்குத் தெரியாது. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த - சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலங்கள் - பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் பலவும் ஆவேசத்தில் உள்ளன.
காலநிலை மாற்றம் குறித்து அமெரிக்க காங்கிரஸில் நீங்கள் உரையாற்றி உள்ளீர்கள். ஆனால் பல விஞ்ஞானிகள் இதுபோன்ற தகவல் தெரிவிப்பது தங்களது வேலை அல்ல என்று நினைக்கிறார்கள். கொள்கை வகுப்பாளர்களிடம் பேசும் கண்ணோட்டத்தில், அது எவ்வாறு மாற்றத்தைத் தூண்டுகிறது, விஞ்ஞானிகளுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள் - குறிப்பாக வளரும் நாடுகளில் அறிவியலுக்கு நிறைய நிதி இல்லாத சூழலில் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட ஒரு சில ஆராய்ச்சி இருக்கலாமா?
விஞ்ஞானிகளை மிகவும் பயனுள்ள ஆலோசர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆலோசகர்களாக நாங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று நினைக்கும் நபர்களுடன் நான் உடன்படவில்லை; எங்களுக்கும் உண்டு.
அதே நேரம், நாட்டின் [அமெரிக்கா] காலநிலைக் கொள்கை ஆதரவாளர்களாக நாம் இருக்க முடியும் என்று மக்கள் [சிவில் சமூகம்] கருதுவது ஒரு வரலாற்றுத் தவறாகும்; ஏனெனில் நாங்கள் அவ்வளவு திறனுள்ளவர்களாக இல்லை.
இது அறிவியல் தகவல்தொடர்புகளின் ஒரு பகுதி அல்ல என்பதை நாம் பல தலைமுறைகளாக உணரவில்லை, ஆனால் அது ஒரு அரசியல் தெரு சண்டை, நாம் இங்கே ஒரு மறுப்பு இயக்கத்திற்கு எதிராக இருக்கிறோம், அதற்காக நாம் நன்கு தயாராக இல்லை.
மிகவும் பாதுகாக்கப்பட்ட, நன்கு தயாரிக்கப்பட்ட மற்றும் நுணுக்கமான நம்மை வெளிப்படுத்த வழிகள் உள்ளன. உங்கள் எதிர்ப்பாளர் வாதத்தை வெல்ல எதையும் சொல்ல தயாராக இருக்கும்போது அது சரியாக செயல்படாது. இது, துப்பாக்கிச் சண்டைக்கு பென்சில் கொண்டு வருவது போலாகும்.
மற்ற விஷயம் என்னவென்றால், நான் ஒரு சலுகை பெற்ற நிலையில் இருந்து பேசுகிறேன்; எனது இந்திய சகாக்கள் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவுரை செய்ய நான் விரும்பவில்லை. விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் குரல் கொடுக்கக் கற்றுக் கொண்டால் அது இந்தியாவுக்கு நல்லது. அவர்கள் கொள்கையை எவ்வாறு பாதிப்பார்கள் என்பதனால் மட்டுமல்லாமல், அறிவியலில் இன்னும் சில இளைஞர்களை எவ்வாறு ஈர்க்கக்கூடும் என்பதிலும் உள்ளது. அடிப்படை ஆராய்ச்சி செய்வது பற்றி இளைஞர்கள் யோசிக்கவில்லை.
இந்தியாவில் உள்ள சிறந்த விஞ்ஞானிகள் அவ்வப்போது செய்தித்தாள்களில் தோன்றினால், அது இன்னும் சில நல்ல மாணவர்களை அறிவியல் திட்டங்களில் சேர்க்கக்கூடும்.
சிலர் மற்றவர்களை விட சிறந்தவர்கள். பலர் இதைச் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன், ஏனெனில் அவர்களின் பணி தவறாக சித்தரிக்கப்படும் என்றும் அரசியல் இருப்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.
மேலும், பத்திரிகையாளர் உங்கள் தகவல்களை மொழிபெயர்க்கும் விதம் உங்கள் விஞ்ஞான தாளில் இருப்பதைப்போலவே ஒருபோதும் இருக்காது; ஏனெனில் அவர்கள் ஒரே வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. அதை மீற வேண்டும்.
அவர்கள் [பத்திரிகையாளர்கள்] எல்லாவற்றையும் சரியாகப் பெற்றார்களா என்பது தவறான கேள்வி. அவர்கள் என்னிடம் பேசவில்லை என்றால் கட்டுரை சிறந்ததா அல்லது மோசமானதா என்பது சரியான கேள்வி. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் அதை உங்கள் விஞ்ஞான காகிதத்துடன் ஒப்பிடக்கூடாது; அறிவியல் படிக்காத பத்திரிகையாளர், விஞ்ஞானியிடம் இருந்து எந்த உதவியும் பெறவில்லை. அதை காண்பதற்கான வழி இதுதான்.
(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.