மும்பை: “தொற்றுநோய் நமக்கு பெரிய பாடத்தை கற்பித்திருந்தால், அது நமது பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவது ஆகும்” என்று புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் (PFI - பிஎஃப்ஐ) நிர்வாக இயக்குனர் பூனம் முட்டர்ஜா தெரிவித்தார். "நாம் நமது பொது சுகாதார அமைப்பில் நிதி அடிப்படையில் மட்டுமல்ல, மனித வளத்திலும் அதிக முதலீடு செய்ய வேண்டும்," என்று அவர் விளக்கினார்.

கோவிட்-19 ஊரடங்கின் எட்டு மாதங்களில், பெண்களின் இனப்பெருக்க மற்றும் மன ஆரோக்கியம், அவர்களின் கல்விக்கான அணுகலைப் போலவே பாதிக்கப்பட்டது. இந்த சேவைகளை வீட்டுக்கு வீடாக வழங்க இந்தியா தனது அடிமட்ட சுகாதார ஊழியர்களை எவ்வாறு பயன்படுத்த முடியும், இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் மற்றும் புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலம் மற்றும் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வது குறித்து முத்ரேஜா பேசினார்.

நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

நாம் இப்போது கோவிட் -19ஐ பரவலில் எட்டு மாதங்களை தொட்டுவிட்டோம் மற்றும் சில வகையான ஊரடங்கு தளர்வில் இருக்கிறோம். இது வீடுகளில், குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

முதலாவதாக, இனப்பெருக்கம், பாலியல் மற்றும் அவர்களின் உடல் ரீதியான பிற அம்சங்கள் காரணமாக பெண்கள் அதிகம் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குடும்பக் கட்டுப்பாடு சேவைகளுக்கான தேவை குறைந்துவிட்டது. பெண்கள் சுகாதார மையங்களுக்குச் செல்ல பயப்படுகிறார்கள், ஆனால் அந்த வசதிகளும் பெண்களுக்கு கருத்தடை தொடர்பான உதவி வழங்கவில்லை. இதன் பொருள் என்னவென்றால், 2.6 கோடி தம்பதியர் இந்தியாவில் திட்டமிடமால் கருவை சுமக்கப்போகின்றனர்.

இரண்டாவதாக, ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெண்கள் தான் காரணம் - உதாரணமாக, நோய்த்தடுப்பை சொல்லலாம். நோய்த்தடுப்பு பணிகள் 25% வரை குறைந்துவிட்டன. கணவன்மார்கள், பெற்றோர்கள், மாமியார், குழந்தைகள் வீட்டில் இருப்பதால், பெண்கள் குடும்பத்திற்கு அதிக உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீரைப் பெற வேண்டியதால், நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும் வீடுகளில் வேலைச் சுமை வியத்தகு அளவில் அதிகரித்தது. மூன்றாவதாக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது, ஏனெனில் கொடுமைபுரிவோரால் பெண்கள் வீட்டில் பூட்டப்பட்டிருந்தனர். நான் பயப்படுவது, ஆண்கள், பெண்கள் மற்றும் இளம் பெண்கள் நிறைய விரக்தியோடு வெளியே வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கால் புகாரளிக்க எங்கும் செல்ல முடியவில்லை, நிலைமையைத் திசைதிருப்பக்கூட அவர்களால் வெளியேற முடியவில்லை. பெரும்பாலும், பெண்கள் தங்கள் பெற்றோரின் வீடு, நண்பரின் வீடு அல்லது அக்கம் பக்கத்திற்குச் செல்கிறார்கள், ஆனால் இந்த சூழ்நிலையில் அவர்கள் குற்றம்புரிபவரோடு சிறைபிடிக்கப்பட்டனர்.

ஐந்தாவது, பெண்கள் வீட்டில் நிறைய வேலைகளைச் செய்யத் தொடங்கியதால், ஆன்லைனில் கல்வி இருந்தபோதும், அவர்களுக்கே மிகக் குறைவான வாய்ப்பே கிடைத்தது. ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதன் காரணமாக, இணையத்துடன் தொடர்பை அவர்கள் விட்டு விட்டனர், அதாவது: தந்தை, பின்னர் மகன், அதன்பிறகு தாய், பின்னர் மகள். எனவே பெண்கள் மிகக்குறைந்த இணைய அணுகலைக் கொண்டிருந்தனர்; நாடு முழுவதும் 11% சிறுமிகளுக்கு எந்த அணுகலும் இல்லை. நாங்கள் சில ஆய்வுகள் செய்தோம், பீகாரில் நாங்கள் நேர்காணல் செய்த இளம் பெண்களில் 80% பேர், ஊரடங்கு முழுவதும் பெரும் கவலையை அனுபவித்ததாகவும், ஆதரவு தேவை என்றும் கூறினர். தொற்றுநோய்கள் அல்லது பேரிடர் இருக்கும்போது எப்போதும் நடக்கும் இரண்டு விஷயங்களைப் பற்றி இளம் பெண்கள் கவலைப்படுகிறார்கள், அதாவது பெண்கள் பள்ளியை விட்டு நின்றுவிடுகிறார்கள், இளம் வயது மற்றும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறார். அடிமைத்தனம், இளம்பெண்களை சதை வர்த்தகத்தில் விற்பனை செய்தல் போன்றவையும் உள்ளன. எனவே சிறுமிகளுக்கான கதை இதெல்லாம் முன்பே இருந்தது - குடும்பக் கட்டுப்பாடு ஒரு சவால், இனப்பெருக்க ஆரோக்கியம், தாய்வழி ஆரோக்கியம், நோய்த்தடுப்பு மருந்து ஒரு சவால். ஆனால் இந்த அமைதியான காரணிகள் அனைத்தும் அதிகரித்தன. இது ஆண்களை விட பெண்கள் மற்றும் சிறுமியருக்கு மிகவும் மோசமாக இருந்தது.

வளக் கட்டுப்பாடுகளின் கீழ் [குடும்பத்திற்காக] சமைக்கும்போது -- மக்கள் வேலைகளை இழந்துவிட்டார்கள், வேலைகள் குறித்து பாதுகாப்பின்மை இருக்கும் இடத்தில் -- [அனைவருக்கும்] உணவளிக்கும் சுமை பெண்கள் மீதுவிழுகிறது; எப்போதும் பெண்கள் கடைசியாக மற்றும் குறைந்த உணவை சாப்பிடுவார்கள். இங்கே, இது மிகக் குறைவான உணவு. அவற்றின் உயிரியல் காரணிகள் தோல்வியடையவில்லை என்பது மட்டுமல்ல, ஆனால் மன நலனைப் பொறுத்தவரை, உடல் நலனைப் பொறுத்தவரை, மற்றும் அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமை, இது குடும்பக் கட்டுப்பாடுக்கான அணுகல்.

இறுதியாக கருக்கலைப்புக்கான அணுகல். இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 16 மில்லியன் கருக்கலைப்புகள் உள்ளன. கருக்கலைப்பு சேவைகள் எதுவும் கிடைக்கவில்லை. தனியார் துறையும் இதுவிஷயத்தில் பெண்களை அணுகுவதில் தோல்வியுற்றது - ஏழைகள் மத்தியில் கூட, [சுகாதார] செலவினங்களில் கிட்டத்தட்ட 65% தனியார் துறையில்தான் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் தனியார் துறை கிட்டத்தட்ட மூடப்பட்டது. எனவே, தொற்றுநோய் காலத்தில் பெண்களின் நிலைமை குறித்து தீவிர கவனம் தேவை, மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பார்க்கும் கோவிட்டுக்கு பிந்தைய நடவடிக்கை நம்மிடம் தேவை. நாம் வழிமுறைகளை வைக்க வேண்டும் - சாதாரண சூழ்நிலைகளில் கூட பெண்கள் வன்முறையை அனுபவிக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள்? ஆனால் நமது கோவிட்டுக்கு பிந்தைய பதிலடி, குறைந்தது பெண்கள் மற்றும் சிறுமிகளின் உண்மைகளுக்கு தீவிரமான பதிலாக இருக்கட்டும்.

நீங்கள் பெண் குழந்தை பற்றி பேசினீர்கள், எடுத்துக்காட்டாக, பள்ளியை விட்டு விலகுவது அல்லது திருமணத்திற்கு தள்ளப்படுவது. இது ஒரு வகையான பிரச்சினை. நீங்கள் பேசிய உயிரியல், இனப்பெருக்க பிரச்சினைகள் மற்றொரு வகை. மன ஆரோக்கியம் மூன்றாவது வகை. வாழ்க்கைத் துணை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை நான்காவது வகை. அவை ஒவ்வொன்றும் முக்கியமானவை மற்றும் சரியான பதிலுக்கு தகுதியானவை, ஆனால் பதில்களை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னுரிமை அளிக்க அல்லது விநியோகிக்க ஒரு வழி இருக்கிறதா?

நாம் முதலில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன், ஏனென்றால் நாம் ஏற்கனவே ஒரு தொற்றுநோயில் இருக்கிறோம், இது அவர்களை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது. கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நமக்கு தெரியாது. நாம் சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும். மேக்ஸ் [மருத்துவமனையில்] ஒரு கோவிட் -19 மையம் மருத்துவமனை மற்றும் கோவிட் அல்லாத வசதி மருத்துவமனை உள்ளது. நாம் சேவைகளை பிரிக்க வேண்டும் - கிராமப்புறங்களில் கூட கோவிட் மையம் மற்றும் கோவிட் அல்லாத மையங்கள் நமக்கு தேவை. நமது பொது சுகாதார அமைப்பை பலப்படுத்த வேண்டும். சிறப்பாக செயல்பட்ட, வளர்ந்த அல்லது வளரும் அல்லது வளர்ந்து வரும் பொருளாதாரங்கள், வலுவான பொது சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளாகும். வலுவான பொது சுகாதார அமைப்புகள் இல்லாத மிகவும் வளர்ந்த நாடுகள் கூட கோவிட்டில் சிறப்பாக செயல்படவில்லை. நமது பொது சுகாதார அமைப்பு ஏற்கனவே ஐ.சி.யுவில் உள்ளது, அதை நாம் உயர்த்த வேண்டும். நமது பொது சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும், பெண்களின் உயிரியல் மற்றும் சிறப்புத் தேவைகள் காரணமாக, அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். [நாம் ] பொது சுகாதார வசதிகளில் மட்டுமல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நம்மில் ஒரு கூட்டு இருக்க வேண்டும். தனியார் துறையுடனான கூட்டு நிர்வாகத்தை நாம் ஊக்குவிக்கும் ஒரு இடம் இது.

அறுபது சதவிகித பெண்கள் சானிட்டரி பேட்களை வாங்க இயலாத நிலை, அவர்களுக்கு இதுவரை பள்ளிகளில் இலவச சானிட்டரி பேட்கள் கிடைத்து வந்தன. இப்போது பள்ளிகளும் மூடப்பட்டன, ஆனால் கல்வி முறை வீட்டில் இருந்து தொடரப்படும் நிலையில், வீட்டிற்கே சென்று சானிட்டரி விநியோகிப்பதில் இது ஆஷா [அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்] அல்லது ஏ.என்.எம் [துணை செவிலியர் மற்றும் செவிலியர்கள் ], அங்கன்வாடி தொழிலாளரை பயன்படுத்துவதில் இருந்து எது தடுத்தது? நம்மிடம் 33 லட்சம் முன்னணி சுகாதார ஊழியர்கள் உள்ளனர், அவர்கள் நன்றாகப் பயன்படுத்தப்படலாம், இந்த சேவைகளை வழங்குவதற்கு நல்ல ஊதியம் பெற்றிருக்கலாம். கருத்தடை மருந்துகள் மட்டுமல்லாமல், சிறுமிகளுக்கான சானிட்டரி பேட்களையும் வீடுகளுக்கோ அல்லது ரேஷன் கடைகளுக்கோ விநியோகித்திருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, விநியோகத்திற்கான பல உள்கட்டமைப்புகள் நம்மிடம் உள்ளன, அது நல்ல பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படலாம்.

^ வீடுகளுக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். இதில் முதலாவது வன்முறை, இரண்டாவது மொபைல்ஃபோனை அணுகுவது, அதாவது தகவல், பொழுதுபோக்கு மற்றும் பலவற்றிற்கான அணுகல் இல்லை. இந்த இரண்டையும் ஒரு கொள்கை கட்டமைப்பில் இருந்து கவனிக்க முடியும் என்று நீங்கள் எப்படி உணருகிறீர்கள், ஒருவேளை நீங்கள் சொன்னது போல், நீங்கள் எல்லாவற்றையும் கீழே தள்ளும் ஒரு கூட்டாட்சி கட்டமைப்பைக் காட்டிலும் ஒரு பரவலாக்கப்பட்ட அணுகுமுறையில் தீர்வு அதிகம் உள்ளது?

அனைவருக்கும் தொலைபேசி இல்லை. டிஜிட்டல் இடைவெளி குறைவதை காண விரும்புகிறேன், இந்தியாவில் வீடற்றவர்கள் தவிர அனைவரிடமும் தொலைக்காட்சி உள்ளது. நம்மிடம் அரசின் சொந்த சேனல் தூர்தர்ஷன் உள்ளது, அதன் தரம் இன்று மிகவும் மேம்பட்டுள்ளது. நாம் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் சலிப்பான நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. தூர்தர்ஷனில் நடக்கும் பல விஷயங்களில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். சிறந்த தொகுப்பாளர்கள் உள்ளனர் மற்றும் எல்லா வகையான விஷயங்களும் நடக்கின்றன. ஆனால், ஏன் குழந்தைகளுக்கு [டிவியைப் பயன்படுத்தி] கல்வி கற்பிக்க முடியவில்லை? நீங்கள் 2 ஆம் வகுப்புக்கு திங்கள், 3ம் வகுப்புக்கு செவ்வாய் என்று தேர்வுசெய்து, மூன்று மற்றும் நான்கு வகுப்புகளுக்கு ஆண்டுகளில் குறைக்கும் சில கல்வியைச் செய்கிறீர்கள். இதற்கு சில முறைகள் உள்ளன. எனவே டிஜிட்டல் அடிப்படையில் தொலைக்காட்சி ஒரு தவறவிட்ட வாய்ப்பாக இருந்தது.

நடத்தை மாற்றம் மற்றும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட சுகாதாரக் கல்வி குறித்த செய்திகளுக்கு நாங்கள் ஏன் செல்போனைப் பயன்படுத்த முடியாது? மக்களுக்கு நினைவூட்ட வேண்டியது அவசியம் - நான் வருந்துகிறேன், ஆனால் நான் ஆண்கள் எதிர்ப்பாளர் அல்ல; ஆனால் நாம் நமது ஆண்களை வளர்த்த விதம் மிக மோசமானது, இப்போது அவர்களுக்கு குறைந்த வன்முறை, குறைந்த ஆணாதிக்கம் இருக்க அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களிடம் தொலைபேசி உள்ளது. [செல்போனில்] நம்பகமான மற்றும் சக்திவாய்ந்த நல்ல செய்திகளை நாம் அனுப்ப முடியாதா?

இந்தியா சிறந்த திரையுலகின் தாயகமாகும். நிதி திரட்டல், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றைச் செய்ய திரையுலகம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நாம் ஏன் செய்தியிடலுக்கு பயன்படுத்த முடியவில்லை... அவை அனைத்தும் இலவசம். சில பிரபலங்களுடனான எங்கள் அனுபவம் வேறு எந்த நேரத்தையும் விட ஊரடங்கின் போது நமக்கு அதிக நேரம் கொடுத்தது. எனவே நல்ல செய்திகலுடன் குறும்படங்களை உருவாக்க அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம். மக்கள் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள், ஆயிரக்கணக்கான திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளனர். பாலிவுட் துறையை மறந்து விடுங்கள். நாம் அதை நமது சொந்த சிறிய வழியில் செய்து கொண்டிருந்தோம். பி.எஃப்.ஐ ஒரு சிறிய தன்னார்வ தொண்டு நிறுவனம். ‘My Gaon’ வலைத்தளத்துக்காகவும், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்காகவும் 700 குறும்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை செய்துள்ளோம். நாம் தயாரிப்பாளர்கள் அல்லது பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அல்ல. நாம் ஏன் கேட்க முடியவில்லை? அரசு தங்கள் சொந்த திட்டங்களைச் செய்ய வெவ்வேறு சேனல்களைக் கோரலாம்.

அணுகுமுறை ஓரளவிற்கு செயல்படும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இது முழு பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை, ஆனால் அது எப்படி உதவக்கூடும்?

இது முழு பிரச்சினையையும் தீர்க்காது. நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். உலகெங்கிலும் உள்ள சமூக நெறிகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதற்கான புதிய மந்திரம் பொழுதுபோக்கு கல்வி. தென்னாப்பிரிக்காவில் உள்ள சோல் சிட்டி, 20 ஆண்டுகளாக, ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. ஆபிரிக்க பாலியல் நடத்தை மற்றும் எச்.ஐ.வி-எய்ட்ஸ் காரணமாக பாதி இளம் மக்கள் அழிக்கப்படுவார்கள் என்று தென்னாப்பிரிக்காவில் ஒரு கருத்து இருந்தது. இந்த பொழுதுபோக்கு கல்வி ... நாம் அனைவரும் சோல் சிட்டியில் இருந்து உத்வேகம் பெறுகிறோம். பாலியல் நடத்தை மாற்ற மிகவும் கடினமான நடத்தை மற்றும் அவர்கள் அதை 20 ஆண்டுகளில் மாற்றினர்.

பிரேசிலில், கருவுறுதல் விகிதங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு பெண்ணுக்கு ஆறு [குழந்தைகள்] முதல் ஒரு பெண்ணுக்கு மூன்று என்றளவில் குறைந்துவிட்டன.

இந்தியாவில், 25 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் குமார் செய்த ஹம் ரஹி (Hum Rahi) என்ற இந்த திட்டம் நம்மிடம் இருந்தது. ஃபெரோஸ் அப்பாஸ் கான் இயக்கிய மெய்ன் குச் பி கார் சக்தி ஹூன் ( Mein Kuch Bhi Kar Sakti Hoon) என்று பி.எஃப்.ஐ செய்தது. நாம் அதை மதிப்பீடு செய்தபோது, ​​அதன் தாக்கத்தை நம்பவில்லை: 52 அத்தியாயங்களைப் பார்த்த பிறகு, கணவருடன் கருத்தடை பற்றி பேசியதாக 8% பெண்கள் தைரியத்தை பெற்றதாக கூறினர். பொதுவாக இந்தியாவில், சராசரி ஆணாதிக்க பழமைவாத குடும்பத்தில், பெரும்பாலான வீடுகளில், பெண்கள் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றி தங்கள் கணவர்களுடன் விவாதிக்கத் துணிவதில்லை. நமது அத்தியாயங்களில் 56ஐ பார்த்த 20% ஆண்களும் பெண்களும் தங்கள் கூட்டாளரை வெல்வது அல்லது அவர்களின் துணைவர்கள் அடிப்பது சரியல்ல என்று கூறினர். இது மிகப்பெரியது. நமது மதிப்பீடு சரியானதா என்பதை மதிப்பீடு செய்ய, இந்தியாவுக்கு ஒரு சர்வதேச மதிப்பீட்டாளரைப் பெற வேண்டியிருந்தது. இதன் தாக்கம் மிகப்பெரியது.

கோவிட் நேரத்தில், நமக்கு சொந்த நடத்தை மாற்ற தகவல்தொடர்பு குறித்த நமது கருத்து என்னவென்றால், மக்கள் ஆர்வமாக இருந்தனர், நல்வாழ்வை விரும்புகிறார்கள், அவர்கள் சாதாரணமாக பார்த்ததை விட அதிகமான இத்தருணங்களில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இது பாலினமாக இருந்தாலும் சரி, காலநிலை மாற்றமாக இருந்தாலும் சரி, தகவல்தொடர்பு சக்தி என்பது நிச்சயமாக மிக அதிகமாக இருக்கும்.

நடந்தது என்னவென்றால், தகவல்தொடர்பு திறனால், மக்களுக்கு தகவல்களை அணுக முடியும். தனது கணவர் / மனைவி எவ்வாறு வாழ்கிறார் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே மக்கள் மாற்றத்திற்கு இன்னும் தயாராக உள்ளனர். நாம் நல்ல திட்டங்களை உருவாக்குகிறோம் என்பதல்ல, மக்கள் மாறுவதற்கு ஒரே காரணம் இதுதான். ஏற்கனவே மாறியுள்ள மக்களின் விருப்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும், வெளிப்படுத்த வேண்டும். எனவே ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கான விருப்பங்களுடன் நாம் செயலாற்ற வேண்டும், அந்த ஆற்றல் முன்னெப்போதையும் விட இன்று உள்ளது.

ஒரு நாடு என்ற வகையில், அதிக விழிப்புணர்வைக் கொண்டு வருவதில் நீங்கள் எவ்வாறு இணைகிறீர்கள்? பாலின சமத்துவம், பாலின வாழ்க்கை முறை மற்றும் பாலின வலுவூட்டல் ஆகியவற்றில் ஒரு தொழிலாளர் திறன் பார்வையில் இருந்து முன்னேற்றம் அடைந்திருக்கிறோமா?

ஒன்று, நடத்தை மாற்ற தகவல்தொடர்புக்கு நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். மேலும் நாம் அறிவியலையும் கலையையும் புரிந்துகொண்டு அதனுடன் இயங்க வேண்டும். நீங்கள் அதை செய்யும்போது அது அளவில் செலவு குறைந்ததாகும்.

இரண்டாவது, வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சினை, இது மன ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பல எதிர்மறை வெளிப்பாடுகளுக்கும் விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. வன்முறை ஒரு பொது சுகாதார பிரச்சினையாக மாற வேண்டும். இது இப்போது பொது சுகாதார பிரச்சினை அல்ல. இன்று, ஒரு பெண் அவளை அல்லது அவரை பரிசோதிக்கும் போது கூட தாக்கப்படுகிறாள் என்பதை உணரும்போது அங்கே ஒரு மருத்துவர் தள்ளி நிற்கிறார். ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது, ஒரு மருத்துவர் விலகிப் பார்க்கிறார்.

மூன்றாவதாக, பொது சுகாதாரத்தில் அதிக நிதி முதலீடு செய்ய வேண்டும். தொற்றுநோய் நமக்கு ஒரு பெரிய பாடம் கற்பித்திருந்தால், அது நமது பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தி அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்பதாகும். நமது பொது சுகாதார அமைப்பில் நிதி அடிப்படையில் மட்டுமல்ல, மனித வளத்திலும், மிகச் சிறந்த நிர்வாக அணுகுமுறையிலும் நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம்மிடம் ஆளுகை தோல்விகள் இருக்க முடியாது, அது ஏழைகளுக்கு மட்டுமல்ல, பணக்காரர்களுக்கும் ஒரு வாழ்க்கை மற்றும் இறப்பு பிரச்சினை என்பதை இப்போது நாம் உணர்ந்துள்ளோம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.