பெரிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு மிகையாக செலவிடப்பட்ட ரூ.1.2 லட்சம் கோடி -- இது 72 ரபேல் ஜெட் மதிப்புடையது
பெங்களூரு: கடந்த 2017 உடன் முடிந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை ஐந்து வறட்சிகள் தாக்கிய போது, மத்திய நிதியில் இருந்து கால் பங்கு மட்டுமே பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன; இது, 2,000 எக்டேர் நிலப்பரப்பை கொண்டிருந்ததாக, அரசின் விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன பயன் திட்டம்- ஏ.ஐ.பி.பி. (AIBP) மீதான 2019 ஜனவரி தணிக்கை அறிக்கை கூறுகிறது.
மத்திய நிதி பங்களிப்புடனான நுண்நீர்ப்பாசன திட்டங்களில், இந்த பத்து ஆண்டுகளில் 64% நிறைவுபெற்றன. பெரிய முழுமை பெறாத நீர்ப்பாசன திட்டங்களுக்கு உதவும் பொறுட்டு மத்திய அரசலால் 20 ஆண்டுகளுக்கு முன் ஏ.ஐ.பி.பி. திட்டம் தொடங்கப்பட்டது; அது மாநிலங்களால் நிதியளிக்க முடியாது.
தாமதமான நிதி, மோசடி மற்றும் நிதி திசை திருப்பப்படுதல் போன்றவையே இத்திட்டம் தோல்வியடைய காரணம் என்று, அந்த அறிக்கை நிறைவு செய்கிறது.
ஏறத்தாழ 60 கோடி மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வரும் இந்தியாவில் ஏறத்தாழ 60% விவசாய நிலங்கள் மழையை மட்டுமே நம்பியுள்ளன. நல்ல விவசாய உற்பத்திக்கு திறமையான பாசனம் மிக முக்கியமானது. மொத்த சாகுபடி பரப்பிற்கான நிகர பாசன பரப்பளவின் அகில இந்தியாவின் சதவீதம் 34.5 ஆகும் என பொருளாதார ஆய்வு 2017-18 தெரிவிக்கிறது.
ஏ.ஐ.பி.பி. என்பது ரூ.500 கோடியுடன் 1996-97ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது ரூ. 1,440 கோடியிய செலவிட்டதாக, இந்தியா ஸ்பெண்ட் 2016 மார்ச் 14ல் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதே காலகட்டத்தில், ஏ.ஐ.பி.பி. மூலம் நிதியளிக்கப்படாத நீர்ப்பாசன திட்டங்களின் செலவு ரூ.700 கோடி ஆகும்.
2015-16 ஆம் ஆண்டில் ஏ.ஐ.பிபி பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனாவின் (பிரதமரின் பாசன திட்டம்) நான்கு கூறுகளில் ஒன்றை ஏற்படுத்தியது. 2015இல் தொடங்கப்பட்ட இதன் நோக்கம், விவசாய நீர் பயன்பாட்டு திறன் மேம்பாடு, பயிர் செய்யக்கூடிய பகுதிக்கு நீர்ப்பாசன வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நீர்ப்பாசன நீர் பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகும்.
தணிக்கையில், 2017 உடன் முடிந்த 10 ஆண்டுகளுக்கான 118 பெரிய மற்றும் நுண் நீர்ப்பாசன திட்டங்களை மாதிரியாக காட்டியது. இதில், ரூ. 120,772 கோடி மதிப்பிலான 84 திட்டங்களுக்கு மிகுதியாக நிதி செலவிடப்பட்டிருந்தது -இது தலா ரூ.1,667 கோடி மதிப்புள்ள 72 ரபேல் ஜெட் விமானங்களுக்கான தொகைக்கு ஈடானது; அல்லது 2019 இடைக்கால பட்ஜெட்டில் கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இரு மடங்கு - தெரிய வந்தது.
அரசு கொள்முதல் அடிப்படையான 36 ரபேல் ஜெட் விமானங்கள் ரூ .60,000 கோடி என்பதை அடிப்படையாகக் கொண்டது என்று, 2019 பிப்ரவரி 15ல் இந்தியா டுடே கட்டுரை தெரிவித்திருந்தது. அரசுத் தணிக்கையில் மேலும் 335 நுண்பாசன திட்டங்கள் தணிக்கை செய்ததில், ரூ.62 கோடி மிகுதியாக செலவிடப்பட்டது கண்டறியப்பட்டது.
2008-17ஆம் ஆண்டுக்கு இடையில், 201 பெரிய திட்டங்களில் 31%; அத்துடன் 11,291 சிறிய திட்டங்களில் 71% செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும், பத்து ஆண்டுகளில் ஒப்புதல் திட்டங்களுக்கான செலவு ரூ. 2,39,000 கோடியாக இருந்தது.
பாசன பகுதி 20%; விவசாயம் நிலத்தடி நீர் சார்ந்தே உள்ளது
2014-15ஆம் ஆண்டுடனான 14 ஆண்டுகளில் இந்தியாவில் நிகர பாசன பரப்பளவு 20% அதிகரித்து, 6.84 கோடி ஹெக்டேர் அல்லது ஜெர்மனியின் நிலப்பரப்பில் இரு மடங்கு என்றிருந்ததாக, 2018 ஆம் ஆண்டுக்கான அரசு பாசன திட்ட தரவுகள் தெரிவிக்கின்றன (இந்தத் தரவுப்படி, 2014-15 க்கான புள்ளிவிவரங்கள் தற்காலிகமாக உள்ளன). இதற்கிடையில், கடந்த 18 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சாதாரண மழையை கண்டன; ஏழு ஆண்டுகள் - 2002, 2004, 2009, 2014, 2015, 2016 மற்றும் 2017- கடும் வறட்சியை சந்தித்ததாக, டவுண்ட் டு எர்த் இதழ், 2018 அக்டோபர் 1ல் கட்டுரை வெளியிட்டிருந்தது.
"மண் ஈரப்பதம் (வேளாண்மை) வறட்சி பயிர் உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பை இந்தியாவில் குறிப்பாக பாசனமின்றி பாதிக்கிறது" என அரை நூற்றாண்டின் வறட்சி மற்றும் பஞ்சம் பற்றிய 2019 ஜனவரி அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் பஞ்சத்திற்கு சிறந்த உணவு விநியோகம் இன்மை இடையக உணவு பங்குகள், கிராமப்புற வேலைவாய்ப்பு உற்பத்தி, போக்குவரத்து மற்றும் நிலத்தடி நீர் சார்ந்த பாசன வசதிகள் இல்லாதது முக்கிய காரணங்கள். ஆனால் வட இந்தியாவில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவது உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்புக்கான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
1991ல் இருந்து கால்வாய் நீரால் வளர்ந்த 30 லட்சம் மில்லியன் ஹெக்டேர் இழப்பு
இந்தியாவின் பாசனத்தில் ஏறத்தாழ 60% நிலத்தடி நீரை சார்ந்துள்ளது. உலகின் மிக அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள சீனாவை விட இரு மடங்கு அதிகம், இந்தியா நிலத்தடி நீரை பயன்படுத்துகிறது என, 2018 மே 7ஆம் தேதி இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. 2010ஆம் ஆண்டில் இந்தியா 250 கன மீட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சியது - இது உலகின் மிகப்பெரிய அணையான ஜிம்பாப்வே கரிபாவைவிட 1.2 மடங்கு கொள்திறன் அதிகமாகும்-- இதில் 89% நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
ஏ.ஐ.பி.பி.இல் பெரியளவில் முதலீடுகள் இருந்தபோதும், இந்தியாவின் கால்வாய் நீர்ப்பாசனம் - 30 லட்சம் ஹெக்டேர் கால்வாய் -வெகுவாகக் குறைந்துள்ளது. 1991 இல் இருந்து நீர்ப்பாசன பகுதிகளை இந்தியா இழந்து வருகிறது; வறட்சியில் இருந்து நாட்டை காக்க இது உகந்ததல்ல என, எகனாமிக்ஸ் & பொலிடிகல் வார இதழ், 2009 செப். 12ஆம் தேதி கட்டுரை தெரிவித்திருந்தது. "நமது மேற்பரப்பில் சேமிக்கக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால், முடிந்த அளவுக்கு பரவலான ஒரு பகுதி மீது தண்ணீர் பரப்பி, சேமித்து அதன் மூலம் நிலத்தடி நீரை சேமிப்பதாகும்” என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
"கால்வாய் மேலாண்மை மேம்படுத்தப்பட வேண்டும். ஆனா, பல ஆண்டுகளாக மாநிலங்கள் பாசன பொறியாளர்களை பணியமர்த்தி கவனிக்கவில்லை," என, பொருளாதர மற்றும் பொது கொள்கை வல்லுநரான துஷார் ஷா, 2018 மே மாதம் இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில் கூறியிருந்தார். "அணைகள் மற்றும் கால்வாய்களின் மேலாண்மைக்கு ஆதாரங்களை ஒதுக்க வேண்டும். பஞ்சாப் மற்றும் குஜராத்தில் உள்ள பெரிய நீர்ப்பாசன முறைமைகள், இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் இயங்குகின்றன" என்றார் அவர்.
நீர்ப்பாசனத்திறன் உருவானது, பயன்பட்டது - இலக்குகளை தவறவிட்டது
கடந்த தணிக்கை செய்யப்பட்டபோது, நீர்ப்பாசன திறனை உருவாக்கியது -ஒரு முழுமையாக பயன்படுத்தப்படும் பாசன திட்டத்தின் மொத்த பரப்பு- ஏறக்குறைய 5.8 மில்லியன் எக்டேராக இருந்தது, 2.7 மில்லியன் எக்டேர் அல்லது 32% குறைந்த இலக்கை எட்டியது.
115 முக்கிய மற்றும் நடுத்தர திட்டங்களின் ஒட்டுமொத்த இலக்கு(மூன்று "தாமதமானது") 8.5 மில்லியன் ஹெக்டேர் நீர்ப்பாசனம் - ஐக்கிய அரபு அமீரகத்தின் அளவு- என்பதாகும். இதில் 23% மட்டுமே முழு நீர்ப்பாசன திறனை அடைந்தது. 85 நடப்பு திட்டங்களில் 63% மட்டுமே முழு நீர்ப்பாசனத் திறன் பெற்றது.
Source: Comptroller And Auditor General Of India (Report No 22, 2018)
சிறிய திட்டங்களில், 39% பாசன திறன் 0.15 மில்லியன் ஹெக்டேர் இலக்குக்கு எதிராக அடையப்பட்டது. "பணி தாமதமாக நிறைவேற்றப்பட்டது, திட்டங்களின் நோக்கம் மற்றும் வடிவமைப்பிற்கு அடுத்தடுத்த மாற்றங்கள், அத்தியாவசிய முன்நிபந்தனைகள், நிலம் கையகப்படுத்துதல், உரிமங்களை பெறுதல் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை வழங்குவதில் தாமதம் போன்றவை " தவறாத இலக்குகளுக்கான காரணங்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'தாமதமாக பணம், மோசடி மற்றும் நிதிகளை திசைதிருப்பல்'
ஏ.ஐ.பி.பி. இன் கீழ், ஏறத்தாழ 75% திட்டங்களை ஒன்பது மாநிலங்கள் கணக்கில் எடுத்துள்ளன - மகாராஷ்டிரா (48); மத்தியப் பிரதேசம் (19); கர்நாடகா (17); தெலுங்கானா (13); ஜம்மு காஷ்மீர் (13); ஆந்திரப்பிரதேசம் (12); ஒடிசா (11); உத்தரப்பிரதேசம் (ஒன்பது) மற்றும் ஜார்கண்ட் (எட்டு).
இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மத்திய நிதி உதவி, ரூ. 41,143 கோடி (2016-17ஆம் ஆண்டு நபார்டு வங்கியில் இருந்து ரூ. 2,421 கோடி கடன் உட்பட), 2008-09 முதல் 2016-17 வரை மாநிலங்களுக்கு மத்திய உதவியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது என அறிக்கை கூறுகிறது.
16 மாநிலங்களில் 53 பெரிய திட்டங்களுக்கு அமைச்சகம் ரூ. 5,717.23 கோடியை மத்திய அரசு விடுவித்தது, இத்திட்டங்களுக்கு மொத்த நிதி ஒதுக்கீட்டில் 30%, "நிதியாண்டின் முடிவில், அதாவது மார்ச் மாதத்தில்" என்று அறிக்கை தெரிவிக்கிறது.
நிதி ஒதுக்குவதில் தாமதம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள மத்திய அமைச்சகம், மாநில அரசுகள் முன்மொழிவுகள் மற்றும் குறைபாடுகளை தாமதமாக சமர்ப்பித்ததால், நிதி ஒதுக்கீடுகளும் தாமதமானதாக தெரிவித்ததாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கை, 13 மாநிலங்களில் 1,579 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இது "ஊதியம் மற்றும் கணக்கியல் அதிகாரிகளால் செலவினங்களைக் குறைக்க முடியாத நிதி கட்டுப்பாடு இல்லாதது, தொகை செலவினங்களை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதலை கணக்கியல் அதிகாரிகள் செய்யவில்லை” என்று தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா, நாகலாந்து, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ரூ 7.6 கோடிக்கு மோசடி மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன.
ஏழு மாநிலங்களில் 18 பெரிய மற்றும் நடுத்தர திட்டங்களில், இரு மாநிலங்களில் சிறியவை திட்டங்கள், கிட்டத்தட்ட ரூ. 1,113 கோடிக்கு பல்வேறு வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட வைப்பு கணக்குகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக, அறிக்கை தெரிவிக்கிறது. இது திட்ட செலவினங்களை உயர்த்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் நிதியை நிவர்த்தி செய்ய வழிவகுத்ததாக அது மேலும் கூறுகிறது.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.