மும்பை: ஜூன் 2011இல் ஒருநாள், மழைசாரலில் பழைய புனே-கோவா நெடுஞ்சாலை நனைந்திருக்க, வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது 12ம் வகுப்பு படித்த பைஸன் மிதைவாலா, தனது நண்பரிடம் “பிரேக் லகா” என்று சொன்னது இன்றும் நினைவுக்கு வருகிறது. வார இறுதியில் தலைநகர் மும்பையில் இருந்து தென்கிழக்கில் 85 கி.மீ தொலைவில் உள்ள லோனாவாலா என்ற மலைப்பிரதேச நகருக்கு பைக்கில் இரண்டாம் நபராக அவர் சென்று கொண்டிருந்தார்.

உண்மையில் என்ன நடந்தது என்ற விவரங்கள் மிதைவாலாவுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஒரு டெம்போ டிராவலர் வேன் மோதியதில் படுகாயமடைந்து, மும்பைக்கு தென்கிழக்கில் 70 கி.மீ தொலைவில் உள்ள கோபோலிக்கு அருகே உள்ளூர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கோபோலியில் அவருக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லாததால், மும்பைக்கு திரும்பும் வழியில் 37 கி.மீ தூரத்தில் உள்ள பன்வேலில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டியிருந்தது. அவரது நண்பருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மிதைவாலாவுக்கு முகத்தில் பெரிய காயம், ரத்த இழப்பு மற்றும் மூளைக் காயம் இருந்தது. அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இரு தினங்களுக்கு பிறகு அவர் மும்பையின் சைஃபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனைகளுக்கு வெளியே பத்து மாதங்கள், ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான செலவு செய்து, பின்னர் ஒரு பெரிய முக சீரமைப்பு அறுவை சிகிச்சை என ஒருவழியாக மிதைவாலா உயிர் தப்பினர்.

சாலை விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களில் இவரும் ஒருவர்; சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் சராசரியாக 17 பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர்.

இருந்தும்கூட, 2012-2017 ஆம் ஆண்டில் அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களாக 80 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசு தரவு காட்டுகிறது. மேம்பட்ட உயிர்காக்கும் வாழ்வாதாராம் (ஏடிஎல்எஸ்) போன்ற படிப்புகள் இந்தியாவில் மருத்துவர்களுக்கு கட்டாயமில்லை என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டினர். அவசர சிகிச்சை மையங்கள் சீரற்ற முறையில் உள்ளன; பெரும்பாலும் ஜூனியர் டாக்டர்களால் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் இதில் சிலருக்கு கூடுதல் சுமை உள்ளது; அவசரகால பராமரிப்புக்கு இது தயாராக இருப்பதில்லை.

ஒவ்வொரு மணி நேரத்திலும் 53 சாலை விபத்துக்கள்; விபத்து தொடர்பான 17 மரணங்கள்

நாடு தழுவிய அளவில், 2018 ஆம் ஆண்டில் 4,67,044 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன - அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53, சராசரி- இது, 2017 உடன் ஒப்பிடும்போது 0.46% அதிகரிப்பு என்று செப்டம்பர் 2019 இல் வெளியிடப்பட்ட இந்திய சாலை விபத்துக்கள் 2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களில் 1,51,417 பேர் கொல்லப்பட்டனர் - அல்லது சராசரியாக ஒவ்வொரு மணி நேரமும் 17 பேர் இறந்தனர் - இது 2017 ஐ விட 2.4% அதிகமாகும், மேலும் 469,418 பேர் காயமடைந்தனர்.

சாலை விபத்து இறப்புகளில் மூன்றில் ஒரு பகுதி நகர்ப்புறங்களில் நிகழ்ந்தது, இது விபத்துக்களில் 41% ஆகும்; மூன்றில் இரண்டு பங்கு கிராமப்புறங்களில் உள்ளது என்று தரவு காட்டுகிறது.

Source: Ministry of Road Transport And Highways 2018

அறிக்கையானது, விபத்துக்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது: அபாயகரமானது, பலத்த காயம் (மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது), சிறிய காயம் மற்றும் காயம் இல்லாதது. விபத்துக்கள் மிகப்பெரிய பங்கு வகிப்பது சிறு காயம் (36%), அதன்பிறகு அபாயகரமான விபத்துக்கள் (30%) மற்றும் பலத்த காயம் விபத்துக்கள் (27%). மீதமுள்ளவர்கள் (7%) காயம் ஏற்படாதவர்கள். படுகாயம் விபத்துக்கள் "நல்ல சட்டம் என்பது உயிர்களைக் காப்பாற்ற பொன்னான நேரத்தில் இலவச சுகாதார சேவையை வழங்குவன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன", இது இப்போது மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019 இன் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவின் சாலை வலைஅமைப்பில் 1.94% மட்டுமே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில்தான், சாலை விபத்துக்களில் 30.2% மற்றும் 2018 இல் 35.7% இறப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டின் சாலை நீளத்தின் 2.97% உள்ள மாநில நெடுஞ்சாலைகள் முறையே 25.2% மற்றும் 26.8% விபத்துக்கள் மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு இடையில், கிராமப்புறங்களில் சாலை விபத்துக்கள் சுமார் 5% அதிகரித்துள்ளன; அதே நேரம் இந்த விபத்துகளால் இறப்புகள் மற்றும் காயங்கள் முறையே 20.5% மற்றும் 2.3% அதிகரித்துள்ளன.

உலகளவில் அதிக சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ள 199 நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என, போக்குவரத்துத் துறைக்காக செயல்படும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை புள்ளிவிவரங்கள் 2018 அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் 1,00,000 பேரில் 11 பேர் சாலை விபத்துக்கள் மரணமடைவது என்ற அடிப்படையில் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. இது ஈரான் (20), ரஷ்ய கூட்டமைப்பு (14) மற்றும் அமெரிக்கா (12) ஆகியவற்றை விட குறைவாகும்.

சாலை-விபத்து இறப்புகள் மற்றும் காயங்களை 50% குறைப்பது மற்றும் 24 வருட காலப்பகுதியில் அதைத் தக்கவைத்துக்கொள்வது, இந்தியாவின் 2014 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ரூ. 125 லட்சம் கோடி அல்லது 2.03 டிரில்லியன் டாலர்) 14% க்கு சமமான கூடுதல் வருவாயை உருவாக்க முடியும் என்று, ஜனவரி 2018 உலக வங்கி ஆய்வு தெரிவித்தது.

உயிர் காக்க அவசர சிகிச்சையை அணுகுதல்

விபத்து நேரிட்டதும் பாதிக்கப்பட்டவருக்கு முதல் ஒருமணி நேரம் ‘பொன்னான நேரம்’ (கோல்டன் ஹவர்) ஆகும். அப்போது சரியான மற்றும் உரிய நேரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்வாழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக ‘கோல்டன் ஹவர்’ கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) 2015 ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 45 மில்லியன் இறப்புகளில், 54% “மருத்துவமனைக்கு முந்தைய மற்றும் அவசர சிகிச்சையால் தீர்க்கப்படக்கூடிய நிலைமைகள்” காரணமாகும்.

சாலை விபத்துக்கள் குறித்த மத்திய அமைச்சகத்தின் அறிக்கை தமிழ்நாட்டை மேற்கோள் காட்டியுள்ளது. கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு இடையே தமிழகத்தில் சாலை விபத்து இறப்புகளில் 24% சரிவு காணப்பட்டதாக தரவுகள் காட்டுகிறது. சிறந்த சாலை-போக்குவரத்து அமலாக்கம் மற்றும் அவசரகால பராமரிப்பு மேம்பாடு போன்ற “பலதரப்பட்ட முயற்சிகள்”, இந்த சரிவுக்கு காரணமாகும் என்று அறிக்கை கூறியுள்ளது.

மாநிலத்தில் 78 அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் அவசர சிகிச்சையானது மேம்படுத்தப்பட்டுள்ளது. 936 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 41 ஆம்புலன்ஸ் பைக்குகள் பயன்படுத்தப்படுவதால் அவசரகாலத்தில் உதவுகின்றன. இருப்பிட விவரங்களை அறிந்து கொள்ள மொபைல் செயலி பயன்பாட்டையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது; இதன் மூலம் அவசர உதவி தேவைப்படும் விபத்து இடத்தை விரைவாக அடைய முடியும்.

"வெறுமனே, மருத்துவமனையில் 24x7 அவசர சிகிச்சை பிரிவு - பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் - இருப்பதுடன் மட்டுமின்றி தேவையான அனைத்து உபகரணங்களும் கிடைக்க வேண்டும்" என்று நவி மும்பை அப்பல்லோ மருத்துவமனையின் அவசரப்பிரிவு மருத்துவத்தலைவர் நிதின் ஜகாசியா கூறினார். ஒரு நிபுணருக்காக காத்திருப்பதை விட அவசர சிகிச்சையை உடனடியாக தொடங்குவதற்கு அவசர சிகிச்சை உதவிக்குழுவிற்கு சிகிச்சை குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

உடல் காயங்களைவிடவும் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள் என்று ஜகாசியா மேலும் கூறினார்.

இந்தியாவின் பொது சுகாதாரத்தில் அவசர சிகிச்சை பராமரிப்பு

இந்த மையம் 2000 ஆம் ஆண்டில் “நெடுஞ்சாலைகளில் அவசர வசதிகளை வலுப்படுத்துவதற்கான” ஒரு முதன்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியது; அதன் பின்னர் “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் திறனை வளர்ப்பதற்கான உதவி” என்ற தலைப்பில் ஒரு திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

பான்-இந்தியா அவசர சிகிச்சை பராமரிப்பு வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் சாலை விபத்துக்களால் ஏற்படக்கூடிய இறப்புகளை 10% ஆகக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது, இதில் எந்தவொரு அவசர சிகிச்சை உதவியும் பாதிக்கப்பட்டவருக்கு 50 கி.மீ.க்குள் இருக்கும். ஒவ்வொரு 100 கி.மீ உள்ளாக, ஒரு அவசர சிகிச்சை மையம் இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், 17 மாநிலங்களில் உள்ள 116 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது (2007-2012) அடையாளம் காணப்பட்டன. இவற்றில் 105 செயல்பாட்டுக்குரியவை (58 மூன்றாம் நிலை அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்கள், 57 நிலை இரண்டாம் மற்றும் ஒரு முதல்நிலை ) ஆகஸ்ட் 2019 இல் வெளியிடப்பட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

Trauma Care

The Ministry of Health & Family Welfare categorises trauma care as follows, based on the WHO guidelines:

Level IV: Provided by appropriately equipped and manned mobile hospitals or ambulances.

Level III: Provides initial evaluation and stabilisation (surgically, if needed). Comprehensive medical and surgical in-patient services provided to those patients who can be maintained in a stable or improving condition without specialised care. Emergency doctors and nurses available round-the-clock. Physicians, surgeons, an orthopaedic surgeon and an anaesthetist available round-the-clock to assess, resuscitate, stabilise and initiate transfer as necessary to a higher-level trauma-care service. Should be located at a distance of 100-150 km from each other.

Level II: Provides definitive care for severe trauma patients. In-house emergency physicians, surgeons, orthopedicians and anaesthetists available to trauma patients immediately on arrival. On-call facility for neurosurgeons and paediatricians. Should be located at a distance of 300-450 km from each other.

Level I: Provides the highest level of definitive and comprehensive care for patients with complex injuries. In-house emergency physicians, nurses and surgeons available to trauma patient immediately on arrival. Services of all major super specialties associated with trauma care available 24x7. This should be located at a distance of 600-700 km from each other.

Source: Ministry of Health & Family Welfare

12 வது ஐந்தாண்டு திட்டத்தின் போது (2012-17), 85 அவசர சிகிச்சை பராமரிப்பு வசதிகளுக்கு உதவுவதற்காக அடையாளம் காணப்பட்டு அதில் 80 மையங்கள் நடைமுறைக்கு வந்தன. இருப்பினும், அவை எதுவும் செயல்படவில்லை என்று அறிக்கை தெரிவித்தது. இதன் விளைவாக, தற்போதுள்ள அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களுக்கு தேவைக்கு அதிகமான சுமை ஏற்படுகிறது.

உதாரணமாக, சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (பிஜிஐஎம்ஆர்) உள்ள மேம்பட்ட அவசரகால சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகளில் 90% அருகில் உள்ள பகுதிகளில் இருந்து (200 கி.மீ வரை) வருகின்றனர்; இருப்பினும் ஜம்மு-காஷ்மீரிலில் இருந்து கூட நோயாளிகள் வருகின்றனர் என்று, மேம்பட்ட அவசரகால மைய பேராசிரியரும் நோடல் அதிகாரியுமான சமீர் அகர்வால் கூறினார்.

கிட்டத்தட்ட 3 கோடி மக்களைப் பராமரிக்கும் 100 படுக்கைகள் கொண்ட இந்த மையத்தில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை 200% அதிகம் என்று அகர்வால் மேலும் கூறினார். "எப்போது பார்த்தாலும் [ஒரு] தள்ளுவண்டியில் சுமார் 100-150 நோயாளிகள் உள்ளனர்; ஏனெனில் இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஒரே முதல் நிலை அவசர சிகிச்சை பராமரிப்பு மையம் இது ஒன்றுதான்" என்றார்.

மகாராஷ்டிராவில் - இது 2018 ல் இரண்டாவது மிக அதிக சாலை விபத்து இறப்புகளைப் பதிவுசெய்தது - மூன்றாம் நிலை அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்கள் (டி.சி.சி) சீரற்ற முறையில் பரவியுள்ளது என்று 2017 தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, மூன்றாம் நிலை அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்கள் ஒன்றுக்கொன்று 100-150 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள 69 மூன்றாம் நிலை அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களில் 38, ஒன்றுக்கொன்று 50 கி.மீ தொலைவுக்குள்ளும், 14 மையங்கள் 50-100 கி.மீ தொலைவுக்குள்ளும் இருந்தன; இது முக்கியமாக மாநிலத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது என்று தணிக்கையில் கண்டறியப்பட்டது. "மீதமுள்ள 17 அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்கள் மகாராஷ்டிராவின் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இடைவெளியை நிரப்பின" என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

மேலும், தணிக்கை செய்யப்பட்ட 18 நிலை மூன்றாம் நிலை அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களில் 13 மையங்கள், 2017 ஆம் ஆண்டு ஜனவரி வரை கூட நீடிக்கவில்லை. போதிய மனிதவளம், உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் மின்சாரம், சுற்றுச்சுவர்கள் மற்றும் தண்ணீர் வசதி நீர் வழங்கல் போன்ற முழுமையற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றால் செயல்படவில்லை. தணிக்கை செய்யப்பட்ட 18 அவசரகால பராமரிப்பு மையங்களில் 270 பதவிகளில் 136 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக தணிக்கையில் கண்டறியப்பட்டது.

குஜராத்தின் படான் மாவட்டத்தில் 14 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மையம், ரூ.1.59 கோடி செலவில் (சராசரி 900 நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு அவசரகால பராமரிப்பு செலவுகளைச் செலுத்த இத்தொகை போதுமானது) நிறுவப்பட்டது; மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்களை நியமிக்காததால் 2018 முதல் இது பயன்பாட்டில் இல்லை என்று மற்றொரு சிஏஜி அறிக்கை கூறுகிறது. ஆகஸ்ட் 2017 நிலவரப்படி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் தலா ஒரு பதவி, ஒரு மருத்துவ அதிகாரியின் மூன்று பதவிகள் மற்றும் 24 மணி நேர துணை மருத்துவர்களின் ஆறு பதவிகள் காலியாக இருந்ததாக தணிக்கை கண்டறியப்பட்டது.

அவசர சிகிச்சைக்கு ஆயத்தமாகவில்லை: நிபுணர்கள்

மேம்பட்ட அவசரகால தீவிர உயிர்காக்த்தல் (ஏடிஎல்எஸ்) போன்ற படிப்புகள் இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கட்டாயமில்லை என்பதை, புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மகேஷ் சந்திர மிஸ்ரா இந்தியா ஸ்பெண்டிடம் சுட்டிக் காட்டினார். அமெரிக்காவில், ஏடிஎல்எஸ் படிப்புகளை அமல்படுத்தியதால், 24 மணிநேர காயம் இறப்பு 4% ஆக குறைந்துள்ளது; இந்தியாவில் இது 10% ஆக உள்ளது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் மருத்துவர்களுடன் அவசர சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இதனால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று மிஸ்ரா கூறினார். மேலும், நோயாளிகள் அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் மட்டுமே ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள், மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள சுகாதார வசதிகளை கொண்டு உறவினர்கள் அல்லது பார்வையாளர்களால் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்று மிஸ்ரா மேலும் கூறினார். "சுகாதார வசதிகள் குறைவானவை மற்றும் இதனால் பெரிய காயத்தை சமாளிக்க முடியாது. காயத்தின் தன்மையை தீர்மானிக்க சில நேரங்களில் அவர்களுக்கு 48 மணி நேரத்திற்கும் மேலாகும்” என்றார் அவர்.

அவசரகால சிகிச்சை, ஏழை மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்களை (பெரும்பாலான காயங்கள் மற்றும் இறப்புகள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளில் இருப்பதால்) பாதிக்கிறது என்று மிஸ்ரா கூறினார். அவசர சிகிச்சை பராமரிப்பு மையங்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது, சிகிச்சை கவனிப்பு ஏன் மையக்கொள்கை என்ற நிலைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதை இது விளக்குகிறது.

தனியார் மருத்துவ மருத்துவமனைகள் (சி.டி. ஸ்கேன், ஆபரேஷன் தியேட்டர்கள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் போன்ற அவசர சிகிச்சை பராமரிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டவை) மிகக் குறைந்த அளவிலான வீதத்தில் இயங்குகின்றன என்று மிஸ்ரா கூறினார். "இங்கே ஒரு பொருத்தமின்மை உள்ளது, நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அதிகம் அனுமதிக்கப்படுகிறார்கள் மற்றும் தனியார் துறையில் குறைவாக உள்ளனர்" என்று அவர் கூறினார்.

செலவினங்களை ஈடுகட்ட ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் அரசிடம் உள்ளன. இதை பயன்படுத்த முடியுமானால் - அரசால் இந்த சேவைகளை தனியார் துறையில் இருந்து பெற முடிந்தால் - உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

"விபத்துக்கள் பொதுவாக மக்கள் நடமாட்டம் இல்லாத, அல்லது சுகாதார வசதிகளில் இருந்து வெகு தொலைவில், அல்லது மலைகள் மற்றும் அடைய முடியாத பிற இடங்களில் நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன" என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய ஆலோசகர் பதஞ்சலி தேவ் நாயர் கூறினார். "எனவே அங்கு செல்வது எப்போதும் ஒரு சவாலானது" என்றார் அவர்.

"பாலிட்ராமா பராமரிப்பு போன்ற அவசர சிகிச்சை பராமரிப்பு முதன்மை ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைக்கப்படலாம்" என்று நாயர் மேலும் கூறினார். “எடுத்துக்காட்டாக, விபத்துக்குள்ளானவருக்கு உதவக்கூடிய இரத்த வங்கி, பிரசவத்திற்குப் பிறகான கர்ப்பத்தில் இரத்தப்போக்கு கொண்ட ஒரு தாய்க்கும் உதவக்கூடும். அதனால்தான், தனித்தனி அவசர சிகிச்சை மையங்களை உருவாக்குவது தொடர்பாக முதன்மை சுகாதார வசதிகளுக்குள் பாலிட்ராமா பராமரிப்பை ஒருங்கிணைக்க நாங்கள் [WHO] பரிந்துரைக்கிறோம்” என்றார்.

"உடல்நலம் ஒரேயொரு பொருள் - அதை செயல்படுத்துவதில் ஏராளமான முகமை நிறுவனங்கள் உள்ளன," என்று அவர் கூறினார். "எனவே சில நேரங்களில் மத்திய அரசு எதையாவது தொடங்குகிறது; ஆனால் மாநில அரசுகள் அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதில்லை. அத்துடன், அவசர சிகிச்சை பராமரிப்பு போன்ற சிக்கல்களை சுற்றி நிறைய ஆலோசனைகள் இல்லை; இதற்கு நிறைய பணம் செலவிடப்பட வேண்டும்” என்றார் அவர்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர். இக்ட்டுரை ரோட் சேப்டி மீடியா பெல்லோஷிப் 2019 இன் ஒரு பகுதியாகும்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.