டெல்லி: பஞ்சாபில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகள் மற்றும் அதிக இறப்பு விகிதம் ஆகியன, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய ஆளுகையின் உள்ள பிராந்தியமான சண்டிகருக்கு உதவவும், மத்திய குழுக்களை நியமிக்கவும், மத்திய சுகாதார அமைச்சகத்தை தூண்டியுள்ளது. செப்டம்பர் 12 ஆம் தேதி நிலவரப்படி பஞ்சாபில் 19,096 கோவிட் -19 வழக்குகள் உள்ளன, இதுவரை 53,308 மீண்டுள்ளனர்; 2,212 பேர் இறந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் இது திடீரென அதிகரித்து, 250% க்கும் அதிகமான வழக்குகளுக்கு வழிவகுத்தது, ஜூலை மாத இறுதியுடன் ஒப்பிடும் போது, இறப்புகளில் 345% அதிகரிப்பு (1,332) காணப்பட்டது.

டெல்லியை சேர்ந்த சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் (CPR - சிபிஆர்) மேற்கொண்ட ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், 2.8 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாநிலத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதற்கான சில தடயங்களை தந்துள்ளது. பஞ்சாப் அரசுடன் இணைந்து, மாநிலத்தில் கோவிட்-19 அறிகுறியற்ற பரவல் பற்றி சி.வி.ஆர் ஆய்வு செய்கிறது. அவர்கள் சமீபத்தில் தங்கள் ஆரம்ப கண்டுபிடிப்புகளுடன், ஆய்வுக்குறிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

பஞ்சாபில் கோவிட்-19 பரவல்களில் 81% அறிகுறியற்ற நபர்களிடம் இருந்து வந்தது, அறிகுறியுடைய சுமார் 15% பேரே, தொற்றுநோய்களுக்கு பங்களித்தனர் என்று, சிபிஆரால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பஞ்சாபின் தொடர்பு-தடமறிதல் தரவுகள் தெரிவிக்கின்றன.

அறிகுறியற்ற பரவல், மாநிலத்தில் மிக ஆதிக்கம் செலுத்துகிறது என்பது, பரிசோதனை உத்திகள் --பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொடர்பு-தடமறிதல் தொடங்கி, க்கள் தொகை அடிப்படையிலான பரந்த கண்காணிப்பு மூலம் புதிய வழக்குகளை தீவிரமாக கண்டுபிடிப்பது வரை -- மாற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக, அந்த குறிப்பு கூறியுள்ளது.

இந்திய அதிகாரிகள் பல மாநிலங்களில் சமூகப்பரவலை அறிவிக்கவில்லை என்றாலும், "அதற்கு அதிக வாய்ப்புள்ளது", என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர், அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தும் பரிசோதனை அளவுகோல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று, மற்றொரு கட்டாய காரணம் உருவாகிறது.

சிபிஆர் அமைப்பில், கோவிட் -19 ஆய்வுக்குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஜிஷ்ணு தாஸ், இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில், பஞ்சாபில் தங்களது ஆராய்ச்சி குறித்தும், அறிகுறியற்ற பரவலால் ஏற்படும் பெரிய பிரச்சினைகள் குறித்தும் பேசுகிறார்.

திருத்தப்பட்ட பகுதிகள்:

அறிகுறியற்ற நோயாளிகளால் பரவும் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தைக் கருத்தில் கொண்டு, பஞ்சாபில் பரிசோதனை உத்திகள், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொடர்பு-தடமறிதலில் இருந்து மக்கள் தொகையை கண்காணிப்பதன் மூலம், செயல்பாட்டில் உள்ள வழக்கு-கண்டுபிடிப்பிற்கு மாற வேண்டும் என்பதை உங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. செயல்பாட்டில் உள்ள வழக்குகளை கண்டறிவது கோவிட்19ன் அறிகுறிகளை கண்காணிப்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பல அறிகுறியற்ற நோயாளிகள் இருக்கும்போது, இந்த மாதிரி என்பது முழுமையடையாது. இது எங்களை மூன்று அம்சக் கேள்விகளை கொண்டு வருகிறது:

(i) “அறிகுறியற்ற நோயாளிகளிடம் தொற்றுநோய்களது ஆதிக்கம்” இருக்கும்போது, நல்ல நேரம் -- அதாவது நோய்த்தொற்றின் முன்னேற்றத்தில் - மக்கள் மற்றும் சமூகத்தை அறிகுறியற்ற வழக்குகளை கண்டறியத் தொடங்குவது-- எப்போது?

(ii) இது, ஒரு மாநிலத்தில் முதன்மையாக செயல்பாட்டில் கண்காணிப்புத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும், ஆனால், ஒரு துணைத்திட்டமாக செயல்பாட்டில் உள்ள பரிசோதனையில் இருந்து சமூக பரிசோதனைக்கு மாறுவதற்கு, அந்த நுனிப்புள்ளியை -- அதாவது அறிகுறியற்ற நிகழ்வுகளில் இருந்து அதிக தொற்றுநோய்கள் -- என மாறுவதற்காக கண்காணிப்பானது இயக்கப்படுகிறது. அது சரியானதா?

(iii) வரம்புக்குட்பட்ட வளங்களைக் கொண்ட ஒரு மாநிலம் -- இந்தியா அளவிலான ஒருநாடு -- எவ்வாறு அந்த இனிமையான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்?

இவை அனைத்தும் சரியான கேள்விகள். அடிப்படை உண்மை என்னவென்றால், அவற்றுக்கு பதிலளிக்கக்கூடிய கொள்கைகள் நம்மிடம் உள்ளன, ஆனால் எந்த பிரத்யேகமானதாகவும் அது இல்லை. நம்மிடம் பிரத்யேகமானது இல்லாததற்கு காரணம், பொதுவாக சரியான கேள்விகளைக் கேட்பதற்கான வழியை நாம் பின்பற்றவில்லை. அதன் பிறகு, பின்வாங்கிக்கொண்டு பின்வருமாறு கூறுகிறோம்: “சரி, இவற்றுக்கு நாம் எவ்வாறு பதிலளிப்போம்” என்பதாகும். எனவே, பல அம்சங்களில் கணிசமான நிச்சயமற்ற தன்மையுடன், சரியாக இல்லாத தரவுகளுடன் நாம் பணியாற்றி வருகிறோம் - நிச்சயமாக இந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு, நாம் வடிவமைக்கப்படவில்லை.

(அ) பல வழக்குகள் அறிகுறியற்றவை என்றும்; (ஆ) அறிகுறியற்ற மக்கள் நோயைப் பரப்புவார்கள் என்றும் ஆரம்பத்திலேயே நாம் அறிந்திருந்தால், கோவிட்-19 இல் இருந்து ஏற்படக்கூடிய சுகாதார விளைவுகளை நாம் மறுபரிசீலனை செய்யலாம் (எல்லாவற்றிற்கும் மேலாக, அறிகுறியற்ற மக்கள் ஒருபோதும் தீவிரமாக நோய்வாய்ப்படவில்லை எனில், அவர்களுக்கு சுகாதாரப்பாதுகாப்பு தேவையில்லை, நிச்சயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை) மற்றும் அறிகுறியற்ற நபர்களை எவ்வாறு ஆரம்பத்தில் கண்டறிய முடியும் என்பதைப் பார்க்க, ஒரு செயல்பாட்டு கற்றல் நிகழ்ச்சி நிரலின் மூலம் வெளிப்படுகிறது.

எனவே, உங்கள் கேள்விக்கான சரியான பதில், நன்கு அளவீடு செய்யப்பட்ட உத்திகள் உள்ளதா என்பதைப் பொறுத்தது, அது அறிகுறியற்ற தொற்றுநோயை முதலில் கண்டறிய நம்மை அனுமதிக்கும். இல்லையெனில், அறிகுறியற்ற நோய்த்தொற்றுகள் ஆதிக்கம் செலுத்தும் போது கூட, சமூகச்சோதனை செலவு குறைந்ததாக இருக்காது. எங்களது ஆராய்ச்சி குறிப்பு, சமூகத்தில் எளிய சீரற்ற மாதிரிகள் கூட நல்ல யோசனையாக இருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது.

இந்தியா தனது சோதனை நெறிமுறையை பலமுறை மாற்றி, படிப்படியாக சோதிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. டைனமிக் என்ற திறன்மிகு சோதனை அளவுகோல்களை வைத்திருப்பது அவசியமா? அகில இந்திய அல்லது மாநிலம் வாரியாக அளவுகோல்கள் இருப்பது அவசியமா? இது ஏன் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட வேண்டும்?

இந்த நேரத்தில், பஞ்சாப் நான்கு வகையான விஷயங்களைச் செய்து வருகிறது: (அ) கோவிட்-19 க்கான சிகிச்சை சோதனை; (ஆ) கடந்த காலத்தில் கோவிட்19 உள்ள மக்கள்தொகையின் பகுதியைக் கண்டறிய செரோலாஜிக்கல் ஆய்வுகள்; (இ) எடுத்துக்காட்டாக ஐ.எல்.ஐ [காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைபாடு] மற்றும் SARI [தீவிர சுவாச நோய்த்தொற்றுகள்] நோயாளிகளின் நோய்க்குறி ஆய்வுகள்; (ஈ) சிறப்பு மக்கள்தொகையில் பரிசோதனை, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, சிறப்பு மக்கள்தொகையின் வரையறை காலப்போக்கில் மாறிவிட்டது. எனவே, ஏதோ ஒரு வகையில், சமூக பரிசோதனைக்கான யோசனை என்பது ஏற்கனவே உள்ளது.

முக்கிய கேள்வி என்னவென்றால், அவர்கள் கருதும் நோய்த்தொற்றின் முன்கணிப்புகள் (ILI / SARI முக்கியமாக மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறப்பு மக்கள்தொகை) மிகவும் செலவு குறைந்தவையா என்பதுதான்.

நமது ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இவை தொற்றுநோய்க்கான நல்ல முன்கணிப்பாளர்கள் அல்ல, மேலும் ஆபத்தை கணிக்கும் சிறந்த முன்கணிப்பாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி எதுவும் இல்லை.

செயல்பாட்டில்லாத நிலையில் இருந்து செயல்பாட்டுள்ள கண்காணிப்புக்கு மாறுவதற்கான இனிமையான இடம் எப்போது என்பது பற்றிய உங்கள் கேள்வி சரியானது. சமூகச்சோதனை எவ்வளவு செய்ய வேண்டும், யாரை சோதிக்க வேண்டும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு கேள்விகளும் தொடர்புடையவை, ஏனென்றால் யாரை பொருத்தமான முறையில் சோதிக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் (அதாவது, பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்கும் சில கண்காணிப்பு கருவி), இது சமூகச்சோதனையின் செயல்திறனை நேரடியாக அதிகரிக்கிறது.

ஒரு டைனமிக் சோதனை என்பது, அளவுகோல்களைக் கொண்டிருப்பது முற்றிலும் முக்கியமானது, ஆனால் அந்த சோதனை அளவுகோல்கள் நோயைப் பற்றி நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதனால் அதன் ‘டைனமிக்’ பகுதி நாம் கற்றுக்கொண்டவற்றால் இயக்கப்படுகிறது. உதாரணமாக, வாசனை மற்றும் சுவை இழப்பு இரண்டு சாத்தியமான அறிகுறிகள் என்பது நமக்கு முன்பே தெரியாது. எனவே, இவற்றைச் சேர்க்க, நமது கண்காணிப்பு அளவுகோல்களை ‘டைனமிக்’ ஆக மாற்ற வேண்டும். இதேபோல், நோய்த்தொற்றின் நடத்தை குறிப்புகளை நாம் இன்னும் ‘கற்றுக்கொள்ளவில்லை’ - சில தொழில்கள் அல்லது மக்கள் குழுக்கள் (ஒருவேளை நிறைய பேரைச் சந்திப்பவர்கள்) தொற்றுநோயின் ஆரம்பத்தில் நேர்மறையாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? பாதிப்பு குறைவாக இருக்கும்போது, உள்வரும் தொற்றுநோயின் சென்டினல்களாக எந்தக்குழு செயல்பட வேண்டும்? இந்த கேள்விகள் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். சுவாரஸ்யமானது என்னவென்றால், இது கற்றுக்கொள்வது கடினம் அல்ல, அதற்கு அதிக நேரமும் தேவையில்லை, ஆனால் சோதனை மற்றும் கற்றலுக்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை இதற்கு தேவைப்படுகிறது, அதை நாம் இதுவரை எடுக்கவில்லை.

அறிகுறியற்ற வழக்குகளை கண்டறிய பரவலாக சோதனை செய்வதன் செலவு-செயல்திறன் என்ன? அறிகுறியற்ற வழக்குகளுக்கு பரவலாக சோதனை செய்வதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ, தரம் அல்லது எண்ணிக்கையிலான வாதங்கள் யாவை?

செலவு-செயல்திறனைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் துல்லியமாக மக்களை, குறிப்பாக அறிகுறியற்றவர்களை, எவ்வாறு பரிசோதனைக்கு கண்காணிக்க முடியும் என்பதை குறிக்கிறது. நமது உருவகப்படுத்துதல்கள் ஒரு குறிப்பிட்ட மாதிரியை - சமூகத்தில் சீரற்ற மாதிரி - ஒப்பிடுகின்றன மற்றும் ஒட்டுமொத்த பரவலிலும் கூட, அறிகுறி கண்காணிப்புகளுடன் ஒப்பிடும்போது பரிசோதிக்க இது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. ஆனால் சமூகச்சோதனை செய்ய வேண்டுமா என்ற உங்கள் கேள்விக்கு இது பதிலளிக்கவில்லை. எனவே விரைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு வெவ்வேறு அணுகுமுறைகள் மூலமாகவும் நாம் கொஞ்சம் பணம் மற்றும் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதே எனது எடுத்துக்காட்டு. மீண்டும், புத்திசாலித்தனமாகச் செய்தால் அதற்கு நிறைய நேரமும் பணமும் தேவையில்லை.

பரிசோதனைகள் துல்லியமானவை அல்ல, இன்று எதிர்மறை உள்ள ஒருவர் உண்மையில் நாளைக்கே வைரஸை கொண்டிருக்கக்கூடும் என்பதால், ஒரு அறிகுறியற்ற வழக்குகளை ஏன் பரிசோதிக்க வேண்டும்? அறிகுறியற்ற நபரை மீண்டும் மீண்டும் சோதிக்க வேண்டுமா? எடுத்துக்காட்டாக, உங்கள் ஆராய்ச்சி, சமூகத்தில் செயல்பாட்டில் பங்கு வகிப்பவர்களை - கடைக்காரர்கள் போன்றவர்களை - தொற்றுநோயை அதிகம் பிடிக்க அல்லது பரப்பக்கூடியவர்களை சோதிக்க அறிவுறுத்துகிறது. உங்கள் மாதிரி வழக்கமாக சோதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறதா?

மக்கள் எத்தனை முறை பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற இந்த பொதுவான கேள்வி, நாம் எதைப் பயன்படுத்த விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, குறைவான பாதிப்பு உள்ள ஒரு பகுதியில், ஆரம்பகால நோய்த்தொற்றுகள் யாருக்கு (ஒருவேளை சுகாதாரப்பணியாளர்கள் அல்லது காவல்துறையினர்) என்பதை நாம் ‘கற்றுக் கொள்ள’ முடிந்தால், அவர்களில் ஒரு செண்டினல் கண்காணிப்பு அமைப்பு நன்றாக வேலை செய்யலாம். அல்லது, ஏராளமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை நாம் காணலாம் மற்றும் அதிக சோதனைகள் இருக்க வேண்டிய இடங்களாக இவற்றைக் குறிக்கலாம். எனவே, உங்கள் உள்ளுணர்வு சரியானது - ஆரம்பத்தில் தொற்றுநோய்க்கான அதிக வாய்ப்பு உள்ளவர்கள் அடிக்கடி சோதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் தொற்றுநோயை இருக்கும் நபர்கள் யார் என்பதை அறிய நமக்கு தரவு தேவை.

இப்போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவலாக காணப்படுகிறது, தடுக்கும் மனித முயற்சிகளை வைரஸ் முந்திக் கொண்டதாக தோன்றும்போது, கண்காணிப்பு, பரவல் சங்கிலிகளை உடைப்பது கூட சாத்தியமா?

நிச்சயமாக. அதிக பாதிப்பு உள்ள சூழலில் கூட, விஷயங்களை மிகத்திறம்பட செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. அது குறித்து, விரைவில் வெளிவரவுள்ள அறிக்கை நம்மிடம் உள்ளது, எனவே நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும், இதைப் பெறுவதற்கு நம்மிடம் செயல்பாட்டு கற்றல் நிகழ்ச்சி நிரல் இருக்கிறதா என்பதில் இது நிறைய வருகிறது. நாட்டு அளவில் நம்மிடம் நேர்மறை விகிதம் இன்னும் 8% ஆக உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்., எனவே ஒவ்வொரு நேர்மறையான நபரையும் கண்டறிந்து கொண்டிருக்கிறோம், நாம் 12 பேரை பரிசோதிக்கிறோம். அதன் செயல்திறனை சிறு அளவில் அதிகரிப்பது கூட மிகப்பெரியதாக இருக்கும்.

இன்று அறிகுறியற்ற ஒருவர், நாளையே அறிகுறி உள்ளவராக மாறும் சாத்தியம் இருப்பதால், ‘அறிகுறியற்ற’ மற்றும் ‘முன் அறிகுறி’ உள்ளவர்கள் ஆகியோரை கலக்காமல் பார்த்துக் கொள்ள, உங்கள் ஆய்வு எவ்வாறு உதவுகிறது?

இல்லை, இந்த தரவுகளில் இருந்து அறிகுறியற்ற மற்றும் முன் அறிகுறி உள்ளவர்களை தெரிந்துகொள்ள நமக்கு வழி இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவமனை பதிவுகளுடன் இந்தத் தரவை மேலும் இணைக்க வேண்டும். இவற்றிற்கான அணுகல் நம்மிடம் இல்லை. இதை சொல்லும் போது, [அங்கு] இரண்டு விஷயங்கள் உள்ளன: இந்தியாவில் ஒரு ஆய்வு இருந்தது, இது பரிசோதனையின் போது ஏராளமான அறிகுறியற்ற நோயாளிகள் தங்கள் நோய் முழுவதும் அறிகுறியின்றி தொடர்ந்து இருப்பதைக் காட்டியது. இரண்டாவது, பரிசோதனையின் போது அவர்கள் நேர்மறை கண்டறியப்பட்டவர்கள் என்பதால், தொற்று இயக்கவியலுக்கு, இது சற்று குறைவாகவே இருக்கலாம் - முக்கியமானது என்னவென்றால், தொற்றுநோய் ஏற்பட்டுள்ள தருணத்தில் அவர்களை கண்டு பிடிப்பது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.