புதுடெல்லி: தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற ஊழியர்களின் கடுமையான பற்றாக்குறையால், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டாளர்களை வெறும் ஆலோசனைக் குழுக்களாக குறைத்து, காற்றின் தரத்தை அமல்படுத்த முடியாமல் போய்விட்டது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது

டெல்லியை சேர்ந்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB -சிபிசிபி) மற்றும் 27 மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் (SPCB -எஸ்பிசிபி) நெட்வொர்க் ஆகியன, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பணியில் உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் அமல்படுத்த வேண்டிய புதிய தேசிய சுற்றுப்புற காற்று தர நிர்ணயங்களை (NAAQS) இந்தியா நிறுவிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இது மிக மோசமான மாசுபாட்டைப் பதிவு செய்தது, அதிக எண்ணிக்கையிலான இந்திய நகரங்கள் உலகின் முதல் 20 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்தன. காற்று மாசுபாட்டால் சுமார் 16.7 லட்சம் இந்தியர்கள் இறந்தனர். தேசிய சுற்றுப்புற காற்று தர நிர்ணய அளவை இந்தியா எட்டினால், சுமார் 66 கோடி இந்தியர்கள் நீண்ட காலம் வாழ முடியும்.

இந்த தோல்விக்கான நிறுவன மற்றும் தகவல் காரணங்களை புரிந்து கொள்ள, டெல்லியை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான நீடித்த நோய் கட்டுப்பாட்டு மையம் (CCDC), லக்னோ, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், புவனேஸ்வர், விஜயவாடா, கோவா மற்றும் மும்ப என, எட்டு நகரங்களில் இருக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோருடன் விரிவான நேர்காணல்களை நடத்தியது.

ஊழியர்களின் பற்றாக்குறை, அதிகரித்த பணிச்சுமை, மாசுபாட்டின் உடல்நல பாதிப்புகள் குறித்த தவறான புரிதல், தொடர்புடைய நிறுவனங்களுடன் மோசமான ஒருங்கிணைப்பு மற்றும் ஊழியர்களிடையே குறைந்த அளவே உத்வேகம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியன, இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

"பணியாளர்கள் மற்றும் நிதிகளில் சிக்கல் பிரச்சனை எழுப்புவதைத் தவிர, மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்களை ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு பதிலாக தொழில்நுட்ப ஆலோசகர்களாக எவ்வாறு கருதுகின்றன என்பதை இந்த அறிக்கை விவாதிக்கிறது," என்று, டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான கொள்கை ஆராய்ச்சி மையத்தை (CPR) சேர்ந்த சந்தோஷ் ஹரிஷ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இது குறிப்பாக பிற முகமைகளின் அதிகார வரம்பிற்குள் வரும் ஆதாரங்களுடனான ஒரு பிரச்சினையாகத் தோன்றுகிறது, அங்கு முன்னேற ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்" என்றார்.

சட்டங்கள் மற்றும் செயல்படுத்தல்

வரும் 2024ம் ஆண்டில் நாட்டில் காற்று மாசுபாட்டை 20-30% குறைக்கும் வகையில், 2019 ஜனவரியில் ஒரு தேசிய திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் குறிப்பாக அதிக காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்காக, மத்திய அரசு சமீபத்தில் சுதந்திர வல்லுநர்கள், அதிகாரத்துவத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பிற பிரதிநிதிகள் அடங்கிய 18 பேர் கொண்ட குழுவை உருவாக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.

எவ்வாறாயினும், எந்தவொரு பசுமை முயற்சியின் வெற்றியும் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் செயல்திறனைப் பொறுத்தது என்று ஆய்வு தெரிவிக்கிறது. அவற்றில் பல தற்போது செயல்படவில்லை என்று அது மேலும் கூறுகிறது.

"சமீபத்திய சட்டம் போன்ற சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை செயல்படுத்தப்படுவதற்கு உதவும் ஒழுங்குமுறை அமைப்புகள், தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதாரங்களுடன் வலுப்படுத்தப்படாவிட்டால், அவை முந்தைய அனைத்தையும் திறனற்றதாக இருக்கும்" என்று, அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரும், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (PHFI) நிபுணருமான பார்கவ் கிருஷ்ணா கூறினார்.

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள் கீழே.

கூடுதல் பொறுப்புகள், வரையறுக்கப்பட்ட நிறுவனத் திறன்

கடந்த இரு தசாப்தங்களாக, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்களது பணியின் நோக்கம் மற்றும் அளவில் விரிவாக்கத்தைக் கண்டன, ஆனால் அவற்றின் பட்ஜெட் மற்றும் பணியாளர்கள் திறனில் அல்ல. அதன் க நிலவர கணக்கெடுப்பில், சில மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் 50% க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. ஊதியம் மிகக் குறைவாக இருந்ததுடன் பணித்திறனை தக்கவைப்பது குழுவுக்கு கடினமாக இருந்தது என்பதை அது கண்டறிந்தது.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் அத்தியாவசிய பணிகளில் ஒன்று, அனுமதிக்கப்பட்ட மாசு அளவுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது (விளக்கப்படத்தை கீழே காண்க). மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் பிராந்திய அலுவலகங்கள் வழக்கமாக இந்த பணிகளுடன், மேலும் பல பொறுப்புகளையும் கொண்டுள்ளனர். வழக்கமான ஆய்வுக்கு பயணம் தேவைப்படுவதால், இது பெரும்பாலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னுரிமைகள் பட்டியலில் குறைவாகவே இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் அதிகாரிகள் தாமதமாக ஆய்வுகள் செய்வதற்கு, ஊழியர்களின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணம் என்பதை அது கண்டது.

புதுப்பிக்கப்பட்ட தரவு இல்லாததை சுட்டிக்காட்டி, 2008ம் ஆண்டு நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையை கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆண்டுக்கு ஒரு முறை கூட ஆய்வு நடத்த முடியவில்லை என்று கூறியன. "மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு ஒரு தொழிற்சாலைக்கு சராசரி ஆய்வுக்காலம் 0.3 (2008 இல்), கர்நாடகாவில் இது 0.63 மடங்கு ஆகும்" என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஒரு தொழில் முறையே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் இரண்டு முறை சராசரியாக ஆய்வு செய்யப்படுகிறது.

குஜராத் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ‘சிவப்பு வகை’ (அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகள்) அனைத்தையும் ஆய்வு செய்தது, ஆனால் இது ஆண்டு முழுவதும் உத்தரவை பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த போதுமானதாக இருக்காது என்று அது கூறியது.

ஒரு தசாப்தத்திற்கு பிறகும் இது அதிகம் மாறவில்லை. "தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத ஊழியர்களின் விகிதத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு உள்ளது, அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக உள்ளன," என்று அது கூறியது.

“ஆம், தொழில்நுட்ப பதவிகள் உட்பட பல பணியிடங்கள் காலியாகவே உள்ளன, அந்த பற்றாக்குறை சில நேரங்களில் வாரியத்தின் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது, ஆனால் அந்த நிலைமையும் விரைவில் மேம்படும் ”என்று உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஆய்வுக்காக அதிகாரபூர்வ பதிலைக் கேட்டோம், ஆனால் பெயர் வெளியிடக்கூடாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர், வாரியம் தங்கள் ஆணைக்கு ஏற்ப செயல்பட்டு வருவதையும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுடன் தொடர்பு கொண்டு,சவால்களுக்கு மத்தியிலும் உத்தரவை அமல்படுத்துவதை பராமரித்ததாக கூறினர். ”இது மாசுபடுத்தும் ஒழுங்குமுறையின் ஒரு புதிய சகாப்தம், ஒவ்வொரு நாளும் பல புதுப்பிப்புகள் வருகின்றன, மேலும் வளர்ந்து வரும் புதிய சுற்றுச்சூழல் அமைப்பின்படி மாசு கட்டுப்பாடு வாரியங்களும் தங்களை அளவீடு செய்கின்றன," என்று அவர்கள் கூறினர்.

சிறந்த நிர்வாகிகளுக்கு கள நிபுணத்துவம் இல்லை

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் தலைமைப் பதவிகளுக்கு பொதுவாக அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் ஆய்வுகளில் நிபுணத்துவம் இல்லாத அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் - மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களைப் புரிந்துகொள்ள இதில் நிபுணத்துவம் அவசியம். இந்த நிலைகள் நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பார்க்கப்படுவதில்லை, இது மாசு கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் நோக்கத்தையும் எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிடுகிறது என்பதை குறிப்பதாக ஆய்வு கூறியுள்ளது.

பெரும்பாலும், வாரியங்களுக்கு தலைமை வகிக்கும் அதிகாரிகள் மற்ற அரசு இலாகா பொறுப்புகளையும் வைத்திருக்கிறார்கள், சில நேரங்களில் இத்தகை செயல்பாடு முரண்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்பது அரசு பிரதிநிதிகளால் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் மத்திய அரசால் அமைக்கப்படுகிறது, ஆனால் "இது ஒரு கண்காணிப்புக் குழுவாக செயல்படும் என்ற எதிர்பார்ப்புடன் முரண்படுகிறது".

காரணம் என்னவென்றால், பல்வேறு உறுப்பினர்களை மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் சேர்ப்பதற்கு தெளிவான தகுதிகள் எதுவும் விதிக்கப்படவில்லை - “சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் இருப்பது” என்ற விவரக்குறிப்பு இடம்பெறவில்லை.

கடந்த 2008 நாடாளுமன்றக்குழு அறிக்கை, தகுதி குறைந்தவர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் அதிகாரம் மிக்க பதவிகளில் இருக்க முடியும் என்பது பற்றி கவலையை வெளிப்படுத்தி இருந்தது. 2001 புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை - மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் 77% தலைவர்கள் மற்றும் 55% உறுப்பினர் செயலாளர்கள் தங்கள் பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தது.

"குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும், இந்நிலைமை அப்படியே இருந்ததாகத் தெரிகிறது" என்று சிசிடிசி ஆய்வு தெரிவித்துள்ளது.

குறைந்த உத்வேகம், பொறுப்புக்கூறல்

மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிகாரிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த பங்களிப்பு மற்றும் பொறுப்பு குறித்த குறைவான பார்வையையே கொண்டுள்ளனர். மேலும் இது அவர்களை கட்டுப்பாட்டாளர்கள் என்பதில் இருந்து வெறும் தொழில்நுட்ப ஆலோசகர்களாக மாற்றியுள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. பலருக்கு தங்கள் பொறுப்புகளின் முழு நோக்கமே தெரியாது.

கணக்கெடுக்கப்பட்ட எட்டு மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்களில் பதில் அளித்தவர்களில் எவருக்கும் வெவ்வேறு மாசு தரங்களின் வரலாறு அல்லது ஏன் அவை குறிப்பிட்ட அளவுகலில் நிறுவப்பட்டன என்பது தெரியவில்லை. இந்த தரங்களை வடிவமைப்பதற்கான செயல்முறையும் சேர்க்கப்படவில்லை, மேலும் அவற்றை செயல்படுத்துமாறு மாநில அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவர்கள் எங்களுக்கு என்ன பணி கொடுத்தாலும், அதன் நாங்கள் பின்பற்றி செய்ய வேண்டும்," என்பது ஒரு மாநில வாரிய அதிகாரி தனது பணிகளை விவரித்தார். தரங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு நிலையான இயக்க நடைமுறைகள் கூட வழங்கப்படவில்லை. "இவை அனைத்து காரணத்தில் இருந்தும் அவர்களின் பொறுப்பில் இருந்தும் பற்றின்மை உணர்வை உருவாக்கியுள்ளன" என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எந்தவொரு உண்மையான அதிகாரமும் இல்லை என்று அவர்கள் கருதுவதால், புண்படுத்தும் தொழில்களுக்கு எதிராக வாரியங்கள் கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குவதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது. நேர்முகத் தேர்வாளர்களில் ஒருவர், "குழுவில் இருந்து ஒரு குறுஞ்செய்தி மூலம்" அலகுகளில் மாசு அளவை சரிபார்க்கக் கூறப்படுவது குறித்து பேசினார்.

மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக மாநில மாசுகட்டுப்பாடு வாரியங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது கூட, சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களுடனான சட்டப்பணிகளில் செலவுகள் மற்றும் நேரம் சம்பந்தப்பட்டிருப்பதால் இணங்குவதற்கு கணிசமாக தாமதமாகிறது. "இது மாநில மாசுகட்டுப்பாடு வாரியங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது, இது குறிப்பிட்ட தடுப்பின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டில் இருப்பது தெளிவாகிறது," என்று ஆய்வு கூறியது. குற்றவாளிகளை ஊக்கப்படுத்த, சட்டத்துக்கு இணங்காதவர்களை விரைவாக அகற்றுவதை ஊக்குவிக்கும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவைப்படுவதாக, ஆய்வு பரிந்துரைத்தது.

மோசமான பல்துறை ஒருங்கிணைப்பு

பல்வேறு மாநில மற்றும் மத்திய துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமுகப்படுத்துதல் இல்லாதது என்பது, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவுகளை பெரும்பாலும் பிற துறைகள் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதாகும் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்களை ஒரு அதிகாரத்துவ தடையாகவே பார்க்கின்றன, மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் முக்கிய பங்கைக் கொண்ட அமைப்பாக அல்ல.

"மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் நீர், காற்று, ஒலி மாசுபாடு மற்றும் உயிரி மருத்துவக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். எங்களுக்கு நேரடியாக கட்டுப்படுத்தும் எந்த அதிகாரமும் இல்லை, ஆனால் தணிக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்த முயற்சிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அல்லது அதிகாரிகளிடம் மட்டுமே கேட்க முடியும். அவர்களுக்காக நாங்கள் அதை செய்ய முடியாது”என்று ஆய்வின் போது ஒரு சர்வேயரிடம், மாநில வாரிய அதிகாரி கூறினார்.

மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் தங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்து, போக்குவரத்து, காவல்துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும் போது, ​​தரங்களை அமல்படுத்துவதில் அவர்கள் தளர்வாக செயல்படுவதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2024 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டை 20 முதல் 30% வரை குறைக்கும் தேசிய தூய்மை காற்றுத்திட்டத்தின் (NCAP) கீழ், மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், இலக்கு எட்ட முடியாத 102 நகரங்களுக்கான - இவை, 2009ம் ஆண்டு தேசிய சுற்றுப்புற காற்று தர நிர்ணயங்களை மீண்டும் மீறிய நகரங்கள் - செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளன. திட்டங்களுக்கு பல்வேறு நகர துறைகளின் முயற்சிகள் தேவை. "ஆச்சரியம் என்னவென்றால், இந்த திட்டங்களில் பெரும்பாலானவை பணிகளை முடிக்க குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை" என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இது அபாயமுள்ள தீவிரமாசு அளவை கொண்டுள்ள இலக்கு எட்ட முடியாத நகரங்களில் செயல் திட்டங்களை குறைத்து செயல்படுத்துவம் விளைவை உண்டாக்குவதாக, அது மேலும் கூறியுள்ளது.

இந்த நகர செயல் திட்டங்களுக்கு சட்டபூர்வமான உத்தரவு, எல்லை கடந்த ஒருங்கிணைப்பு, நிதி, தெளிவான இலக்குகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை இல்லை என்று இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

கண்காணிப்பதில் சிறிதே நிபுணத்துவம்

நேர்காணல் செய்யப்பட்ட பல வல்லுநர்கள், மாசுபாட்டைக் கண்காணிப்பதில் தங்கள் பங்கு பற்றி பேசினர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்பட்டதைத் தாண்டி மாநிலங்கள் தங்கள் சொந்த கண்காணிப்பு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றன. ஆனால் வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன், உருவாக்கப்பட்ட தரவுகளின் தரம் மற்றும் பயன்பாடு சந்தேகத்துக்கு உரியதாகவே உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

உதாரணமாக, கண்காணிப்பு நிலையங்களைப் பார்வையிடவும், கூட்டங்களை மறுஆய்வு செய்யவும், தரக் கட்டுப்பாட்டை பகுப்பாய்வு செய்யவும், தர உத்தரவாதம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக பயிற்சித் திட்டங்களை நடத்தவும், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த பணிகளில் சில மாநில அளவில் ஒரே மாதிரியாக அல்லது செயல்திறனுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆய்வு தெரிவித்துள்ளது. கண்காணிப்பு சாதனங்களின் அளவுத்திருத்தம் ஒரு சவாலாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

எனவே, நிகழ்நேர கண்காணிப்புக்கான திறன் (எடுத்துக்காட்டாக, காற்று மாசுபாட்டின் விஷயத்தில்) ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்போது, ​​தரவு சேகரிப்பில் உள்ள இடைவெளிகள் மற்றும் மோசமான அளவுத்திருத்தத்தின் காரணமாக தவறான அளவீடுகள் குறிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, என்.சி.ஏ.பி இன் கீழ் கண்காணிக்கப்படும், இலக்கை அடைய முடியாத பல நகரங்களில் காற்றின் தர கண்காணிப்பாளர்கள் ஒரு சிறந்த எண்ணிக்கையிலான அளவீடுகளை கூட பதிவு செய்யவில்லை என்று, சிவில் சமூக அமைப்புகளான கார்பன் காப்பி மற்றும் ரெஸ்பைரர் லிவிங் சயின்சஸால் தொடங்கப்பட்ட புதிய தகவல் பலகை காட்டியது. தொழில்நுட்ப சிக்கல்கள் உட்பட பல காரணங்களால் இது இருக்கலாம்.

"நாடு முழுவதும் காற்றின் தர கண்காணிப்பு வலையமைப்பு விரிவடைந்து வருவதால், கண்காணிப்பு நிலையங்களை பராமரிப்பது மற்றும் தவறான தரவுகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

மாசுபாட்டின் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்த மோசமான புரிதல்

இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டங்களின் முக்கிய அம்சம் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாகும், ஆனால் இதுபற்றிய போதிய புரிதலும், மூலங்கள், விநியோகம் மற்றும் காற்று மாசுபாட்டின் தாக்கம் பற்றிய தவறான தகவல்களும் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்களில் நிலவுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அவர்களின் புரிதல் பற்றி கேட்டபோது, ​​நேர்காணல் செய்பவர்கள் மாறுபட்ட பதில்களை அளித்தனர். சிலர் சிக்கல்களைப் பற்றிய தெளிவான புரிதலை வெளிப்படுத்தினர், மற்றவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மேலும் சிலர் தவறான தகவல்களை கூரினர். "அறிக்கையில் திடுக்கிடும் ஒரு பதில் கிடைத்தது. பதிலளித்த ஒருவர் சாதாரணமாக 'காற்று மாசுபாடு இன்னும் நமக்கான ஒரு எச்சரிக்கை மணி அல்ல' என்றும், 'தரநிலைகள் ஐரோப்பியர்களுக்கானது, இந்தியர்கள் அல்ல' என்றும், நிறுவப்பட்ட அறிவியலுக்கு முரணான உடலியல் துறையில் வேறுபாடுகளை வரையலாம் என்றும் குறிப்பிட்டதாக, ஆய்வு கூறியது.

ஆய்வின் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் மாசு கட்டுப்பாட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஒரு எச்சரிக்கையை ஒலிப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். "நிலையை மாற்றுவது, மாசுகட்டுப்பாட்டு வாரியங்களை வலுப்படுத்துவது மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சுவாசிக்கக்கூடிய காற்று மற்றும் சுற்றுச்சூழலை நாம் அடைய வேண்டுமானால், மாசுபாடு மற்றும் உமிழ்விற்கான மூலத்தை கட்டுப்படுத்துவதில், ஒரு கட்டுப்பாட்டாளராக அவற்றின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது மிகவும் முக்கியம்," என்று, எரிசக்தி மற்றும் தூய்மைக்காற்று பற்றிய ஆராய்ச்சி மையத்தின் (CREA) இலாப நோக்கற்ற ஆய்வாளர் சுனில் தஹியா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.கருத்துகளை respond@indiaspend.org.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.