மும்பை: விவசாயத்துறை நெருக்கடிகள், வேலையின்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியன, 17 வது மக்களவை பொதுத்தேர்தலில் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளன; இதன் முதல் கட்ட வாக்குப்பதிவு, 2019 ஏப். 11இல் தொடங்கியது.

பிரதான தேசிய அரசியல் கட்சிகள், இவ்விவகாரங்களை எப்படி கையாள்வது என்பதில் வேறுபட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.), இந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI-M) ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளை இந்தியா ஸ்பெண்ட் ஆய்வு செய்து, இந்த பிரச்சினைகள், வெளிநாட்டு உறவுகள், உள்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியன குறித்து, அக்கட்சிகள் கூறியுள்ளவற்றை ஒப்பிட்டுப் பார்த்தது.

Promises Made By Bharatiya Janata Party, Indian National Congress and Communist Party Of India
Categories BJP INC CPI (M)
Farmers 1) Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana to all 2) Pension for small and marginal farmers 3) Rs 25 lakh crore investment in Agri-rural sector 4) Interest-free Kisan Credit Card loans 1) Congress promises to waive the outstanding farm loans in other States as well.2) We will present a separate “Kisan Budget.3) Recognise ownership and tenancy rights of women farmers and ensure women get the benefits of agriculture-related schemes.4) Re-design MGNREGA 3.0 1) Increase MSP to cover full costs including family labour, land rent etc., and give a return of at least 50% above costs (C2+50).2) crop insurance scheme to cover all types of risks for crop and cattle covering all farmers including tenant farmers and sharecroppers with additional subsidies for small and marginal farmers.3)Extend labour subsidy to the small and marginal farmers under MNREGS.
National Security 1) We will only continue our policy of ‘Zero Tolerance’ against terrorism and extremism.2) We will speed up the purchases of outstanding defence related equipment and weapons. In order to equip the Armed Forces with modern equipment.3) Armed Forces will start planning for the resettlement of soldiers three years before their retirement" 1) Defence spending is increased to meet the requirements of the Armed Forces.2) defence of the territory to include data security, cyber security, financial security, communication security3) rapidly expand domestic capacity to manufacture defence and security equipment.4) Congress will establish the office of Chief of Defence Staff (CDS) to be the principal adviser to the Government on matters relating to defence. 5) Congress promises to ensure increased representation of women to achieve a minimum of 33% in the force strength of CISF, CRPFand BSF.6) We will set up a Committee to draft new Service Rules for personnel of the CAPFs"1) Creating a national security apparatus, which will work within the framework of the parliamentary democratic system. 1) Creating a national security apparatus, which will work within the framework of the parliamentary democratic system.
Foreign Relations 1) We will make knowledge exchange and transfer of technology for the development of all countries a major focus of our diplomatic relations. 2) We will create an institutional mechanism to deepen the relationship between culture and heritage with people of Indian origin, and to regularly engage with them. 1) Congress promises to establish a National Council on Foreign Policy consisting of members of the Cabinet Committee on Security, scholars, domain experts and diplomats to advise the Government on matters concerning foreign policy2) Congress promises to increase significantly the size of the Foreign Service, induct domain experts 1) An independent and non-aligned foreign policy, promoting multi-polarity. Strengthen BRICS, SCO and IBSA. Reactive SAARC and strengthen ties with the countries in our immediate neighbourhood. 2) Opposing interventions and regime changes imposed by the United States as is happening in Venezuela and in many countries in Latin America. 3) Reverse the pro-Israeli tilt in foreign policy. 4) Special efforts to build relations and ties with Bangladesh and settle the Teesta water agreement. Address the concerns of Rohingyas who continue to remain as state-less."
Jobs Infrastructure construction will lead to more job creation. 1) Congress will fill all 4 lakh Central Government and institutional vacancies before March 2020. 2) Congress will create a new Ministry of Industry, Services and Employment. 3) Congress pledges to create lakhs of new jobs for qualified teachers, doctors, nurses, paramedics, technicians, instructors and administrators through a massive expansion of the education and health sectors 4) We will provide financial incentives to businesses that employ a certain percentage of women. 5) We recognise the need to create lakhs of low skilled jobs in order to absorb young men and women who have completed only a few years in school. 6) Increase the guaranteed days of employment up to 150 days under NREGA 1) Provision of jobs or unemployment allowance. 2) Lift the ban on recruitment in central government and state government services. All vacant posts to be filled in central and state governments within a time-bound framework. 3) Special packages to support labour-intensive industries in creating jobs. Enactment of legislation for employment guarantee in all urban areas. 200 days of work under MGNREGS to be assured; the list of permissible works under the MNREGA to be expanded to include all activities that improve the quality of life in rural areas.
Infrastructure 1) We will aim at next-generation infrastructure which will include gas grids and water grids, i-ways, regional airports and wayside amenities along National Highways. 2) We will launch a National Urban Mobility Mission to provide technology-based urban mobility solutions to all urban local bodies and increase the use of public transport, enhance walkability and cycle use. 3) In the next five years, we will ensure that 50 cities are covered with a strong metro network. 4) We will launch ‘Jal Jivan Mission’ under which we will introduce a special programme, ‘Nal se Jal’ to ensure piped water for every household by 2024. 5) We will double the length of National Highways by 2022. We will construct 60,000 kms of National Highways in the next five years. 6) We will create all viable rail tracks to broad gauge, complete the dedicated freight corridor, l equip all main railway stations with Wi-Fi facility by 2022. 7) Double the number of airports in the country 8) We will double our capacity in the next five years. 8) Every Gram Panchayat will be connected with high-speed optical fibre network by 2022." 1) We will formulate a policy on Clean Energy in existing power plants that use fossil fuels and promote Green Energy to enhance the share of solar and wind energy in the total supply of energy 2) Congress promises to massively modernise all outdated railway infrastructure. 3) Congress promises to enhance the availability of, and access to, electricity in rural areas by encouraging investment in off-grid renewable power generation with ownership and revenues vesting in local bodies. 3) Congress promises the Right to Housing for the urban poor and protection from arbitrary eviction. 4) Congress will launch a Slum Upgradation and Transformation Scheme to ensure basic services such as drinking water, electricity and sanitation to slum dwellers. 5) Congress promises to establish a non-lapsable Rural Infrastructure Fund that will provide loans and grants to specific infrastructure projects undertaken by Panchayats and Municipalities 6) We will pass the Right to Homestead Act to provide a homestead for every household that does not own a home or own land on which a house may be built.8) Public spaces, public transport, public premises and other public facilities in towns and cities will be made safe for women, children, persons with disabilities, migrants and marginalised sections of society. More women will be appointed to government and municipal jobs in towns and cities. Reversal of privatisation of defence production sector; immediately taking measures to rescind private participation in defence production; stopping FDI inflows in defence sector; strengthening and expanding State-owned defence industry to achieve self-reliance in defence. Changing telecom policies to promote telecom penetration and connectivity in rural areas; strengthening the public sector telecom companies BSNL and MTNL and allocating necessary spectrum for them to upgrade their services.Increasing broadband penetration and universal affordable access to the internet. Reviewing of privatisation of infrastructure through the PPP route.Rescind the orders for the private maintenance and up-gradation of airports. No further PPPs in domestic airports already modernised by Airport Authority of India. Placing emphasis on rural infrastructure; increased outlays on rural roads, electrification etc
Health We will take it forward and set up one Medical College or Post Graduate Medical College in every district, through public or private participation, by 2024. We will endeavour to make the National Nutrition Mission a mass movement and strengthen infrastructure and capacity in all Anganwadis. We have rolled out a Special Mission to eliminate TB from India by 2025. Congress promises that the total government expenditure on healthcare will be doubled to 3 % of GDP by the year 2023-24. 2. Congress promises to enact the Right to Healthcare Act that will guarantee to every citizen. Congress promises to implement the National Mental Health Policy, 2014 and the Mental Health Care Act, 2017 in letter and spirit. We will ensure that all vacancies at all levels in PHCs and in public hospitals are filled within a period of 1 year. 5) We will expand the ASHA programme and appoint a second ASHA worker in all villages with a population exceeding 2500 persons. Make the right to free health care justiciable through the enactment of appropriate legislation both at Central and State levels. Public expenditure on health to be raised to at least 3.5 % in the short term and 5 % of the GDP in the long term, which would include a significantly enhanced allocation from the Centre. Strengthening, expanding and reorienting the public health system so that it is accountable to local communities and guarantees free and easy access to a range of comprehensive health care services. Build and actively promote a predominantly public health system based framework for the provision of universal health care. Scrap the PMJAY under the ‘Ayushman Bharat’ scheme based on the discredited ‘insurance model’. Ensure right based access to comprehensive treatment and care of persons with mental illness through the integration of the revised District Mental Health Programme with the National Health Mission. Controlling price of essential drugs by adopting a cost-based pricing formula; minimum cost-MRP margin and removal of all taxes on medicines in National List of Essential Medicines (NLEM); reduce huge excise duty on medicines by reversing from MRP-based to the cost-based collection.

Source: Bharatiya Janata Party (BJP), the Indian National Congress (Congress) and the Communist Party of India (Marxist)

வேலையின்மை

வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கு பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது. காலி அரசு பணியிடங்களை நிரப்புதல், சுகாதார மற்றும் கல்விச் சேவைகள் போன்ற சமூக உள்கட்டமைப்புகளில் அதிக வேலை உருவாக்குவது போன்றவற்றில் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. வெற்றிகரமாக 100 நாள் திட்டம் செயல்படுத்தப்பட்ட கிராமப்புறங்களில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் (MGNREGS) வேலைவாய்ப்பு நாட்களை 100 நாள் என்பதை 150 நாட்களாக அதிகரிக்க, காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கிறது. மறுபுறம் மார்க்சிஸ்ட் கட்சி, வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு உதவித் தொகை, பணி நியமனங்களில் நிலவும் தேக்க நிலையை அகற்றுதல், நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிப்பது ஆகியன இடம் பெற்றுள்ளன.

விவசாய நெருக்கடிகள்

பா.ஜ.க. தனது திட்டங்களான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாமற்றும் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா போன்றவற்றை தொடர திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ-எம் இரண்டுமே தற்போதைய வடிவில் உள்ள பசல் பீமா யோஜனா திட்டத்தை அகற்றுவதாக உறுதி அளித்துள்ளனர்; தற்போது இத்திட்டத்தால் விவசாயிகளை விட காப்பீடு நிறுவங்களே அதிகம் பயன்பெறுவதாக அவை கூறுகின்றன.

திட்டத்தை சீரமைப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளிக்கிறது, மேலும் அனைத்து கடன் வட்டியையும் தள்ளுபடி செய்கிறது. வேளாண் திட்டங்களில் இருந்து பயனடைவதன் மூலம் பெண் விவசாயிகளின் உரிமை மற்றும் குத்தகை உரிமைகளை அங்கீகரிப்பதற்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் செய்துள்ளது. விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு சிறப்பு 'விவசாய பட்ஜெட்' தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

சிபிஐ - எம் கட்சியும் கடன் தள்ளுபடி அளிப்பதாக கூறியுள்ளது. அத்துடன், செலவினம் முழுவதையும் ஏற்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க உறுதி தந்துள்ளது; அது, குடும்ப உழைப்பு, நில வாடகை மற்றும் பலவற்றையும் சேர்த்து, அது குறைந்தது செலவில் 50% கொண்டிருக்கும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான விவசாயிகள் தேசிய ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த வாக்குறுதிகளை இக்கட்சி அளித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையுடன் இருக்காமல் தக்க பதிலடி மற்றும் பாதுகாப்பு துறைக்கான கொள்முதலை விரைவுபடுத்துவது என பாஜக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், “மேக் இன் இந்தியா” திட்டத்தில் பாதுகாப்புத்துறை தடவாடங்கள் உற்பத்தி செய்து, அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அது நம்புகிறது.

காங்கிரஸ் கட்சியோ, பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களை உருவாக்க உள்நாட்டு திறன் வளர்க்கப்படும் என்கிறது. தரவு பாதுகாப்பு, சைபர் எனப்படும் இணையதள பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பின் விரிவாக்கத்தையும் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

இரு கட்சிகளும் தேசியப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படைகளின் நலனை உறுதி செய்வதாக உறுதியளித்துள்ளன. ஓய்வுக்கு மூன்று ஆண்டு முன்பே ஆயுதப்படை பணியாளர்களுக்கு மீள்குடியேற்ற வசதி வழங்கப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அவர்கள் மென்திறன் கற்றுக் கொள்ள, உயர்கல்வி, வீட்டு வசதி மற்றும் ஒரு நிறுவனத்தை தொடங்க நிதியுதவி பெற முடியும் என்று உறுதி தந்துள்ளது.

மத்திய ஆயுதக்காவல் படையின் ஊழியர்களுக்கான புதிய சேவை விதிகளை உருவாக்குவதற்கு, ஒரு குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி உறுதி தந்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றின் எண்ணிக்கையில் குறைந்த பட்சம் 33% பெண்களை பிரதிநிதித்துவம் தரப்படும் என்றும் அது வாக்குறுதி தந்துள்ளது.

சுகாதாரம்

அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சுகாதார வசதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 3 சதவிகிதத்தை 2023-24 ஆம் ஆண்டுககுள் சுகாதாரத்திற்கு என அதிகரிக்கப்படும்; மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார உரிமையை அறிமுகப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. காப்பீட்டு அடிப்படையிலான மாதிரி "உலகளாவிய சுகாதாரத்தை வழங்குவதற்கு முன்னுரிமை மாதிரி இருக்க முடியாது" என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, "இலவச பொது மருத்துவமனைகள்மாதிரியை ஊக்குவித்து செயல்படுத்தவும்" உறுதி தெரிவித்துள்ளது. மேலும் முதன்மை மருத்துவ பராமரிப்பு முறைகளை வலுப்படுத்துகிறது.

இந்த அணுகுமுறையின் எதிரொலிப்புகள் சி.பி.ஐ.- எம். கட்சி தேர்தல் அறிக்கையிலும் காணப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சியும் அளித்துள்ள வாக்குறுதியில், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு (மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்) ஊதியத்திய உறுதி செய்வதோடு, 2,500 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு ஆஷா ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. ஆயுஷ்மன் பாரத் யோஜனா அல்லது தேசிய சுகாதாரத் திட்டம் எனப்படும் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை ஆதரிக்கிறது. தேசிய ஊட்டச்சத்து குறிக்கோளின் கீழ் ஒரு மக்கள் இயக்கத்தை தொடங்க உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலும் அகற்ற விசேஷமான பணியை மேற்கொள்வதாகவும் அது உறுதி தந்துள்ளது.

சிறப்பு கவனம் பெறும் பகுதிகள்:

பாஜக

ஆளும் பா.ஜ. கட்சியானது, அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து, அயோத்தியில் ராமர் கோயிலின் துரிதமான கட்டுமானப் பணிக்காக தேவையான அனைத்து முயற்சிகளையும் அது ஆராயும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இக்கட்சி "சபரிமலை தொடர்பான நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு சடங்குகள் ஆகியவற்றை உறுதி செய்ய, உச்சநீதிமன்றத்திற்கு முன் ஒரு விரிவான முறையில் நடவடிக்கை எடுக்கும்" என்று உறுதி அளித்துள்ளது. இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளில் அரசியலமைப்பு பாதுகாப்பு தந்து காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படும் அரசியலமைப்பின் 370வது பிரிவு மீதான தனது நிலைப்பாட்டை அது மீண்டும் வலியுறுத்தியது. நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு சலுகைகளை வழங்க ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் இந்திய அரசியலமைப்பின் 35-ஆவது விதி ரத்து செய்யப்படும். இது, காஷ்மீரின் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை நிரந்தரமான பெண்கள் திருமணம் செய்து கொள்வதால், சலுகைகளை அந்த பெண்கள் இழப்பார்கள் என, அவர்களுக்கு எதிராக பாரபட்சமாக இருப்பதாக, பா.ஜ.க. வாதிடுகிறது.

"மாநிலத்தின் வளர்ச்சிக்கு 35ஆவது பிரிவு ஒரு தடையாக உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. குறிப்பிட்டுள்ளது. "காஷ்மீரி பண்டிதர்களின் பாதுகாப்பான வருவாயை உறுதி செய்ய முயற்சி செய்வோம்; மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POJK) மற்றும் சாம்பில் இருந்து அகதிகளை மீளமைப்பதற்கு நிதியுதவி வழங்குவோம்" என்றும் தெரிவித்துள்ளது.

இது பொது சிவில் சட்டத்தை உறுதிப்படுத்துகிறது, குறிப்பாக பாலின சமநிலையை அடைவதற்கான வழிமுறையாக இதை பார்க்கிறது.

2019ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்காக செலவிடுதல் என்ற பா.ஜ.க.வின் 2014 தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதி தற்போதைய அறிக்கையில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்ற 2014 ஆம் ஆண்டிற்கான வாக்குறுதி, இம்முறை குறிப்பிடப்படவில்லை. மாறாக, மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான பிரத்யேக பயிற்சி நிறுவனங்கள் மற்றும் சிறிய உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்ற 2014 ஆம் ஆண்டின் வாக்குறுதியும், 2019 தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறவில்லை.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) தடை செய்வதாக 2014 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவித்தது. இது 2014 ஆம் ஆண்டில் ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது. சிறிய வணிகர்களுக்கான நல வாரியத்தை உருவாக்கப்படும் என்று தற்போதைய தேர்தல் அறிக்கையில் உறுதி தரப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்பட்ட பல ஒப்பந்தங்களை, குறிப்பாக ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

அனைத்து அரசு அமைப்புகள், பகுதி அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் வேறுபாட்டை மதிப்பீடு செய்து உறுதிப்படுத்த ஒரு "பன்முகத்தன்மை சுட்டெண்" அறிமுகப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வீடு, விடுதி, கிளப் போன்ற பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தில் மத, சாதி, பாலினம் அல்லது மொழி அடிப்படையில். பாகுபாட்டைத் தடுக்க, ஒரு 'பாகுபாடு எதிர்ப்பு சட்டத்தை' நிறைவேற்றுவதாகவும் இது உறுதி தந்துள்ளது.

நாட்டில் வறுமையை 2030ஆம் ஆண்டுக்குள் அகற்றும் நோக்கில் 20% ஏழ்மை குடும்பங்களுக்கு ‘நியுத்தம் ஆய் யோஜனா - நியாய் ((NYAY) என்ற திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் மூலம் 5 கோடி ஏழ்மை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. குடும்பத்தில் உள்ள பெண்ணின் வங்கி கணக்கில், இந்த பணம் வரவு வைக்கப்படும்.

புதிய சிக்கல்கள்

காங்கிரஸ் மற்றும் சிபிஐ- மார்க்சிஸ்ட் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சில பிரச்சினைகள் பற்றி அறிமுகப்படுத்தியுள்ளன; அவை பா.ஜ.க. அல்லது வேறு எந்த கட்சியின் அறிக்கையிலும் இடம்பெறவில்லை.

எல்.ஜி.பி.டி. உரிமைகள்

காங்கிரஸ் கட்சி, நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கில் தீர்ப்பை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதாக கூறியுள்ளதோடு, அடுத்த நடவடிக்கை ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதாக கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள 2018 ஆம் ஆண்டின் திருநங்கைகள் மசோதாவை உடனடியாக திரும்பப் பெறும் என்று, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாறாக, ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் உணர்வில் நாட்டம் உள்ளவர்கள், திருநங்கையர், ஆகியோரை உள்ளடக்கிய சமூகமான எல்.ஜி.பி.டி.(Lesbian, Gay, Bisexual, Transgender, Queer, Intersex, Asexual ) உரிமைகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

திருமண உறவு போலவே ஒரே பாலின ஜோடிகளுக்கான- ஒரு 'சிவில் யூனியன்', 'ஒரே பாலின-கூட்டு' - சிறப்பு திருமணச் சட்டம் 1954 ன் கீழ் அவர்களுக்கு அங்கீகாரம் தரப்படும் என்று சி.பி.ஐ - எம். உறுதியளித்துள்ளது. இந்தகைய பார்ட்டனர், சார்ந்திருப்பவராக வகைப்படுத்தப்பட்டு, வாரிசு, பரம்பரையாக கருத நடவடிக்கை எடுக்கப்படும். எல்.ஜி.பி.டி.நபர்களுக்கு எதிரான குற்றங்கள் எல்.ஜி.பி.டி. அல்லாத நபர்களுக்கு எதிரான குற்றங்களை போலவே கருதும் வகையில் சட்டம் உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

தொழிலாளர்கள் உரிமைகள்

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization - ILO) மாநாடு 87 (சுதந்திர அமைப்பு) மற்றும் ஐ.எல்.ஓ. உடன்படிக்கை 98 ( ஒழுங்கமைத்தல் மற்றும் கூட்டு உரிமைபேரம்) ஆகியவற்றை இது உறுதிப்படுத்தும். தெரு வியாபாரிகள் (தெரு வியாபாரிகள் வாழ்வாதார பராமரிப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2014 செயல்படுத்தப்படும் என்றும் உறுதி தந்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டத்தை கடுமையான அமலாக்கம் செய்து, ஒப்பந்த வேலை மற்றும் தற்காலிக பணிக்கு ஊக்கமளிக்க, சி.பி.ஐ- எம். உறுதியளித்துள்ளது.

ஒரே பணியை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்த தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் கிடைக்க நடவடிக்கை, பணிகளை அவுட்சோர்சிங் முறையில் வெளியே தந்து தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல் தடுக்கப்படும் என்று சி.பி.ஐ.-எம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களை பாதுகாத்தல் மற்றும் போலி செய்திகளுடன் போராட்டம்

ஊடகங்களின் ஏகபோகங்களைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் ஒரு சட்டத்தை இயக்கும்; ஊடகங்கள் பல்வேறு பிரிவுகளின் குறுக்கு உரிமையாளராகுதல், மற்ற வணிக அமைப்புகளால் ஊடகங்களை கட்டுப்படுத்துவது தடுக்கப்படும். மோதல்கள் நிகழும் பகுதிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் அல்லது புலனாய்வின் போது அவர்களின் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்; ஆபத்தான சூழலில் பத்திரிகையாளர் உயிருக்கு அச்சுறுத்தல் நேராவண்ணம் பாதுகாக்க, மாநில அரசுகளுடன் இணைந்து கொள்கை வகுக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. போலி செய்தி மற்றும் பணம் கொடுக்கப்படும் செய்திகள் போன்றவற்றை கையாள, உரிய அதிகாரம் கொடுப்பதற்காக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சட்டம் திருத்தப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

ஆதார் நீக்கப்படுமா?

2016 ஆம் ஆண்டின் ஆதார் சட்டம் திருத்தப்படும் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. அரசு திட்டங்கள், சலுகைகள், மானியங்கள், நிதி சேவை பெற ஆதார் கட்டாயம் என்பது கட்டுப்படுத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கும் ஆதார் அட்டை பயோமெட்ரிக் சரிபார்ப்புகள் என்ற முறை அகற்றப்படும் என சி.பி.ஐ.-எம் கூறியுள்ளது. அத்துடன் பொது வினியோக முறைக்கு (பொது வினியோக திட்டம் என்பது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக பலவீனமுள்ள பிரிவினருக்கு, உணவு மற்றும் உணவுசாராத பொருட்களை மானிய விலையில் அரசால் வழங்கும் திட்டம்) ஆதார் இணைப்பு என்பது அகற்றப்படும் எனவும் கூறியுள்ளது.

சட்டங்களை நீக்குவது

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக உள்ள சிலவகை சட்டங்களை நீக்குதல் அல்லது அதில் உரிய திருத்த செய்ய வேண்டும் என்று காங்கிரசும் சிபிஐ-எம் இரண்டுமே உறுதி அளித்திருக்கின்றன.

இரு கட்சிகளுமே ‘அவதூறு’ ஒரு குற்றம் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499 மற்றும் ‘தேசபக்தி’ என்ற பெயரில் வழக்கு தொடர வழி வகுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவு நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளன.

இக்கட்சிகள், ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்1958ஐ திருத்தவும் முன்மொழிகின்றன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விசாரணை இல்லாமல் தடுத்துவைக்க அனுமதிக்கும் சட்டங்களை “ஒருமித்த கருத்தோடு திருத்துவோம்; அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் மாநாடுகள் அடிப்படையில்" என்று கூறியுள்ளன.

சித்திரவதை தடுப்பு சட்டத்தை அமலாக்க காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. காவல் அல்லது விசாரணையின் போது மூன்றாம் நிலை முறைகளை பயன்படுத்துவதை தடைசெய்வதற்கும், சித்திரவதை, கொடூரம், மற்றும் பிற போலீஸ் நடவடிக்கைகளில் தண்டிப்பதை இது தடுக்கும்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் மூத்த ஆய்வாளர்).