பெங்களூரு: பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி பாரதிய ஜனதா (பா.ஜ.க.) வேட்பாளராக, அனந்தகுமாரின் மனைவி தேஜேஸ்வரிக்கு பதிலாக, தேஜஸ்வி சூர்யா, 28, அறிவிக்கப்பட்டதும் மிகவும் சர்ச்சை எழுந்தது. அனந்த்குமார் கடந்த ஆறு தேர்தல்களில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வழக்கறிஞரான சூர்யா, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் செயலாளர் ஆவார். பாஜக இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா பொதுச்செயலாளர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களில் மிகவும் இளையவராக உள்ளார்.

சூர்யா தனது உரையில், “மோடியுடன் இல்லாதவர்களை” குறிப்பிட்டு “இந்திய எதிர்ப்பாளர்கள்” என்று குறிப்பிட்டு பேசி, சர்ச்சைகளை எதிர்கொண்டவர். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் தனது எதிர்ப்பை ட்வீட் செய்து - பின்னர் ட்வீட்டுகளை மட்டும் நீக்கினார்- மற்றும் "முஸ்லீம் வாக்கு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது" ஜெயநகரில் பா.ஜ.க. தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். பாலியல் துன்புறுத்தல் வழக்கில், ஊடகங்களுக்கு எதிரான ஒரு உத்தரவு கடிதம் பெற சிவில் நீதிமன்றத்தை அணுகினார். சூர்யாவின் அரசியல் வாழ்க்கையை அழிக்க அரசியல் ரீதியாக இந்த வழக்கு தொடரப்பட்டதாகக்கூறி, இவ்வழக்கை அண்மையில் பெண்கள் ஆணையம் கைவிட்டது.

இந்தியா ஸ்பெண்டிற்கு மின் அஞ்சல் வழியே அவர் அளித்த பேட்டியில் பிரதமருக்கு எதிரானவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தில் நிற்பதாகவும், மத்தியில் இரண்டாவது முறை தமது கட்சிக்கான வெற்றி வாய்ப்பு, தன்னை வேட்பாளராக அறிவித்ததில் உள்ள சர்ச்சைகள் பற்றி விவரித்தார்.

நீங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதானது. கடந்த முறை வேட்பாளராக இருந்த, காலஞ்சென்ற அனந்த்குமாரின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய சூழலில் பெங்களூரில் உங்கள் வெற்றி வாய்ப்புகளை மதிப்பிடுவது எப்படி?

பெங்களூரு தெற்கு போன்ற புகழ்பெற்ற தொகுதியை பிரதிநிதித்துவம் செய்ய, பாஜக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஆசீர்வாதமாக கருதுகிறேன். காலஞ்சென்ற ஆனந்த குமார் பொது வாழ்க்கையில் என் வழிகாட்டியாகவும், குருவாகவும் இருந்தவர். தேவனஹள்ளி விமான நிலையம் அல்லது புறநகர் ரயில் திட்டமாகட்டும் தொகுதிக்கும், இந்த நகரத்திற்கும் அவரது பங்களிப்பு மகத்தானது.

கடந்த ஆறு முறை பாஜகவை தேர்ந்தெடுத்ததில் பெங்களூரு மக்கள் பெரும் நம்பிக்கை காட்டியுள்ளனர். என்னால் ஒன்று மட்டுமே சொல்ல முடியும்; நீதிபதி கே.எஸ். ஹெக்டே, சமூக சீர்திருத்தாளர் டி.ஆர்.ஷமன்னா, சுதந்திர போராட்ட வீரர் வி.எஸ்.கிருஷ்ண ஐயர், நிர்வாகி குண்டு ராவ், வெங்கடகிரி கவுடா மற்றும் கட்சியை கட்டமைத்த மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அனந்த்குமார் போன்றவர்கள் நின்ற தொகுதியில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இளம் வேட்பாளராக உங்கள் பார்வை என்ன? நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள்? நீங்கள் எதற்கு முன்னுரிமை தரப்போகிறீர்கள்?

பெங்களூர் ஒரு தனித்துவமான நகரமாகக் கருதப்படுகிறது, இது 1537 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்டது, இது இந்தியாவின் ஸ்டார்ட்- அப் தலைநகராகும். போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சிக்கல்களுக்கான தொழில்நுட்ப உந்துதல் தீர்வுகள் நமக்கு தேவை என்று நான் நினைக்கிறேன்.

நகர்ப்புற பிரச்சினைகளை தீர்க்க ஒரு தனிப்பட்ட திட்டம், புதிய பெங்களூருவுக்கு தேவை. நகர்ப்புற திட்டமிடலுக்கு ஒரு கெம்ப் கௌடா நிறுவனத்தை ஏற்படுத்த திட்டமிடுவேன்; இது, பெங்களூருவுக்கு தனித்துவமான சிக்கல்களுக்கான தீர்வுகளை புதுமைப்படுத்தும் ஒரு சிந்தனையாகும்.

"நீங்கள் மோடியுடன் இருந்தால் நீங்கள் இந்தியாவுடன் இருக்கின்றீர்கள், மோடியுடன் இல்லாவிட்டால் நீங்கள் இந்தியாவை எதிர்த்துப் போராடுவீர்கள்" என்று முன்பு கூறியதில் நீங்கள் இன்னமும் உறுதியாக இருக்கிறீர்களா? அதுபற்றி பின்னர் விளக்கம் தந்தீர்கள். ஆனால், நீங்கள் வருத்தமும் தெரிவித்தீர்கள். வரலாற்று ரீதியாக பாஜகவை ஆதரித்த வாக்காளரை அது பிளவுபடுத்தவில்லையா?

நான் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன், அந்த பேச்சு நிகழ்த்தப்பட்டது. எனவே, அது தேர்தலுக்கு முரணாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இன்னமும் எனது அந்த நிலையில் நிற்கிறேன்.

அந்த அறிக்கையானது வேறுபட்ட மேடையில் தயாரிக்கப்பட்டு இப்போதைய சூழலுக்கு எடுக்கப்பட்டுள்ளது. யாரும் இந்த நாட்டில் யாரையும் விமர்சிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் பிரதமரை பற்றிய வெறுப்பு பேச்சுகள், நாட்டிற்கும் இந்தியாவின் கருத்துக்கும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. மோடிக்கு காட்டும் எதிர்ப்பானது இந்திய நாட்டின் மீதான எதிர்ப்பாக மாறுகிறது. அதைத்தான் நான் எதிர்க்கிறேன்.

பெங்களூரு தெற்கில் பா.ஜ.க. வலுவான பிராமண ஆதரவைக் கண்டது. அகில கர்நாடகா பிராமணா மகாசபா பொதுச் செயலாளர் "அனைத்துத் தேர்தல்களிலும், கட்சியை பார்க்காமால் நாங்கள் பிராமண வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்" என்று கூறினார். சாதி அடிப்படையிலான ஆதரவைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? ஏனெனில், 2014இல் உங்கள் கட்சி வாக்களித்தபடி, முன்னேற்றம் சார்ந்த செயற்பட்டியலில் கவனம் செலுத்துவதற்கான போக்கு உள்ளதா?

எந்தவொரு மதத்தாலும் எனது சாதியை அடிப்படையாகக் கொண்டு எனக்கு ஆதரவளிக்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பெங்களூர் தெற்கு தொகுதி, சாதி அடிப்படையில் எனக்கு வாக்களிக்கவில்லை. 28 வயது வழக்கறிஞராக என்னை, தங்களது தொகுதி பா.ஜ.க வேட்பாளராக என்னை சந்திக்கிறார்கள். என் பிரச்சாரத்தின்போது, என் வயதில் தமக்கு மகன் இருப்பதாக வயதானவர்கள் என்னிடம் பாசத்தோடு சொன்னார்கள். இளைஞர்களும் என்னை தங்கள் சகோதரனாக கருதுகின்றனர்; நாடாளுமன்றத்தில் இளைஞர் மற்றும் கன்னடர்களின் குரலாக என்னுடையது இருக்கும் கருதுகிறார்கள். என் பிரச்சாரத்தின் நோக்கம், எப்போதுமே நகரத்தை மேம்படுத்துவதற்காக பார்வையில் தான் உள்ளது.

பெங்களூர் தெற்கு (879) பாலின விகிதம் பெங்களூர் மாவட்ட சராசரி (916) விட குறைவாக உள்ளது. பெங்களூர் தெற்கு (நகர்ப்புற) 799 இல் உள்ளது, பெங்களூரு கிழக்கு, வடக்கு, மற்றும் ஏனெக்கல் துணை மாவட்டங்கள் உட்பட அனைத்திலும் மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்பிரச்சினையை சமாளிக்க எப்படி திட்டமிடுவீர்கள்?

நாட்டின் வளைந்த பாலின விகிதம் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு மேம்படுத்தும் திட்டங்களில் ஒன்று தான், 'பேடி பச்சோவ், பேடி பத்ஹோ' [பெண் குழந்தையை காப்பாற்றுதல்; பெண் குழந்தை கல்வி கற்றல்] திட்டம். நான் பெங்களூரு தெற்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால், பெங்களூரு நகர மற்றும் தெற்கில் பாலியல் விகிதம் பற்றி விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, பொதுமக்களிடையே உரையாற்றுவேன்.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் தொகுதிக்கு போதுமான தண்ணீர் அணுகல் மற்றும் அதன் தரத்தை உறுதி செய்வதற்கான உத்தியை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா?

பெங்களூருவின் தண்ணீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பரவலாக உள்ளன. உதாரணமாக, நமது நீர்வளங்களை தூய்மைப்படுத்துவதற்கு அம்ரூட் நிதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். மழைநீர் சேமிக்கும் அலகுகளை மானியத்தில் வழங்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். கோதாவரி-காவேரி நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு சிறப்பு கவனம் தேவை.இந்த திட்டத்திற்கு பங்களிக்க விரும்புகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி (MPLADS) செலவிடுவதல் பெரும்பாலும் நல்ல குடிநீர் அணுகலுக்கான திட்டங்களுக்காக சென்றிருப்பதை காணலாம். அந்த வழிகளையே நானும் நினைக்கிறேன். தண்ணீர் தரத்தை உயர்த்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கங்கை போன்ற பெரிய நீரைத் தூய்மைப்படுத்தினால், ஏன் நம் ஏரிகளை நாம் சுத்தம் செய்ய முடியாது? அது சாத்தியமாகும்.

பாலகோட் தாக்குதல்கள், பாஜகவின் வாய்ப்புகளை மேம்படுத்திவிட்டதாக சில ஆய்வுகள் கூறியுள்ளன; மற்றவர்கள் வேறுவிதமாகக் கூறினர். கர்நாடகா மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த அளவில் உங்கள் கட்சியின் வெற்றிவாய்ப்பை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? உங்கள் தொகுதியில் என்ன நிலவரம்?

உஜ்ஜவாலா திட்டம் (தூய்மையான சமையல் எரிவாயு திட்டம்) என்பதன் மூலம் பல குடும்பங்கள் (சுமார் 6 கோட் மக்கள்) எல்பிஜி சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளதாகட்டும் அல்லது, ஜன் தன் யோஜனா (நிதி சேமிப்பு திட்டம்) மூலம் 35.3 கோடிக்கும் அதிகமான தனி நபர் வங்கி கணக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றினார்.

நாட்டிலும் மற்றும் கர்நாடகாவிலும் இப்போது ஒரு பெரிய மோடி அலை உள்ளது. மே 23 (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) அன்று கர்நாடகவில் பா.ஜ.க. பெரும் வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சமீபத்தில் ஊடகங்களுக்கு எதிரான நீங்கள் ஒரு வாய்ப்பூட்டு உத்தரவை பெற்றீர்கள். அதை உயர்நீதிமன்றம் நீக்கியது. நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் என்ன?

நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, எனது தேர்தல் எதிரிகள் எனக்கு எதிராக ஒரு பிரசாரத்தை கிளப்பிவிட்டனர். இந்த நாட்டிந் ஒரு குடிமகனாக, என் பெயர் பொய்யான தகவல்களுடன் களங்கப்படுவதாக உணர்ந்தால், நீதிமன்றத்தை அணுகுவதற்கு என் உரிமை உள்ளதாக கருதினேன்.

மேலும், அது ஒரு வாய்ப்பூட்டுக்கான ஒரு உத்தரவல்ல. அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை எழுதவோ, வெளியிடவோ வேண்டாமென்று ஊடகங்களை நீதிமன்றம் தடுத்தது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியது மற்றும் எனக்குத் தொந்தரவு கொடுத்தால் தேர்தல் ஆணையத்தை அணுகுவதற்கு எனக்கு அதிகாரம் அளித்தது. கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர், கர்நாடக மகளிர் ஆணையமும் இவ்வழக்கை கைவிட்டது. முதன்முதலில் வழக்கு ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான காரணம், அது 100% அரசியல் உந்துதலாக இருந்தது. இந்த முடிவுக்கு வரும்; உண்மைகள் நமக்கு முன்னால் உள்ளன.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.