பெங்களூரு: கடந்த 2017 செப்டம்பரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஒரு தீவிர இந்துத்வா குழுவினரால் கொல்லப்படும் வரை, 54 வயதான நடிகர் பிரகாஷ் ராஜ் பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் நடித்து கொண்டு மட்டும் தான் இருந்தார். கவுரி கொலைக்கு பிறகு வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகிறார்; குறிப்பாக ட்விட்டரில், அதிக அளவில் குரல் எழுப்புகிறார். கவுரி லங்கேஷ் கொலையில் தார்மீக ‘குற்ற’ உணர்வு இருப்பதாக, அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார் பிரகாஷ் ராஜ்.

2018 டிசம்பர் 30இல் சுயேச்சை வேட்பாளராக 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். அவர், 2009இல் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) வசமிருந்த பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில், 2019 ஏப்ரல் 18இல் தேர்தல் நடக்கும் சூழலில் போட்டியிடுகிறார். சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான மாற்று மாதிரியை அறிமுகப்படுத்த விரும்புவதாக, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

ஒருமுறை பிராந்திய கட்சிகள் வெளிபட தொடங்கிவிட்டால், தேசியக் கட்சிகளால் வரையறுக்கப்படும் கொள்கைகள் மற்றும் ஆட்சி அமைப்புகள் மாறும் என்று, பிரகாஷ் ராஜ் நம்புகிறார். பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரத்தில் இடம் பெற்றுள்ள புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் இந்தியாவின் பதிலடி, இந்தியாவின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றிய பிரசாரங்கள், வாக்காளர் மத்தியில் இடங்கொடுக்கவில்லை என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

நீங்கள் அரசியலில் சேர விரும்பவில்லை; ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று 2018 மார்ச்சில் நீங்கள் சொன்னீர்கள். ஆனால், ஒரு வருடம் கழித்து நீங்களே சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள். உங்கள் மனதை ஏன் மாற்றிக் கொண்டீர்கள்?

அரசியலில் இறங்குவேன் அல்லது விரும்புவேன் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஒரு சுயேச்சை வேட்பாளராக நிற்பது என்ற என் முடிவு ஒரு இயற்கை செயல்முறை விளைவு ஆகும். நாட்டில் பெருகி, வளர்ந்து வரும் வெறுப்பு அரசியல் என்னை மிகவும் பாதித்தது. எனது பாசமிகு நண்பர் கவுரி லங்கேஷ் ஒரு வலதுசாரி அமைப்புடன் தொடர்புடைய நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்; அதே சித்தாந்தங்களை கொண்டுள்ளவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரம் பற்றி ஏதாவது செய்ய நான் விரும்பினேன். அதிகாரத்தில் உள்ளவர்களுடன், அந்த படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி கேள்வி கேட்க நான் விரும்பினேன். அதுபற்றி அவர்கள் என்ன செய்கிறார்கள்?

என் கேள்விகள் கவுரியின் கொலை பற்றி மட்டுமல்ல. அரசின் கல்வி முறை, அரசு பள்ளிகளின் நிலை பற்றியும் நான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால் கேள்விகளை கேட்பது மட்டுமே போதாது என்று நான் விரைவில் உணர்ந்தேன். என் நெருங்கிய நண்பர்கள், சக பணியாளர்களுடன் கலந்தாலோசித்தேன். அதுவே, என்னை இந்த தேர்தலில் போட்டியிட முடிவெடுக்க வைத்தது. எனவே இன்று நான் இங்கு போட்டியிடுகிறேன். சுயேச்சை வேட்பாளராக நாட்டிற்கு பணியாற்ற முடியும் என்று நினைக்கிறேன்.

மக்களவை தேர்தலில் முதன் முறையாக களமிறங்கும் உங்களின் அரசியல் பார்வை என்ன?

என் பார்வையில் அது வாழ்க்கை தரம் என்பது மட்டும் அல்ல; வாழ்க்கை தரத்தை அது மேலும் மேம்படுத்த வேண்டும். குடிசை பகுதிகளில் பெண்கள் நீண்ட வரிசையில் காலி குடங்களுடன் நின்று, தங்கள் குடும்பங்களுக்கான தண்ணீரை பெற காத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மக்களை விரக்தியில் தள்ளி விடுகிறீர்கள்; இது நமக்கு தேவையான வாழ்க்கை தரமல்ல. பெற்றோருக்கு கல்வி கிடைக்காதபோது, அது குழந்தைகளின் விருப்பங்களையும் பாதிக்கிறது. மாசு மிகவும் மோசமாக உள்ளது; மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது, தங்களை பாதுகாக்க முகங்களை மறைக்க வேண்டியுள்ளது.

வேலைகளின் எண்ணிக்கையை விட வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெரும்பாலும் இத்தகைய வேலை தேடுபவர்கள், அந்த வேலைக்கானதைவிட அதிக தகுதியை கொண்டிருக்கின்றனர். பெங்களூரை போன்ற ஒரு நகரத்தில் மொத்தம் 3,00,000 தனியார் டாக்சிகள் உள்ளன, ஆனால் 6,500 பஸ்கள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்வதை நீங்கள் காணும்போது [அரசியல்] முன்னுரிமைகளை புரிந்து கொள்ள முடியும்.

நிலத்தின் மதிப்பை போய்விட்டது போல் தோன்றுகிறது; ஆனால், வாழ்வின் மதிப்பு மற்றும் கண்ணியம் அவ்வாறு இல்லை. முன்பும், இப்போதும் ஒரு கண்ணோட்டம் இல்லை; புகார் செய்யும் நிலையில் நாமும் கிடையாது. பல பிரச்சனைகளை தீர்க்கும் காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அதுபற்றிய ஒரு பார்வை உருவாக்க வேண்டும்.

ஒரு சுயேச்சை வேட்பாளராக, உங்களது திறமையானது கொள்கை வரையறைகள் மீது ஆதிக்கம் செலுத்த முடியுமா?

இந்த வரையறைக்குள் நாம் வரக்கூடாது. [தற்போதுள்ள] தேர்தல் செயல்முறை ஒரு விளம்பரம், ஒரு நிகழ்வைப் போன்றதாகும். அரசியலமைப்பின் ஆவிக்கு அரசியல் கட்சிகள் இல்லை. இது ஒரு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபராகும். நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தீர்வுகளை உருவாக்க ஒன்றாக வேலை செய்ய வேண்டும்; கொள்கைகள் மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும்; தங்கள் கட்சிக்காக அல்ல. அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் போதுமான மற்றும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும்.

ஒரு சுயேச்சை வேட்பாளர் பாராளுமன்றத்திலும் அதன் குழுக்களிலும் கேள்விகளை எழுப்ப முடியும். ஒரு சுயேச்சை என்பது தனிமனிதரல்ல, அவர் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்கிறார். ஒரு சுயேச்சையால் கொள்கையில் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று நீங்கள் கருதினால், பெரும்பான்மை கொண்டுள்ள கட்சிகள் மட்டும் என்ன செய்துவிடும்? ஒரு கட்சியில், குறிப்பாக பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சி அல்லது குரல் கொடுக்காமல் இருப்பதை பார்க்கிறோம்.

கடந்த 2014 இல், 3,234 சுயேட்சைகள் பொதுத்தேர்தலில் போட்டியிட்டனர் - இது, ஒரு தொகுதிக்கு சராசரி ஆறு ஆகும். சுயேச்சைகள் போட்டியிடுவது அதிகரித்து வந்தாலும், அவர்கள் மொத்த வாக்குகளில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பெற முடிந்தது. அதுபற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

நாம் வேட்பாளர்களைப் பார்க்க வேண்டும். யாரென்று தெரியாத நான் ஒரு சுயேச்சை வேட்பாளர் அல்ல. தேவைப்படும் போது எனது கருத்துகளை தெரிவிக்கிறேன். நமக்கு ஒரு மாற்று தேவை. தேசியக் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அரசை தங்களால் தான் அமைக்க முடியும் என்று இரண்டு தேசிய கட்சிகள் மட்டுமே உரிமை கோர முடியாது. அவர்களுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவும் தேவை. பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ளன; தங்களின் நிலைப்புகாக அவை ஒன்றிணைந்து வருகின்றன.

இது தங்களுக்கான நேரம் என்பதை அறிந்துள்ள தலைவர்களை பிராந்திய கட்சிகள் கொண்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன். தங்கள் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள, பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவது ஒன்று தான் வழி என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிராந்தியக் கட்சிகளின் தோற்றம் தேசியப் பிரச்சினைகளில் ஒரு மாற்றாக இருக்கும்; தேசியக் கட்சிகள் அதிகாரத்தில் இருந்தபோது இது நிகழ்ந்தல்ல. பிராந்தியக் கட்சிகளால் வேளாண், நிதி, கல்விக் கொள்கைகள் மறுசீரமைக்கப்படும்.

எனவே நீங்கள் ஏதேனும் பிராந்தியக்கட்சியோடு சேர்ந்து பணியாற்ற நீங்கள் விரும்புகிறீர்களா?

நான், மக்கள் நலனுக்காக செயல்படுகிறேன். அவர்களது நலனை முன்னிறுத்தி செயல்படும் அரசு அல்லது எதிர்க்கட்சியுடன் இணைந்தோ அல்லது ஆதரவோடோ செயல்பட விரும்புகிறேன்.

கர்நாடகாவில், 2015 உடன் முடிந்த 15 ஆண்டுகளில், மூன்று ஆண்டுகளில் மட்டும் - 2005, 2007 மற்றும் 2010 வறட்சி இல்லை. கர்நாடகாவில் 2018 வறட்சி ஆண்டாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் துயரம் அதிகரித்துள்ளது. தண்ணீர் தொடர்பான கொள்கை வகுப்பதில் நீங்கள் எப்படி செயல்பட முடியும் என்று நினைக்கிறீர்கள்? குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் குறைந்துவிடும் 21 இந்திய நகரங்களில் பெங்களூருவும் உள்ளது.

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு வரை பார்த்தால், தண்ணீர் தேவை அதிகமுள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவை (விவசாய சாகுபடி) அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. ஏரிகள் மற்றும் நீராதாரங்களின் இழப்பை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே கணிக்கவில்லை. அவை அரசின் சொத்துகள். நகருக்கு சுவாசிக்க சிறிது இடத்தை தரக்கூடிய அதை பயன்படுத்தவில்லை.

மழைநீரை சேமித்தல் மற்றும் நிலத்தடி நீரை புதுப்பித்தல் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நாம் அடுக்கு மாடி குடியிருப்புகளை உருவாக்கிவிடுகிறோம்; ஆனால் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான வழிகளை கண்டறிவதில்லை. வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு, இதற்கு முன்னுரிமை தரவேண்டும்.

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016இல் 21% சரிந்தது என்றாலும், இதில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக கர்நாடகா இரண்டாவது அதிகபட்ச இடத்தில் உள்ளது. விவசாய துயரம் தொடர்பான அரசின் கொள்கைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? இது குறித்த உங்களின் திட்டங்கள் என்ன?

இதில் நமக்கு அறிவியல் அணுகுமுறை வேண்டும். விவசாயக்கடன் தள்ளுபடி என்பது தீர்வல்ல. இந்த நிலையான ஆண்டுக்கு பிறகு எந்த ஆண்டு? நாம் தண்ணீர் சார்ந்த பயிர்களுக்கு ஊக்கம் தரக்கூடாது; விவசாயிகளுக்கு மானியம் தர வேண்டும்; விளை பொருட்களுக்கு குளிர்பதன கிடங்குகள் உருவாக்க வேண்டும். நமது வன எல்லைகளுக்குப் பின்னால் உள்ள பிரச்சினைகளை பார்க்க வேண்டும்; அதை சார்ந்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தை நாம் உறுதி செய்ய வேண்டும். [மாதவ்] காட்கில் அறிக்கை ஒரு நல்ல அறிக்கையாக இருந்தது; ஆனால் அங்கேயும் அரசியல் குறுக்கீடு காணப்பட்டது. எந்த குறுக்கீடும் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் ஆறில் 1,720 கையால் துப்புரவு பணி மேற்கொள்வோர் உள்ளனர்; அனைத்து மாவட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், “10,000-க்கும் மேல்” என்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த எண்ணிக்கை மத்திய அரசின் மதிப்பீட்டை விட அதிகம். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் இந்த பிரச்சனையை எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?

இது கையால் துப்புரவு பணி செய்வோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கான பிரச்சனை. அவர்களுக்கு சரியான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. ஏனெனில், அவர்களின் பணியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை; அவர்களை மதிக்கவில்லை. பணி பாதுகாப்பு பற்றிய கவலையால், தங்களது குழந்தைகளுக்கு கல்வி, சுகாதார அதிகாரத்தை அவர்களால் தர இயலவில்லை. எந்த நோக்கமும் கூட இல்லை. அரசு தொண்டு செய்யவில்லை; ஆனால் அதிகாரம் அளிக்கும் பொறுப்பு அதற்குள்ளது. இது நிலையானதாக இருக்க வேண்டும் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஸ்வராஜ் இந்தியா, ஆம் ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) போன்ற கட்சிகள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது. அவர்களது திட்டங்களுடன் உங்களுக்கு ஒத்துப் போகும் பொதுவானவை என்ன?

அவர்களின் திட்டங்களுக்கான நான் அவர்களை மதிக்கிறேன். அவர்களிடம் ஈகோ இல்லை. அவர்கள் மதச்சார்பற்றவர்களாக, அர்த்தமுள்ளவர்களாக விரும்புகிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனெனில் ஆட்டோ ரிக்ஷா சங்கங்கள் உட்பட மக்கள் மற்றும் அமைப்புக்கள் அரசியல் ரீதியாக என்னை ஆதரிக்கின்றன; அவர்களின் குரலாக நான் இருப்பதாக கருதுகின்றன. நான் இதை தொடங்கிய போது முதலில் ஏமாற்றம் இருந்தது என்பது எனக்கு தெரியும்; எனக்காக குரல் தேவைப்பட்டது.

பிரதமர் மோடி தனது பதவி காலத்தில் இந்தியாவின் "உயர்ந்த " ஜிடிபி வளர்ச்சி பற்றி அடிக்கடி பேசி வருகிறார். வலதுசாரி அரசியல் - முன்னேற்றத்திற்கு இடையிலான இந்த புரிந்துணர்வு தொடர்பை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

கடந்த 2014இல் பா.ஜ.க. அரசு செய்த முதல் விஷயங்களில் ஒன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டு முறையை மறுவரையறை செய்வதாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. மன்மோகன் சிங் அரசு காலத்தில் கணக்கிடப்பட்ட முறையில் பிரதமர் மோடி காலத்தில் கணக்கிட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி வெறும் 2% மட்டுமே அதிகரித்துள்ளது.தே.ஜ.கூட்டணி - 2 [கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி] அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பினும், உண்மையில் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இல்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்த மோடி, அதன் பிறகு வரிகளை அதிகரித்து பொருளாதாரத்தை மேலும் பலவீனமாக்கினார். வேலையின்மை உயர்ந்தது. கறுப்பு பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருவதாக அவர் வாய்ச்சொல்லில் முழங்கியது, பண மதிப்பிழப்புக்கு பிறகு வெறும் வதந்தி என்றாது; நகரங்களில் வசித்த பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர்.

வேலை வாய்ப்புகள் குறித்து மோடியின் அணுகுமுறையில் தெரிவிக்கப்பட்டது மற்றும் உண்மையான வேலையின்மை இடையே முரண்பாடு ஒரு காரணி இருந்தது. பக்கோடா போடுவது கூட ஒருவிதமான சுயவேலைவாய்ப்பின் வடிவம் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். வேலைகள் (நாம் எப்படி வரையறுக்கிறோம்) குறித்த அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை இல்லாததை அரசு உரிமை கோராது அல்லது அது சுய வேலைவாய்ப்பாகும். அவர் வழங்கிய திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்த முயன்ற பெரும்பாலான திட்டங்கள் மக்களை சமாதானப்படுத்தும் வகையில் இருந்தன. அவர்கள் நினைத்து இருக்கவில்லை, அவர்களுக்கு எந்தவிதமான பார்வையும் இருக்கவில்லை. அவர் பெண்களின் கண்ணியம் பற்றி பேசியபோது, இது தூய்மை இந்தியா திட்டத்துடன் தொடர்புபடுத்தினார். நாடு முழுவதும் கழிப்பறை கட்டுவது மட்டுமே போதுமானதல்ல; அவற்றைப் பயன்படுத்தி மக்களையும் கருத்தில் கொள்ளாவிட்டால், அவர்களின் தேவைகள், பயன்பாட்டு வழிமுறைகள், சிக்கல்கள், அவற்றை இயங்கச் செய்வதை கருதாததால், - கட்டப்பட்ட கழிப்பறைகளில் 70% இப்போது கிடங்குகளாக மாறிவிட்டன.

அவர் செய்ததை பணிகளை மதிப்பீடு செய்து ஆய்வு செய்யும்போது, பெரும்பாலான வேலை அரைமனதுடன் சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை என்று தெரிந்தது. இதுதான் சொல்லாட்சிக் கலை என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் என்ன என்பதை ஒரு சுயநினைவுள்ள குடிமகனாக ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் உண்மையிலேயே இரக்கமுள்ளவர்களா? அல்லது [மகாத்மா] காந்தி போல் அன்பானவர்களா? கும்பல்கள் எடுத்துக்கொள்ளாத ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது பற்றி அவர்கள் சிந்திப்பார்களா? குடிமக்கள் மத்தியில் உண்மையான ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யப்பட முடியுமா? அது தான் நமக்கு தேவை.

அனைத்து வலதுசாரி அரசுகளின் சித்தாந்தமும் சொல்லாட்சியும் பொது மக்களை முட்டாளாக்குவதற்காக பொய்களால் கட்டப்பட்டது என்பதே வரலாறு முழுவதும் காணப்படுகின்றது. அவர்கள் முன்னேற்றம் குறித்து தவறான முரண்பாடுகளை உருவாக்கி, அதை மக்களிடமே விற்றுனர்; மக்களுக்கு சேவை செய்ய அவர்கள் விரும்பவில்லை. அதுதான் இன்றும் நடக்கிறது.

அண்மை நிகழ்வுகள் மற்றும் முன்னேற்றங்களால் பா.ஜ.க.வின் புகழ் புத்துணர்வு பெற்றுள்ளதாக, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, பால்கோட் வான் தாக்குதல், ஏழ்மை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு ரூ.6000 வழங்குதல், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கையால். இதுபற்றி உங்கள் கருத்து?

என் தொகுதியில் பால்கோட் என்ற வார்த்தையோ அல்லது 10% இடஒதுக்கீடு பற்றியோ நான் கேட்டதேயில்லை. நான் பேசியவர்களுடன் அறிந்தவரை இந்துத்துவா ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களது பிரச்சினைகள் எல்லாம் தண்ணீர், வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் சுய மரியாதை தான்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.