அடுத்த 50 ஆண்டுகளில் 100% வாழ்விட இழப்பை சந்திக்கும் என்பதால் வங்கதேசத்தின் சுந்தரவனத்தில் 2070க்குள் புலிகள் இருக்காது
மும்பை: வங்காள புலிகள் அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2070 ஆண்டு வாக்கில் வங்கதேசத்து சுந்தரவனப்பகுதியில் மறைந்து போகலாம் - பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது போன்றவை அவற்றின் எஞ்சிய வாழ்விடங்களை அச்சுறுத்துகிறது என, Science of the Total Environment இதழிலில் வெளியாகியுள்ள வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் குழுவின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
வங்கதேசத்தின் தென் கரையோரப் பகுதியில் உள்ள சுந்தரவனக்காடுகள் உலகின் மிக பெரிய சதுப்புநில சுற்றுச்சூழல் பகுதியாகும். 6000 சதுர கி.மீ பரப்புள்ள இப்பகுதியில் நிலவும் சூழலால், வங்காள புலிகளின் "கடைசி கோட்டையாகவும்" இது விளங்குகிறது. கீழ் கங்கை-பிரம்மபுத்ரா டெல்டாவில் அமைந்திருக்கும் சுந்தரவனப்பகுதி, 70% கடல் மட்டத்திற்கு மேல் ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ளது; அதாவது உயர்ந்து வரும் கடல் நீர்மட்டம், புலிகள் வாழ்விடங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. வானிலை மாற்றம், அனல் காற்று மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற பருவநிலை மாற்றவிளைவுகள் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வு கூறுகிறது.
காலநிலை மாற்றம் மீதான சர்வதேச அரசு குழு -ஐபிசிசி (IPCC) உருவாக்கிய இரண்டு பருவகால சூழல்களின் அடிப்படையில் கம்ப்யூட்டர் உருவக மாதிரிகள் பயன்படுத்தி, சுற்றியுள்ள பகுதிகளின் கடல் மட்டம் அதிகரிப்புக்கான மதிப்பீடு, சுந்தரவனப் பகுதியில் புலிகளுக்கு எதிர்காலத்திற்கு பொருந்தக்கூடிய சூழல் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
"இந்த ஆரம்ப ஆய்வில்,வங்கப்புலிகளின் மிகப்பெரிய எண்ணிக்கை ஒரு பிரதேசத்தில் உள்ளது. அங்கு பருவநிலை மாற்றங்கள் மற்றும் மனித ஆக்கிரமிப்ப் ஆகியவற்றின் கலவையானது அவற்றின் வாழ்விடங்களின் அழிவுக்கு பங்களிப்பு செய்கிறது என்ற முடிவுக்கு வரலாம்" என்று, ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக பேராசிரியரும், ஆய்வின் இணை ஆசிரியருமான வில்லியம் லாரன்ஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
உலகளவில் புலிகளின் எண்ணிக்கை தற்போது 4,000க்கு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1990களில் 100,000 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகள், சட்ட விரோத வர்த்தகம், வேட்டையாடுதல் மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற காரணங்களால் 96% வரை குறைந்துவிட்டதாக, ஆய்வு தெரிவிக்கிறது. புலிகளின் எட்டு துணை வகைகளில், ஏற்கனவே மூன்று ஏற்கனவே அழிந்துவிட்டன, எஞ்சிய ஐந்து இனங்களும் தற்போது 'ஆபத்தானவை' அல்லது 'கடுமையான அழிவு' கொண்டவை பிரிவில் உள்ளன.
உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து, துருவங்களில் பனி உருகுவதால், கடல் மட்டத்தை உயர்கிறது. இதனால், உப்புநீர் நிலப்பகுதிகளுக்கு வந்து சிலவகை தாவரங்கள் வளர தடையை உண்டாக்குகிறது; இது சில உணவு வகைகளின் உற்பத்தியை குறைக்கலாம். வங்காள புலிகளுக்கு முக்கிய உணவு ஆதாரமாக இருக்கும் சுந்தரவனப்பகுதி மான்கள் மரங்கள் மரித்து, இலைகள் உதிர்ந்து போவதால், உணவின்றி பாதிக்கப்படக்கூடும். வளங்கள் பற்றாக்குறையால் புலிகள்-மனித மோதல்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது; உணவைத்தேடி மனித வாழ்விடப்பகுதிகளுக்கு புலிகள் வருகின்றன.
வங்காள புலிகளுக்கு முக்கிய உணவு ஆதாரமாக உள்ள மான்கள் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்கிறது; கடல் நீரின் உப்புத்தன்மையால் தாவரங்கள் வளருதில்லை. பருவநிலை மாற்றம், உயர்ந்து வரும் கடல் மட்டங்கள் சுந்தரவன காடுகளின் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கு இதுவே உதாரணம்.
உலகின் மிகப்பெரிய சதுப்புநில சூழ்நிலையின் இழப்பு மனித இனத்துக்கும், பிற விலங்கு இனங்கள் மீதான கவலையை ஏற்படுத்துகிறது. சதுப்பு நிலக்காடுகள் ஒரு சிறந்த தண்ணீர் ஒழுங்குமுறை அமைப்பு ஆகும்; இது கரையோர அரிப்பைத் தடுக்கும்; சூறாவளிகள் மற்றும் சுனாமிக்கு எதிராக ஒரு பாதுகாப்பான கூரை போல செயல்படும். 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது, சதுப்பு நிலக்காடுகளால் சூழப்பட்ட கிராமங்களில், மற்ற பகுதிகளை விட குறைவான இழப்பே ஏற்பட்டது என்று,2005 அண்ணாமலை பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
"சுற்றுச்சூழல் பார்வையில் இருந்து, சதுப்பு நிலக்காடுகள் முக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பவை என அங்கீகரிக்கப்படுகின்றன," என்ற லாரன்ஸ் "அவை நிறைய கரியமில வாயுக்களை சேமிப்பது, கரையோரப் பாதைகளில் வண்டல் மண் சேருவதற்கு மிக முக்கியம்" என்றார். மீன் வளர்ப்புக்கான அவற்றின் பாத்திரம் பெரும்பாலும் பாராட்டுவதில்லை என்ற அவர், ஒட்டுமீன்கள் மற்றும் மீன்களுக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு இடையூறாக செயல்படும் என்று மேலும் தெரிவித்தார்.
குறைந்து வரும் வாழ்வாதாரம்; சரியும் எண்ணிக்கை
ஒவ்வொரு பருவநிலை கணிப்பும், ஐ.பி.சி.சி பயன்படுத்தும் உலக பசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் இரு வேறுபட்ட நிலைகளது அடிப்படையில், வங்கப்புலிகளின் பொருத்தமான வாழ்விடங்களில் "வியத்தகு சரிவு" என மதிப்பிட்டுள்ளது. முதல் பார்வையின் கீழ் 49.7% வரை வாழ்விட இழப்பு ஏற்படும் என கணக்கிடப்படுகிறது; இது இரண்டாவது பார்வையின் போது 96.2% வரை இருக்கும்.
கடல் மட்ட உயர்வு, வங்கப்புலிகளின் வாழ்விடங்களை மேலும் அச்சுறுத்தும் என்றாலும், தாக்கங்க்ள், "பருவநிலை மாற்றம் என உச்சரிக்கப்படுவதில்லை", என்று ஆய்வு கூறுகிறது. ஐ.பி.சி.சி. மதிப்பீட்டின்படி, கடல் மட்ட உயர்வு 5.42% மற்றும் வாழ்விட இழப்பு 11.3% என்றளவில் உள்ளடக்கியது.
Bengal Tiger Habitat Loss In Bangladesh Sundarbans | |||||
---|---|---|---|---|---|
Scenario | 2050 | 2070 | |||
Percentage Area Loss (%) | Area Loss (Sq Km) | Percentage Area Loss (%) | Area Loss (Sq Km) | ||
1 (RCP 6.0) | Only climate change | 49.7 | 2,401.50 | 99.4 | 4,803.10 |
Only Sea Level Rise | 5.42 | 261.9 | 28.5 | 1,377.10 | |
Climate change and Sea Level Rise | 54.2 | 2,618.90 | 100 | 4,832 | |
2(RCP 8.5) | Only climate change | 96.2 | 4,648.40 | 100 | 4,832 |
Only Sea Level Rise | 11 | 546 | 48.9 | 2,362.80 | |
Climate change and Sea Level Rise | 97 | 4682 | 100 | 4,832 |
Source: Intergovernmental Panel on Climate Change, 2014
Note: Scenario 1 refers to Representative Concentration Pathway (RCP) 6.0 and scenario 2 refers to RCP 8.5, both of which are future scenarios projected on the basis of greenhouse gas emissions and their atmospheric concentrations, air pollutant emissions and land use.
எனினும், பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றின் விளைவுகளால், "2070ஆம் ஆண்டில் சுந்தரவனமானது, எஞ்சியுள்ள வங்கப்புலிகள் வசிப்பிடமாக இருக்காது"; அங்கு வசிப்பிட இழப்பு முழுமை பெறும் என ஆய்வு கூறுகிறது.
வங்கதேசத்தின் சுந்தரவனக்காடுகளில் சாத்தியம் - 2050ஆம் ஆண்டில் ஐ.பி.சி.சி.இன் ஆர்.சி.பி.6.0 காட்சியில் (மேல் இடது) விநியோகம்; (கீழே இடது) 2050 இல் அர்.சி.பி. 8.5 காட்சியில் விநியோகம்; (மேல் வலது) 2070இல் ஆர்.சி.பி. 6.0 காட்சி விநியோகம்; மற்றும் (கீழே வலது) 2070 ஆர்.சி.பி.8.5 காட்சியில் விநியோகம். கருப்பு எல்லைகள் மூன்று வன சரணாலயங்களின் தற்போதைய இடங்களை காட்டுகின்றன.
Source: Combined effects of climate change and sea level rise project dramatic habitat loss of the globally endangered Bengal tiger in the Bangladesh Sundarbans, Science of Total Environment
"கடல் மட்ட உயர்வு என்பது பருவநிலை மாற்றம் தொடர்பானது; ஆனால் இந்த குறிப்பிட்ட ஆய்வில், அவை தனித்தனியாக பகுத்தாய்வு செய்யப்பட்டன" என்று லாரன்ஸ் கூறினார். "வானிலை மாற்றங்கள் மற்றும் தீவிர நிகழ்வுகள் வங்கப்புலிகளின் வாழ்விட பொருத்தத்தை எவ்வாறு பாதிக்கின்றன; பருவநிலை மாற்றத்தின் விளைவால் கடல் மட்ட உயர்வைக் காட்டிலும், அவை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை எமது மாதிரிகள் பகுப்பாய்வு செய்தன" என்றார் அவர்.
சுந்தரவன டெல்டா பகுதியில் கடல் மட்டங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களின் விளைவுகள் சமீபத்திய ஆண்டுகளில் பரவலாக அதிகரித்து வருகின்றன. கிழக்கு பெங்களூருவில் கன்னடவகுப்பில் வங்கமொழி பேசும் குழந்தைகள் இடம் பெயர்ந்து வந்திருப்பஹ்டு, இத்தகைய பருவநிலை மாற்றத்தின் தாக்கமாக இருக்கலாம் என்று, 2018 டிசம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.
மேற்கு வங்கத்தின் தாழ்வான கடற்கரை பகுதிகளில் வசித்து வரும் பாரம்பரிய கடலோர சமூகத்தவர்களுக்கு, இது அச்சுறுத்தலாக உள்ளது; கட்டிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாயத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது.
புலிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருவதானால், குறைந்தபட்சம் வங்கப்புலிகளுக்கான சூழலுக்காக, இப்பிராந்தியத்தில் மக்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்று, ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். புலி பாதுகாப்புக்கு அதிகமான பகுதிகளை விரிவாக்க வேண்டும்; இப்பகுதி முழுவதும் பாதுகாப்பாக புலிகள் சென்று வரும் வகையில் பெருவழிப்பாதைகள் உருவாக்க வேண்டும்; மேலும் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக இப்பகுதியில் சட்டவிரோதமான மனித நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்று, இந்த ஆய்வுக்குழு வங்கதேச அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளில் பொருத்தமான புலி வாழ்விடங்கள் மொத்தமாக அழிந்துவிடும் என்று இந்த ஆய்வு மதிப்பிடுகிறது; மேலோட்ட பார்வை இருண்டதாக இருக்கும் என்பதில் அனைத்து நிபுணர்களுக்கும் நம்பிக்கை இல்லை.
"நான் அத்தகைய ஒரு இறுதிநாள் பார்வைக்கு சம்மதிக்கவில்லை," என்று, கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கடலியல் ஆய்வு பள்ளியின் கடலியல் துறை பேராசிரியர் சுகதா ஹஸ்ரா தெரிவித்தார். "நாங்கள், எங்களது 2016 ஆய்வின் போது 'வண்டல் தேய்வு விகிதம்' கணக்கில் கொண்டோம்” என்ற அவர், வண்டல்களை ஈர்க்கும் சதுப்பு நிலங்கள் கூட இப்பகுதியில் கட்டடங்களாக மாறி வருவதாக குறிப்பிடார்.
“கடல் மட்டம் உயருவதால், அது ஈடு செய்யப்பட வேண்டும்” என்ற ஹஸ்ரா, "அதிகபட்சம் 17% பகுதிகள் இழந்துள்ளதாக எங்கள் ஆய்வில் மதிப்பிட்டுள்ளது" என்றார்.
இந்தியாவின் வங்காள புலிகளுக்கு இது என்ன பொருள்?
சுந்தரவனப்பகுதியின் 40% வரை, கோவாவைவிட சற்று அதிகம், அதாவது 4,000 சதுர கிமீ பரப்பளவு, மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சுந்தரவன புலிகள் காப்பகத்தில் தற்போது 103 புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவு மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியன இந்திய சுந்தரவனப்பகுதி மற்றும் வங்கதேசத்து சுந்தரவனப்பகுதிகளை பாதிக்கிறது; புலிகளின் தலைவிதி, அக்கம் பக்கமுள்ள சுற்றுப்புறங்களோடு பின்னிப்பிணைந்துள்ளன.
இருப்பினும், இப்பிராந்தியத்தையும், புலிகள் வாழ்விடத்தையும் சிலர் இந்தியப்பகுதி அல்லது வங்கதேசத்துடையது என்று சிலர் வகைப்படுத்துவதாக கூறப்படுகிறது; இது பாதுகாப்பு முயற்சிகளுக்கு தடையாக இருக்கலாம்.
"கூட்டு சுற்றுச்சூழல் சிறந்த மேலாண்மை நடைமுறைகளை உருவாக்குவதற்காக எல்லைகளை தாண்டி நாம் சிந்திக்க வேண்டும்," என்ற ஹஸ்ரா, "புலிகள் இந்தியாவையும் வங்கதேசத்தையும் எளிதாக கடந்து செல்ல முடியும்; எனவே புலி எண்ணிக்கையை பிரித்து பார்க்க முடியாது; அவை நாடு கடந்த சுற்றுச்சூழலில் வாழ்கின்றன " என்றார்.
வனப்பாதுகாப்பு, புலிகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் நன்னீர் வழங்கல் மேலாண்மை ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் ஒரு அடிப்படை நிலை அணுகுமுறை தேவை என்ற ஹஸ்ரா, "இந்த கூட்டு சக்தியை நாம் இப்போது உருவாக்க வேண்டும், ஒருவேளை நாம் சர்வதேச அமைப்பாக தலைமை ஏற்கலாம். நாம் இப்போது இதை தொடங்கினால், 20 ஆண்டுகளில் நன்மையை பார்க்கலாம் - ஆனால் நாம் அப்படி செய்யாவிட்டால், எதையுமே பார்க்க முடியாது" என்றார்.
(சங்கேரா, எழுத்தாளர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் ஆராய்ச்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.