மும்பை: தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை எப்படி கணக்கிட வேண்டும் என்பதை தீர்மானிக்க, ஒரு குழு முன்மொழிந்த விதிமுறைகளை அரசு ஏற்றால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி நாள் ஒன்றுக்கு ரூ.176ல் இருந்து ரூ.375 அல்லது ஒரு மாதத்திற்கு ரூ. 9,750 என்று அதிகரிக்கக்கூடும்.

தற்போது, தேசிய குறைந்தபட்ச ஊதியத்திய கணக்கிடுவதற்கான விதிமுறை, ஒவ்வொரு வருவாய் ஈட்டுவோரும் மூன்று நபர்களை ("நுகர்வு அலகுகள்") ஆதரிக்கின்றனர்; ஒரு "நுகர்வு அலகு" க்கு குறைந்தபட்சம் 2,700 கலோரி தேவைப்படுகிறது (அத்தியாவசிய உணவு வகைகள் அல்லாத ஆடை, மருந்துகள் மற்றும் போக்குவரத்து போன்றவை).

புதிய விதிமுறையானது எவ்வாறு, எத்தனை குடும்பங்கள் நுகரும் என்பதில் புதிய ஆதாரங்களைப் பயன்படுத்தி, வீட்டுக்கு ஒரு "நுகர்வோர் அலகு" என்ற எண்ணிக்கையை3.6 ஆக அதிகரித்தது.

"கனரக வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் விகிதத்தில் குறைப்பு மற்றும் மிதமான தொழில்களில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது" ஆகியவற்றால், ஒரு நபருக்கு (பெரியவர்கள்) குறைந்தபட்ச கலோரி தேவையை 2,400 கலோரிகளுக்கு குறைக்க பரிந்துரைக்கிறது, ஆனால் விதிமுறைகளில் பயன்படுத்தப்படும் உணவு நுகர்வுக்கான பண மதிப்பில், 50 கிராம் புரோட்டீன் மற்றும் 30 கிராம் கொழுப்புக்கான விகிதத்தை,பெ ரியவர் உணவுக்கான மதிப்பில் சேர்க்க வேண்டும்.

புதிய விதிமுறையின்படி - இது அத்தியாவசிய உணவு அல்லாத பொருட்களுக்கு மேம்பட்ட மதிப்புகளை குறிப்பிடுகிறது - ஒருநாளைக்கு ரூ. 375அல்லது மாதம் ரூ. 9,750 என்ற தொகையை தேசிய குறைந்தபட்ச ஊதியமாகும்.

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்வகிப்பதற்கான முறைகள் பற்றிய ஆராய்ச்சிக் குழுவின் அறிக்கை, தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமான வி.வி.கிரி நேஷனல் லேபர் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள அனூப் சத்பதி தலைமையிலான குழு தயாரித்துள்ளது.

தினசரி தேசிய குறைந்தபட்ச ஊதியம் (NMW)(ரூ.)

Source: Report of the Expert Committee on Determining the Methodology for Fixing the National Minimum Wage

இத்தகைய தேசிய குறைந்தபட்ச ஊதியம் நாட்டிலும், துறைகளிலும், திறமைகளிலும், வேலைவாய்ப்புகளிலும், கிராமப்புற நகர்ப்புற இடங்களிலும் பொருந்தும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது; வேலைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் திறமையான செயல்திறன் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை பிரதிநிதித்துவம் செய்யும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின், ‘அமைப்புசாரா பொருளாதாரத்தில் ஆண்களும் பெண்களும்: ஒரு புள்ளியியல் படம்’ என்ற 2018 அறிக்கையின் படி, இந்திய தொழிலாளர்கள் 80% க்கும் மேற்பட்டவர்கள், அமைப்பு சாரா வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலாளர்கள் கவுரவமான ஊதியங்கள், வேலை நிலைமை குறித்து பேச்சு நடத்த முடியாது; பெரும்பாலும் சமூக பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.

குழுவால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உயர்வு - ரூ 375 -தற்போது உள்ள ரூ 176 உடன் ஒப்பிடும் போது நிறைய தெரிகிறது; "ஆனால் மத்திய குறைந்தபட்ச ஊதியத்துடன் அதை நீங்கள் ஒப்பிட்டால், அது அதிகரிப்பேஅல்ல" என்று, ஆராய்ச்சி நிறுவனமான ஜாஸ்ட் ஜாப் நெட்ஒர்க்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சபீனா தேவன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

மத்திய குறைந்தபட்ச ஊதியம் என்பது, மத்திய அரசு நிறுவனங்கள் அல்லது மத்திய அரசு திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்ன வழங்கப்படுவதாகும்; உதாரணத்திற்கு, வருமானவரித்துறைக்காக ஒடிசாவில் உள்ள கட்டடம்.

இது, விவசாயத்துறையில் திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு ரூ.333 என்பதில் தொடங்கி, தொழில் துறையில் திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.728 என்ற ஊதியவம் வரை அடங்கும்.

"இத்தகைய குறைந்தபட்ச ஊதியமானது, தொழிலாளர் திறமை அளவிலான பிரதிநிதித்துவத்தை மற்றும் பணியாளர்களின் திறனை செலுத்த முடியாது" என்று கூறும் அறிக்கை, "தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது போதும், குடும்பத்தை சட்டபூர்வமாக்க முடியும்" என்கிறது.

வட்டார வாரியாக மாற்று

மாற்றாக பல்வேறுபட்ட சமூக-பொருளாதார மற்றும் தொழிலாளர் சந்தை சூழ்நிலைகளின் அடிப்படையில் ஐந்து வெவ்வேறு பிராந்தியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று குழு கூறுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தேசிய குறைந்தபட்ச ஊதியமானது, ஒரு தேசிய பிரதிநிதியின் உணவு கூடையை பயன்படுத்தி மதிப்பிடப்படும் (ஆனால் ஒவ்வொரு உணவு பொருட்களின் பிராந்திய சராசரி அலகு விலை) என்று குழு கூறுகிறது.

"வறுமை நிலை மற்றும் ஒரு பிராந்தியத்தில் செலுத்தக்கூடிய திறன் ஆகியவற்றில் இருந்து நுகர்வோர் முறையை தவிர்க்க" அறிக்கை பிராந்திய உணவு கூடைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதில்லை.

உணவு அல்லாத பொருட்களுக்கு தேவையான செலவு ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும்.

குழுவின் மதிப்பீட்டின்படி, பல்வேறு பிராந்தியங்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், ஒரு நாளைக்கு ரூ. 342 (அல்லது மாதம் ஒன்றுக்கு ரூ.8,892 வரை) மற்றும் ரூ. 447 (மாதம் ரூ.11,622) இடைப்பட்டதாக இருக்கும்.

Source: Ministry of Labour and Employment

கூடுதலாக வாடகை கட்டணம்

வீடு வாடகை "ஒட்டுமொத்த உணவு அல்லாத பொருட்களின் கணிசமான விகிதத்திற்காக கணக்குகள்" என அங்கீகரித்து, குழுவானது கூடுதல் வாடகை கட்டணம் வழங்க பரிந்துரைக்கிறது. அதன்படி, சராசரியாக நகரில் நாளொன்றுக்கு ரூ.55 அல்லது மாதத்திற்கு ரூ. 1,430 தேசிய குறைந்தபட்ச ஊதியம் "அதிகம் மற்றும் அதற்கு மேல்" செலுத்தப்பட வேண்டும்.

வாடகை கட்டணம் என்பது பெருநகரத்திலும் நகரத்திலும் மாறுபடலாம்; மேலும் இதை தனி ஆய்வு செய்து கவனிக்கும்படி குழு பரிந்துரைத்துள்ளது.

திறன் அளவிலான ஊதியங்கள்

தற்போது, பல்வேறு மாநில அரசுகள் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு பிரிவுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை தங்கள் திறமையின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளன; அவை - திறமையற்ற, பகுதி திறமை கொண்ட மற்றும் திறமையான மற்றும் மிகத் திறமையானவை.

தற்போதைய குழுவால் பரிந்துரைக்கப்படும் தேசிய குறைந்தபட்ச ஊதியம், திறன் அளவைக் கொண்ட தொழிலாளர்களுக்கு பொருந்தும்.

எனினும், குறைந்தபட்ச ஊதியம் என்பது திறன் அளவோடு மாறுபடுமா என தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF)ம ற்றும் தேசிய மற்றும் மாநில அளவிலான திறன்களை வரையறுப்பதற்கு ஒரு தரநிலை அணுகுமுறையின் அவசியம் பற்றிய விரிவான பகுப்பாய்வு தேவையான என அறிய குழு கூறுகிறது.

மேலும், திறமை மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்பு போன்ற பங்குதாரர்களுடன் ஒத்துழைக்க இது ஒரு தனி குழு அமைக்கப்பட வேண்டும் என்று அக்குழு பரிந்துரைக்கிறது.

ஆறு, மாதாந்திர திருத்தங்கள்

சில்லரை விலை ஏற்ற இறக்க மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை மீளாய்வு செய்ய குழு பரிந்துரை செய்துள்ளது. சில மாநிலங்கள் தற்போது (மற்றும் பிற ஐந்து ஆண்டுகளுக்கு இடைவெளிக்கு பின்) செய்கின்றன.

"பணவீக்கம் மற்றும் வழக்கமான பொருளாதாரக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச ஊதியத்தை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது நடைமுறையில் கடினமானது என்பதில் சந்தேகமில்லை” என்று ஜஸ்ட் ஜாப் நெட்ஒர்க்கின் தேவன் தெரிவித்தார்.

"ஒன்றுக்கு, அனைத்து அளவிலான நிறுவனங்களும் ஒரு வழக்கமான அடிப்படையில் மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகிறீர்கள்? சம்பளத்தை மறுசீரமைத்தால் நிர்வாகச்செலவு என்ன?"

வாழ்வாதாரத்திற்கு அப்பால்

தொழிலாளர் அமைச்சகம், அறிக்கையின் முன்னுரையில், குழுவின் பணி இந்தியா தொழிலாளர்களின் "ஒழுக்கமான வேலை மற்றும் முழுமையான வளர்ச்சி", குறைந்த ஊதியம், ஊதிய ஏற்றத்தாழ்வு மற்றும் பாலின ஊதிய இடைவெளி போன்ற பிரச்சினைகளை இந்தியா தீர்க்க வேண்டியதன் தேவையை ஒப்புக் கொள்கிறது.

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கும் அமைப்புசாரா பொருளாதார தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, அரசு எப்போதும் உறுதிபூண்டுள்ளது" என்று முன்னுரை கூறுகிறது. "அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச உத்தரவாதமுள்ள வருமானம், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவதில் இன்னமும் இந்தியா நீண்ட தூரம் செல்வது, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) உட்பட. அதன் சமூக பொருளாதார இலக்குகளை எட்ட உதவும்” எங்கிறது.

கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதிய மசோதா விதிமுறைகள், இந்த குறிக்கோளை அடைவதற்கு இலக்காகக் கொண்டு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை சட்டரீதியான ஆதரவை வழங்குவதன் மூலம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துகிறது.

தற்போது, 1990களில் இருந்த தேசிய குறைந்தபட்ச ஊதியம் இருந்த போதும், 2017ல் நாளொன்றுக்கு ரூ.176 ஆக உயர்ந்துள்ளது - 6.2 கோடி தொழிலாளர்கள் சுட்டிக்காட்டப்பட்ட தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர் என்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018 இந்திய ஊதிய அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த ஊதிய விகிதம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம்.

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை சட்டப்பூர்வமாக உருவாக்குவதன் மூலம் ஒரு தேசிய குறைந்தபட்ச ஊதியம் - அல்லது வெவ்வேறு மாநிலங்கள் அல்லது புவியியல் பகுதிகளுக்கு வெவ்வேறு தேசிய குறைந்தபட்ச ஊதியங்கள் - நிர்ணயிப்பது அவசியமாகும்; இது தற்போதைய குழுவின் இழப்பாகும்.

இருப்பினும், 16வது மக்களவைக் காலம் முடிவடைவதால், ஊதிய மசோதா விதிமுறைகள் காலாவதியாகிறது; இனி அடுத்த அரசு பதவிக்கு வந்த பின்னர் பாராளுமன்றத்தில் மீண்டும் இது அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குழுவின் அறிக்கையையும் அரசு பரிசீலிக்கும்.

உலகெங்கிலும் ஊதிய முறைகளை ஜஸ்ட் ஜாப்ஸ் நெட்வொர்க் ஆய்வு செய்ததில், வெற்றிகரமான ஊதிய ஆட்சிமுறைகள், குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு தளமாக விளங்குவதை கண்டதாக, தேவன் கூறினார். "ஊதிய வளர்ச்சியும் உற்பத்தித்திறன் மற்றும் விலையுடனான ஒத்துழைப்புடன் கூடிய ஒத்துழைப்புடன் கூட்டு தொழிற்துறை உறவுகள் மற்றும் கூட்டுப் பேரம் ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்ட இழப்பீட்டு பாதைகள் வழங்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.